Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-16.1

அன்று இரவு பத்துமணி வாக்கில் வந்த சுந்தரம் நேராக உமாவின் வீட்டிற்கு வந்தார். அப்பொழுது தான் அனைவரும் சாப்பிட்டு முடித்து அமர்ந்திருந்தனர். 

 

 

 



Advertisement

“வந்தவர் உமாவிடம் எப்படிடா இருக்க?”… “நான் நல்லா இருக்கேன் ப்பா… உங்களுக்கு வேலை ரொம்ப அதிகமா ங்கப்பா?…  ஏன் இப்படி இராப்பகலா உழைக்கிறீங்க?… மல்லி உங்களை பார்க்க ரொம்ப ஆசையா வந்தா…  நீங்க இங்க இல்லைனதும் உங்க மேல கோவமா இருக்கா”. 

 

 

Advertisement

அதற்கு அவர், “கொஞ்சம் வேலை அதிகம்தான் ம்மா… எல்லாம் மல்லி கல்யாணத்துக்காகதான் உமா… நம்மள மாதிரி ஆளுங்கள் எல்லாம் கிடைச்ச வேலையை விடக்கூடாது உமா, இதுல கொஞ்சம் காசு வந்தா கூட அது மல்லிக்கு பிடிச்சதவாங்கிகொடுக்கலாம் இல்ல அதுக்காகத்தான் ம்மா… 

Advertisement

 

 

 

Advertisement

திருவிழாவுக்கு இன்னும் பதினைந்து நாட்கள்  தான் இருக்கு, இந்த காசு இருந்தா நல்லதா ரெண்டு துணிவாங்களாம் இல்ல. மல்லி கல்யாணம் முடியரவரை இப்படித்தான் உமா” என்றவர்… 

 

 

மல்லியிடம், “எப்படி ம்மா இருந்தது மூணார்?…  எல்லா இடங்கமும் சுத்தி பாத்தீங்களா?… உனக்கு பிடிச்சத எல்லா வாங்கிகிட்டையா மல்லி? என அவர் கேட்டுக்கொண்டு இருந்தார்”.

 

 

 

குட்டி தன் மனதில் ‘ஏற்கனவே என் டார்லிங் கோவமா இருக்கு, இதில் இவரு வேற பக்கம்பக்கமா பேசி ஏத்திவிடறார், நல்லா திட்டுவாங்க போறாங்க’ என நினைத்துக்கொண்டு இருந்தான்.

 

 

 குட்டியின்  நினைப்பு பொய்யாக்காமல் மல்லி, அவரின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாமல் அவரை வாங்குவாங்கு என வாங்கிவிட்டாள். 

 

 

“உங்களை யாருப்பா இப்படி பன்ன சொன்னாங்க?… நீங்க இப்படி இராப்பகலா வேலை செய்றது எனக்கு பிடிக்கலை…  எனக்குனு இருக்கிறது நீங்க மட்டும் தான் ப்பா. அம்மாவும் இல்ல உங்களுக்கும் ஏதாவது ஆட்சினா நான் என்னப்பா பன்னுவேன்?” என்றவளை… 

 

 

 

தீர்க்கமாக பார்த்து கூறினார் சுந்தரம், “இங்க பாரு மல்லி…  அப்பா இல்லாம போய்டாக்கூட உமா உன்ன விடமாட்டானு எனக்கு தெரியும், அது உனக்கும் தெரியும்”. 

 

 

அதற்குள் உமா,  “என்ன அப்பா இப்படி அபசகுனம் பேசரீங்க?.. உங்க வாயிலிருந்து இனி இந்தமாதிரி பேசாதீங்க ப்பா… எனக்கு இந்த பேச்சி சுத்தமா பிடிக்கவில்லை. நெருப்புனு சொன்னா வாய் சுட்டுடாது உமா”. 

 

 

இங்க பாரு மல்லி, “இந்த அப்பாக்கு ஏதாவது ஆனாகூட  நீ தைரியமா உனக்கான வாழ்க்கையை வாழனும்…  அதுதான் இந்த அப்பாவோட ஆசை” என்றவரை அனைத்துக்கொண்ட மல்லி, “இனி இப்படி பேசாதீங்க அப்பா. நீங்க எனக்கு வேண்டும்… கண்டிப்பா உமா என்னை பாத்துக்குவா ப்பா. ஆனா நீங்க தான எங்களை எல்லாம் பார்த்துக்கனும் என அழுதவளை சமாதானம் செய்தார் சுந்தரம்”. இவர்களின் பாசப்பினைப்பை பார்த்த மற்றவருக்கும் தானா கண்களில் நீ சுரந்து. 

