Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 7

கலாட்டா – 7

“ஹேய் அவதார் குட்டி!!!” என்று திடீரென தன் ஜன்னலின் முன் வந்து குதித்து நின்ற அஜய்யைக் கண்டு கீதாவின் இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது.



Advertisement

“ஊஃப்” என்று அவனைக் கண்டு பெருமூச்சு விட்டவள் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, “ஹேய் டைனோசர் வாயா யாரைப் பார்த்து அவதார் குட்டின்னு சொல்ற?? சீவிடுவேன் சீவி..” என்று அவனை மிரட்ட,

Advertisement

“ஹாஹா ஹாஹா” என்று ஆர்ப்பாட்டமாக நகைத்த அஜய், ” நல்லா அரைக்காப்பிடி சைஸ்ல இருந்துட்டு நீ என்னை சீவிடுவியா?? எந்த சீப்பை வச்சு சீவுவ?? உன் சீப்பெல்லாம் யூஸ் பண்ணிறாத அப்பறம் உன் தலையில இருக்க பொடுகெல்லாம் என் தலைக்கு வந்துடும்” என்று அவன் அவளை மேலும் கிண்டல் செய்ய,

Advertisement

இவனிடம் வாயைக் கொடுத்தால் பேசியே கொன்று விடுவான் என்று உணர்ந்த கீதா, “அதான் உங்க ஊரைப் பார்த்து எங்க அப்பாவே கிளம்ப சொல்லிட்டாருல அப்பறம் எதுக்கு இங்க வந்து சீனைப் போட்டுட்டு இருக்க.. கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்” என்று அவள் சலித்துக் கொள்ள,

Advertisement

குறும்புடன் அவளை நோக்கிய அஜய், “என்னைப் பார்த்து பயப்புடுறியா அவதார் குட்டி” என்று ஹஸ்கி குரலில் கேட்க,

” இப்போ எதுக்கு அன்டைம்ல கள்ளக்காதலன் கூட பேசுற ஆண்ட்டி மாதிரி பேசுற..கன்றாவியா இருக்கு” என்று அவள் அவனை வாரினாள்.

அவனோ மேலும் விரிந்த புன்னகையுடன், “நல்லா பேச்சை மாத்துற.. அப்போ கன்பார்ம் நீ என்னை லவ் பண்ணிடுவோம்னு பயப்புடுற..” என்று கூற,

“மண்ணாங்கட்டி.. என் வாயில ஏதாவது வரதுக்கு முன்னாடி இங்க இருந்து போய்டு.. இல்லை கத்தி எல்லாரையும் கூப்பிட்டேன்னு வையி.. உன் தோளை உருவி என் அப்பா எங்க வீட்டு சோஃபாக்கு கவர் தைச்சு போட்டிடுவாரு.. மரியாதையா கிளம்பு” என்று அவனை விரட்டப் பார்த்தாள் கீதா.

“போறேன் போறேன்.. ஆனா போறதுக்கு முன்னாடி  நீ என்னை மறக்காத மாதிரி ஒன்னை குடுத்துட்டு போகத் தான் திரும்ப வந்தேன்” என்று அவன் சில்மிஷமாய்க் கூற,

” என்ன!!??” என்று அதிர்ந்து போன கீதா சட்டென தன் கைகளை எடுத்து கன்னத்தை மறைத்துக் கொண்டாள்.

“எப்போ பாரு அதே நினைப்பு!!” என்று அவளிற்கு குட்டு வைத்த அஜய், தன் கழுத்திலுள்ள தங்கச் செயினை கழட்டி ஜன்னல் கம்பி வழியாக தன் கைகளை நுழைத்து கீதாவின் சங்கு கழுத்தில் அணிவித்தான்.

