Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? – 19.2

 

அத்தியாயம் 19.2:

 

 



Advertisement

 

 

 

Advertisement

“திருமணம் முடிந்த முதல் ஒரு வருடம் வரை நன்றாக தான் சென்றது பருவதம்- பத்மநாபன் தம்பதியர்களின் வாழ்க்கை”. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், உறவினர்கள் என பலர் இன்னும் விசேஷம் இல்லையா? என கேட்பதும்… ஏதாவது டாக்டர் பாக்க வேண்டியதுதான? என அறிவுரை கூறுவதாக நினைத்து, அவரின் மனதை காயப்படுத்தியதில் குழப்பமடைந்து பருவதம் நேராக கணவரிடம் சென்று நின்றார். 

Advertisement

 

 

 

Advertisement

 

“மாமா… கல்யாணம் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகிடுச்சி, இன்னும் நமக்கு குழந்தை இல்லை  அதனால் டாக்டரை போய் பார்த்துவிட்டு வந்துவிடலாமா?”என்றவரிடம்…

 

 

 

பத்மநாதன், “இங்க பாரு பருவதம்… இப்ப தான் கல்யாணம் முடிஞ்சி  ஒரு வருஷம் தான் ஆகுது… உடனே டாக்டர் பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு?… குழந்தைங்கிறது ஒரு வரம்… எல்லாருக்கும் உடனே கிடைக்காது பருவதம்… இந்த வருஷத்தில் குழந்தை பிறக்கலாம்…அடுத்தவருசம கூட பிறக்கலாம்… ஏன் பத்து வருஷம் கழிச்சு கூட குழந்தை பிறக்கட்டும்… அடுத்தவங்க ஆயிரம் சொல்லுவாங்க, அதையெல்லாம் மனசுல வச்சுகிட்டு நம்ம நிம்மதி போய்டும் பருவதம்”… 

 

 

 

 

 

“முதலில் நீ ஆரோக்கியமா இருந்தா தான் குழந்தை பெத்துக்கமுடியும்… முதலில்  உன்னை நீ பாத்துகோ… பாரு உடம்பில் வெறும் எழும்பு தான் இருக்கு… இப்படி இருந்தா எப்படி ஒரு குழந்தையை உன்னால் சுமக்கமுடியும்?… நல்லா சத்தான சாப்பாடு சாப்பிடு, மனசை அமைதியா வச்சிக்கோ அப்ப தான் குழந்தை உண்டாகும்… சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும்… புரியுதா பருவதம்?… அதனால் கண்கண்ட யோசனையை விட்டுவிட்டு வாழ்க்கையை அதன் போக்கில் வாழலாம் பருவதம்”…

 

 

 

 

“அந்த கடவுள் எப்ப நமக்கு குழந்தை பாக்கியம் தரானோ அப்பதரடும்… அவனுக்கு தெரியும் யாருக்கு எப்ப என்ன தரனும்னு… அதனால் இந்த வேலையத்தவங்க பேச்சை கேட்டு இருக்காத… புரியுதா?”…

 

 

 

“புரியுதுங்க… இனி என் உடம்பை நான் நல்லா பாத்துக்கிறேன்… அடுத்தவங்களோட அசட்டுத்தனமான பேச்சை கேட்க மாட்டேன்…. தேவையில்லைததை மனசில் போட்டு குழப்பிக்க மாட்டேன்… போதுமா மாமா?”… இது போதும் டீ என் செல்ல பொண்டாட்டி.

 

 

 

 

 

“சரிசரி தம்பி வர நேரம்  ஆயிடுச்சு மாமா…  நான் போய் சாப்பிட ஏதாவது செய்து வைக்கிறேன், அவன வந்த உடனே சாப்பாடு தான் கேட்பான் எனக்கூறி சென்றவரை காதலாக பார்த்துக்கொண்டு இருந்தார் பத்மநாதன்”.

 

 

 

இப்படியே சின்னசின்ன குழப்பம், மகிழ்ச்சி மற்றும் கவலை என இவர்களின் வாழ்க்கை ஐந்து வருடம் அமோகமாக சென்றது இவர்களின் வாழ்க்கை.