 

 

 

பண்ணையாரின் வீட்டில் வெற்றி விஷ்ணு மற்றும் மார்க்குடன் சேர்ந்து தொழில் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தான். 

 

 

 

பேச்சுவார்த்தை முடிந்ததும் வெற்றி பரமன் பற்றி மார்க்கிடம் விசாரித்தான்… பின் பரமனின் மொத்த வரலாறையும் தோண்டியெடுக்க சொன்னான், சிறிது நேரம் உமா பற்றி எப்படி அறிவது என்று யோசனை செய்துகொண்டு இருந்தான். 

 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

 

இப்பொழுது கூட உமா பற்றிய ரகசியத்தை அறியமுற்ச்சி செய்யவில்லை. பரமனை பற்றி தான் அறிய முயன்றான் வெற்றி. 

 

 

 

முதல் நாளே வேலைக்கு விடுப்பு சொல்லிகிட்டு வந்தவர்கள் தங்களின் வீட்டை சுத்தம் செய்யும் பணியை செய்ய ஆரம்பித்தனர். 

 

 

மல்லி ஒருவளால் வீட்டை சுத்தம் செய்ய முடியாது என்பதால் இரண்டு வீட்டு வேலையையும் ஐவரும் பகிர்ந்து செய்தனர். 

 

 

பின் “அடுத்த வந்த ஒரு வாரமும் உமாவும் மல்லியும் வேலைக்கு லீவ்போட்டுவிட்டு திருவிழாவிற்கு கம்பம் நடுவதால் வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்து, வீட்டில் இருந்த அனைத்து துணிகளையும் துவைத்து, வீட்டை சுற்றி உள்ள இடங்களையும் சுத்தம் செய்தனர் ஐவ்வரும்”.  

 

 

“முதல் இரண்டு நாள் மல்லி வீட்டை சுத்தம் செய்தனர். பின் அடுத்த இரண்டு நாள் உமாவின் வீட்டை சுத்தம் செய்தனர். கடைசி நாள் மயிலுபாட்டிக்கு உதவியாக இருந்தனர்”. 

 

 

 

“ஆளுக்கு இரண்டு துணிகள் என திருவிற்காக ஏற்கனவே எடுத் துணிகளை மூணாறில் இருந்து வந்த அடுத்தநாளே தைக்ககொடுத்துவிட்டனர். அப்பொழுது தான் திருவிழாவுக்கு முதல்நாளாவது துணிகிடைக்கும் என்பதால் மல்லி அனைவரின் துணிகளையும் குட்டியுடன் சென்று தைக்ககொடுத்துவிட்டு வந்தாள்”.  

 

 

இதற்கு இடையே அம்மு மீனாவிடம் இந்தவருட படிக்கிறக்கு தேவையான புத்தகத்தை வாங்கிக்கொண்டு வந்தாள். 

 

 

 

கண்ணன் தனக்கு தேவையான புத்தகத்தை சீனியார்களிடமும் பழையபுத்தகடைகளிலும் தன் நண்பர்களுடன் சென்று வாங்கிவந்தான்.

 

 

 

இப்படியாக இவர்களுக்கு இந்த ஒரு வாரமும் சென்றது. 

 

 

 

பண்ணையாரின் வீட்டில் உள்ளவர்களுக்கோ இன்னமும் பரபரப்பாக சென்றது. 

 

 

இரண்டு வருஷம் முன் வீட்டை பெயின்ட் செய்ததால், இப்பொழுது பெயின்ட் பண்ணவில்லை. அதையும் விட அந்த பதினைந்து நாட்களுக்கு அடித்த பெயின்டும் காயாது. அதனால் அதிகமான சிரமம் ஏற்படவாய்ப்பு இருப்பதால், பெயின்ட் பன்னாமல் நீர் கொண்டு சுத்தம் செய்தனர்.

 

 

அதுமட்டுமல்லாமல் நிச்சியத்திற்கு அதிகமான ஆட்களை அழைக்கவில்லை  என்பதால் திருமணத்தின் போது பெயின்ட் அடித்துக்கொள்ளலாம் என முடிவு செய்தனர். அப்பொழுது தான் அதிகமான உறவுகள் வருவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு செய்தனர். 

