Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-5

அத்தியாயம் 5: 

 

 

 



Advertisement

 

 

ஒரு வழியாக “அம்மு, கண்ணன் மற்றும் குட்டி என அனைவரும் தேர்வுகளில் முடிந்த பின் தான் உமா சற்று ஆசுவாசம் அடைந்தால்”. 

Advertisement

 

Advertisement

 

 

 

Advertisement

 

 

 

“அனைவரையும் நேரமாக எழுப்பிவிட்டு, அவர்களுக்குக் குடிக்கக் கஞ்சி கொடுத்து , படிக்கவைத்து மற்றும் சாப்பாடு செஞ்சி கல்லூரி மற்றும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு…  பின் தான் உமா வேலைக்குச் செல்வாள்”. அதுமட்டுமல்லாமல் வெளிவேலைகளும் அதிகமாக இருப்பதால் சற்றுக் கஷ்டமாக இருந்தது.  

 

 

 

 

 

 

 

அந்த நேரத்தில் எல்லாம் தன் தம்பி, தங்கையை நினைத்து வேலை செய்ய ஆரம்பித்துவிடுவால். இப்படித்தான் கடந்த இரண்டு மாதங்களுக்குச் சென்றது.  

 

 

 

 

 

 

 

 

 

அவர்களின் தேர்வு முடிந்ததும் தான் இவளின் வேலையும் சற்று மட்டுப்பட்டது…  

 

 

 

 

 

 

 

ஏற்கனவே குட்டி மீன்பிடிக்கப் போலாம் எனக்கேட்டு இருந்தான். ஆனால் உமாவால் தான் கூட்டிச்செல்லவில்லை. அவளின் வேலை மற்றும் குட்டிக்கு நடந்த அசம்பாவிதம் காரணமாக.  

 

 

 

 

 

 

 

இன்று உமாவிற்கு வேலை இல்லை அதனால் வீடு அமைதியாக இருந்தது.  

 

 

 

 

 

 

 

குட்டி உமாவிடம், “அக்கா அன்னைக்கே ஆத்துக்குக் கூட்டிகிட்டு போரேன் சொன்ன இல்ல?. அக்கா வாக்கா போலாம்”….  

 

 

 

 

 

நாளைக்குப் போலாம் குட்டி என்ற உமாவிடம்…  அதெல்லாம் முடியாது…. வாங்க அக்கா இப்பவே போலாம் எனறான் சின்னவன்.  

 

 

 

 

 

நாளைக்கு உங்களுக்கு வேலை இருந்த போய்டுவீங்க…. நீங்க இல்லாம நாங்க மட்டும் எப்படிப் போவது?.  

 

 

 

 

 

ஆமா அக்கா வாங்க போகலாம் என்றான் கண்ணன்…  

 

 

 

 

 

நீங்க இல்லாம போகக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு… நீங்க வேலைக்குப் போவீங்க, நாங்க மட்டும் எப்படிச் சந்தோசமா ஊரைசுத்துக்கிட்டு இருக்கிறது என்ற அம்மு… 

 

 

 

 

 

சரிடீ போகலாம்… “இனி இந்தமாதிரி எல்லாம் நீங்க யாரும் நினைக்ககூடாது புரியுதா? . நான் யாருக்காக வேலைக்குப் போயிட்டு இருக்கேன் அம்மு?. என் தம்பி, தங்கைக்காகதானே?”. அது எப்படி எனக்குக் கஷ்டமா இருக்கும்?. எனக்கு உங்களைத் தவிர யாரு இருக்கா அம்மு? என்றால் உமா. 

 

 

 

 

 

பேச்சி திசை மாறுவது உணர்ந்த கண்ணன், அதான் அக்கா போகலாமுனு சொல்லமாட்டாங்க இல்ல அம்மு, நீ போய் வாலி எடுத்துகிட்டுவா…..  

 

 

 

 

 

 

 

 

 

குட்டி நீ போய் தூண்டில் எடுத்துக்கிட்டு, மீன்பிடிக்கப் பழைய தாவணி  எடுத்துக்கிட்டுவா.  

 

 

 

 

 

 

 

உமா, அதுதெல்லாம் வேண்டாம். “கண்ணா நீ போய் அந்தக் கொசுவலையும், வெங்காயம் கொட்டிவைக்கிற கூடையையும் எடுத்துக்கிட்டுவா”…  

 

 

 

 

 

 

 

சரிக்கா நான் போய் எல்லாத்தையும் பையில எடுத்துவைத்துக்கிறேன்… சரி போ கண்ணா…  

 

 

 

 

 

 

 

குட்டி நீ போய் மல்லிக்கு போன் பன்னி நான் ஆத்துக்குப் போலாம்னு வரசென்னதா சொல்லு.  பழையசாதம் அப்படியே எடுத்துக்கிட்டு வரசொல்லுடா……  

 

 

 

 

 

அம்மு நீ போய் சாம்பல் ஒரு பையில எடுத்துகிட்டுவா, அப்படியே அந்தக் கத்திய எடுத்து வச்சிடுடீ…. சரிக்கா எனக்கூறி சென்றுவிட்டால். 

 

 

 

 

 

 

 

உமா வீட்டின் கடைசியில் உள்ள அறைக்குச் சென்று தவிடு சிறிது காகிதத்தில் எடுத்துக்கொண்டு, வீட்டைபூட்டி விட்டு வெளியே வந்த சிறிது நேரத்தில் மல்லியும் வந்துவிட்டால்.  

