Skip to content
Post Views: 6,654
அத்தியாயம் 26:
ஒரு வழியாக பந்தி முடிந்தது. மண்டபத்தை விட்டு முதலில் வெளியே வந்தவர்கள் பார்த்தது சந்தியாவை திட்டி கொண்டிருந்த ஆதியைத்தான்.
ஆதி திட்டி கொண்டிருக்க சந்தியா உர்ரென்று அவனை பார்த்து கொண்டிருந்தாள். வெளியே வந்தவர்களில் சில பெருசுகள் சென்று ஆதியிடம் “என்ன சாமி, நேத்து இந்நேரம் கல்யாணம் முடிச்சிட்டு இன்னைக்கு இந்நேரம் புள்ளைட்ட சடவு பண்ற” என்றனர்.
“பின்ன என்ன பெரியப்பா. நாளைக்கு மறு வூட்டுக்கு போறாளாம். மூணு நாள் அவங்க அப்பாரு வூட்ல இருந்துட்டுதேன் வருவாளாம். என்னடின்னு கேட்டாக்கா நீயும் அங்கேயே தங்கி போடுன்னு சொல்றா. இவளுக்கு எவ்வளவு எகத்தாளம் இருக்கோணும். நம்ம யாரு, நம்ம மொறை என்ன , பழக்க வழக்கம் என்ன, மரியாதை என்ன“
Advertisement
“அது சரிப்பு, மெதுவாத்தேன் நம்ம பழக்க வழக்கத்தையெல்லாம் புள்ளைக்கு புரிய வைக்கோணும் கண்ணு” என்றது இன்னொரு பெருசு.
“இல்ல அப்புச்சி. இதெல்லாம் ஆரம்பத்துலயே தட்டி வைக்கோணும். விட்டுட்டா அப்புறம் அப்பாரு வூடு பக்கத்துல இருக்குங்கிறதுக்காக அங்கேயே முச்சூடும் இருக்கணும்பாங்க. நம்ம பரம்பரைக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருங்களா” என்று ஆதி பேசி கொண்டிருக்கும் போது ஈஸ்வரன், சுந்தரம், செல்வம் எல்லாம் அங்கு வந்தனர்.
ஈஸ்வரன்தான் ஆதியிடம் “என்ன கண்ணு. புள்ள பொக்குன்னு இருக்கு” என்றார். அதற்கு அங்குள்ள பெருசுகள் பஞ்சாயத்தை கூறினர்.
Advertisement
அதற்கு ஈஸ்வரன் சந்தியாவிடம் “சாமி. நீ உன்ர பொறந்த வூட்ல எத்தினி நா வேணாலும் இருந்துட்டு வரலாம். உன் விருப்பம்தேன். உன்ர புருசனும் உன் கூடவே வந்து தங்குவாங்க. எங்கூட்டு சாமி நீ. எப்போதும் வருத்தப்பட கூடாதுல்லோ. என்ன தம்பி, சரிதானுங்களே” என்று ஆதியை பார்த்து கேட்டார்.
Advertisement
ஆதியும் நல்ல பிள்ளையாக “சரிங்கப்பா” என்று தலையாட்டினான். பஞ்சாயத்து கலைந்தது.
சுந்தரம் ஈஸ்வரனிடம் “இருந்தாலும் ஆதிக்கு இவ்வளவு வீம்பு கூடாதுங்ண்ணா. பொண்டாட்டீட்ட இப்படி கோவப்படறானுங்”என்றார்.
“அட எவண்டா இவன். இன்னும் உன்ர புள்ளைய பத்தி உனக்கு தெரியலையோ. தானா மாமனாறூட்டுக்கு போனா, பொண்டாட்டி பின்னாடியே போய்ட்டான்னு பேசுவோமாம். அதுக்காக நாடகம் நடத்துறாராம்” என்றதும்தான் கூடவே நின்ற செல்வம் முகம் தெளிந்தது.
Advertisement
அதற்கேற்றாற் போல் அவர்கள் பக்கத்தில் இருந்த பெருசுகள் “என்னதேன் சொல்லு. ஊருக்குள்ள நம்ம ஆதி மாதிரி ஒருத்தன பாக்க முடியுமா. புள்ள கிளி மாதிரி இருக்கே. பையன் கவுந்து போடுவான்னு நினைச்சேன். ஆனா பையன பாத்தியா. எப்படி இரும்பா இருக்கான்னு” என்று பேசி கொண்டு போனதை கேட்டவர்களுக்கு சிரிப்பு வந்தது.
