Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 11.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 11

காதல் கவிதை கூறும்

அழகான அதரங்களை

கொண்டவளே என்னை



Advertisement

எரிக்கும் காரணம் என்னவோ?

 

அவள் செய்கையை யாருமே எதிர் பார்க்கவில்லை. வேணி அதிர்ந்து போய் நின்றாள். மதியழகன் ஒரு புருவ சுளிப்போடு அமர்ந்திருந்தார்.

Advertisement

 

Advertisement

அன்னம் எதையோ யோசித்த படி இருந்தாள். அண்ணன் தம்பி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வந்தது வேணி கேட்ட கேள்வி.

 

“கதிரு, என்ன டா இவ இப்படி போரா? நான் அவ மாமியார் டா. கொஞ்சமாவது மரியாதை கொடுக்க வேண்டாம்”, என்று கேட்டதும் சத்தமாக சிரித்து விட்டான் செல்வா.

Advertisement

 

அவன் சிரிப்பில் அனைவருக்கும் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது. “டேய், குஞ்சு எதுக்கு டா சிரிக்கிற? என்னைப் பாத்தா சிரிக்கிற மாதிரியா இருக்கு? நாடகத்துல எல்லாம் மாமியாருக்கு எவ்வளவு மரியாதை கொடுக்குறாங்க, பயப்படுறாங்க. இவ என்ன இப்படி போறா?”, என்று வேணி கேட்டதும் அனைவருக்கும் சிரிப்பாகவே இருந்தது.

 

“எம்மாவ், நீ ஏதோ பாவப்பட்ட நாடகம் பாத்துருப்ப போல? மத்த நாடகம் எல்லாம் பாரு. மாமியாரும் மருமகளும் அடிச்சிக்கிட்டு நாறுவாங்க”, என்று சொல்லி சிரித்தான் செல்வா.

 

“செல்வா சும்மா இரு”, என்று அவனை அடக்கினான் தினேஷ். “கதிர் என்னன்னு கேளு டா”, என்றாள் வேணி.

 

“அட போம்மா, அவ என்னையே மதிக்காம போறா”, என்று சொல்லி விட்டு அங்கேயே அமர்ந்தான்.

 

அங்கேயே சோகமாக அமர்ந்தாள் வேணி. “என்ன வேணி கவலையா உக்காந்துட்ட?”,என்று கேட்டாள் அன்னம்.

 

“இல்லைங்க அத்தை. ஒரு மருமகளே என்னை மதிக்க மாட்டிக்கா. இன்னும் ரெண்டு மருமக வந்தா என் நிலைமை என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தேன். அடேய் தினேஷ் உன் பொண்டாட்டியும் என்னை மதிக்காம போனா நீயும் உன் அண்ணன் காரன் மாதிரி தான் கண்டுக்கமா இருப்பியா?”

 

“என்ன மா இப்படி சொல்லிட்டா? உன்னை மட்டும் அவ கண்டுக்காம போகட்டும். அப்புறம் இருக்கு அவளுக்கு. அவளை அடி பின்னிர மாட்டேன்”, என்று சீரியசாக சொன்னான் தினேஷ்.

 

“நீ என் தங்கம் டா. டேய் குஞ்சு நீ சொல்லு. உன் பொண்டாட்டி இப்படி செஞ்சா நீ என்ன செய்வ?”

 

“என்கிட்ட நீ இப்படி ஒரு வார்த்தை கேக்கலாமா மா? நீ தான் மா எனக்கு உயிரு. உனக்கு இப்படி ஒரு விஷயம் நடக்க விடுவேணா?”

 

“அப்படி என்ன டா செய்வ?”, என்று மதி கேட்கும் பொது அவன் என்ன சொல்வான் என்று அனைவருக்கும் ஆவல் வந்தது.

 

“நான் தான் கல்யாண முடிஞ்ச அன்னைக்கே என் பொண்டாட்டியைக் கூட்டிட்டு தனிக் குடுத்தனம் போய்ருவனே”, என்று செல்வா சொன்னதும் அவனை அடிக்க துரத்தினாள் வேணி.

 

அனைவரும் சிரித்தார்கள். தான் அருகில் அமர்ந்திருந்த கதிரின் தோளில் கை வைத்த மதி “நீ விரும்பி கட்டிக்கிட்டா பொண்ணு. உன் வாழ்க்கை, சீக்கிரம் சரி செய்ய பாரு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

 

கதிர் யோசனையாக அமர்ந்து விட்டான். தினேஷும் அங்கிருந்து சென்றதும் தன்னுடைய மூத்த பேரனை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அன்னம்.

