Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? – 31

 

 

அத்தியாயம் 31: 

 



Advertisement

 

 

 

Advertisement

 

Advertisement

 

 

மகாலட்சுமி மற்றும் ராமனை காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்றதை கண்ட கவிதா அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டார். 

Advertisement

 

 

 

கேரளாவிலுருந்து பல தடைகளைக் கடந்து மூவரும் ஒன்றாகத் தான் இங்குவந்தனர். 

 

 

 

 

 

திடீரெனக் கவிதாவிற்கு மும்பையிலிருந்த கம்பெனியிலிருந்து போன் வர இவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பிவைத்தார். 

 

 

 

கம்பெனி மேனேஜர் கேட்ட சந்தேகத்திற்குப் போனிலேயே தீர்வுகூறிய பின் உள்ளே வர எத்தனித்த போது தான் காவலர்கள் மகாலட்சுமி மற்றும் ராமனை கைதுசெய்து அழைத்துக்கொண்டு சென்றதை பார்த்தார் கவிதா. 

 

 

 

 

 

அங்குப் பேசிக்கொண்டிருந்த பெண்மணிகளிடம் கவிதா என்ன? ஏது? என்று விசாரிக்க அவர்களே உள்ளே நடந்த விஷயத்தை ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டனர். 

 

 

 

 

அந்தப் பெண்கள் கூறியதை கேட்ட கவிதாவிற்கு அத்தனை அதிர்ச்சியாக இருந்தது, அவர்களுடன் தானும் உள்ளே சென்றிருந்தாள் இந்நேரம் தன்னையும் இப்படித்தானே இழுத்துசென்றிருப்பார்கள்,அதைவிடப் பழைய குப்பைகளை எல்லாம் தோண்டியெடுத்திருப்பார்கள் எனப் பயந்து போய்விட்டாள். 

 

 

 

 

 

தான் மட்டும் தப்பித்தா போதும் என்ற எண்ணத்தில் வந்த தடையம்கூடத் தெரியாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள் கவிதா. 

 

 

 

 

 

 

அங்கே ஏங்கிஏங்கி அழுதுகொண்டிருந்த உமாவை சமாதானம் செய்ய முயன்றவர்கள் கவிதாவை பார்க்காமல் விட்டுவிட்டனர், அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கவிதாவும் அல்லியூரிலிருந்து சிட்டா பறந்துவிட்டாள். 

 

 

 

 

 

 

நித்தியன், “இன்னும் எவ்வளவு நேரம் இப்படி அழுக உமா? அங்க பாரு நீ அழுவது பார்த்து சின்னதுங்களும் அழறாங்க பாப்பா” என்றதும் விழுக்கென்று நிமிர்ந்தவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு அழுதுகொண்டு இருந்த கண்ணன் மற்றும் அம்முவை சமாதானம் செய்தாள். 

 

 

 

 

 

 

“குட்டி எங்க?” என்றவளிடம்… 

 

 

 

“நீ அழுவதைப் பார்த்து அவனும் அழுதான் க்கா, அதனால் மதன் அண்ணா வெளியே கூட்டிக்கிட்டு போயிட்டாங்க க்கா”. 

 

 

 

 

“ரொம்பப் பயந்துட்டானா கண்ணா?”. 

 

 

 

 

கண்ணன், “நீ அவங்களை அடிச்சதை பார்த்துக் கொஞ்சம் பயந்துட்டான். நீ எப்பவும் போல் இருந்ததா போதும் அவனும் சரியாகிவிடுவான் க்கா”. 

 

 

 

 

 

அவளின் சுருங்கிய முகத்தைப் பாத்த ஆனந்தி, “இந்தா உன் அண்ணன் மகனை பிடி உமா, நான் போய் மதன் அண்ணாவையும் குட்டியையும் கூட்டிகிட்டுவறேன்” எனக்கூறியவளிடம்… 

 

 

 

 

அம்மு, “அண்ணி நானும் வறேன் இருங்க”. 

 

 

 

 

 

ஆனந்தி, “இப்ப தான் நிச்சியம் முடிந்திருக்கு நீ இங்கேயே இரு அம்மும்மா நான் போய் கூட்டிகிட்டு வறேன் எனக்கூறியவள் வெளியே சென்றுவிட்டாள்”. 

