“ஏன் சின்ன பாப்பா, எப்ப பாரு உங்க அண்ணா போட்டு விடற அருக்காணி ஜடையே போட்டுட்டு இருக்க..”
Advertisement
அருந்ததி பதில் சொல்லாமல் உர்ரென்று வில்வாவை முறைத்து பார்த்தாள்.
“அவனை எதுக்கு முறைக்கிற பாப்பா… எங்க அம்மாகிட்ட ஜடை போட்டுக்க வேண்டியது தானே, அம்மா ரொம்ப அழகா போட்டு விடுவாங்க தெரியுமா?” என்றான் பாரி.
Advertisement
Advertisement
“எங்க அண்ணா கஷ்டப்பட்டு போட்டு விடறாங்க, நல்லா இல்லைன்னு சொன்னா அவங்க வருத்தப்படுவாங்க தானே, அதுவும் இல்லாமல் முடிஞ்ச அளவு நம்ம வேலையே நாமளே பார்க்கத்துக்கணும்னு அண்ணா சொல்லி இருக்காங்க”
அவினாஷை நினைத்து இவர்களுக்கு எப்பொழுதும் ஒரு பிரமிப்பு உண்டு. தங்கள் வயது தான். ஆனால் எத்தனை கடமைகள், எத்தனை பொறுப்புகள், அதை எவ்வளவு பொறுமையாகவும் நேர்த்தியாகவும் கை ஆளுகிறான் என்று.
Advertisement
“சரி சரி உங்க அண்ணன் ஒரு கோவில் தான்… இன்னிக்கு ஈவினிங் நாங்க கிரிக்கெட் விளையாட போறோம் நீயும் வர்றியா?” என்றான் பாரி.
ஞாயிறு அன்று பக்கத்தில் உள்ள மைதானத்தில் பாரி, வில்வா, கருணா, தர்மராஜ் அனைவரும் சென்று விளையாடுவார்கள். இப்பொழுது எல்லாம் அருந்ததியும் இணைந்து கொள்கிறாள். கருணா போல விளையாடுவதில் அருந்ததிக்கு ஆர்வம் இல்லை. ஆனால் அவளுக்கு இவர்கள் விளையாடுவதை பார்க்க பிடிக்கும். அதைவிட இவர்கள் அனைவருடன் சேர்ந்து நேரம் கழிக்க மிகவும் பிடிக்கும்.
“எங்க அண்ணாக்கு கூட கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும் தெரியுமா? அங்க ஊர்ல இருக்கும் போது எங்க ஸ்கூல் டீம்ல அவங்க தான் கேப்டன். இப்ப பாவம் அவங்களுக்கு டைம் இல்ல” என்றாள் அருந்ததி வருத்தமாக.
“இதுக்காக எல்லாம் கவலை படலாமா, நாம இன்னிக்கு உங்க அண்ணாவையும் கூட்டிட்டு போகலாம்.. சரியா?” என்றான் வில்வா.
“இன்னிக்கு அவங்களுக்கு அஞ்சு கிளாஸ் இருக்கு… உங்களை மாதிரி எங்க அண்ணா என்ன வெட்டியாவா இருக்காங்க?” என்று கூறி கொண்டே தமயந்தியை பார்க்க அடுப்படிக்கு சென்று விட்டாள்.
“பார்த்தியாடா… இந்த சில்வண்டு எல்லாம் நம்மளை கிண்டல் செய்ற மாதிரி ஆயிடுச்சு” என்று கடுப்பாக பாரியிடம் பொருமினான் வில்வா.
“விடுடா.. அதுக்காக நம்ம என்ன வேலைக்கா போக முடியும்”
“அதானே.. காலேஜ் போய்ட்டு வந்து படிக்கவே நமக்கு மூச்சு முட்டுது”
“நம்ம என்ன செஞ்சாலும் நம்மளை இங்க யாரும் பாராட்ட போறது இல்ல, அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு”
இவர்கள் அரட்டை அடித்து கொண்டிருக்கையில்,
“அத்தை.. இந்தாங்க அத்தை அம்மா வாழைப்பூ வடை செஞ்சாங்க. உங்களுக்கு கொடுத்திட்டு வர சொன்னாங்க” என்று வந்தாள் கருணா.
