Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 12

அம்மையப்பன் 12

 

டேய் அண்ணா.. உனக்காக தான் குழலிய நாளைக்கு வர சொல்லிருக்கேன்.. அமுதனும் கண்டிப்பா வருவான்.. ஏதாவது பண்ணி என்னை பிரச்சனையில மாட்டி விட்டுடாதடா.. என்றாள் அன்பரசி.. 

 



Advertisement

ப்ச் அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடி.. நான் என்னோட காதல சொல்ல போறேன்.. அவ்வளவு தான்.. நீ அந்த அமுதனையும் அவ ப்ரெண்ட்சையும் கொஞ்ச நேரம் டைவர்ட் பண்ணு.. என சொன்னான் ஆகாஷ்..

 

நாளை அகத்தியன், அமுதன், குழலி, ஷாலினி, யாழினி மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்குமான மிகப்பெரிய சோதனை நாளாக அமைய உள்ளது.. அதற்கான அச்சாரத்தை விதி அன்பரசி, ஆகாஷ் மூலமாக அம்மையப்பன் குடும்பத்தின் இளையவாரிசுகளை ப்ளூ ரோஸ் ஹோட்டலில் வந்து சேர்த்துவிட்டது..

Advertisement

 

Advertisement

*********************************

 

மது.. நீ எங்க வீட்டுக்கு வரணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டில்ல.. என கேட்டான் அமுதன்..

Advertisement

 

மதுமித்ராவிற்கு ரொம்ப நாளாக அமுதனின் இல்லம் செல்ல ஆசை தான்.. ஆனால் அமுதன் அவர்கள் வீட்டினில் இதெற்கெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள் என மறுத்துவிட்டான்..

 

ஆமா.. ஆனா நீ உங்க வீட்டுல உள்ளவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டியே.. என முகத்தை தூக்கினாள்..

 

உண்மை தான்.. நீ என்னோட தோழியா தான் வரக்கூடாது.. ஆனால் குழலியோட தோழியா வரலாமே என அமுதன் சிரிக்க.. மதுமித்ரா விழி விரித்தாள்..

 

குழலி அவ ப்ரெண்ட்ஸோட ஊருக்கு வரா.. நீயும் எங்களோட ஜாயின் பண்ணிக்கோ.. குழலி ஷாலினிகிட்ட நான் பேசிட்டேன் எனவும்.. மதுமித்ரா மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்..

 

ஆகா மதுமித்ரா, ரஞ்சனி, சத்தியா, அன்பரசி, ஆகாஷும் வாழ்நாளிலேயே மறக்க முடியாத சம்பவத்தை பார்க்க தயாரானார்கள்..

 

நாளையும் விடிந்தது.. நான்கு நாட்களுக்கான தேவையான ஆடைகள் நிறைந்த பையை தோளில் மாட்டியவாரு உற்சாகமாக ஹாஸ்டலில் இருந்து பெண்கள் ஐவரும் வெளியே வந்தனர்.. அங்கு ஏற்கனவே மதுமித்ராவும் அமுதனும் அவர்களுக்காக காத்திருந்தார்கள்..

 

இளமை கூட்டங்களில் கேலி கிண்டலுக்கா பஞ்சம்.. ஒரே சிரிப்பும் குதூகலமாக ப்ளூ ரோஸ் ஹோட்டலை வந்தடைய.. அன்பரசி அவர்களுக்காக வாயிலேயே காத்திருந்தாள்..

 

அந்த ஹோட்டலை கண்டதும் ஒருத்தர் முகம் மட்டும் சற்று அதிர்ந்து பின் சரியாக.. மற்ற எல்லோரும் அதன் அழகிலும் பிரம்மாண்டத்திலும் மயங்கி போயினர்.. அந்த ஹோட்டலின் அமைப்பே மிகவும் வித்தியாசமாகவும் அழகாவும் இருந்தது..

 

குழலியும் ஷாலினியும் இதனை எல்லாம் வியப்பாக பார்த்து கொண்டிருந்தனர்.. இந்த மாதிரியான ஹோட்டலுக்கு வருவது இதுவே முதல் முறை..