 

 

 

 

 

நாச்சியார், “இனி எதாயிருந்தாளும் வீட்டுல போய் பேசிக்கலாம்… உமா நீயும் வா, வாங்க நல்லநேரத்திலேயே பொண்ணு மாப்பிள்ளையை அழச்சிகிட்டு வீட்டுக்குப் போகலாம்”. 

 

 

 

 

“வெற்றி… வீட்டில் விருந்து நல்லபடியா நடக்குது தான? எந்தக் குறையும் இல்ல தான டா?”. 

 

 

 

 

 

 

“அதெல்லாம் எந்தக் குறையும் இல்ல பாட்டி, மார்க்கும் விசாலாட்சி அத்தையும் சங்கர் மாமாவும் பார்த்துகிறாங்க, அதனால் யாருக்கும் மனவருத்தமும் வராது பாட்டி”. 

 

 

 

 

சகுந்தலா, “அண்ணனும் அண்ணியும் எப்படா அங்க போனாங்க? அவங்க போனது நாங்க யாரும் பார்க்கவில்லையேடா வெற்றி?”. 

 

 

 

“நான் தான் சித்தி இந்த ரெண்டு பிசாசுங்களும் உள்ள வந்ததைப் பார்த்தவுடனே அருண் மூலமா மாமாக்கு தகவல் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வச்சேன், இதுவரை அங்க எந்தப் பிரச்சினையும் இல்லாம நல்லா தான் சித்தி போகுது”. 

 

 

 

 

வேலம்மை, “இனியும் நாம இங்கேயே இருந்தா தேவையில்லாத கேள்வி வரும், வாங்க எல்லாரும் வீட்டுக்கு போகலாம்… எதா இருந்தாலும் வந்தவங்க போனபிறகு பேசிக்கலாம்”. 

 

 

 

 

 

“பாட்டி சொல்லரதுதான் சரி… வாங்க எல்லாரும் வீட்டுக்குப் போகலாம். பெண்ணு மாப்பிள்ளையை எவ்வளவு நேரம் தான் இங்கேயே வச்சியிருக்கறது? வத்தலக்குண்டு ஆசிர்வாதம் வாங்கனும் எனக்கூறினாள் ஜெயந்தி”. 

 

 

 

அதற்குள் ஆனந்தியும் மதனுடன் வந்துவிட அவர்களையும் அழைத்துக்கொண்டு அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

 

 

 

 

 

அங்குச் சென்றவர்கள் இங்கு நடந்த விஷயத்தைப் பற்றிப் பேசாமல் வந்த உறவினர்களை உபசரித்துத் தகுந்த மரியாதையுடன் அனுப்பிவைத்தனர். 

 

 

 

 

 

 

 

தர்மன் வீட்டிலேயே நித்தியனின் குடும்பமும் மல்லி, உமாவும் சிறியவர்களும் தங்கிகொண்டனர். 

 

 

 

 

 

அனைவரும் சென்றவுடன் தர்மன் வீட்டிற்கு வந்தவர்கள் கட்டாயப்படுத்தி உமாவை உணவுன்ன வைத்தனர். 

 

 

 

 

 

 

 

நாச்சியார், “இப்ப சொல்லு உமா அந்த அம்மா யாரு? என்ன பிரச்சனை உங்களுக்குள்?” என்றவரிடம்… 

 

 

 

 

“அவ பட்ட கஷ்டங்களை அவவாயாலே எப்படிப் பாட்டி சொல்லுவா? அது அவ அனுபவித்த கொடுமையை எல்லாம் திரும்பதிரும்ப காயப்படுத்தி மனதை ரணமாக்கும், அது மேலும்மேலும் அவளுக்குக் கஷ்டம் தான் அதிகமாகும் பாட்டி என்றாள் ஆனந்தி”. 

 

 

 

 

ஜெயந்தி, “இந்தப் பசங்களுக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு  சொல்லீட்ட உமா. ஆனா நித்தியனுக்கும் உனக்கு அண்ணனா ஏன் இவ்வளவு நாளா உன்னைப் பார்க்க கூட வரவில்லை?”. 

 

 

 

சகுந்தலா, “அப்படி என்ன பகை அந்த அம்மாவுக்கு உன்மேல் உமா? இந்த அளவுக்கு நீங்க அவங்களை வெறுக்கக் காரணம் என்ன உமா”. 

 

 

 

 

 

 

சாரதாவோ, “இங்கவந்த நாளிலிருந்து ஏன் உமாவை பார்க்க போகவில்லை நித்தியன்?”. 

