Skip to content
Post Views: 3,034
அத்தியாயம் 21
சார், டாக்டர் சொல்றது உண்மையா? என்று ஒருவன் அகரனிடம் நீட்டி கேட்க, “ஆமாம்” என்று அகரன் சொன்னான்.
Advertisement
அந்த பொண்ணை உங்களுக்கு முன்னதாகவே தெரியுமா? ஒரு பொண்ணு கேட்க, ஆமா என்னோட தோழி தான். சிறுவயதிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள் என்று அகரன் அவன் காதலை தவிர எல்லாவற்றையும் சொன்னான்.
சார், ஆதி சார் கொலையை பற்றி பேசினால் நீங்க என்ன பேசுறீங்க? என்றான் ஒருவன்.
Advertisement
Advertisement
நீங்க தானப்பா என் சின்னப் பொண்ணை பற்றி கேட்டீங்க? அவளை பற்றி இப்ப தெரிந்து விட்டதுல்ல. இனி சொல்றேன் என்று வக்கீலை முன் அழைத்து, அகரன் ரசிகாவை தமிழரசன் அவர் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டதாக சில பைல்லை காட்டி அனைவர் முன்னும் உறுதி படுத்திக் கொண்டார்.
என்னோட மாப்பிள்ளை ஆதிரேயன் தன் மூத்த பொண்ணு இலக்கியாவை கொல்லவில்லை. ஆனால் அவள் கொலை இயற்கையானது இல்லை. யாரோ அவளை கொலைதான் செய்திருக்கிறார்கள்.
Advertisement
மாமா, இலக்கியா கொலையானாலா? ஆதிரேயன் அதிர்ச்சியுடன் கேட்க, ஆமா மாப்பிள்ள. யாரோ இலக்கியாவை கொன்றிருக்காங்க. டாக்டர் ரிப்போட்டில் சரியாக உள்ளது. குழந்தைகள் நம் கைக்கு வந்த போது நல்லா தான் இருந்தா. டாக்டர் வெளியே வரவும். கொலை நடந்திருக்கு. பின் தான் உள்ளே சென்று பார்த்த போது இறந்திருந்தாள்.
சார், இருவரும் சேர்ந்து நாடகமாடுறீங்களா? சந்தேகமாக ஒருவன் கேட்டான்.
இல்லை என்று சத்தமிட்ட தமிழரசன், என்னோட மாப்பிள்ளை அன்று நேரம் கழித்து வந்தது எல்லாருக்கும் தான் தெரியுமே? அவர் எதையும் செய்யவில்லை. அவருக்கு ஏதும் தெரியாது. கொலைசெய்தவன் ஒரு மருத்துவராக இருக்கவும் வாய்ப்பிருக்கு. என் பொண்ணு உடம்பில் அரிதான விசமொன்று உள்ளது. அது எல்லா மருத்துவருக்கும் கிடைத்திடாது.
நான் விசாரிப்பது தெரிந்து அவன் காணாமல் போய் விட்டான். என் ஹாஸ்பிட்டலில் வேலை செய்த, எனக்கு அடுத்தபடியாக நான் நம்பிக்கை வைத்திருந்த அருணாசலம் தான். ஐந்து வருடங்களாக ரகசியமாக தேடியும் அவனை கண்டறிய முடியவில்லை. அவன் தான் கொலைசெய்தான் என்று முழுதாக சொல்ல முடியலை.
அங்கே கண்டறியப் பட்ட ஓர் பெண்ணின் முடி. யாரோ ஒரு பொண்ணாகவும் இருக்கலாம் என்றவர் யாராக இருந்தாலும் உங்களை கண்டறியாமல் விட மாட்டேன் என்றார் சினமுடன். ஆதியும் அகரனும் அவருக்கு ஆதரவாக அவர் கையை பிடித்தனர்.
இருவரையும் பார்த்து அவர் கையை எடுத்து விட்டு, அவர் பொண்ணு இலக்கியாவால் ஆதியின் கஷ்டத்தை சொல்ல, மாமா இதெல்லாம் பேசாதீங்க என்று அவர் கையை ஆதி பிடித்தான்.
மாப்பிள்ள விடுங்க. எவ்வளவு மோசமான பணப்பைத்தியத்தை உங்களுக்கு திருமணம் முடித்து வைத்தேன். ஏற்கனவே இருந்த உங்களது வாழ்வில் உங்களது தம்பிக்கும் உங்களுக்கும் இதனால் விரோதம் வேற ஆயிற்று.
போதும். இதற்கு மேல் என் பொண்ணுக்காக எதையும் மறைத்து உங்கள் வாழ்க்கையை கெடுக்க விரும்பல என்று நடந்த அனைத்தையும் கண்ணீருடன் சொல்லி முடித்தார்.
என் பொண்ணு இப்படி நடந்து கொள்ள காரணமும் நான் தான். என் பொண்ணை கண்டித்து வளர்த்திருக்கணும். அம்மா இல்லாமல் செல்லமாக வளர்த்ததில்லாமல் அவளை கவனிக்காமல் இருந்து விட்டேன். என் பொண்ணை நல்ல படியாக வளர்த்திருக்கணும் என்று அனைவர் முன்னும் ஓர் அப்பாவாக அழுதார்.
ரசிகா மனம் கேட்காமல் அகரனை அழைத்து ஸ்பீக்கரில் போட சொன்னாள். அவனும் அவ்வாறே செய்ய, அப்பா எதுக்கு அழுறீங்க? உங்க பொண்ணு இலக்கியாவை எனக்கு நன்றாக தெரியும் என்றாள்.
ரசி, இலக்கியாவை உனக்கு தெரியுமா? தமிழரசன் கேட்டார்.
