Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ18 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் – 18

 

உலகளவில் தரமான பல்கலைகழங்களில் முதன்மையில் இருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்  (Harvard University)  மற்றும் மசாசூட்ஸ் இன்ஸ்ட்டிடியூட்  ஆஃப் டெக்னாலஜி(Massachusetts Institute of Technology) ஆகிய இரண்டுமே மசாசூட்ஸ் மாநிலத்தில் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது. அங்குப் படித்து பட்டம் பெறுவதென்பது பல படிப்பாளிகளின் கனவு.

 



Advertisement

கனவின் வாயிலை அடைந்த துடிப்போடே பாஸ்டன் லோகன் விமான நிலையத்திலிருந்து வெளிவந்தான் எபி. முப்பது மணி நேரம் முன் அவன் இருந்த மனநிலை என்ன தற்போதைய நிலை என்ன? எந்த படிப்புக்கு காதல் முட்டுக்கட்டையாகிப் போகும் என்று நினைத்தானோ அதே படிப்பை முழு நிம்மதியோடே ஆரம்பிக்க அதே காதல் வகைசெய்த மாயம் தான் என்ன?

 

கண்ணீர் சிந்தி, கட்டி அணைத்து, உச்சிமுகர்ந்து, ‘சாரி’ என்ற வார்த்தையின் மூலம் மனதை உணர்த்திய ஒரே காதலன் இவனாகத் தான் இருக்கும். விந்தை என்னவென்றால், அந்த சாரிக்கான முழு அர்த்தமும்.. அதில் அடங்கியிருந்த கட்டுக்கடங்காமல் கரைபுரண்ட காதலும், கேட்டவளுக்கு விளங்கியது தான்!

Advertisement

 

Advertisement

“ச்சு… நமக்குள்ள எதுக்கு?”, என்று தன் பக்க காதலை உணர்த்த அவன் ‘விழி’யால் மட்டும் தான் முடியும்?!

 

“ம்மா.. பாஸ்போர்ட் ரூம்ல விட்டுட்டு வந்துட்டேன்… டூ மினிட்ஸ் ப்பா..”, என்று வாகனம் முன் கிளம்பக் காத்திருந்தவர்களிடம் கள்ளம் உரைத்து.. தனித்திருந்த காதலியை பல வருட காதலன் போல் காதல் உரைத்தே அன்றே, ஆரத் தழுவி.. அவள் மென்மை உணர்ந்து… முகம் முழுவதும் தடம் படித்து.. உதட்டில் இளைப்பாறியதெல்லாம் தனி சுகம் தான்.

Advertisement

 

“ரெண்டே ரெண்டு வருஷம்… இதே வீட்டுக்கு சொந்தக்காரியா எல்லா உரிமையோட கூட்டிட்டி வந்திடுவேன். அது வரைக்கும் நீ அழவே கூடாது. அதுக்கப்புறம் நீ அழாம நான் பாத்துப்பேன்..”, அவனை முற்றிலும் ஆட்கொண்ட பனித்த விழிகளின் இமைகளின் இதழ் பதித்தவனுக்கு விட்டு வர மனமே இல்லை தான்.. இருந்தும் வந்துவிட்டான். காத்திருக்கும் சுகத்தை அடுத்த இரண்டு வருஷங்களில் ருசித்துவிடும் நோக்கம் இருவருக்கும்.

 

“காத்திட்டிருப்பேன்..”, என்றவளுக்கு அவனோடிருந்த நேரம் போதவில்லை. மூன்று மணி நேரம் மனோவின் மார்போடு சாய்ந்து, அவன் கரங்களின் கதகதப்பில் கதை பேசியது இருவருக்குமே போதவில்லை.

 

ஒரு வருடம் முன்பே உணரப்பட்ட காதலை உரைத்திருக்கவில்லை..! அன்றே.. வருடம் முன்பு பெங்களூரிலிருந்து அவளை காண ஓடி வந்த அன்றே வெளிப்படுத்தியிருந்திருக்கலாம் என்று நூறாவது முறையாக நினைத்துவிட்டான்.

