Skip to content
Post Views: 861
சித்திரமே மொழி தொலைத்தாயோ?? – 4
அன்று அந்த ஸ்கூலில் காலடி எடுத்து வைத்தவனின் தலை எழுத்து மாறபோகிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை..
Advertisement
உள்ளே சென்றவன் ஆஃபீஸ் ரூமை தேடி அங்கே சென்றான்..
Advertisement
உள்ளே நான்கு பேர் இருந்தனர்..
Advertisement
இவனை பார்த்ததும் அவர்கள்,
Advertisement
“சொல்லுங்க சார்.” என்றனர்.
இவன்: “இந்த ஸ்கூலுக்கு in charge யாரு? நான் அவங்கள மீட் பண்ணி கொஞ்சம் முக்கியமா பேசணும்.”
அவர்கள் : “சார் மேடம் 11 மணிக்கு தான் இங்கே கேம்பஸ்-க்கு வருவாங்க.. இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன் ப்ளீஸ்.”
அவன்: “ஓ அவங்களே இப்படி பொறுப்பிலாம லேட்டா வந்தா ஸ்கூல் பிள்ளைங்க எப்படி நல்ல பிள்ளைங்களா வளரும்? இப்போ எல்லாம் யாருக்கும் பெருசா பொறுப்பு இல்ல..”
அவர்கள்: “சார் அப்படி இல்ல.. அவங்க பக்கத்துல ஹாஸ்ட்டல் நடத்துறாங்க.. அங்கேயும் பிள்ளைங்க இருக்காங்க.. இன்னைக்கு ஹாஸ்ட்டல்ல கொஞ்சம் development வேலை இருக்கு.. அதனால அந்த ஆட்களோடு பேசிட்டு இருக்காங்க. “
பவன்: “ஓ? ஹாஸ்ட்டல் வேற இருக்கா? அப்போ நான் அங்கேயே போய் அவங்கள பாத்துக்குறேன். ” என்று கிளம்பினான்..
அந்த ஸ்கூலை ஒட்டிய அடுத்த பில்டிங்கே ஹாஸ்டல் தான்.. உள்ளே சென்றவன் கீழே யாரும் இல்லாதலால் மேலே சென்றான்..
அங்கே நாலைந்து பேர் நின்று கொண்டிருக்க, அவர்களுக்கு நடுவில் அவள் இருந்தாள்..
தெளிவான பேச்சு, அச்சமில்லாத தோரணை, அழகான உச்சரிப்பு.. பின்னாடி இருந்து அவளை பார்ப்பதற்கே அவள் நிச்சயம் தைரியமானவள் என்று சொல்ல முடிந்தது..
“இந்த ரூம்ல தான் பசங்க தூங்குறாங்க. இந்த பெட் இருக்குற இடத்துக்கு பக்கத்துலயே சின்னதா ஒரு லேம்ப் போட்டு ஸ்டடி டேபிள் போடலாம்னு பாக்குறேன்.. நைட் படிக்கணும்னு விரும்புற பிள்ளைங்க இல்லைனா, சீக்கிரம் முழிப்பு வந்துடுற பிள்ளைங்க அவங்க பெட் லைட் போட்டு ஏதாச்சும் செய்ய வசதியா இருக்கும்.. அப்புறம் இந்த பக்கம் ventilation சரியா இல்ல..பிள்ளைங்களுக்கு காத்தோட்டம் உள்ள இடம் தான் புத்துணர்ச்சியை தரும். எனக்கு நல்ல breeze உள்ளே வரணும். அதுக்கேத்த மாதிரி ஸ்டடி ரூமை change ஓவர் பண்ணிடுங்க.”
அவள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருந்த பவன் ‘இவ என்ன பேசிக்கிட்டே இருக்கா? இப்போதைக்கு முடிக்கமாட்டா போல.’
“ஹலோ..” என்றான் இடைபுகுந்து..
