Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? 36.2

அத்தியாயம் 36.2:

 

 

 



Advertisement

 

 

 

Advertisement

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட முகூர்த்தில் அதே அம்மன் கோயிலில் ஐயர் மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, மும்மூர்த்திகள் மற்றும் தேவாதிதேவர்களின் ஆசியுடன் பஞ்சபூதங்களின் சாட்சியாக; உற்றார் உறவினர்கள் முன்னிலையில் சொர்கத்திலிருந்து இயங்கிவந்த அப்சரஷ் போல் இருந்த உமாவை மூன்றுமுடிச்சிட்டுத் தன்னில் சரிபாதியாக்கிக்கொண்டான் வெற்றி. 

Advertisement

 

 

 

Advertisement

 

 

 

 

நீண்டநாள் ஆசைக்காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் வெற்றியும் உமாவும் முகம்கொள்ளா புன்னகையுடன் காண்பவரின் கண்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்த வகையில் அவ்வளவு அழகாக இருந்ததனர். 

 

 

 

 

 

 

 

இவர்களைவிட மற்றவர்கள் தான் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களைவிடக் குட்டிதான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான் காரணம் ஊரே மரியாதை தரும் வெற்றி தனக்கு மாமாவாக வந்ததாலும், இனி உமாவை விட்டு எங்கும் சொல்லத்தேவையில்லை என்ற மகிழ்ச்சி தான். அவனின் மகிழ்ச்சியில் மற்றவரும் மகிழ்ந்தனர். 

 

 

 

 

 

 

 

 

திருமணம் முடிந்ததும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு உமாவின் வீட்டிற்குச் சென்றவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் ஆனந்தியும் ஊர்மக்களும். 

 

 

 

 

 

 

 

 

வீட்டின் முன் அமரவைத்த குமரிப்பெண்கள் 

 

 

 

மருதாணி கன்னம் கொண்ட 

மஞ்சள் கிழங்கே 

மகாராணி போல வாழ 

வாரி வழங்க 

மனம் போல வாழக்கை கிடைக்க 

உனக்கு மகராசன் வந்து புட்டானே 

 

 

 

 

 

 

 

சந்தனம் குங்குமம் 

மண மணக்க 

என் சொந்தமும் பந்தமும் 

மலைச்சி நிக்க 

சந்தனம் குங்குமம் 

மண மணக்க 

என் சொந்தமும் பந்தமும் 

மலைச்சி நிக்க 

 

 

 

 

 

 

 

கெட்டி மேளம் கொட்டி மேளம் 

கொட்ட போகுது 

புது மெட்டி காலத் தொட்டு வாழ 

வட்டம் போடுது 

 

 

 

 

 

 

 

 

கெட்டி மேளம் கொட்டி மேளம் 

கொட்ட போகுது 

புது மெட்டி காலத் தொட்டு வாழ 

வட்டம் போடுது 

 

 

 

 

 

 

எனப் பாடி மகிழ்ந்தவர்கள் மனமக்களையும் மகிழ்வித்தனர். 

 

 

 

 

நாம் என்ன கொடுக்கிறோமோ அதே நமக்குத் திரும்பகிடைக்கும் என்று சொல்லுவார்கள் அதே போல் உமா ஊரார்களுக்குக் கொடுத்த அன்பானது அவளின் திருமணத்தில் தங்குதடையின்றிக் கிடைத்தது. 

 

 

 

 

 

 

 

 

 

 

அதன் பின் பண்ணையார் வீட்டிற்கு வந்த மணமக்களை முறைபடி வரவேற்றிய பின் நேராகப் பூஜையறையில் விளக்கேற்றி சாமி கும்பிட பணிந்தவர்கள் பாலும்பழமும் கொடுத்ததும் உமாவை நாச்சியார் தன் அறைக்கு ஓய்வெடுக்க அழைத்துச்சென்றுவிட்டார். வெற்றியும் காரணம் புரிந்தால் புன்னகையுடன் தன் அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்தவன் உடனே உறங்கியும் விட்டான். 

 

 

 

 

 

 

இத்தனை நாள் காத்திருந்த காத்திருப்பிற்கான பலன் கிடைத்த மகிழ்ச்சியில் வந்த தூக்கம் அது. அதே போல் தான் உமாவும் படுத்தவுடனே தூங்கிவிட்டாள். 