அவனின் இந்த அதிரடியை எதிர்பார்க்காத கீதா அவனை பார்வையால் சுட்டெரித்து, ” இன்னைக்கு தான் பார்த்த பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாதா?? உனக்கு பிடிச்சிருந்தா உடனே என்ன வேணும்னாலும் பண்ணுவியா?? உன்னை என்ன பண்றேன்னு பாரு” என்று அவள் அவன் அணிவித்த சங்கிலியை கழட்ட,

“ரொம்ப சீன் போடாத..  நீயும் என்னை லவ் பண்ண தான் போற.. இப்போவே உனக்கு என்னை பிடிச்சிருச்சு.. அதை நீ மறைக்கிற.. அண்ட் உனக்கு என்னை விட்டா வேற எவனும் சிக்க மாட்டான்.. நீ ஒரு கேப்மாரி நான் ஒரு மொல்லைமாரி.. சோ நம்ம சேருறது தான் கரெக்ட்.. தேவையில்லாம நாம பிரிஞ்சு இன்னொரு பையன் பொண்ணோட வாழ்க்கையை ஏன் கெடுக்கணும்.. சோ நல்லா யோசிச்சு முடிவெடு.. நீ என்ன முடிவெடுத்தாலும் நான் தான் உன் புருஷன்… ஓகே வா அவதார் குட்டி.. அண்ட் இந்த செயினை கழட்டி தூக்கி போடுற சீனெல்லாம் இங்க வேண்டாம்.. நீ இந்நேரம் இதை எந்த செட்டியார் கடையில அடகு வைக்கலாம்னு தான் யோசிச்சுட்டு இருப்பன்னு எனக்கு தெரியும்… அப்படி மட்டும் பண்ணலாம்னு நினைக்காத அப்பறம் உன்னை கல்யாணம் பண்ணிட்டு கூப்பிட்டு போறப்போ உங்க அப்பா டவுரியா இந்த 5 பவுனையும் சேர்த்து போட்டு அனுப்பணும் பார்த்துக்கோ.. இப்போ நான் கிளம்புறேன்.. அடுத்த வாரம் சந்திப்போம் வரட்டா அவதார் குட்டி” என்று அவள் கன்னத்தை தட்டிவிட்டு விசிலடித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பியிருந்தான் அஜய்.

“என்ன நம்ம மனசுல நினைக்கிறதெல்லாம் புட்டு புட்டு வைக்கிறான் … வெளியே கேட்கிற அளவுக்கா நம்ம மைண்ட் மானெங்கெட்டு போய் கிடக்கு.. ஹம்ம் கருமம்.. சரி நம்ம செட்டியார் கடையில வைக்க வேண்டாம்.. போடிக்கு போரப்போ சேட்டு கடையில இதை வச்சு ஒரு கொலுசு வாங்கிரணும்.. எப்படியும் அஞ்சு பவுன் தேறும்” என்று அவன் அணிவித்த சங்கிலியை தூக்கிப் பார்த்துக் கொண்ட கீதாவிற்கு அவன் சொல்லிவிட்டு சென்ற எதையும் பெரிதாய் எடுத்துக் கொள்ள தோணவில்லை..

ஆனால் அவன் என்னதான் விளையாட்டாய் இருந்தாலும், செயல் என்று வந்துவிட்டால் நினைத்ததை சாதிக்காமல் ஓய மாட்டான் என்று அவளிற்கு தெரிய வரும்போது என்னாகுமோ???

வீட்டிற்கு வந்த பின்னும் கோபத்தில் சந்தன பாண்டியனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த ராமனை யாரும் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையில் மூழ்கி இருந்தனர்.

அது அவருக்கு மேலும் கடுப்பைக் கிளப்ப, “இங்க நான் ஒருத்தன் கத்திகிட்டு இருக்கேன்.. நீங்க எல்லாம் கண்டுக்காம உங்க வேலையை பார்த்தா என்ன அர்த்தம்” என்று அவர் கேட்க,

” அதான் நீயே சொல்லிட்டியே கத்திகிட்டு இருக்கேன்னு.. பேசுனா கேட்கலாம் கத்துனா நாங்க என்ன பண்ண” என்று அவருக்கு பதிலளித்த மதுரம் தன் முகத்திற்கு முல்தானி மட்டியைப் போட்டுக் கொண்டிருந்தார்.