அங்கே நின்று இருந்தவர்கள் எல்லோரும் அவனை திரும்பி பார்த்தனர்.. அவள் அவர்களை விலக்கி அவனை எட்டி பார்த்தாள்..
அவள் முகத்தை பார்த்த பவன், ‘ஓ இவளா?’
இவன்: “இந்த ஸ்கூல் சம்மந்தமா கொஞ்சம் பேசணும். யாருகிட்ட பேசணும்?”
உத்ரா முன்னாடி வந்து,
“என்கிட்டே.. நான் தான் இந்த ஸ்கூலை தொடங்கி நடத்திட்டு வரேன். ஆனா நீங்க ஸ்கூல் கேம்பஸ்ல தான் வெயிட் பண்ணனும். இங்கே எல்லாம் வர கூடாது.”
பவன் : “ஹ்ம் ஓகே.” என்று கூறி மெதுவாய் அங்கே இருந்து புறப்பட்டான்.
சூசை : “பாஸ், நீங்க என்ன இப்படி இருக்கீங்க? ஒருத்தங்க உங்களை போக சொன்னா நீங்களும் போய்டுவீங்களா? நமக்கு இருக்குற கெத்தை காட்ட வேணாம்? நம்மளை போக சொல்ல அவங்க யாரு?”
பவன் திரும்பி உத்ராவை பார்த்தான்..
சூசையிடம், “பரவாயில்லைடா.. ஏதோ முக்கியமான வேலையில இருக்காங்கல? நமக்கு என்ன வேலை இருக்கு? வா போய் வெயிட் பண்ணுவோம்.”
சூசை வாயை பிளந்தான்..
பவன் ஸ்கூல் ஆஃபீஸ் ரூமுக்கு எதிர்புறமாக போட்டிருந்த சேரில் சென்று அமர்ந்தான்.. மொபைலில் கேம் விளையாட தொடங்கியவன் அதுக்குள்ளேயே மூழ்க தொடங்கினான்.. ஆனால் சற்று நேரத்தில் பலமான கைதட்டல் ஓசையில் விதிர்விதிர்த்து போய் எழுந்து நின்றான்..
அவள் தான்.. அவள் அவனை நோக்கி நடந்து வந்தாள்..
இவனுக்கு எதிரே வந்து நின்றாள்..
“ஸ்கூல் காம்ப்ஸ்-ல இவ்வளவு சவுண்ட்டா போன்-ஐ வச்சு பாக்குறீங்களே? சென்ஸ் இல்லை?”
அவன் அப்போது தான் அவனது போனில் இருந்து சவுண்ட் வருது என்பதையே உணர்ந்தான்.. வேகமாய் கம்மி செய்தான்..
அவள் ஆஃபீஸ் ஆட்கள் பக்கம் சென்று,
“ஏன் நீங்க சொல்ல கூடாதா? இவ்வளவு நேரம் என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” என்று மிரட்டலாக கேட்க.
அவர்கள்: “மேடம் அவரை பாக்க பெரிய அரசியவாதி மாதிரி இருக்கு. அதான்.”
அவள் அவனை மேலிருந்து கீழ் அசால்ட்டாக பார்த்து,
“சோ வாட்? எவனா இருந்தா நமக்கு என்ன? நம்ம இடத்துல ஒரு தப்பும் நடக்க கூடாது. அதை நாம அனுமதிக்கவும் கூடாது.”
பவன் தொண்டையை கணைத்தான்..
“அந்த எவனோ நான் தானா?” என்று கேட்டான்.
அவள்: “Mr.. நான் என் ஸ்கூல்ல என் ஆட்களோடு பேசிட்டு இருக்கேன்.. இதுல நீங்க ஏன் தலையிடுறீங்க? அதோடு, நான் யாரையும் தேவையில்லாம அநாகரீகமா பேச மாட்டேன். நீங்க என்னை பாக்க வந்த விஷயம் என்ன? சீக்கிரம் அதை சொல்லுங்க.” என்று கடிகாரத்தை பார்த்தாள்.