அதே நேரம் அவர்கள் பேசி கொண்டு போனதை கேட்ட வசந்தன்,முரளி, அருண் மூவரும் யோசனையாக நின்றார்கள்.
வசந்தன் “என்னங்கடா. உங்கொண்ணன் என்ர தங்கச்சிகிட்ட எப்பவோ விழுந்துட்டானே. இந்த பெருசுக என்ன எதோ புது கதையை பேசிட்டு போகுதுங்” என்றதும் அருணும் “அட ஆமாங்ண்ணா. சிங்கம் எப்பவோ சாஞ்சிடுச்சிங்” என்று அன்று காலை நடந்த காஃபி மேட்டரை கூறினான் அருண்.
இவர்கள் இப்படி பேசி கொண்டிருக்கும்போது அங்கு சந்தியாவும் ஆதியை முறைத்து கொண்டிருந்தாள். ஏனென்றால் நடந்தது இதுதான்.
சந்தியாவின் காலை பிடித்து பேசி கொண்டிருந்த ஆதி “காலேஜ்க்கு எத்தனை நாள் லீவ் போட்ருக்க பொம்மு” என்று கேட்டான்.
“பத்து நாள் போட்ருக்கேன் பாஸ்”
“ஓ அப்ப நாலு நாள் நாம ஹனி மூன் போயிட்டு வரலாமா பொம்மு”
“என்ன… என்ன பேசறீங்க பாஸ். அப்புறம் என் லட்சியம் என்னாவறது”
“பொம்மு. மாமா உன் கிட்டயே வர மாட்டேன். நம்ம சும்மா டூர் மாதிரி போய்ட்டு வரலாண்டி” என்று கண்கள் பளபளக்க கூறினான் ஆதி. அவன் பார்வையை பார்த்த சந்தியா
“ம்ஹும் நா நம்ப மாட்டேன். உங்களோட தனியா வரவும் மாட்டேன்” என்றாள்.
“அப்ப பத்து நாள் என்னதான் பண்ண போற டி”
“நாளைக்கு அத்தை மறுவீடு போகணும்ன்னாங்க. எத்தனை நாள் வேணாலும் தங்கிட்டு வான்னாங்க. நா ஒரு மூணு நாள் தங்க போறேன்”
“என்ன… மூணு நாளா. என்னத்துக்குடி மூணு நாளு”
“ம் இன்னைக்கு எனக்கு சமைக்க தெரியலேன்னு அந்த அன்னபூரணி அம்மா ரொம்ப பேசிட்டாங்க. அதான் எங்கம்மாட்ட போய் சமைக்க கத்துக்க போறேன்” என்றதை கேட்டு கடுப்பானவன்
“சரி மூணு நாள் நா எங்க இருக்கறது” என்று கத்தினான் ஆதி. அவனை வினோதமாக பார்த்தவள்
“லூசா பாஸ் நீங்க. நாளைக்கு எங்க வீட்டு விருந்த முடிச்சிட்டு நீங்க நைட்டே நம்ம வீட்டுக்கு வந்திடலாம் பாஸ். ஒரே ஊர்ல இருந்துட்டு பக்கத்து பக்கத்துல வீட்டை வச்சிக்கிட்டு இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்க”
“என்ன மூணு நாள் நைட் நா தனியா தூங்கணுமா” என்று அவன் சண்டை போட்டு கொண்டிருக்கும் போதுதான் பெருசுகள் கிராஸ் செய்து பஞ்சாயத்தை முடித்து வைத்தன.
எல்லாரும் சென்றதும் சந்தியா “உங்களுக்கே இது ஓவரா தெரியல பாஸ்?” என்றாள்.
“ஆமா. நீ உம்பாட்டுக்கு மூணு நாள் என்னை விட்டுட்டு போறேன்னு சொல்ற பொம்மு . நமக்கு நேத்துதான் கல்யாணம் ஆனது நியாபகமிருக்காடி உனக்கு”
“ஆனாலும் ரொம்ப காதல் மன்னன் ரேஞ்சுக்கு பீல் பண்றீங்க பாஸ். நீங்கதான் உங்க பின்னாடியே வந்த என்ன வேண்டாம் வேண்டாம்ன்னு தொரத்தி விட்டீங்க. நியாபகம் இருக்கா” என்று அவள் கேட்டதும்
“சாரி டி பொம்மு அதுக்குதான் மாமாவை இப்ப வச்சி செய்றியே . ஆனா எது செய்றதா இருந்தாலும் மாமா பக்கத்துல இருந்துதான் செய்யணும். மாமாவை விட்டுட்டு தள்ளி போகணும்ன்னு மட்டும் நினைக்காத” என்று சொல்லிவிட்டு சென்றான்.
