Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedஅவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன் – 13

 அத்தியாயம் 13:

கௌரி சந்தியாவிடம் “நா ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீயே?” என்றாள் .

“அப்படி என்னடி கேக்க போற”

“இல்ல. பேங்ளூர்ல உனக்கு கல்யாணம் நிச்சயமாச்சே. அது ஏன் நின்னுச்சு. அந்த மாப்பிள்ளைய நீ லவ் பண்ணலையா” என்று கௌரி கேட்டதும் யோசனையானாள் சந்தியா.



Advertisement

“உனக்கு பிடிக்கலன்னா கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம் சந்தியா”

“அப்டில்லாம் ஒன்னும் இல்ல கௌ. முடிஞ்சத எதுக்கு யோசிக்கணும்ன்னுதான் இதுவரை அத பத்தி நா பேசுனதில்ல. மத்தபடி கஷ்டம்லாம் ஒன்னுல்ல” என்றவள் அவளின் கடந்த கால கதையை சொல்ல தொடங்கினாள்.

 பேங்ளூரின் ஒரு புகழ்பெற்ற கல்லூரியின் கேன்டீனில் தோழிகளுடன் அமர்ந்திருந்தாள் சந்தியா. முதலாமாண்டு முடிக்கும் தருவாயில் இருந்தாள். அப்பொழுது அங்கு கூட்டமாக வந்து கொண்டிருந்த மாணவர்களில், ஒருவன் மட்டும் வந்து சந்தியாவிடம் “ஹாய், ஐயம் ஸ்ரீதர். உன்னட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றான்.

Advertisement

“ஓ நீங்க தமிழா” என்று கேட்டவளிடம் அவன் தலையசைத்து ஆமோதிக்கவும் தோழிகளிடம் எல்லோரையும் கிளம்புமாறு கூறியவள் ஸ்ரீதரை அமர சொன்னாள்.

Advertisement

அவளுக்கு எதிரில் அமர்ந்தவன் “நா இங்கதான் எம்பிஎ பைனல் இயர் பண்றேன். உன்ன இந்த ஒரு வருசமா பாத்துட்டுதான் இருக்கேன்” என்று சிறிது நேரம் அமைதியானவன் “ம்.. என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று நேரடியாக கேட்டான்.

அவனை ஆச்சரியமாக பார்த்தவள் “சீனியர். எனக்கு என்ன வயசாகுதுன்னு நினைக்கிறீங்க. நைன்டீன்தான் ஆக போகுது. அதுக்குள்ள வந்து என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க”

“தப்புதான். நானும் அதுக்குதான் இவ்ளோ நாள் உன்னட்ட பேசாம இருந்தேன். ஆனா இப்ப செம் முடிய போகுது. நா இதோட முடிக்க போறேன். சோ உன்னட்ட பேசாம போகக்கூடாதுன்னு தோணுச்சு”

Advertisement

“ஆனாலும் எனக்கு இது படிக்கிற வயசு சீனியர். இந்த மாதிரி தாட்லாம் எனக்கு கிடையாது. ஏன் உங்களுக்கே இப்ப இருபத்து ரெண்டு இல்ல இருபத்து மூணு வயசு இருக்குமா. உங்களுக்கே இது கல்யாண வயசு கிடையாது”

“இல்ல நா இன்ஜினியரிங் முடிச்சு டூ இயர்ஸ் பிசினஸ் பாத்துட்டுதான் எம்பிஏ ஜாயின் பண்ணேன். எனக்கு இப்ப இருபத்து ஆறு ஆகுது”

“ஓ அப்ப நீங்க வேற பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க சீனியர்” என்றுவிட்டு கிளம்ப போனாள் சந்தியா.

அவளை நிறுத்தி “இது என்னோட விசிட்டிங் கார்டு சந்தியா. உன் முடிவுல எதாவது மாற்றம் இருந்தா எனக்கு கூப்பிட்டு சொல்லு” என்று கொடுத்தான்.

அதை பார்த்தால் சக்கரவர்த்தி க்ரூப்பின் விசிட்டிங் கார்டு. அவர்கள் பேங்ளூரில் பெயர் சொல்லும்படியான பிசினஸ் குடும்பம்.

