Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே – 4

அத்தியாயம் – 4

மித்ரா வருத்தப்படுவதை பார்த்து கிராணி “கவலைப்படாத பிரின்சஸ், பழசை எல்லாம் மறந்துரு, இனிமேலாது உன்னோட பொறுப்பை நீ ஏத்துக்கோ, இப்பவே உனக்கு 26 வயசு ஆகப்போகுது இனிமேலும் நீ உன் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது “

“இப்போ என்ன கிராணி அவசரம் இன்னும் கொஞ்ச வருஷம் போகட்டும்” என்றாள் ஷாம்.

“இப்போவே ரொம்ப லேட் ஆகிருச்சி மித்ரா, ராணி அவங்களோட பொறுப்பை அவங்களோட இருபதாவது வயசுல ஏத்துக்கிட்டாங்க, வர துர்கா பூஜைக்குள்ள நீ உன்னோட பொறுப்புகளை ஏத்துக்கிட்டு தான் ஆகணும், இந்த வருஷம் துர்கையம்மனுக்கு பூஜை பண்ண போறது நீதான் “



Advertisement

” கிராணி ப்ளீஸ் கொஞ்சமாவது என்ன புரிஞ்சுக்கோங்க எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க “

” முடியாது மித்ரா இதுக்கு மேல உனக்கு டைம் கொடுக்க முடியாது, நாளைக்கு சபைநாள் நாளைக்கு ராணி அப்புறம் நம்ம குடும்பத்தில இருக்கிற எல்லாரும் வருவாங்க அவங்க கிட்ட பேசி நீ பதவி ஏத்துக்க போற நாளை முடிவு பண்ண போறேன்”

” ப்ளீஸ் ப்ளீஸ் கிராணி இன்னும் கொஞ்ச நாள் என்னை ஃப்ரீயா விடுங்க ப்ளீஸ் “

Advertisement

” மித்ரா நான் சொன்னது சொன்னது தான் “என்று கிராணி கண்டிப்புடன் கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

Advertisement

மித்ரா மிகவும் குழப்பதுடன் இருந்தால் இரவு எல்லாம் தூங்காமல் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.

இங்கு விக்ரம் இரண்டு நாட்களாக உறங்காமல் ஷாம் பேசிய வீடியோவை பார்த்து பார்த்து குடித்துக் கொண்டே இருந்தான். அவன் எப்பொழுது கதவை திறப்பான் என்று அறையின் வாயிலை பார்த்த வண்ணம் இருந்தார் வாசுகி.

 மறுநாள் காலை அழகாக விடிந்தது. மணிகர்ணிகாபுரியில் சபை நாள் என்பதால் பணியாளர்கள் அனைவரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்,அங்கு ராஜமாதாவின் மூத்தமகன் ராஜராஜன் இவர் மும்பையில் மிக பெரிய தொழிலதிபராக உள்ளார்,இவர் மனைவி சகுந்தலா மருத்துவராக உள்ளார் தனியா ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ஒன்றை நடத்தி வருகிறார்.

Advertisement

ராஜராஜன் சகுந்தலா தம்பதியின் மூத்தமகன் வினித் அவனுடைய தாத்தாவின் RK ஹாஸ்பிடல் மற்றும் அதன் கிளைகளை நிர்வாகித்து வருகிறான். வினித்தின் மனைவி ஸ்ரேயா ஷாமின் தோழி, தங்கையின் தோழியை காதலித்து கரம் பிடித்தான் வினித், ஸ்ரேயா தனியா கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாள். இவர்களது மகன் ஆதித். 

ராஜராஜன் சகுந்தலாவின் செல்ல மகள் சங்கமித்ராராணி, இவள் டோக்கியோவில் உள்ள வாகனங்கள் தயாரிக்கும் கம்பெனியில் டிசைனிங் இன்ஜினியர் ஆகா இருக்கின்றாள்.

 ராஜமாதாவின் இரண்டாவது மகன் ராஜசேகர், அவரது மனைவி ஷோபனா,இவர் தன் அண்ணனுடன் சேர்ந்து தொழில்களை கவனித்து வருகிறார்.இவர்களின் ஒரே புதல்வன் சஞ்சய் தனியாக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருகிறான். சஞ்சயின் வருங்கால மனைவி கனி (இவளை பற்றி பிறகு கூறுகிறேன் ).

 ராஜமாதாவின் கடைசி மகள் ஜான்சி ராணி (பல பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகிறார்).இவரது கணவர் வெங்கடேசன் இவர் எக்ஸ்போர்ட் பிசினஸ் மற்றும் வாகனத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் கௌதம் மருத்துவராக ( ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் ) இருக்கின்றான். இளைய மகன் கௌஷிக் தற்பொழுது அமெரிக்காவில் எம்பிஏ படித்து கொண்டிருக்கிறான்.

சபைநாளுக்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கு வந்து விட்டனர் (வெங்கடேசனை தவிர).

