Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ01 – கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால்…1

 

பதினெட்டுப் பட்டி கிராம மக்களும் ஆலமரத்தடியில் கூடியிருக்க.. காது கிழிந்து மண்டை பிளக்கும் அளவிற்கு அங்கு சலசலப்பு.

 



Advertisement

சிக்கலான ஒரு கேஸ்சிற்கு தீர்ப்பு வேண்டி மக்கள் கூடியிருந்தனர், அவர்கள் நாட்டாமையை எதிர்பார்த்து.

 

“என்ன ஓய்… இன்னும் உங்க நாட்டாமை வரலியோ?”, ஏதோ ஒரு முக்கிலிருந்து முரட்டு மீசைக்காரன் ஒருவன் முந்திக்கொண்டு குரல் எழுப்பினான்.

Advertisement

 

Advertisement

“என்ன ஓய்.. வாய் ஓவரா கிழியிது? உமக்கும் தானே ஓய்.. அவர் நாட்டாம..”, கூட்டத்திலிருந்து ஒருவன் ‘எவன் டா அவன்’ என்பது போல் வீருகொண்டு எழுந்தான்.

 

“சூரியன் கூடச் சொன்ன நேரத்துக்கு வராது. ஆனா எங்க நாட்டாம சொன்ன டைமுக்கு டான்னு வந்து நிப்பார். அத தெரிஞ்சுட்டு உம்ம நாக்கு மேல பல்ல போட்டு பேசும்யா!” – மற்றொருவன் சண்டைக்குத் தயாராக..

Advertisement

 

நாட்டாமையின் ‘ஃபேன் க்ளப்’பைப் பார்த்தபின் எதிர்க்கட்சியை சேர்ந்த முரட்டு மீசை வாயை ஏன் திறக்கப் போகிறான்?

 

நிமிடங்கள் தேய்ந்து கரைந்து போகும் முன், மாட்டின் கழுத்து மணி கிலுங்க… மாட்டு வண்டி ஒன்று அசுர வேகத்தில் ஆலமரத்தடியை நோக்கி அனல் பறக்க வந்து கொண்டிருந்தது.

 

“நாட்டாம ஐயா வண்டி வருது டோய்!”, என்ற அறிவிப்புக்குப் பின் அங்கு பின்-ட்ராப் சைலன்ஸ். தோளில் கிடந்த துண்டுகள் எல்லாம் இடுப்புக்கு இடம்பெயர.. அனைத்து கண்களும், மாட்டு வண்டி வரும் திசை நோக்கி.. வழிமேல் விழி வைத்து!

 

இதை எல்லாம் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பட்டணத்துப் பாவை, சுவாரசியம் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கிரமமும்.. மரத்தடி பஞ்சாயத்தும் இது தான் அவளுக்கு முதல் முறை போலும்.

 

“நாட்டாம வந்துட்டாரு.. நாட்டாம வந்துட்டாரு..”, ஒரு சிறுவன் கூவிக் கொண்டே ஓட.. கடவுளின் அவதார புருஷனைப் பார்க்கப் போவது போல் அனைவர் முகத்திலும் பக்தி பரவசம் தாண்டவமாடியது.

 

‘என்ன டா ஓவர் பிள்டப்பா இருக்கு? பெரிய அப்பாடக்கரோ?’ பட்டணத்து மங்கை நினைப்பைப் பொய்யாக்கவில்லை அவன் தோற்றம்.

 

கரை வைத்த வெள்ளை வேட்டியும், மடிப்பு நீங்காத அரை கை வெள்ளைச் சட்டையும்.. பின்னோக்கி படிய வாரிய கேசமும், நெற்றியில் சந்தன கீற்றும், முறுக்கி விட்ட மீசையுமாய் ஆறடி உயரத்தில், தூசி பறக்க ஐயனார் போல் முப்பது வயது கட்டிளம் காளை ஒருவன்.. அப்படி ஒரு சீரியஸ் முகத்தோடு வந்து கொண்டிருந்தான். நாட்டாமை கெத்தாம்!