 

 

 

 

இவர்களின் ஐந்தாவது திருமண நாள் அன்று தான் பருவதம் தாய்மை அடைந்தது உரியானது… அந்த செய்தி கேட்டு பருவத்தை கொண்டாடி மகிழ்ந்தார் பத்மநாதன்… வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்தனர். 

 

 

 

“மருதாயி சென்னையில் ஒரு பணக்காரரின் வீட்டில் வேலைசெய்து தான் பிள்ளைகளை வளர்த்தார்… அவர்களிடம் பருவதம் தாய்மை அடைந்த விஷயத்தை கூறி கொஞ்சுங்க நாள் வேலைக்கு வரமுடியாது எனக்கூறி பாண்டிச்சேரி வந்துவிட்டார்”. 

 

 

 

 

 

அவர்களும் சந்தோசமாக மருதாயிக்கு கொஞ்சம் பணம் கொடுத்து ஊருக்கு வழியனுப்பி வைத்தனர்.

 

 

 

 

 

“அப்பொழுது வந்தவர் குழந்தை பிறக்கும் வரை பருவத்தை பார்த்து கொண்டார்… குழந்தை பிறந்த பின்னும் ஒரு தாயாக மகளுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தார்…  மருதாயி மட்டுமல்ல மொத்த குடும்பமுமே அவரை அப்படி பார்த்துக்கொண்டது அந்த குடும்பம்”.

 

 

 

“முதல் குழந்தையாக  அம்மு வந்து பிறந்தாள்… அவள் பிறந்து மூன்று வருடம் கழித்து பிறந்தவன் தான் கண்ணன்”.

 

 

 

அதன்பிறகும் இவர்களின் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாகவும் தெளிந்த நீராடை போலவும் அமைந்தது.

 

 

 

 

இந்த மகிழ்ச்சியொல்லாம் சண்முகத்தின் திருமணம் வரை தான். 

 

 

 

 

 

“சண்முகத்திற்கு அவரின் அத்தை மகள் கவிதாவையே திருமணம் செய்து வைத்தார் மறுதாயி”… வீட்டினர்கள் தான் பேசி முடிவு செய்து முறைப்படி திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக தான் சென்றது… 

 

 

நாளாக ஆக அவரின் குணம் மெல்லமெல்ல வெளியே வந்தது. பணம் மட்டுமே பிரதானமாக நினைத்தவர் தான் சண்முகத்தின் மனைவி கவிதா… அவர் எதிர் பார்த்த வாழ்க்கை கிடைக்காததால் அனைவரையும் வருத்த ஆரம்பித்தார். 

 

 

 

 

 

“முதலில் பருவத்தை சாட ஆரம்பித்தவர்… நாளாக ஆக அனைவரையும் பேசிபேசியே ஒரு வழி ஆக்கினார். முதலில் அமைதியாக இருந்த சண்முகம் குழந்தைகளை திட்டவும் இவரும் பதிலுக்குபதில் பேச ஆரம்பித்தார்”…. இப்படியே இவர்கள் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கும் பொழுது தான் ஒரு நாள் தன் அலுவலக விழாவிற்கு தன் கவித்தாவை அழைத்துச்சென்றார் சண்முகம். 

 

 

 

 

இந்த விழாவிற்கு பின் இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி அடையும் என வீட்டினர் நினைத்திருக்க, அந்த கடவுளே வேறாக கணக்கு போட்டார்.

 

 

 

 

அந்த விழாவிற்கு சென்ற போது தான் சண்முகத்தின் முதலாளியின் கண்ணில் விழுந்தார் சண்முகம் மனைவி கவிதா… அன்று பிடித்ததார் அவர்கள் குடும்பத்திற்கு சனீஸ்வரன். 

 

 

 

 

 

 

“கவிதாவின் அழகில் மயங்கிய முதலாளி… தன்னுடைய உடமையாக்கிக்க முயன்றார்… அவரின் பணத்தை பார்த்து மயங்கியவர் சுலபமாக வலையில் விழுந்தார் கவிதா”. 

