Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 12.1

           அத்தியாயம் 12

“எனக்குள்ள இருக்க குற்றவுணர்ச்சி போகவே இந்த ஜென்மம் பத்தாது. என்னை கேட்காம எதுக்கு தாலி கட்டுனிங்க? என்னால உங்களோட வாழ முடியாது. அதுக்கான அருகதையும் எனக்கில்ல.

எல்லாரும் நினைக்கிற மாதிரி அன்னைக்கு அவன் என்னை கற்பழிக்க முயற்சி பண்ணல. கற்பழிச்சான்” என வெடித்தாள்.



Advertisement

“அதுதான் எனக்கு அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே தெரியுமே…” என அசால்ட்டாய் சொல்ல, அதிர்ந்தவள், “எல்லாம் தெரிஞ்சு என்னை எதுக்கு கல்யாணம் செய்திங்க?

இப்படிப்பட்ட பொண்ணை பார்க்கனும்னு உங்கப்பாம்மா எப்படிலாம் ஆசைப்பட்டுருப்பாங்க, என்னை மாதிரி பொண்ணை மருமகளா எப்படி ஏத்துப்பாங்க? உங்க ஆசைக்காக அவங்க எதிர்கால கனவை சிதைச்சிருக்கிங்க.

என்னால எத்தனை கஷ்டப்பட்டுருப்பிங்க? எத்தனை அவமானங்களை சந்திச்சிருப்பாங்க? அவங்களுக்கும் உங்களுக்கும் நான் செய்தது வெறும் தப்பு இல்ல… மகா துரோகம். இதை எப்படி கடந்து வர முடியும்?

Advertisement

இதெல்லாத்துக்கும் மேல இன்னொருத்தன் தொட்ட உடம்பை உங்களுக்கு கொடுக்க என்னால முடியவே முடியாது. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க” என்று வணங்கினாள் கண்ணீரோடு.

Advertisement

‘இதுக்குத்தான்டீ உன்னை இரண்டு நாளா பேச விடாம செய்தேன்’ என மனதிற்குள் நினைத்தவன்… “ஃபைனலி சொல்ல வேண்டியதை சொல்லிட்ட. இப்போ ஃப்ரீ ஆகிட்டியா?” என்றான்.

நான் சொன்னது இவனுக்கு விளங்கவில்லையா? யாரோ ஒருத்தரோட கதையை கேட்ட மாதிரி இவ்வளோ சாதாரணமா இருக்கான்? என பொன்மணி விழிக்க,

“நடந்தது கல்யாணம் இல்ல, நான் உன் பொண்டாட்டியும் இல்ல, நீ உன் வழியை பார்த்துக்கோ, என்னை விட்டுடுனு இவ்வளோ தெளிவா நீ சொல்லும் போது எனக்கு எப்படி புரியாம இருக்கும்? எல்லாம் புரிஞ்சது. வேற…” என்றான்.

Advertisement

“வேறன்னா?”

“வேறன்னா, இன்னும் எதாவது பாக்கியிருந்தா எல்லாம் ஒரே நாள்ல சொல்லி முடிச்சிடு. மனசுக்குள்ள வச்சிக்கிட்டு நல்ல தூக்கம் வராம, நிம்மதியில்லாம இருக்கிறதுக்கு, எல்லாமும் கொட்டிடறது பெட்டர்ல?” என்றான் இலகுவாகவே.

இதற்கு மேல் என்ன பேசுவதென தெரியவில்லை பொன்மணிக்கு. ஆனால் திருனேஷ்வரனின் தற்போதைய இயல்பு மட்டும் சத்தியமாய் உண்மையில்லை எனப்புரிந்தது.

பைத்தியம்… நான் நல்லா இருக்கனும்னு நினைச்சிட்டு என்னை விட்டு விலக நினைக்கற… உன்னாலதான்டீ என் நினைப்பில்லாம வாழ முடியாது. அந்த கஷ்டத்தை உனக்கு கொடுக்கக்கூடாதுனு நினைச்சேன்.

