Skip to content
Post Views: 2,552
அத்தியாயம் 25
காலை ஆறு மணிக்கு ட்ரெயினில் சலசலப்பு தொடங்கியது. ராஜி மெதுவாக எழுந்து சென்று பல் துலக்கி, முகம் கழுவி வந்தார். வர்ஷித்தாவும் ஹர்ஷித்தாவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.
Advertisement
கருணா,”குட் மார்னிங் ஆன்ட்டி” என்றாள்.
காலையிலே முகம் கழுவி, தலை வாரி பிரஷ்ஷாக இருந்தாள்.
Advertisement
Advertisement
“என்ன கருணா அதுக்குள்ள ரெடி ஆகிட்ட? எப்ப எழுந்த?”
“நான் காலையில நாலு மணிக்கே முழிச்சிட்டேன் ஆன்ட்டி. தினமும் சீக்கிரம் எழுந்து படிக்கிற பழக்கத்துல்ல முழிப்பு வந்துடுச்சு”
Advertisement
“எங்க வீட்ல மூனு பேரும் நான் மூஞ்சில தண்ணீர் ஊத்தி எழுப்பிற வரைக்கும் எழுந்திரிக்கவே மாட்டாங்க.. ஆனா அவங்க பப்பா இருக்கிற ஒரு மாசம் மட்டும் எப்படியோ ஆறு மணிக்கு டாண்னு எழுந்திருச்சுருவாங்க”
கருணா மென்மையாக சிரித்துக்கொண்டாள்.
அப்பொழுது ட்ரெயின் ஒரு ஸ்டேஷனில் நிற்கவும், “இரு கருணா, இந்த போபால் ஸ்டேஷன்ல காலை டிபன் வாங்கிட்டு வர்றேன்” என்று கூறி அவள் பதிலுக்கு காத்திராமல் விரைந்து கீழே இறங்கி விட்டார்.
கருணாவும் அவர் பின்னே சென்றாள்.
“என்ன ஆன்ட்டி இப்படி இறங்குறீங்க.. இது எல்லாம் தப்பு..” என்று ஆரம்பித்தாள்.
ராஜி திரும்பி இடுப்பில் கை வைத்து நின்றுவிட்டார்.
கருணா ஒரு நிமிடம் திகைத்து பின் “என்ன ஆன்ட்டி?” என்றாள் கொஞ்சம் சுருதி இறக்கி.
“இங்க பாரு, நான் உன்னை விட பெரியவ, இந்த சென்னை எக்ஸ்பிரஸ்ல பல வருஷமா வந்து போயிட்டு இருக்கேன். எந்த ஸ்டேஷன்ல எவ்வளவு நேரம் வண்டி நிக்கும்னு எனக்கு தெரியும், புரியுதா?
கருணா மண்டையை உருட்டவும்,
“யார்கிட்ட?” என்று கூறிக்கொண்டே ராஜி விரைந்து சென்று அங்கே இருந்த ஒரு தள்ளுவண்டி கடையின் அருகே நின்றார்.
“நமஸ்தே கௌரி தீதி, கைசே ஹூன்?” என்று அவருடன் பேச தொடங்கினார். அந்த கௌரி தீதியும் ராஜியை பார்த்ததும் முகமலர்ந்து அவரை ஆரத்தழுவிக்கொண்டார்.
அதுவே கூறியது அவர்களுக்குள் பல வருட பழக்கம் என்று.
பேசிக்கொண்டே அவரும் இவர்களுக்கான டிபனை பார்ஸல் கட்டினார். மின்னல் வேகத்தில் அவரது கை வேலை செய்தது.
“ஏ கோன்?” என்று கருணாவை காட்டி கேட்கவும்,
“மேரா தோஸ்த்..” என்று கூறி அவளுக்கும் சேர்த்து கொடுக்க சொன்னார்.
இரண்டு நிமிடங்களில் பார்ஸல் வாங்கிக்கொண்டு காசையும் கொடுத்தார்.
பின் ராஜி கொண்டு வந்திருந்த ஒரு சிறு பையை அவரிடம் கொடுத்தார்.
அதில் அழகிய வேலைபாடுகளுடன் ஒரு உல்லன் ஷால் இருந்தது. அதனுடன் ஒரு குழந்தைக்கான அழகான ஸ்வெட்டரும் இருந்தது. கௌரி தீதியின் மகளுக்கு ஒரு வாரம் முன்பு தான் குழந்தை பிறந்திருபதாக கூறினார்.
எனக்கு தெரியும், நான் போன தடவ பார்த்தப்ப அவளுக்கு மூன்று மாசம்ன்னு சொன்னீங்க இல்ல, அதான் நான் குழந்தைக்கு கொண்டு வந்தேன் என்றார் ராஜி ஆசையாக.
அவரும் மிகவும் மகிழ்ச்சையாக பெற்றுக்கொண்டார்.
சிறிது நேரம் பேசிவிட்டு, மீண்டும் இருவரும் ஆரத் தழுவி விடை பெற்றுக்கொண்டார்கள்.
