Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ25_2 Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  25_2

 

அவள் கொட்டித் தீர்க்கவும்.. சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தவன்.. இருக்கையிலிருந்து எழுந்து, “உன் உதடுல ஏதோ இருக்கு பாரு..” என்றதோடு நில்லாமல்.. நிதானமாய் அவன் விரல் கொண்டு பிளந்திருந்த அவள் இதழை அழுத்தி தடவிய பின் நகர..

 



Advertisement

“என்ன மூர்த்தி சார் இருந்துது?” வினவினாள்.

 

“பொய்!”

Advertisement

 

Advertisement

“என்ன மூர்த்தி சார்? அப்படினா?”

 

“டன் டன்னா பொய். உன்னோட சாஃப்டான உதட்டுக்குப் பொருந்தலையா.. அதனால உன் மென்மையான உதட தொட்டு தடவி அத துடைச்சு எடுத்தேன்.” என்றான்.

Advertisement

 

பதில் இல்லை அவளிடம். உணர்வுகள் மட்டும் தான்.. அவன் தொடுகையில் எழாத உணர்வு அவன் சொல்லிய விதத்தில் எழுந்தது. பட்டென்று உதட்டை இழுத்து மூடிக்கொண்டாள். அவள் விழிக்க.. அவன் முகம் புன்னகையை பூசிக்கொள்ள.. அவளருகில் வந்து அவள் முகத்திற்கு நேராய் குனிந்து.. முகத்தில் புரண்ட முடியை ஒதுக்கிக்கொண்டே..

 

“சும்மா சொல்லு துளசி… உன் ஃப்ரெண்ட்ஸ்ல யாரையாவது உன் லிப்ஸ்-அ இப்படி சாவகாசமா தடவ விடுவியா?”

 

“மூர்த்தி சார்?” எச்சில் விழுங்கினாள்.

 

“இப்படி உன் முகத்தில உன் ஃப்ரெண்ட்ஸ்ல யாராவது விரலால கோலம் போட விடுவியா? உன் ஃப்ரெண்ட்ஸ் எத்தன பேர இப்படி நெருக்கமா இருக்க அனுமதிச்சு இருக்க?”

 

“மூர்த்தி சார்..” குரல் பிசிறியது

 

“எட்வர்ட் கூட உன்ன பத்திரமா பார்த்துப்பான். அவன் வீட்டுல ஒரு நர்ஸ் வச்சு கூட பார்த்துப்பான். அவன் கூப்பிட்டா… வேற உறவில்லன்னு அவன் வீட்டுக்கு போயிடுவியா?”

 

“மூர்த்தி சார்!” கண்டிக்கும் தோரணையில் சத்தம் அதிகமானது.

 

[the_ad id=”6605″]

 

 

 

“குட்.. அத தான் நானும் சொல்றேன்.. உன்னோட குட்டி மண்டையில ஏத்திக்கோ. நான் தான் உன் புருஷன். நீ என் பொண்டாட்டி.  ஒரு வருஷம், உன் படிப்பு முடியும் போது நீ ஒத்துகிட்டாலும் ஒத்துக்காட்டாலும்.. நீ இங்க இருந்தாலும் இல்ல சொல்லாம உலகத்தில எங்க போனாலும்.. நான் கட்டுற தாலி உன்ன இந்த வீட்டுக்கு கூட்டீட்டு வந்திடும். அதுக்கப்புறம் நடக்கிறத பத்தி அப்போ யோசிப்போம். அதுவரைக்கும் கண்டதையும் யோசிக்காம என்னை மட்டுமே நினைச்சு கனவு காணு..”

 

“மூர்த்தி சார்?” ஒவ்வொரு மூர்த்தி சாரும் ஒவ்வொரு விதம்.. உச்சரித்த விதமே ஒரு முழு வாக்கியம் உணர்த்த வேண்டியதை உணர்த்தியது.

 

“மூர்த்தி சார் தான்!  நல்லா சொல்லிப் பார்த்துக்கோ… நூறு விதமா சொல்லி பார்த்துக்கோ.. ஏன்னா இத தான் வாழ்க்கை பூரா சொல்ல வேண்டியிருக்கும்!” 