அதை ஆச்சரியமாக பார்த்தவள் “உங்க குடும்பத்தில இப்படி லவ் மேரேஜ்க்கு ஒத்துக்குவாங்களா. உங்க ரிலேஷன்க்குள்ளயே கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு கேள்விபட்டருக்கேனே”

“ஆமா சந்தியா அப்படிதான். நீயே சம்மதிச்சாலும் நிறைய எதிர்ப்பை நா ஃபேஸ் பண்ணனும்”

“ஓ அப்ப எதுக்கு தொந்திரவு. பேசாம உங்க பேமிலி டிசைட் பண்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்களேன்” என்று யோசனை சொல்லிவிட்டு செல்பவளை வியப்பாக பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

ஏனென்றால் அவன் யாரென்று தெரிந்தால் கொஞ்சம் யோசிக்கவாவது செய்வாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் அதனை சாதாரணமாக கடந்து விட்டாள். அதனால்தான் அவளை இன்னுமே பிடித்தது அவனுக்கு. வித்தியாசமானவள் என்று.

சரியாக ஒரு வருடம் சென்று மீண்டும் கல்லூரி வாயிலில் வைத்து சந்தியாவை சந்தித்த ஸ்ரீதர் அவளை காபி ஷாப் வருமாறு அழைத்தான்.

சிறிது தயங்கினாலும் சந்தியா அவனோடு சென்றாள்.

இருவருக்கும் பிடித்த காபியை ஆர்டர் செய்துவிட்டு “எப்படி இருக்க சந்தியா” என்றான் ஸ்ரீதர்.

“நா நல்லாருக்கேன் சீனியர். நீங்க எப்படி இருக்கீங்க. இன்னுமா என்ன நியாபகம் வச்சிருக்கீங்க”

“ம்  சந்தியா. இந்த ஒன் இயரா எங்க கன்ஸ்டரக்சன் கம்பெனிய நான்தான் ரன் பண்ணிட்ருக்கேன். இப்ப எனக்கு மேரேஜ் பண்ணலான்னு என் பேமிலி என்னட்ட கேட்டாங்க. எனக்கு இப்பவும் உன்  நியாபகம்தான். அதான் உன்னட்ட திரும்ப கேட்டு பாக்கலாம்ன்னு வந்தேன்”

அவனை ஆச்சரியமாக பார்த்த சந்தியா “ஹா ஹா. இந்த ஒரு வருஷத்தில வேற பொண்ண நீங்க பாக்கவே இல்லையா” என்றாள்.

“எந்த பொண்ண பாத்தாலும் உன்னோட கம்பேர் பண்ணி பாத்திடறேன். சோ யாரையும் பிடிக்க மாட்டேங்குது”

“அது சரி. ஆனா எனக்கு வயசு இப்பவும் இருபதுதான் சீனியர். அப்ப சொன்ன அதே பதிலைத்தான் என்னால இப்பவும் சொல்ல முடியும். அதனால பெட்டர் நீங்க வேற பொண்ண பாக்கிறதுதான்”

“பொண்ணு இல்லாம நா உன்ன கேக்கல சந்தியா. இப்பவும் என் அத்தை  பொண்ணத்தான் என் பேமிலில பார்த்து வச்சிருக்காங்க. ஆனா எனக்குதான் பிடிக்க மாட்டேங்குது. நீ கொஞ்சம் யோசிச்சு பாரேன். நீ ஏன் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்க கூடாது”

“அதெல்லாம் ரிஸ்க் சீனியர். கல்யாணம்ன்னா கமிட்மென்ட். அப்படில்லாம் எதுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு. இது சரி வராது சீனியர். நா கிளம்புறேன். சாரி” என்று கிளம்பி விட்டாள் சந்தியா.

ஆனால் இந்த முறை அவள் தாய் தந்தையிடம் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டாள் சந்தியா. இருநாட்கள் கழித்து செல்வம் அவர் மனைவியிடம்  “சூப்பர் பையன் பத்மா. எந்த கெட்ட பழவழக்கமும் இல்ல. தெரிஞ்சவங்ககிட்ட கேட்டேன். என்ன சந்தியா சொல்ற மாதிரி இது படிக்கிற வயசு. அதான் யோசிக்க வேண்டியிருக்கு” என்று சொன்னார்.