 

 

 

 

 

 

என கேள்வி மேல் கேள்வி கேட்டவர்களைப் பார்த்த உமா நீங்க இத்தனை நாள் எங்கிட்ட கேட்க நினைத்த கேள்விக்கும் இப்ப கேட்ட கேள்வி அத்தனைக்கும் பதில் செல்லறேன் என்றவள் தாங்கள் தங்கியிருந்த அறையில் குட்டி உறங்கிவிட்டானா எனஉறுதி செய்து கொண்டபின் தன் கடந்தகாலத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். 

 

 

 

 

 

சென்னையில் இரண்டு தலைமுறையாகப் புகழ்பெற்ற *****கட்டுமான கம்பெனியின் உரிமையாளர் கண்ணப்பனின் இரண்டு ஆண்வாரிசுகள் நீலகண்டன், திருமூர்த்தி. 

 

 

 

நீலகண்டனின் மனைவி தான் மகாலட்சுமி… அந்த வீட்டின் மூத்த மருமகள், இவர்களின் ஒரு மகன் நித்தியன். 

 

 

 

 

 

அடுத்தவர் திருமூர்த்தி, அவரின் மனைவி சீதா… அவர்களின் ஒற்றை வாரிசு தான் உமா மகேஸ்வரி. 

 

 

 

 

 

நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர் தான் மகாலட்சுமி… நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பெண்கள் குடும்பத்தை அனுசரிச்சி நடப்பார் என்ற எண்ணத்தில் மகாலட்சுமியை தேடிபித்து நீலகண்டனுக்குத் திருமணம் செய்து வைத்தார் கண்ணப்பன். 

 

 

 

 

 

 

திருமணம் கூட வெகுவிமர்சியாக ஊரே போற்றும் படி செய்து வைத்தார். மருமகளின் குணத்தை அறியாமலேயே விட்டுவிட்டார் அந்தக் கைதேர்ந்த தொழிலதிபர். 

 

 

 

 

 

நீலகண்டனின் திருமணம் முடிந்த ஆறு மாதத்திலேயே மருமகளின் உண்மை குணமும் அறியாமல் தூக்கத்திலேயே இயற்கை எய்துவிட்டார். 

 

 

 

 

அதன்பிறகு வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் நன்றாகவே சென்றது, காரணம் மகாலட்சுமியை கண்டித்து எதிர்த்து பேசவும் ஆளில்லாததால் அவரின் இஷ்டப்படியே சென்றது. 

 

 

 

 

 

 

 

நீலகண்டன் மனைவி மீது கொண்ட காதலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு சென்றது, அந்தக் காதலால் அவரின் திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் வந்துபிறந்தான் நித்தியன். 

 

 

 

 

 

நித்தியனின் ஐந்து வயது வரையும் கணவனின் அதீத காதலிலும் கணவனின் பணத்திலும் சுபகமாக அவரின் இஷ்டப்படியே சென்றது. 

 

 

 

 

வேலைவேலை என ஓடிக்கொண்டிருந்த நீலகண்டனுக்கு மனைவியின் டாம்பீகம் தெரியாமலேயே போனது, அதன் விளைவு மகாலட்சுமியின் பணவெறி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. 

 

 

 

 

 

அந்தச் சமயத்தில் தான் திருமூர்த்தித் தான் விரும்பிய சீதாவையே மணம் செய்து கொண்டு வந்து நின்றார். 

 

 

 

 

 

 

நீலகண்டன், “திரு முதலிலேயே சொல்லியிருந்தீங்கனா சீதா வீட்டில் பெண்கேட்டு முறைபடி இந்த வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமே? ஏண்டா இப்படிப் பண்ணுன?”. 

 

 

 

 

 

 

“நான் ஏற்கனவே அவங்க வீட்டில் பேசி பார்த்துவிட்டேன், அவங்க கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க, எனக்கு வேற வழிதெரியவில்லை அதனால் தான் இந்தத் திடீர் கல்யாணம். 

 

 

 

 

அதுவும் இல்லாம சீதா வீட்டில் யாரும் எங்க கல்யாணத்தில் இல்லை, நம் வீட்டு ஆட்கள் மட்டும் இருந்தா அது அவளுக்கு ஒரு மாதிரியா இருக்கும்னு நினைத்து தான் அண்ணா நான் உங்ககிட்டயும் அண்ணாகிட்டயும் சொல்லவில்லை… சாரி …சாரி அண்ணா என்றவரை காதலாகப் பார்த்தார் சீதா”. 

