Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 24 1

நீங்காத  நினைவு நீ

அத்தியாயம் 24



Advertisement

(Pre Final )

Advertisement

   யோகா  சொன்ன விசயத்தை கேட்டு  அனைவரும்  அதிர்ச்சியாகி நிற்க..

Advertisement

முருகேஷன்  யோகாவிடம் வந்து “யாருடி  போனுல உனக்கு சொன்னது? மஞ்சு உயிரோட இருக்கான்னு”..

Advertisement

“நளினி தான் போனுல சொன்னாங்க, மஞ்சு உயிரோட இருக்க,  மஞ்சு போட்டோவுக்கு போட்ட மாலையை எடுன்னு போன் போட்டாங்க”..

“அப்பறம் மஞ்சுவுக்கு இரண்டு  குழந்தையாம் ஒன்னு நம்மபார்கவி,, இன்னொன்னு ஒரு பையனாம் பேரு ஹரியாம்”.. என்று கூற..

“நீ சொல்லுறது எனக்கும் புரியல” என்ற  முருகேஷன்… யோசித்து விட்டு…

“மஞ்சு  எப்படி உயிரோட இருப்பா? அவ செத்துட்டான்னு  அப்பா சொன்னாரே”..

“ஆமா உங்க அப்பா சொன்னாரு அவ செத்துட்டான்னு.  நீங்க மஞ்சு செத்தத பாத்தீங்களா, இல்ல  செத்த உடம்பையாவது  பாத்தீங்களா அதுவும் இல்ல.. நாமா இலங்கைக்கு போலாமுன்னு சொன்னதுக்கு, உங்க அப்பா இலங்கையில  இப்போ சண்டை  நடக்குது போக முடியாதுன்னு  சொல்லிட்டார்.

எனக்கு அப்பவே அவர்  மேல சந்தேகம், இவர் பொய்  சொல்லுற  மாதிரி  இருக்கேன்னு. அப்பறம் அது எப்படி  பெத்த  பொண்ணு செத்து  பொயிட்டான்னு சொல்லு வாருன்னு  நெனச்சு இருந்தேன்”  என்றார் யோகா..

ஆண்டவர் கனியை பார்த்த முருகேஷன்  “பார்கவிக்கு போன் போடு” என்க..

 ஆண்டவர்கனி பார்கவியை போனில் அழைத்து யோகாவிடம் போனை  தர..

பார்கவி  யோகாவிடம்  ஸ்ரீஜெயமும், மஞ்சுவும் காலேஜ்சில்  விரும்பியது முதல். அவர்  துபாய் சென்றவிட்டதையும். மஞ்சுவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததும். மஞ்சு அப்பாவுக்கு பயந்து  குழந்தையுடன் சென்றது முதல்,  இன்று காலை வரைக்கும் நடந்ததை சொல்ல.. போன் சத்தம்  ஸ்பீக்கரில்   இருந்ததால் அனைவரும் பார்கவி சொல்லியதை கேட்டு கொண்டிருந்தனர்..

ராமசுப்புவிற்கும்,  முருகேஷனுக்கும்  அன்று  அன்பு திருமண பஞ்சாயத்தில் ஆதிநாரயணன்  பார்கவியின் கையை பிடித்து ஸ்ரீஜெயத்திடம் உங்க  பொண்ணு மாதிரி பார்த்துக்கோங்க  என்று சொன்னது  இன்று ஞாபகம் வர. அப்போ ஆதிநாரயணனுக்கு எல்லா விசயமும் தெரிந்திருக்கும். அப்போ ஏன் நம்ம கிட்ட சொல்லல்ல..

உடனே ஆதிநாரயணனுக்கு போன் போட.. அவரும் மஞ்சுவின் தந்தை இலங்கையில் வந்து  நடந்து  கொண்டதை  சொன்னவர். எனக்கும் மஞ்சுவுக்கு கல்யாணம் ஆகல. “உங்க அப்பா தான் பொய் சொன்னார். உங்க அப்பாவை பார்த்து பயந்து  மஞ்சு பிறந்த குழந்தையை தூக்கிட்டு போயிட்ட”..