எல்லாரும் கிளம்புவதற்கு ரெடியாகி கொண்டிருக்கும் போது கோயில் வாசலில் இரு கார்கள் வந்து நின்றது. ஒரு காரில் இருந்து ரமேஷும் அவன் ஆட்களும் இறங்கினார்கள்.
அடுத்து வந்தது ஆடி கார். அதிலிருந்து ஒருவன் இறங்கினான். ஆள் பார்க்க ஹீரோ போல் தெரிந்தான்.
அனைவரும் சேர்ந்து கோயிலுக்குள் வந்தார்கள். முதலில் ரமேஷ் வந்தவன் அங்கு இருந்த ஈஸ்வரமூர்த்தியுடன் எதோ பேசினான். அதற்குள் கூட்டத்தை பார்த்த மற்றவர்களும் ஒன்று கூடினார்கள்.
ஆதிக்கும் விஷயம் தெரிந்து அந்த இடத்திற்கு வந்தான். அப்பொழுது ரமேஷ் “இங்க பாருங்க. எங்க ஊர்ல என் விஷயத்துல யாரும் தலையிடறதில்லை. உங்க பையன்தான் அனாவசியமா என் பொழப்ப கெடுக்கிறான். தெரியாமத்தான் கேக்கிறேன், அவன் அப்பன் வீட்டு சொத்தையா நா விக்கிறேன். என்ற அப்பன் வீட்டு சொத்த நா விக்கிறேன். ஒழுங்கா உங்க பிள்ளையை ஒதுங்கி போக சொல்லுங்க. இல்லன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது” என்று அவன் பேசி கொண்டிருக்கும்போதே பின்னிருந்து ஆதி
“இல்லன்னா என்னடா பண்ணுவ” என்றான்.
பயத்துடன் திரும்பி பார்த்தான் ரமேஷ். அங்கு வேட்டியை மடித்து கட்டி கொண்டு கை காப்பை ஏற்றி விட்டு கொண்டிருந்தான் ஆதி.
அவன் அந்த இடத்தில் இல்லையென்பதால் உதார் விட்டு கொண்டிருந்த ரமேஷுக்கு அன்று அவன் கொடுத்த அடி நியாபகம் வந்து கை கால் உதற ஆரம்பித்தது. இருந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் “இங்க பாரு இவருதான் என் நிலத்தை வெலை பேசுனாரு. ஆந்திரால பெரிய ஆளு. அவரே உன்ன பாக்க வந்துருக்காரு. உனக்கு எவ்வளவு கமிஷன் வேணுமோ சொல்லு. எவ்வளவு வேணுன்னாலும் கேட்டு வாங்கிக்கோ”என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஓங்கி அவன் வாயில் ஒரு குத்து விட்டான் ஆதி.
ரமேஷின் ஆட்கள் கத்த ஆரம்பித்து விட்டனர். பதிலுக்கு வசந்த், முரளி எல்லோரும் சண்டைக்கு கிளம்பினார்கள். அப்பொழுது தான் அந்த புதிதாக வந்தவன் பேச ஆரம்பித்தான்.
“ஹலோ மிஸ்டர். அவரு பேசிக்கிட்டுதான இருந்தாரு. எதுக்கு அவரை அடிச்சீங்க” என்றான்.
அதற்கு ஆதி “முதல்ல நீ யாருன்னு சொல்லு” என்றான்.
அதற்கு அவன் “மரியாதையா பேசு” என்றான்.
“நீ யார் கூட வந்துருக்கியோ அவன பொருத்துதான் உனக்கு மரியாதை கிடைக்கும்” என்று ஆதி கூறியதும் ரமேஷ் அந்த புதியவனிடம் “சார் வேண்டாம் சார். இவன் சரிப்பட்டு வரமாட்டான்னு நா அப்பவே சொன்னேன். நீங்கதான் பேசி பாக்கலாம்ன்னு சொன்னீங்க” என்று அவன் பேசி கொண்டிருக்கும் போதே பெண்கள் கூட்டத்திலிருந்து வந்த சிவகாமி ஈஸ்வரனிடம் “என்னங். என்ன பிரச்சனை. எதுவா இருந்தாலும் வேற இடத்துல போய் பஞ்சாயத்தை வச்சுக்குங். இப்ப நல்லபடியா வீட்டுக்கு கிளம்போனும்” என்றார்.