 

 

 

 

 

பின்பு அனைவரும் கிளம்பி ஆற்றுக்குச் சென்றுவிட்டனர்.  

 

 

 

 

 

போகும் வழியில் டியூசன் வரும் இரண்டு பையன்களின் வீட்டிற்குச் சென்று அவர்களின் அன்னையை அழைத்தால், “கனகா அக்கா, சாந்தி அக்கா  என அழைத்தவளின் குறள் கேட்டு அவர்கள் வெளியே வந்தனர்”.  

 

 

 

 

 

அவர்களிடம் உமா, “அக்கா  நாங்க ஆத்துக்குப் போரோம் அப்படியே பசங்ளையும் கூட்டிக்கிட்டு போகட்டாக்கா?”, அன்னைக்குப் பிறகு பசஞ்சங்க ஆத்துபக்கம் போகலயாட்டுக்குது? அதுனால கூட்டிக்கிட்டு போகட்டா என அனுமதி கேட்டால். 

 

 

 

 

 

 

 

அதற்குக் கனகா, “ஆமா புள்ள! நீ சொன்னதுக்குப் பின்ன அவனுங்க போகறது இல்ல. அப்படி என்ன புள்ள சொன்ன ரெண்டும் பொட்டிபாம்பா அடங்கி இருக்குதுங்க”… 

 

 

 

 

 

அதற்குக் குட்டி,  “ரெண்டு மணி நேரம் உட்காரவச்சி அட்வைஸ் பன்னுனா அவனுங்க எப்படி அக்கா  போவானுங்க?” என்றான்…  

 

 

 

 

 

அப்படிச் சொல்லு குட்டி…. அவகிட்ட மாட்டி இந்த அட்வைஸ கேட்கிறதுக்குப் பதிலா  “தும்பை பூவில் தூக்கு போட்டுக்கிலாமுனு தோனிருக்கும் அவனுங்களுக்கு அதனாலதான் பயபுள்ளைங்க உமா கண்ணுல சிக்காம இருக்கானுங்க” என்றால் மல்லி. 

 

 

 

 

 

இதைக்கேட்ட கண்ணன்,  “எப்படி அக்கா! நீங்க அம்மு மனதில் நினைத்ததை அப்படியே சொல்லீட்டீங்க”. அம்முவின் முறைப்பை மேலும் பொருட்படுத்தாத கண்ணன் அவளை வம்பிலுக்கும் பொருட்டு மல்லியிடம், “உண்மையாகவே நீங்க மகான் தான் போங்க என்றவனின் கூற்றைக் கேட்கபிடிக்காமல் அம்மு முன்னே சென்றுவிட்டால்”.  

 

 

 

 

 

அவளைத் தனியேவிடாமல் குட்டி அம்முவை பின்தொடர்ந்து சென்றுவிட்டான். அவர்களைப் பார்த்து சிரித்தனர் கண்ணன், மல்லி.  

 

 

 

 

 

உமா, “போதும் உங்க விளையாட்டு அமைதியா இருங்க எனக்கூறி பையன்களின்  அன்னையிடம், அக்கா அவனுங்க கிட்ட நம்ம ஊரு ஆற்றைப் பத்தி சென்னேன், அவனுங்களும் புரிஞ்சிகிட்டாங்க”….     

 

 

 

 

 

 

 

 

 

“நான் சொன்னத அவனுங்க கேட்ட மாதிரியே, நானும் அவனுங்க சின்னசின்ன ஆசைய நிறைவேத்தனும் இல்லக்கா?” அதனாலதான் கேட்டேன் என்ற உமாவிடம்…. 

 

 

 

 

 

அதைக் கேட்ட சாந்தி அக்கா, “உள்ள தான் இருக்கானுங்க உமா. …… நீ கூட்டிக்கிட்டுப் போ புள்ள எனக்கூறி அவர்களை அனுப்பி வைத்தார்”. 

 

 

 

 

 

 

 

பக்கத்து வீட்டில் உள்ள பெண்(அன்று உமா பற்றிப் புகார் கூறிய பெண்மணி) இன்று அவளின் கூற்றில் உள்ள உண்மைபுரிய அமைதியா வேடிக்கை பார்த்தார்.  

 

 

 

 

 

இங்கு வந்த இத்தனை மாதத்தில் அந்த ஆற்றின் ஆழம்,  அதில் உள்ள ஆபத்தும் அவருக்குத் தெரிந்ததால், உமாவின் அன்றைய கோபம் புரிய அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்…..  

 

 

 

 

 

 

 

அவரின் பார்வையை உணராமல் அந்தச் சிட்டுக்கள் மீன் வேட்டைக்குச் சென்றனர்.  

 

 

 

 

 

 

 

சாந்தி அக்கா, “என்னடீ அப்படிப் பாக்கிற அந்தப் புள்ளைய?” என்ன விசயம் என்றவரிடம்…. 

 

 

 

 

 

 அந்த பெண்மணி, அந்தப் புள்ள குணத்துக்கு ரொம்பச் சந்தோசமாக இருக்கும்…நீங்க வேணா பாருங்க என்றவரிடம்….. 