 

சிறிது நேரம் கழித்து தான் அங்கிருந்த அன்னத்தின் மேல் கதிர் கவனம் சென்றது. “என்ன கிழவி என்னையே பாத்துட்டு இருக்க?”, என்று கேட்டான் கதிர்.

 

“அதில்லை டா பேராண்டி, நேத்து நைட் அடி எதுவும் விழுந்துச்சா?”

 

“பாட்டி”, என்று கத்தியவன் கொலை வெறியோடு முறைத்தான்.

 

[the_ad id=”6605″]

 

அதைப் பார்த்து செல்வாவும் தினேஷும் சிரித்தார்கள். சிறிது நேரம் கழித்து தன்னுடைய அறைக்கு சென்றான் கதிர். அங்கே மனதில் கவலையோடும், முகத்தில் குழப்பத்தோடும் அமர்ந்திருந்தாள் தேன்மொழி.

 

அவளைக் கண்டதும் எரிச்சலாக வந்தது. பெற்ற அன்னையை கண் முன்பு உதாசீனப் படுத்தினால் யாரால் தான் தாங்க முடியும். ஆனாலும் அந்த எரிச்சலை அவளிடம் காட்ட மனதில்லாமல் தன்னுடைய கப்போர்டை திறந்து எதையோ தேடினான்.

 

அவன் வந்தது முதல் அவனைத் தான் பார்த்து கொண்டிருந்தாள். வந்தவுடன் அவளை முறைத்து விட்டு அவன் திரும்பிக் கொண்டதும் கடுப்பானவள் “எல்லாம் இவனால தான். அம்மா மாதிரி தான் அத்தையும். அவங்களை போய் என்னை இப்படி பேச வச்சிட்டானே”, என்று எண்ணிக் கொண்டு “பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு, என்ன முறைப்பு வேண்டி கிடக்கு”, என்று கேட்டாள்.

 

“இதற்கு பதில் சொன்னால் வாக்கு வாதம் தான் நடக்கும்”,என்று உணர்ந்தவன் எதுவும் சொல்லாமல் இருந்தான். “காது கேக்கலையா? உங்களை தானே கேக்குறேன்”, என்று தேன்மொழி சொன்னதும் வெகுண்டவன் “கொஞ்சம் வாயை மூடுரியா? உன் மேல செம கோபத்துல இருக்கேன். உனக்கும் எனக்கும் தானே பிரச்சனை. அதை எதுக்கு எங்க அம்மா கிட்ட கேட்டுட்டு இருக்க? உன்னால முடியாதுன்னா அதை தன்மையா சொல்ல வேண்டியது தானே? உன்கிட்ட இருந்து நான் இதை எதிர் பாக்கல. உன்கிட்ட பேசவே பிடிக்கல?”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 

ஏற்கனவே மனதுக்குள் வருந்திக் கொண்டிருந்தவள் அவன் சொல்வதில் இருந்த நியாயம் புரிய தன் தலையிலே அடித்துக் கொண்டாள்.

 

ஆனாலும் “சாத்தான், வேதம் ஒதூது? எல்லாமே இவனால தான். இப்ப அப்படியே என் மேல திருப்புறான். செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்கணும்”, என்று எண்ணிக் கொண்டு மெதுவாக கீழே வந்தாள்.

 

செல்வாவும் தினேஷும் அவள் வருவதைக் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களைக் கண்டு கொள்ளாமல் தயங்கி தயங்கி அடுப்படிக்கு சென்றாள்.

 

“என்ன அண்ணா, பொம்பளை ரவுடி பதுங்கி பதுங்கி போறா? சரி இல்லையே”, என்றான் செல்வா.

 

“அதான் தெரியலை, வா பாப்போம்”, என்று சொல்லி செல்வவை அழைத்துச் சென்றான் தினேஷ்.

 

வேணி பாத்திரம் கழுவிக் கொண்டிருக்க தன்னுடைய சேலை முந்தியை திருகிய படியே அவள் அருகில் சென்று நின்றாள் தேன்மொழி.

 

அவளைப் பார்த்ததும் ஒரு முறை புருவம் சுளித்த வேணி “என்ன தேனு பசிக்குதா? சாப்பிடுறியா?”, என்று கேட்டாள்.

 

மேலும் குற்ற உணர்வு தலை தூக்க “என்னை மன்னிச்சிருங்க அத்தை, நான் தெரியாம….”, என்றாள்.

 

அவளைப் பார்த்து சிரித்த வேணி “நீ இந்த வீட்டு பொண்ணு டா, எனக்கு மக மாதிரி. அம்மா கிட்ட எந்த பொண்ணும் மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை விடு. சாப்பிடுறியா?”, என்று கேட்டாள்.