அப்பா, நல்லா தெரியும். அவ என்னோட ஜூனியர் தான். நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி தான் அவள் இருந்தாள். ஆனால் நான் சந்திக்கும் போது அவள் அதுபோல் இல்லை. எனக்கு கூட உதவி இருக்கா. ஏதோ நடந்திருக்கு. அதன் பின் தான் மாறி இருக்கா என்று ரசிகா கூற, அவரும் ஆதியும் சிந்தித்தனர்.
ஆதி சார், இதுக்கு தான் இந்த காதல், கல்யாணம் எல்லாம் சரிவராதுன்னு சொன்னேன். பார்த்தீங்கல்ல எல்லாரும் எப்படி பேசுறாங்க. என்னால உங்க பேரும் கெட்டு போயிருச்சு. இது தேவையா? நான் என்னோட வேலையை ஓரளவு முடித்து விட்டேன். நம்ம லிது, நிதுவுக்கு புரிய வைத்து விட்டு நான் போறேன்.
அப்பா, நீங்க என்னையும் இப்படி தத்தெடுப்பீங்கன்னு எனக்கு தெரியாது. என்னால ஆதிக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிரச்சனை வரும். நான் கிளம்புகிறேன். அகரா “அப்பாவை பார்த்துக்கோ” என்று எல்லாருக்கும் கேட்கும்படி கூறி விட்டு, அவள் போனை துண்டித்தாள்.
ரசி, ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது? என ஆதி சத்தமிட்டான்.
அண்ணா, என்ன பண்ற? என்று கீழே ஓடி வந்த மெல்லினா ஆதி கையை பிடித்து இழுத்தாள்.
பாஸ், “இந்தாங்க பைக்கை எடுத்துட்டு போங்க” என்று பைக் சாவியை ஆதியிடம் தூக்கி போட்டான் அகரன்.
இருங்கடா, நானும் வாரேன் என்ற தமிழரசனை நிறுத்திய அகரன், நாங்க உங்க நேரலையை அப்புறம் பார்க்கிறோம் என்று ரிப்போர்ட்டர்ஸிடம் கூறி விட்டு அவர் கார்ச்சாவியை வாங்கி, அப்பா போகலாம் என்று அவருடன் வெளியேறினான்.
ரிப்போர்ட்டர் ஒரு பொண்ணும், பையனும் மட்டும் அகரனை பாலோ செய்தனர். இவனுக வேற இடையில? என்று தமிழரசன் சொல்ல, எதுக்கு எல்லாத்தையும் சொன்னீங்க? அகரன் கேட்க, நாம சொல்றது தான் நல்லது. இல்ல புரளியாக எல்லாம் பரவி விடும் என்றார்.
ஆதியும் மெல்லினாவும் பள்ளிக்கு சென்றனர். ரசிகா லிது, நிதுவை பார்க்க வரவில்லை. பள்ளியிலும் இல்லை வீட்டிலும் இல்லை. போன் போட்டால் யாரும் எடுக்கவில்லை. சவிதாவிடம் கேட்டதற்கு ரசிகா அழுது கொண்டே வெளியே சென்றதை மட்டும் சொன்னார்.
எங்க போன ரசி? கத்தினான் ஆதிரேயன். தமிழரசனுக்கு போன் வந்தது. அதில் ரசிகா அவர்களிடம் இருப்பதாகவும், அவர் இலக்கியா கொலை பற்றிய அனைத்தையும் நிறுத்த சொல்லி மிரட்டினார்கள்.
யாருடா நீங்க? அவளுக்கு ஏதாவது ஆனால் உங்களை கொல்லாமல் விட மாட்டேன் என கத்தினான் ஆதி.
விபுதனும் பதட்டமாக ஆதியிடம் ஓடி வந்தான். ரசிகாவை கடத்தியது புரிந்து பசங்க அழுதனர். மீடியாவிலும் இலக்கியாவை கொன்றவன் ரசிகாவை கடத்திய செய்தி அவள் புகைப்படமில்லாமல் வந்தது.
இப்பொழுது தான் ரசிகாவை அனைவருக்கும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மக்களுக்கு கொலைகாரனை போல் ரசிகாவை பார்க்கணும் என்ற எண்ணமும் அதிகமானது. ஆனால் ஆதி ரசிகா பாதித்து விடக் கூடாது என்று அவளது புகைப்படத்தை போலீஸிடம் கூட கொடுக்க மறுத்து, அனைவரும் அவளை தேடி திரிந்தனர்.
அகரன் பின்னே வந்த ரிப்போர்ட்ஸூம் இவர்கள் செய்வதை நேரடி காட்சியாக்கிக் கொண்டிருந்தனர்.
ஆதி போனிற்கு அன்நோன் கால் வந்தது. அவன் எடுத்தவுடன் ரசி, நீயா? என்று கேட்டான். சத்தமில்லாமல் இருந்தது. அவன் அப்படியே நின்று கொண்டிருக்க, ரசிகா மெதுவாக பேசினாள்.
ஆதி, இங்க நிறைய பொண்ணுங்க இருக்காங்க. அவங்களிடமிருந்து தப்பி வந்து தான் பேசுறேன். இது எந்த இடமென்று தெரியவில்லை. லொக்கேஷன் ஷேர் பண்ணி இருக்கேன். போலீஸோட சீக்கிரம் வாங்க என்று அவள் சொல்ல,
“டேய் இந்தா இருக்கா. பிடிங்கடா அவளை” என்று ரசிகாவை விரட்டினார்கள். அவள் போனை மறைத்துக் கொண்டே ஓடினாள். ஆனால் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. விற்கவிருக்கும் பொண்ணுங்களுக்கு அடுத்த தனி அறையில் ரசிகாவை வைத்திருந்தனர்.
ரசிகா லொக்கேசனை ஷேர் செய்ததை சொன்னவுடனே ஆதி கிளம்ப, மற்றவர்களும் கிளம்பினர்.