 

அண்ணே.. இந்த ஹோட்டல் என்ன இவ்வளவு பெருசா இருக்கு..

 

இது பைவ் ஸ்டார் ஹோட்டலை விட ரொம்ப பெரிய ரெசிட்டன்டல் ஹோட்டல் ஷாலினி.. இங்க உள்ளேயே மால், பியூட்டி பார்லர், மசாஜ் செண்டர், ரெஸ்டாரெண்ட், ரூப் கார்டன் ரெஸ்டாரெண்ட், கான்பரன்ஸ் ஹால், மேரேஜ் ஹால், சிங்கிள் வில்லா ரூம்ஸ், ஹனிமூன் சூய்ட், பார், பப்ன்னு எல்லாம் இருக்கு.. என அன்பரசி சொல்ல மற்ற பெண்கள் அனைவரும் மேலும் விழி விரித்தனர்..

 

அமுதன் இரண்டொருமுறை இங்கு வந்திருந்தாலும்.. அவனால் வியக்காமலும் ரசிக்காமலும் இருக்க முடியவில்லை.. அனைவரும் ரெஸ்டாரெண்ட்டிற்கு சென்றனர்.. ஒரு பெரிய மேசையில் அமர்ந்தார்கள்..

 

நீ மட்டும்தான் வந்துருக்கியா.. கூட யாரும் வரல என மெல்லிய சந்தேகத்தோடு கேட்டான் அமுதன்..

 

ஆமாமென்பதாய் தலையாட்டியவள்.. அனைவர்க்கும் தேவையானதை ஆர்டர் செய்ய சொன்னாள்..

 

அமுதன் எதற்காக கேட்டான் என அவளுக்கு தெரியும்.. ஆகாஷ் இங்கு இருப்பான் என நினைத்திருக்கலாம்.. அவன் இருந்தால் அமுதன் குழலியை விட்டு விலகவே மாட்டான் என்பதால்.. ஆகாஷ் அவர்கள் முன் வரவில்லை..

 

குழலி அவளின் நிறத்தை தூக்கி காட்டும் அடர் கருநீல அனார்கலி உடையில்.. ஷாலினி செய்த கருநீல த்திரட் டிசைன் ஜிமிக்கியில் தேவதையாக திகழ்ந்தாள்.. அமுதன் அவளை அடிக்கடி பார்த்து கொண்டேயிருக்க.. பெண்ணவள் முகம் சிவந்துவிட்டது..

 

அமுதனின் கண்கள் மற்றுமல்ல மேலும் இரண்டு ஜோடி கண்களும் குழலியின் மேல் தான் இருந்தது.. அமுதனின் பார்வையில் நேசமும் ரசிப்பும் இருந்தது என்றால்.. அந்த ஜோடி கண்களின் பார்வையில் அவளை சுகிக்க வேண்டுமென்ற இச்சை இருந்தது.. இதனை அறியாத குழலி தன் தோழிகளுடன் கலகலத்தவாறு சாப்பிட்டு கொண்டிருந்தாள்..

 

இறுதியில் அவரவர்களின் விருப்பமான ஐஸ்க்ரீம், மொஜிட்டோ, பலூடாவுடன் விருந்து இறுதியை நெருங்க.. அன்பரசி பணத்தை செலுத்திவிட்டு.. அனைவரையும் ஓர் பார்வை பார்த்தாள்.. இப்பொழுது தான் ஆர்டர் செய்திருக்கிறார்கள் வருவதற்கு பதினைந்து நிமிடம் ஆகும் என கணித்தவள்.. குழலி வரியா ரெஸ்ட் ரூம் போயிட்டு வருவோம் என கேட்க.. அவளும் எழுந்தாள்.. குழலியோடு யாழினி மதுமித்ரா தவிர அனைவரும் கூடவே வர.. அன்பரசி எரிச்சலடைந்தாள்..