 

 

 

இளைவனின் பாசத்தில் அவரை அணைத்துக்கொண்டார் நீலகண்டன். 

 

 

 

 

 

வீட்டிற்குப் புதிதாக வந்த சிற்றன்னையிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான் நித்தியன். 

 

 

 

 

 

 

ஆனால் மகாலட்சுமியே மனதிற்குள் கருவிக்கொண்டே வெளியே சிரித்து வைத்தார். 

 

 

 

 

 

அந்த வீட்டின் மூத்த மருமகளாகப் புதுதம்பதிகளை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துசென்றவர், “சீதா… வாம்மா வந்து பூஜை அறையில் விளக்கேத்து” எனக்கூறி அழைத்துச்சென்று விளக்கேற்ற வைத்தவர் சீதாவையே திருமூர்த்தியின் அறையில் விட்டுவந்தவர் கோபத்தில் தன் அறையில் குறுக்கும்நெடுக்குமாக நடந்துகொண்டு இருந்தார். 

 

 

 

 

 

இப்படியே அவர்கள் வாழ்க்கை செல்ல அடுத்த வருடமே சீதா-நீலகண்டன் தம்பதிக்கு வந்து பிறந்தாள் உமா மகேஸ்வரி. 

 

 

 

 

அதில் இன்னும் இன்னும் வெறிகொண்டார் மகாலட்சுமி, ஆனால் அதைச் சாமர்த்தியமாக மறைத்துக்கொண்டவர் குழந்தை மேல் அக்கறை உள்ளவர் போல் நடந்துகொண்டார். 

 

 

 

நித்தியனுக்கோ புதிதாகத் தங்கை கிடைத்த சந்தோஷச்சில் அவருடனேயே இருந்துகொண்டான்… அதன் பின் வந்த நாட்கள் அனைத்துமே நித்தியனின் இருப்பானது உமாவுடனேயே இருந்தது. 

 

 

 

 

 

சீதாவும் உமாவும் நித்தியனை தன் மூத்தமகனை போல் வளர்த்தார். 

 

 

 

 

மகாலட்சுமியின் நாட்களாவது பார்ட்டி… பார்ட்டி… கிளப் என்றே சென்றது. 

 

 

 

 

ஒரு நாள் பார்ட்டிக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மகாலட்சுமியிடம் சீதா, “அக்கா நாளைக்கு நித்தியனுக்குப் பிறந்தநாள், அவனுக்கு இன்னும் துணி வாங்கவில்லை, நீங்க ஏதாவது வாங்கினீங்லா?” என்றவரிடம்… 

 

 

 

 

 

“இல்ல சீதா… நாளைக்கு நித்தியனுக்குப் பிறந்தநாளுங்கிறதே மறந்துட்டேன் நல்லவேளை நீ நியாபகபடுத்தின, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அது முடித்துவிட்டு வர மணி ஆகிடும் பேசாம நீயே வாங்கிடு சீதா என்றவர் கைபையிலிருந்த பணத்தைச் சீதாவிடம் கொடுத்துவிட்டு அவரின் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டார்”. 

 

 

 

 

 

மகாலட்சுமியின் செயலில் அதிர்ச்சி அடைந்த சீதா பசங்களுக்கு வேண்டியவைகளை வாங்கிக்கொண்டு வரும்போது பள்ளிக்கு சென்று பிள்ளைகளையும் அழைத்துகொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார். 

 

 

 

 

 

அன்று இரவு நித்தியன் மற்றும் உமாவை தூங்கவைத்துவிட்டு அலுவலக வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்த கணவனிடம் சென்றவர் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறினார், “திரு உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசனும்” என்றவரிடம்…

 

 

 

 

 

 

 

செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, “செல்லு சீதா… என்ன விஷாம் உன் மண்டையைக் குடையுது? எனக்கு அக்கா செய்யறது பிடிக்கவில்லை, அவங்க பார்ட்டி அதுஇதுனு நித்தியனை சரியா கண்டுகிறதேூ இல்லை, இவங்க இப்படியே பண்ணினா நித்தியன் அவங்களை விட்டு ரொம்பத் தூரம் போயிடுவான்”. 