🌹🌹🌹(🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️சகோ என்ன கதை கொஞ்சம் குழப்பமா இருக்க 🤔🤔🙄🙄,இருங்க உங்க குழப்பத்தை நான் கொஞ்சம் தெளிய வைக்குறேன் அதுக்கு நாம குட்டிய ஒரு பிளாஷ்பேக் போலாமா, இது முழுக்க என்னோட கற்பனை மட்டுமே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ☺️☺️☺️☺️)🌹🌹🌹

 மணிகர்ணிகாபுரி இந்த நகரத்தை ஆண்ட மன்னன் விஜயராணா பிரதாப் மற்றும் சகித்ரா தம்பதியரின் ஒரே மகள் கனிஷ்காராணி. விஜயராணா, ஜான்சிராணி லக்ஷ்மிபாயின் வீர தீர செயல்களால் கவரப்பட்டு தன் நாட்டிற்கு மணிகர்ணிகாபுரி என்ற பெயரை மாற்றிவிட்டார் விஜய்ராணா.

 அத்துடன் தன் ஒரே மகளான கனிஷ்கா ராணியையும் லட்சுமி பாயை போன்று வீரமங்கையாக வளர்க்க ஆசைப்பட்டார். கனிஷ்காவிற்கு கத்திச்சண்டை, குதிரை ஏற்றம்,துப்பாக்கி சுடுதல் மேலும் பிறமொழிகளையும் கற்பித்தார். ஆங்கிலேய ஆட்சி அப்பொழுது நடந்து கொண்டிருந்த போதும் ஆங்கிலேயர்களில் இருந்த சில நல்லவர்கள் மூலம் கனிஷ்கராணி வெளிநாட்டு மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார், அத்துடன் அவர்களிடம் இருந்து சிறிய வகை விமானம் ஓட்டவும் கற்றுக் கொண்டார்.

 மகளின் திறமைகளைக் கண்டு பெருமை அடைந்த விஜயராணா, மகளின் ஆசை அனைத்தையும் நிறைவேற்ற விரும்பினார், கனிஷ்காராணி தன்னுடைய 18 வது வயதில் தனக்கு விமானம் வேண்டும் என்று ஆசைப்பட, பெரும் பொருள் செலவு செய்து ஆங்கிலேயர்களின் மூலம் ஒரு சிறிய ரக விமானத்தை வாங்கி மகளுக்கு பரிசளித்தார்.

ஒரு நாள் அவர்களது நகரத்திற்கு மருத்துவ சேவை செய்ய தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ராமராஜன் சென்றிருந்தார். கனிஷ்கா ராணி அவரிடமிருந்து சில மருத்துவ குறிப்புகளை கற்றுக் கொள்வதற்காக சென்றாள் . ராமராஜனின் பணிவான பேச்சும், குணமும் அவரது தோற்றமும் கனிஷ்கா ராணிக்கு அவரின் மேல் காதலை ஏற்படுத்தியது. ராமராஜனுக்கும் கனிஷ்காவின் மீது காதல் இருந்தும் அவளின் பதவியும் அதிகாரமும் தனது காதலை சொல்லவிடாமல் செய்தது.

 கனிஷ்கா ராமராஜனை அழைத்துக் கொண்டு நேராக விஜயராணாவின் முன் சென்று நின்றார். தான் இவரை காதலிப்பதாகவும் இவரை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறினார். முதலில் மறுத்த விஜயராணா பின் மகளின் ஆசைக்காக அதை ஏற்றுக் கொண்டார்.

 தமிழகத்திலிருந்து ராமராஜனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து வரப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக ராமராஜன் கனிஷ்கா திருமணத்தை நடத்தி முடித்தார். அத்துடன் மகளை மணிகர்ணிகாபுரியின் ராணியாகவும் அமர வைத்தார்.

 மேலும் இனிவரும் காலங்களில் இங்கு பெண்களின் ஆட்சி தான் அமைய வேண்டும் என்றும் அடுத்த தலைமுறையில் வரும் முதல் பெண் தான் ராணியாக அமர வேண்டும் என்றும் கட்டளையிட்டார். விஜயராணா தனது மகள் கனிஷ்காவிற்கு மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு ஜான்சி ராணி என்று பெயர் வைத்தார்.

 அத்துடன் அவளது 15 வது வயதில் ஜான்சியை இளவரசி ஆக்கி அழகு பார்த்தார். ஜான்சியின் 20 வது வயதில் அந்நகரின் ராணியாக அவர் அமர்த்தப்பட்டார். 22 ஆவது வயதில் அவருக்கு வெங்கடேஷுடன் திருமணம் நடந்தது. தற்போது வரை ஜான்சியே அந்நகரின் ராணியாக உள்ளார்.

ராமராஜன் மணிகர்ணிகாபுரியிலே இருந்து விட்டாலும் தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் நடைபெறும் அனைத்து விழாக்களுக்கும் தன் மனைவி மற்றும் குழந்தைகளை தவறாமல் அழைத்துச் செல்வர். அவர்களுக்கு தமிழ் மொழியையும் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கூறி வளர்த்தார்.