“நீங்க பேசாதீங்க.. அங்க அந்தாளு உங்க சின்ன மகன் முன்னாடி என்னை அவ்ளோ அசிங்கமா அறிவிருக்கான்னு கேட்கிறார்.. நீங்க ஒரு வார்த்தை அந்த ஆளை கேட்டிங்களா” என்று ராமன் ஆற்றாமையுடன் கேட்க,

” என் பிள்ளைக்கு அறிவில்லைன்ற உண்மையை அதுக்குள்ள எப்படிப்பா கண்டுபிடிச்சன்னு கேட்கலாம்னு தான் நினைச்சேன்.. அப்பறம் எல்லாருக்கும் முன்னாடி நீ சங்கடப்படுவியேண்ணு தான்டா கேட்கலை.. வேணும்னா போன் நம்பர் கொடு கேட்டு சொல்றேன்” என்று அவர் அலட்டிக் கொள்ளாமல் கூற,

ராமன் தான் தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டி இருந்தது அவரின் பேச்சில்.

” உங்க கூடலாம் மனுஷன் பேசுவானா??” என்று கத்தியவர், அங்கு சோகமே உருவாய் அமர்ந்திருந்த தன் மகனை நோக்கி, “இதோ பாரு அஸ்வத் உங்க அப்பாவையே அந்த ஆள் அவ்ளோ அசிங்கப்படுத்தி இருக்கார்.. அப்படி இருந்தும் அவரோட பொண்ணு தான் உனக்கு வேண்டுமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ.. அப்பா உனக்கு இதை விட அழகா பொண்ணைப் பார்த்து அடுத்த மாசமே உன் கல்யாணத்தை எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்குற மாதிரி நடத்திக் காட்டுறேன்” என்று அவர் பேசிக் கொண்டே போக,

நடுவில் இடையிட்ட வினோத், ” ஏன் அங்கிள் கல்யாணத்தை கூவத்துல வைக்க போறீங்களா?? அப்போ தான் எல்லாரும் கப்புல மூக்குல விரலை வச்சு அடைச்சுப்பாங்க” என்று தன் சந்தேகத்தை கேட்க,

ராமன் கோபத்தில் கையில் கிடைத்த டிவி ரிமோட்டை அவனை நோக்கி எரிய, வினோத்தோ நூலிழையில் அதிலிருந்து தப்பினான் .

” எல்லா பிரச்சனைக்கும் நீ தான் டா காரணம்.. ஒழுங்கா கரெக்ட் அட்ரஸ் கேட்டு வந்தா அவன் குடிகாரன் தப்பா சொல்லுவான்னு யாரோ ஒரு அர மென்டல் கிட்ட போய் கேட்டு நீ தப்பான அட்ரஸ் சொன்னதுனால தான் கண்டவன் எல்லாம் எனக்கு அறிவில்லைன்னு சொல்லிட்டு போறான்.. முதல்ல உன்னை கொலை பண்றேன்” என்று அவர் அடுத்து அடிப்பதற்கு என்ன சிக்குகிறது என்று தேட,

அப்போது வினோத்தை காப்பாற்ற அங்கு பிரசன்னமான சீதா, ” இப்போ எதுக்கு நடந்ததையே பேசிட்டு இருக்கிங்க.. விடுங்க.. நடந்தது நடந்திரிச்சு.. அடுத்த வேலையை பார்ப்போம்.. சும்மா இதையே யோசிச்சு டென்ஷன் ஏத்திக்காம வாங்க சாப்பிடலாம்” என்று ஒருவழியாய் அவரை சமாளித்து அழைத்துச் சென்றார் சீதா.

அவர் சென்றதும் தன் பேரனை பார்த்து கண்ணடித்த மதுரம், ” பனிரெண்டு மணி” என்று சிக்னல் கொடுக்க, அதை புரிந்து கொண்ட அஸ்வத்தும் சம்மதமாய் தலையசைத்தான்.

சரியாக பனிரெண்டு மணியாக ஐந்து நிமிடம் இருக்கின்ற தருவாயில் ஒவ்வொருவராய் ராமன் வீட்டு மொட்டை மாடியில் ஆஜர் ஆகினர்.