மஞ்சுவை  நினைத்து வருந்திய சகோதரர்கள் தங்கை உயிரோடு இருப்பதை எண்ணி சந்தோஷ பட்டனர்.

உடனே  மஞ்சுவை பார்க்க கிளம்பினார்கள்..

ஆண்டவர்கனியிடம்  “இங்கே  எல்லாத்தையும் பார்த்துக்கோ கனி  நாங்க இலங்கை போறோம்”  என்று பெரியவர்கள் கிளம்ப…

பெரியசாமி  “கல்யாணம் வேலை இருக்கு  என்ன பண்ண போறீங்க” என்று    அனைவரையும் பார்த்து முறைக்க..

“நான் என் சில்வண்டை கண்டிப்பா பார்க்கனும்”.. என்று ஒத்த காலில் யோகா  நிற்க..

“நீயெல்லாம் ஒரு அம்மாவா கல்யாண வேலை ஆயிரம் இருக்கு, உனக்கு என் கல்யாணத்தை விட, உன் நாத்தனார்  ரொம்ப முக்கியமா”…

 என்று பெரியசாமி  யோகாவை பார்த்து கத்த..

“ஆமாம்டா.. எனக்கு உன் கல்யாணத்தை விட என் நாத்தனார் மஞ்சு தான் இப்போ முக்கியம், என்ன பண்ணுவ நீ”…

 பெரியசாமி தாயை திட்ட முடியாமல் முறைத்து நிற்க..

“சித்தி  அவன் வருத்த படுவான், அப்படி பேசாதீங்க” என்றான் கனி..

“பின்ன என்ன கனி  இவ்வளவு பேர் இருக்கீங்க கல்யாண வேலையை பார்க்க  மாட்டீங்களா, இவன் பெரிய இவன் மாதிரி பேசுறான், முறைக்குறான்”

“சரி சித்தி யார், யார் போறீங்க சொல்லுங்க டிக்கெட் போட்டு தர்ரேன்” என்றான்  கனி..

யோகா, முருகேஷன், ராமசுப்பு என்று மூவரும் கிளம்புவ தாக சொல்ல.. லட்சுமி வீட்டை பார்த்துகொள்வதாக சொல்லி விட்டார்..

ஆண்டவர்கனிக்கு   இவர்கள்  மூவரும் விமானத்தில் தனியாக  சென்று பழக்கம் இல்லையே, எப்படி தனியே அனுப்புவது.. என யோசித்தவன், அவனுக்கும்  ஏகாபட்ட வேலையிருக்க, பெரியசாமியையும்  அனுப்ப முடியாது  கல்யாணம் பத்திரிக்கை அடித்து ஆயிற்று,, கல்யாண  மாப்பிள்ளை அவன்.. என்ன செய்ய என்று யோசித்து நிற்க.. “நான்  கூட போறேன்”  என்று திவ்யா அவன் முன் வந்து  நின்றாள்.

 அனைவரும்  அவள் மாசமாக இருப்பதால்  வேண்டாம் என்க.

ஆண்டவர் கனி வேற யாரை அனுப்புவது  என்று யோசிக்க. “நான் பத்திரமா போயிட்டு வந்திருவேன்”  என்று கனியின் கைபிடித்துக்கொண்டாள்.

அவனுக்கும் வேற வழியில்லை. என்று உணர்ந்தவன். திவ்யாவின் வயிற்றை தடவியவன்.

“பத்திரமா  போயிட்டு வா’..  என்றவன் டிக்கெட் பார்த்து அனைவருக்கும்  போட்டவன். நாளைக்கு காலையில் கிளம்புங்க. இங்கேயிருந்து சென்னை. அப்பறம் சென்னையில இருந்து இலங்கை என்று சொல்லி சென்றான்..

மஞ்சு வீட்டில்  அனைவரும் தூங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்க.. வேகமாக சமையலை முடித்தாள் மஞ்சு..

சமையல் முடித்து அனைத்தையும் டைனிங் டேபளில் எடுத்து வைத்துக்கொண்டு இருக்க..

முதலில் மகன்  எழுந்து வர. பின் பார்கவியும், அன்பு எழுந்து வெளியில் வர. “மாம்ஸ் இன்னும் எலுந்துக்கலையா” என்றான் அன்பு..