“நீங்க எதுக்குப்பா போய் விசாரிச்சீங்க” 

“இல்லடா. அவனால உனக்கு ஏதும் பிரச்சனை வந்துட கூடாதே”

“அவர் அதமாதிரி இல்ல. நல்ல மாதிரிதான்னு எனக்கே தெரியுதுப்பா” 

பத்மாதான் “ஏண்டி நீயே சொல்ற. நல்ல மாப்பிள்ளைன்னு. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாமே. எனக்கு இந்த வயசுலதான் உங்கப்பா கூட கல்யாணம் நடந்தது”

“உன் காலம் வேறம்மா. இப்ப ஒரு பொண்ணு தன் சொந்தகால்ல  நின்னதுக்கப்றம் கல்யாணம் பண்ணிக்கிறதுதான்  சேஃப்டி”

“என்ன காலமோ. சேஃப்டி செக்யூரிட்டிலாம் பாத்தா கல்யாணம் பண்ணுவாங்க. மாப்பிள பொண்ணு ஒருத்தருக்கொருத்தர் புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணுவாங்க”

“அப்படிங்கிரியா” என்று யோசித்த சந்தியா அந்த பேச்சை அத்தோடு மறந்து விட்டாள்.

ஆனால் பத்மாவும் செல்வமும் சந்தியாவின் ஜாதகத்தை பார்க்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தனர்.

அது முடிந்து சந்தியா சிக்ஸ்த் செம்மின் பாதியில் இருக்கும்போது ஒருநாள் கல்லூரி போய்விட்டு திரும்பி வந்து பார்த்தால் வீட்டில் ஸ்ரீதரின் குடும்பம் வந்து அமர்ந்திருந்தது. 

ஸ்ரீதர், அவன் தாத்தா பாட்டி, அம்மா அப்பா, அவனின் அக்கா, அவரின் இரு குழந்தைகள் என்று நிறைய பேர் வந்திருந்தனர். சந்தியா அப்பா அவர்களிடம் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். பத்மா கிட்சனில் அவர்களுக்கு எதோ சாப்பிட தயார் பண்ணி கொண்டிருந்தார்.

லைட் ஆரஞ்ச் வித் டார்க் பளு சுடிதாரில், கல்லூரி முடிந்து வந்த களைப்பிலும் அழகாகவும் , ஒரு நிமிர்வுடனும் இருந்தவளை பார்த்தவுடன் தாத்தா பாட்டிக்கு பிடித்து விட்டது.

உள்ளே வந்தவள் ஆச்சரியமாக இவர்களை பார்த்தாலும், ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் எல்லோரையும் பார்த்து வாங்க என்று கை கூப்பினாள்.

ஸ்ரீதர்தான் “சாரி சந்தியா, சொல்லாம இப்படி வந்ததுக்கு” என்றான்.

அவனின் தாத்தா வேணுகோபாலன் “அவன் பேர்ல தப்பில்லம்மா. எப்போ கல்யாண பேச்செடுத்தாலும் உன் பேரையே சொல்றானேன்னு நான்தாம்மா இன்னைக்கு உன்ன பாத்தே ஆகணும்ன்னு கூட்டிட்டு வந்துட்டேன்” என்றார்.

“பரவால்ல தாத்தா. வீட்டுக்கு நாலு கெஸ்ட் வந்தாதான வீடு நல்லாருக்கும்” என்றாள் சந்தியா.

“ஓ. சாமர்த்தியமா எங்கள மாப்பிள்ள வீடுன்னு சொல்லாம விருந்தாளி ஆக்கிட்ட. சூப்பர்டா ஸ்ரீதரா. பொண்ணு பாக்க லட்சணமா மட்டும் இல்லாம கெட்டிக்காரியாவும் இருக்கா” என்றார்.

ஸ்ரீதரின் பாட்டி அலமேலு மங்கை “இப்படி வந்து உட்காரும்மா” என்று கூப்பிட்டு பக்கத்தில் அமர்த்தி பேச ஆரம்பித்தார்.