 

கீழே உள்ள ரெஸ்ட்ரூம் ஒர்க் ஆகலைன்னு சொன்னாங்க.. நாம ஃபர்ஸ்ட் ஃப்ளோர் போலாம் என அன்பரசி சொல்ல எல்லாரும் சென்றனர்..

 

லிப்டின் வழியே முதல் தளம் வந்தார்கள்.. குழலி அன்பரசி கரம் பற்றி மெல்ல பின்னடைந்தாள்..

 

ஸ்ஸ் ஆஆ.. என அன்பரசி காலை பிடிக்க.. குழலி அவளை தாங்கினாள்.. என்னாச்சு அத்தாச்சி..

 

என்னன்னு தெரியில டக்குனு கால் ஸ்லிப்பாகிடுச்சு.. நீங்க போங்க.. நாங்க மெதுவா வரோம் என சொல்லவும்.. மற்றவர்கள் பேசியவாரு முன்னே சென்றனர்.. இருவருக்கும் ஒரு சற்று பெரிய இடைவெளி உருவாக.. அன்பரசி சட்டென ஒரு அறையின் கதவை திறந்து குழலியை உள்ளே அழைத்து வர.. குழலி அதிர்ந்து போனாள்..

 

அத்தாச்சி.. என்ன பண்றீங்க.. இது யாரோட ரூம்.. என பயமும் அதிர்வுமாக கேட்டாள்..

 

குழலி நீ உள்ள போயி பாரு உனக்கே தெரியும்.. நான் வெளில தான் இருப்பேன்.. என்னை நம்பு.. இங்க தப்பா எதுவும் நடக்காது நா ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன் என சட்டென வெளியே செல்ல.. குழலிக்கு மேலும் பயமாகிவிட்டது..

 

அவளும் அன்பரசியை தொடர்ந்து வெளியே செல்ல முனைய.. ஒரு கரம் அவளை பிடித்து தடுத்தது.. அதில் மேலும் விதிர்விதிர்த்து போன குழலி.. பயமும் நடுக்கமுமாக கரங்களை உதறியவாரு திரும்ப.. அங்கு ஈஈஈ என இளித்தவாரு ஆகாஷ் நின்றிருந்தான்..

 

அவனைக் கண்டதும் சற்று பயம் மட்டுப்பட்டாலும்.. உடலின் நடுக்கம் குறையவில்லை..

 

இங்க என்ன மாமா நடக்குது.. ஏன் நீங்க ரெண்டு பேரும் என்ன இப்படி கூட்டிட்டு வந்திங்க என படபடப்பாக கேட்டாள்..

 

எல்லாம் ஒரு காரணத்துக்காக தான் குழலி.. உன் மேல நான் எவ்வளவு அன்பு வச்சுருக்கேன் பாரு.. வா.. என இழுக்க அவள் வர மறுத்தாள்..

 

மாமா ப்ளீஸ் என்ன விடுங்க.. நான் எங்கையும் வரலை.. அமுதன் மாமா என்னை தேடுவாங்க என சொல்லவும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது..

 

அவன பத்தி பேசாத குழலி.. சின்ன வயசுல இருந்தே உன்னையும் என்னையும் பிரிக்கிறது தான் அவன் வேலை.. நீ உள்ள வந்து பாரேன்.. அப்போதான் நான் உன்மேல எவ்வளவு காதல் வச்சுருக்கேன்னு புரியும்.. என அவளை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து சென்றான்..

 

அங்கு சுற்றிலும் சிவப்பு ரோஜாக்களால் அலங்கரிக்க பட்டிருக்க.. தளமோ ஹார்ட் ஷேப் சிவப்பு நிற பலூண்களால் நிறைந்திருந்தது.. அதன் நடுவில் ஐ லவ் யூ குழலி என பேனர் இருக்க.. கையில் வைர மோதிரம் அடங்கிய பெட்டியுடன் ஒருக்காலை மடக்கி குழலியின் முன்னே உட்கார்ந்தவன்.. நாடக பாணியில் அவன் காதலை சொல்ல.. குழலிக்கு அதிர்ச்சியிலும் பயத்திலும் மயக்கமே வந்துவிடும் போலானது.. 