 

“ஒரு மாசத்த இப்பிடி வேஸ்ட் பண்ணிட்டேனே..”, நிலவு ஒளியில் மார்போடு காதலியை அணைத்துக் கொண்டு தன் அறையின் மேல்மாடத்தில் நிற்பதெல்லாம் கிடைப்பதற்கரிய போதை. போதை தந்த கிரக்கத்தில் பிதற்றியதெல்லாம் அவள் கேட்க காத்துகிடந்த கவிதை.

 

கவிதை மூன்று மணி நேரம் தொடர்ந்தது. அந்த மூன்று மணி நேரத்தில் அவன் கொடுத்த குட்டி குட்டி முத்தங்களுக்கு இணையாய் மனநிறைவோடே அவள் கொடுத்த காதல் பரிசை கொண்டு ஓட்டிவிடுவான் அடுத்த இரண்டு வருடங்களை!

 

“ஹாய்.. எபினேசர்.. எப்பிடி இருக்கீங்க? ஜர்னி எப்பிடி இருந்துது?”, வரவேற்றான், விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த அருண். அருண், ஹிம்ரிஷின் தமக்கையின் தோழியின் தோழன். பல வருடமாக அருண் இங்கு தான் வசித்து வருகிறான். சில நாட்கள் அருணோடு இருந்து, கல்லூரிக்கு அருகில் இடம் பார்த்தபின் நகர்ந்துவிடுவது தற்போதைய திட்டம்.

 

முகமன் முடிந்தது. நேரம் கடந்தது.

 

“என் ஃப்ரெண்ட் புவனா ஹாவர்ட்ல தான் படிச்சு முடிச்சா. அவ இலக்கியான்னு ஒரு பொண்ணோட அப்பார்மென்ட் ஷேர் பண்ணினா. இலக்கியா கேம்பிரிட்ஜ்-ல தங்கி எம்.ஐ.டி-ல படிக்கிறா. 18 மந்த் கோர்ஸ் போல.. இன்னும் ஆறு மாசத்தில முடிச்சுடுவா! ரெண்டு பெட்ரூம் சர்விஸ்ட் அப்பார்ட்மென்ட்ல இருக்கா. நல்ல பொண்ணு அவளால உங்களுக்கு பிரச்சனை வராது. பேசி பாக்குறீங்களா?”

 

முதலில் யோசித்தான். இருக்கும் இரண்டு வாரங்களில் வேறு இடம் அமையவில்லை என்றால் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். கல்லூரிக்குச் செல்ல வசதியான இடம். அவளே வாகனம் வைத்திருக்க.. அவன் உடனடியாக ஒன்றை வாங்க வேண்டிய அவசியமில்லை. சில பல காரணங்கள் முன்னிட்டு கடைசியில் அவளோடு தங்குவது வசதியாக படவும், இரண்டு படுக்கையறையில் ஒன்றில் குடி போனான்.

 

மாதம் ஒன்று சென்றது. பக்கத்து அறை தோழியுடன் நட்பு உருவானது. மேல் வேலைக்கு ஆள் வந்துவிடும் என்பதால் வீட்டில் செய்யச் சமையல் வேலை மட்டும் தான். இருவரும் சேர்ந்து செய்துவிடுவர். அவள் நட்பு வட்டத்தில் இவனும் நுழைந்தான். வாகனம் ஓட்ட உரிமம் வாங்கும் முன் எழுதவேண்டிய தேர்வை (Learner Permit test) முடித்து. (Learner’s Permit) கற்பவர் அனுமதி உரிமம் வாங்கியிருந்தான். இப்படிப் படிப்பும்.. இடமும்.. தோழர்களும் என்று புதிய வாழ்க்கை புதிய பாதையில் பயணப் பட ஆரம்பித்தது எபிக்கு.

 

முன் போல் விழியின் முகத்தில் விழித்து.. அவள் குரல் கேட்டபின் கண் அயர்ந்தான். வாழ்க்கை இருவருக்குமே தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருந்தது. வாரங்கள் கழித்து அர்ச்சனா திருமணம் என்றதும் தான் எபிக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்கவில்லை!