“ஓ பிடிக்குமே, உங்களுக்கும் சேர்த்து தான் வடை கொடுத்து விட்ருக்காங்க அருந்ததி.. நீ வீட்டுக்கு போகும் போது எடுத்துட்டு போ”
“அக்கா, அத்தை எவ்வளவு மெல்லிசு மெல்லிசா கேரட், பீன்ஸ் எல்லாம் கட் பண்ணாங்க தெரியுமா?”
“அவளுக்கு நல்லா சாப்பிட தான் தெரியும் சின்ன பாப்பா” என்று வாழைப்பூ வடையை மென்றுகொண்டே கூறினான் வில்வா.
“எங்க அக்காவுக்கு எல்லாம் தெரியும், உங்க இரண்டு பேரை மாதிரி இல்லை”
“பாரு டா… முதல்ல அண்ணன் ஒரு கோவில்ன்னு பாட்டு பாடுன, இப்ப எங்க அக்கா.. தங்க அக்கான்னு பாடுவ போலயே” என்றான் பாரி நக்கலாக.
“எப்பப்பாரு சின்ன பிள்ளை கிட்ட எதுக்கு வம்பு வளர்ப்பீங்களோ, போய் ஏதாச்சும் வேலை இருந்தா பாருங்கடா” என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தார் தமயந்தி.
“அருந்ததி, உன்கிட்ட கேக்கணும்னு நினைச்சேன் உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா? என் குட்டி சைக்கிள் சும்மா தான் இருக்கு. டென்த்ல ப்ர்ஸ்ட் வந்ததுனால எனக்கு ஸ்கூல்ல சைக்கிள் கிப்ட் கொடுத்திருக்காங்க, நீ அதை ஓட்டலாம்”
“அண்ணா கிட்ட கேட்டுட்டு சொல்றேன் கருணாக்கா..”
“ஏன் பாப்பா உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமான்னு உங்க அண்ணாக்கு தான் தெரியுமா?” என்றான் பாரி.
“அது இல்ல… அக்கா சைக்கிள் நான் ஓட்டலாமான்னு அண்ணா கிட்ட தானே கேக்கணும்”
“அது சும்மா தானே இருக்கு, அதை ஓட்ட அண்ணாகிட்ட எதுக்கு கேக்கணும்” என்றான் வில்வா.
“சின்ன பிள்ளைக்கு இருக்கிற அறிவு உங்க ரெண்டு பேருக்கும் இருக்கா? வீட்ல பெரியவங்க கிட்ட கேக்காம யார் கொடுக்கிற பொருளையும் வாங்கிக்க முடியுமா? அவங்க வீட்ல இப்ப இவ அவங்க அண்ணாகிட்ட தானே கேக்கணும்? அவளை பார்த்து கத்துக்கங்க” என்றாள் கருணா.
“ஏன் கருணா, நீ என்னிக்காச்சும் அண்ணாகிட்ட கேக்கணும்னு யோசிச்சு இருக்கியா? இல்ல அண்ணன்னு தான் என்னை மதிச்சிருக்கியா… சின்ன பாப்பா கிட்ட இருந்து நீ தான் கத்துக்கணும்”
“அதானே… வில்வா சொல்றதுலயும் ஒரு பாயிண்ட் இருக்குல்ல” என்று நண்பனுக்கு ஒத்து ஊதினான் பாரி.
“இவங்க பேசறதை விடு அருந்ததி, நீ உங்க அண்ணாகிட்ட கேட்டுட்டு சொல்லு… எப்படி இருந்தாலும் உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா?”