 

வெளியில் படபடப்புடன் நின்று கொண்டிருந்த அன்பரசி.. வாஷ் ரூம் அருகே சென்று மெல்ல எட்டி பார்க்க பெண்கள் அனைவரும் வருவது தெரிந்தது.. என்ன செய்வது என ஒரு நொடி யோசித்தவள்.. சட்டென அவர்களின் பார்வையில் படாமல் ஒழிந்து கொண்டாள்..

 

என்னங்கடி இன்னும் அவளுங்கள காணும்..

 

அந்த சைடு ஒரு வாஷ் ரூம் பாத்தேன் அங்க போயிருக்கலாம்..

 

சரி வாங்க நாம கீழ போலாம்.. அங்க இருக்காங்களோ என்னமோ.. யாரும் போன் கூட கொண்டு வரல என புலம்பியவாரு ஷாலினி செல்ல.. மற்றவர்கள் பின்தொடர்ந்தனர்..

 

சற்று ஆசுவாசமாக மூச்சை விட்டவள்.. அங்கேயே இருந்து சில நிமிடங்களை போக்கினாள்.. இருவரையும் அழைக்கலாம் என ரூமின் கதவை திறக்க.. அமுதனிடமிருந்து போன் வந்தது.. எடுக்கவில்லையெனில் சந்தேகம் வரும் என்பதால் சற்று தூரம் சென்று போனை ஆன் செய்தாள்..

 

அன்பு எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்.. ஏன் இவ்வளவு நேரம்.. குழலி எங்க என எடுத்ததும் படபடப் பட்டாசாக பொரிந்தான்..

 

குழலி வாஷ் ரூம்ல இருக்கா இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவோம் என அதை மட்டும் கூறி போனை வைத்து விட்டாள்..

 

கீழே அமர்ந்திருந்த அமுதனுக்கு மனது ஒரு மாதிரியாக இருந்தது.. ஏதோ தவறு நடப்பது போல் தோன்றியது.. அவனே மேலே சென்று பார்க்கலாம் என கிளம்பினான்.. 

 

அமுதனின் குரலிலேயே அவனை இதற்குமேல் சமாளிக்க முடியாது என உணர்ந்து கொண்டாள் அன்பரசி.. உடனே அவள் ரூமின் கதவை திறக்க போக.. உள்ளுக்குள் பூட்டியிருந்தது..

 

டேய் அண்ணா.. கதவ திறடா.. டேய்.. அமுதன் போன் பண்ணிட்டான்டா.. கதவை திற.. அண்ணா.. என என பலமுறை அழைத்தும் கதவு திறக்காமல் போக.. அன்பரசிக்கு பயம் வந்துவிட்டது.. அப்பொழுது அமுதனும் அவளுக்கு தொடர்ந்து அழைத்து கொண்டே இருக்க.. அவள் மீண்டும் கதவை தட்ட ஆரம்பித்தாள்..

 

அன்பரசி இங்க என்ன பண்ற.. குழலி எங்க என அமுதன் கேட்க.. உடல் விறைத்து பயத்தில் வியர்த்து போய் திரும்பினாள் அன்பரசி..

 

அமுதனோடு மற்ற பெண்களும் அங்கே இருந்தனர்.. சொல்லு குழலி எங்க என அமுதன் மிரட்டலாக கேட்க.. அன்பரசி விரல் நடுங்க அறை கதவை காட்டினாள்..

 

அவ எதுக்கு உள்ள போனா என்ற அமுதனுக்கு என்னமோ சரியில்லை என தோன்ற.. எல்லோரும் வேகவேகமாக கதவை தட்ட கதவு திறந்த பாடில்லை.. 

 

அண்ணா கதவை திற என அன்பரசி கத்த.. அமுதனுக்கு நொடியில் அனைத்தும் புரிந்து போனது..

 

ஆகாஷ்.. ஆகாஷ் கதவை திற.. பைத்தியம் மாதிரி எதுவும் செய்யாத என பயமும் பதட்டமுமாக கதவை உடைக்க முயன்றான்.. அமுதன்..