 ராமராஜன் தன் மனைவின் மேல் உள்ள காதலால் தஞ்சாவூரில் கனி என்ற பெயரில் இலவசமாக மருத்துவ மனைகளையும், கல்வி நிறுவனங்களையும் நிறைய ஆதரவற்றோர் இல்லங்களையும் நடத்தி வந்தார். தன் சொந்தம் விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக தனது தங்கை அன்னபூரணியின் மகளான சகுந்தலாவை தனது மகன் ராஜராஜனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

 மணிகர்ணிகாபுரியில் இப்பொழுதும் ராணிகளின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. இங்கு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்,இந்த நகரத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் எடுக்க பலமுறை முயன்றும் நகரத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அரசு அலுவலகம் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைத்தும் ராணியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனர். 

இங்கு எம்எல்ஏ எம்பி கவுன்சிலர் என்று அனைத்து பதவிகளிலும் ஆண் பெண் இருபாலரும் இருந்தனர் அதுவும் ராணி கூறும் ஆட்கள் தான் தேர்தலில் நிறுத்தப்பட்டனர். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வேறு வேறு ஆட்களை ராணி தேர்ந்தெடுப்பார்.அந்த நகரத்தில் அனைவரும் சமம் ஜாதி மத வேறுபாடுகள் கிடையாது.

 ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள மக்களை தன் குடும்ப உறுப்பினர்களாகவே கருதினர், அங்குள்ள குழந்தைகளை உயர் கல்விக்காக தன் சொந்த செலவில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். மக்களில் பலருக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர்  அங்கு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு.அத்துடன் அரச குடுப்பதினார் அவர்களது சொந்த வருமானத்தில் மாதத்திற்கு 10% நகரத்தின் வளர்ச்சிகாக அளித்து வருகின்றனர்.

அரச குடும்பத்தை சேர்த்தவர்களே பல்வேறு பள்ளி கல்லூரிகளை நடத்தி வந்தாலும், மற்ற குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளும் சமமாக பழக வேண்டும், அவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைத்து மற்ற கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தனர்.

இப்பொழுது அடுத்த தலைமுறை ராணியாகபோவது நம் சங்கமித்ரா ராணி தான். மித்ராவிற்கு ஏற்கனவே இளவரசிகாண பட்டாபிஷேகம் நடந்து முடிந்து விட்டது, ராணி பதவியைத் தான் இப்பொழுது ஏற்க மறுத்துக் கொண்டிருக்கிறாள் சங்கமித்ரா.

 சபை தொடங்கும் நேரம் என்பதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தனர். ராணிக்கான அரியாசனத்தின் வலப்புறம் ராஜமாதாவிற்கான அரியாசனமும் இடபுறம் இளவரசி காண அரியாசனமும் இடம்பெறும். சபையின் மையத்தில் இருபுறமும் எம்எல்ஏ எம்பி மற்றும் அரசவை சார்ந்த மந்திரிகள் ஆசனத்தில் அமர்ந்து இருப்பார்கள்.

 சபை நாள் என்பது மாதத்திற்கு ஒருமுறை ராணி மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் நாளாகும். இந்நாளில் ஏதேனும் தீர்க்கப்படாத பிரச்சனை இருப்பின் அது ராணியின் முன்னிலையில் தீர்க்கப்படும். ராணியின் தீர்ப்பே இறுதியானது அவர் அளிக்கும் தண்டனையை ஏற்று தான் ஆக வேண்டும் யாராலும் மறுப்பு கூற முடியாது.

 இந்த நாளன்று ராணி ராஜ உடைய அணிந்து தலையில் கிரீடம் வைத்து இடுப்பில் வாழுடன் முழு அரசியாகவே வருவார். ஜான்சி சபைக்கு நுழைய அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். ஜான்சி அவருக்கு அருகில் இருந்த ராஜமாதாவை வணங்கி தன் ஆசனத்தில் சென்று அமர்ந்தார்.

 பின் இளவரசி ஆசனம் காலியாக இருக்க “சங்கமித்ராராணி “என்று அந்த சபையே அதிரும் அளவுக்கு கணீர் குரலில் அழைக்க ஷாம் உடனே அவர் முன்னால் போய் நின்று தலை குனிந்து அவரை வணங்கினால், ஜான்சி இளவரசி அரியாசனத்தை காட்டி ” போய் உட்காரு” என்று கட்டளையிட்டார்.மித்ரா அமைதியாக அங்கு சென்று அமர்ந்தாள்.

மித்ரா அரியாசனத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து ராஜ மாதா மற்றும் குடும்ப உறுப்பினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்ரேயா தனது போனில் மித்ராவை போட்டோ எடுத்து அதை ரிங்குவிற்கு அனுப்பி வைத்தாள். அத்துடன் “அவர் பிரின்சஸ் இஸ் ரிட்டன் “என்று மெசேஜும் அனுப்பி வைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!