 

 

 

 

 

இந்த விழாவுக்கு போய்வந்த ஒரு வாரத்தில் அவர் கர்பமாக இருந்தவிஷயம் அறிந்து அனைவரும் மகிழ்ந்தனர். 

 

 

 

சண்முகமோ அவரை உள்ளங்கையில் வைத்து தாங்காத குறைதான்… அனைவரின் எதிர்பார்பை நிறைவேற்ற வந்து பிறந்தவன் தான் குட்டி. 

 

 

 

 

 

“குட்டியை கவிதாவைவிட பருவதமே வளர்த்தார்… குட்டி அந்த வீட்டின் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தான். இந்த மகிழ்ச்சியில் கவிதாவின் போக்கை கவனிக்க தவறிவிட்டனர்… அதுவே அவருக்கு மிகசுலபாக போய்விட்டு. குழந்தைக்கு பசியாற்றுவதை தவிர எந்த ஒரு கடமையையும் செய்யவில்லை”.

 

 

 

 

“இப்படியே இவர்களின் வாழ்க்கை குட்டியின் ஒரு வயது வரை சென்றது. ஒரு நாள் வெளியே சென்று வந்தவரின் நடவடிக்கை முற்றிலும் மாறாக இருந்தது… அந்த வீட்டினர் அவரை கவனிக்க தவறியது… அன்று இரவே வீட்டைவிட்டு, பெற்ற பிள்ளையைவிட்டு, கணவனைவிட்டு தன்சுகம் தான் பெரிதென்று சென்றுவிட்டார் சண்முகத்தின் முதலாளியுடன்”. 

 

 

 

 

 

“விடிந்தவுடன் சண்முகம் கண்ணில் பட்டது கவிதாவின் கடிதம்… தனக்கு அவரின் முதலாளியை பிடித்திருப்பதாகவும், இவரிடம் இல்லாத பணம் அவரிடம் இருப்பதாகவும், இவருடனான வாழ்க்கை அழுத்துவிட்டதாகவும் கடிதம் எழுதி வைத்து விட்டு இரவோடு இரவாக சென்று விட்டார்”.

 

 

[the_ad id=”6605″]

 

 

அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு முதலாளியின் வீட்டிற்கு சென்று சத்தம் போட்ட சண்முகம், கவிதாவும் அவருக்கு தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அதே போல் குட்டிக்கும் கவிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் எழுதி வாங்கிக்கொண்டர், வரும்போது கவிதாவையே ஆத்திரம் தீரும் வரை அடித்து அவமானம் படுத்துவிட்டு வந்தார். 

 

 

 

இவ்வளவு செய்த சண்முகம் ஒரு முறை கூட கவிதாவை தன்னுடன் வீட்டிற்கு அழைக்கவில்லை… அந்த அளவுக்கு சண்முகம் உடைந்து போயிருந்தார். 

 

 

 

 

இவர் எழுதி வாங்கிய கடிதமே ஒரு நாள் தன் மகனை கவிதாவிடம் இருந்து காப்பாற்றும் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை அறிந்து கொள்ள அவரும் இருக்கபோவதில்லை என்று அறியாமல் போய்விட்டார். 

 

 

 

 

இவர் இத்தனை ஏற்பாடுகளையும் செய்தவர் வீடு வரும் வரை யாருக்கும் தெரியாமல் போனது… 

 

 

 

எப்பொழுதும் கவிதா எட்டு மணிக்கு மேல் தான் தன் அறையை விட்டு வெளியே வருவார், யாரும் அவரை சென்று எழுப்பும் மாட்டார்கள்… அதனால் கவிதா வீட்டை விட்டு வெளியே சென்றது இவர்களுக்கு தெரியாபோனது.

 

 

 

சண்முகம் மனமே ரணமாக வழித்தது. ஆனாலும் தன்னை தேற்றிக்கொண்டு தன் மகனுக்காக வீட்டிற்கு சென்றவர் முற்றத்தில் அப்படியே அமர்ந்துவிட்டார். 