 

 

 

 

 

“அதற்கு நாம என்ன பண்ண முடியும் சீதா? இதைப் பற்றி நாம ஏதாவது பேசினா தேவையில்லாத பிரச்சனை தான் குடும்பத்தில் வரும் சீதா, அவங்க குணத்தைப் பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியவில்லை சீதா, இனி அவர்களைவிட்டு தனித்து இருக்கிறது தான் நமக்கு நல்லது எனக்கூறியவர் சீதாவை கட்டாயபடுத்திப் படுக்கவைத்தவர் தன்னுடைய வேலையில் ஆழ்ந்துவிட்டார்”. 

 

 

 

 

 

 

 

பார்ட்டிக்கு சென்ற மகாலட்சுமியோ மதுவின் போதையில் மூழ்கிபோய் தனி உலகத்தில் மூழ்கிபோய் இந்தாள். 

 

 

 

 

 

மனைவியின் இத்தகைய செயலை அறியாத நீலகண்டனோ வெளிநாட்டில் பிஸினஸ் வேலையாக இருந்தார். 

 

 

 

 

“நீலகண்டனோ பணம், தொழில் என ஓடிக்கொண்டும்; மகாலட்சுமியோ தன் சுகம், வெட்டி கெளரவம் என அலைந்துகொண்டும் தங்களின் ஒற்றை மகனைகூடக் கவனிக்காமல் விட்டுவிட்டனர்”. 

 

 

 

 

அதன் விளைவு நித்தியன் அவர்களிடம் இருந்து விலகி சென்றுவிட்டான். அவனின் விழகலைக்கூட உணராமல் தங்களின் உலகத்தில் இருந்தனர். 

 

 

 

 

பெற்றவர்களிடமிருந்து அனுபவிக்காத பாசத்தை நித்தியன் தன் சிற்றன்னை மற்றும் சிற்றப்பனிடமிருந்து ஒட்டுமொத்த பாசத்தையும் அனுபவித்தான், அதைவிட ஒருபடி மேலான அன்பானது உமா மகேஸ்வரியிடமிருந்து கிடைத்தது. 

 

 

அவனின் வாழ்க்கையானது அவர்களைச் சுற்றியே சுகமாகவே சென்றது, இப்படியே அவர்கள் வாழ்க்கையான நித்தியனின் இருபது வயது வரை அவ்வளவு அழகாகச் சென்றுது. 

 

 

 

 

என்று நித்தியன் படிப்பாக வெளிநாடு சென்றான் அன்று ஆரம்பித்தது மகாலட்சுமியின் ஆட்டம். 

 

 

 

 

அடிக்கடி தனது அராஜகத்தை உமாவிடமும் சீதாவிடமும் காண்பிக்க ஆரம்பித்தார் மகாலட்சுமி. 

 

 

 

 

அவரின் அடாவடியை தாங்காத சின்னசிட்டுவோ தாயிடம் சொல்லி அழும் போதெல்லாம் அவளைச் சமாதான செய்து வந்தார் சீதா. 

 

 

 

 

 

பெரியபெண்ணான பின் உமாவிடம் தன்னுடைய முரட்டுதனத்தை அதிகபடுத்தினார். அதன்விளைவு சாந்தசொரூபினியாக இருந்த சீதாவையே வெகுண்டெல செய்தது. 

 

 

 

 

பள்ளியிலிருந்து வந்த தன்வீட்டுத் தோட்டத்தில் உமா பாடத்தில் பள்ளி தோழனிடம் சந்தேகம் கேட்டுகொண்டிருந்ததைப் பார்த்தவர் மகாலட்சுமி, “ஏண்டி வீட்டுக்குள்ளவே இந்த மாதிரி அசிங்கத்தை ஆரம்பித்துவிட்டையா? இந்த வயதிலேயே பசங்க சவகாசமா டீ”.

 

 

 

 

“இல்ல பெரியம்மா இவன் என்னுடைய பிரண்ட், கணக்குப் பாடம் புரியவே மாட்டுக்கிதுன்னுதான் அவர்கிட்ட சந்தேகம் கேட்டேன்”. 