உனக்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்… என்று நினைத்தவன், “சரி கிளம்பலாமா?” என்றான்.

“இல்ல… எதாவது சாப்பிடுங்க” என்று பேரரை அழைக்க, “இந்த ரெஸ்டராண்ட்ல சாப்பிடற அளவுக்கு என்கிட்ட இப்போ பணம் இல்ல. உனக்கு மட்டும் ஆர்டர் பண்ணு”

“ஏன் இப்படி?” என்றவளுக்கு கண்கள் கலங்கியது.

“ஏன் இப்படின்னா?” என்று புருவம் உயர்த்தி கேட்டவன் தோரணையில் பயந்துதான் போனாள் பொன்மணி.

“எ… எனக்கு பசியில்ல, கிளம்பலாம்” என எழுந்தாள்.

ஏதும் சொல்லாமல் எழுந்தவன் விருட்டென வெளியேறினான். பொன்மணியின் கால்கள்தான் நகர மறுத்தது.

கற்பழிக்கப்பட்டது தெரிந்தே மணந்திருக்கிறான். எதை கண்டான் என்னிடத்தில்? என்று நினைத்தவாறு முன்பு அமர்ந்திருந்த இருக்கையிலேயே தொய்ந்து அமர்ந்துவிட்டாள்.

திருனேஷ்வரனிடமிருந்து விலகிவிட்டால், சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து வேறொரு வாழ்வில் இணைவான். அவ்வாழ்வு நிச்சயம் அவனுக்கு வசந்தம் தரும் என்று நினைத்திருந்தாள்.

ஆனால் திருனேஷ்வரனின் தற்போதைய தோரணை அப்படியில்லை என்பதை உணர்த்த வலுவிழந்து போனாள் பொன்மணி.

ஐந்து நிமிடம் கழித்து ஆர்டர் கேட்க பேரர் வர, ஒன்றும் வேண்டாம் என்று வெளியேறினாள். சற்று நேர பயணத்திற்கு பிறகு ஓர் தள்ளு வண்டி கடையில் திருனேஷ்வரன் தென்பட பார்த்தவளின் மனபாரம் ஏகத்திற்கும் அதிகமானது.

காலையில் வேலை செய்ய அமர்ந்தவன் அதிலேயே மூழ்கியிருந்தான். உண்மையில் பொன்மணியோடு உணவுண்ணவே மதியம் சாப்பிடாத போதும் ஆறு மணிக்கு தேநீர் கூட அருந்தாமல் கிளம்பியிருந்தான்.

உணவுண்ண கூட பணம் இல்லை என்ற நிலையெல்லாம் இல்லை. சிறையில் கொடுத்த சம்பளத்தை அத்தனை கவனமாய் செலவழித்து வருகிறான்.

அதோடு இன்று சுந்தரமும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருந்தார். திருனேஷ்வரன் மறுத்தான்தான். சிறையிலிருந்து வந்திருக்கிறாய், செலவிற்கு தேவைப்படும்.

என் மருமகனுக்கு உன்னால் மட்டும்தான் சிறப்பான தொழிலை அமைத்துத்தர முடியும். அதற்காக முழுமனதோடு தருகிறேன் என்றும், இதிலும் உடன்பாடு இல்லை என்றால் பணத்தை கணக்கில் வைத்துக்கொள்கிறேன். தொழிலில் உனக்கான பங்கு வரும்போது அதில் கழித்துக்கொள்கிறேன் என்றிருந்தார்.

ரூபலஷ்மியின் தயவில் தங்கியிருக்கும் நிலையை சீக்கிரம் மாற்ற வேண்டும் என்பதை யோசித்து பணத்தை வாங்கிக்கொண்டான் திருனேஷ்வரன்.

வழக்கமாக உண்ணும் கடையில் உண்ண வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் பயணம் செய்தாக வேண்டும். பசி வயிற்றை கிள்ளவே தற்போதைக்கு சிறிதேனும் இக்கடையில் உண்ணலாம் என்றுதான் இங்கு உண்டுகொண்டிருந்தான்.