சந்தியாவிற்கு கடுப்புதான் என்னடா இது, காலேஜிலிருந்து வந்தால்  ரெப்ரேஷ் பண்ண கூட விடாமல்  இப்படி படுத்துகிறார்களே என்று. ஆனாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் சிரித்த முகமாக அமர்ந்து பதில் சொல்லி கொண்டிருந்தாள்.

ஸ்ரீதரின் அக்கா சோபனாவும் அவளிடம் நன்றாக பேசி கொண்டிருந்தாள். ஸ்ரீதரின் அம்மா கல்பனாதான் முகத்தை தூக்கி வைத்திருந்தார். ஸ்ரீதரின் அப்பா ராகவன் செல்வத்திடம் பேசி கொண்டிருந்தார்.

தாத்தாதான் செல்வத்திடம் “எங்க அப்பாதான் சக்கரவர்த்தி. எங்க பூர்வீகம் மதுரைதான். எங்க அப்பா அவர் சின்ன வயசா இருக்கும்போதே இங்க வந்தவர் துணிக்கடைதான் முதல்ல சின்னதா ஆரம்பிச்சிருக்கார். பிறகு டெவெலப் ஆனதுதான் மத்த தொழில்லாம். எங்கப்பாவுக்கு நா ஒரே பையன்தான். எனக்கு ஒரு பையன் ராகவன். ரெண்டு பொண்ணுங்க. அவங்களும் எங்க வீட்டுக்கு பக்கத்திலதான் வீடு கட்டிட்டு குடும்பமா இருக்காங்க. என் பையனுக்கு ஸ்ரீதரும், சோபனாவும்தான். என்னோட மத்த தொழில பொண்ணு குடும்பத்த சேந்தவங்க பாத்துக்கிட்டாலும் எங்களோட டெக்ஸ்டைல் பிசினச நானும் என் பையனும்தான், பாத்துக்கிறோம். என் பேரன் ஸ்ரீதர் கண்ஸ்ட்ரக்ஷன் சைட் போய்ட்டான். அதனால சந்தியா படிச்சி முடிச்சவுடனே நம்ம டெக்ஸ்டைல் பிசினஸ்சையே பாத்துக்கலாம். அவதான் காலேஜ் டாப்பர், நல்ல புத்திசாலி பொண்ணுன்னு என் பேரன் சொன்னான். சொல்லுங்க செல்வம். நீங்க என்ன சொல்றிங்க. என் பேரனுக்கு உங்க பொண்ண குடுக்க சம்மதமா” என்றார்.

செல்வம் சந்தியாவைதான் பார்த்தார். அதற்கு வேணுகோபாலன் “என்ன பொண்ண பாக்கறீங்க செல்வம்” என்றார் 

அதற்கு செல்வம் “அது இல்லங்கையா. இதுல என் விருப்பத்த விட என் மகதான் முடிவெடுக்கணும்” என்றதும் இதுவரை பேசாமல் அமர்ந்திருந்த கல்பனா “அது என்ன சின்ன பொண்ண முடிவெடுக்க சொல்றிங்க. உங்க பேச்ச உங்க பொண்ணு கேக்க மாட்டாளா” என்றார்.

“அது இல்லம்மா. இது அவ வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அவளுக்கு பிடிக்கணும். நமக்கு பிடிக்குதுங்கிறதுக்காக கட்டாய படுத்த கூடாது. அதுமாதிரிதான் என் பொண்ண சின்ன வயசுலேந்து வளத்துருக்கேன். அதே மாதிரி அவளும் பெரும்பாலும் தெளிவான முடிவைத்தான் எடுப்பா” 

“ம் என் பொண்ண என் நாத்தனார் பையனுக்குத்தான் குடுத்துருக்கோம். அவங்களோட பொண்ணைத்தான் ஸ்ரீதருக்கு கட்டனும்ன்னு எங்களுக்கெல்லாம் ஆசை. இவன் எங்க கேக்கறான்” என்று கடுப்பாக கல்பனா பேசிக்கொண்டிருக்க தாத்தா “கல்பனா, இப்ப தேவையில்லாத பேச்சு எதுக்கு” என்றவர் சந்தியாவை பார்த்து “நீ என்னம்மா சொல்ற. உங்கப்பா உன் முடிவுதான்னு சொல்லிட்டார்” என்றதும் 