 

 

அதனால் வீட்டுவேலை செய்பவர்களுக்கு அதிக வேலை பளு அதிகமாக இருந்தது. 

 

 

பின் ஊரில் இருப்பவர்களை நிச்சியத்திற்கு அழைப்பது. துணிமணிகள் வாங்குவது என நாட்கள் பறந்தது. 

 

 

 

இதற்கு இடையே குட்டி உமாவிடம் கூறாமல் கண்ணனிடம் பிடிவாதம் பிடித்து யாருக்கும் தெரியாமல் குளத்திற்கு சென்று மீன் பிடித்துவந்தான். அதில் கோபம் கொண்ட உமா அவனை நன்றாக திட்டிவிட்டாள். 

 

 

பின்னே இருக்காதா ஒரு வாரம் மாங்குமாங்கென்று வீட்டை சுத்தம் செய்து வைத்தால், இவன் மீன்பிடித்து வந்து சமைத்து தர சொன்னால் அவளும் என்னதான் பன்னுவாள். 

 

 

அம்மு, “அக்கா இவன பத்தி தெரிந்தும் நீங்க அவனை திட்டுவது வீண்”… உங்க எனர்ஜி தான் போகும் க்கா…  அவனுக்கு தான் வாரத்திற்கு ஒரு நாளாவது அசைவம் இல்லாம சாப்பாடு இறங்காதுனு உங்களுக்கே தெரியும் இல்லக்கா…  “ஏண்டீ அதுக்காக இப்படியா!”, நேத்து தான டீ வீடு சுத்தம் பன்னி முடித்தோம். முழுசா ஒரு நாள் கூட ஆகவில்லைடீ என்றவளிடம் அம்மு… “வேற வழியே இல்லை க்கா… பேசாம வெளியே இருக்க விறகடுப்பில் செஞ்சித்தாங்க க்கா… சாப்பிடுவிட்டு தண்ணீர் ஊற்றிகிட்டு அப்புறமா உள்ள வரட்டும் என ஐடியா கொடுத்தாள்” …

 

 

“நீயும் அவனுங்களோட கூட்டாடீ?”… அப்படி எல்லாம் இல்லை க்கா…  பிடிச்சிட்டு வந்த மீனை ஏன் வீண்பன்னனும் ஒரு  நல்ல எண்ணம் தான் அக்கா. 

 

 

நீயும் உன் எண்ணமும் போடி… “என்ன கண்ணா நீயும் இப்படி பண்ணி வச்சி இருக்க?”… அவன்  சின்னவன் அவன் கூடவே இரு நீங்க தான் சொன்னீங்க… அதனால் தான் அக்கா அவன்கூட போனேன்… மூனு கூட்டு கலவாணிகளும் சேர்ந்து தான் இந்த வேலையை செஞ்சிருக்கீங்க இல்ல? …  நீங்க ரெண்டு பேரும் வெளியே இருங்க டா, நான் தேவையான பொருள்களை எல்லாம் எடுத்துவச்சிட்டு வீட்டை முதலில் அடைச்சிவைக்கிறேன் எனக்கூறி உள்ளே செல்ல போனவளிடம்… 

 

 

குட்டி,  “அப்போ மீன் செஞ்சி தரையா க்கா?”…  பாத்தீங்களா ரெண்டு பேரும். இவ்வளவு நேரம் அவன திட்டுனேனே எதாவது பேசுனா?… இப்ப பாரு கேள்விய… செஞ்சி தரேன்டா இல்லைனா எல்லாம் வீண்ணாகிடுமே…  இன்னையேட அவ்வளவு தான்டா, மறுபடியும் திருவிழா முடிந்தபிறகு தான் அசைவம் பன்னிதருவேன். இதுக்கு சம்மதம்னா  மீன் இல்லைனா அது வீண்…  எப்படி வசதி உனக்கு?…

 

 

அதற்கு குட்டி, “நீங்க இவ்வளவு கெஞ்சி கேட்டதனால் சம்மதிக்கிறேன்”… இந்த வாய் மட்டும் இல்லைனா நாய் தூக்கிகிட்டு போய்டும்டா உன்ன என்றவளிடம்…

 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

 