 

அர்ச்சனாவின் நிச்சயத்தன்று குட்டையைக் குழப்பியவன் எபியின் மனதை ஆட்டுவித்தான். ஒரு மாதம் இவனிடமிருந்து அழைப்பு எதுவும் வராமல் போன பின்பே கைப்பேசியை அலர்விழியிடம் கொடுத்துள்ளான். அந்த மூன்று மாதங்களும் கண்டிப்பாக அவன் பார்வை வட்டத்தில் தான் விழியை வைத்திருந்திருப்பான் என்பதில் எபிக்கு சந்தேகமில்லை.

 

“ஏன் ஒரு மாசமா என்னை பாக்க வரல மனோ?”, எத்தனை ஏக்கமாக அன்று வீட்டில் வைத்துக் கேட்டாள்.

 

எல்லாம் அந்த சண்டாளனால் தானே..

 

“வந்தேன் விழி. உன்ன பாக்காம… உன்ட்ட பேசாம.. பைத்தியம் ஒன்னு தான் பிடிக்கல! இதுக்கு மேல முடியாதுன்னு ரெண்டே மாசத்துல தெரிஞ்சுடுச்சு! அப்போ தான் ஹைக்கிங் போன இடத்துல.. உங்கிட்ட பேச முடியாத கோவத்துல கைய ஆட்டுனதுல… ஃபோன் மலையில இருந்து உடஞ்சு கீழ விழுந்து போச்சு! நீ ஃபோன தொலச்சிருப்பன்னு நினைச்சு அப்புறம் புது நம்பர்ல்ல இருந்து கூப்பிடவே இல்ல. உன்ன பாக்காம பேசாம சத்தியமா முடியவே இல்ல…

 

இல்லாத தாய் மாமா சாக கிடக்கறார்ன்னு ஸ்கூல் பையன் மாதிரி பொய் சொல்லி ஒரு மாச நோட்டீஸ்ல வேலைய விட்டுட்டு வந்தேன் போன மாசம்.

 

வந்த அன்னைக்கே நீ வர நேரம் உனக்கு சர்ப்ரைஸ் குடுக்க காத்திருந்தா.. நீ ஒரு பொண்ணோட வந்த! நீ என்னைத் தனியா பாக்கணும்.. என்னை பார்த்ததும் திக்குமுக்காடி போகணும்ன்னு நினைச்சு ஃபோன் போட்டேன். உன் பக்கத்துல இருந்த ஃபோன அவ எதுக்கு எடுத்தான்னே புரியல… இதுல ‘உன் பாய் ஃப்ரெண்ட் மனோ’ன்னு நக்கல் வேற! நீ என் பேர கேட்டதும் சந்தோஷ படுவேன்னு பாத்தா.. முகம் சுளிச்ச.. நீ பெசினத கேட்டுச் செத்தே போயிட்டேன்.

 

ரெண்டு மாசம் என் காள் எதையும் நீ எடுக்கலனதும் ஃபோன தொலைச்சிருப்பன்னு நினைச்சா… அதே ஃபோன் உன் கையில.. நானும் யோசிக்காம போட்டது உன் பழைய நம்பருக்கு! இதுல உங்கிட்ட இருந்து ‘இவன் ஒரு தொல்ல!’ன்னு முகம் சுளிப்பு! என்ன நினைப்பேன்? உன் கையில இருக்க மோதிரம் பார்த்துட்டு உனக்கு நிச்சயம் ஆகிடுச்சுன்னு நினைச்சேன். அதனால் தான் நீ விலகி போறன்னு நினைச்சேன்..”

 

“ஐயோ.. இந்த ரிங் அண்ணா ஃபர்ஸ்ட் மந்த் சேலரில எங்க மூனு பேருக்கும் ஒரே மாதிரி வாங்கி குடுத்தது.”

 

“சரி ஏன் முகம் சுளிச்ச? கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்ல சொன்னியே..? வேற யாராவது காள்-ன்னு நினைச்சுயா?”