அங்கே சென்றதும் அகரன், ஆதி ரசிகா பெயர் கூறிக் கொண்டே அவ்விடம் வந்தனர். அவள் அறையில் நன்றாக இருந்தாள். ஆனால் சக்தியை தலையில் காயத்துடன் கட்டிப் போட்டிருந்தனர். அவனை பார்த்து திகைத்த ஆதி, ரசிகாவை பார்த்தான். அவள் சக்தியை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரசி என்று ஆதி அவளிடம் செல்ல எண்ணி நகர்ந்தான். ஓர் உருட்டு கட்டை ஆதியின் காலுக்கு முன் வந்தது. அவர்களை சுற்றி இருபதுக்கும் மேற்பட்டோர் வந்தனர்.
காப்பாத்துங்க..காப்பாத்துங்க..என்று பொண்ணுங்க கத்தும் சத்தம் கேட்டு, அமைதியா இருக்கிறீங்களா? இல்லையா? என்று பொண்ணுங்க அறைக்கு சென்று அவர்களை ஆட்கள் சிலர் அடித்தனர். இருப்பத்தைந்துக்கும் மேற்பட்ட பொண்ணுங்க விற்பனைக்காக அடைத்து வைக்கப் பட்டிருந்தனர்.
ரிப்போர்ட்டர் பொண்ணு மட்டும் வெளியேயிருந்து உள்ளே நடப்பதை மக்களுக்கு காட்சியாக்கிக் கொண்டிருந்தாள்.
ஆதி, எதுக்கு தனியா வந்தீங்க? அகரா உனக்கு அறிவில்லையா? இப்ப என்ன செய்றது? என்று ரசிகா புலம்ப, மூளை இருந்தா இப்படியா ஆதி ஏமாந்து போயிருப்பான்? சக்தி சொல்ல, வாயை மூடு என்று ரசிகா திட்டினாள். ரசிகாவையும் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
என்ன டியர்? எதுக்கு மாமா மேல கோபம்? சக்தி ரசிகாவிடம் கேட்க, சக்தி உனக்கு நேரம் சரியில்லை. இரு நாங்க முடிச்சிட்டு வந்து உன்னை பார்க்கிறோம் என்று அகரன் ஆதியுடன் சண்டை போட தயாராக நின்றான். அந்த ரிப்போர்ட்டரும் உதவ வந்தான்.
ஆதி சக்தியை முறைத்து விட்டு, சண்டையை ஆரம்பித்தனர் மூவரும். முடியும் நேரம் பிரபாகரன், தமிழரசன், மெல்லினா, விபுதன் போலீஸூடன் அவ்விடம் வந்தனர்.
போலீஸார் அனைவரையும் அரெஸ்ட் பண்ண, மறைந்திருந்த கருணாகரனும் ஆல்பர்ட்டும் ஆதாரத்துடன் பிடிபட்டனர்.
டேய் ஆதி, இதுக்கு நீ மொத்தமா வருத்தப்படுவடா என்று ஒருவர் கத்தினார்.
சக்தி கட்டை அவிழ்த்து விட, வா டியர் நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சக்தி ரசிகா அழைக்க, அங்கிருந்த கட்டையை எடுத்து அவன் முதுகிலே போட்டாள் ரசிகா.
டியர், என்ன பண்றீங்க? மாமாவுக்கு வலிக்குது. நம்ம ரூம்ல போய் எல்லாத்தையும் வச்சுக்கலாம் என்றான் சக்தி.
லூசாடா நீ? எனக்கு நீ யாருன்னே தெரியாது. நீ உதவ வந்திருக்க? தப்பித்து விடலாம்ன்னு நினைச்சா. பிரப்போர்ஸ் பண்ற? இதுல பாட்டு வேற..அதான் அவனுக கடுப்பாயிட்டானுக. அவனுக போட்டிருந்தா நீ நேரடியா போய் சேர வேண்டியது தான் என்றாள்.
மாமா மேல உனக்கு எவ்வளவு அக்கறை? சக்தி கேட்க, அகரன் அவனிடம் வந்து, நீயா போயிட்ட உயிரோட போயிருவ. இல்லை என்னோட பாஸ் உன்னை பார்சல் செய்ய வேண்டி வரும் என்றான்.
டேய் ஆதி, நான் என் காதலில் ஸ்ட்ராங்கா இருப்பேன் என்று கிரீஸ்ஸில் காலை வைத்து வழுக்கி விழ வந்தவன் நானாக நின்று, டியர் சும்மா உனக்கு விளையாட்டு காட்டினேன் என்று சமாளித்தான்.
ரசிகா அவனிடம் சென்று, இந்தா இதை தலையில் கட்டிக்கோ என்று அவனிடம் அவளது கைக்குட்டையை கொடுத்தாள்.
மாமாவுக்கு கட்டி விட மாட்டீங்களா? சக்தி கேட்க, ராஸ்கல் கொன்றுவேன் என்று ஆதி சத்தமிட்டான்.
டேய் உனக்கென்னடா? என்னோட டியர் எனக்கு கட்டி விடுவா? என்றான் சக்தி. ரசிகா ஆதியை பார்த்தாள்.
அகரன் கோபமாக சக்தியிடம் வந்தான். மெல்லினா அவன் முன் வந்து. அது என்ன எதுக்கெடுத்தாலும் என் அண்ணாவோட போட்டிக்கு நிக்குற? என்று மெல்லினா சக்தியை தள்ளினாள். அவன் தலையில் அடிபட்டு கீழே விழுந்து மயங்கினான்.
அடிப்பாவி அவனை கொன்னுட்டியா? அகரன் கேட்க, அகரா நான் தள்ளி தான் விட்டேன். அவன் கீழே விழுந்துட்டான் என்றாள் பாவமாக. அகரன் அவனிடம் சென்று அவன் மூச்சை பார்த்தாள்.
மெல்லி, கொலை கேஸ் ஏதும் உன் மேல் விழாது. உயிரோட தான் இருக்கான் என்றான் அகரன். எல்லாரும் அவனருகே வந்து அவனை பார்க்க, படாரென எழுந்த சக்தி, டியர் எனக்கு மயக்கமா இருக்கு. என்னை எனர்ஜி வேணும். கிஸ் கொடு என்றான்.