 

 

 

 

 

அவளின் நண்பனோ, “ஆமாம் ஆண்டி, நான் உமாவோட பிரண்ட்… நீங்க தான் எங்களைத் தப்பா புரிஞ்சிகிட்டீங்க, நீங்க நினைக்கறமாதிரி நாங்க இல்லை” எனக்கூறியவனை முறைத்தவர் உமாவை பார்த்து, “எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே எதிர்த்து பேசுவ? உன்னைய என்ன பண்றேன் பாரு என்றவரை முறைத்து பார்த்த உமாவை அடித்துவிட்டார் திடீரெனத் தாக்க கீழே விழுந்த உமாவின் நெற்றியில் அடிபட்டு இரத்தம் வரஆரம்பித்தது”. 

 

 

 

 

அப்பொழுது அலுவலகத்திலிருந்து வந்த நீலகண்டன் தன் மனைவியின் மற்றொரு முகத்தை அறிந்துகொண்டார். 

 

 

 

 

உமாவின் தலையிலிருந்து வந்த இரத்ததைப் பாரத்தவர் அவளுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சிகிச்சை செய்து அழைத்துவந்தார். வீடு வந்து சேர்வதற்குள் மருந்தின் வீரியத்தில் காரிலேயே தூங்கிவிட்டாள். அவளின் தூக்கம் கலையாதவாறு தூக்கிகொண்டு சென்றவர் அவளின் அறையில் படுக்கவைத்துவிட்டு வந்தவர் பின்னாலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். 

 

 

 

 

 

நீலகண்டன் வந்ததும் உள்ளே சென்ற சீதா வாடியகொடி போல் தூங்கிக்கொண்டிருந்த மகளைப் பார்த்தவளின் கண்களில் ஆறாகத் நீர் வழிந்துகொண்டே இருந்தது. 

 

 

 

 

அவரின் மனமோ சற்றுநேரத்திற்கு முன் நடந்த நிகழ்வோ ஓடிக்கொண்டிருந்தது. 

 

 

 

 

 

உமாவிற்குப் பாடம் சொல்லிக்கொடுத்த பையனை அவனின் பெற்றவர்களின் அனுமதியுடன் தான் அழைத்துவந்தார். 

 

 

 

வந்தவுடனே பிள்ளைகள் இருவரும் சேர்ந்து தோட்டத்திலேயே அமர்ந்து படிப்பாகக் கூறிவிட அவரும் அவர்களுடன் அமர்ந்துவிட்டார். பசங்களுக்கு எதாவது சாப்பிட கொடுக்கலாம் என நினைத்தவர் அவர்களிடம், “பசங்களா நீங்க படிங்க நான் போய் உங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொண்டுவறேன்” எனக்கூறியவர் செல்ல எத்தனித்த போது உமா, “அம்மா இவனுக்குப் பக்கோடானா ரொம்பப் பிடிக்கும், அதனால் மருதாயி பாட்டிகிட்ட சொல்லி அதையே பன்னுங்க ம்மா”. 

 

 

 

 

அதற்கு அவளின் நண்பனோட, “அம்மா அப்படியே எனக்குப் புதினா சட்னி வேனும்” எனக்கூறியவனைப் பார்த்து சிரித்தவர், “சரிடா பெரிய மனுசா அதையும் கொண்டுவறேன் எனக்கூறிச் சென்றுவிட்டார்”. 

 

 

 

 

அவர் சென்றதும் இவர்கள் படிப்பில் ஆழ்ந்துவிட அப்பொழுது அங்கு வந்த மகாலட்சுமி பன்னிய கூத்தில் தான் உமாவிற்கு அடிபட்டது, அலுவலகத்திலிருந்து வந்த நீலகண்டன் இரத்தம் வழிய கீழேகிடந்த மகளைக் கண்ட அதிர்ச்சியில் அவளை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். 

 

 

 

 

 

 

மகாலட்சுமியின் செயலில் அதிர்ந்த உமாவின் தோழன் வேகமாக உள்ளே சென்று சீதாவை அழைத்துவந்தவன் மகாலட்சுமியை காட்டி நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறிவிட்டான், அதில் அதிர்ந்த சீதா டிரைவருடன் அவனின் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் தன் கணவனுக்குப் போன் செய்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறி உடனே வரசொன்னவள் மகளின் வரவுக்காக வாசலிலேயே காத்திருந்தார். 

 

 

 

 

 

தன் நிலையிலிருந்து மீண்ட சீதா வேகமாகக் கீழே சென்று நீலகண்டனிடம் நடந்ததைக் கூறி ஞாயம் கேட்டார். 

 

 

நீலகண்டன், “மகாலட்சுமியா இப்படிப் பண்ணினா சீதா? என்னால் நம்பவே முடியவில்லை?”. 

