Skip to content
Post Views: 5,924
அத்தியாயம் 31:
மறுநாள் காலையில் ஆதி அருணை கூப்பிட்டு விஷயத்தை கூறி கல்லூரியில் எப்பொழுதும் சந்தியாவின் மேல் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று கூறினான்.
“அண்ணா வேணுன்னா போலீஸ்ல கம்பளைண்ட் குடுப்போமா” என்றான் அருண்.
“ம் நா பாத்துக்கிறேன் அருண்” என்று மட்டும் கூறி அனுப்பி விட்டான்.
Advertisement
அருண் வழக்கம் போல் பைக்கிலேயே கல்லூரி சென்றான்.
பிறகு சந்தியாவையும், கௌரியையும் கல்லூரியில் விடுவதற்காக அவன் புதிதாக வாங்கியிருந்த ப்ளாக் கலர் மஹிந்திரா தார் காரை வீட்டிற்கு சைடில் இருக்கும் ஷெட்டிலிருந்து வெளியே எடுத்தான்.
சந்தியாவை நிச்சயம் பண்ணிய உடனேயே காரை புக் செய்துவிட்டான். ஹனிமூன் முடித்து வந்ததும், சந்தியாவை அழைத்து கொண்டு போய் டெலிவெரி எடுத்தான்.
Advertisement
இப்பொழுது வைட் அண்ட் வைட்டில் காரை விட்டு இறங்கி கார் ஷெட்டின் கதவை மூடி விட்டு வந்தவனை ரசித்துக்கொண்டே முன் கதவை திறந்து ஏறி அமர்ந்தாள் சந்தியா. கௌரி பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள். ஆதி அவள் பார்வையை பார்த்தவன், ஆரம்பிச்சிட்டா. என்னதான் பாக்குறாளோ என்னட்ட. நைட்டெல்லாம் புலம்பி தள்ளுனா . அந்த தீபனை நினைச்சு. இப்ப பாரு இந்த பொம்முக்குட்டிய. எப்படி சைட் அடிக்கிறான்னு. கௌரி வேற இருக்கா. என்று நினைத்தபடி அவளை கண்களால் மிரட்டினான்.
Advertisement
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கௌரியோடு பேசியபடி வந்தவள், அவ்வபோது அவனை திரும்பி பார்த்தபடி வந்தாள். கல்லூரி வந்ததும் “நீ கிளாசுக்கு போ கௌரி. நா மாமாட்ட பேசிட்டு வரேன்” என்றாள்.
கௌரி இறங்கி சென்றதும் ஆதியின் முகத்தை தன்னை பார்க்கும் படி திருப்பி இரண்டு கன்னத்தையும் கிள்ளி முத்தம் வைத்தவள், “வேட்டி சட்டைல அழகோ அழகு மாமா நீங்க. அத்தைட்ட சொல்லி திருஷ்டி சுத்தி போட சொல்லணும்” என்றவளை
“காலேஜ் வாசல்ல வச்சு மாமாவ டெம்ப்ட் பண்ணாதடி பொம்மு. கவனமா இருடி” என்றவனிடம் “நீங்களும் கவனமா இருங்க மாமா” என்றுவிட்டு காரிலிருந்து இறங்கி சென்றாள் . ஸ்கை ப்ளூ சல்வாரில் உள்ளே சென்றவளை கண்களில் நிரப்பி கொண்டவன் அங்கிருந்து கிளம்பி நேராக கமிஷனர் ஆஃபீஸிற்கு சென்றான்.
Advertisement
காலையிலேயே கசகசவென்று கூட்டமாக இருந்தது காவல் ஆணையர் அலுவலகம். அங்கங்கு காக்கி உடுப்புகள், அக்கியூஸ்ட்டுகள் என்று கலவையாக இருந்தனர்.
டிசிபியின் அட்டெண்டர் பசுபதி ஆதிக்கு தெரிந்தவன் தான்.