 

பறந்த தூசி கொஞ்சம் ஓவராகிப் போக.. ‘ஹாச்’ தும்மல் வந்துவிட்டது முன் வரிசையில் நின்றிருந்த பட்டணத்துப் பாவைக்கு. பெண்ணிற்கு டஸ்ட் அலர்ஜி போலும்.

 

ஒற்றை தும்மல் கெட்ட சகுனம் ஆயிற்றே..?!

 

பெண்கள் நாடியில் கைவைத்து முகத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி திருப்பிப் பேசிக் கொள்ள.. கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு.

 

சென்று கொண்டிருந்த நாட்டாமை நின்றான். ஸ்லோ மோஷனில் திரும்பி பார்த்தான். வில்லென வளைந்த புருவம், சிவப்பேறிய கண்கள், ஆளைத்துளைக்கும் பார்வை.. அசைத்துப் பார்த்தது பெண்ணை. தன்னால் அவளின் கால்கள்  ஒரு அடிப் பின் சென்றது. பார்த்தான் அவளை மேலிருந்து கீழ் வரை. பிடிக்கவில்லை அவள் பட்டணத்து உடுப்பு என்றது அவன் முக சுளிப்பு.

 

“புள்ள ஊருக்கு புதுசு ராசா… தப்பா நினைக்காதையா. பட்டணத்தில இருந்து வந்த எண்ட பேத்தி! உனக்கு முறை ராசா..”, ப்ளௌஸ் மிஸ்ஸிங்க பாட்டி வெற்றிலை வாயோடு.. காதில் பாம்படம் ஆட கூறவும், கனிந்தவன், சட்டென்று அன்னியன்.. அம்பியாக மாறி, “ஒரு பிரச்சினையும் இல்ல ஆத்தா..”, என்றான் இன்முகமாய்.

 

மீண்டும் அவளிடம் பார்வை நிலைக்க.. அம்பி ரெமோவாக மாறிவிட்டான். ‘ரொமண்டிக் லுக்’கோடு.. சட்டை காலரைப் பின்பக்கம் இழுத்துவிட்டு… நாவை இரு கன்னத்தின் உட்புறத்திலும் மாற்றி மாற்றி இடித்துக் கொண்டே நமுட்டு சிரிப்பை உதிர்த்து.. மீசையை அவன் முறுக்க, ஏதோ விசித்திர ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து நின்றாள் நங்கை.

 

சின்ன தலையசைப்பை அவளுக்கு கொடுத்தவன், விட்ட வணக்கத்தை மீண்டும் போட்டுக் கொண்டே மரத்தடியை நோக்கி நடந்தான்.

 

மக்கள் கீழே அமர, மினிஸ்டர் கமிட்டி மரத்தைச் சுற்றிக் கட்டியிருந்த சிமென்ட் திண்டில் அமரவும்.. நாட்டாமை ஒரே குதியில் பாய்ந்து திண்டில் ஏற, கால் தடுக்கி ஜஸ்ட் மிஸ்சில் கீழே விழாமல் தப்பித்தவன், கலைந்த முடியைப் பின்னோக்கி தள்ளி, மீசையை முறுக்கி, தொண்டையை செருமிக் கொண்டு கீழே விழுந்து போன அங்கவஸ்திரத்தை எடுத்துப் படு ஸ்டைலாக  தோளில் போட்டுக் கொண்டான்.

 

‘எங்களுக்கு எல்லாம் கீழ விழுந்தாலே மீசையில மண்ணு ஒட்டாது. இது எல்லாம் ஜுஜுபி’ என்ற தோரணை அவனிடம்.

 

‘அட கொடுமையே…’ பட்டணத்து பெண்ணவள் வாய் மூடி கிளுக்க… கனல் கக்கும் அவன் சூப்பர்-மேன் லேசர் பார்வை அவளை மிரட்டியது. வந்த மத்தாப்பு சிரிப்பு.. சிகப்பு லேசரில் பொசுங்கிப் போனது. பெண்ணின் அழகு முகமும்!