அப்படியே அது என்னை தூக்கிகிட்டு போனாக்கூட நீங்க அதுகிட்ட சண்டை போட்டு, இல்லைனா அதை கொன்னாவது  என்னைய கூட்டிகிட்டு வந்துடுவீங்கனு எனக்கு தெரியுமே க்கா… அதனால் என்னக்கு சுத்தமா பயம் இல்லை என்று கூறியவனின் கூற்றை கேட்ட உமா அழுதேவிட்டாள்… திடீரென உமா அழவும் குட்டி அவளை சமாதான செய்யமுடியாமல் தான் செய்த தவறால் தான் உமா அழுவதா நினைத்து அவனும் அழுதுவிட்டான்.

 

 

 

குட்டியின் பேச்சில் திகைத்திருந்த கண்ணன் மற்றும் அம்முவும் சிறிது நேரம் என்ன செய்ய என்று தெரியாமல் இருந்தனர்… காரணம் இதுவரை இவர்கள் முன் உமா அழுதது இல்லை என்பதனால் வந்த திகைப்பு. 

 

 

ஆம், “இதுவரை உமா இவர்கள் முன்னிலையில் அழுதது இல்லை. அவ்வளவு ஏன் வாழவழிதெரியாமல் இவர்களுடன் வந்த இடத்தில் பாட்டியும் இறந்த போன போது கூட உமா இவர்கள் முன் அழுதது இல்லை. இவள் அழுகையெல்லாம் தனிமையில்  அல்லது மல்லியுடன் தான் இருக்கும்”. 

 

 

குட்டியின் அழுகையும் சுதாரித்த உமா, “இங்க பாரு குட்டி அக்கா அழவில்லை. பாரு இனி அழமாட்டேன். நீயும் அழக்கூடாது”… “என்னால் தான நீங்க அழுதீங்க?, இனி இந்தமாதிரி செய்ய மாட்டேன் க்கா” என்றவனிடம் உமா…  அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை குட்டி… அழக்கூடாது கண்ணைத்துடை, அப்புறம் அம்முவும் கண்ணனும் அழுவாங்க. மீனை பார்த்ததும் எனக்கு வேற பசிக்குது குட்டி வாடா சமையலை பாக்கலாம்.

 

 

 

குட்டி நீயும் கண்ணனும் போய் மல்லியை கூட்டிகிட்டு வாங்க… அப்படியே வரும் போது குளிக்க துணிய எடுத்து வெளியே கேட்டுட்டு வரசொல்லுங்க. நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள போகாதிங்க. போங்க போய் வரசொல்லுங்க எனக்கூறி அனுப்பிவைத்தாள்.  உமா பசி என்றதும் குட்டியும் அனைத்தும் மறந்துவிட்டு கண்ணனிடம் மல்லியை பார்க்க சென்றுவிட்டனர். கண்ணன் திரும்பிதிரும்பி அவளை பார்த்ததக்கொண்டே சென்றான். அதை பார்த்த உமா தன் கண்களை மூடி திறந்து சைகை செய்ததும் கண்ணனும் தயங்காமல் குட்டியின் சென்றான். 

 

 

 

அவளையே பார்த்துக்கொண்டு இருந்த அம்முவிடம்  உமா,  அம்மு நீ எல்லா பொருளையும் எடுத்து வைடீ… நான் போய்  அடுப்பை பத்திவைக்க விறக எடுத்துகிட்டுவறேன்… மீனைக்காட்டி நீ இத தொடாம தேவையான பொருள்களை ஒரு தட்டத்தில் எடுத்து வைத்து விட்டு கதவை அட… மறக்காம துணிய எடுத்து குளியலறையில் வைடீ எனக்கூறிவிட்டு சென்று விட்டாள். அம்முவும் அவள் இருந்த மனநிலையில் எதுவும் பேசாமல் உமா கூறிய அனைத்தையும் செய்தாள். 

 

 

 

பின் மல்லி வந்ததும் சமைத்து சாப்பிட்டு விட்டு வெளியே வைத்த பாத்திரங்களை கழுவிவிட்டு, குளித்த பிறகு தான் அனைவரையும் உள்ளே செல்ல அனுமதித்தால் உமா. 

 

 

 

இப்படியான சின்னசின்ன கலாட்டாகள், சண்டைகள், விளையாட்டு என அந்த நாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!