 

சார் ஏதாவது பிரச்சனையா என ஹோட்டலின் ஊழியர் கேட்டான்..

 

ஆமா.. என்னோட அண்ணன் தான் இந்த ரூம் புக் பண்ணான்.. உள்ள என்ன நடக்குதுன்னு தெரியல.. அப்போதிலிருந்து கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன் ஓபன் பண்ண மாட்டேங்குறான்.. என அன்பரசி வேகமாக விளக்க.. அவர் தன்னிடமிருந்த இன்னொரு கார்டு மூலம் கதவை திறந்தார்..

 

அமுதனும் மற்ற பெண்களும் வேகமாக உள்ளே சென்றனர்.. அப்பொழுது அங்கு அவர்கள் கண்ட காட்சி.. அனைவரின் உயிரையே உறையவைத்தது.. ரத்தவெள்ளத்தில் ஒருவன் படுத்திருக்க.. அவனுக்கு அருகில் ஆகாஷ் தலையில் அடிபட்டு கிடந்தான்.. அவன் தலையிலிருந்தும் ரத்தம் வந்து கொண்டிருந்தது.. அய்யோ ஆகாஷ் என அன்பரசி அவனிடம் விரைந்தாள்.. உள்ளே குழலியின் கூச்சல் கேட்க..

 

படபடக்கும் இதயத்துடன் உள்ளே ஓடினான் அமுதன்.. அங்கு குழலி ஒருவனை சாரமாரியாக அடித்து கொண்டிருக்க.. அவனும் அவள் அடிகளை வாங்கிக்கொண்டு அவளை பலவந்தப்படுத்திக் கொண்டிருந்தான்..

 

நொடியில் அமுதன் அவன் மேல் பாய்ந்து கீழே தள்ள.. தலை கலைந்து.. ஆடைகள் அங்கங்கு கிழிந்து.. கை கால்களில் ரத்தம் வழிய.. அதுவரை இருந்த மொத்த சக்தியும் வடிந்தார் போல் கீழே அமர்ந்தாள் குழலி.. அவள் விழிகளோ சுவற்றை வெறித்து கொண்டிருந்தது..

 

அய்யோ.. குழலி என்னடி ஆச்சு.. என ஷாலினியும் அவளை அனைத்துக்கொண்டு கதறினாள்.. தன்னவள் மேல் கைவைத்தவனின் மொத்த எலும்பையும் உடைத்து.. அவனை நடைப்பினமாக்கிய அமுதன் ஷாலினியின் கதறலில் வேகமாக தன்னவளை நோக்கி சென்றான்..

 

அம்மு.. அம்முசெல்லம்.. ஒன்னும் இல்லடி.. எல்லாம் சரியாபோச்சு.. மாமன் உன் கூடதான்டி இருக்கேன் என அமுதன் அவளை அணைத்து.. அவளின் கண்களை பார்த்து பேசி.. சிரம் வருடி ஆறுதல் படுத்த.. அதில் சுயம் வந்த பதினேழு வயது பூஞ்சிட்டு.. உடல் நடுங்க தன்னவனை அணைத்து கொண்டு கதறினாள்.

 

அவரின் கதறலைக் கண்டு மற்றவர்களுக்கும் கண்ணீர் வந்தது.. அமுதனோ அவளின் கதறல்களில் உள்ளுக்குள் மறித்து போனான்.. அவளை தனியாக விட்டிருக்கவே கூடாது.. என உள்ளுக்குள் குமைந்தான்..

 

என்னடி ஆச்சு.. நீ எப்படி இங்க வந்த.. யாரு இவங்க என யாழினி கேட்டாள்..

 

அமுதனின் அணைப்பில் மெல்ல விசும்பி கொண்டிருந்தவளின் விழிகளில் மீண்டும் கண்ணீர் பெறுகியது..