“தாத்தா. தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு படிக்கிற வயசுல படிக்கணும். கல்யாணம் பண்ணிக்கிட்டா வீட்ட குடும்பத்த பாத்துக்கணும்”

இடையில் புகுந்த கல்பனா “நீ என்ன வீட்ட பாத்துக்க போற. இது என்ன உங்க வீடு மாதிரி மிடில் கிளாஸ் குடும்பமா. சமைக்க, வீட்டு வேல செய்யன்னு தனி தனியா வேலையாள் இருக்க வீட்ல நீ என்ன செய்ய போற”

“கல்பனா” என்ற தாத்தாவிடம் “நீங்க இருங்க தாத்தா” என்றுவிட்டு “அப்படியில்ல ஆன்ட்டி, வீடுன்னா வீடு மட்டும் கிடையாது. அதுல உறவுகள் இருப்பாங்க. கணவர் மாமியார் நாத்தனார் இப்படின்னு அவங்களுக்கான கடமைகளுக்குன்னு நா நேரம் ஒதுக்கணும். அம்மா அப்பாட்ட காலேஜ் இருக்கு, படிக்கிற வேலையிருக்குன்னு சொல்ற மாதிரி புகுந்த வீட்டு உறவுகள்ட்ட சொல்லிட்ருருக்க முடியாது” என்றாள் சந்தியா.

அவளை மெச்சுதலாக பார்த்த வேணுகோபால் “இவ்ளோ புத்திசாலியா பேசுற உனக்கு அத மேனேஜ் பண்ண தெரியாதா”

“பண்ணலாம். எதுக்கு நா அவ்ளோ ரிஸ்க் எடுக்கணும் தாத்தா”

“ஒரு நல்ல மாப்பிள்ள, குடும்பம் கிடைக்குமே”

“மூணு நாலு வருஷம் போனா இது மாதிரி குடும்பத்த பாத்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்” என்று சந்தியா சொல்லி கொண்டிருக்கும் போதே பத்மா எல்லோருக்கும் குலாப்ஜாமூன் எடுத்து வந்தார்.

முதலில் ஸ்ரீதர் அக்காவின் ஐந்து மூன்று வயது ஆண் குழந்தைகளுக்கு எடுத்து கொடுத்தார். ஆசையாக ஸ்வீட்டை குழந்தைகள் கையிலும் வாங்கி விட்டனர்.

ஆனால் தாத்தா எழுந்து விட்டார். “மங்கை கிளம்புங்க” என்றதும் மங்கை பாட்டி குழந்தைகள் கையிலிருந்து ஸ்வீட்டை வாங்கி விட்டார். திகைத்து பார்த்த பத்மாவிடம் “இல்லம்மா , சம்மந்தம் தகையாம கை நனைக்க கூடாதுன்னு சொல்வாங்க” என்றார்.

எல்லோரும் எழுந்து விட்டனர். சந்தியாதான் தாத்தாவை முறைத்து பார்த்து “என்ன தாத்தா. வீட்டுக்கு கெஸ்ட் வந்தா ஏதாவது சாப்பிட குடுக்காம அனுப்புவாங்களா”என்றாள்.

“என்னம்மா பண்றது, நீ கெஸ்ட்டா நினைக்கிற. ஆனா நாங்க பொண்ணு கேட்டுத்தான் வந்தோம். இங்க பொண்ணு கிடைக்காதுன்னு தெரிஞ்சபிறகு சும்மா சாப்பிட்டு எதுக்காக தொடர்ப உருவாக்கணும்” என்று துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிளம்பினார்.

“என்ன தாத்தா ப்ளாக்மெயில் பண்றீங்களா” என்ற சந்தியாவிடம் பத்மா “நீ உள்ள வா சந்தியா. அப்பாவும் நானும் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றுவிட்டு வேணுகோபாலிடம் “ஐயா எல்லாரும் உக்காருங்க. நாங்க ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு வந்துடறோம்” என்று சந்தியாவை கையோடு அறைக்குள் கூட்டி சென்றார். செல்வமும் அவர்களோடு உள்ளே சென்றார்.