“நீ அளவுக்கு மீறி பண்றடா” என்று ரசிகா ஆவேசமானாள்.
ஆதி ரசிகா கையை பிடிக்க, டியர் அவன் கையை பிடிக்காதே! ச்சீ..ஆதி, என்னோட ஆளு கையை விடுடா என்று கத்திக் கொண்டே சக்தி மெல்லினாவை பார்த்து கையை நீட்டினான். அவன் கையை தட்டி விட்ட அகரன் வேகமாக மெல்லினாவை அங்கிருந்து வெளியே அழைத்து வந்தான்.
ஆதி, நீ தேவையில்லாமல் எங்க விசயத்துல தலையிடுற? ஆல்பர்ட் சத்தமிட்டான்
அப்புறம் மிரட்டலாம். இப்ப வாடா என்று போலீஸ் அவனை இழுத்து சென்றனர்.
ரிப்போர்டர் இருவரும் கேமிராவுடன் உள்ளே வந்தனர். ரசிகா அவர்களை பார்த்துக் கொண்டே ஆதி கையை விட்டு, பிரபாகரனின் பின் நின்று கொண்டாள்.
ரசிகா மேம், உங்களிடம் தான் பேசணும்? அவன் சொல்ல, ப்ளீஸ் அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. கிளம்புங்க. உங்களுக்கு தெரிய வேண்டிய எல்லாமே தெரிந்து விட்டதுல்ல. ரசி எங்களுடன் தான் இருப்பா என்றான் ஆதிரேயன்.
ஆதி, நான் சும்மா சொல்லலை. நான் கிளம்புகிறேன் ரசிகா சொல்லவும். அத்தை உனக்கு என்ன தான் பிரச்சனை? கொஞ்சமாவது எல்லார் நிலையையும் யோசித்து பாரு விபுதன் சொன்னான்.
விபு, வா நாம போகணும் என்று ரசிகா அவன் கையை பிடித்தாள். அவள் கையை தட்டி விட்ட விபுதன், எங்க போகப் போற? நாம எங்க தங்குவோம்? சொல்லு என்றான். ரசிகா கண்ணீருடன் நின்றாள்.
ரிப்போர்ட்டரை பார்த்து கண்ணசைத்தான் ஆதி. அவர்கள் ஓ.கே என்று கையசைத்தனர்.
ரசி, நாம வீட்டுக்கு போகலாம்? ஆதி அவள் கையை பிடிக்க, அவள் கேமிராவை பார்த்துக் கொண்டே எடுத்து விட முயற்சித்தாள்.
அவள் அவளை நெருங்கி முத்தமிட்டான். விடுங்க ஆதி என்று ரசிகா அவனை தள்ளி விட்டாள். அனைவரும் வேடிக்கை பார்த்தனர். யாரும் இருவர் அருகே வர கூட இல்லை.
ஏன் ஆதி இப்படி பண்றீங்க? என்று அமர்ந்து முகத்தை மூடி அழுதாள் ரசிகா. அவள் கையை எடுத்து விட்ட ஆதி, அவன் கொடுத்த டாலரை பிரித்தான். அதிலிருந்து ஆதியின் சிவப்பு ஒளியுடனான ஆதியின் குரல் கேட்க. அனைவரும் கவனித்தனர்.
இதை எதுக்கு கழுத்துல போட்டிருக்க? சொல்லு? என்று ஆதி கேட்க, ரசிகா அதை மாட்டி விட்டு குரலை அணைத்தாள்.
சொல்லு? ஆதி கேட்க, அதை அறுத்து விடுவது போல் கையை கொண்டு சென்றாள். இது உன் கழுத்தில் இல்லையெனில் நான் இறந்ததற்கு சமம் என்று ஆதி சொன்னது நினைவில் வர, என்னால முடியல ஆதி. என்னை விட்டுருங்க. இதுவரை நீங்க பட்ட கஷ்டம் போதும். இதுக்கு மேல் என்னால உங்களுக்கும் கஷ்டம் வேண்டாம்.
நான் கேட்டதற்கு பதில் சொல்லு ?என்றான்.
எனக்கு உங்களை பிடித்ததால் தான் என் கழுத்தில் போட்டிருக்கேன். அதுக்காக சேர்ந்து வாழ முடியாது என்று கத்தினாள்.
ரசி, தமிழரசன் அழைக்க, அப்பா வேண்டாம் என்று ரசிகா மேலும் அழுதாள். வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பொண்ணு அதை கீழே வைத்து விட்டு ரசிகாவை ஓடி வந்து அணைத்தாள்.
பாருங்க ப்ரெண்ட்ஸ், நாம செய்யும் இந்த பாகுபாடு, வேற்றுமை பார்ப்பதால், இந்த பொண்ணு அவள் காதலையும் விட்டு, குடும்பத்தையும் விட்டு, அவளுக்கு அவளாக கீழாக நினைத்து வாழ்கிறாள். இது சரியா? முறையா? நாம் ஏற்படுத்திய பாகுபாடு இந்த பொண்ணை எந்த விதத்தில் பாதித்து உள்ளது. பாருங்கள். நீங்க என்ன நினைக்கிறீங்க? கருத்துகளை உடனே பகிருங்கள். கல்யாணமான பொண்ணாக இருந்தாலும் அவள் கல்யாணம் எவ்விதத்திலும் செல்லாது. அவ்வாழ்க்கையை எப்படி அவள் ஏற்றுக் கொள்வது? ஆதிரேயன்-ரசிகா காதலில் சேரலாமா? வேண்டாமா?
நீங்கள் கூறும் பதிலில் தான் இவர்கள் இருவரின் வாழ்க்கையும் உள்ளது என்றான். பத்து சதவீதம் எதிராகவும் தொண்ணூறு சதவீதம் ஆதி- ரசிகா காதலுக்கு பச்சைக் கொடியாகவும் காட்டப்பட்டது.