 

ஆகாஷ் அவளிடம் காதல் கூறியதும்.. மாமா ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க.. நான் உங்கள இந்த மாதிரியெல்லாம் யோசிச்சதே கிடையாது.. நீங்க எனக்கு அண்ணன் மாதிரி என குழலி கண்ணீரோடு சொல்ல.. ஆகாஷ் அதிர்ந்து போனான்..

 

அப்படி நினைக்கவில்லை.. அமுதனை தான் காதலிக்கிறேன் என சொன்னால் அவளின் மனதை மாற்றிவிடலாம்.. மேற்கொண்டு பேசலாம்.. ஆனால் அவளோ உன்னை சகோதரனாக தான் பார்த்தேன் என விழி கலங்க கூறியவளைக் கண்டு என்ன பேசுவது என தெரியாமல் திகைத்து போனான் ஆகாஷ்..

 

அவன் ஒன்றும் கெட்டவனில்லையே.. நீ என்னைத்தான் காதலிக்க வேண்டும் என நிர்பந்திக்க.. அவள் அவ்வாறு கூறும் பொழுது அன்பரசி முகம் வேறு தோன்ற.. அந்நொடியே தன் மனதின் ஆசைகளை குழி தோண்டி புதைத்து விட்டான் ஆகாஷ்..

 

வலி தான்.. ஆனால் உயிரை பறிக்கும் வலியில்லை.. மீண்டுவிடுவோம் என அவன் மனது சொன்னது.. முகத்தை இரு கரங்களாலும் வேகமாய் துடைத்தவன்.. குழலியை பார்த்து மென்புன்னகை புரிந்தான்..

 

என்னை மன்னிச்சுடு குழலி.. என் மேல உள்ள உன்னோட உணர்வு தெரியாம.. உன்னை சங்கட படுத்திட்டேன்.. இனிமேல் எப்போதும் இது மாதிரி நடக்காது வா.. போகலாம் என அவளை அழைக்க.. குழலியிடமிருந்து ஆசுவாசமான பெருமூச்சு எழுந்தது..

 

மெல்ல விழிகளை துடைத்தவாறு.. அவனை பின்தொடர்ந்தாள்.. அன்றைய நாளில் அவள் வாழ்வின் சோதனை காலம் இனிமேல் தான் ஆரம்பமாகிறது என பாவம் அவளுக்கு தெரியவில்லை.. 

 

ஆகாஷ் கதவை திறக்க.. அதற்காகவே காத்திருந்தார் போல் சட்டென இரு உருவங்கள் அவர்களை தள்ளி கொண்டு உள்ளே போனது.. யாருடா நீங்க எதுக்கு உள்ள வந்திங்க என ஆகாஷ் கத்தும் போதே ஒருவன் அவனை சிரத்தை பிடித்து பலம் கொண்டு சுவற்றில் மோதினான்.. இன்னொருவனோ குழலியை நெருங்க முயல அவள் கத்த ஆரம்பித்தாள்..

 

குட்டி நல்லா ஷோக்கா தான் இக்குது மச்சி..

 

ஆமாடா சிக்குமான்னு பாத்தோம்.. இவங்களே அதுக்கு ரூட்ட போட்டு கொடுத்துட்டாங்க.. 

 

என்னாடா.. இவ்வளவு நேரம் நீ அனுபவிச்சல.. கொஞ்சம் நேரம் இவள எங்களுக்கு கடன் கொடு.. அவன் அவளின் கரத்தினை இழுக்க அவள் விடுபட முயன்றாள்.. ஆனாலும் அவள் கரத்தின் ஆடை கிழிந்து.. அவன் நகம் கீறி பெண்ணவளுக்கு வலியை கொடுத்தது..

 

டேய் அவளை விடுங்கடா.. என ஈனஸ்சுவரத்தில் முனங்கி ஆகாஷ் எழுந்திருக்க முயற்சிக்க.. மற்றொருவன் அவனை தாக்கினான்..

 

இருடா என்னோட மாப்புள முடிச்சுக்கட்டும்.. என நெஞ்சில் மிதித்தான்..

