Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ29_2-2- Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 29_2(cont…)

 

கதவு ‘டமார்’ என்று திறக்கப்பட, கூடவே, “யாரு அது… பொண்ணுக்கிட்ட வம்பு பண்றது?” என்ற பலமான சத்தமும் வர, பார்க்காமலே, வந்தது யார் என்று தெரிந்தது இருவருக்கும். அவள் நின்று கொண்டிருந்த நிலையில், எப்படி அவனைச் சந்திக்க? எபியின் நெஞ்சுக்குள் சுருண்டு கொண்டாள் அலர்விழி.

 



Advertisement

அணைத்திருந்தவனை இறுகப்பற்றவுமே, “என்ன டி? இவனுக்கு எல்லாம் இவ்வளவு சீன் குடுத்துகிட்டு” என்றவனிடம், “ப்ளீஸ் மனோ நகந்துடாதீங்க..” என்றவளுக்குத் தவிப்பாய் போனது.

 

முதுகை காட்டி நின்றவன், ஒற்றை கை கொண்டு தலை வருடி, “நீ சொல்லணுமா டி பட்டு…” என்றவனின் காதில் மீண்டும் மருத்துவன் சத்தம்!

Advertisement

 

Advertisement

“ஹலோ… என்ன பண்ணிட்டு இருக்க?”

 

‘இம்சை  கொல்றானே. என்ன நடக்குதுன்னு கூட தெரியாத அளவு கேனையா இவன்?’ எண்ணியவளின் இடது கை சட்டையோடு எபியை தன் பக்கம் இழுக்க… வல கை விரல்கள் விலாவிற்கு பின்னிருந்த சட்டை பகுதியை இறுக்கிக் கொண்டிருந்தது.

Advertisement

 

“இரு டி பட்டு. என்ன அவசரம்? அவனை அனுப்பிட்டு வரேன்!” என்று சட்டையிலிருந்த கையை எடுத்துவிட்டு அவள் இரத்த-கொதிப்பை ஏற்றி விட்டான்.

 

முகத்தை மட்டும் திருப்பிய எபி, சலிப்பு மிகுந்த குரலில், “என்ன?” என்றான் பிரவீன் முகம் பார்த்து.

 

“என்ன பண்ற?” என்ற மருத்துவன் குரலில் காரம் அதிகம் தான்!

 

கட்டிலுக்கு மறுபக்கம் இருக்கவே எபியின் மேல்பாதி மட்டுமே தெரிய, அவனுக்குள் புதைந்திருந்த பெண் யார் என்று தெரியவில்லை. இலக்கியா தானே உள்ளே இருந்தாள்! ஆனால் அவன் நினைத்தது போல் பெண் விருப்பமில்லாது நிற்கவில்லை என்பது வெளிச்சம்.

 

அறிந்தபின் நகாரீகமாக வெளியே சென்றிருக்கலாம்! கலைந்திருந்த மெத்தையும், தரையில் அங்குமிங்குமாக கிடந்த பெண்ணின் உடையும் பார்த்தபின்னும் வெளியே செல்லாமலே நின்றிருந்தான், மருத்துவன்.

 

பிரவீன் பார்வை சென்ற இடங்களைப் பார்த்த எபியின் முகத்தில் நமட்டு சிரிப்பு. “அது தான் என்ன நடக்குதுன்னு தெரியுதில்ல. போவியா… அத விட்டுட்டு ஓசி ஷோ பாக்க, ‘என்ன பண்ற’ன்னு கேட்டுட்டு வந்து நிக்கிற! என்ன ஃப்ரீ ஷோ வேணுமா?” எனவும் மருத்துவனுக்கு ‘கசப்பான அதே கனவை’ மீண்டும் காண்பது போன்ற உணர்வு!  இதே பேச்சு… இதே தோரணை.. இதே நக்கல்! எங்கோ எப்பொழுதோ அனுபவித்தது. எங்கே..? சட்டென்று பொறி தட்டியது!

 

“ஏய்… நீ… நீ தானே அன்னைக்கும் அந்த புக் ஷாப்ல… ஒருத்திகூட?”

 

“ஹப்பா ஒருவழியா ட்யூப் லைட் எரிஞ்சுடுச்சு! ஆமா நானே தான்! இப்போ என்ன அதுக்கு?”

