Skip to content
Post Views: 2,736
அத்தியாயம் 7.2
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
Advertisement
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
Advertisement
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
Advertisement
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”
Advertisement
என்ற பாரதியாரின் கவிதையை கூறி தன் பேச்சை தொடங்கினாள் கருணாம்பிகை. அடுத்த இருபது நிமிடங்கள் அங்கே கருணாம்பிகையின் குரலை தவிர ஒரு சின்ன சத்தம் கூட கேட்கவில்லை.
இவர்கள் பள்ளியின் மைதானத்தில் தான் அன்றைய நிகழ்ச்சி ஏற்படாகி இருந்தது.
ஐந்து நிமிடங்கள் தான் உனக்கு நேரம், உன் நேரம் முடிந்ததும் மணி அடிப்போம். மணி அடித்து அடுத்த ஒரு நிமிடத்தில் உன் உரையை முடித்து கொள்ள வேண்டும் என்று அவள் மிஸ் கூறி இருந்தார்.
கருணாம்பிகையின் பேச்சையை கேட்டு அவர் நேரத்தையும் மறந்திருந்தார். மணி அடிக்க வேண்டும் என்பதையும் மறந்திருந்தார். மிக சில பேருக்கே இப்படி ஒரு பேச்சாற்றல் இருக்கும்.
மடை திறந்த வெள்ளத்தை போல இருந்தது அவள் பேச்சு. அங்கே குழுமி இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று அனைவரும் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்கள் போல கண்ணை எடுக்காமல் மேடையை பார்த்து கொண்டிருந்தனர்.
இரண்டு தாத்தாக்கள் தயார் செய்த உரையை ஒரு முறை மட்டுமே கவனமாக படித்துக்கொண்டு வந்திருந்தாள். அதை அத்தனை நேர்த்தியாக தெளிவாக கம்பீரமாக பேசினாள். வேலு நாச்சியார் பற்றி பேசியதோடு நில்லாமல், பெண்களின் முன்னேற்றம், பெண்களின் சாதனை என்று பல விஷயங்களையும் சேர்த்து மிகவும் சிறப்பாக பேசினாள்.
அவள் பேச்சை முடிக்கவும் அடுத்த ஒரு நிமிடம் கரகோஷம் நிற்காமல் ஒலித்தது.
அன்றைய சிறப்பு விருந்தினர், “இப்படி ஒரு பேச்சை நான் பேசியதும் இல்லை.. கேட்டதும் இல்லை. ஒரு பன்னிரண்டு வயது சிறுமி பேச்சிற்கு இப்படி ஒரு கரகோஷம் கிடைப்பது என்பதும் மிகவும் அரிதே. என்னை சிறப்பு உரை ஆற்றுவதற்காக தான் அழைத்திருந்தார்கள். ஆனால் இந்த பேச்சை விட சிறப்பான பேச்சு இருக்க முடியுமான்னு தெரியலை“ என்று அவர் கருணாம்பிகையை மிகவும் பாராட்டினார்.
பாரிக்கும் வில்வாவிற்கும் கூட மிகவும் பெருமையாக இருந்தது. “சூப்பரா பேசுனா இல்ல பாரி” என்றான் வில்வா.
“ஆமாடா.. நான் எப்பவும் சொல்ற மாதிரி அவ ஒரு பெரிய தலைவரா வருவாடா..” என்றான் பாரியும் உள்ளார்ந்து.
இரண்டு வீட்டு பெரியவர்களுக்கும் மனதெல்லாம் அத்தனை மகிழ்ச்சி.
விழா முடிந்து அனைவரும் வீட்டிற்கு மகிழ்ச்சியாக புறப்பட்டனர். கருணா இரண்டு தாத்தாக்களும் நன்றி கூறிக்கொண்டே வந்தாள்.
அப்பொழுது அவர்கள் ஸ்கூலில் வேலை செய்யும் ஆயாம்மா வந்து “கண்ணு, சூப்பரா பேசுன கண்ணு.. எப்பவுமே நிறைய பேர் பேசுறது எனக்கு புரியாது கண்ணு.. ஆனா நீ புரியற மாதிரி பேசுன.. ஒன்னு சொன்னியே கண்ணு.. ஏரோபிளான் ஓட்றவங்க மட்டும் இல்ல.. எங்க இஸ்கூல் ஆயாம்மா கூட சாதனை பொண்ணுதான் அப்படின்னு.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு கண்ணு.. மெய்யாலுமே நான் சாதனை பொண்ணா?” என்றார் கருணாம்பிகையிடம்.
“நிச்சயம் ஆன்ட்டி.. நீங்க ஒரு நாள் வரலன்னாலும் இங்க எல்லாரும் உங்களை தேடுவாங்க தெரியுமா? இந்த தோட்டம், இந்த வராண்டா, எங்க கிளாஸ் ரூம், எல்லாம் சுத்தமா இருக்கிறதே உங்களாலே தானே. நீங்க இங்க படிக்கிற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சுத்தமான சூழலை உருவாக்கி கொடுக்கிறீங்க ஆன்ட்டி. உங்களை பத்தி சொல்லணும்னா இன்னும் சொல்லிட்டே போலாம்”
“டாங்க்ஸ் கண்ணு “ என்று அவர் வாயெல்லாம் பல்லாக அங்கிருந்து சென்றார்.
——————-
error: Content is protected !!