“தெரியாதே “
“செவென்த் வந்துட்ட, இன்னும் சைகிள் ஓட்ட கத்துக்கலையா? பரவாயில்லை விடு, இன்னிக்கு நான் உனக்கு சொல்லி தரேன். நம்ம இன்னொரு நாள் கிரிக்கெட் விளையாடலாம். மதியம் சாப்பிட்டு ஒரு மூனு மணிக்கு சைக்கிள் கத்துக்க போலாம். நீ போய் உங்க அண்ணா கிட்ட சொல்லிட்டு வா. நானும் போய் சாப்பிட்டுட்டு வரேன்” என்று கூறி விட்டு கிளம்பிவிட்டாள்.
அருந்ததி நகத்தை கடித்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“சைக்கிள் ஓட்ட கத்துக்கும் போது கீழே விழுந்துடுவோம்ன்னு என் பிரெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க…. விழுந்தா அடிபட்டிடும்… அடிபட்டால் மருந்து போடணும்… மருந்து போட்டா எரியும்”
“அதுக்கு என்ன பண்றது? சைக்கிள் கத்துகிறது நல்லது தானே சின்ன பாப்பா..”
“ப்ளீஸ் ப்ளீஸ் அக்கா கிட்ட இருந்து என்னை காப்பாற்றி விடுங்களேன், எனக்கு சைக்கிள் கத்துக்க வேண்டாம்”
“சொல்லாதீங்க… சொல்லாதீங்க… “ என்று வேகமாக தடுத்துவிட்டாள் அருந்ததி.
“பாப்பா, இந்த ஊருக்கு வந்ததுல இருந்து நீயும் வாலாயிட்ட” என்றான் அவினாஷ். அதில் அவனுக்கு மகிழ்ச்சியே, அவளுடைய குழந்தைத்தனம் மீண்டும் மலர்ந்ததாக தோன்றியது அவினாஷிற்கு. அதற்கான பெரும்பங்கு பாரி வில்வாவை தான் சேரும் என்றே அவன் நினைத்தான்.
கருணாவின் நட்பு அவளை பக்குவப்படுத்தியது என்றால், இவர்களது அருகாமை அவளை இலகுவாகியது.
கருணா, “டேய் அண்ணா, பாரிவேந்தன்… “ என்று தெருவில் இருந்து குரல் கொடுத்தாள்.
அருந்ததி கலவரமாக இவர்களை பார்த்தாள்.
“நாங்க இருக்கிறோம் கவலை படாதே பாப்பா” என்று ரகசியமாக கூறினான் பாரி.
“டேய் அண்ணா..” மீண்டும் வெளியே இருந்து குரல் கொடுத்தாள் கருணா.
“சீக்கிரம் போடா, இல்லைனா ஊரையே கூட்டிடுவா”
“என்ன கருணா, எதுக்கு இங்க நின்னு கத்துற”
“என் குட்டி சைக்கிள் காலையில கூட நல்லா தான் இருந்துச்சு, இப்ப பார்த்தா பங்சரா இருக்கு”
“சைக்கிள் டயர் பங்சராவதுல என்ன ஆச்சர்யம்?”
“நேத்து வரை நல்லா இருந்துச்சு, திடீர்ன்னு எப்படி பங்சர் ஆகும்?
“என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்? “
“அதானே.. “ என்று வந்து நண்பனுடன் இணைந்து கொண்டான் பாரி.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே உணவை முடித்துவிட்டு வெளியே வந்தான் அவி.
“என்னாச்சு?” என்றான் கருணாவை பார்த்து.
“இன்னிக்கு அருந்ததிக்கு சைக்கிள் ஓட்ட சொல்லி தரேன்னு சொல்லி இருந்தேன். இப்ப பார்த்தா பங்சர்”
“சைக்கிள் ஒட்டவா? நானே சொல்லி கொடுத்துப்பேன்… உனக்கு எதுக்கு சிரமம்?”