முதலில் அஸ்வத்தும் வினோத்தும் வர, அடுத்த இரு நிமிடத்தில் சீதாவும் மதுரம் வந்து சேர்ந்தனர்.

அப்போது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து ஏதோ சப்தம் வர, நால்வரும் தங்கள் கவனத்தை அங்கு செலுத்தினர்.

அங்கிருந்து ஏணி போட்டு இந்த மாடிக்கும் அந்த மாடிக்கும் பாலம் அமைத்து ஒரு உருவம் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அது வேறு யாருமல்ல அஜய் தான். அவனைத் தொடர்ந்து ஜீவா, தனம், வாசுதேவ கிருஷ்ணன் என்று ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.

“ஹாய் பாட்டி.. இன்னைக்கு உன் டிரஸ்க்கு மேட்ச்சா அந்த ரூபி செட் செம்ம கலக்கல் போ.. அது நான் வாங்கி கொடுத்தது தான” என்று கேட்டுக் கொண்டே வந்து மதுரத்தின் மடியில் படுத்துக் கொண்டான் அஜய்.

“ஆமா அஜ்ஜு.. டெல்லி போனப்போ வாங்கிட்டு வந்தியே அதுதான்.. நல்லா இருந்துச்சுன்னு நீ தான் சொல்ற.. ஆனா உன் தாத்தா இன்ஸ்டால என் போட்டோக்கு லைக் கூட போடலை தெரியுமா” என்று அவர் தன் கணவனைப் பற்றி புகார் வாசிக்க,

” அடடே என் மது டார்ஜிலிங் உன்னை போய் நான் கண்டுக்காம இருப்பேனா?? நீ பெத்து வச்சிருக்கியே ரெண்டாவது தடிமாடு.. அது என்னோட போனை உடைச்சு போட்டிடுச்சு நேத்து.. அதான் டா பேபி என்னால லைக் போட முடியலை” என்று மதுரத்தின் கன்னம் கிள்ளி கொஞ்சினார் வாசுதேவ கிருஷ்ணன்.

” அடடே மாமா இப்போ மட்டும் உங்களுக்கு நல்லா காது கேட்குது போல” என்று தனம் கிண்டல் செய்ய,

“அது உன் வீட்டுக்காரனை கடுப்பேத்துறப்போ மட்டும் கேட்காம போய்டுது.. நான் என்னமா பண்ண” என்று அவர் பாவாமாய்க் கூற,

“செலக்டிவ் செவிடு அப்படித்தான மாமா” என்று சீதாவும் கிண்டல் செய்ய, அந்த இடமே நகைப்பொலியால் நிறைந்தது.

இது இவர்களின் வாடிக்கை தான்.. தினமும் ராமனும் பரமசிவனும் உறங்கிய பின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாய் குழுமி கும்மாளம் அடிப்பதை தங்கள் வழக்கமாய் கொண்டிருந்தனர்.

அப்போது அஸ்வத்தோ இன்னும் உர்ரென்று அமர்ந்திருக்க, அவனை கவனித்த அஜய், ” டேய் உடன்பிறப்பே எதுக்கு இப்படி ஒரு கிலோ உப்பை திண்ணவன் மாதிரி முகத்தை வச்சிட்டு உட்காந்திருக்க??” என்று கேட்க,

” அட கடுப்பேத்தாத டா.. உனக்கென்ன உங்கப்பா என்ன சொன்னாலும் அதுக்கு ஏட்டிக்கு போட்டியா செஞ்சே பழகிட்ட.. ஆனா நான் அப்படியா?? நானே அஞ்சலியை எப்படிடா அப்பாவை ஏத்துக்க வைக்கண்ணு கவலையில் இருக்கேன்” என்று கூற,

அதைக் கேட்டு நகைத்த அஜய், “நீ ஏன் டா ப்ரோ இவளோ அப்பாவியா இருக்க?? நீ இன்னுமா நம்ம அப்பாங்க நமக்கு அந்த பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு நம்பிட்டு இருக்க?? நம்ம அப்பா ஒத்துக்கிட்டாலும் பொண்ணோட அப்பாங்க சத்தியமா ஒத்துக்க மாட்டாங்க… அவங்க நம்ம டாடிஸ்க்கு மேல இருக்கானுங்க டா” என்று அஜய் நிதர்சனத்தை கூற,