 

 

 

 

 

 

அப்பொழுது சமையலறையில் இருந்துவந்த பருவதம் இவரின் தோற்றம் கண்டு பதறிச்சென்று விசாரிக்க நடந்ததை கூறியவர், முன்னெச்சரிக்கையாக வாங்கிய பத்திரத்தை பருவதத்திடம் கொடுத்து பத்திரப்படுத்த சொன்னவர் குட்டியின் எதிர்காலத்தை மனதில் கொண்டு திடமாக செயல்பட்டார்… இதில் சண்முகம் தான் அண்ணன், அண்ணி மற்றும் அன்னையை சமாதானம் செய்யவேண்டியதாயிற்று. 

 

 

 

 

 

“குட்டியின் வாழ்க்கை மட்டு எந்த வித சிரமமும் இல்லாமல் அனைவரின் அன்பை அடிப்படையாக கொண்டு மகிழ்ச்சியாக சென்றது. அன்னை பற்றிய சிறி ஏக்கமும் இல்லாமல் இருந்ததான்… அவனை பொர்த்தவரரை அவனின் அன்னை பருவதம்”. 

 

 

 

 

“அங்கு கவிதாவோ தன்னை அடித்த சண்முகத்தின் மேல் தீராத வன்மத்தை வளர்த்துக்கொண்டாள்… அதன் விளைவு அடுத்த ஆறாவது மாதத்தில் வேலை விஷயமாக வெளியூர் சென்ற சண்முகத்தின் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி பத்மநாதனை எட்டியது… அந்த செய்தியில் அடித்துபிடித்துக்கொண்டு விபத்து நடந்த இடத்தில் சென்று பார்த்ததில் அவரின் உடல்கூட சிக்கவில்லை… அந்த அளவு அவர் சென்ற கார் எரிந்து போய் பள்ளத்தில் விழுந்துகிடந்தது.

 

 

 

 

இந்த விபத்தை ஏற்படுத்தியது கவிதாவின் இன்னாள் கணவன் நம்பி… ஆம் நம்பிதான்… தன்னை அடித்த சண்முகத்தின் உயிரை  எடுக்கவேண்டும் என்ற கவிதாவின் கூற்றை ஏற்றுக்கொண்டார் நம்பி சரியான தரிசனத்திற்காக காத்திருந்து லாரி மூலமாக விபத்து ஏற்படுத்தி, பள்ளத்தில் தள்ளி விட்டனர்… சண்முகத்தின் மரணத்தை நேரில் கண்ட கவிதா அன்றே நம்பியுடன் மும்பை சென்றுவிட்டாள்”. 

 

 

 

 

சண்முகத்தின் மரணத்தால் மிகவும் ஒடுங்கி போய்விட்டார் மருதாயி… அவரை சமாளிக்கவே படாதபாடு பட்டு போனார் பருவதம்…  இதில் “அப்பாவை கேட்டு அழுத குட்டியை சமாளிக்க முடியாமல் தவித்த பருவத்தை பார்த்து தன்னை தேத்திக்கொண்ட பத்மநாதன் குட்டியை தான் பார்த்துக்கொள்வதாக பொருப்பேற்றிக்கொண்டார்… அவருக்கு உதவியாக கண்ணனும் அம்முவும் இருந்தனர்”. 

 

 

 

 

இப்படியே அவர்களின் வாழ்க்கை குட்டியின் ஆறு வயதுவரை சென்றது… எந்த ஒரு சூழ்நிலையிலும் கவிதாவையே பற்றி குட்டிக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டனர். 

 

 

“தன் மருமகளின் கஷ்டம் உணர்ந்து வேலையைவிட்டுவிட்டு வந்தார் மருதாயி… அவர் வந்து மூன்று நாட்கள் கழித்து உமா பத்மநாதன் வீட்டில் அடியெடுத்து வைத்தாள்… அவளை அழைத்துவந்து மருதாயி தான்”. 