 

 

 

 

 

 

 

கீழே சகுந்தலா, ஜெயா என அத்தனை பெண்களும் வந்தவிருந்தினர்களை உபசரித்து அனுப்பிவைத்தனர். 

 

 

 

 

 

 

ஜெயந்தியோ மசக்கையால் கோயிலில் இருந்து வந்தவிடனேயே தூங்கிவிட்டதால் மதமனும் அவளுடனே அறையில் இருந்து கொண்டான். அதனால் நாத்தனார் சடங்கு அனைத்தையும் மீனுவே செய்யும்படியாகிவிட்டது. 

 

 

 

மற்ற ஆண்களோ வந்தவர்களுக்கு வயிறார உணவு பரிமாறியும் மொய் பணத்தை வாங்கிப் பெயர்கள் எழுதவும் கணக்குவழக்குகள் சரிபார்க்கவுமே நேரம் சரியாக இருந்தது. 

 

 

 

 

 

கண்ணனுக்கோ சிறயவர்களான குட்டி, வர்ஷா மற்றும் மகிகுட்டியையும் பார்த்துக்கொள்ள நேரம் சரியாக இருந்தது. 

 

 

 

 

 

 

 

இரவு உணவை விரைவாக முடித்ததும் அனைவரையும் படுக்க அனுப்பிய பாட்டிகள் உமாவை அலங்காரம் செய்து நல்ல நேரம் பார்த்து வெற்றியின் அறைக்கு ஆனந்தி மற்றும் விசாலாட்சியை விடச் சென்றவர்கள் அவளைச் சங்கடபடுத்தாமல் உடனே தங்களின் அறைக்குள் அடைந்துகொண்டனர். 

 

 

 

 

 

 

 

அம்முவின் அறையில் அருணோ அவளைக் கட்டிக்கொண்டு, “நாமளும் சீக்கிரமா குட்டிபாப்பாவை பெத்துக்கலாமா அம்மு? குழந்தைங்கனா ரொம்ப அழகு இல்ல? குட்டிக்குட்டிகை குட்டிக்குட்டிகாலு சின்னக் கண்ணு பார்க்கவே அவ்வளவு அழகு இல்ல அம்மு?” என்று அருண் வர்ணிக்கவர்ணிக்க அம்முவோ தங்களின் குழந்தைகளும் இப்படித் தான் இருக்கும் நினைத்து மெய்மறந்து மண்டையை ஆட்ட அவளின் அசந்தநேரந்தை பயன்படுத்திக் கொண்டு  வேலையில் இறங்கியும்விட்டான். 

 

 

 

 

 

 

அங்கு விஷ்ணுவோ தேனிலவுக்குச் சென்ற இடத்தில் மல்லி கேட்ட பொருட்களை வாங்கித்தராததால் இங்கே வந்ததிலிருந்து அவனிடம் பேசாமல் அழையவிட்டாள் அவன் மனைவி… அவள் திட்டினால்கூட வாங்கிக்கொள்வான் விஷ்ணு அவள் பேசாமல் மெளனம் சாதிப்பது என்னமோ செய்ய மல்லியின் காலில் விழாத குறையாகக் கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாகச் சமாதானம் செய்தவன் தங்களின் வாழக்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி சென்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

மீனுவோ கட்டிலில் சாய்ந்து போனை நோண்டிக்கொண்டிருந்த கணவனிடம் சென்று கையைக் காட்ட, “என்ன மீனு கையில்?”… 

 

 

 

 

“கண்டுபிடிங்க மாமா”. 

 

 

 

 

 

“கை மூடிவச்சியிருந்தா நான் எப்படிக் கண்டுபிடிக்க முடியும் மீனு?”. 

 

 

 

 

 

“மக்கு மாமா கையைத் திறந்து பாருங்க, இதைக்கூடவா நான் சொல்லனும்?” என்றதும் அவளின் கையைத் திறந்து பார்த்தவனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. கணவனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தவள் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள். 