அவன் தலையில் கொட்டிய மதுரம், “டேய் சும்மா நெகட்டிவா பேசி என் பேரனை ஃபீல் பண்ண வைக்காத.. அஷு கண்ணா நீ ஒன்னும் கவலைப்படாத… என்னை நம்பு.. உன்னை உன் ஆளோட சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு..  மதுரத்தை நம்பினோர் கைவிடப்படார்..” என்று அவர் அபயம் அளிக்க,

” ஆனா அதுக்கு முதல்ல அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியணுமே” என்று சீதா கேட்க,

” அவகிட்டயே கேட்டிடுவோம்” என்று மதுரம் பதிலளித்தார்.

“இப்போ எப்படி கேப்பிங்க?? அந்த பொண்ணு நம்பர் கூட இல்லை” என்று தனம் வருந்த,

” அதான் இருக்கே” என்று சிரிப்புடன் ஒரு சீட்டை எடுத்து ஆட்டிக் காண்பித்தார் மதுரம்.

” எப்படி பாட்டி!!!” என்று அஸ்வத் பூரிப்புடன் அந்த காகிதத்தை வாங்கிக் கொண்டு கேட்க,

“மதுரமா கொக்கா!!! அங்க சண்டை நடந்துட்டு இருக்கப்போவே நைசா அந்தப்பிள்ளையோட தங்கச்சி அபிக்கிட்ட போய் அஞ்சலி நம்பரை கரந்துட்டு வந்துட்டேன்” என்று அவர் பெருமையுடன் கூற,

” லவ் யூ பாட்டி” என்று அவரை மகிழ்ச்சியில் கட்டிக் கொண்டான் அஸ்வத்.

” டேய் என்னை கட்டிப் பிடிக்கிறது இருக்கட்டும்.. முதல்ல உன் ஆளுக்கு உன்னை பிடிக்கிதான்னு போய் கேளு போ” என்று அவனை துரத்தியவர், தன் மடியில் படுத்திருந்த அடுத்த பேரனை பார்த்து, ” நீ என்ன டா படவா பண்ணின?? அந்தப்பொண்ணு என்ன சொல்லுது.. உன்னை பிடிச்சிருக்கா??” என்று கேட்க,

” அடப்போங்க அத்தை அந்த கலவரம் நடக்கலைனா கூட இவன் பண்ணின சேட்டைக்கு அந்த பொண்ணே எங்களை வெளிய தொரத்தி விட்டிருக்கும்” என்று தனம் அங்கு நடந்ததைக் கூற, அனைவரும் அதை எண்ணி நகைத்தனர்.

அஜயோ அதை கண்டுகொள்ளாமல், “பேசாம ரெண்டு பேரையும் கடத்திட்டு வந்து நாங்க கல்யாணம் பண்ணிக்கவா??” என்று தீவிரமான குரலில் கேட்க,

அவன் வாயில் ஒரு அடி போட்ட மதுரம், “அடி படவா.. பேச்சைப் பாரு.. நான் இதுக்கு வேற ஒரு ஐடியா வச்சிருக்கேன்” என்று மர்மப் புன்னகையுடன் மதுரம் பாட்டி கூற,

” என்ன ?? என்ன??” என்று அனைத்து திசையிலும் இருந்து எதிர்பார்ப்புடன் கேள்விக் கணைகள் வந்து அவரைத் தாக்க,

அவரோ ஒரு நமுட்டுச் சிரிப்புடன், “வேறு என்ன பிளான் A தான்” என்று கூற,

அனைவரும் அதைக் கேட்டு, “என்ன பிளான் Aவா??” என  மலைத்துப் போய் அமர்ந்து விட்டனர்.

அப்படி அனைவரும் அயர்ந்து போகும் அளவிற்கு அப்படி என்ன திட்டமாக இருக்கும் அந்த பிளான் A ??? பொறுத்திருந்து பார்க்கலாம்…

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!