அந்த கடையில் தெரிந்தவர்கள் யாரும் உண்ணமாட்டார்கள். உணவு நன்றாகவே இருக்காது என்றறிவாள் பொன்மணி. பணம் இல்லை என்பதால் இக்கடையில் உண்கிறான் என்று வேதனையாகிட, “அண்ணா ஆட்டோவை நிறுத்துங்க” என்றாள்.

“ஏம்மா?”

“இரண்டு நிமிஷம்ண்ணா, ஒரு மாதிரி இருக்கு” என்றதும் ஆட்டோ நிற்கவே, ஆட்டோவிலிருந்து இறங்கப் பார்த்தவள் கால்கள் தன்போல் பின்னுக்கு போனது.

தற்போது சென்று பணம் கொடுத்தால் கொன்றே விடுவான். பணமில்லாமல் அவன் இருப்பதை இப்படி பொது இடத்தில் அம்பலப்படுத்துவதும் சரியில்லை, ஆனால் இவ்விடம் விட்டு நகரவும் மனமில்லாமல் போக யோசனையோடு அமர்ந்திருந்தாள்.

“வெய்ட் பண்ணினா மீட்டருக்கு மேல போட்டு கொடுக்கனும்மா” என்று ஆட்டோகாரர் சொல்ல, அவருக்கு பணத்தை கொடுத்து கீழிறங்கினாள்.

திருனேஷ்வரன் பார்த்துவிட்டான் பொன்மணியை. ஆனால் கண்டுகொள்ளாதவனாய் உண்டு முடித்து பணத்தை கொடுத்துவிட்டு பைக்கில் பறந்தான்.

*** *** *** *** *** *** *** ***

திருனேஷ்வரன் வீட்டிற்கு வந்து சில நிமிடங்களிலேயே மொபைல் ஒலித்தது.  “முதல்ல இவங்களுக்கு ஒரு வழி செய்தாகனும்” என்ற கடுப்போடு மொபைலை எடுத்து பார்க்க, நினைத்தவாறே ரூபலஷ்மிதான் அழைத்திருந்தார்.

“எங்க போன? காலைலயிருந்து வீட்ல இல்லைனு சொன்னாங்க”

“வீடு பார்க்க போயிருந்தேன்”

“யாருக்கு? எதுக்கு? இங்க வசதி பத்தலையா? நாளைக்கு காலைல வரேன்” என்று இணைப்பை துண்டித்தார் ரூபலஷ்மி.

அடுத்தநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் கிளம்பியிருந்தான் திருனேஷ்வரன். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பின்னேதான் ரூபலஷ்மி தன்னை காண வருவார் என்பதால் அவர் வரும் முன்னே கிளம்பியிருந்தான்.

ரூபலஷ்மிக்கு பயந்து என்றெல்லாம் இல்லை. எத்தனை கோபம் இருந்தாலும் அவரிடம் கடுமையாக நடந்துகொள்ள மனமில்லாமல் போகவே, ரூபலஷ்மியின் கணவரை சந்தித்து பேசும் வரை ரூபலஷ்மியை தவிர்க்க முடிவெடுத்தான்.

அலுவலகம் வந்தவனுக்கு மரியாதை செய்த கதவை திறந்துவிட்டான் பணியாள். “சுந்தர் சார் அப்பாயின் பண்ணியிருக்காரா?” என்றபடி உள்ளே சென்றவன், தன் பின்னோடே வந்தவனிடம் “என்ன படிச்சிருக்க?” என்றான்.

“இப்போதான் சார் பைனல் இயர் படிச்சிட்டிருக்கேன், என் அப்பா சுந்தர் சார் வீட்ல வாட்ச்மேனா இருக்கார். ஆபீஸ் க்ளீன் பண்ண, அப்பாகிட்ட ஆள் கேட்டாராம், காலைல ஒன் ஹார் வேலைதானு அப்பா சொன்னதும் செலவுக்கு ஆகுமேனு நானே போறேனு சொல்லிட்டேன்”

மெச்சுதலாய் பார்த்தவன், “உன் பேரென்ன?” என்றான்.