 

“அர்ச்சனா ஃபங்ஷன் அன்னைக்கு மாதுண்ணா ஃபோன எங்கேயோ போட்டுட்டான். மூனு மாசமா ஃபோன் எங்க போச்சுன்னே தெரியல. ஃபோன்ல லொகேஷன் ஆஃப்-ல இருக்கவும் எங்கன்னு ட்ரேஸ் பண்ண முடியல. மூனு மாசம் நான் எப்போ போட்டாலும் ரிங் போகும்… ஆனா யாரும் எடுக்க மாட்டாங்க. திடீர்ன்னு ஒரு நாள் அத்த தான் அங்க ஃபோன் இருந்ததா குடுத்தாங்க! அப்போ அத்தன மாசம் ரிங்கான சத்தம் ஏன் அவங்களுக்கு கேக்கல? யாரோ கொண்டு அத்த வீட்டுல போட்டிருக்காங்க அண்ணா திங்சோட.. அப்போ தானே என் கிட்ட கிடைக்கும்!

 

ஆனா ஏன் எதுக்குன்னு புரியல! ஆனா ஃபோன் கைல கிடைச்ச அன்னைல இருந்து.. எவனோ மனோகரனாம்… என்ன ரொம்ப பிடிச்சிருக்குன்னு தினம் தினம் ஃபோன் போட்டு டார்சர்! அவனே அவன ‘உன் பாய் ஃப்ரெண்ட் மனோ’ன்னு அசிகம் அசிங்கமா பிணாத்துவான்! எனக்கு யாருன்னு ட்ரேஸ் பண்ண முடியல. தினமும் ஏதேதோ நம்பர்ல இருந்து வரும் கால்! பாதி நேரம் செல்-ல ஆஃப்-ல தான் வச்சிருப்பேன்.. அவனுக்கு பயந்தே! ஒரு கட்டத்துல மனோ-ன்னு பேரக் கேட்டாலே ஒரு அருவருப்பும் எரிச்சலும் வர ஆரம்பிச்சுது! உங்கட்ட இந்த நம்பர் தான் இருக்கு… சோ நம்பரையும் மாத்த முடியல! உங்க நம்பர்ல இருந்து காள் வந்திருந்தா நான் அப்பிடி சொல்லுவேனா?”

 

ஏதோ புரிந்தது மனோவிற்கு. அந்த சைக்கோவாகத் தான் இருக்கும் என்று தோன்றியது. அந்த மூன்று மாதங்களும் அலர்விழியை ஒருவனும் சந்திக்கவில்லை என்பதைக் கவனித்து.. ஒரு மாதமாக அவளுக்கு மனோவிடம் அழைப்பு வரவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திய பின்னரே கைப்பேசியை மாதவன் மூலம் அலர்விழியிடம் கொடுத்திருக்க வேண்டும்.

 

‘ஒரு கட்டத்துல மனோ-ன்னு பேர கேட்டாலே ஒரு அருவருப்பும் எரிச்சலும் வர ஆரம்பிச்சுது!’ இதற்காகத் தான் செய்திருப்பானோ? என்ன ஒரு நல்லெண்ணம்! ‘மனோ’ என்ற பெயர் மட்டுமே அவனுக்குத் தெரியும்! அதை மட்டும் தெரிந்து கொண்டு இந்த வேண்டாத விளையாட்டு!

 

“உன் சொந்தத்துல ஏதோ ஜென்மம் தான். எவனோ உன்ன வாச் பண்றான்! கொஞ்சம் டேஞ்சரஸா இருப்பான் போல இருக்கு! யாரையும் நம்பாத! பத்திரமா இருந்துக்கோ. சொந்தமா இருந்தாலுமே யார் வீட்டுக்கும் தனியா போகாத! உன் அண்ணன் கூடவே வெளியில போ.. அவன் கூடவே வந்திடு. புரியுதா? உன் வீட்டுக்கு தெரியாம நீ இங்க வரது சரி இல்ல. அட்லீஸ்ட் மாதவன் கிட்டயாது சொல்லு! நேரம் பாத்து அந்த ஃபோன் விஷயத்த மாதவன்ட்ட சொல்லி வை!”