 

 

 

 

 

 

 

கனகா,  “எது எப்படியே இனியாவது அந்த ஆண்டவன் இந்தச் சின்னக் குறுத்துகளுக்கு நல்ல வாழ்க்கைய அமைத்து கொடுத்தா அதுபோதும்”…. 

 

 

 

 

 

சாந்தி அக்கா, “கனகா இந்த உமா புள்ள வாக்கப்பட்டுபோற இடந்தா இவ கிடைக்கக் கொடுத்துவச்சி இருக்கனும்…… அது என்வோ உண்மை தாண்டி”, எனக்கூறி அவர் அவர் வேலையைப் பார்க்க சென்றுவிட்டனர் அந்தப் பெண்மணிகள்….. 

 

 

 

 

 

ஆற்றங்கரையில் உள்ள பெரிய பாறையில் கொண்டுவந்த பொருள்களை வைத்துவிட்டு “மல்லி, உமா மற்றும் கண்ணன் மட்டும் நீரில் இறங்கி மீன் பிடிக்க ஏதுவாகக் கரை அமைத்தனர்”. 

 

 

 

 

 

 

 

அவர் உள்ள இடம் சற்று குறுகிய,  ஆழம் அதிகம் இல்லாத பகுதியில் மல்லி, கண்ணன் தடுப்பு அமைத்தனர். 

 

 

 

 

 

“ஆற்றங்கரை ஓரத்தில் சிரிய அளவில் தண்ணீர் செல்ல பாதை அமைத்து, அந்தப் பாதையில் சிறிது தள்ளி குழிவெட்டி கூடை வைத்தால் உமா”.  

 

 

 

 

 

 

 

 

 

அந்தப் பாதையில் வரும் தண்ணீர் கூடையின் வழியே குழிக்கு சென்று விடும். அந்தத் தண்ணீரில் வரும் குட்டிகுட்டி மீன்கள்(அயிரை குஞ்சிகள், கெடுத்துக் குஞ்சிகள்) அந்தக் கூடையில் தங்கிவிடு்ம்.  

 

 

 

 

 

 

 

கூடையை அம்மு விளாமல் பார்த்துக்கொள்ள, குட்டி குழியில் விழுந்த நீரை வெளியேற்றிக்கொண்டு இருந்தான்.  

 

 

 

 

 

 

 

இந்த அமைப்பை குட்டி, அம்முவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சற்று தள்ளி மற்றொரு மீன்பிடி முறையை அமைத்தனர்.  

 

 

 

 

 

 

 

“மல்லி அந்தப் பழைய சாப்பாட்டை எடுடீ”. கண்ணா அந்தப் பாறையில் இருக்கப் பையில தவிடு இருக்கும் எடுத்துக்கிட்டுவா என்றவள்…  

 

 

 

 

 

 

 

அவர்கள் எடுத்துவந்த “வாலியில் சாப்பாடு, தவிடு போட்டு நன்றாகக் கலக்கிவிட்டு, அதை எடுத்துக்கொண்டு சற்று அதிகமாக(இடுப்பு அளவு) ஆழம் உள்ள இடத்தில் வாலியை நீருக்குள் வைத்துவிட்டு, சற்று வாலியின் உள்ள கலவையைக் கலக்கிவிட்டால்”. 

 

 

 

 

 

பின் கண்ணனை மேலே போகச் சொல்லிகிட்டு, வாலியைவிட்டு சற்றுத்தள்ளி மல்லியுடன் சேர்ந்து கொண்டுவந்த வலையில் மீன்பிடித்தால் உமா….  

 

 

 

 

 

அவர்களுடன் வந்த “சிறுவர்களைக் கண்ணன் அழைத்துச்சென்று ஆழம் இல்லாத இடத்தில் அவர்களுடன் சேர்ந்து நீச்சல் அடித்தான்”.  

 

 

 

 

 

 

 

இந்த இரண்டு அமைப்பிலும் நிறைய மீன்கள் விரைவாகவே கிடைத்து விட்டது. 

 

 

 

 

 

 

 

பின் ஆற்றைவிட்டு வெளியே வந்த உமா குட்டியிடம், குட்டி அந்த மீனை எடுத்துக்கிட்டுவா…இதே வரேன்கா…  

 

 

 

 

 

அம்மு அந்தப் பாறைய நல்லா தண்ணீர் ஊற்றி கழுவிவிடு.. சரிக்கா.  

 

 

 

 

 

பிடித்த மீனில் இவர்களுக்குத் தேவையான அளவு மீனை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டால்.   

 

 

 

 

 

உமா, அந்தப் பையில சாம்பல் இருக்கும் பாரு மல்லி அத எடுத்துக்கிட்டுவாடீ…..  

 

 

 

 

 

அதை எடுத்துக்கொண்டு வந்த மல்லிகா, “ஏண்டீ! எப்படி இப்படி ஈஸியா இவ்வளவு மீன் பிடிக்கக் கத்துக்கிட்ட? யார் சொல்லிக்கொடுத்தா?”….    

 

 

 

 

 

அதுவா பார்வதி பாட்டி தான் கத்துக்கொடுத்தாங்க… “ சீக்கிரம் எங்கள விட்டுவிட்டு போய்டு வாங்கனு நினச்சிதான் அவங்களுக்குத் தெரிந்த பல விசயத்தை எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்களோ என்னவோ?”. 