அவன்: “நான் சக்கரைப்பாணியோட பையன் பவன்.. “
அவள்: “சந்தோஷம் ஆனா எனக்கு நீங்க சொல்ற சக்கரைப்பாணியையும் தெரியாது.”
அவன்: “ஓ.. மில்க் மினிஸ்டர்ரை தெரியாதா உனக்கு?”
அவள்: “ஹ்ம் தெரியாது.”
அவன்: “ஓகே.. விடு.. எனக்கு என்ன தேவைன்னு நான் சொல்றேன். அதுக்கு அப்புறம் உனக்கு என்ன வேணும்னு நீ சொல்லு.. எங்களுக்கு இந்த ஸ்கூல் ரொம்ப இடைஞ்சலா இருக்கு. அதுனால இதை இடிச்சுட்டு, பக்கத்துல இருக்குற கட்சி ஆஃபீஸ் பில்டிங்கை பெரிசு பண்ண போறோம்.. ஏன்னா, ஒரு மீட்டிங், இல்ல பார்ட்டினு பண்ணுனா எங்களுக்கு அங்கே இடம் பத்த மாட்டிங்குது. ஒரே கசகசனு இருக்கு.. இப்போ இந்த ஸ்கூல் பில்டிங் இருக்குற இடம் ரொம்ப பெருசு இல்ல தான்.. ஆனா இந்த இடத்தை நாங்க யூஸ் பண்ணிக்கிட்டா பெட்டரா இருக்கும். இந்த இடத்தை நீங்க எங்கிட்டே கொடுத்துட்டு, இதுக்கு பதிலா வேற இடத்தை எங்ககிட்ட இருந்து வாங்கிக்கோங்க. ஒரு டீல் போட்டுக்கலாம். ஓகே?”
உத்ரா பல்லை கடித்தாள்.. அவள் ரத்தம் சூடானது.. அவனை முறைத்து பார்த்தாள்..
அவள் அருகில் இருந்த பணியாளர்கள்: “மேடம் மேடம்.. நாங்க பேசுறோம்.” என்றனர்.
இவள் அவர்களிடம்,
“நீங்க புரியுற மாதிரி சொல்லமாட்டீங்க. நான் சொன்னா தான் சரியா இருக்கும்.” என்று சொன்னவள் அவன் பக்கமாய் திரும்பி,
“சோ நான் உனக்கு இந்த இடத்தை காலி செய்யணும்?”
அவன் “ஆமாம்” என்று தலையை ஆட்டினான்.
அவள்: “வாங்களேன். ரூம்ல போய் பேசுவோம்.”
பவன்: “அது..” என்று சொல்லி அவளை பாலோ செய்தான்.
இரண்டு மணி நேரத்துக்கு பிறகு,
வெளியே நிறுத்தி இருந்த ஜீப்பில் மல்லாக்க படுத்து இருந்தான் பவன்.. அவன் அருகே சூசை கையில் ஐஸ் க்ரீமோடு நின்று இருந்தான்.. ஒரு ஸ்பூன் வாயில் வைத்த பவன்,
“என்ன டா? ஐஸ் க்ரீம் கூல்லாவே இல்ல?”
சூசை: “எப்படி இருக்கும்? அங்கே ஸ்கூல்ல கொடுத்த சூடு அப்படி. சில்லுனு ஐஸ் கட்டியை உங்க நாக்குல வச்சாலும், அந்த பொம்பளை கொடுத்த சூட்டுக்கு எந்த குளிரும் உரைக்காது.”
பவன் ஆகாயத்தை பார்த்து விரல்களை மடக்கி தாடையில் வைத்தான்..
“தப்பு கணக்கு போட்டுட்டேன். டாடி 10 நாள்ல இந்த வேலையை முடிச்சிடுனு சொன்னார். ஆனா எனக்கு என்னவோ இது 10 நாள்ல முடிக்க முடியும்னு தோணல.”
சூசை: “பத்து நாள்ளா? அந்த பொண்ணை பார்த்தா எனக்கு என்னவோ இது ஒரு வருஷம் ஆனாலும் முடிக்க முடியாதுனு தான் தோணுது.”