 

 

 

 

 

மற்றவரின் பார்வையை உணர்ந்தவன் மீனுவை இருக்கமாக அணைத்துக்கொண்டவன், “எப்ப தெரியும் மீனு? காலையில் தான்மாமா உறுதியாச்சி”. 

 

 

 

 

 

“ஏன் மீனு அப்பவே சொல்லவில்லை? உங்கக்கூடத் தனியா இருக்கும் போது சொல்லனும் தோனுச்சி அதனால்தான் அப்ப சொல்லவில்லை. வா உடனே போய் எல்லார்கிட்டையும் சொல்லலாம் மீனு என்றதும் காலையில் சொல்லிக்கலாம் மாமா, இப்ப எல்லாரும் தூங்கியிருப்பாங்க”. 

 

 

 

 

“என்னால நம்பமுடியவில்லை மீனு நான் அப்பா ஆகப் போறேனு, நமக்கே நமக்குனு குழந்தைங்க வரப்பேறாங்க என்றவன் அவளின் மணிவயிற்றில் இதழ்பதிக்க அதில் சிலிர்த்தவள் தன்னவளை வயிற்றோடு இறுக அணைத்துக்கொண்டாள்”. 

 

 

 

 

 

சிறிது நேரம் கழித்து மனையிடமிருந்து விழகியவன் கட்டிலில் படுக்கவைத்தவன் தானும் படுத்துக்கொள்ள மீனுவோ தன்னவன் நிச்சத்தை மஞ்சமாகி கலைப்பில் படுத்த உடனே உறங்கிவிட்டாள், கார்த்திக்கும் தன்னவளை அனைத்துக்கொண்டு உறங்க முயன்றுகொண்டிருந்தான். 

 

 

 

 

அதீத மகிழ்ச்சியில் தூக்கம்வருவேணா எனச் சண்டித்தனம் செய்யத் தன் முயற்சியைக் கைவிட்டு மனைவியின் வயிற்றில் உள்ள சிசுவிடம் உறையாட ஆரம்பித்துவிட்டான். 

 

 

 

 

 

 

 

 

இங்கு உமாவோ பாட்டிகள் சென்றவுடன் பக்கத்திலிருந்த அறைக்குள் சென்றவள் நன்றாக அசந்து தூங்கிக்கொண்டிருந்த தமையன்களின் தூக்கம் கலையாதவாரு நன்றாகப் படுக்கவைத்தவள் கீழே கடந்த போர்வையை எடுத்து போர்த்தியவள் சிறிது நேரம் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்ததாள், குட்டியின் அசைவு தான் அவளை நிகழ்வுக்குக் கொண்டுவந்தது. 

 

 

 

 

 

தமையன்களின் உறக்கம் கலையாதவாறு கதவை சாத்திவிட்டு வெளியே வந்தவளின் மனது புரிந்து கொண்ட விசாலாட்சி மற்றும் ஆனந்தியும் அவளிடம் எதுவும் கேட்காமல் வெற்றியின் அறைவாயிலில் விட்டு வந்தனர். 

 

 

 

 

 

 

 

அவர்கள் சென்றபின்பும் கூட உள்ளே செல்லாமல் தயங்கிக்கொண்டே நின்றவள் மனதில் ‘என்ன உமா இது இந்த அறைக்குள்ள போக இப்படிப் பயப்படற? அப்புறம் எப்படி மாமுவை திட்டுவது? இவ்வளவு நாளா உன்னைக் கண்டுக்காம வேளைவேளைனு சுத்துனவரை இதுதான் சந்தர்ப்பம்னு சுத்தவிடு உமா, அப்ப தான் அவருக்கு இவ்வளவு நாளா நான் எப்படிக் கஷ்டப்பட்டேனு தெரியும்’ என வீரவசனம் மனதிற்குள் நினைத்தவள் கதவைதிறந்துகொண்டு உள்ளே சென்றாள். 

 

 

 

 

 

 

 

 

இவளின் வரவிற்காகக் காத்திருந்த வெற்றி கதவைதிறந்து வந்த உமாவை கண்டதும், “என்ன உமா இவ்வளவு நேரமா உள்ள வரலாமா வேண்டாம்னு யோசனை செஞ்சிகிட்டிருந்தையா? இல்ல இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு யோசனை செஞ்சகிட்டிருந்தையா?” என்றதும் உமாவின் கண்கள் ஆச்சரியத்தில் சாசர்போல் விரிந்தது. 