 

 

 

 

 

உமா அந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் அவர்களை ஓரளவு சமநிலை அடையவைத்தாள்… பத்மநாதனுக்கு தோழ் கொடுக்க வேலைக்கு சென்றாள்… வேலைக்கு செல்வதாக கூறீயவளை தடுத்த பருவதம் மற்றும் பத்மநாதன் கெஞ்சி கொஞ்சி ஒரு வேளையில் சேர்ந்தாள்… காலையிலிருந்து மாலைவரை வெளிவேளை, மலையிலிருந்து இரவு படுக்கும் வரை குடும்பத்தினருடன் நேரம் செலவளிப்பதுமாக நாட்கள் அதன் போக்கில் சென்றது. உமாவோ அந்த வீட்டின் மூத்தமகளாக இருந்து அனைவரையும் பார்த்துக்கொண்டாள்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

அப்பொழுது தான் பரமனின் மூலமாக பிரட்சனை வந்தது அந்த குடும்பத்திற்கு.

 

 

 

“ஒரு நாள் அம்மு பள்ளிக்கு தனியாக நடந்து சென்று கொண்டு இருக்கும் பொழுது அவளுக்கு முன்னால் சென்ற பெண்ணை திடீரென வந்த காரில் இருந்த ஆட்கள் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை காரில் ஏற்றிக்கெண்டு அதிவேகமாக சென்றுவிட்டது… அதை பார்த்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் அம்மு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிற்கு ஓடிவிட்டான்… அம்மு போன வேகத்தில் ஓடிவந்ததை கண்ட பத்மநாதன் என்னவென்று விசாரிக்க, நடந்ததை கூறியவுடன் பக்கத்தில் இருந்த போஸ்டேசனுக்கு சென்று கூறியவுடன், அவர்கள் விரைந்து செயல்படதால் அந்த பெண் எந்த வித சேதாரமும் இல்லாமல் காப்பாற்ற பட்டது மட்டுமல்லாமல்,  பரமனும் அவனின் ஆட்களும் கைதி செய்ய பட்டனர்”. 

 

 

 

 

 

“காப்பாற்ற பட்ட பெண்ணின் பெற்றவர்கள் அம்மு மற்றும் பத்மநாதனிடம் பலமுறை நன்றிகளை தெரிவித்து விட்டு, அவர்களின் விலாசம் கொடுத்தது மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் எந்த உதவி வேணும்னாளும் தயங்காமல் தங்களை வந்து சந்திக்குமாறு கூறி சென்றனர்”.

 

 

 

 

 

 

அதன் பின் வந்த நாட்கள் எந்த வித தடையும் இன்றி இயல்பாக சென்றது… ஒரு நாள் தன் கணவனிடம் பருவதம் தன் தாய் தன்னை இன்னும் மன்னிக்கவில்லையே என்ற வேதனையில் அழுதுகொண்டு இருந்ததை பார்த்த உமா… தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் பார்வதியை மிகவும் எதிர்பார்ப்பதாகவும், விடுமுறைக்கு அவருடன் வந்து தங்க ஆசைப்படுவதாகவும், அதனால் தங்களை வந்து அழைத்துச்செல்லுமாரு ஒரு கடிதம் எழுதி அவர்களின் புகைப்படத்தையும் அதனுடன் சேர்த்து கவர் செய்துவைத்தனர்…

 

 

 

ஆனால் அனுப்புவதற்கு முகவரி தெரியாததால் மருதாயின் உதவியைநாடினர்… அவருக்கு கொஞ்சம் ஐஸ் வைத்து, முகவரியை வாங்கி பார்வதிக்கு அனுப்பிவைத்தனர். தன் தாய் – தந்தையின் கல்யாண நாளுக்காக, அவரின் தாயை அவரை எதிர்பார்த்தாகவும், அவரின் முன் நிறுத்த திட்டமிட்டு இந்த வேலையை செய்தனர். 

 

 

 

 

ஏற்கனவே பருவதத்தின் மேல் இந்த கோவம் குறைந்தநிலையில், பேரன்கள் மற்றும் பேத்திகளின் புகைபடத்தை பார்த்ததும் அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அவர்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமானது… இருந்தாலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டு பருவத்தின் கல்யாண நாளன்று அவர் முன் சென்று மகிழ்ச்சி அளிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தார் பார்வதி. 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!