பவன்: “முடியும்.. பண்ணி காட்டுறேன். லேட் ஆனாலும் பெஸ்ட்டா முடிச்சு காட்டி இந்த தடவை டாடிகிட்டே பாராட்டு வாங்க போறேன். பார்த்துட்டே இரு. எப்படி என் காரியத்தை சாதிக்கிறேன்னு.”
சூசை நம்பிக்கை இல்லாமல் அவனை பார்த்தான். இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி நடந்ததை யோசித்து பார்த்தான் சூசை..
உத்ரா அவள் அறைக்குள் இவர்களை அழைக்க, உள்ளே சென்றதும் பவனிடம் அவள் கேட்ட முதல் கேள்வி..
“நீங்க என்ன படிச்சு இருக்கீங்க Mr?”
பவன்: “நானா? நான் காலேஜ் முடிச்சு இருக்கேன்.”
அவள்: “ஓ? ஒழுங்கா படிச்சீங்களா? இல்ல அப்பா பவர் இருக்குனு ஜாலியா சுத்தி டைம் பாஸ் பண்ணி, சீட் பண்ணி பாஸ் ஆனீங்களா?”
பவன் சிரித்துக் கொண்டே,
“ஹான் கரெக்ட்டா கண்டுப்பிடிச்சுட்டீங்க.. நான் கொஞ்சம் சுமார் தான் படிப்புல. அண்ணன் தான் perfectஆ படிச்சான். நான் அப்படி இல்ல.”
அவள் போதும் என்று கையை உயர்த்தினாள்..
“தெரியுது.. பார்த்தாலே தெரியுது. அதுனால தான் ஒரு ஸ்கூலோட value தெரியல. Education பத்திய அறிவும் இல்ல..மதிப்பும் தெரியல. இடியட்.. இந்த ஸ்கூல் ஒண்ணும் லாபத்துல ஓடல. ஆனா இந்த ஸ்கூல்லால எத்தனை பசங்க லாபம் அடைஞ்சு இருக்காங்க தெரியுமா? நீ எவ்வளவு சம்பாதிக்கிற?”
அவன்: “ஹ? என்னையவா கேட்குற?”
அவள்: “உன்ன தான்.. ” என்று விரல்களால் அவன் முகத்தை சுட்டிக் காட்டி கேட்டாள்..
அவன்: “எனக்கு எதுக்கு சம்பளம்? நானே என் கையால எல்லோருக்கும் சம்பளம் கொடுத்துட்டு இருக்கேன்.”
அவள்: “நீ கொடுக்குற சம்பளம் நீ சம்பாத்திச்சதா? இல்லல? உன் அப்பன் காசை தானே தூத்திட்டு இருக்க? “
பவனால் வாய் பேச முடியவில்லை.. இவ என்ன? இப்படி எல்லாம் பேசுறா? இதுவரை தன்னை இந்த மாதிரி அவமரியாதையாக பேசியதில்லை.. இவ என்ன இஷ்டத்துக்கு பேசுறா?
அவன் : “ஏய்.. பொறுமையா பேசலாம்னு பார்த்தா ரொம்ப ஓவரா பேசுற?”
அவள்: “உன் பணம்னு ஒண்ணு கிடைக்கணும்னா, அதுக்கு நீ படிச்சு இருக்கணும். படிச்சதை implement செய்ய தெரிஞ்சு இருக்கணும். இந்த இரண்டுமே நீ செய்யல. படிப்பு, manners இதெல்லாம் தெரியாத நீ முதல என் ஸ்கூல்லயே நிக்க கூடாது.. இதுல ஸ்கூலை இடிக்கணும்னு எவ்வளவு தைரியம் இருந்தா வந்து சொல்லுவ? “
பவன்: “மேடம் உங்களுக்கு இதுக்கு பதிலா வேற இடம் பெஸ்ட்டா தரோம். இந்த கூடாரத்துல பசங்களும் கஷ்டப்படுவாங்கல?”