இப்ப என்ன சொல்ற ரசி? மெல்லினா கேட்க, ஆமா ரசி அடுத்தவங்களுக்காக உன்னோட வாழ்க்கையை தொலைத்து விடாதே! அகரன் சொல்ல, ஆதியை பார்த்தாள் ரசிகா.
அப்பொழுதும் நேரலை ஓடிக் கொண்டிருக்க, ஆதி வீட்டுக்கு போகலாமா? ரொம்ப டயர்டா இருக்கு என்று ரசிகா மயங்கினாள். ஆதி புன்னகையுடன் அவளை தூக்க, சார் எதுக்கு சிரிக்கிறீங்க? அந்த பொண்ணு கேட்க, என்னோட ரசி, பயத்திலிருந்து மீளவில்லை. அவள் பயந்தால் காய்ச்சல், மயக்கம் வருவது இயல்பு தான். எல்லாருக்கும் நன்றி என்று ஆதி காரில் ஏறினான்.
பாஸ், நான் ஓட்டுகிறேன் என்று அகரன் ஏறினான். அவனருகே மெல்லினா ஏற வந்தாள். விபுதன் முந்திக் கொள்ள, உனக்கு வேலையே இல்லையாடா? என்று அவனுடன் சண்டை போட்டுக் கொண்டே சென்றனர்.
சக்தியை அவன் வீட்டிற்கு அழைத்து சென்றனர் போலீஸார்கள்.
ரசிகாவை விழிக்க வைத்து லிது, நிது, ஆரவ், யோகிதாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றனர் அனைவரும்.
“நான் ஓய்வெடுக்கணும்” என்ற ரசிகா அருகே சென்று அகரன், நாம பேசலாமா? எனக் கேட்டான். வீட்டினர் அனைவரும் இருவரையும் பார்த்தனர்.
பேசலாம் அகரா என்று இருவரும் தனியே வந்து அமர்ந்தனர். எல்லாரும் சோர்வுடன் அங்கேயே அமர்ந்தனர். ஆரவும் யோகிதாவும் லிது நிதுவுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
நல்ல வேலையாக திரிவேஷ் காட்டிய ஆதாரம் தான் நாங்க போலீஸூடன் அங்கு வந்தோம். கருணாகரன் பள்ளியில் உள்ள சித்திரனை மிரட்டி தான் அனைத்தும் செய்திருப்பான். அவர்கள் எல்லார் முன்னும் மாட்டியது தான் கேஸ் ஸ்ட்ராங் ஆகிடுச்சு. அமைச்சர் மகனையும் அரெஸ்ட் பண்ணீட்டாங்களாம் தமிழரசன் சொல்லி விட்டு, இவர்களுக்கு மேல் ஒருவன் இருக்கான். அவனையும் பிடித்து விட்டால் பிரச்சனை முடிந்தது என்றார் தமிழரசன்.
ஆமாம் தாத்தா, “அவனையும் பிடிக்கணும்” என்று விபுதன் ஆதியை பார்த்துக் கொண்டே தமிழரசனுக்கு பதிலளித்தான்.
ஆதிக்கும் பிரபாகரனுக்கும் தெரிந்தவர்கள் மாற்றி மாற்றி அழைக்க, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். மெல்லினா மெதுவாக வெளியே வந்து ரசிகாவையும் அகரனையும் எட்டி பார்த்தாள்.
ருச்சி, இந்த விதியின் விளையாட்டை பார்த்தாயா? நம் சந்திப்பு எப்பொழுதென்றே நமக்கு தெரிந்ததே இல்லை. அப்படி ஒரு கனெக்ட்..தோழனாக உன்னுடன் பழகி, உன்னை காதலித்து, அதுவும் இல்லாமல் இப்பொழுது உனக்கு அண்ணனாக இருக்கேன் என்றான் அகரன்.
அண்ணனா? நீயா? நீ என்னை அக்கான்னு அழைக்கலாமே? ரசிகா கேட்க, அக்காவா? நீ எனக்கு அக்காவா? என விழுந்து விழுந்து சிரித்தான்.
ஏன்டா, நான் அக்காவாக இருந்தால் என்னவாம்? ரசிகா கேட்க, நீ பேசுவது சின்னப்பிள்ளை போல் இருக்கும். எனக்கு நீ அக்காவா? என்று மேலும் சிரித்தான்.
ஆமாடா, நாம இருவருக்கும் இடையில் இரு மாதம் தான் இருக்கும். நான் தான் உனக்கு முன் பிறந்தவள்.
அதுக்காகவெல்லாம் உன்னை அக்கான்னு கூப்பிட முடியாது என்றான் அகரன்.
அகரா, “நீ அக்கான்னு தான் சொல்லணும்” ரசிகா சொல்ல, முடியாது, நீ எனக்கு ருச்சி தான். அக்காவா இருந்தா என்ன? தங்கையா இருந்தா என்ன? அகரன் கேட்டான்.
அக்கா, சொல்லுடா என்று அவனருகே வந்தாள்.
ருச்சி வந்த நான் என்ன செய்வேன்னு தெரியாது என்றான்.
என்னடா செய்வ பொடிப்பயலே? என்று ரசிகா மேலும் பேச, என்னை பொடிப்பயன்னா சொன்ன ருச்சி. இரு வாரேன் என்று தண்ணீர் டியூப்பை எடுத்து ரசிகா மீது அடித்தான். அவள் அவனிடமிருந்து டியூப்பை பறிக்க, மெல்லினாவும் அவள் பின் ஆதியும் வந்து கொண்டிருந்தனர்.
இருவரும் டியூப்பிற்காக அடித்துக் கொள்ள, தண்ணீர் மெல்லினா மீது பீய்ச்சி அடித்தது. மெல்லினா கத்தவும் ஆதி அவளிடம் வந்தான். அவன் மீதும் தண்ணீர் பட, மெல்லினாவும் ஆதிரேயனும் முழுதாக நனைந்து விட்டனர்.