அவன் ஆதியை பார்த்ததும் “ஐயா எங்கங் இந்த பக்கம். சார பாக்கணும்ங்களா” என்றான்.
“ஆமா பசுபதி. முக்கியமான விஷயமா அவர பாக்கணும். என் பேர சொல்லு. சார் க்கு டைம் இருந்தா என்ன பாக்கட்டும்” என்றதும் அங்கு சேரில் வெய்ட் பண்ண சொல்லிவிட்டு உள்ளே சென்றான் பியூன்.
டிசிபி விஜயதேவ்வர்மன். வயது முப்பது நெருங்கியிருக்கலாம். உயரம் ஆறடி ஒரு அங்குலம். மாநிறத்தில் சிக்ஸ் பேக் உடல் வாகுடன் மிக வசீகரமானவன். ஆள் போலீஸ் யூனிபார்மில்லாமல் டீ ஷர்ட்டில் சென்றால் சுற்றியிருக்கும் பெண்கள் அனைவரின் பார்வையும் அவன் மேல்தான் இருக்கும். கன்னியரை கவர்ந்திழுக்கும் கன்னக்குழி அழகன். இன்னும் திருமணம் ஆகாத எலிஜிபிள் பேச்சிலர்.
விஜய் கோவையில் பதவியேற்று ஆறு மாதங்கள் ஆகிறது. அவனை நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு மீட்டிங்கில் சந்தித்திருந்தான் ஆதி. அதனால்தான் இப்பொழுது அவனிடம் தீபன் விஷயத்தில் ஆலோசனை கேட்டு செல்ல வந்திருந்தான் .
பியூன் வெளியே வந்து ஆதியை உள்ளே செல்லுமாறு கூறினான்.
உள்ளே சென்ற ஆதி சேரில் அமர்ந்திருந்தவனை பார்த்து கை குவித்தான்.
விஜய் சேரில் இருந்து எழுந்து ஆதிக்கு கை கொடுத்தவன் “வணக்கம் ஆதித்யன். ஆர்கானிக் பார்மர் இல்ல. நம்ம பாத்துருக்கோம். ஆனா பேச டைம் இல்ல. உட்காருங்க”
“ஆமா சார். நீங்க அன்னைக்கு பிஸியா இருந்தீங்க”
“எஸ் ஐ நோ மிஸ்டர் ஆதித்யன். நாம ஒரே ஏஜ் குரூப்லதான் இருப்போம். சார் வேண்டாம். கால் மீ விஜய் ஆர் தேவ் அஸ் யுவர் விஷ்”
அதற்கு சிரித்த ஆதி “நீங்களும் ஆதின்னே கூப்பிடுங்க விஜய். மிஸ்டர்லாம் வேண்டாம்” என்றான்.
“சொல்லுங்க ஆதி. என்ன விஷயமா என்ன பாக்க வந்துருக்கீங்க. என்னவா இருந்தாலும் சொல்லுங்க. முதல்ல உங்க பிரச்சனையைத்தான் நாங்க பாக்கணும். ஏன்னா நீங்க நல்லா இருந்தாதான் நாட்ல எல்லாரும் நல்லா இருக்க முடியும். டூ யு நோ. என் அப்பா கூட விவசாய கல்லூரி பேராசிரியர்தான். அவருக்கு விவசாயம் தான் உயிர்மூச்சு. இன்பாக்ட் என்ன உங்கள மாதிரி வளக்கணும்ன்னுதான் அவர் ஆசைப்பட்டார். பட் மை ஆம்பிசன் ஈஸ் ஐபிஎஸ் ஒன்லி” என்று சிரித்தவனிடம்
“தெரியும் விஜய். சுந்தரபாண்டியன் சார எனக்கு ஆறு ஏழு வருசமா நல்லா தெரியும். நா விவசாயம் பார்க்க ஆரம்பிச்ச புதுசுல தஞ்சாவூர் வந்து நிறைய டைம் சார பாத்துருக்கேன். இப்பவும் சார்ட்ட காண்டாக்ட்லதான் இருக்கேன். நா நிறைய அக்ரி ஸ்டுடென்ட்க்கு கெய்ட் பண்ணாலும் எனக்கு சார்தான் பஸ்ட் குரு” என்றதும் ஆச்சரியமான விஜய்
“ஓ ரியல்லி. நா சிக்ஸ் மந்தா இங்க இருக்கேன். அப்பா உங்கள பத்தி என்னட்ட சொல்லவே இல்ல பாத்தீங்களா”
அதற்கு சிரித்த ஆதி “ஆனா நீங்க இங்க ட்ரான்ஸ்ஃபெர் ஆகி வர போறீங்கன்ன உடனே சார் எனக்கு கால் பண்ணி உங்கள பாத்துக்க சொன்னாங்க” என்று சொன்னதும் விஜய் முகம் போன போக்கை பார்த்து வாய் விட்டு சிரித்தான்.