“என்ன சந்தியா. இவ்ளோ நல்ல குடும்பமா இருக்காங்க. நீதான் வேணுன்னு இப்படி மதிச்சு வந்து கேக்குறாங்க. கொஞ்சம் யோசிச்சு பாக்கலாம்ல நீ”

“ம்மா, இதுல யோசிக்க என்ன இருக்கு. இப்பல்லாம் முப்பது வயசுக்குத்தான் நல்ல செட்டில் ஆனதுக்கு பிறகு கல்யாணம் பண்ணிக்கிறாங்க”

“ஆமா, சொந்த வீடு, கார், ப்ரோமொஷன்னு எல்லாம் வந்து செட்டில் ஆனதுக்கு பிறகு கல்யாணம் பண்ண போய்தான் முப்பத்துல கல்யாணம் பண்ணி நூத்துல தொன்னூரு பேருக்கு குழந்தை பிறக்க மாட்டேங்குது. டிரீட்மென்ட் எடுத்து நாப்பது வயசுல புள்ள பொறக்குது”

“ம்மா நீங்க இப்ப என்ன சொல்ல வரீங்க”

“மாப்பிள்ளையும் பாக்க சூப்பரா இருக்காரு. குடும்பமும் நல்ல மாதிரியா இருக்காங்க . தேடி வந்து கல்யாணம் பண்ணிக்க கேக்குறாங்க. நீ ஒத்துக்கிட்டா என்ன சந்தியா”

“ம்மா, சீனியரோட அம்மா பேசுறத கேட்டீங்கள்ள. நம்மள மட்டமா பேசறாங்க”

“சந்தியா அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்காது. அதும் மாமியார்ன்னாலே அப்படித்தான். மத்த எல்லோரும் ஓகேதான். முக்கியமா மாப்ள மூணு வருசமா உன்னத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு முடிவு மாறாம இருக்காரு. அப்ப உன்னப்பத்தி எவ்ளோ நல்லா புரிஞ்சு வச்சிருக்கணும். இப்படி தானா வர்ற நல்ல வாழ்க்கைய ஏன் வேண்டாங்கனும். அதும் உன்ன புரிஞ்சுக்கிட்டவர்னா நீ படிக்க, குடும்பத்த பாத்துக்கன்னு உனக்கு அனுசரணையா இருக்க மாட்டாரா”

“ப்பா நீங்க என்ன சொல்றீங்க”

“அம்மா சொல்றதும் கரெக்ட்தான். ஆனா உனக்கு வேண்டாம்ன்னா வேண்டாம்மா” என்றவரை முறைத்தார் பத்மா.

“அவளுக்கு புரிய வைக்கிற மாதிரி பேசுவீங்கன்னு பாத்தா இப்படி சொல்றீங்க”

“இல்ல பத்மா. நம்ம அவள கட்டாய படுத்த கூடாது” என்று சண்டை போட்டிருந்தவர்களை பார்த்து “அம்மா சரி நா கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள் சந்தியா.

இப்பொழுதுதான் பத்மாவிற்கு நிம்மதியானது. செல்வத்திற்கும் சந்தோசம்தான்.

ரூமை விட்டு வெளியே வந்ததும் பத்மா முதலில் ஸ்வீட்டை எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தார்.

சந்தியாவின் முகத்தை பார்த்திருந்த தாத்தாவை முறைத்து கொண்டே “அப்புறம் என்ன தாத்தா, அதான் எங்க அம்மாவை சரி கட்டிட்டீங்களே. ஸ்வீட்ட சாப்பிடுங்க. சுகர் ஏதும் இருக்கா” என்று கேட்டவளிடம் “சுகர் இருந்தா என்ன . இப்படி கொடு. நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்காக நா இன்னைக்கு ஸ்வீட் கட்டாயம் சாப்பிடுவேன்” என்று வாங்கி கொண்டார் கிழவர்.

எல்லோரும் சந்தோஷமாகி விட்டாலும் கல்பனா மட்டும் கடு கடுவென முகத்தை வைத்து கொண்டு அமர்ந்திருந்தார்.

 

  

\  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!