 

ஐயோ.. என்ன விடு.. யாராவது வாங்களேன் என கத்தியவள்.. அங்கிருந்து ஓட முயன்ற போது அவன் காலை தட்டிவிட.. பெண்ணவள் கீழே விழுந்தாள்.. அவன் அவள் மேல் பாயும் நேரம்.. அவள் கரத்தினுள் ப்ளவர் வாஷ் தட்டுப்பட.. உடனே அதனை எடுத்தவள் நொடியும் யோசிக்காது.. தன் மொத்த பலமும் கொண்டு அவன் மண்டையை உடைத்தாள்..

 

அவன் அதில் மயங்கிட.. மற்றொருவன் அவளிடம் வந்தான்.. உன்னை மாதிரி முரட்டு குதிரையை அடக்குறது தான் சுவாரசியம்.. என அவன் அவள் மேல பாய.. வேகமாக உள்ளே ஓடியவள் தன் கைக்கு அகப்பட்டதையெல்லாம் எடுத்து அவனை தாக்க தொடங்கினாள்.. அவள் கரத்திலும் காலிலும் பீங்கான் கிழித்து ரத்தம் சொட்டிகொண்டிருந்தது.. அவளுக்கு போராட முடியவில்லை.. ஆனாலும் தன் மொத்த சக்தியையும் திரட்டி அவனை தடுத்து கொண்டிருந்தாள்.. அப்பொழுதுதான் அமுதன் அங்கு வந்தான்..

 

இதனையெல்லாம் சொல்லி அவள் அழுக.. அமுதன் கொதிக்கும் மனதுடன்.. தன்னவளை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தான்..

 

அப்பொழுது அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்.. சார் அவங்களுக்கு ரொம்ப ப்ளீட் ஆகுது.. வாங்க பர்ஸ்ட் டாக்டர்கிட்ட காமிச்சடலாம் என கூறவும்.. அவர்கள் அழைத்து சென்ற அறைக்கு எல்லோரும் சென்றார்கள்..

 

அது ஒரு நீண்ட அறையாக இருந்தது… அங்கு ஏற்கனவே ஆகாஷிற்கு ட்ரீட்மெண்ட் போய்க்கொண்டு இருந்தது.. அன்பரசி அவனருகே அழுது கொண்டிருந்தாள்..

 

அப்பொழுது குழலி வருவதை பார்த்து வேகமாக அவளிடம் நெருங்கினாள்.. மன்னிச்சுடு.. குழலி எங்களால தான் இதெல்லாம் என அன்பரசி அழுக.. குழலி மறுத்தாள்..

 

இல்ல அத்தாச்சி.. மாமா என்னை எதுவும் செய்யல.. என்ன கீழ அழைச்சுட்டு போகத்தான் இருந்தார்.. அப்போதான் என மேலே சொல்ல முடியாமல் விசும்பினாள்..

 

அந்த மற்ற இரு கயவர்களும் கூட அங்குதான் படுக்க வைக்கப்பட்டு இருந்தனர்.. 

 

இங்க வந்து உட்காருங்க என்ற டாக்டர் அவளுக்கு மருத்துவம் பார்த்தார்.. மதுமித்ராவிற்கு அப்போதிலிருந்தே ஏதோ தவறாக இருப்பதாய் தோன்ற.. அமுதா உங்க மாமாக்கு போன் பண்ணி இங்க நடந்ததையெல்லாம் சொல்லிடு.. எனக்கு என்னமோ தப்பா படுது.. அந்த ரெண்டு பேரும் உயிரோட இருக்காங்களான்னே தெரியலை.. அதோட ஹோட்டல் ஸ்டாஃப் எல்லாம் என்னமோ ஏதும் நடக்காதது மாதிரி இருக்காங்க.. ஒரு டென்ஷன் கூட அவங்க முகத்துல இல்ல.. என மதுமித்ரா அவன் காதினுள் சொல்ல.. அமுதனும் அப்போதுதான் அங்குள்ளவர்களை கவனித்தான்.. எல்லோரும் கருப்பு நிற கோட்சூட் காதில் ப்ளூடூத் என ஐந்து நபர்கள் இருந்தனர்.. அவர்களை பார்த்தால் ஹோட்டலில் வேலை செய்பவர்கள் போல் இல்லை..