 

தென்றல் காற்று வீச.. இரண்டடி திண்டில் புலிப்போல் பாய்ந்து குதித்ததில் கலைந்து போன சில பல முடிகள்… அழகாக ஆடிக் கொண்டிருக்க.. அதைப் பின்னோக்கி தடவிவிட்டு, வெற்றிலை வாயோடே ஹீரோ.. அதாவது நாட்டாமை, “எல்லாருக்கும் வணக்கம். சின்ன கவுண்டர் வம்சத்துக் குட்டி கவுண்டராகிய நான்..” பளா பளா பளா… “உங்க மரியாதையும் நம்பிக்கையும் காப்பாத்துவேன். நியாயமான தீர்ப்பைத் தருவேன். இது, என் மேல நம்பிக்கை வச்சிருக்க இந்த பதினெட்டுப் பட்டி மக்கள் தல மேல சத்தியம்.” என்றான்.

 

‘நாம தப்பிச்சோம் டா சாமி!’ – அவளே தான்! பட்டணத்து சிட்டு!

 

திண்டில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்தவன், “சொல்லுங்க உங்க வழக்க!” என்று இருகரம் உயர்த்தி கூட்டத்தை பாகுபலி தோரணையில் ஆரம்பித்து வைத்தான்.

 

வழக்கு உரைக்கப்பெற்றது.

 

“பொண்ண காதல் ஆச காட்டி அவள ஆட்டைய போட்டுட்டான் நாட்டாம.. பொண்ணு அம்மா ஞாயம் கேட்டு வந்திருக்கு”

 

கூறியவனின் படு கேவலமான வார்த்தை பிரயோகத்தைப் பார்த்த நாட்டாமை முகத்தில் அதிருப்தி! ‘படிக்காத பயல கேபினெட் மினிஸ்டரா வச்சா வேற எத எதிர்பார்க்க?’ தலையைச் சிலுப்பிக் கொண்டான் பத்தாவதையே பத்து முறை பயின்ற நாட்டாமை.

 

நெற்றி சுருங்க.. ஐயனார் ஒரு முறை கூட்டத்தை ஸ்கேன் செய்தான்.

 

முதல் வரிசையில் அவன் நேர் எதிரில், அம்மா வயதில் ஒருத்தி முந்தியை வாய்க்குள் திணித்துக் கொண்டு தேம்ப… அருகிலிருந்த இளம் பெண் கண்ணீர் வழிய நின்றிருந்தாள்.

 

பக்கவாட்டில் நின்றிருந்தவன் தெனாவட்டாக ‘யாருக்கு வந்த விருந்தோ’ என்பது போல் குச்சி கொண்டு பல்லை நோண்டிக் கொண்டு நின்றிருந்தான். காலையிலேயே கறி சாப்பிட்டதின் விளைவு!

 

இந்த இருவரையும் மாறி மாறி முறைத்துக் கொண்டு பெண்ணின் முறை மாமன் ஒரு பக்கம்! எல்லாம் பறி போனதில் அவனுக்கு வயிற்றெரிச்சல். பசியாகக் கூட இருக்கலாம்!

 

‘க்கும்..’ தொண்டையைக் கனைத்த நாட்டாமை.. அங்கவஸ்திரத்தை மடியில் போட்டு கையாலேயே சிறிது நேரம் மடிப்பு கலையாத துணியை அயன் செய்தான். யோசிக்கிறாராம்!

 

தலை உயர்த்தி கூட்டத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தவன், சட்டை காலரைப் பின்னோக்கி இழுத்துவிட்டு.. சொம்பில் வெற்றிலையைத் துப்பி,

 

“இவன் உங்கள ஆச காட்டி மோசம் செஞ்சுட்டானுங்களா அம்மணி?”, என்று கேட்க…

 

பதிலுரைக்காமல் அவள் மேலும் அழுது கொண்டே இருக்க..

 

வாயிலிருந்த முந்தியை எடுத்த பெண்மணி தோள் பட்டையால் அருகில் இருந்தவளை இடித்து, “கேடுகெட்ட சிறுக்கி பெத்த மவளே.. வாய திற”, என்று அவரையே திட்டிக் கொண்டது எல்லாம் அவலம்!