விஜயும் சிரித்தவன் “மகன் ஒரு ஐபிஎஸ் ஆஃபீசர்ன்றதே எங்கப்பாவுக்கு அப்பப்ப மறந்துடும். ஆனா நீங்க என்ன வந்து முன்னவே பாத்துருக்கலாமே” என்றதும்
“அப்பான்னா அப்படிதான் விஜய். சார் உங்கள பத்தி அப்படி சொன்னாலும், எனக்கு தெரிஞ்சவரைக்கும் நீங்க இங்க பதவி ஏத்துக்க போறீங்கன்ன உடனே உங்கட்ட இருந்து அக்க்யுஸ்ட்டுங்க எப்படி தப்பிக்கிறதுன்னுதான் பயப்பட ஆரம்பிச்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அதனாலதான் உங்களுக்கு உதவி தேவைப்படும்ன்னு எனக்கு தோணல. ஆனா தெரிஞ்சவங்க மூலமா அப்பப்ப உங்கள பத்தி கேட்டு தெரிஞ்சுப்பேன். ஏன் உங்க பியூன் இருக்கானே, அவன்கூட எனக்கு தெரிஞ்சவன்தான்” என்று ஆதி கூறியதும் அவனை மிக பிடித்தது விஜய்க்கு.
பதவில இருக்கவன் தெரிஞ்சவன்னு வந்து ஆஃபர் கேட்கவும் இல்ல. இல்ல உங்கப்பா சொன்னாங்கன்னு உனக்கு ஹெல்ப் பண்றேன்னு வந்து தொந்திரவு பண்ணவும் இல்ல. என்று அவன் மேல் மதிப்பானவன்
“சரி ஆதி. அப்பா மீடியேட்டரா இல்லாம நீயும் நானும் இனிமே பிரண்ட் . ஓகேவா” என்றதும் ஆதியும் சிரித்து கொண்டே “ஓகே விஜய்” என்றான்.
“சரி சொல்லு ஆதி. எதுக்காக என்ன பாக்க வந்த” என்று விஜய் கேட்டதும் இதுவரை சிரித்து கொண்டிருந்த ஆதியின் முகம் கவலைக்கு மாறியது.
“இங்க நம்ம ஊர்ல ஜிகே ரியல் எஸ்டேட்ஸ் ன்னு நிறைய ப்ளாட்ஸ் பாத்துருப்ப”
“ஆமா. பாத்துருக்கேன். ஆனா நார்மலா ரியல் எஸ்டேட் பிரச்சனையெல்லாமே நீயே டீல் பண்ணிடுவீயே. அதுக்காகவா இவ்வளவு ஒர்ரி பண்ற” என்று விஜய் கேட்டதும் இப்பொழுது ஆதி ஆச்சரியமானான்.