 

“எல்லாரும் சாப்பிடலையா?”

 

“எல்லாரும் ஒன்பது மணிக்கு மேல தான் மா சாப்பிடுவாங்க. உனக்கு பசிச்சா எடுத்து தரேன்”

 

“இல்லை அப்புறமாவே சாப்பிடுறேன். நான் பாத்திரம் விளக்கவா?”

 

 

[the_ad id=”6605″]

 

“நான் முடிச்சிட்டேன் தேனு. நீ ரெஸ்ட் எடு”

 

“மதியம் சமைக்கும் போது கூப்பிடுங்க. நான் வந்து ஹெல்ப் பண்ணுறேன் “

 

“சரி போ”, என்று வேணி சொன்னதும் அங்கிருந்து கிளம்பினாள். அதை உணர்ந்து இது வரை அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணன் தம்பி இருவரும் ஓடி வந்து பழைய படி அமர்ந்து ஆளுக்கு இரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டார்கள்.

 

அங்கே தேன்மொழி வரும் போது “நம்ம நாட்டோட என்ன அண்ணா இப்படி இருக்கு?”, என்று கேட்டான்.

 

“ஆமா டா செல்வா. நம்ம கிட்ட நாட்டைக் கொடுத்தா…”, என்று அவன் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள் அருகில் வந்த தேன்மொழி “ரெண்டு நல்லவனும் நாட்டை மாத்துறது இருக்கட்டும். முதல்ல பேப்பரை நேரா வச்சி படிங்க டா பரதேசிகளா“, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

அண்ணனும் தம்பியும் பேந்த பேந்த முழித்தார்கள். அடுத்து தேன்மொழி போய் நின்றது அன்னம் அறையில் தான்.

 

அவளைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள் அன்னம்.

 

“பாட்டி”

 

“வாயை மூடு. யாரும் என்கிட்ட பேச வேண்டாம். நீங்க எல்லாம் பெரியவங்க. என்கிட்ட வந்து பேசி என்ன ஆக போகுது”

 

“பாட்டி தெரியாம…”

“என்ன தெரியாம ஆன் என்ன தெரியாமன்னு கேக்குறேன். ஒரு வரை முறை வேண்டாம். வேணி இந்த வீட்டு மகா லட்சுமி. அவளைப் போய் மரியாதை இல்லாம பேச உனக்கு எப்படி மனசு வந்துச்சு. என்னோட மகா வளப்பு இப்படி இருக்கும்னு நான் எதிர் பாக்கலை”

 

“அம்மா வளர்ப்பை அடுத்தவங்க குறை சொல்ற மாதிரி வச்சிராத டா”, என்று சகுந்தலா சொன்னது தேன்மொழிக்கு இப்போது நினைவு வந்தது.

 

“அம்மாவை குறை சொல்லாத பாட்டி”

 

“உன்னோட நடவடிக்கை சரி இல்லைன்னா உன்னை வளத்தவங்களை தானே சொல்லணும்”

 

“பாட்டி உன் பேரன் மேல உள்ள கோபத்துல தான் அப்படி செஞ்சிட்டேன்”

 

“அவன் மேல கோபம்னா அதை நீ அவன் கிட்ட தான் காட்டனும். உன் மாமியா கிட்ட காட்டுனா என்ன அர்த்தம்? அவ உனக்கு அம்மாவா இருப்பா. அவளை மாமியாவா இருக்க வச்சிராத”

 

“என்னை மன்னிச்சிறு பாட்டி. நான் அத்தைக்கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டேன்”, என்று சொன்னதும் கொஞ்சம் வேகம் குறைந்தாள் அன்னம்.

 

“சரி இனி அப்படி செய்யாத. இங்க வா. இப்படி உக்காறு”, என்று சொன்னதும் கட்டிலில் அன்னம் அருகில் அமர்ந்தாள் தேன்மொழி.

 

“இப்ப சொல்லு, கதிர் மேல உனக்கு என்ன கோபம்?”

 

“அவனைப் பத்தி பேசாத பாட்டி. அவனை நினைச்சாலே எனக்கு எரிச்சல் வருது”

 

“வாயை மூடு தேனு. முதல்ல அவனுக்கு மரியாதை கொடுக்க கத்துக்கோ. என் பேரன் மேல எந்த தப்பும் இருக்காது”

 

“பேரன் பேரன்னு தலையில தூக்கி வைக்கிற? அவன் குணம் உனக்கு தெரியாது”

 

“ஏன் உனக்கு தெரியுமோ? அவன் பிறந்ததுல இருந்து என் பேரனை பாக்குறேன் டி”

 

“உனக்கு பேரன் தான் முக்கியமா? நான் உன் பேத்தி தானே? நான் உனக்கு முக்கியம் இல்லையா?”