 

ஏகப்பட்ட பத்திரங்கள் கூறி வந்தாலும்.. இன்று வரை மற்றவனிடமிருந்து எந்த வித தொந்தரவு வரவில்லை என்றாலும்.. மீண்டும் அர்ச்சனா வீட்டு விஷேசம்! என்ன நடக்குமோ என்று எபிக்கு தூக்கம் பிடிக்கவில்லை.

 

அலர்விழிக்கு அழைத்தான்.

 

“ஏன் மனோ.. தூங்கல?”

 

“தூக்கம் கலைஞ்சுடுச்சு! அப்புறம் அவன்ட்ட இருந்து காள் வந்துதா?”

 

“இல்ல மனோ.. நீங்க சொன்ன மாதிரி ‘உங்க பேருக்காகவே உங்கள ரொம்ப பிடிக்குது. ஒரு நாள் மீட் பண்ணுவோம். பேசி பழகலாம்’ன்னு சொன்னது தான் அப்புறம் காள் வரவே இல்ல. 

 

“வீட்டுல இருந்து எல்லாரும் வந்தாச்சா?”

 

“ம்ம்.. பெரியப்பா வீட்டுல இருக்காங்க. கல்யாணம் முடிஞ்ச மூனாவது நாள் விருந்து. அதுக்கு அடுத்த நாள் கிளம்பறாங்க. அண்ணா நைட் வந்து கூட்டிட்டி போறேன்னு சொன்னான்.”

 

“ம்ம்”

 

“மனோ…”

 

“ம்ம்..?”

 

“மூனு நாள் பேச முடியாது… பாக்க முடியாது..!”

 

“ம்ம்”

 

“என்ன எதுக்கும் ம்ம்ம் தானா?”

 

“என்ன பண்ண? சில நேரம் தவிர்க்கமுடியாம ஏதாவது வரத் தானே செய்யும். மூனு நாள் என்ன மறந்துட்டு பகல் பூர ஜாலியா இரு. எல்லாரும் மீட் பண்றீங்க,,, இது எல்லாம் ஹாப்பி டைம். படுக்க போகும் போது ஒரு குட் நைட் தட்டி விட்டுட்டு படு.. அவங்கிட்ட இருந்து ஏதாவது பிரச்சினை வர மாதிரி இருந்தா எனக்கு காள் போடு..”

 

“காள் போட்டா என்ன பண்ணுவீங்களாம்?”

 

“என்ன பண்ணுவேன்..? நீயே சொல்லேன்!”

 

“பிரச்சினைனா வருவீங்களா மனோ?”

 

“ம்ம்…  அடுத்து எவனுமே உங்கிட்ட பிரச்சனை பண்ண முடியாத முடிவ எடுப்பேன்..”

 

“லவ் யூ மனோ..”

 

“போ.. போய் நிம்மதியா என்ஜாய் பண்ணு”. கூறியவனுக்குத் தான் மனம் நெருடியது.

 

ஒரே விழா. ஆனால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மனநிலை!

 

எபி அந்த சைக்கோவை நினைத்திருக்க.. அர்ச்சனா மணவாளனை நினைத்திருக்க.. அலர்விழி மற்ற பெண்களைப் போல் புடவையும் நகையையும் நினைக்க… குட்டி பெண் ஒன்று மணப்பெண்ணின் உடன்பிறப்பை நினைத்துக் கொண்டு மெத்தையில் உருண்டது.

 

அர்ச்சனாவின் திருமண வரவேற்பு:

 

வீட்டு விஷேசத்திற்கு பெண்கள் எல்லாம் அழகு பதுமைகளாய் உலாவர, நகுநா கண்களோ கட்டிளம் காளை ஒருவன் மேல்.

 

‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்ற கதை போல் சும்மா இருந்த சிறுப்பென் மனதில் சலனம் ஏற்படுத்தியவனுக்கு அது நினைவில் இருந்ததா என்றே தெரியவில்லை. இன்றோடு ஆறு மாதங்கள் முடிந்திருந்தது. ஆனால் இன்று வரை வினோத் நகுநாவோடு பேச முற்படவில்லை. நேற்று வரை பெண் அதைப் பெரிதாய் நினைக்கவில்லை என்றாலும் இன்று மனம் அவன் பார்வைக்காக ஏங்கித் தவித்தது. மண்டபத்தைத் தான் இருவரும் சுற்றி சுற்றி வருகின்றனர்.. ஆனால் அவன் பார்வை அவள் மேல் ஏனோ விழவில்லை. நிற்க நேரமில்லாமல் சுழன்று கொண்டிருப்பவனுக்குக் காதலிக்க நேரமில்லை.