 

 

 

 

 

அவள் கூறியது மற்றவருக்கு வேணா சாதாரணமாகக் கூறியதாகத் தோனலாம்…  ஆனால் அவள் மனதில் அத்தனை வேதனை இருந்தது..  சிறு அளவு கூட அதை முகத்தில் உமா காட்டவில்லை….. பக்கத்தில் இருந்த மல்லிகாவுக்கு நன்றாகப் புரிந்தது. 

 

 

 

 

 

 

 

பேச்சை மாற்றும் பொருட்டு மல்லிகா, ஆமா எதுக்குடீ சாம்பல் எடுத்துக்கட்டுவர சொன்ன?… 

 

 

 

 

 

மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என ஆராய்ந்து கொண்டே உமா, அதுவா….  சாம்பல் போட்டு தேச்சா வழவழப்பு போய்டும் மல்லி…  

 

 

 

 

 

“சாம்பல், மீனையும் நல்லா கலக்கி விட்டு, அந்த மீனை எடுத்துப் பாறையில் தேய்த்தால் செதில்கள் எடுக்க ஈஸியா வந்துவிடும்”…  இதே இப்படித் தான் தேய்க்கனும் எனக்கூறி,அதனை செய்தும் காட்டினால் உமா…..  

 

 

 

 

 

பின் மல்லி, கண்ணன், பசங்கள், குட்டி மற்றும் அம்மு எல்லாரும் தேய்த்தால் விரைவாகச் செதில்கள் எடுத்துவிட்டனர். பின் ஆற்று நீரில் அந்த மீனை நல்லா கழுவிகிட்டு, அனைத்து பொருள்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இவை அனைத்தையும் வெற்றி மறைவாக நின்று பார்த்துக்கொண்டு இருந்தான். உமாவின் ஒவ்வொரு அசைவிலும் “வெற்றியின் மனம் தன்னவளிடம் தஞ்சம் அடைந்தது. மறைவாக நின்ற வெற்றி உமாவையும் விதவிதமாக Photos எடுத்துக்கொண்டிருந்தான்”….  

 

 

 

 

 

அவன் மனமே தன்னவளை நினைத்து படிக்கொண்டிருந்தது.  

 

 

 

 ஓஒ ஓஒ ஓஒ 

 

எங்கிருந்தாய் நான் 

 

மண்ணில் பிறந்திடும் போது 

 

எங்கிருந்தாய் நான் 

 

கொஞ்சம் வளர்ந்திடும் போது 

 

 

 

 

 

 

 

எங்கேயோ பிறந்தாய் 

 

அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று 

 

என் முன்னால் நீயாய் வந்தாய் 

 

இதற்கென்ன அர்த்தம் 

 

என் உயிரெல்லாம் சத்தம் 

 

அடி எனக்காக நீயும் வந்தாய் 

 

 

 

 

 

ஓஒ…..ஓஒ….ஓஒ….. 

 

ஓஒ…..ஹோ…..ஓஒ…….. 

 

ஓஒ…..ஓஒ….ஓஒ….. 

 

ஓஒ…..ஹோ…..ஓஒ…….. 

 

 

 

 

 

 

 

 

 

எங்கிருந்தாய் நான் 

 

மண்ணில் பிறந்திடும் போது 

 

எங்கிருந்தாய் நான் 

 

கொஞ்சம் வளர்ந்திடும் போது 

 

 

 

 

 

 

 

ஓ… நிலவின்….. பின்புறமாய் 

 

நீ தான் இருந்தாயா 

 

குயிலின் குரல்வளையில் 

 

ஒளிந்தே இருந்தாயா……ஓ… 

 

 

 

 

 

 

 

 

 

கடலின் அடியில் படிந்தா இருந்தாய் 

 

மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய் 

 

இந்த உலகின் அழகெங்கும் 

 

நீ தானா வழிந்தோடினாய் 

 

 

 

 

 

எங்கிருந்தாய் நான் 

 

மண்ணில் பிறந்திடும் போது 

 

எங்கிருந்தாய் நான் 

 

கொஞ்சம் வளர்ந்திடும் போது 

 

 

 

 

 

 

 

 

 

இதழை சுளிக்காதே  

 

இயங்காமல் போவேன் 

 

இடையை வளைக்கதே இடிந்தே  

 

நான் சாய்வேன் 

 

அடியே சிரிக்காதே இன்றே உடைவேன் 

 

ஐயோ நெளியாதே அழுதே விடுவேன் 

 

ஒரு ஊசி முனை வழியே 

 

உயிரை நீ வெளியேற்றினாய் 

 

 

 

 

 

 

 

எங்கிருந்தாய் நான் 

 

மண்ணில் பிறந்திடும் போது 

 

எங்கிருந்தாய் நான் 

 

கொஞ்சம் வளர்ந்திடும் போது 

 

 

 

 

 

 

 

எங்கேயோ பிறந்தாய் 

 

அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று 

 

என் முன்னால் நீயாய் வந்தாய் 

 

இதற்கென்ன அர்த்தம் 

 

என் உயிரெல்லாம் சத்தம் 

 

அடி எனக்காக நீயும் வந்தாய் 

 

 

 

 

 

ஓஒ…..ஓஒ….ஓஒ….. 

 

ஓஒ…..ஹோ…..ஓஒ…….. 

 

ஓஒ…..ஓஒ….ஓஒ….. 

 

ஓஒ…..ஹோ…..ஓஒ…….. 