“இவ்வளவு நாள் சொல்லி கொடுக்கல.. இப்ப நான் சொன்னதும் என்ன திடீர் ஞானயோதயம்? நான் தான் எல்லாம்ன்னு பெருமை பீத்திக்கிட்டா மட்டும் போதாது, செயல்லயும் இருக்கணும்”
அவி பாவமாக நண்பர்களை பார்க்கவும், “அவளே சைக்கிள் பங்சர் ஆன கடுப்புல இருக்கா, நீ ஏன் இப்ப வாயை கொடுக்கிற?” என்றான் பாரி மெதுவாக.
“இல்ல, நீங்க அருந்ததிக்கு போட்டு விடறது அருக்காணி ஜடை, ஸ்கூல்ல எவ்வளவு பேர் அவளை கிண்டல் பண்றாங்க தெரியுமா? இரண்டு வருஷமா நீங்க தானே போடறீங்க?” என்று அவினாஷை ஒரு பிடி பிடித்தாள்.
“எனக்கு வரதை தானே நான் போட முடியும்”
“வரலைன்னா அத்தைகிட்ட விடணும், அவங்க எத்தனை தடவை ஆசையா கேக்கறாங்க. பெரிய இவரு மாதிரி என் தங்கை என் ஜடைன்னு..”
“———————”
“ஒழுங்கா ரெண்டு நாள் அத்தை எப்படி போடறாங்கனு பார்த்து கத்துக்கோங்க, அப்புறம் போட்டு விடுங்க, புரியுதா?”
‘சரி’ என்று கூறுவதை தவிர வேற வழி இல்லை என்று மண்டையை ஆட்டினான் அவினாஷ்.
“என்னது” என்று நண்பர்கள் இருவரும் அதிர்ச்சி ஆகிவிட்டனர்.
“நாங்க எப்ப ஒத்துக்கிட்டோம்? என்னம்மா சொல்றீங்க?”
“கருணா தான் சொன்னா.. “
“அப்ப அவளையே கழுவ சொல்லுங்க, நாங்க போய் அருந்ததிக்கு சைக்கிள் சொல்லி தரப் போறோம்”
“டேய், அது எல்லாம் கருணா பார்த்துப்பா. நீங்க ரெண்டுபேரும் சட்டுபுட்டுன்னு வேலையே ஆரம்பிங்க”
“இல்ல அங்கிள்..” என்று பாரி ஆரம்பிக்கும் போது தர்மராஜும் வந்துவிட்டார்.
“என்னடா இன்னும் ஆரம்பிக்கலயா, ஒருத்தர் உள்ளே இறங்குங்க.. ஒருத்தர் வெளியே நின்னு தண்ணீர் வாங்கி ஊத்துங்க… அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்த உள்ளே இறங்கி சுத்தப்படுத்திடுங்க”
“எங்களுக்கு படிக்க நிறைய இருக்கு ப்பா” என்றான் பாரி கடுப்பாக.
“நாங்க பிரீன்னு நீங்க சொன்னதா பாப்பா சொன்னாளே“
“பிரீன்னு தான் சொன்னோம், அதுக்கு எல்லா வேலையையும் எங்க தலையில கட்டுவீங்களா? “
“ஒரு வேலை செய்யணும்னு சொன்னா உடம்பு வளையாது, நம்ம வீட்டு வேலைன்னு நினைப்பே கிடையாது”
“அந்த அவி பையன பாருங்க, அவன் செய்றதுல ஒரு பெர்ஸன்ட் நீங்க செய்வீங்களா?”
.
“எத்தனை நாளைக்கு தான் பொறுப்பே இல்லாம இருக்கப்போறீங்க?”
சங்கரும் தர்மராஜும் மாறி மாறி அறிவுரை கூற ஆரம்பித்தனர்.
“டேய் இதுக்கு உள்ளே குதிச்சுடலாம், வா.. “என்று பாரியை இழுத்துக்கொண்டு உள்ளே இறங்கிவிட்டான் வில்வா.