 

திருமண வரவேற்பு ஆரம்பமாகியது.. நகுநாவும் வசுவும் அர்ச்சனாவிற்குப் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்தனர், கிடைக்கும் பரிசுப் பொருட்களை எல்லாம் அவளிடமிருந்து வாங்கி பின்னால் அடுக்கிக் கொண்டு!

 

அவ்வப்போது வினோத் நண்பர்களுடனோ.. சொந்தங்களுடனோ மேடை வந்து போனான். தங்கையின் பின்னால் ஒரு ஜீவன் தன்னை பார்ப்பது கூடவா தெரியாது. திரும்பினான் இல்லை! பார்த்துக் கொண்டிருந்த நகுநா கண்களில் தீப்பொறி வர ஆரம்பித்தது.

 

மணி பதினொன்று நெருங்கவும் மாதவனும் வினோத்தும் மறுநாள் காலை திருமணத்திற்காக மேடை அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ஏவிக்கொண்டிருக்க வாலிப பெண்களின் அரட்டை நின்றபாடில்லை. மருத்துவன் அவசர வேலையாக தில்லி சென்றவன் இன்னும் வந்து சேரவில்லை. காலை திருமணத்திற்கு வந்துவிடுவதாகத் தகவல்.

 

அம்பிகா, “மா எல்லாரும் போய் நேரத்துக்கு படுங்க… காலைல எழுந்துக்கணும். வசு இந்த பசங்களுக்கு டீ காபி ஏதாவது வேணுமான்னு பார்த்துட்டு நீயும் போய் படு..”, என்று கிளப்பிவிட்டார்.

 

கூட்டமும் கலைய ஆரம்பித்தது. ஒருவர் கவனத்தையும் கவராமல் வினோத்தும் மெல்ல நழுவினான். அவனையே நோட்டம் விட்டுக் கொண்டு ஒரு ஜீவன் இருப்பதை கவனியாது போனான்.

 

அனைவரும் அவரவருக்கான அறையை நோக்கிச் செல்ல நகுநா அந்த இருட்டுக்குள் நுழைந்தாள். ஆள் அரவமில்லா இருட்டில் எரிந்து கொண்டிருந்த கங்கை நோக்கி பெண் குருட்டு நம்பிக்கையில் சென்றாள்.

 

நம்பிக்கை வீண் போகவில்லை. வினோ தான்.. புகைபிடித்துக் கொண்டிருந்தான்.

 

“க்க்கும்…” தொண்டையை கனைத்தாள்.

 

அந்த இருளில் திடீர் சத்தம்.. வினோத் அரண்டு போனான்.

 

சட்டென்று சிகரெட்டை முதுகுக்குப் பின் மறைத்தான். யாரென்று பார்க்க நகுநா நின்றிருந்தாள். அவளோடு ஒருவரும் இல்லை.

 

“ஏய்… இங்க என்ன டி தனியா பண்ணிட்டு இருக்க?”, பிடிபட்ட திருடனாய் அவளிடமே எகிறினான்.

 

“ஓ.. நீங்களா? நான் என்னோட லவ்வர தேடி வந்தேன். அவர் இங்க தானே வரச் சொன்னார்.”

 

ஒரு வினாடி அவளை பார்க்க.. அவள் அவனை எல்லாம் கவனிப்பது போல் தெரியவில்லை. இருட்டில் யாரையோ விழிகள் தேடியது.

 

“நான் இங்க இருக்கும் போது அது யாரு?”, பார்வை கூர்மையானது.

 

“நீங்க யாரு த்தான்?”, சந்தேக குரலில் அவள் வினவ..

 

நொடியில் குழம்பிப் போனான். “என்ன டி நக்கலா? என்னைத் தானே லவ் பண்றதா சொன்ன?”