 

 

 

“நம்ப முடியவில்லைனா மருதாயி பாட்டிகிட்ட நீங்களே கேளுங்க மாமா, நம்ப வீட்டுப் பெண்ணை நாமளே நம்பளைனா வேற யாரு மாமா நம்புவா அவளை? அவ சின்னப் பொண்ணு மாமா, இந்த மாதிரி சொல்லெல்லாம்?” என்றவரின் கேள்வியில் ஆத்திரம் கொண்டவர் மகாலட்சுமியை அழைத்தார். 

 

 

 

 

 

ஏற்கனவே சொல்லாமல் கொள்ளாமல் வந்த கணவனைக் கண்ட மகாலட்சுமி பயத்தில் அறைக்குள் அடைந்தவர் வெளியே வரவேயில்லை. திடீரெனப் படபடவென்று கதவை தட்டியது கணவனாக இருக்குமோ என்றபயத்தில் இருந்தவரின் பிறவிகுணம் தலைதூக்க எதையும் பார்த்துவிடலாம் என்ற தைரியத்தில் எந்தவித குற்றஉணர்வும் இல்லாமல் வந்தவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார் நீலகண்டன். 

 

 

 

 

 

 

 

“எதற்காக மகாலட்சுமி உமாவை அடிச்சி காயபடுத்தின? படக்கூடாத இடத்தில் பட்டு அவளுக்கு எதாவது ஆகியிருந்தா வெளி ஊரில்இருக்க எந்தம்பிக்கு என்ன பதில் சொல்வது? என் பையனுக்கு என்ன  சொல்லறது?”. 

 

 

 

 

இதே உம் பொண்ணா இருந்தா இப்படிப் பண்ணுவையா என்றவரை பார்த்த மகாலட்சுமி, “இவ பண்ண வேலையை என் பையனையே இல்ல பொண்ணாயிருந்தா இன்னேரம் கைய கால உடச்சி வீட்டில உக்காத்திவச்சியிப்பேன் என்றவரின் பதிலில் ஆத்திரமடைந்த நீலகண்டன் சரமாரியாக  தள்ளிவிட்டார்”. அதில் அதிர்ந்து போய் விட்டார் சீதா. 

 

 

 

 

 

ஏற்கனவே பாதித் தூரம் வந்துவிட்டது திருமூர்த்தி மனைவி சீதாவின் தகவல் கேட்டு வீட்டிற்கு விரைந்து வந்தார். வந்தவர் தன் அண்ணனின் முரட்டுத் தனமாக நடத்தையைக் கண்டு அவரைக் கட்டுபடுத்த முடியாமல் தவித்தவர், இருவருக்கும் இடையே வந்தபின் தான் நீலகண்டன் சுயம் பெற்றார். அந்த அளவுக்கு ஆத்திரமானது அவரின் கண்களை மறைத்துவிட்டது. 

 

 

 

 

நடுவே வந்த தம்பியை கண்டவர் கோபத்தை அடக்கமுடியாமல் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டார். 

 

 

 

 

 

 

 

அவர் சென்றதும் சீதா மற்றும் மருதாயி சேர்ந்து அவரை அழைத்துகொண்டு அடுத்த அறையில் படுக்கவைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டனர். 

 

 

 

 

 

 

 

அவர்கள் சென்றவுடன் கண்களில் வெறுப்பு, வன்மம் மற்றும் கோபம் கொப்பளிக்க வைராக்கியத்துடன் எழுந்தமர்ந்தவர் அந்த வேதனையுடனே அடுத்தத் திட்டத்தைப் போட ஆரம்பித்தார். 

 

 

அப்போது அவருக்குத் தெரியவில்லை தன்னுடைய இந்தத் தவறான முடிவே ஒரு நாள்  தனிமையை அனுபவிக்க வைக்கப் போகுது என்பதை அறியாமல் போய்விட்டார் மகாலட்சுமி. 

 

 

 

அந்த விபத்திலிருந்து உமா தேறி வரவே ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. 

 

 

 

 

நித்தியன் கூட அன்னை தன் தங்கையைத் தாக்கியதை கேள்விபட்டதிலிருந்து மகாலட்சுமியிடம் பேசுவதை நிறுத்திவிட்டான். 