அதற்கு விஜய் “என்ன அப்டி பாக்கிற. போலீஸ்காரங்கப்பா நாங்க. ஊருக்கு வந்த ஒன் மந்த்குள்ளவே ஊருக்குள்ள அக்யுஸ்ட தெரிஞ்சி வச்சிருக்க மாதிரி, நல்லது பண்றவங்க யாருண்ணும் தெரிஞ்சி வச்சிருப்போம்” என்றான்.
“அது சரிதான் என்ற ஆதி “இப்ப பிரச்சனை நிலம் சம்பந்தப்பட்டது இல்லப்பா. என் வைப் சம்மந்தப்பட்டது” என்றான்.
“ஓ உனக்கு மேரேஜ் ஆயிடுச்சா. லவ் மேரேஜ் போலவே”
“எப்படி கண்டுபிடிச்ச”
“ம் வைப்ன்னு சொல்லும்போதே முகத்துல பல்ப் எரியுதே. அதை வச்சித்தான். சரி உன் வைப்க்கு என்ன பிரச்சனை” என்றதும்
சுருக்கமாக சந்தியாவின் பெங்களூர் வாழ்க்கை, ஸ்ரீதருடனான நிச்சயம், ஆதியின் முதல் கல்யாணம், பிறகு சந்தியா ஆதியின் லவ், கல்யாணம், இப்பொழுது தீபனின் வருகை மற்றும் பேச்சுக்கள் என்று பிரச்னையை கூறினான் ஆதி.
அவன் கூறி முடித்ததுமே தீபனின் ஜிகே குரூப்ஸ் பற்றி விசாரிப்பதற்காக அவன் ஊரான ஆந்திராவில் உள்ள சித்தூருக்கு கால் செய்தான் விஜய். அங்கு எஸ்பியாக இருக்கும் அவன் நண்பனிடம் தொடர்பு கொண்டவன் ஜிகே குரூப்ஸ் அண்ட் தீபன் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து அனுப்புமாறு கூறினான்.
தற்போது தீபன் தங்கியிருக்கும் முகவரி அவன் போன் நம்பர் அனைத்தும் ஆதியே கொடுத்தான். அதை கேட்டுக்கொண்டு அவன் டீமில் உள்ள எஸ்ஐ ஒருவனை அழைத்து தீபனின் தினசரி நடவடிக்கையை கண்காணிக்கவும், அவன் மொபைல் ஸ்பீச்சை ரெக்கார்டு செய்யவும் கூறினான். பிறகு அவனை வெளியே அனுப்பி விட்டு ஆதியிடம்
“இப்போதைக்கு சிஸ்டர் பாதுகாப்புல நீ பண்ணிருக்க ப்ரிகாஷனரி போதும். அதுக்கப்றம் அந்த தீபனோட நடவடிக்கை வச்சித்தான் நாம மூவ் பண்ண முடியும் . உன் வைப் போட்டோ வேணுமே” என்றதும் வீட்டிலிருந்து எடுத்து வந்த சந்தியாவின் போட்டோவை குடுத்தான் ஆதி.
அதை வாங்கி பார்த்தவன் “உண்மைய சொல்லு இந்த பொண்ணு உன்ன லவ் பண்ணாங்களா . இல்ல நீ மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டியா. உனக்கு ரொம்பவே அதிகம்தாம்ப்பா சிஸ்டர்” என்று கூறிக்கொண்டே போட்டோவை ஒரு பைலில் வைத்து மூடினான்.
“ஏன்பா ஏன். வெந்த புண்ணுல வேல பாச்சுற. எல்லாரும் சொல்றதையே நீயும் சொல்ற . ஒருநாள் நீயே வந்து அவகிட்ட நேரா கேட்டுடு” என்ற ஆதி “சரி அப்ப நா கிளம்பவா. உன் வேலை நேரத்துல வந்து தொந்திரவு பண்ணிட்டேன்” என்றான்.