 

 

 

 

 

 

 

 

 

************************************************************************************************************************ 

 

 

 

 

 

உமாவை சில நாட்களாகவே வெற்றி அவளுக்குத் தெரியாமல் பல இடங்களில் பின் தொடர்ந்து கொண்டு இருந்தான்….  

 

 

 

 

 

வெற்றி, “உமாவை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தான். அவளைச் சுற்றி உள்ள இடங்களில் பார்த்து இருந்தால், பின்னாளில் வரும் ஆபத்தில் இருந்து உமாவை காப்பாற்றி இருக்கலாம்”……. “விதி யாரை விட்டது”. 

 

 

 

 

 

 

 

 

 

“வெற்றி மட்டுமல்லாமல் ஒரு ஜோடி கண்கள் உமா மற்றும் அவள் சகோதரியையும் குரூரத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தது”.  

 

 

 

 

 

 

 

 

 

 

 

வீட்டிற்கு வந்தவர்கள் கங்கா, சாந்தியிடம் சிறிது மீனை கொடுத்துவிட்டு சென்றனர். 

 

 

 

 

 

பக்கத்துத் தெருவில் இருந்த தனம் மற்றும் மாரி அக்காவின் வீட்டிற்குச் சென்று கொஞ்சம் மீன்களைக் கொடுத்துவிட்டுவந்தவள், மல்லி நீ போய் குளித்துவிட்டு  மதியம் மற்றும் இரவு சாப்பாடுக்கு இங்கு வந்துவிடுடீ.  

 

 

 

 

 

நான் அப்பாவ சாப்பாடுக்கு வந்துவிடச் சொல்லறேன்…… உனக்கு எதுக்குடீ சிரமம் என்ற மல்லியிடம்…. 

 

 

 

 

 

“ஏண்டீ! எல்லாருக்கும் செய்யறதுல ஒரு கை சேர்த்துப் போட்டா தீந்து போச்சிடீ”…  நீ போய்ட்டுவா வேலை இருக்கு. 

 

 

 

 

 

இதுதான் கிராமத்தில் உள்ள மக்களின் சிறந்த குணங்கள். “காட்டுக்கு புலி ஆதரவு, புலிக்கு காடு ஆதரவு” என்ற பழமொழிக்கு இனங்க வாழ்ந்து வருகின்றனர் அந்த மக்கள். 

 

 

 

 

 

 

 

 

 

சரி சீக்கிரம் வந்துவிடறேன் புள்ள எனக்கூறி சென்றுவிட்டால் மல்லி.  

 

 

 

 

 

உமா கண்ணனிடம், அம்மு வந்ததும் நீ போய் குறிச்சிட்டுவாடா. அப்புறமா நீபோய் குட்டி..   

 

 

 

 

 

 

 

அம்மு வந்தவுடன் அந்த வெங்காயம், பூண்டு உரிச்சி வைக்கச் சொல்லுடா..” நான் போய் மயிலு பாட்டிகிட்ட பானை வாங்கிகிட்டு வந்துவிடறேன் எனக் குட்டியிடம் கூறி பாட்டியை பார்க்க சென்றால் உமா”…..  

 

 

 

 

 

அங்குச் சென்றவள் பாட்டியிடம்,  “மயிலு பாட்டி தான் பானை எடுத்துகிட்டு போறேன் என்றவளிடம்,சரி பாத்து பன்னுடீ. பானை உடைத்து விடாதே” எனக்கூறியவரிடம்.  

 

 

 

 

 

அதுதெல்லாம் நான் பாா்த்துக்கறேன்.. நீங்க  என்ன சோறு வச்சீங்க. தயிர் இருந்தது புள்ள… அதே விட்டுவிட்டேன்.  

 

 

 

 

 

“சரி ரவைக்கு நான் குழம்பு கொண்டுகிட்டு வருகிறேன். நீங்க சோறு மட்டு வைச்சிக்குங்க பாட்டி” எனக்கூறி அவரின் பதிலை கேட்காமல் பாறையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டால் உமா…. 

 

 

 

 

 

 

 

உமா பானையை எடுத்துக்கொண்டு வருவதற்குள் அனைவரும் குளித்து வந்துவிட்டனர்..  பின் உமா சென்று குளித்துவிட்டு வந்தால்.  

 

 

 

 

 

பானையில் குழம்பினை வைத்துக்கொண்டு  இருக்கும் போது மல்லியும் வந்துவிட்டால்.  

 

 

 

 

 

“வந்தவளிடம் உமா ஊறவைத்த அரிசியைக் கொடுத்து வீட்டிற்குள் இருந்த அடுப்பில் சாப்பாடு வைக்கச் சொன்னால்”…. 

 

 

 

 

 

உமா கண்ணனிடம், “நீ போய் வாழையிலை அறுத்துக்கிட்டுவா”… “சரிக்கா!”, அந்தக் கத்தி எங்கக்கா?. அது பையில இருக்கு பாரு. “அக்கா எடுத்துட்டேன்”….  சரிடா. 

 

 

 

 

 

“அம்மு நீ வீட்ட கூட்டி விடுடீ”…. ம்ம்கா….  