 

முத்து உதிர்ந்தது. “நான் இவன விரும்பலைங்க ஐயா. எனக்கு என் மாமன் மேல உசுரு. அவருக்கும் என் மேல ஆசை. இவன கட்ட மாட்டேன்னு தெரிஞ்சுட்டு இந்த துரோகி யாருமில்லாத நேரம் வீட்டுக்கு வந்து என்னை மோசம் போக்கிட்டான்”, யுவதி கை நீட்டி பல் குத்திக் கொண்டிருப்பவனை குற்றம் சாட்டினாள்.

 

‘இங்க பாரு டீ கதைய’.. ‘அம்மாடியோ இது என்ன புது கதை’.. ‘பாவத்த..’.. ‘இந்த பொண்ணுக்கு என்ன நியாயம் கிடைக்குமோ..’ கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு.

 

“எலேய் பல் குத்தி.. நேசமாலே அந்த பொண்ணு சொல்றது?”, நாட்டாமையின் அதிரடி கேள்வி கணை வில்லனைத் தாக்கியது.

 

“ஆமாங்க. நான் தே அவ கற்ப களவாண்டேன்”, பகிரங்கமாக கோர்ட்டில் அனைவர் முன்னிலையிலும் தவறு பெருமிதத்தோடே ஒத்துக் கொள்ளப்பட்டது.

 

அனைவரும் ஏதோ நினைத்திருக்க.. நிகழ்ந்தேறியதோ வேறு. எத்தனை சிக்கலான வழக்கு இது! என்ன தீர்ப்பை நாட்டாமை வழங்கப் போகிறார்? இதயங்களில் மத்தளம் கொட்டியது. சலசலப்பு அதிகமானது.

 

“இந்த பஞ்சாயத்துக்குத் தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு!” – நாட்டாமையின் கணீர் குரலில் அங்கு மீண்டும் பின்-ட்ராப் சைலன்ஸ். ஆடு மாடு கூட அமைதி காத்தது.

 

“வேலியில விழுந்த புடவை கிழிஞ்சு போச்சு! அதனால..”

 

கடைசி பாலில் இரண்டே ரன் வேண்டும்.. ஆனால் பேட்-டை கையில் வைத்திருப்பவன் டக்கை தாண்டியதாக சரித்திரம் இல்லை! அந்த நிமிடம் அரங்கில் இருக்குமே ஒரு தவிப்பு.. அதே தவிப்பு இங்கும். அனைவர் முகத்திலும் தீவிரம். சிலரின் நகங்கள் அவர்கள் பற்களுக்கு இரையானது. நாட்டாமையின் அரை நொடி மௌனம் அனைவரையும், இல்லாத சீட் நுனிக்குப் பிடித்துத் தள்ளியது! ‘அதனால..?’

 

“அதனால.. கிழிஞ்ச புடவைய வேலி தான் பாதுகாக்கணும்!”

 

கூட்டத்தில் அனைவரும் பேய் விழி விழித்தனர்.

 

‘ஆங்??? என்னடா உளருறான்? லூசுப் பயலா இருப்பான் போல!’ –  இது பட்டணத்துப் பைங்கிளி மைண்ட் வாய்ஸ்.

 

“கட்டுடா தாலிய! இது தான் இந்த பதினெட்டுப் பட்டி நாட்டாமையோடு தீர்ப்பு!”

 

‘தீர்ப்பு… தீர்ப்பு… தீர்ப்பு!’. அண்ட சராசரம் நடுநடுங்க.. நான்கு திக்கும் ‘தீர்ப்பு’ எதிரொலித்தது.

 

பெண்ணிற்கு அந்த பல்-குத்தியிடம் தாலி வாங்க இஷ்டமில்லை. தன் பெண்மையைக் களவாடியவனோடு ஒரு வாழ்வா…? இரு உள்ளங்கைகளுக்குள்ளும் முகம் புதைத்து, “இதுக்கு என்னைப் பாழும் கிணத்துல தள்ளிடு ஆத்தா.. என் மாமன் இல்லாம என்னால வாழ முடியாது. அதுவும் என்னைப் பாழாகினவன் கூட ஒரு வாழ்க்கை என்னால வாழவே முடியாது.”, விக்கிக் கொண்டு வர.. முகத்திலிருந்த இரண்டு டேமையும் மீண்டும் திறந்து விட்டாள்.