அப்பொழுது பெண்கள் பக்கமாக திரும்பிய புதியவனின் பார்வை மாறியது. அவன் மேல் ஒரு கண் வைத்திருந்த ஆதித்யனும் அவன் யாரை பார்க்கிறான் என்று பார்த்தான். புதியவனின் பார்வை சந்தியா மேல் இருப்பதை பார்த்ததும் ஆதிக்கு கை முஷ்டிகள் புடைக்க ஆரம்பித்தது. இவ்வளவு களேபரத்திலும் சந்தியா அந்த புதியவனை கவனிக்காமல் ஆதியைத்தான் ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.
அதற்குள் பார்வையை திருப்பிய புதியவன் “ஹலோ மிஸ்டர் ஆதித்யன். ஐயம் தீபன். ஜிகே கன்ஸ்ட்ரக்சன் எங்களுதுதான்” என்றான்.
தீபன் ஆதியிடம் பேசி கொண்டிருந்தாலும் பார்வை என்னமோ சந்தியாவின் பக்கம் அடிக்கடி சென்று கொண்டிருந்தது.
அவன் கம்பெனியின் பேரை கேட்டதும் இன்னும் கடுப்பானான் ஆதி. நிறைய கிராமங்களில் அவர்கள் குரூப் நிறைய விவசாய நிலங்களை கையகப்படுத்தி கொண்டிருந்தனர்.
நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும், அவர்களுக்கு வேண்டுமென்றால் பணத்தை கொடுத்தோ, இல்லை ஆட்களை வைத்து மிரட்டியோ நிலங்களை வாங்கி கொண்டிருப்பதாக ஆதி கேள்வி பட்டுத்தான் இருந்தான்.
அதனால் ஆதி அந்த தீபனிடம் “நீ யாரா வேணாலும் இருந்துட்டு போ. இங்க எங்க வீட்டு விஷேஷம் நடக்குது. என்னட்ட உனக்கு எதாவது பேசணும்னா நாளைக்கு என்ன ரைஸ் மில்லுல வந்து பாரு. இப்ப இடத்தை காலி பண்ணு” என்றவன் நேராக பெண்கள் பக்கம் சென்று சந்தியா கௌரியை முதலில் காருக்கு அழைத்து சென்றான்.
அதன்பிறகு எல்லோருமே கிளம்பி விட்டனர். அங்கேயே நின்று ஆதி சென்ற காரையே பார்த்து கொண்டிருந்த தீபனிடம் வந்த ரமேஷ் “நான்தான் அப்பவே சொன்னனே சார். அவன் யாருக்கும் அடங்க மாட்டான். நீங்க இந்த மேட்டர உங்க அப்பாகிட்ட கொண்டுட்டு போறதுதான் நல்லது” என்றான்.
அதற்கு தீபன் “இடியட். நீ எனக்கு அட்வைஸ் பண்ணாத. இத எப்படி டீல் பண்ணனும்ன்னு எனக்கு தெரியும்” என்றவன் கிடு கிடுவென்று கிளம்பி அவன் காரில் ஏறி சென்று விட்டான்.
வீட்டிற்கு வந்து ஆண்கள் அனைவரும் இந்தப் பிரச்சனை பற்றி பேசி கொண்டிருந்தனர். ஆதிதான் அனைவரிடமும் தான் பார்த்து கொள்வதாக சொல்லி விட்டு மேலே ரூமிற்க்கு வந்தான். அதற்குள் சந்தியா குளித்துவிட்டு டார்க் க்ரீன் காட்டன் புடவைக்கு மாறியிருந்தாள்.
மேலே வந்த ஆதிக்கு புத்தம் புது மலராக குளித்துவிட்டு தன் ரூமில் இருந்த மனைவியை பார்த்ததும் இதுவரை இருந்த கோபம் போய் மனம் மகிழ்ச்சிக்கு மாறியது. அவளை பார்த்து விசில் அடித்து கொண்டே அவனும் குளிக்க சென்றான்.
அவனை பார்த்த சந்தியா, பரவால்லையே மாமா கூல் ஆயிட்டாரு போலவே என்று யோசித்து கொண்டிருந்தாள். ஏனென்றால் கோயிலிலிருந்து காரில் வீட்டுக்கு வரும் வரை கடும் கோபத்தில் இருந்தான்.
சந்தியா யோசித்து கொண்டு நின்றிருக்கும் போதே வேகமாக குளித்துவிட்டு வெளியில் வந்த ஆதி, இடுப்பில் டவலுடன் அவள் அருகில் வந்து நின்றான். தலையில் ஈரம் சொட்டி கொண்டிருந்தது.