 

 

 

 

 

 

 

 

தன்னவளின் கோலிகுண்டு கண்களுக்குப் பரிசாக முத்தத்தைக் கொடுத்தவன் வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இல்லாமல், “ஏய் உமா எப்ப மூக்குத்தி குத்துன? ரொம்பரொம்ப அழகா இருக்கு என மூக்குத்தியை தொட்டுபார்த்துக்கொண்டே கூற” அதில் கடுப்பானவள் வேகமாக வெற்றியின் கையைத் தட்டிவிட்டுப் பால்கனியிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்துகொண்டாள். 

 

 

 

 

 

 

 

திடீரெனக் கையைத் தட்டிவிட்டதில் குளம்பியவன் அவளின் பின்னே சென்று “ஏன் உமா கோவமா இருக்க? நான் என்ன பண்ணினேன்?” என்றவனிடம்… 

 

 

 

 

“நீங்க என்ன பண்ணுநீங்களா? இந்த ஒரு மாதமும் ஒழுங்காக நம்ம கல்யாணத்திற்காக ஏதாவது செஞ்சியிருப்பீங்கலா? உங்க வேலையைக் காரணமா சொல்லி அதுகூட விட்டுவிடுவேன் வெற்றி, உங்களுக்குப் பிடிக்குமேனு ஆசைஆசையா மூக்குத்திக்கிட்டேன் தெரியுமா? ஆனால் நீங்க அதைக்கூடக் கவனிக்காம இருந்திருக்கீங்க இல்ல என்றதும் தான் உமாவிடம் வசமாக மாட்டிக்கொண்டது புரிய என்ன சொல்லி சமாளிப்பது எனத் தெரியாமல் திருதிருத்தான் வெற்றி”. 

 

 

 

 

அவனின் முழியைப் பார்த்ததும் உமாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது இருந்தாலும் அதை மறைத்தவள் வெற்றியின் பதிலுக்காகக் காத்திருந்தாள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசனை செய்தவன் உமா தன்னையே பார்ப்பதை உணர்ந்து, “அதுஒன்னுமில்ல உமா கொஞ்சம் பழங்களை அனுப்பவேண்டியிருந்தது அதனால் தான் என்றவனை மடக்கும் விதமாக அதை அனுப்ப ஒரு மாசமா வெற்றி? உங்களுக்குத் தான் பொய் சொல்லவரவில்லையில்ல ஒழுங்காக உண்மையைச் சொல்லுங்க என்றளை பார்த்து புன்னகைத்தவன் அவளைத் தன் மடியில் இருத்திக்கொண்டு மார்க்குடன் சேர்ந்து செய்த வேலையை ஒன்று விடாமல் கூறினான்”. 

 

 

 

 

 

 

 

 

“கல்யாண பிசியில் அந்தக் கவிதாவை மறந்துவிட்டையே உமா, என்ன சொல்லறீங்க வெற்றி? அவ இங்க வந்தாளா? குட்டியை அவளுக்கு அடையாளம் தெரிந்துவிட்டதா?” என்று படபடத்தவளை அமைதிபடுத்தியவன்… 

 

 

 

 

 

“எதுக்கு இவ்வளவு பதட்டம் உமா? நான் சொல்லறதை முதலில் பொறுமையா கேளு அந்தக் கவிதா குட்டியை பார்க்கவும் இல்லை குட்டியும் அவளைப் பார்க்கவில்லை உமா; அந்த மகாலட்சுமி கூடச் சேர்ந்துகிட்டு கல்யாணத்திற்குப் பிரச்சனை பண்ண வந்தா அதுக்குள்ள நான் வச்ச ஆள்மூலமா அவளைத் திசைதிருப்பி உள்ள வரவிடாம பண்ணீட்டோம்”. 

 

 

 

 

 

 

 

 

அங்கிருந்து தப்பிச்ச கவிதா மறுபடியும் பிரட்சனை பண்ணி குட்டியை உங்கிட்டயிருந்து பிரிச்சி அவனைப் பணையமா வச்சி மரகதலிங்கத்தை அடைய திட்டம் போட்டா, இனியும் இவளை வெளியே விட்டா சரியா வராருனு தான் மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்சாச்சி உமா. 