 

நிமிடங்களில் மஞ்சள் கிழங்கு கட்டப்பட்ட மஞ்சள் தாலிக் கொடி தயாரானது.

 

மிரண்ட பார்வையோடே அடிமேல் அடி வைத்து பெண் பின்னோக்கி செல்ல.. அவள் கால்கள் பின்ன… பல் நோண்டிக் கொண்டிருந்தவன் கையில் இப்பொழுது மஞ்சள் தாலி. தாலிக் கொடியைத் தூக்கிப்பிடித்து, கோணல் சிரிப்போடு முன்னோக்கி வில்லன் செல்ல.. கையறு நிலையில் மாமன் கைபிசைந்து விழித்துக் கொண்டே நிற்க.. கூட்டம் வாய் மூடி நடந்து கொண்டிருப்பதை எந்த எதிர்ப்பும் காட்டாது வேடிக்கைப் பார்த்து நின்றது.

 

மேலே தலை உயர்த்தி சூரியன் திசை நோக்கி, நேரம் என்னவென கண்டுகொண்ட ஹீரோ, வேறு அவசரமான ஒரு அப்பாயின்மெட் இருக்கவே, “நியாயமான ஒரு தீர்ப்ப சொல்லிட்டேன். உங்க எல்லார்கிட்ட இருந்தும் நான் விடுத்தல வாங்கிக்கிறேன்.”, என்றான் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டு!

 

செருப்புக்கடியில் தீ பொறி கிளம்ப.. நாட்டாமை வணக்கம் வைத்து கொண்டே நடக்க… மக்கள் அனைவரும் மறுத்துப் பேசத் தைரியம் இல்லாமல்.. இடுப்பு வரை குனிந்து நாட்டாமையை வணங்க..

 

பயமறியா கன்று ஒன்று சிலுப்பிக் கொண்டு முன் வந்தது. பாய்ந்து முன் வந்த வேகத்தில் தூசி அவள் நாசிக்குள் செல்லவும், மீண்டும் ஒரு ‘ஹச்’! மூக்கை தேய்த்துக் கொண்டாள் பட்டணத்து அழகி!

 

அன்னியன் ரெமோவாக மாறும் முன்..

 

அவள், அந்த பட்டணத்துப் பாவை, “ஹலோ.. மச்சான் இந்த தீர்ப்பு செல்லாது! தீர்ப்ப மாத்து நாட்டாம!”, என்றாளே பார்க்கலாம்..! சர்வமும் அடங்கி ஒடுங்கிப் போனது அங்கு!

 

அவ்வளவு பெரிய கூட்டம் முன் ஒரு பெண் சிங்கம், சிங்கிளா சென்று கொண்டிருந்த சிங்க நாட்டாமையை எதிர்த்து நின்றாள்.

 

கடல்.. காற்று… பறவை… மரம்.. பறந்து கொண்டிருந்த சருகு.. தூசி எல்லாமே சிலையாய் மாறிப் போன தருணம்!

 

“அச்சோ… என்ன பொண்ணு இவ? நாட்டாமைய எதிர்த்து நிக்கிறாளே? என்ன ஆக போகுதோ?”, வாயை கையால் மூடி விழி விரித்து.. சகுந்தலா பாட்டி பார்த்துக் கொண்டிருக்க… மீண்டும் மீண்டும் அங்கிருந்த ஒவ்வொரு முகமாய் ஃபோகஸ் போக.. அனைவர் முகத்திலும் அப்படி ஒரு அதிர்ச்சி!

 

ஒருவாறு அனைவர் முகமும் முடித்த பின்… மீண்டும் நாட்டாமை… பட்டணத்துப் பெண்.. பாம்பட கிழவி.. என்று ஒவ்வொரு முகமும் முன் வர.. சகுந்தலா பாட்டிக்கு எரிச்சல் கிளம்பியது…

 

“தூர பாத்தாலே விளங்கல. இதுகள வேற திரும்ப திரும்ப கிட்ட காட்டிக்கிட்டு. என்ன ஒரு கேவலமான மேக்-அப்? மனுஷன் பொறுமை போறதுக்குள்ள அடுத்து என்ன டா..”. புலம்பினார்.