திரும்ப இவர்கள் வந்து அமரவும் ட்ரெயின் புறப்படவும் சரியாக இருந்தது.
கருணாவிற்கு ராஜியின் கேரக்டர் சுவாரசியமாக இருந்தது.
“அவங்களை எப்படி தெரியும்? சரியா ஒவ்வொரு முறையும் ஒரே ஆள்கிட்ட வாங்குறது எல்லாம் ட்ரெயின் ஜர்னியல சாத்தியமா?”
“மனமிருந்தால் மார்க்கமுண்டு… இந்த உலகத்தில் சாத்தியம் இல்லைன்னு எதுவுமே இல்லை கருணா”
“சரிதான்..” என்று கருணா அதை ஏற்றுக்கொண்டாள்.
“நான் ஒரு தடவை, எங்க பாட்டிக்கு உடம்பு சரி இல்லைன்னு ஊருக்கு போயிட்டு இருந்தேன். அப்ப ஹர்ஷ் வர்ஷ் ரெண்டு பேரும் சின்ன பசங்க, மூனரை வயசு தான். தர்ஷ் என் வயத்துல ஆறு மாசம். அன்னிக்கு ட்ரெயின்ல என்னோட பர்ஸ் காணாம போய்டுச்சு. எனக்கும் நல்ல பசி, பசங்களுக்கும் நல்ல பசி. அப்ப, இந்த அம்மா கூடையில் டிபன் கொண்டுவந்து வித்துட்டு இருந்தாங்க. நான் என் கையில் இருந்த வாட்சை வச்சிக்கிட்டு டிபன் கொடுங்கன்னு சொல்லி கேட்டேன்.
பர்ஸ் காணும்னு சொன்னேன்.
என் தங்கை மாதிரி இருக்க.. வாட்ச் எல்லாம் வேண்டாம், உள்ளே வை.. கடவுள் அருளால் திரும்ப சந்திக்க சந்தர்ப்பம் கிடைச்சா அப்ப காசு கொடும்மான்னு சொல்லி, எங்க மூனு பேருக்கும் டிபன் கொடுத்து, அடுத்த இரண்டு வேலைக்கும் சேர்த்தே கொடுத்து, அதுவும் இல்லாமல் எனக்கு செலவுக்கு அம்பது ரூபாய் காசும் கொடுத்தாங்க”, இதை சொல்லும்பொழுது அவரது குரல் மிகவும் நெகிழ்ந்து இருந்தது.
“அம்பது ரூபாய் அப்ப பெரிய பணம், அதுவும் அவங்க ஒரு நாள் வருமானமே அவ்வளவா தான் இருந்திருக்கும். அதுல இருந்து இந்த ட்ரெயின்ல போற ஒவ்வொரு தடவையும், போபால் ஸ்டேஷன்ல இவங்களை பார்த்து பேசிட்டு தான் போவேன்.
கருணாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த கௌரி அம்மாவின் மேலே தனி மதிப்பே உருவாகியது.
“ஆமா என்ன டிபன் வாங்குனீங்க ஆன்ட்டி ? நான் வேடிக்கை பார்த்துட்டே அதை கவனிக்கலை”
“இதுவா, இங்கே பேமஸ்.. போகா ஜிலேபி.. சுட சுட ஜிலேபியும், அவலும். ஜிலேபி லைட்டா புளிப்பா இனிப்பா மொறுமொறுன்னு செமயா இருக்கும், சாப்பிட்டு பாரு. அதை சாப்பிட்டுட்டு இந்த அவலை எடுத்து வாயில் போட்டா.. அட அட அட…”
ராஜி சொல்லுவதை கேட்டாலே வாயில் எச்சி ஊறியது கருணாவிற்கு.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வர்ஷித்தாவும் ஹர்ஷித்தாவும் வந்து இணைந்து கொண்டார்கள்.
பின் நால்வரும் கௌரி தீதி கொடுத்த காலை உணவை ரசித்து ருசித்து உண்டார்கள்.
நிஜமாலுமே அமிர்தமாக இருந்தது அந்த உணவு.
“உண்மையான நட்புக்கு, தூரமோ நேரமோ தடை இல்லை தெரியுமா?” என்றார் ராஜி.
“சரியா சொன்னீங்க ஆன்ட்டி, ஆனா எங்க வீட்ல ஒட்டி பிறந்த ரெட்டையர்கள் மாதிரி தான் இருப்பாங்க பாரிவேந்தனும் அண்ணாவும். ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ், ஒரே வேலைன்னு அவங்க பண்ண அட்டூழியம் இருக்கே? அப்பப்பா”
“எனக்கு கூட ஆச்சர்யமா இருந்தது கருணா. இந்த ஹர்ஷ் வர்ஷ் ரெண்டும் ட்வின்ஸ் தானே, ஆனா எப்படி சண்டை போட்டுப்பாங்க தெரியுமா? பாருவும் வில்லுவும் சண்டையே போட்டுக்கிட்டது இல்லையாமே? சின்ன வயசுல கூடவா?”