 

 

 

 

 

 

 

 

 

குட்டி நீ போய் வறுவளுக்கு அந்த மசாலா எடுத்துக்கிட்டுவா… அப்புறம் அந்த மீனு தண்ணி விட்டுவிடுச்சானு பாருடா என்ற உமாவிடம்…  

 

 

 

 

 

 

 

 

 

“அக்கா தண்ணீர் இல்ல…. நல்லா வடிஞ்சிடுச்சி அக்கா”…. 

 

 

 

 

 

 

 

சாப்பாடு வைத்துவிட்டு வெளியே வந்த மல்லிகா, “உமா நான் வீட்டுக்கு மசாலா கலக்கறேன், நீ குழம்பப் பாருபுள்ள”…. 

 

 

 

 

 

 

 

சரி நீ கலக்கு மல்லி….  இந்த குழம்ப எடுத்ததும் வறுவல் வச்சிடலாம்…  

 

 

 

 

 

 

 

அங்கு வந்த குட்டி, “அக்கா சுந்தரம் அப்பா இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவாங்கனு சொன்னாங்க… சரிசரி அதுக்குள்ள நாம்ப இதை எல்லாம் செஞ்சிடலாம்”…. 

 

 

 

 

 

“நீ போய் பெரிய வெங்காயம் உறிச்சி வை… அம்முவை வந்து அறிஞ்சி வைக்கச் சொல்லு எனக்கூறி குட்டியை அனுப்பி வைத்தால் உமா”. 

 

 

 

 

 

 

 

வைத்த குழம்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மயிலு பாட்டிக்கு கொடுத்துவிட்டு உமா வரவும், சுந்தர் வரவும் சரியாக இருந்தது. 

 

 

 

 

 

பின் அனைவரும் சாப்பிட்டு முடித்து” ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் மீன்களை வைத்து, குழம்பையும் ஊற்றி சுந்தரிடம் கொடுத்து மீனாவிற்குக் கொடுக்கச் சொன்னால் உமா”. 

 

 

 

 

 

*************×*********************************************************/**/*/******** 

 

 

 

 

 

பண்ணையார் வீட்டில் அனைவரும் சாப்பிட சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டு இருக்கும் போது சுந்தரம்  மீன் குழம்பை கொண்டு வரவும் சரியாக இருந்தது. 

 

 

 

 

 

சுந்தரம், “சகுந்தலா அம்மா நம்ம சின்னப் பாப்பா உமா கிட்ட மீன்குழம்பு கோட்டுச்சாமா, அதுனால தான்உமா குழம்பு குடுத்துவிட்டுச்சி. இந்தாங்க அம்மா”…  

 

 

 

 

 

“அந்தப் பெண்ணுக்கிட்ட நான் நன்றி சொன்னேனு சொல்லருங்க அண்ணா”. சரிங்க அம்மா எனக்கூறி சுந்தரம் சென்றுவிட்டார். 

 

 

 

 

 

 

 

சாப்பாட்டுக்கு அனைவரையும் அழைத்த சகுந்தலா, “மீனா நீ உமாகிட்ட மீன் குழம்பு கேட்டியா?”. 

 

 

 

 

 

 ஆமாம் சித்தி… “அவங்க வைக்கிற குழம்பு வித்தியாசமா, ரொம்ப டேஸ்டா இருக்கும்… நீங்க டேஸ்ட் பன்னி பாருங்க, அப்புறம் உமாவோட விசிறி ஆகிடுவீங்க”. 

 

 

 

 

 

 

 

“சரிடீ! அதையும் பார்த்துவிடலாம்”, எனக்கூறி அனைவருக்கும் பரிமாறிவிட்டு, தானும் சாப்பாடு போட்டு சாப்பிட அமர்ந்துவிட்டார் சகுந்தலா.  

 

 

 

 

 

 

 

அனைவரும் ருசிபார்த்துவிட்டு சிலாகித்தனர். அதுவும் வெற்றி மனதில் “தன்னவள் கைக்களுக்குக் காப்பு போடலாமா இல்ல மோதிரம் போடலாமானு யோசனையில் இருந்தான்”. 

 

 

 

 

 

நாச்சியார், “அந்தக் காலத்தில் என்மாமியார் இப்படித்தான் சமைப்பாங்க… மண்பானையில் சமைக்கிறதே தனி ருசியாக இருக்கும்”. இப்ப எங்க அந்தமாதிரி சமைக்கிறாங்க.  

 

 

 

 

 

ஜெயாம்மாள், “நீங்க சொல்லறது சரிதான் அத்தை”. சகுமா, “நம்ப விசாலாட்சி மாமியார் இந்தமாதிரிதான் சமைப்பாங்க. ரொம்ப டேஸ்டா இருக்கும் அவங்க சமைக்கிறது”.  

 

 

 

 

 

 

 

தர்மர், “ஆமாம் பெரியம்மா நான் ஐந்தாறு டைம் பாட்டிகையால சாப்பிட்டு இருக்கேன், அவ்வளவு ருசியாக இருக்கும்”. அண்ணி நீங்க சொல்லுறதும் சரிதான்..  நானும் ஒரு டைம் சாப்பிட்டு இருக்கேன். 

 

 

 

 

 

 

 

 சந்திரன், “அதுவும் தர்மா நம்ம பாட்டி அல்லி புட்டு செய்வாங்க பாரு அத்தனை அருமையா இருக்கும்”.  அதெல்லாம் ஒரு காலம்..  இப்ப யாருக்கு இப்படிச் செய்யத் தெரியுது.  