“நீங்க  சாப்பிடுங்க மாப்பிள்ளை, நான் ஸ்ரீப்பாவை கூட்டிட்டு வர்ரேன்”  என்றார்..

“நீங்க மாம்ஸ்சை  கூட்டிட்டு வாங்க அத்தை, எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்”  என்க..

“சரி மாப்பிள்ளை” என்று ஸ்ரீஜெயத்தை அழைக்க சென்றார் மஞ்சு..

நன்றாக தனது கட்டிலில் தூங்கி கொண்டிருந்த ஸ்ரீஜெயத்தை  ஒரு நிமிடம் பார்த்து  ரசித்தவள்.. “ஸ்ரீ” என்று எலுப்ப, மஞ்சுவை திரும்பி பார்த்தவர் “ரொம்ப நேரம் ஆச்சா பாப்பூ”..

“இல்ல ஸ்ரீ  சாப்பிட  வாங்க நேரம்  ஆச்சு”…

“இதோ மா குளிச்சுட்டு வர்றேன்”. என்றவர் தனது பேக்கில் இருந்த உடையை எடுத்துக்கொண்டு  குளியல் அறைக்கு செல்ல..

மஞ்சு வெளியே  வந்து  “நீங்க சாப்பிடுங்க” என்றார்..

அனைவரும் ஸ்ரீஜெயம் வரட்டும்  என்று காத்திருக்க..

குளித்து முடித்து வெளியே வந்தவர்..

 தனக்காக அனைவரும் சாப்பிடாமல் காத்திருப்பதை பார்த்தவர்.. “நீங்க சாப்பிட வேண்டியது தானே”  என்று சொல்லிக்கொண்டே அமர..

“ஏன் மாம்ஸ் நாங்க   எல்லோரும் சாப்பிட்டோமுன்னா,  நீ  அத்தை கூட  தனியா சாப்பிடலாமுன்னு நெனச்சீயா” என்று கேட்டுவிட்டு அன்பு சிரிக்க..

அன்புவை  அவர்  துடைத்த துண்டால் அடித்தவர்..  “ஏன்டா” என்று சிரிக்க.. “அப்போ நான் சொன்னது தான் சரி”  என்று மீண்டும் சிரித்தான் அன்பு..

அனைவரும் சிரிக்க “சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு மஞ்சு பரிமாற.. “நீயும் சாப்பிடு பாப்பூ” என்றார் ஸ்ரீஜெயம்..

 “முதலில்  பிள்ளைங்க  சாப்பிடட்டும், அப்பறம் சாப்பிடுறேன்  என்று மஞ்சு உணவை அனைவருக்கும்   பரிமாற.

அனைவரும் மஞ்சு சமைத்ததை ஆகா ஓகோ என்று பாராட்ட..ஸ்ரீஜெயம் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே மெதுவாக  உண்டு கொண்டிருந்தார்..

“அத்தை சூப்பரா இருக்கு எல்லா டிஸ்சும்” என்று பாராட்ட..

ஹரியும் மஞ்சுவிடம் “இன்னைக்கு எல்லாமே  சூப்பரா  இருக்கமா” என்றான்..

அனைவரும் சாப்பிட்டு முடிக்க. ஸ்ரீஜெயம்  மட்டும் மெதுவாக சாப்பிட.. ஹரி  உண்டு  முடித்தவன். “அன்பு பக்கத்துல ஒரு பார்க் இருக்கு  ஒரு வாக்  போலமா” என்க..

“உம் போலாம் ஹரி” என்றவன். “பாரு  நீயும் வா போலாம்” என்க..

“நான் வரல எனக்கு டாயடா இருக்கு”.. என்க.

“ஏய் வா இட்லி ஐஸ் கீரிம் வாங்கி தர்ரேன்”  என்றான்..

“அப்போ சரி வர்றேன்” என்று மூன்று பேரும்  காரில் கிளம்பியதும்.

“நீயும் சாப்பிடு மஞ்சு”..என்று அவளை பக்கத்தில் அமர்த்திக்கொள்ள..

“சாப்பாடு நல்லா இல்லையா  ஸ்ரீப்பா, நான் சமைத்தது உங்களுக்கு பிடிக்கலயா” என்றவள் முகத்தை பாவம் போல் வைத்துக்கொண்டு  கேட்க..