“ஆதவன் சார்”

“ஓகே. நீ உன் வேலையை பாரு” என்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

பின்னே ஒன்பது மணிக்கு உண்ண சென்றான். ஒன்பதரை மணிபோல் மீண்டும் அலுவலகம் வர, ரூபலஷ்மியிடமிருந்து அழைப்பு வந்தது.

தனது ப்ராஜக்ட் பற்றி சொல்லி, “இன்னும் மூனு மாசத்துக்கு பிஸியாதான் இருப்பேன் மேடம், மீதியை நைட் சொல்றேன்” என்று இணைப்பை துண்டித்தான்.

தற்போது அவசர வேலையாக கிளம்பியாக வேண்டி இருக்கவே, இன்றிரவு வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டுமென நினைத்துக்கொண்டார் ரூபலஷ்மி.

அடுத்து பொன்மணியிடமிருந்து அழைப்பு வந்தது. இனி அழைக்கக்கூடாது என்று சொல்ல அழைப்பை ஏற்றவனிடம் “ஜாப் ஆஃபர் இருக்குனு சொன்னிங்க, ஃப்ரண்ட்ஸ்கிட்ட நேத்தே சொல்லியிருந்தேன். லொகேஷன் அனுப்புறிங்களா?” என்றாள்.

“நேத்து நீ என் பொண்டாட்டின்ற உரிமையில கேட்டுருந்தேன். இன்னைக்கு அப்படியில்லயில்ல? என் பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன், எனக்காக நீ கவலைப்படாத” என்று இணைப்பை துண்டிக்க போக,

“ரொம்ப இல்லாதவங்க, என் மேல உள்ள கோபத்தை அவங்கமேல காட்டாதிங்க, நல்ல டேலண்ட்டட், சேலரி சொன்னதும் ரொம்ப சந்தோசப்பட்டாங்க.

கேம்பஸ்லயே செலக்ட் ஆனாங்க, அவகப்பாம்மா சென்னைக்கெல்லாம் அனுப்பமாட்டேனுட்டாங்களாம்.

நான் சொன்னேனு சொல்லவும் நைட் இரண்டு பேரோட பேரண்ட்சும் என்கிட்ட பேசினாங்க. நம்ம சேலத்துக்காரர் அங்க இருக்கார், பாதுகாப்புக்கு குறையிருக்காதுனு சொல்லவும்தான் வேலைக்கு போகவே சம்மதிச்சாங்க.

அப்பாம்மா சம்மதிக்கவும் இரண்டு பேரும் நைட்டே கிளம்பி வந்துட்டாங்க, ரொம்ப ஆசையோட வந்துருக்காங்க” என்றாள் கெஞ்சலாக.

“லொகேஷன் அனுப்பறேன், ஆனா இதான் கடைசி. இனி யாருக்கும் ஆஃபர் பண்ணாத” என்று இணைப்பை துண்டித்தான்.

ஸ்வாதியும் தென்றலும் சரியாக பத்து மணிக்கு அலுவலகம் வந்தனர். கூடவே பொன்மணியும் வர, “நீயும் வேலை கேட்டு வந்துருக்கியா?” என பொன்மணியை முறைத்தான் திருனேஷ்வரன்.

“இல்ல… இவங்களுக்கு சென்னை புதுசு. ரொம்ப பயந்தாங்க, இன்னைக்கொருநாள் மட்டும் அழைச்சிட்டு வரலாம்னு வந்தேன்”

“அழைச்சிட்டு வந்தா கம்பெனிக்கு வெளிலயே விட்டுட்டு கிளம்பிடனும். ஐடி கம்பெனியிலதான வேலை செய்யிற? ஸ்கூல் பிள்ளைங்களுக்கு போல உள்ள வந்துருக்க, அவுட்” என்றான் அதீத கடுப்போடு.

“அண்ணா நீங்க இன்னும் சாப்பிடல, சுந்தர் சார் வர சொன்னார்” என்றான் ஆதவன்.