“இதுவும் என் வேலைதான் ஆதி. அப்புறம் தீபன் பத்தி தகவல் வந்தா உனக்கு கால் பண்றேன். உன் வைப் சொல்றமாதிரி நீயும் கொஞ்சம் கேர்ஃபுல்லாவே இரு. இனிமே நீ என்ன நேர்ல வந்து மீட் பண்ணாத. எதுவா இருந்தாலும் நா உனக்கு கால் பண்றேன் . இப்பவே அவன் உன்னையோ இல்ல உன் வைப் சந்தியாவையோ பாலோவ் பண்ண ஆரம்பிச்சிருக்கலாம்”
“இல்ல விஜய். இன்னைக்கு நா வந்த கார் புதுசு. இன்னைக்குத்தான் வெளில எடுத்திருக்கேன். அதனாலதான் உன்ன பாக்கவே தைரியமா வந்தேன். எப்படி இருந்தாலும் பஸ்ட் டைம் உன்ன நேர்ல பாத்து பேசித்தான ஆகணும்”
“ஐ அண்டர்ஸ்டாண்ட் ஆதி. பட் யூ சுட் பி வெரி கேர்ஃபுல்” என்று கூறி விடை கொடுத்து அனுப்பி வைத்தான்.
இரண்டு மணிநேரம் கழித்து சக்கரை ஆலையில் இருந்த ஆதிக்கு கால் செய்தான் விஜய்.
“ஹலோ ஆதி. ஒரு முக்கியமான விஷயம். தீபன் அவங்க ஊர்ல இருந்து அவன் அப்பனோட அடியாளுங்கள நைட்டே கிளம்பி வர சொல்லிட்டான். அவனுங்க காலைல இங்க வந்துட்டானுங்க. காலைல நீ சந்தியாவ டிராப் பண்ணத அவன் பாத்துருக்கான். பட் நல்ல வேலையா அவன் உன்ன பால்லோவ் பண்ணி, நீ என்ன பாக்க வந்தத கண்டுபிடிக்கல. அவன் டார்கெட் புல்லா சந்தியாதான். ஈவினிங் உன் கார அட்டாக் பண்ணி சந்தியாவ தூக்க சொல்லிருக்கான் அவங்க ஆளுங்ககிட்ட. தீபனோட போன ரெகார்ட் பண்ணதுல இதெல்லாம் தெரிய வந்துருக்கு” என்று கூறிவிட்டு மேலும் சில விஷயங்களை ஆதியுடன் கலந்தாலோசித்துவிட்டு வைத்தான்.
மதியம் லஞ்ச் முடித்து கிளாஸ் ரூமில் அமர்ந்திருந்த சந்தியாவிடம் வந்த அருண், அரவிந்த் வந்திருப்பதாகவும் அவனுடன் வீட்டுக்கு கிளம்புமாறும் கூறி, சந்தியா கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கூறாமல் கையோடு கல்லூரி வளாகத்திற்குள்ளேயே வந்திருந்த அரவிந்தின் ஸ்கோடாவில் ஏற்றி அனுப்பி விட்டான்.
காருக்குள் ஏறிய சந்தியா “என்னாச்சு அரவிந்த். நீங்க எப்ப ஊருக்கு வந்தீங்க. என் மாமா எங்க. அந்த தீபனால ஏதும் பிரச்சனையா. கௌரிய வேற காலேஜ்லயே விட்டுட்டு வந்துட்டோம்” என்று ஏகபட்ட கேள்விகளை கேட்டதும்
அரவிந்த் “ம் உன் மாமாவை பழிவாங்க ராவணனா மாறி உன்ன கடத்திட்டு போயிட்டுருக்கேன். கொஞ்சம் கம்முன்னு வாம்மா” என்றான்.
அதற்கு அவனை திரும்பி நன்றாக மேலேயும் கீழேயும் பார்த்த சந்தியா “ம்ஹும். அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க சார்” என்றாள்.
error: Content is protected !!