 

“உனக்கு மட்டுமே சொந்தமான உன் மூர்த்தி நான் தான்! நீயே வேண்டாம்ன்னு சொன்னாலும், இந்த விஷயத்தில மட்டும் உன் பேச்ச கொஞ்சம் கூட கேக்க மாட்டேன். ஏன்னா நீ என்னை விட்டு போனா என் வாழ்க்கைக்கு அர்த்தமே இருக்காது. அர்த்தமில்லாத ஒரு வாழ்க்கையை நான்   வாழ தயாரா இல்ல. சுயநலம்ன்னு வச்சுக்கோயேன்.” கூறியவன் சென்றுவிட, பெண்ணிற்கோ.. ஒரே நேரத்தில் உள்ளுக்குள் குளிரவும் செய்தது குளிர் எடுக்கவும் செய்தது. மூர்த்தி சாரா இப்படி எல்லாம் பேசுவது?

 

அடுக்களையில் காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாலும் துளசியின் அரவமில்லாது போகவே மனதில் அமைதியின்மை.. இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. ஆனால் பேசிவிட்டான். பொறுமையாகப் பேசி இருக்க வேண்டுமோ? ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு தானே.. பழையதை அவளாக மறக்க மாட்டாள். இவனாக ஏதாவது செய்தாக வேண்டும். மனம் துளசியைச் சுற்றி வந்தது. பாதி வேலை முடியவும் மீண்டும் அறைக்கு செல்ல.. ஜன்னல் வழி வானத்தை வெறித்து அமர்ந்திருனாள்.

 

அலமாரியிலிருந்து துணி எடுத்துச் சென்றான். அவன் வந்ததும் போனதும் மீண்டும் வந்ததும்… எதுவுமே அவள் கவனத்தில் பதியவில்லை.

 

“துளசி மா..” தலையை வருட.. மெல்ல அவன் புறம் திரும்பினாள். தலை தூக்கவும் ஒன்றும் கூறாமல் தூக்கிக் கொண்டான்.

 

“என்ன மூர்த்தி சார்?” துளசிக்கு சம்பந்தமே இல்லாத ஜீவனற்ற குரல்.

 

“பசிக்க ஆரம்பிக்கதுக்குள்ள குளிச்சிடு..” அவன் குளித்திருந்தான். அதே வெள்ளை வேட்டியும் கை வைத்த பனியனும்.

 

“நீ பூட்ட வேண்டாம்.. பத்திரமா சுவர பிடிச்சுட்டு நில்லு.. விழுந்துடாத..” என்றும் போல் ஆயிரம் பத்திரங்கள் கூறி, வெளியே கதவைப் தாழ்பாளிட்டு, வீட்டிற்குள் மறைந்தான். எப்பொழுதும் போல் அவள் அமர்ந்துகொள்ள சுவரை ஒட்டி ஸ்டூல்.. இருந்த வாக்கிலேயே குளிக்க வசதியாக சரியான உயரத்தில் அண்டா.. மிதமான சூட்டில் வெந்நீர்.. அருகிலேயே அவளின் நலங்கு மாவு.

 

மிதமான வெதுவெதுப்போடிருந்த நீர் உடலில் இறங்கியது. அம்மா என்று ஒருத்தி இருந்திருந்தால் இப்படி தான் இருந்திருப்பாளோ? எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்தான். மனம் விம்மியது. ‘மூர்த்தி சார்!’ அவள் வாழ்வில் இன்றியமையாதவன் ஆகிப்போனான். எப்படி இவன் இல்லாமல் இருப்பாள்?

 

சரியாக பத்து நிமிடத்தில் வந்துவிடுவான். வெந்நீர் என்றாலும் அதிக நேரம் நீரில் இருக்க விட மாட்டான்.

 

“துளசி..?”   

 

“ம்ம்?”

 

“ஆச்சா?”

 

“இந்த அங்கி எனக்கு பிடிக்கலன்னு டெய்லி சொல்லணுமா? அசிங்கமா இருக்கு நான் போட மாட்டேன்.” முன்னால் பட்டன் வைத்த நைட்டியை பார்த்தாலே அவளுக்கு எப்படி இருக்குமோ தெரியாது.. கத்த ஆரம்பித்துவிடுவாள்.