 

“ஓ அப்படியா? நினைவில்லியே த்தான்.”, உதடு பிதுக்கி தோளைக் குலுக்கினாள்.

 

“என்னது ஞாபகமில்லையா?”

 

“ஷாக்க குறைங்க அத்தான்! நீங்க விளையாட்டுக்குச் சொன்னதெல்லாம் பிடிச்சுக்கிட்டு சுத்த முடியுமா?”, சிரித்தவள், “என் லவர் என்னைத் தேட போறார். நான் போகணும்”, வெறுப்பேற்றினாள்.

 

“எவன் டி அது இருட்டுல உன்ன வரச் சொன்னவன்? வரச் சொல்லு அவன! முகரைய பேக்கறேன்..”, உண்மையிலுமே கோபம் வர ஆரம்பித்தது.

 

“ஏன் கோப படறீங்க? அவருக்கு உரிமை இருக்கு. வர சொன்னார். நான் அவர பாக்க போறேன். ஏன் கேள்வி மேல கேள்வி கேக்கறீங்க?”

 

“அடிச்சு பல்ல பேக்க போறேன் பாரு. ஏதோ நாய் கூப்பிட்டுச்சாம்.. இவளும் தேடி வந்தாளாம். எங்க டி அவன்? போடி உள்ள”, சத்தமில்லாமல் கத்த ஆரம்பித்தான்.

 

“அவர தப்பா பேசாதீங்க த்தான்! எங்க லவ் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?”

 

“ஓ தெய்வீக காதலோ?”, கனல் பறந்தது.

 

“பின்ன லவ்ல சொல்லிட்டு அவர் காணாமலா போனார்? நாங்க லவர்ஸ் ரூல்ஸ் ஃபாலோ பண்ணி எங்க காதல நெய் ஊத்தி வளக்குறோம்!”

 

“பார்த்து கொஞ்சமா நெய்ய ஊத்து. யாரவாது பத்த வச்சிட போறாங்க! ஆமா அது என்ன டி லவர்ஸ் ரூல்ஸ்?”

 

“அது தானே உங்களுக்கு எப்பிடி தெரியும்? உங்களுக்குத் தான் லவ்வரே இல்லியே பாவம்..”

 

சட்டென்று எல்லாம் நினைவில் வந்தது. ‘ஃபோன் பேசாததச் சொல்லி காட்டறாளாமா?’

 

“எல்லாம் என் நேரம் வாய் பேசாத புள்ளப்பூச்சிக்கு எல்லாம் என் கிட்ட வாய் நீளுது! ம்ம்ம்..”

 

“டேய்லி பேசணும்.. பாக்க ஆசை படணும்… அவங்க தான் லவ்வர்ஸ். காதலிக்கிறேன்னு சும்மா இருக்க பொண்ணுட்ட சொல்லிட்டு தலை மறைவா போக நினைக்கிறவங்க எல்லாம் வாய மூடிட்டு போயிருக்கணும்!”

 

“ஆஹா.. இது தான் என் தங்கத்துக்குக் கோபமா? பட்டு குட்டி என்னை தான் பாக்க வந்தீங்களா?”

 

“நான் எதுக்கு உங்கட்ட கோப படணும்.. நீங்க யாரு எனக்கு? உங்கள எதுக்கு நான் பாக்கணும்? போங்க.. நாளைக்கே அடுத்த ஃப்ளைட் பிடிச்சு காணாம போங்க.. யாரு கேட்டா? நான் என் லவ்வரோட ரொமான்ஸ் பண்ண போறேன்.”

 

“ரொமான்ஸ்சா? காலேஜ் வாசல்ல கால் வச்சதுக்கே ரொமான்ஸ் கேக்குதா உனக்கு? அடிங்..”

 

“ஏன் எரியுது உங்களுக்கு? தானும் படுக்கிறது இல்ல.. தள்ளியும் படுக்கிறது இல்ல! தள்ளுங்க த்தான் தள்ளுங்க. காத்து வரட்டும்! நான் போகணும்..”