 

சகுந்தலா பாட்டியின் தவிப்பு புரியாமல், ஒரு பெரிய ‘அதிர்ச்சி’ சத்தத்தோடு, பாட்டி பார்த்துக் கொண்டிருந்த டிவி திரையில் ‘தொ..ட..ரு..ம்’ என்று ஒவ்வொரு எழுத்தாய், த்ரிலர் பட ரேஞ்சிற்கு எழுத்துகள் வந்து விழுந்தது.

 

“ஐயோ… ஐயோ.. எப்படி ஒரு முக்கியமான சீன்ல பாவி தொடரும் போட்டுட்டான்? திங்க கிழம வரைக்கும் காத்திருக்கணும்.. எங்கேயாவது டிவி பாக்குறவ கஷ்டம் புரியுதா இந்த சீரியல் போடுற பரதேசிங்களுக்கு?

 

பாழா போனவன் இந்த பொண்ண என்ன பண்ண போறானோ? தாலி கட்ட வந்தவன் தலயில இடி விழ! முறை மாமன் சரியான மங்குனி அமைச்சரா இருப்பான் போல… நிக்கிறான் பாரு கைய பிசஞ்சுகிட்டு! இந்த நாட்டாம வேற கோவமா பாக்குறானே.. இருந்தாலும் அந்த பட்டணத்து புள்ளைக்கு தைரியம் தான். இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு எல்லாம் எங்க இருந்து இத்தன தைரியம் வருதோ?! அடுத்து என்னாகுமோ..”, பாட்டி புலம்பிக்கொண்டே டிவி அணைத்து,

 

“அம்மா எப்போ வராளாம்?” சோஃபாவில் அவரோடு இருந்த இளசுகளிடம் கேட்க,

 

“பத்தாகிடும் பாட்டி. அப்பா கூட தானே போனாங்க. வருவாங்க. நீங்க படுங்க. நாங்க வெயிட் பண்றோம்!” என்ற பதில் வர,

 

“நேரத்தொட படுங்கம்மா…”, என்று கூறிக் கொண்டே படுக்கையில் விழுந்தார்.

 

அவர் படுக்கைக்குச் செல்லவும், அவருக்கு முட்டியில் தைலம் தேய்க்கச் சின்னவள் கூடவே சென்றாள்.

 

நேரம் இரவு ஒன்பது. அந்த அழகிய தனி வீட்டின் விஸ்தாரமான கொல்லை புரத்தில், நிலவு கிணற்றுக்குள் விழுந்து கிடக்க, அதைப் பார்த்துக் கொண்டே அவள் கிணற்றுத் திண்டில் அமர்ந்தாள்.

 

நிசப்தமான இரவு. பூச்சிகளில் ரீங்காரமும், தூக்கம் வராத குருவிகளின் சிணுங்கலும், செல்லமாய் தேகத்தைத் தழுவி மேனியைச் சிலிர்க்கச் செய்யும் தென்றலும்.. அவளையும் தீண்டியது. ஒரு வித ஏகாந்த வேளை. இந்த நிமிடம் மனதில் பொக்கிஷமாகப் புதைத்து வைக்க வேண்டிய தருணம் தான். புதைத்து கொண்டாள்.

 

நிலவு ஒளியில் அதிகம் தெரியவில்லை என்றாலும்.. தெரிந்தது அவள் வதனம். அழகிய முகத்தை கசங்கலாக்கியிருந்தது யோசனை ரேகை. இன்னும் இரண்டே நாட்கள் தான் இங்கு! அதன் பின் சென்னைக்கு பெட்டியை கட்ட வேண்டும்.

 

“என்ன அலர் யோசனை..”, உள்ளிருந்து வந்தாள் சிறியவள்.