 

“ஈரத்தில நின்னு எப்படி புடவைய கட்டுவ? வீட்டுல போய் பொறுமையா மணிக்கணக்கா கட்டேன் யாரு உன்ன கேட்டா? டெய்லி இதையே கேப்பியா? கதவ திறக்கட்டா?”

 

“நான் இத போட மாட்டேன்..”

 

“எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல… கதவ திறக்கட்டா?”

 

“…”

 

“என்ன சத்தமே காணம்..”

 

“நீங்க இன்னைக்கு ரொம்ப பேட்-ஆ பேசறீங்க.. எனக்குக் கோபம் கோபமா வருது.” சிடுசிடுத்தாள்.

 

“அடுப்பில ஆப்பம் கரியிது… கதவ திறக்கட்டா?” இது தினமும் நடக்கும் கூத்து என்பதால் அவன் பொறுமையும் கரைய ஆரம்பித்தது. ஏனோ அவளுக்கு அங்கிபோல் தொங்கிக் கொண்டிருந்த அந்த துணியைக் கண்டாலே பிடிக்கவில்லை. அவனுக்கும் தெரியும். ஆனால் அவள் கையிருக்கும் நிலைக்கு அது தான் அவளுக்கு வசதியாயிருக்கும் என்றதால் வாங்கி வந்திருந்தான்.

 

“ம்ம்..”

 

முதுகைக் காட்டி நின்றிருந்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“நான் தான் உன்ன தூக்க போறேன்… அப்போ உன் முதுக பாக்க முடியாதுன்னு அத காட்டிட்டு நிக்கிறியா?”

 

“நீங்க ரொம்ப பேசறீங்க இன்னைக்கு..”

 

“வா.. எனக்கு உள்ள வேலை இருக்கு… குட்டி பாப்பா மாதிரி எதுக்கு எடுத்தாலும் சண்டை போடக் கூடாது”

 

பேசிக் கொண்டே கழட்டி போட்டிருந்த துணியை எல்லாம் பக்கெட்டில் போட்டு கிணற்றடியில் துவைக்க வைத்துவிட்டு வந்து தூக்கிக் கொண்டான். அவன் தான் அவளின் அத்தனை வேலைகளையும், தேவைகளையும் பார்த்து கொண்டான். இன்று எல்லாம் விஸ்வரூபம் எடுத்து அவள் முன் தலைவிரித்தாடியது. ‘எவ்வளவு வேலை? சின்ன முக சுளிப்பு கூடவா இவருக்கு வராது?’

 

“நல்லா தான் இருக்கு… ஏன் இத போட்டுக்க இந்த பாடு?” அவன் கூற

 

“பச்.. உங்களுக்கு சொன்னா புரியாது. அசிங்கமா இருக்கு. என்னை பாக்காம வழிய பார்த்து நடங்க” அவன் முகம் பார்க்க கூசி.. எங்கோ பார்த்துப் பேச..

 

“ஆமா ஆமா… இது நல்லாவே இல்ல. கழுத்தில இருந்து கால் வரைக்கும் மூடிட்டு! நீ புடவையே கட்டு. எனக்கும் அது தான் வசதியா இருக்கு.” நமுட்டு சிரிப்பு அவன் சிரிக்க… ஏதோ சொல்ல வாய் திறந்தவள் பட்டென்று மூடிக்கொண்டாள். இன்று தான் அவன் பேச்சும் பார்வையும் சரி இல்லையே…

 

அடுக்களைக்குத் தூக்கிச் சென்றவன் கடப்பா கல் மேடையில் அமரவைக்கவும்.. “நான் துணி மாத்தணுமே..” என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

 

“ஏற்கனவே ரொம்ப லேட் துளசி மா. பசி தாங்க மாட்ட. எனக்கும் பசிக்குது. சாப்பிட்டு.. மாத்திரை போட்டுட்டு மதியம் லன்ச் டைம் வரைக்கும் பொறுமையா புடவையை சுத்து. யார் உன்ன கேக்க போறா.. இப்போ சாப்பிடலாமே..”