 

 

 

 

“எப்படி வெற்றி அவளை உள்ளே அனுப்பனீங்க? இனி அவ நம்ம வாழ்க்கைக்குள் வராமல் இருந்தால் போதும் ப்பா சாமி”. 

 

 

 

 

 

 

“இனி கண்டிப்பாக அவ வரமாட்டா உமா, கொலை கேஸ் உமா; அதுவும் திட்டமிட்ட கொலை… ஒன்றில்லை இரண்டில்லை நாளு கொலை உமா”. 

 

 

 

 

“என்ன நாளு கொலையா? யார் யாரை வெற்றி கொன்னா அந்த ராட்சசி?” எனத் தவிப்பான கேட்டவளை பார்த்து மனதை கடினமாக்கிக்கொண்டு உண்மையைக் கூறினான். 

 

 

 

 

 

 

“குட்டியோட அப்பா சண்முகம், அம்மு, கண்ணனின் அப்பா, அம்மா, பாட்டி… அப்ப அவங்க விபத்தில் சாகலையா வெற்றி? எதுக்கு இப்படிப் பண்ணுனா வெற்றி? அவங்க என்ன பாவம் பண்ணுனாங்க? இவபோனதுக்கப்பறம், தான் உண்டு தன் வேலை உண்டுனு தான இருந்தாங்க அப்படிப் பட்டவர்களைக் கொலை செய்ய எப்படி மனசுவந்திச்சி வெற்றி” என அழுகையோடே கேட்டவளிடம், “எங்க இந்தப் பணக்கார வாழ்க்கைக்கு இவர்களால் பிரச்சனை வந்திடுமோனு நினைத்து தான் அனைத்தையும் செஞ்சியிருக்கா என்றவன் ஆதரவாக உமாவை அனைத்துக்கொண்டான்”. 

 

 

 

 

 

 

இனி இவர்களால் நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது உமா, அப்படியே வந்தாலும் பசங்களையும் நம்மைவிட்டு பிரிக்க முடியாது. கடைசிவரை குட்டிக்கு நீ யாருங்கிற உண்மை தெரியவேகூடாது உமா அப்பதான் அவனுக்கு நாம இருக்கோங்கிற எண்ணம் வந்து மனசு தெளிவாகும், அதுதான் அவனோட எதிர்காலத்திற்கும் நல்லது உமா என்றவனை இமைக்காமல் பார்த்தவள், நீங்க கிடைக்க நான் போன ஜென்மத்தில் ஏதோ தவம் செஞ்சியிருக்கேன் நினைக்கிறேன் மாமூ. 

 

 

 

 

 

 

“நீ கிடைக்க நான் மட்டுமல்ல உமா இந்த வீடே தவம் செஞ்சியிருக்குனு நினைக்கிறேன் என்றவன், இப்படிப் பேசிபேசியே நேரத்தை கடத்திடலாம்னு பார்க்கிறையா உமா? என்றது அந்திவானம் போல் சிவந்தவள் அவன் மடியிலிருந்து எழுந்து நின்று கொண்டாள்”. 

 

 

 

 

 

தானும் எழுந்தவன் அவளைப் பின்னிருந்து அனைத்து “நீ கோவப்படும் போது புயல் மாதிரி இருக்க, அன்பு காட்டும் போது இதமான மழையா இருக்க, என் மேல் நீ கொண்ட காதல் உடம்பையும் மனசையும் ஊடுறி உயிர் உறையவைக்கிற தென்றலா இருக்க உமா” என்று முதன் முதலாக அவளின் மீதான காதலை அவளுக்கு உணர்த்தியவன் தன்னவளை கைகளில் ஏந்திகொண்டு கட்டிலில்கிடத்தியவன் அவளின் சம்மதத்தோடு வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி சென்றான். 

 

 

 

 

 

 

இனிவரும் காலங்களில் இவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் காதலும் மட்டுமே சரிசமமாக இருக்கும் எனக் கடவுளை வேண்டி வாழ்த்தி விடை பெற்றுவோம். 

 

                    *****$~$~$~$****

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!