 

“செய்யறது பொறிக்கி வேல! இதுல என்ன ஒரு தெனாவட்டு உனக்கு?”

 

“ஆமா நாங்க பொறிக்கினா, நாகரீகம் தெரியாம பொறிக்கி இருக்க  படுக்கயறையில நிக்கிற  நீங்க யாரு சார்? வெளில போவியா? ஒரு மணி நேரம் கழிச்சு வரேன். ஆற அமர கதை பேசுவோம்!”

 

“உனக்கு வேற வேலையே இல்லியா? எங்க போனாலும் இது தான் உன் வேலையா? காலையில கடை வாசல்ல ஒருத்தி.. இங்க ஒருத்தின்னு! ஷேமா இல்ல? ச்ச!” கூறியவன் முகத்தில் அத்தனை அருவருப்பு.

 

அவன் வார்த்தைகளோ முக அருவருப்போ இவனைப் பாதித்ததாகத் தெரியவில்லை. “அதுல உனக்கு என்ன காண்டு? இப்போ இடத்த காலி பண்ணு! இல்ல என்ன பண்றேன்னு பார்த்து தெரிஞ்சுகணும்னா நின்னு பாரு!” என்றவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு மீண்டும் குனிய,

 

“ச்ச.. என்ன மனுஷன் நீ எல்லாம்! உன்னலாம் ஒரு ஃப்ரெண்டுன்னு வீட்டுக்கு கூப்பிட்டவளை சொல்லணும்! வீட்டுப் பக்கம் சேக்காதன்னு சொல்லணும்!”

 

“அந்த ஆணிய நாங்க கழட்டறோம்.. இப்போ காத்து வரட்டும்!” என்றவன் முதுகை முறைத்துச் சென்றவன், அவன் முழு கோபத்தையும் காட்டியதோ வாயில்லா கதவின் மேல்.

 

‘கல்யாணம் ஆகட்டும், அடுத்த நாளே வேலைக்குப்போய் கிழிச்சது போதும்ன்னு நிறுத்திட்டு,  இவ பூரா ஃப்ரெண்ட்ஷிப்பையும் கட் பண்றேன்!’ கருவிக் கொண்டான், மருத்துவன்.

 

இவன் விட்ட வேலையைத் தொடர, “மனோ..” என்று முதுகில் ஒன்று வைத்தாள் அவள்!

 

“என்ன டி?” எரிந்து விழுந்தான்.

 

“இது இப்போ நமக்கு தேவையா?”

 

“உனக்கு தேவையில்லாமயிருக்கலாம்! ஆனா எனக்கு, இப்போ தான் அதிகமா தேவபடுது!”

 

“ப்ச் மனோ..!”

 

“இந்த இம்சையை எதுக்கு டி கூப்பிட்ட?”

 

“சத்தமா பேசாதீங்கப்பா! தெரியாம கூப்பிட்டேன் போதுமா! திரும்பவும் வந்திட போறார் மனோ… அசிங்கமா நினைக்க போறார். வெளியில் போங்க மனோ…” என்றவளை முறைத்துக் கொண்டு தொப்பென்று கட்டிலில் அமர்ந்தவனுக்குள் எரிச்சல் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது! மருத்துவன் இவனின் எல்லைக்குள் கால் வைத்த எரிச்சல் அது!

 

பூட்டியிருந்த அறைக்குள் நாகரீகம் இன்றி வந்ததில்லாமல் சத்தம் போட்டுச் செல்வானாமா? இவன் தன்னை என்ன நினைத்தால் என்ன? பெரிய இவனாமா?! அவனுக்காக இவள் பரிந்து பேசுவாளா?

“இது என் வீடு! அவன போக சொல்லு வெளியில!” என்றான் ஒட்டு மொத்த கோபத்தோடும்.