 

ஆப்பமும் கறி குழம்பும் அவன் கை ஏந்தியிருக்க… வாசம் மூக்கின் வழி உள்ளே செல்லும் முன்னே வயிறு சத்தம் போட… உமிழ் சுரப்பியும் வெட்கமே இல்லாமல் ஜொள்ளை ஊற்ற.. பெரிய மனதோடு.. “ம்ம் சரி சரி… உங்களுக்காக” என்று வாயைத் திறந்தாள்.

 

ஒரே தட்டிலிருந்து  அவளுக்கும் ஊட்டி அவனும் உண்ண.. வயிற்றுக்கு முன் நெஞ்சம் நிறைந்து போனது. ஒரு சொட்டு நீர் உருண்டு கன்னம் தொட.. பார்த்தவன், தண்ணீரைக் கொடுத்துக்கொண்டே.. “காரமா? நீ கேட்டியேன்னு ஜுரம் விட்டு நாலு நாள் ஆகரதுக்குள்ள நான்-வெஜ் செஞ்சிருக்க கூடாதோ? வாய் புண்ணாயிருக்கு போல… தேங்கா பால் வச்சு தரட்டா?”

 

‘தேங்கா பாலா?’ வந்த கண்ணீர் சென்ற இடம் தெரியாமல் போனது.

 

உண்ட பின்னும் அவளை அறையில் கொண்டு விடவும் இல்லை… அங்குப் பேச்சும் இல்லை. ஏதேதோ உருட்டிக் கொண்டிருந்தான். அவனிடம் ஏதோ யோசனை. அவள் காத்திருந்தாள்.

 

“வெளியில போலாமா?” துக்கிக் கொண்டான்.

 

பின் வாசல் படியில் அமர்ந்துகொண்டவன் மடியில் இருத்திக்கொண்டான்.

 

“நான் ட்ரெஸ் மாத்த வேண்டாமா?”

 

“ம்ம்… என்ன அவசரம்?”

 

“மூர்த்தி சார்… காலும் கையும் தான் ரிப்பேர். கீழ உக்கார முடியும்..” நினைவு படுத்தினாள்.

 

“கொஞ்ச நேரம் துளசி..” அவள் குளித்து வந்த வாசம் அவன் நாசியை நிரப்ப.. அவன் மடியில் அவன் துளசி.. கண் மூடி அந்த நிமிடத்தை உள்வாங்கி கொண்டிருந்தான்.

 

வெகு அருகில் அவன் முகம். பார்த்தாள். அவன் கண்மூடி இருக்க.. அவன் பார்க்காத வேளை வாஞ்சையோடு அவன் முகம் பார்த்தாள். இன்று ஏனோ அவன்  தெய்வமாக தோன்றவில்லை.  பார்க்கப் பார்க்க,  பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டியது. சுருங்கி..யோசனை ரேகையோடிருந்த நெற்றியை நீவி விட ஆசை.. இருந்தும் பார்த்தே இருந்தாள். அவன் கண் திறந்தபின்னும் பார்வை நிலைத்த இடத்தில் நிலைத்தே நின்றது.

 

“எனக்கு பிடிச்சிருக்கு துளசி.. இப்படி உன்ன என் மடியில வச்சிருக்க ரொம்ப பிடிச்சிருக்கு. என் மடில உக்காந்திருக்க உனக்கு பிடிக்கலியா?”

 

அவன் கண் ஆவலாய் அவள் கண் நோக்க… ஏதோ கட்டுண்டவள் போல் பார்த்தே அமர்ந்திருந்தாள்.

 

“புல்லாங்குழல்ல வர இசை கேட்டிருக்கியா துளசி? தனித் தனியே புல்லாங்குழலும், காத்தும் இருந்தா இசை வருமா? குழலுக்குள்ள காத்து நுழைஞ்சு வெளியில வந்தா தான் இசை. நாம கூட அப்படி தான் துளசி. காத்துக்கு குழல் வேண்டாம்.. ஆனா காத்தில்லாம குழல் இருந்து என்ன யூஸ்… சொல்லு? நீ என் வாழ்க்கையில் நுழைய மாட்டேன்னு போயிட்டா, கண்டிப்பா என் வாழ்க்கையில நிம்மதி இருக்காது. என் ஜீவன்.. இசை.. நாடி துடிப்பு எல்லாமே நீ தான். நீ மட்டும் தான் துளசி மா.. நான் இல்லாம நீ இருந்துடுவியா? எதுக்கும் என்னைத் தானே தேடற!