 

 

 

 

 

 

 

அதற்குச் சாரதா, “சாப்பிடும் போது என்ன பேச்சு வேண்டி இருக்கு?, பேசாம சாப்பிடுங்க” என ஒரு அதட்டல் போட்டவுடன் எல்லாரும் அமைதியா சாப்பிட்டனர். 

 

 

 

 

 

 

 

“நம்ம ஆளும் இந்த மாதிரி சமைப்பாலா… இல்ல இதைவிட நல்லா சமைப்பாலா. … என முக்கியமான ஆராய்ச்சியில் இருந்தான் அருண்”. 

 

 

 

 

 

விஷ்ணுவோ, “நம்ம லட்டுவ பார்த்தா அவ்வளவு நல்லா சமைக்கிறமாதிரி தெரியல…  நல்லா சாப்பிடறமாதிரி தான் இருக்கா. லட்டுகுட்டி மாமாக்காக நல்லா சமைக்கக் கத்துக்கோடீ என மானசீகமாக மல்லியிடம் வேண்டிக்கொண்டான்”.  

 

 

 

 

 

 

 

“சாப்பிட்டு முடிந்ததும் தன் அறைக்கு வந்த வெற்றிவேந்தன் உமாவின் photosஐ பார்த்து பேசிக்கொண்டு இருந்தான்”. 

 

 

 

 

 

“பழப்பண்ணை விஷயமாகக் கோயம்முத்தூர் செல்கிறான்… அதுவும் நாளை காலை வெற்றியுடன், விஷ்ணுவும் செல்கிறான்”. 

 

 

 

 

 

“அருணும் அடுத்த நாள் காங்கேயத்தில் உள்ள காலேஜில் வரும் மாதம் Admission நடைபெற உள்ளதால் அதற்காக வேலையைப் பார்க்க சென்றுவிட்டான்”.  

 

 

 

 

 

 

 

 

 

சென்னையில் மகாலட்சுமி உமா பற்றிய ஒரு துப்பும் தெரியாததால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்தார்.  

 

 

 

 

 

ராமனோ,” எங்கே கொஞ்சம் பின்வாங்கினாலும் லட்சுமி சும்மா விடமாட்டார் என்பதால் ஒரு பயத்துடன் அந்த வீட்டில் வளையவந்தான்”.  

 

 

 

 

 

“அப்பொழுது Phone செய்த டிடக்டிவ் வீட்டைவிட்டு வெளியே வந்த உமா முதலில் சென்றது பாண்டிச்சேரி என்பதால் அந்தப் பகுதியில் இரகசியமாக விசாரணை செய்து கொண்டு இருக்கிறார்”.  

 

 

 

 

 

 

 

 

 

 

 

*********×******************************************************************************************* 

 

 

 

 

 

இன்றோடு வெற்றி, விஷ்ணு கோவை சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது. வேலை அதிகமாக இருப்பதால் விரைவாக அல்லியூருக்கு வரமுடியவில்லை.  

 

 

 

 

 

 

 

அவன் இங்கு இல்லாவிட்டாலும் வேலையானது அதன் பாட்டிற்கு நடைபெற்றது. சந்திரன், அருணும் தான் பார்த்துக்கொண்டனர். மீனா அவ்வப்போது தமையன் மற்றும் தந்தைக்கு உதவியாக இருந்தால்.  

 

 

 

 

 

“இன்று அம்முவின் இறுதியாண்டின் இறுதித்தேர்வின் முடிவுகள் வெளியாக உள்ளது”. போன NET தேர்வுமுடிவுக்குப் பதட்டபட்டதைப் போலில்லாமல் மிகவும் சாதாரணமாக இருந்தால். 

 

 

 

 

 

 

 

 

 

“அவளை அதிகம் சோதிக்காமல் இந்த  Exam Result வெளிவந்தது. அதில் அம்மு நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால்”.  

 

 

 

 

 

“அவளின் மதிப்பெண்ணு ஆனது அடுத்தகட்ட  படிப்பை எளிமையாகத் தெரிவு செய்ய உதவியாக இருக்கும்”. அதே போல் நல்ல கல்லூரியில் படிக்க உதவுவதாக இருந்தது. 

 

 

 

 

 

“அடுத்ததாக எந்தக் கல்லூரியில் படிக்கலாம் என யோசனையா இருந்தனர்”.  

 

 

 

 

 

அப்போது அங்கே வந்த மல்லி, அம்மு நல்ல  mark வந்து இருக்கு போல?… 

 

 

 

 

 

ஆமாம் மல்லி அக்கா… “அடுத்து எந்த   Collegeல் சேரலாம் எனக் குழப்பமா இருக்கு” …. 

 

 

 

 

 

அது இருக்கட்டும்…  “இந்தா புள்ள உமா அப்பா கிட்ட சொல்லி அவர்மூலமா, பண்ணையார் வீட்டில பேசிபாக்கலாம்”….. சரி மல்லி…  

 

 

 

 

 

நான் அப்பாகிட்ட பேசிபார்க்கறேன். அவர் என்ன சொல்லறாருனு பார்த்துவிட்டு. “பண்ணையார் College sheet பற்றிக் கேட்களாம், Fees  பத்தியும் அப்படியே கேட்டுக்கலாம் எனக்கூறி சுந்தரம் வந்த உடன் இதைபற்றிக் கேட்பதாகக் கூறிவிட்டார் உமா”…..  