“என்ன பாஸ் இது . முதல்ல தலைய துவட்டுங்க”
“நீயே துவட்டி விடுடி பொம்மு”
“ரொம்ப ஓவரா பண்றீங்க பாஸ். இவ்ளோ நாள் நானா துவட்டி விட்டேன்” என்று துண்டை எடுக்க போனவளை தடுத்து “உன் புடவை முந்தானையால துவட்டி விடு டி” என்றான். அவனை முறைத்து கொண்டே புடவை முந்தானையை எடுத்து எக்கி அவள் தலையை துவட்டியவளுக்கு வாகாக தலையை குனிந்து காட்டினான்.
சந்தியாவிற்குத்தான் சட்டையில்லாமல் அவனின் அருகாமை அவஸ்தையாக இருந்தது. அவனின் மூச்சுக்காற்றும் உடம்பில் பட்டு என்னென்னமோ மாற்றங்களை உண்டு பண்ணியது.
அதனால் “பாஸ். நா கட்டிருக்கறது புது சேரி. இது ஈரத்தை எடுக்காது. இருங்க டவல் எடுத்துட்டு வரேன்” என்று நைசாக நழுவி டவல் எடுக்க போனவளை இழுத்து இடுப்பில் கை கொடுத்து முகத்தை பார்க்குமாறு நிறுத்தி கொண்டவன்
“பொம்மு இன்னைக்கு கோயிலுக்கு வந்திருந்தானே அந்த தீபன். அவனை உனக்கு தெரியுமாடி. அவனும் பெங்களூர்தான் போல. இதுக்கு முன்ன பாத்திருக்கியா” என்றான்.
அதற்கு யோசித்த சந்தியா “இல்ல பாஸ். நா பாத்ததில்லை. அவன் பேரு தீபனா? சொன்னானா?” என்றாள்.
“ஆமாம் அவனே சொன்னானே. நீ கேக்கலையா. அது மட்டுமா. உன்னையே வேற பாத்துக்கிட்ருந்தான்” என்று ஆதி கூறியதை கேட்டு ஆச்சரியமான சந்தியா “எனக்கு தெரியாது பாஸ்” என்றாள்.
அவள் மூக்கை பிடித்து ஆட்டிக்கொண்டே “எப்படி தெரியும் பொம்மு மேடம். நீங்கதான் மாமாவை சைட் அடிச்சிட்டிருந்தீங்களே” என்று கேட்டான்.
அவன் கண்டுகொண்டான் என்று சந்தியாவிற்கு வெட்கமாக வந்தது. இருந்தாலும் கெத்தை விடாமல் “அதெல்லாம் ஒன்னுல்ல. நா அப்பதான் வாமிட் பண்ணிருந்தானா. எனக்கு ஒரே மயக்கமா இருந்தது. அதான் அங்க நடந்தது எதுவும் தெரியல” என்று சமாளித்தவளை பார்த்து வாய் விட்டு சிரித்தான் ஆதி.
“ஏண்டி நீ என்ன பாத்த முத நாள்ல இருந்து விடாம சைட் அடிக்கிற. அப்படி என்னதாண்டி என்கிட்டே பாத்த. எல்லாரும் சொல்றாங்க. ஏன் இந்த முரளி கூட சொல்வான். அண்ணி அழகுக்கும் கலருக்கும் எப்படி உங்கள லவ் பண்ணாங்கன்னு. ஏன் எனக்கே பயமாருக்கு. எங்க உன்ன தொட்டா என் கருப்பு உன் மேல ஒட்டிக்கும்மோன்னு. எப்படிடி உனக்கு என்ன பிடிச்சது” என்றுவிட்டு அவள் கண்களுக்குள் பார்த்து கொண்டிருந்தவனிடம்
“என் கண்ணுக்கு இந்த உலகத்துலயே நீங்கதான் அழகா தெரியறீங்க மாமா. என் கண் வழியா பார்த்தாதான் நீங்க எவ்வளவு அழகுன்னு மத்தவங்களுக்கு தெரியும்” என்றுவிட்டு அவனை இறுக்கி கட்டி கொண்டாள்.
“உங்க கலரா நா மாறுற அளவுக்கு உங்கள இறுக்கி கட்டிக்கணும்ன்னுதான் எனக்கு ஆசையாருக்கு மாமா” என்று அவள் கூறியவுடன் அவளை தூக்கி கொண்டு போய் கட்டிலில் போட்டு அவள் மேல் ஆவேசமாக படர்ந்தான்.
அவள் முகம் முழுவதும் முத்தத்தை பதித்துவிட்டு அவள் கழுத்தில் தலையை புதைக்கும்போது சரியாக கீழிருந்து கௌரி சந்தியா என்று அழைத்தாள்.
‘
error: Content is protected !!