 

தனியா வெறும் கனவில வாழ்ந்தது போதும்ன்னு இருக்கு துளசி. இன்னும் எத்தன நாள் சனிக்கிழமைக்காகவே காத்திருக்கதுன்னு கடுப்பா இருக்கு துளசி.

 

இந்த ஒரு வாரமா.. தினமும் புது புது வாழ்வு வாழற ஃபீலிங். எனக்கு உன் கூட இந்த வாழ்க்கை ரொம்ப பிடிச்சிருக்கு. நாள் முடியும் போது உன் முகம் பாத்து, உன் நினைவோட தூங்க பிடிக்குது. எழுந்ததும் உன் முகம் பாத்து நாள தொடங்க பிடிச்சிருக்கு. எதுக்கும் என்னை கூப்பிடுற உன்ன பிடிச்சிருக்கு. உன் சிரிப்பு நிரைஞ்ச இந்த வீடு பிடிச்சிருக்கு.  நீ போடுற சண்டை பிடிச்சிருக்கு. உன்னோட இருக்க ஒவ்வொரு நொடியும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

 

ஒவ்வொரு நிமிஷ வாழ்க்கையையும் விரும்பி ரசிக்சு உயிப்போட வாழறேன் துளசி… உன்னால.

 

மனசுல மட்டும் தூக்கி சுமந்த உன்ன நெஞ்சோட அணைச்சு பிடிச்சுக்க ரொம்ப பிடிச்சிருக்கு. காலம் பூரா அணைச்சுக்கணும்னு ஆசை. உன் வாசம் என் மேல.. ரொம்பவே பிடிச்சிருக்கு துளசி. இது எல்லாம் இல்லாம இனி மேல் என்னால கண்டிப்பா வாழ முடியாது துளசி மா.

 

என் கண்ண பார்த்து சொல்லு.. இது எதுவுமே நீ உணரலன்னு சொல்லு.. என் மேல நிஜமாவே காதல் இல்லன்னு சொல்லு.. சின்ன ஈர்ப்பு கூட இல்லன்னு இப்போ என் கண்ண பார்த்து சொல்லு. இறக்கி விட்டுடுறேன்.. என்னை பார்த்து பயந்து ஊர விட்டு எல்லாம் ஓடிப் போக வேண்டியே வராது. சொல்லு துளசி.. உன் மனசுல இருக்கத மறைக்காம சொல்லு..”

“சிலகாலமாய் நானும் சிறை வாழ்கிறேன்

உன்னை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்…”

மனம் முழுவதும் அவன் மட்டுமே இருக்க என்ன கூறுவாள்? கண் ஈர்க்க.. கண் இமைக்க மறந்து அவனுக்குள் புதைந்து கொண்டிருந்தவள் என்ன கூறுவாள்?

 

[the_ad id=”6605″]

 

 

“மூர்த்தி சார்..” என்றாள். மீண்டும் அதே மூர்த்தி சார் தான். ஆனால் அவன் மனம் நிறைந்து போனது.

 

இந்த நிமிடம் நிஜம்.. அணைத்திருக்கும் கரம் நிஜம்.. காதல் நிஜம். நிழலை நினைத்து இன்னும் எத்தனை நாள் ஓட?

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா

கை நீட்டினேன் என்னை கரை சேர்க்கவா

நீயே அணைக்கவா தீயை – அணைக்கவா

நீ பார்க்கும் போது பனியாகிறேன்

உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்”

இறுக்கம் எல்லாம் தளர..

“மூர்த்தி சார்” அவன் அணைப்பிற்குள் அடங்கி போனாள்…

“துளசி மா..” இறுக்க அணைத்துக் கொண்டான்.  

 

நீயே என் வாழ்வின் அர்த்தம்(விருப்பம்) ஆகி..

நீயே என் வாழ்வின் அர்த்தம்(பொருள்) ஆகி.. இன்று 

நீயே என் வாழ்வின் அர்த்தம்(பாதி) ஆகி போன மாயம் தான் என்ன..

 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி…. 

 

 

 

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!