மஞ்சுவின்  கையை பிடித்து அதில் முத்தமிட்டவர், “இப்படி தான் சொல்லனுமுன்னு வைட் பண்ணிட்டு இருந்தேன்”  என்றவர் மறுபடியும் சமைத்த கைகலுக்கு முத்தம் மிட்டு, “எனக்காக சமச்ச மாதிரி இருக்கு” என்றார்..

“ஆமா பாப்பூ ஒன்ன மறந்துட்ட போல” என்க..

“என்ன ஸ்ரீ ப்பா” என்று முளிக்க..

“உள்ளே போய் எடுத்துட்டு வா” என்றார் ஸ்ரீஜெயம்..

என்ன என்பது போல் யோசித்தவர்,, தலையில் கைவைத்து “ஐய்யோ  மறந்துட்டேன்”  என்றவள், ஸ்ரீஜெயத்துக்கு பிடித்த பால் கோவாவை செய்து வைத்தவள் அதை கொடுக்க மறந்து இருக்க..

கிச்சன் சென்று எடுத்து வந்தவள்..

“உங்களுக்கு எப்படி தெரியும் ஸ்ரீ”..

“அதுதான்  வீடே மணக்குதே பால் கோவா வாசம்” என்றார்.. அவளை பக்கத்தில் அமர வைத்து அவளுக்கு உணவு பரிமாற..

அவருக்கு பால் கோவாவை தர..

“நீ முதல்ல சாப்பிடு, அப்பறம் நம்ம சேர்ந்து சாப்பிடலாம்”.. என்றார்

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அவள் பக்கத்திலே இருந்து அவளுக்கு பரிமாற “போதும் ஸ்ரீ” என்று பேசிக்கொண்டே உண்டு முடித்தவள்..

பால்கோவாவை  ஒரு பௌலில் வைத்த மஞ்சு  ஸ்ரீஜெயத்திடம் நீண்ட..

கையில் அதை வாங்காமல்  வாய் திறந்தவரை பார்த்தவள்..

சிரித்துக்கொண்டே அவருக்கு ஊட்ட, கொஞ்சம் உண்டவர் போதும் என்று  அவளிடம் இருந்த பால் கோவாவை  வாங்கி அவளுக்கு ஊட்ட.  இருவருக்கும்  பழய நினைவுகள் வந்து போயின..

 “இன்னும் இந்த ஸ்வீட்  உங்களுக்கு பிடிக்குமா”?..

“ரொம்ப பிடிக்கும், ஆனா சாப்பிடறது இல்ல”…

“ஏன்”.. என்று பார்த்தவளை..

“வா”  என்று தன் மடியில் அமர வைத்துக்கொண்டவர்.

“உன் கையால் சாப்பிட்ட பால் கோவாவை தவிற வேற யார் கையிலும்  இருந்து வாங்கி சாப்பிட பிடிக்கல”…

“அப்போ நீங்க பால் கோவாவை  இது நாள் வரை சாப்பிடவே இல்லையா”..

“பால் கோவாவை  பார்த்தாலே  உன் ஞாபகம் வரும், எப்படி என்னை சாப்பிட சொல்லுற.. அது மட்டுமா  யாரவது  தாவணி கட்டிட்டு போனா, உன் ஞாபகம் வரும்,  காலேஜ் போற பிள்ளைகளை பார்த்த  நம்ம  இரண்டு பேர் காலேஜ் போன  ஞாபகம் வரும், உன்னை  நினைக்காம  என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது பாப்பூ”..  என்றவனை கழுத்தோடு  கட்டி கொண்டு அழுதாள் மஞ்சு..

 தன்னை மறக்க முடியாமல் இவ்வளவு தேடி இருக்கிறாரே என்று அவரை கட்டிக்கொண்டு அழுக.

“இப்படி அழுதா நான் எதுவும்  பேச மாட்டேன்” என்றார் ஸ்ரீஜெயம்..

“இல்லை நான் அழல பேசுங்க கேட்கிறேன்” என்றவள் அவர் மடிமீது அமர்ந்து கொண்டே  அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!