 

[the_ad id=”6605″]

 

“ரெண்டு கண்ணுல எது முக்கியம்னு உனக்கு சொல்ல வேண்டியது இல்லை தேனு. அவன் மேல என்ன கோபம்”

 

“கோபம் இல்லை பாட்டி வெறுப்பு. அவன் நல்லவனே இல்லை பாட்டி. என்னை என்னை மிரட்டி தான் இந்த கல்யாணத்துக்கு…”

 

“எனக்கு தெரியும்”

 

“பாட்டி”

 

“அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் கதிர் என்கிட்ட சொல்லிட்டான்”

 

“சொல்லியுமா அவனுக்கு நீ சப்போர்ட் பண்ணுற?”

 

“பின்ன அவனுக்கு சப்போர்ட் பண்ணாம? அவன் செஞ்ச நல்லதுக்கு நீ தான் அவன் காலை தொட்டுக் கும்புடனும்”

 

“பாட்டி”

 

“என்ன டி கத்துற? கதிர் கூட கல்யாணம் இல்லாம அந்த கேடு கட்டவன் சேது கூட கல்யாணம் ஆகிருந்தா இந்நேரம் சந்தோஷமா இருப்பியா?”

 

“பாட்டி”, என்று அதிர்ந்து போனவள் “இதை எப்படி மறந்தேன்?”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

 

அவள் யோசனையை பார்த்த அன்னம் “சொல்லு அந்த செதுவையோ, இல்ல உன் வீட்ல பாத்த அந்த உத்தம மாப்பிள்ளையையோ நீ கட்டிருந்தா இப்படி என்கிட்ட வாயடிச்சிருக்க மாட்ட. அப்படி நடந்துருந்தா இந்நேரம் நீ உயிரோடே இருந்துருக்க மாட்ட டி, அறிவு கெட்டவளே. அதுல இருந்து உன்னை காப்பாத்தி இல்லாத தில்லாலங்கடி வேலை எல்லாம் செஞ்சு நானும் என் பேரன்களும் உன்னை அவனுக்கு கட்டி வச்சா, அவனை நீ என்ன வேணும்னாலும் பேசுவியா?”

 

….

 

“கதிர் மட்டும் உன் விசயத்துல தலையிடலைன்னா இந்நேரம் செத்துருப்ப, இல்லைன்னா உன்னை எவனுக்காவது வித்துருப்பானுங்க. அன்னைக்கு அவன் கூட நீ இருந்துருந்தா உன் வீட்ல உள்ளவங்களே உன்னை காரி துப்பிருப்பாங்க. அதுல இருந்து உன்னை காப்பாத்தி, எந்த அவமானமும் நீ படக் கூடாதுன்னு எல்லாம் செஞ்சு கடைசில உன்னை கல்யாணமும் பண்ணி இங்க கூட்டிட்டு வந்துருக்கான். இப்ப உன் அம்மா பிறந்த வீட்ல உன் தாய்மாமா வீட்ல வாழ வச்ச அவனை இப்படி பேசுறதுக்கு நீ அன்னைக்கு பட்டிருக்கணும் டி”

 

“பாட்டி”, என்று சொல்லிக் கொண்டே அன்னம் தோளில் சாய்ந்து கொண்டாள் தேன்மொழி. அப்படி நடக்கும் என்று அவள் பயந்து போய் இருந்தது நிஜம். அன்று கதிர் வரவில்லை என்றால் என்ன ஆகி இருக்கும் என்று அவள் அறிந்ததே.

 

“உன்னை கஷ்ட படுத்தணும்னு சொல்லலை தேனு. கதிரை குறை சொன்ன உடனே தாங்க முடியலை. உனக்கு அவனைப் பத்தி தெரியலை கண்ணு. கூட இருந்து வாழ்ந்து பாருத்தா, உனக்கே அவனை புரியும். நான் அவனுக்கே பரிஞ்சு பேசுறேன்னு நினைக்காத. அவன் என் மகனோட மகன்னா, நீ என் மகளோட மக. அப்படி இருக்கும் போது ரெண்டு பேரும் முறைச்சிக்கிட்டு இருந்தா இந்த பாட்டிக்கு எப்படி இருக்கும். சீக்கிரம் என் கொள்ளு பேரனை பெத்துக் கொடுத்துட்டா நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்”, என்று சொல்லி அவள் கண்ணீரை துடைத்து விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!