 

இதுவரை குழலியிடம் மட்டுமே தன் கவனத்தை வைத்திருந்தவன்.. இப்பொழுது தான் ஆரம்பம் முதல் நடந்தவற்றையெல்லாம் யோசித்தான்.. அவனுக்கும் ஏதோ தப்பாக பட்டது.. உடனே அவன் போனை எடுக்க..

 

போன் ஒர்க் ஆகாது.. ஜாமர் இருக்கு.. உங்க போனையெல்லாம் எங்ககிட்ட கொடுங்க.. என அவர்களை கவனித்திருந்த ஒருவன் சொன்னான்.. அப்பொழுது குழலி முதற்கொண்டு எல்லார் கவனமும் அவர்கள் புரம் சென்றது..

 

என்ன நாங்க ஏன் எங்க போனை கொடுக்கணும்.. எதுக்கு இப்படி ஜாமர் எல்லாம் யூஸ் பண்றீங்க.. என அமுதன் கோபமாய் முன்னேவர.. பெண்கள் அனைவரும் ஒருவரையொருவர் பயத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்..

 

அத உங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல.. பாய்ஸ் அவங்ககிட்ட உள்ள போன் வாங்குங்க.. என அவன் சொல்லவும்.. மூன்று பேர் பெண்களை நெருங்க அமுதன் அவர்களை தாக்க ஆரம்பித்தான்.. அவர்கள் அமுதனை தாக்காமல் தடுக்க மட்டும் செய்தார்கள்.. அப்பொழுது மதுமித்ரா பெண்களை பார்த்து கண்ணசைக்க அவர்களும் அமுதனுக்கு உதவி செய்தனர்.. டாக்டர் பயத்துடன்.. அங்கு ஓர் ஓரமாய் நின்று கொண்டிருந்தார்..

 

அப்பொழுது ஹீல்ஸ் சப்தம் ஒலிக்க.. கருப்பு நிற ஜீன்ஸ்.. சீலீவ்லெஸ் ஸ்லிம் பிட் டேங்க் டாப்புடன்.. வந்த பென்னொருவள் அங்கு நடக்கும் கலவரத்தை கை கட்டி வேடிக்கை பார்த்தாள்.. இரண்டு நிமிடம் அதனை பார்த்தவள்.. ப்ச் என்ற சலிப்புடன்.. இரு காவலர்களுடன் தன் காரத்தே வித்தையை காட்டி கொண்டிருந்த அமுதனின் பின்னிருந்து உதைத்தாள்…

 

அதில் சற்று தடுமாறியவன்.. தன் முழு வேகத்துடன் பின்னால் திரும்பி தாக்க முற்பட.. அவனின் தாக்குதலை முன்பே ஊகித்து.. அதிலிருந்து சற்று விலகி அவனின் முழங்காலில் மிதித்து தன்முன்னே மண்டியிட வைத்தவள்.. தன் இடுப்பினுள் சொருகியிருந்த ஃகன்னை எடுத்து மேலே சுட.. பெண்கள் அனைவரும் அதிர்ந்து நின்றனர்..

 

அமுதன் எழ முயல அவனின் தலையில் ஃகன்னை வைத்தவள்.. அவனை அப்படியே இருக்குமாறு சொல்ல.. குழலி பதறினாள்..

 

அய்யோ என அவள் அலற..

 

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என ஒற்றை விரலை வாயில் வைத்து குழலியை மிரட்டலாக பார்த்தாள் அவள்.. அவள் முகம் கருப்பு நிற துணிக்கொண்டு மறைக்க பட்டிருந்தது.. அதில் அவளின் விழிகள் மட்டும் பெரிதாய் தீட்சண்யமாய் தெரிய.. அதனை கண்டு குழலி மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரின் தேகமும் நடுங்க ஆரம்பித்தது.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!