“நீ இன்னும் கிளம்பலையா? காலேஜ் போகனும்ல?”

“நீங்க ஒர்க் பண்றதை பார்த்த பின்ன இங்கயிருந்து போக மனசே வரலண்ணா. அதான் இன்னைக்கு ஒருநாள் லீவ் போட்டுட்டேன்”

“இனி இப்படி பண்ணக்கூடாது, ஸ்டடீஸ் ரொம்ப முக்கியம்” என்றவன் பொன்மணி தலைகுனிந்தவாறு செல்வதை சில நொடி பார்த்து பிறகு சாப்பிட கிளம்பினான்.

இதோ இரண்டு வாரம் முடிந்து விட்டது. ரூபலஷ்மிக்கும் தன்னை பார்க்கும் வாய்ப்பை அளிக்கவில்லை, பொன்மணியிடமும் பேசவில்லை. பொன்மணிக்கும் திருனேஷ்வரனுக்கு அழைத்து பேச தைரியம் இல்லாமல் போக, ஸ்வாதியிடமும் தென்றலிடமும் அவனின் நலனை விசாரித்துக்கொள்வாள்.

அவர்களிடமும் நேரடியாக விசாரிக்கமாட்டாள். வேலை புரிகிறதா? நல்லா கைட் பண்றாங்களா? கடுகடுனு இருக்காங்களா? என்று கேட்பாள்.

“சூப்பரா சொல்லி தருவார் பொன்மணி, சார்தான் ரெஸ்ட்டே எடுக்குறதில்ல, எப்படித்தான் நான்ஸ்டாப்பா லேப் பார்க்குறாரோ?” என்று பெருமையாய் சொல்வார்கள்.

அடுத்து இரண்டு நாள் கழித்து, “அங்க செக்யூரா ஃபீல் பண்றிங்களா?” என விசாரித்தாள்.

“திரு சார் செம்ம ஜென்யூன் பொன்மணி, ஃபர்ஸ்ட் டே ஒர்க் முடிஞ்சதும் எப்படி கேர் எடுத்துக்கிட்டார் தெரியுமா? ஆதவன்னு ஒரு பையன் வேலை செய்யுறான். எலக்ட்ரிக் ட்ரைன் பிடிச்சு எப்படி இங்க வரனும்? அதுல போனா ட்ராவலிங் சார்ஜ் கம்மியாகும்னு சொன்னதோட, தைரியமா இருக்கனும்னு சொன்னார் பொன்மணி.

சார் சொன்னதுக்கப்புறம் தைரியம் வந்து, இப்போ எலக்ட்ரிக் ட்ரைன்ல போறதையே என்ஜாய் பண்ண ஆரம்பிச்சிட்டோம்” என்றனர்.

இதற்கு மேல் திருனேஷ்வரனைப் பற்றி எப்படி விசாரிப்பதென்றும் தெரியவில்லை. ஆனால் இவர்கள் சொல்லும் விபரங்கள் எல்லாம் போதவேயில்லை பொன்மணிக்கு.

தள்ளு வண்டி கடையில் தினமும் உண்டால் உடம்பு கெட்டுவிடும். தோழிகள் சொல்வதை பார்த்தால் இரவில் வீட்டிற்கு வந்தும் வேலை செய்வார் போலவே.

துணியெல்லாம் யார் துவைத்துக் கொடுப்பார்கள்? உண்ணவே கணக்கு செய்து செலவு செய்யும் நிலையில் வேலைக்கு ஆள் வைத்தெல்லாம் நிச்சயம் செய்யமாட்டார் என்று திருனேஷ்வரனின் நினைப்பு பெரிதாய் ஆட்டிப்படைத்தது.

தன்னை திருமணம் செய்யாமல் இருந்தாலாவது பெற்றோர் சீக்கிரமாக திருமணம் செய்து வைக்க யோசித்திருப்பார்கள். திருனேஷ்வரனின் இந்த தனிமை நிலை என்றைக்கு மாறுமோ என்று தவிக்கலானாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!