அவள் அவனை தீ என முறைத்தாள்..
“ஆமாம்.. கஷ்டம் தான்.. ஆனா இந்த பில்டிங்கால இல்ல.. உங்களால தான் கஷ்டம் எங்களுக்கு .. என் கூட வா காட்டுறேன்..” என்று அவனை எங்கேயோ கூட்டி சென்றவள்,
அங்கே கட்சி பில்டிங்கும், ஸ்கூல் பில்டிங்கும் சந்திக்கும் பின்புற இடத்தை காட்டினாள்.. அங்கே நிறைய மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் கிடந்தன..
அதை சுட்டி காட்டியவள்,
“இப்படி எல்லாம் நீங்க போட்டு, என் பசங்கள கெடுக்குறீங்க.. படிக்குற பசங்க கண்ணுல பட வேண்டிய பொருளா இது? அதுனால, இப்போ நான் சொல்றேன்.. உடனே உங்க கட்சி ஆஃபீஸ்-ஐ தூக்கிட்டு நீங்க பெஸ்ட் பிளேஸ்-கு போயிடுங்க. நாங்க நிம்மதியா இருப்போம். இன்னும் அஞ்சு செகண்ட்ல நீயும் இந்த இடத்தை காலி பண்ணிருக்கணும். ரொம்ப கஷ்டப்படாதே.. இதோ back gate பக்கமா வெளியே போய்டு.” என்று சொல்லி அவனுக்கு கேட்டை திறந்துவிட..
பவன் வார்த்தையின்றி வெளியே போனான்..
இதை எல்லாம் நினைத்து பார்த்த சூசை, மனசுக்குள்,
‘எனக்கு என்னவோ இதெல்லாம் நடக்குற காரியமா தெரியல.’ என்று நினைத்து கொண்டான்..
பவன் மனதில் நிறைய பிளான் போட்ட வண்ணம் இருந்தான்..
வீட்டுக்கு வந்த பவன் முகம் சோர்வாக இருக்க,
அம்மா கீதை, “டேய் என்னடா ஆச்சு? முகம் வாடி கிடக்கு?”
இவன்: “ஏன்ம்மா.. இதுவரைக்கும் நீங்க என் கிட்டே நான் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கேன்? என்ன படிச்சு இருக்கேன்? எவ்வளவு சம்பளம் வாங்கிருக்கேன்னு எல்லாம் கேட்டு இருக்கீங்களா?”
அவர்: “ஹ்ம் இல்லையேடா. ஏன்?”
அவன்: “இன்னைக்கு ஒருத்தி கேட்டாம்மா.. அதுவும் அவ வாய் இருக்கே? அப்பா.. பெரிய லம்பாடி பொம்பளையா இருப்பா போல.. என்ன பேச்சு பேசுறா?”
அவர்: “சரி பதிலுக்கு நீ என்ன சொன்ன?”
அவன்: “நானும் நல்லா பேசிவிட்டுட்டு வந்துட்டேன். அப்புறம் நான் சும்மாவா இருப்பேன்.”
அவர்: “ஹ்ம் ஆனா இப்படி எல்லாம் ஒரு பொண்ணு கேள்வி கேட்குறானா, அந்த பொண்ணு
நல்ல பொண்ணா தான் இருப்பா டா. “
பவன்: “ஆமாம் ரொம்ப நல்ல பொண்ணு தான் நீ தான் மெச்சிக்கணும். ” என்று கூறி கொண்டே படி ஏறி சென்றவனின் மனதில் அவள் பேசிய பேச்சே வலம் வந்தது..
பேசும் போது ஆடிய அவளின் குடை ஜிமிக்கியும், கையை நீட்டி பேசிய போது சலக் சலக் என்று கேட்ட அவள் வளையல் ஓசையும் அவனுக்கு இன்னும் நினைவில் இருந்தது..
தொடரும்🙏🏻
error: Content is protected !!