 

 

 

 

 

 

 

“மறுநாள் சுந்தரம் உமா மற்றும் அம்முவுடம்  பண்ணையார்  வீட்டிற்குச் சென்று்விட்டனர்”. 

 

 

 

 

 

 

 

 

 

முதலில் இவர்களை  பார்த்தது Hallல் செய்தித்தாள் பிடித்துக்கொண்டிருந்த சந்திரன் தான்.  

 

 

 

 

 

 

 

“வாங்க சுந்தரம்”…”வாங்க மா”…  என்ன சாப்பிடரீங்க?.  

 

 

 

 

 

 அது எல்லாம் வேண்டாங்க சார் என்ற உமாவிடம்… 

 

 

 

 

 

 

 

சுந்தரம்  எல்லா விஷயங்களையும் சொன்னார்மா. இருந்தாலும் நீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க என்றவரிடம். 

 

 

 

 

 

“அம்மு, சார் என் பெயர் இளந்தென்றல். M. Phil   படிக்கத் தான் சீட் கேட்டது. B. Come, M. Comeமும் Government collegeல் முடித்துவிட்டேன் சார்”….   

 

 

 

 

 

“உன்னோட Mark Sheets எல்லாம் தாமா பார்க்கலாம்”….  இதே இந்தாங்க சார்….  

 

 

 

 

 

அதை வாங்கிப் பார்த்தவர், பரவாயில்லைமா ரொம்ப நல்ல Marksதான் வாங்கி இருக்க. “இந்த Marks  Recommendation தேவையேஇல்லை”. 

 

 

 

 

 

கண்டிப்பா இந்தப் பெண்ணுக்கு Sheet கிடைக்கும் சுந்தரம். 

 

 

 

 

 

 

 

“நம்ம College க்கு இவங்கள கூட்டிக்கிட்டுப் போ சுந்தரம். அங்க அருண் இருப்பான். அவன்கிட்ட விவரத்தை சொல்லு சீட் கிடைக்கும். அப்புறம்  Fees பற்றி அவன் சொல்லுவான்”. 

 

 

 

 

 

சந்திரன் கூற்றில் அம்முவின் முகம் வாடிவிட்டது, காரணம் Feesல் சலுகைகள் பற்றி அவர்கூறாதது, அதை உணர்ந்த சந்திரன், “கவலையே வேண்டாம் மா உன் Markக்குக் கண்டிபா சலுகை கிடைக்கும் பயப்படாம போய் என் பையன பாருங்க எனக்கூறி அவர்களைப் புன்னகை முகத்துடன் அனுப்பி வைத்தார்”. 

 

 

 

 

 

உமாவை பார்த்தவுடன் அவருக்கு வெற்றியின் தேர்வு சரியானது எனத் தோன்றியது. 

 

 

 

 

 

தன் தம்பிகள், தங்கையைப் பார்த்துக்கொள்ளும் முறை, வேலையில் அவளின் நேர்த்தி, அவளின் தைரியம். 

 

 

 

 

 

தங்கை படித்தது போதும் வேலைக்குப் போயிட்டு எனக்கூறாமல் அம்முவின் ஆசையை நிறைவேற்ற வேண்டி கஷ்டப்படுவது என “சந்திரன் மனதில் உமாவிற்கான இடம் தன் மகன், மகளை விட ஒரு படி மேல் தான்”.  

 

 

 

 

 

சந்திரன், “உமாவுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் அவரின் தந்தை சூரியதேவனை நினைவில் கொண்டு வருகிறாள்”. அந்த இளம் பெண். அதனால் தான் அவரின் மனதில் உமாவிற்கான இடம் இயல்பாகவே உள்ளது.  

 

 

 

 

 

 

 

“கோவையில் வெற்றி மற்றும் விஷ்ணு அதிகப்படியான வேலை பளுவாள் எதைபற்றிய சிந்தனையும் இல்லாமல் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக  இருக்கிறார்கள்”.  

 

 

 

 

 

 

 

நாச்சியார் தன் குடும்பப் பெண்களுடன் அம்மன் கோவிலுக்குச் சென்று விட்டார். “தன் பேத்தியின் கல்யாண பேச்சை ஆரம்பிக்கலாம் எனக் குறிகேட்க சென்று இருந்தார்”.  

 

 

 

 

 

“தர்மர் தன் அண்ணனுடன் அரிசி ஆலைக்குச் சென்று விட்டார்”. 

 

 

 

 

 

மல்லிகா, குட்டி மற்றும் கண்ணன், வெள்ளையனுடன் அம்மன் கோயிலுக்குச் சென்று விட்டால். “காரணம் சூடான பொங்கலும்,  புளியோதரையும் சாப்பிடுவதற்காக”. அவளின் இந்த விளையாட்டுத் தனம் தான் சுந்தரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.  

 

 

 

 

 

 

 

“மல்லியின் இந்த மகிழ்ச்சி அவளின் ஆயுள் வரை அவளுடன் இருக்குமா?  இல்லை இடையிலேயே இல்லாமல் போய்விடும்?”… அது அந்த ஆண்டவன் கையில் தான் உள்ளது. “விதி யாரை விட்டது. அது தன் வேலையைச் சரியாகச் செய்கிறது. எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல்”.  

 

 

 

 

 

 

 

அன்பு தொடரும்……. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!