 

“சொந்தக்காரர் மனோ… தப்பு தப்பா ஏதாவது புரிஞ்சுகிட்டு ஏதாவது வீட்டில சொல்லி, நமக்கு கல்யாணம் பேச போற நேரத்துல இருக்கதையும் கெடுத்துட்டா… போங்க மனோ…

மனோ ப்ளீஸ்..! அவர் உள்ள வந்தது தப்பு தான். ஆனா ஏதோ தப்பு நடக்குதுன்னு நினைச்சு தானே உதவிக்குன்னு…”

 

“வந்த அடுத்த செக்கண்டே அவனுக்கு என்ன நடக்குதுன்னு தெரியும்! போகாம நின்னவன் கிட்ட ‘வெளியில போடா’ன்னு சொல்ல திராணி இல்ல. என்னை சொல்ல வந்துட்டா!”

 

“அவர் மோசம் எல்லாம் இல்ல மனோ… தப்பான எண்ணத்தோட நின்னிருக்க மாட்டார் மனோ”

 

“அவனுக்காக என்ட்ட வாய திறக்காத விழி!”

 

“ஏன் மனோ புரிஞ்சுக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க? நகு வாழப்போர வீட்டுப் பையன் மனோ அவர்! நகு ரொம்ப செல்லமா வளந்த பொண்ணு. இன்னைக்கு நிலையில அத்தைக்கு அவ மேல தனி பாசம் இருக்கு. அந்த பாசம் என்னால குறைஞ்சுட கூடாது. ஏன்னா அத்தைக்கு இவர்னா ரொம்ப பிடிக்கும்!”

 

“அதுக்கு? சரி… நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். நானே இடத்த காலி பண்ண சொல்றேன் அவன்ட்ட!”

 

“ப்ச்! என்ன மனோ நீங்க? போங்கப்பா படுத்தறீங்க! ஒரே ஒரு நாள் தானே! என் தங்கைக்காக… எனக்காக, இத கூட பொறுத்துக்க முடியலையே உங்களால! நான் அவ்வளவு தான் இல்ல?” சலித்துக் கொண்டவள், “நீங்க இங்கேயே இருங்க. நான் போறேன். தேவ இல்லாம சண்டைய மட்டும் இழுத்து வைக்காதீங்க! சண்டை இழுத்து வச்சீங்க…”

 

“வச்சா?”

 

“என்ன மனோ நீங்க? நான் ‘சும்மா இருங்க’ன்னு சொன்னதும் அவர் அமைதி ஆகிட்றார். ஆனா நீங்க எப்போடா அவர்கிட்ட சண்டை வளக்கலாம்ன்னு நிக்கிறீங்க!

என் மேல சத்தியமா நீங்க அவர்ட்ட வாய் கொடுக்கக்கூடாது அவ்வளவு தான்!”

 

“என்ன டி என்னன்னவோ பேசற? அவன் வந்து அரை நாள் ஆகல… அதுக்குள்ள என் கூட சண்டைக்கு வர! ஆசையா கிட்ட வந்தா, தள்ளி விடுற! கத்தி பேசினா வாய மூடுற! அந்த அரைவேக்காட பாத்து பயந்து சாகிற! இது எல்லாம் வேலையாகிறதுக்கில்ல! அவன கிளப்பினா தான் சரி வரும்!”

 

“ஆஆஆ… மனோ! இனாஃப் இஸ் இனாஃப்!” தலையைப் பிடித்துக் கொண்டு சத்தம் எழுப்பியவளை அதற்கு மேல் அவன் சோதிக்கவில்லை.

 

அறையை தாண்டாத சத்தமில்லாத சண்டை, சத்தமில்லாமல் இருமனதையும் நோகடித்தது.

 

உடுப்பை சரி செய்து, தலை வாரி வெளியே சென்றவளைப் பார்த்தே படுத்திருந்தான்!

 

முன்பே மருத்துவனைப் பிடிக்காது. நகத்திற்கும் சதைக்கும் நடுவில் முள் போல் இறங்கிக் கொண்டிருப்பவன் மேல் எரிச்சலோடு கூடிய வெறுப்பும் ஒட்டிக் கொண்டது.

 

மனோவிற்கு விழியிடம் நடிக்க தெரியவில்லை! மனம் மறையாது, மனோவின் முகம் அவன் உணர்வுகளைக் கண்ணாடி போல் காட்ட, வெளியே சென்றவள் மனோவின் முகம் பார்த்து அவன் மனதையும் படித்தே சென்றாள்.

 

‘கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்தது!’ – இது பழமொழி.

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!