 

வயிறு குலுங்க சிரித்தான். “நல்லா பேசற டி நீ! ஆடியேய் என்ன உருக்குற  வெண்ணகட்டி.. நீ குட்டி பொண்ணு டி..! உன்ன கொஞ்சிட்டு இருந்தா.. ரெண்டே நாள்ல உன் முகத்த பாத்து உங்க அம்மா கண்டு பிடிச்சு உனக்கு முதுகுல டின் கட்ட மாட்டாங்களா?”

 

“டின்னு கட்டினா.. நீங்க வந்து தாலி கட்ட மாட்டீங்களா?”

 

“மேடத்துக்கு 18 வயசு ஆகல நினைவிருக்கா?”

 

“அப்புறம் எதுக்கு என்ட்ட வந்து சொன்னீங்களாம்..”

 

“பிடிச்சுது. பிடிச்சதும் சொன்னேன். அத ஒரு ஓரத்துல வச்சுக்கோ.. கல்யாணம் பேசும் போது உனக்கு மாப்பிள்ளையா வரேன்னு தானே சொன்னேன்!”

 

“ஓ… இடம் பிடிக்கிறீங்களோ? சரி போகட்டும். நீங்க மாப்பிள்ளையா வாங்க! நான் வாக்கு கொடுத்தவன அதுவரைக்கும் லவ் பண்ணிக்கிறேன். தள்ளுங்க!”

 

“அம்மாடி.. நீ வாயில்லா பூச்சின்னு நினைச்சு ஏமாந்துட்டேனா? வாய குறைடி என் அத்த பெத்த ரத்தினமே..”

 

“பச்! போங்க த்தான்… உங்களுக்கு என் மேல விருப்பமில்லன்னா எதுக்கு வந்து ‘லவ் பண்றேன்’ன்னு சும்மா இருந்த என் மனச கலச்சீங்க?”, கடுப்பாக வந்தது பெண்ணிற்கு.

 

“லவ் தான் டி உன்மேல. எக்கசக்கமா… உன் மேல் ஆசை இருக்கு. உன் மனச கலைக்க வேண்டாம்ன்னு தான் பேசல போதுமா? இனி கண்டிப்பா தினமும் பேசறேன்.”

 

“தேவ இல்ல போங்க.. நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு! நான் உங்கள டிவோர்ஸ் பண்றேன்..” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

 

“ஆகா.. அதுக்கு கல்யாணம் ஆக வேண்டாமா?” அவள் முறைக்க.. “எதுக்கு இவ்வளவு பெரிய முடிவு? உன் பேச்செல்லாம் கேக்கறேன்.. இப்படி எல்லாம் யோசிக்காத டி என் வெல்லக் கட்டி..”

 

அவன் என்ன கூறியும் சமாதானம் ஆக மாட்டேன் என்று அவள் தையா தக்க என்று கதகளி ஆட… “வாய நீயா மூடுறியா இல்ல நானா மூடட்டுமா?”, பெண்ணின் இதழில் அவன் பார்வை போக… நகுநா விழி விரித்தாள். “..த்தான்..?” 

 

“பள பளன்னு இருக்கு.. நீ வேற ரொமான்ஸ் கேட்ட.. நீ ரெடினா வாயத் திற!”

 

யாரோ வரும் அரவம் கேட்டது. மங்கலான வெளிச்சத்தில் ஆள் வருவது தெரிந்தது.

 

“அத்தான் லவ்ஸ் யூ பேபி. இப்போ சட்டுன்னு கண்ண மூடி மூச்ச உள்ள இழு பாப்போம்!”

 

“ம்ம்..”

 

“சீக்கிரம் டா பேபி”

 

ஏனென்று கேட்காமல் அவன் சொன்னதைச் செய்து.. தான் இன்னும்  குட்டி பெண் தான் என்பதை நிரூபித்தாள்!

 

அடுத்த பத்தாவது வினாடி..

 

தனித்து நின்றவள் கையில் சிகரெட்டும்.. வாயில் புகையும்…!

 

நுரையீரல் வெளி வந்து விழுமளவிற்கு இருமிக்கொண்டிருந்தவள் எதிரில் மாதவன்!

 

பாவி உன்ன நம்பினத்துக்கு..!

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!