“அது என்னமோ உண்மை தான் ஆன்ட்டி.. அவங்க சண்டையே போட்டுக்க மாட்டாங்க.. எனக்கு கூட பொறாமையா இருக்கும் சில சமயம்.. எப்பவுமே ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா தான் இருப்பாங்க, எங்கேயும் விட்டு கொடுக்கவே மாட்டாங்க”
“நீங்க ரெண்டு பேரும் டீச்சர்ஸ்ன்னு சொல்றீங்க? என்ன சப்ஜெக்ட்?” என்றாள் கருணா சகோதரிகளிடம்.
“நான் மேத்ஸ், இவ கெமிஸ்ட்ரி”
“ஓகே..”
கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார்கள் இருவரும். அதிகம் பேசவில்லை.
“நீங்க இவ்வளவு பேசுறீங்க.. உங்க பொண்ணுங்க அவ்வளவா பேசலையே? என்றாள் ராஜியிடம்.
“அவங்க அவங்க பப்பா மாதிரி.. அளவா தான் பேசுவாங்க. தர்ஷ் என்ன மாதிரி லொடலொடா”
“அது என்ன ஹர்ஷ் தர்ஷ் வர்ஷ்.. எப்படி செலக்ட் பண்ணுனீங்க.. ஹிந்தி ஈர்புனாலயா?”
பெண்கள் இருவரும் இதை கேட்டு சிரிக்கவும்,
“சும்மா சிரிக்காதீங்க போங்கடி..” என்றார் ராஜி மகள்களை கடுப்பாக.
“அப்ப ஏதோ விஷயம் இருக்கும் போலயே, சொல்லுங்க ஆன்ட்டி” என்றாள் கருணா.
“சொன்னா சிரிக்க கூடாது” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.
“எனக்கு என் ஹாஸ்பேண்ட் மேல ரொம்ப லவ்ஸ்.. ரொம்பன்னா ரொம்ப ரொம்ப ரொம்ப”
சொல்லும்போதே அவர் முகம் சிவந்து விகசித்தது.
“அப்பல்லாம் அவர் ஷ் ஷ் ஷ்ன்னு என்னை கூப்பிடுவாரு.. என் பெயர் ராஜேஷ்வரி இல்லையா.. அதை சுருக்கி ஷ் ஷ்ன்னு கூப்பிடுவாங்க”
“நல்லா சுருக்கினாரு மேஜர் போங்க” என்றாள் கருணா சிரித்துக்கொண்டே.
“அதனால் தான் ஷ் ஷ்ன்னு எப்பவுமே அவரும் நானும் கூப்பிடணும்னு தேடி தேடி பெயர் வச்சேன்.. ஹர்ஷித்தா, வர்ஷித்தா, தர்ஷன்”
“இதுல சிரிக்க என்ன இருக்கு?”
“தர்ஷ் ஸ்கூல் போற வரைக்கும் இப்படி தான் நான் நினைச்சிட்டு இருந்தேன்”
“அப்புறம் என்ன ஆச்சு?”
“அப்புறம் அவர் ஷ் ஷ்ன்னு கூப்பிட்றது குறைந்து போச்சா?, நான் சோகமா அவர்கிட்ட கேட்டேன். ஏங்க என்னை செல்லமா ஷ் ஷ்ன்னு கூப்பிடறதே இல்லைன்னு?”
“அதுக்கு அவரு சொன்னாரு… அவரு சொன்னாரு..”
“சீக்கிரமா சொல்லுங்க ஆன்ட்டி சஸ்பென்ஸ் தாங்க முடியலை”
“நீ முன்ன எல்லாம் கத்தி கத்தி பேசுவ.. ஸ்பீக்கர் முழுங்கின மாதிரி.. அதான் மெதுவா பேச சொல்லி ஷ் ஷ் ன்னு சொல்லுவேன். உடனே நீயும் பக்கத்துல வந்து மெதுவா சொல்லுவ, இப்ப நீயே கொஞ்சம் பொறுப்பா ஆகிட்ட. கத்தி பேசுறது இல்லையே ராஜி” அப்படின்னு சொல்லி என் மனசை சுக்கு நூறா உடைச்சிட்டாரு.
வெடித்து சிரித்துவிட்டாள் கருணா. கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது.
“சத்தியமா சொல்றேன் ஆன்ட்டி, இப்படி ஒரு பிளாஷ்பேக் இது வரை நான் கேட்டதே இல்லை”
“நீ வேற கருணா.. அவரு ஷ்.. ஷ்..ன்னு சொன்னா, எனக்கு அப்படி ஒரு வெட்கம் வந்திடும், ஆசையா அவர் பக்கத்துல போய் நிப்பேன் தெரியுமா? அவர் சொன்னதும் எனக்கு ரொம்ப வருத்தமா போய்டுச்சு”
“நீங்க ரொம்ப ஸ்வீட்.. “
“மேஜரும் அப்படி தான் சொல்லுவாரு”
இப்படியே பேச்சும் சிரிப்புமாக அந்த பயணம் தித்திப்பாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை.
ஒரு வழியாக நால்வரும் சென்னை ரெயில் நிலையம் வந்து இறங்கினார்கள்.
————————–
error: Content is protected !!