“ஒருத்தர் உள்ளே ஒருத்தர் வெளியே” என்று தர்மராஜ் ஆரம்பிக்கவும்,
“எங்களை செய்ய சொல்லிட்டீங்க தானே, எப்படி கழுவறதுன்னு நாங்களே பார்த்துகிறோம், நீங்க போங்க” என்று கடுப்படித்தான் பாரி.
சோகமாக இருவரும் வேலையில் இறங்கினார்கள்.
பாட்டி கொடுத்த பலகாரத்தை சாப்பிட்டு விட்டு, கருணா அருந்ததியை அழைத்து கொண்டு கிரௌண்டிற்கு புறப்பட்டாள்.
அருந்ததி திரும்பி திரும்பி பாரி வில்வா எங்கே இருக்கிறார்கள் என்று தேடினாள்.
“யாரை பார்க்கிற அருந்ததி?”
“அண்ணாஸ் இரண்டு பேரும் வரேன்னு சொன்னாங்களே..”
“ஹா ஹா ஹா.. அவங்க இரண்டு பேருக்கும் வேற வேலை ஏற்பாடு செஞ்சுட்டேன், நீ வா..”
“குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு பாட சொல்லுகிற உலகம்..”
“பாட சொல்லுகிற உலகம்..”
“மயிலை புடிச்சு காலை உடைச்சு ஆட சொல்லுகிற உலகம்..”
“ஆட சொல்லுகிற உலகம்..”
பாரியும் வில்வாவும் மாறி மாறி பாடும் குரல் கேட்டது.
“எங்க இருந்து க்கா பாடுறாங்க”
“சம்புக்குள்ள இருந்து தான்”
அருந்ததி குடுகுடுன்னு ஓடி எட்டி பார்த்தாள்.
“சின்ன பாப்பா உங்க அண்ணாஸ் நிலைமையை பார்த்தியாம்மா.. பார்த்தியா… உனக்கு உதவி செய்ய போய் எப்படி நிக்குறோம்னு பார்த்தியா… “ என்றான் வில்வா சிவாஜி கணேசன் பாணியில்.
“அப்ப எனக்கு ஹெல்ப் பண்ண முடியாதா?” என்றாள் சோகமாக.
“நீ தான் பாப்பா முடிஞ்சா எங்களை காப்பாத்தணும்” என்றான் பாரி.
அருந்ததிக்கு இவர்களை பார்த்து சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“சீக்கிரம் வா அருந்ததி” என்று கருணாவின் குரலில், பயம் இருந்தாலும், இவர்களது கலாட்டாவில் மனது லேசாக சிரித்துக்கொண்டே சென்றாள்.
இரண்டு வீட்டு சம்பு டேங்க் எல்லாம் சுத்தம் செய்துவிட்டு, நண்பர்கள் இருவரும் காலை நீட்டிக்கொண்டு வராண்டாவில் அமர்ந்துகொண்டு இருந்தனர்.
பாட்டி இவர்களுக்கு சுட சுட டீ கொண்டுவந்து கொடுத்தார்.
“அண்ணாஸ் இங்கே பாருங்க..” என்று கூவிக்கொண்டே சைக்கிளை தானே ஒட்டிக்கொண்டு வந்தாள் அருந்ததி.
“ஹே சூப்பர் சின்ன பாப்பா ..”
“கலக்கற பாப்பா, ஒரே நாள்ல நீயே ஓட்டிட்டியே” இருவரும் மகிழ்ச்சியாக அவளை பாராட்டினார்கள்.
“சொல்லி கொடுத்தது யாரு, எங்க கருணாக்கா இல்ல. ஒரு தடவை கூட நான் கீழே விழுகவே இல்லை தெரியுமா?”என்றாள் பெருமையாக.
“ஏன்டா பாரி நாமதான் வழக்கம் போல ஜோக்கரா… சைக்கிள் கேப்ல நம்மளை வச்சு எல்லா வேலையும் முடிச்சிட்டாங்க பார்த்தியா?”