அகரனும் ரசிகாவும் அதிர்ந்து இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றனர். லிது, நிது, ஆரவ், விபு, யோகி அங்கே வந்து அவர்கள் கையிலிருந்ததை பிடுங்கி தண்ணீரில் விளையாட ஆரம்பித்தனர்.
மெல்லினாவும் ஆதியும் அகரன் ரசிகாவை முறைத்து விட்டு கிளம்ப சென்றனர். ஆதி மாமா ஆரவ் அழைக்க ஆதி அவனை பார்க்க, விபுதன் ஆதி மெல்லினா மீது தண்ணீரை அடித்தான்.
ஆரவ்வும், யோகியும் பிரபாகரன், தமிழரசனுடன் கூட விளையாடி இருப்பர். ஆதியிடம் அதிகம் ஒட்டாமல் தான் இருந்திருப்பர்.
ஆதியும் புன்னகையுடன் அவர்களுடன் இணைந்து கொள்ள, மெல்லினா, ரசிகா, அகரனும் சேர்ந்தனர். மகிழ்ச்சியாக தண்ணீரில் விளையாடி விட்டு உள்ளே மொத்தமாக வந்து நின்றனர்.
சவிதாவும், பிரபாகரனும் கையை கட்டிக் கொண்டு அனைவரையும் பார்த்தனர்.
எல்லாரும் என்னை விட்டு விளையாடிட்டீங்க? என தமிழரசன் செல்லமாக கோபித்தார். சீதா அவர்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே வேலையை கவனித்தார்.
ஆதி, இது என்ன சின்ன பிள்ளையாட்டம்? பிரபாகரன் கேட்டார்.
சார், பாஸ் எதுவும் செய்யலை. நாங்க தான் என்று அகரன் ரசிகாவை பார்த்தான். ஆமா அங்கிள் நாங்க தான் சண்டை போட்டுக்கிட்டு இருந்தோமா? ஆதியும் மெல்லியும் இடையே வந்துட்டாங்க. அப்படியே விளையாடிட்டோம் என்று ஆதியை பார்த்தாள் ரசிகா.
ரசிம்மா, நீங்க மோசம். அப்பாவை விட்டு விளையாடலாமா? என்று தமிழரசன் அகரன் காதை பிடித்தார்.
மாமா, நாங்களும் தான் விளையாடினோம் என்று அகரன் காதை பிடித்திருந்த அவர் கையை மெல்லினா தட்டி விட்டாள்.
சரி, போங்க தயாராகி வாங்க. சாப்பிட வெளிய நம்ம ஹோட்டலுக்கு போகலாம் என்றார் பிரபாகரன். சவிதாவை அனைவரும் பார்த்தனர்.
நானும் வாரேன். நான் பழைய படி நல்லா இருக்கேன். ரசி வெளிய போயிடுவால்லோன்னு தான் குணமாகாதது போல் நடித்துக் கொண்டிருந்தேன்.
நடிச்சீங்களா? அகரன் கேட்க, ஆமா ரசி தான் இனி போக மாட்டால்ல? போக மாட்டேல்லம்மா? என்று சவிதா கேட்க, ரசிகா ஆதியை பார்த்து விட்டு, நான் எங்கேயும் போகலை என்றாள்.
ரசி, “ஐ லவ் யூ” என்று மெல்லினா அவளை கட்டிக் கொண்டு அகரனை பார்த்து ஒற்றை கண்ணடித்தாள். அவன் அவளை பார்த்து முறைத்தான்.
போதும் போதும் என்று ஆதி மெல்லினாவை ரசிகாவிடமிருந்து விலக்கினான். சரி அண்ணா, இப்ப உன்னோட டர்ன் நீ ரசியை கட்டிக்கோ என்றாள் மெல்லினா புன்னகையுடன்.
“சின்னப்பிள்ளை மாதிரி பேசுடி” என்றார் சவிதா.
அம்மா, நான் ஒன்றும் சின்னப்பொண்ணு இல்லை. எனக்கு பதினெட்டு வயசாகுது. அடுத்த வருசம் கல்லூரிக்கு போகப் போறேன் என்றாள்.
அத்தை, படித்தால் தான் கல்லூரி நினைப்பே வரணும். உங்க பொண்ணு கல்லூரிக்கு வருவாளா? விபுதன் கேட்க, டேய் அதிகமா பேசாத. அவள பத்தி உனக்கு தெரியாது என்றார் சவிதா.
உனக்கு என்னடா பிரச்சனை? என்னை டேமேஜ் பண்ணலைன்னா தூக்கமே வராதா? மெல்லினா கேட்க, “விபு சும்மா மெல்லியிடம் வம்பு பண்ணாத” என்று ரசிகா அகரனை பார்த்தாள். அவன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“பேச்சை குறைச்சிட்டு தயாராகி வாங்க” என்றார் பிரபாகரன்.
நான் என்னோட வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று அகரன் சொல்ல, அகரா நீயும் தான் வரணும். இனி நீயும் எங்களது குடும்பம் தான? உன்னோட அறை அப்படியே தான் இருக்கு. தயாராகி வா என்றார் பிரபாகரன்.
சார், நான் என்று சவிதாவை பார்த்தான் அகரன்.
ஆமா, நீ அண்ணா பையன்னா இங்கே இருக்கலாமே? ஆதி நண்பனாக இதற்கு முன் இருந்த? இப்ப நீயும் ரசியும் என்னோட மருமக, மருமகன் தானே உறவு வரும். தாராளமாக தங்கலாம் என்று பிரபாகரனிடம் சரி தானே? என்று கேட்டார் சவிதா.