 

இவள் அளவிற்கு அவளுக்குத் துணிச்சல் இல்லை போலும்… மூன்றடி உயரத் துவைக்கும் கருங்கல் மேல் அமர்ந்து கொண்டாள். நிலவை விட பளிச்சென்று பிரகாசித்தது சிறியவள் முகம்.

 

“மண்டே கிளம்பிடுவேன் நகு. அது தான் எப்படியோ இருக்கு.”

 

“கவல படாத அலர்… ஃபோன் போட்டு அப்டேட் தரேன்.”

 

“என்ன அப்டேட் டீ?”, பெரியவளுக்குப் புரியவில்லை.

 

“நம்ம நாட்டாமை தீர்ப்ப மாத்தறாரா என்னன்னு”

 

“அட சீ..”

 

இருவரும் குலுங்கிச் சிரித்தனர்.

 

“பாட்டி புலம்பிட்டே தூங்கறாங்க. ஸ்டுபிட் சீரியல் அலர், அதுக்கு என்ன டென்ஷன் பாரேன் பாட்டிக்கு?” 

 

“கத தான் நகு. பட் யோசிச்சு பாரேன். பாவமா இல்ல அந்த பொண்ணு நிலம? நமக்கு பரவால நகு. அந்த காலத்துல.. அந்த வில்லேஜ்ல பொண்ணுங்க எல்லாம் எவ்வளவு பாவம் இல்ல? ஆச பட்டவன விட்டுட்டு யாரோ சொன்னதுக்காக எவன் கூடவோ வாழ்க்க பூரா இஷ்டமே இல்லாம வாழணும். அவ சொன்ன மாதிரி… இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு கிணத்துல விழலாம்.”

 

“வில்லேஜ், சிட்டி எல்லாம் இல்லை. அந்த காலம் இந்த காலம் எல்லாம் இல்ல!! இப்போவும் நடக்க தான் செய்யுது. என் க்ளாஸ் மேட் ஸ்வர்ணாவோட அக்கா, காயத்திரி.. அந்த மெரைன் இன்ஜினியர் முகமத் அண்ணாவ எப்படி லவ் பண்ணிட்டு சுத்தினாங்க? விஷயம் வீட்டுல தெரியவும் அந்த அக்காவோட அம்மா விஷம் குடிக்கப் போய் அந்த அக்கா வேற வழி இல்லாம அவங்க சொந்தக்கார பையன கல்யாணம் பண்ணிகிட்டாங்க. பாவம். அந்த அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? அவங்க இனம் இல்லியாம்.. இது எல்லாம் ஒரு ரீசனா இந்த காலத்துல? பச்!”

 

“ஐயையோ… நான் எல்லாம் யாருக்காகவும் விரும்புறவன விட்டே குடுக்க மாட்டேன் பா.”

 

“அப்போ நீ லவ் பண்ண போறியா அலர்?”, யோசனையாய் அக்காவைப் பார்த்தாள் நகுநா.

 

“அட ச்சீ லூசு… ஒரு பேச்சுக்கு சொன்னேன். எனக்கு படிக்கணும். நல்லா படிச்சு, வேலைக்குப் போய் அம்மா அப்பாவ ரொம்ப ஹாப்பியா வச்சுக்கணும். அவங்க தான் எனக்கு எப்பவும் இம்பார்ட்டெண்ட்.”

 

“இன்கேஸ் நீ லவ் பண்றேன்னு வை. ஏதோ காரணத்தால.. அம்மா அப்பாவா, உன் லவ்வரான்னு வந்தா என்ன பண்ணுவ?”

 

“அப்படி மட்டும் நடக்கவே நடக்காது நகு. அம்மா அப்பா நீ.. எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம், அதனால காதலாவது கத்திரிக்காவது! அந்த கருமத்த செஞ்சுட்டு எவன் அவஸ்த படுறது? காதலிச்ச ஒருத்தரும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரம் சொல்லல!”

 

‘காதலாவது.. கத்திரிக்காவது?’ என்பவர்கள் தான் முந்திக் கொண்டு காதல் கடலில் விழுவார்களாம். நம் அலர்விழி எப்படியோ?

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!