 

 

 

 

 

 

உமாவோ தன் அன்னை, தந்தை, பெரியதந்தை மற்றும் மருதாயி பாட்டியின் கவனிப்பில் தேறிவர ஒரு மாதம் ஆகிவிட்டது காரணம் மகாலட்சுமி தல்லிவிட்டதில் கல்லின் மேல் விழுந்ததினால் இரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டது, அதன் தாக்கத்தால் அடிக்கடி மயக்கமும் தலைசுற்றலும் வந்ததால் அவளை அதிகமாக வெளியே விடாமல் பொத்திபொத்தி வைத்திருந்தனர். 

 

 

 

 

இந்த ஒரு மாதமாகவே நீலகண்டன் மகாலட்சுமியிடம் பேசவேயில்லை, அதில் இன்னும்இன்னும் வெறிகொண்டவர் தன் திட்டத்தைச் செயல்படுத்த ராமனை அழைத்தார். 

 

 

 

 

 

என்ன தான் கோபமும் வெறுப்பும் இருந்தாலும் எந்த ஒரு மனைவியும் எந்த ஒரு பெண்ணும் செய்யக்கூட யோசித்துகூடப் பார்க்காத விஷயத்தைச் செய்தார் மகாலட்சுமி. 

 

 

 

 

 

 

 

 

 

மகாலட்சுமி தன் திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக விதியும் சூழ்நிலையை ஏற்படுத்தியது அதன் விளைவு மூவரின் மரணம்… ஆம் மரணம். 

 

 

 

 

 

ஒரு நாள் நீலகண்டனின் விசுவாசம் ஒருவருடைய மகளின் திருமணத்திற்காக முதல் நாள் மாலையே செல்ல தயாரனவர்கள் உண்ட உணவில் விஷத்தை கலந்தால் மகாலட்சுமி. 

 

 

 

 

 

 

விஷம் காளந்திருந்த உணவை உண்டனர் நீலகண்டன், திருமூர்த்தி மற்றும் சீதா. 

 

 

 

 

 

உமாவின் நல்ல நேரமோ இல்லை மகாலட்சுமியின் கெட்ட நேரமோ அன்று மாலை செல்ல புறப்பட்ட நேரத்தில் அவளுக்கு மாதாந்திர பிரச்சனை வந்துவிட உமாவை மருதாயின் பொருப்பில்லாத விட்டுவிட்டு இவர்கள் மூவர் மட்டுமே சென்றனர். 

 

 

 

 

 

பாதித் தூரம் சென்றவர்களுக்கு விஷம் உடம்பில் ஏறஏற நீலகண்டனின் கைகளிலிருந்து கார்நிலை தடுமாறியது, அதிலே தன் மனைவியின் கைகரியம் என்பதை அறிந்து கொண்ட நீலகண்டன் விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்டார். 

 

 

 

 

 

 

சிறிது நேரத்திலேயே ஒருவர் ஒருவராகச் சுயநினைவு இழந்தனர், அதன் விளைவு கார் எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவரின் உயிரும் உடலைவிட்டு பிரிந்து சென்றது. 

 

 

 

 

இந்த ஒரு மாத பிரிவிலேயே மனைவின் மறுபக்கத்தை அறிந்துதான் வைத்திருந்தார், ஆனாலும் அதைப் பற்றி ஒரு முறை கூட மகாலட்சுமியிடம் நீலகண்டன் கேட்டதில்லை, ஆனால் மனைவி பணத்திற்குக் கொடுக்கும் மதிப்பை மனிதர்களுக்குக் கொடுக்கவில்லை என்பதை அறிந்த பின் அவரிடமிருந்து மனதளவில் வெகுதொலைவிற்குச் சென்றுவிட்டார். 

 

 

 

 

மனைவியின் எந்த ஒரு செயலிலும் தலையிடாமல் விலகியது தான் நீலகண்டன் செய்த பெரிய தவறு. 

 

 

ஒரு வேளை அவரிடம் அமர்ந்து மனம்விட்டுப் பேசியிருந்தால் ஒரு வேளை மகாலட்சுமி மாறியிருப்பாரோ என்னமோ. 

 

 

 

 

ஆனால் விதியானது வேறென்றை நினைத்து அதையே செயல்படுத்தியும் காட்டிவிட்டது. 

 

 

 

 

இதன் பின்னர்த் தான் ஆரம்பித்தது மகாலட்சுமியின் உண்மையான ஆட்டம். 

 

 

 

 

 

அன்பு தொடரும்….. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!