ம்ம், சரி தான் என்ற பிரபாகரன், சீக்கிரம் எல்லாரும் அறைக்கு சென்று தயாராகி வாங்க என்று எல்லாரையும் அனுப்பினார் பிரபாகரன்.
“தேங்க்ஸ்டா” என்று தமிழரசன் பிரபாகரனை அணைத்தான்.
“உங்க பையனுக்கு மெல்லியை பிடிக்கும்ல்ல?” சவிதா கேட்க, பிரபாகரனும் தமிழரசனும் பார்த்துக் கொண்டனர்.
ம்ம்..பிடிக்கும். ஆனால் உங்க பொண்ணு சின்னப் பொண்ணு தான்னு பையன் ரொம்ப தயங்குறான்.
எங்களுக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. பொண்ணுக்கு பிடிக்கணும் என்றார் சவிதா.
ம்ம்..அதுவும் சரிதான் என்று அவர் பேசிக் கொண்டிருக்க, அகரன் ஃபார்மல் ஆடையில் சர்ட்டை டக்கின் செய்து போனுடன் வெளியே தயாராகி வந்தான்.
அப்பா, “கால் பேசிட்டு வாரேன்” என்று அகரன் அவர்களை பார்த்துக் கொண்டே நகர்ந்து சென்று பேசினான். பின் அனைவரும் தயாராகி வந்தனர்.
ஹோட்டலில் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். அகரனுக்கு போன் வந்தது. அவன் கட் செய்ய மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தது. எல்லாரும் அவனை பார்க்க, ராங் நம்பர் என்றான் அகரன். ரசிகா சந்தேகமாக அவனை பார்த்தாள். போனை எடுத்து அணைத்து வைத்தான் அகரன்.
அகரா, “இன்று நாம பிரபா வீட்லயே தங்கலாம்” என்றார் தமிழரசன்.
அப்பா, “நாம கிளம்புவோம்” என்றான் அவன்.
‘
ஏன் மாப்பிள்ள, எங்க வீட்ல தங்க அவ்வளவு சிரமமா இருக்கா? சவிதா கேட்க, மாப்பிள்ளையா? உங்களுக்காக? மாம்ஸ் என்றான் விபுதன்.
அகரன் அலட்டிக் கொள்ளாமல், மேம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்றான்.
நான் மாப்பிள்ளைன்னு அழைத்தால் நீங்க என்னை அத்தைன்னு தானே அழைக்கணும். சொல்லி பழகிடுச்சு மேம் என்றான்.
சரி, சாப்பிடுங்க என்றான் ஆதி. உணவை முடித்து விட்டு எல்லாரும் வீட்டிற்கு வந்து தூங்க சென்றனர்.
அகரன் தூங்க முடியாமல் கவலையுடன் அவர்கள் தண்ணீரில் விளையாடிய இடத்திற்கு வந்து நின்று கொண்டிருந்தான். அவன் அறையை விட்டு வெளியே வந்தததை பார்த்த மெல்லினா அவன் பின் வந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அகரன் அவன் பாக்கெட்டில் இருந்து மெல்லினாவின் பிரேஸ்லெட்டை எடுத்து கண்ணீருடன் அதை பார்த்தான்.
மெல்லினா மெதுவாக அவனை நெருங்கி அவன் இடையை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள். அகரன் பயந்து நகர, அகரா..நான் தான் என்றாள் மெல்லினா. அகரன் அவள் கையை எடுக்க முயன்றான்.
எனக்கு தெரியாதுன்னு நினைச்சியாடா அகரா? உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு எனக்கு நல்லா தெரியும் என்றாள். அவன் அசையாது நின்றான்.
நீ வச்சிருக்குறது என்னோட பிரேஸ்லெட் தான? மெல்லினா கேட்க, அவன் பதிலளிக்கவில்லை.
எனக்கு இப்ப கூட காதலிக்கிறவங்க என்ன பேசுவாங்கன்னு தெரியல. கிஸ் பண்ணிப்பாங்கன்னு தெரியும்.
உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சியா? அன்றைக்கு நான் ஆசையா பேச உன்னறைக்கு வந்தேன். விபுவிடம் காதலை சொல்ல மறுபடியும் ஐடியா கேட்டு தான் வந்தேன். நீ இல்லை.
மறுநாள் அவன் என்னை ஹர்ட் பண்ணிட்டான். அப்பவும் உன்னை தான் தேடி வந்தேன். ஆனால் நீ இல்லை என்றதும் எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? என்னிடம் உள்ள ஏதோ ஒன்று காணாமல் போனது போல் இருந்தது. அப்பொழுது மட்டுமல்ல எனக்கு தோன்றும் நேரமெல்லாம் உன்னறைக்கு வருவேன்.
அப்படி தான் என் பிரேஸ்லெட்டை உன் படுக்கையில் பார்த்தேன். அப்பொழுது கூட நான் தான் இதை உன்னறையில் விட்டு சென்று விட்டேன் என நினைத்தேன். நீ என்னுடையதை எடுத்து வைத்தது கூட எனக்கு தெரியலை. நேற்று தான் எனக்கு புரிந்தது.
நான் விபுவிடம் என் காதலை சொல்லாமலே அவன் என்னை தப்பா பேசிட்டான். நீ பேசிய சில விசயங்களை வைத்து நீயும் அப்படிதான் என்னை நினைக்கிறாயோன்னு நினைத்து தான் இருந்தேன். அந்த கிளப்பில் நீ என்னை மீட்டுக் கொடுக்கலை. உன்னை தான் நீ மீட்டிருக்கன்னு புரியவே தாமதமாக்கி விட்டேன்.
எனக்கு விபு மேல காதல் இருந்ததான்னு தெரியல. அவனது வார்த்தையில் அவன் மீதுள்ள எல்லாமே இல்லாதது போல் ஆனது. எனக்கு நீ பக்கத்திலேயே இருக்கணும் அகரா. அவ்வளவு தான்.
என்னோட சந்தோசமான நேரத்திலும், கஷ்டமான நேரத்திலும் உன்னை தான் என் மனது தேடுது. அது காதலா இல்லை பாசமான்னு தெரியல. ஆனால் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் என்று அகரனை அணைத்திருந்த இறுக்கத்தை அதிகப்படுத்தினாள் மெல்லினா. அகரன் மெதுவாக அவள் பக்கம் திரும்பினான்.
அகரா, நீ எங்கேயும் போக மாட்டேல்ல? மெல்லினா நிமிர்ந்து அவனை அணைத்துக் கொண்டு கேட்டாள். அவன் கட்டுப்பாடுகள் உடைந்து அகரனது கண்ணீர் வந்தது. லவ் பண்றவங்க கிஸ் பண்ணுவாங்க ஜாங்கிரி. நான் பண்ணவா? அகரன் கேட்க, ம்ம்..என்று மெல்லினா அகரனை முதலில் முத்தமிட்டாள். இருவரது கண்ணீரும் உரசி காதல் அருவியாக முத்தமிட்டனர்.
மெல்லினாவை நகர்த்திய அகரன், நான் உன்னிடம் காதலை சொல்லாததற்கு காரணம் இருக்கு. நீ இன்னும் பள்ளி கூட முடிக்கலை. என் பாஸோட தங்கை என்பதால் தான் தயக்கம். இல்லையெனில் தயக்கம் இருந்திருக்காது.
அகரா, இப்பவாது சொல்லு? காதலிப்பவர்கள் என்ன பேசுவாங்க? மெல்லினா கேட்க, அகரன் புன்னகையுடன் நீ கல்லூரி போன பின் சொல்கிறேன். படித்து நீயும் உன் அண்ணா போல் பெரிய ஆளா வரணும் என்றான் அகரன்.
என்னது? படிச்சிட்டு வேல பார்க்கணுமா? நோ..நோ..நீ எனக்கு பதிலா அண்ணா மாதிரி வேலை பார்ப்பாயாம். நாம கல்யாணம் பண்ணி நிறைய பிள்ளைய பெத்துக்கலாம் என்றாள்.
நீயே குட்டிப்பிள்ளை மாதிரி இருந்துட்டு உனக்கு பிள்ளை வேணுமா? என்று அகரன் புன்னகையுடன் கேட்டான்.
ஆமா, எனக்கு வேணும். உனக்கு வேணாமா? மெல்லினா கேட்க, அவளை அணைத்துக் கொண்டு, மெல்லி நமக்கு எட்டு வருட வயது வித்தியாசம். உன்னோட ப்ரெண்ட்ஸ் கேலி பண்ணா என்ன செய்வ? அகரன் கேட்டான்.
அகரா, தூக்கு என்றாள்.
அவன் அவளை தூக்க, அவனது நெற்றியில் படாரென முட்டி விட்டு, இதுக்கு மேல தேவையில்லாமல் யோசித்த இப்படி முட்டி விட்டு உனக்கு முத்தம் கொடுத்திருவேன் என்று அகரனை முத்தமிட்டாள்.
அவளை விலக்கி ஓரிடத்தில் அமர்ந்து அவளை மடியில் அமர்த்தி, விளையாடாமல் பேசு மெல்லி.
நான் விளையாடலை. முத்தம் தானே கொடுத்தேன்.
ஜோக் பண்ண சொல்லலை.
சரி அகரா, நீ கோபப்பட்டால் நான் தாங்க மாட்டேன். இந்த மெல்லினாவிடம் எவனாவது பேசி ஜெயிக்க முடியுமா? அவனுகள பங்கமாக்கிடுவேன். அகரா, உன்னுடன் நெருக்கமாக பேசும் போது அதிகமாக எந்த ஃபீலும் இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்ப உன் அருகிலே இருக்கணும் போல இருக்கு. நாம இங்கேயே தூங்கிடலாமா? மெல்லினா கேட்க, மெல்லி போதும். நீ அறைக்கு போ தூங்கு. காலையில் ஸ்கூலுக்கு போகணும்ல்ல?
நீ என்னிடம் சொல்லலடா? மெல்லினா கேட்க, “ஐ லவ் யூ ஜாங்கிரி” என்றான் அகரன்.
ஜாங்கிரியா?
ம்ம்..
எனக்கும் பிடிக்கும். ஆனால் ஒன்றுக்கு மேல் சாப்பிட மாட்டேனே? அவள் கூற, நான் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுவேன் என் ஜாங்கிரியை என்றான் அகரன்.
அகரா, திரீ சொன்னது சரியா போச்சு. ஃப்ளர்ட் பண்றீயா? நான் செய்வதை பார்க்கிறாயா? என்று மெல்லினா அவன் கன்னத்தை கடித்தாள்.
மெல்லி, இது சரியில்லை. நீ போ. அப்புறம் என் மூடு மாறி விடும் என்றான் அகரன்.
சரி, இது தான் பைனல்..என்று அவன் இதழில் மென்மையான முத்தத்தை கொடுத்து, “லவ் யூ மாமா” என்று அவள் நகர, மாமாவா? என்று மெல்லினா கையை பிடித்து இழுத்து அவள் இதழ்களில் முத்தமிட்டான்.
மெல்லி, உனக்கு கிஸ் வேணும்ன்னா “மாமா”ன்னு சொல்லு. நான் உன்னை “ஜாங்கிரி”ன்னு சொன்னா நீ கிஸ் பண்ணனும் என்றான் அகரன். ம்ம்..சூப்பர் டீல் அகரா. “லவ் யூ” என்று சிரித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினாள் மெல்லினா.
இருவரையும் விபுதன் அவனறையிலிருந்து பார்த்துக் கொண்டு கண்ணீரை ஈரமாக்கி மெல்லினாவை இவன் பேசிய கடும் வார்த்தைகளை கரைத்துக் கொண்டிருந்தான் புன்னகையுடன்.
error: Content is protected !!