Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 23.1

அத்தியாயம் 23

அடுத்த வாரம் திருமணம் என்ற நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்துகொண்டிருந்தது. அமிர்தவள்ளி குடும்பத்தின் திருமணம் எப்படி நடக்குமென்று முன்பே அறிந்தவர் சாம்பவி.

தனது கையிருப்பு இவ்வளவுதான் என்றிருந்தார் அமிர்தவள்ளியிடம். “வசதி பார்த்து மருமகள்களை எப்போவும் நான் தேர்வு செய்ததில்லை. நல்ல குணமுள்ள பெண் கிடைப்பது பெரிய கொடுப்பினை. அந்த விசயத்துல நான் கொடுத்து வச்சவ.

உங்க குடும்பத்து வழக்கப்படி செய்ய வேண்டிய சம்பிரதாயம் மட்டும் உன் பணத்தில் செய் சாம்பவி. மத்ததை செல்வா பார்த்துப்பான்” என்று சாம்பவி குற்றவுணர்வை போக்கினார் அமிர்தவள்ளி.



Advertisement

இளவரசன் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து தங்கைக்காகத்தான் சேமித்தான். “ம்மா, என்னால முடிஞ்சது, என்னோட ஒன்றரை வருச சேமிப்பு. செல்விக்கு தேவையானதை வாங்கிக்கொடு” என்று செல்வி முன்னே கார்டை கொடுக்க, செல்வி மறுக்கவில்லை. மகிழ்வோடு பெற்றுக்கொண்டார் சாம்பவி.

“இன்னைக்கு நைட் கிளம்பனும், இரண்டு நாள்ல வந்துடுவேன். அதுக்கப்புறம் கல்யாணம் வரைக்கும் இங்கதான்” என்றான் இளவரசன்.

“என்ன இளவரசா இப்படி சொல்ற? ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சிக்கிட்டு நாங்க இரண்டு பேர் மட்டும் வீட்டுல இருக்கிறதா?”

Advertisement

“இரண்டு நாள்ல வந்துடுவேன்ம்மா, தாத்தா பாட்டியை கூப்பிட்டுக்கோங்க”

Advertisement

“உங்கப்பாக்கு பயந்துகிட்டு அவங்க வரமாட்டாங்கனு நினைக்கிறேன், எனக்கு வேற யாரும் வேண்டாம், நீ இருந்தா போதும், லீவ் கேட்டுப்பாரு இளவரசா” என்றார் கெஞ்சலாக.

“நான் முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணிட்டுத்தான் சொல்றேன்ம்மா”

“நம்ம வேலையையும் சேர்த்து செல்வா தம்பியே பார்க்குறார்” என்றார் கவலையோடு.

Advertisement

செல்விக்கு அழைப்பு வர, “ம்மா அவர்தான் கால் பண்றார்” என்று அழைப்பை ஏற்றபடி உள்ளே சென்றாள்.

“எங்க இருக்க?”

“வீட்டுலதான்”

“ம், எங்கேயும் போய்டாத, வந்துட்டிருக்கேன்” என்றவன் கால்மணி நேரத்தில் செல்வி வீட்டிற்கு வந்தான்.

இரண்டு கார்கள் வரவும் சற்றே பதட்டத்திற்குள்ளானாள் செல்வி. உள்ளே வந்த பொற்செல்வன் “உள்ள வாங்க” என்க, இரு பெண்கள் உள்ளே வந்தனர்.

“யார் தம்பி இவங்க? எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே” என்றார் யோசனையோடு.

“ஸ்டைலிஸ்ட் ஆன்ட்டி, நிறைய சினிமா, ஆட் லலாம் ஒர்க் பண்ணியிருக்காங்க, எதாவது இன்டர்வியூல பார்த்திருப்பிங்க. இவங்கதான் மேரேஜ் டிரஸ் ஸ்டிச் பண்ணப்போறாங்க, செல்வியும் நீங்களும் அளவு கொடுத்துடுங்க” என்றான் பொற்செல்வன்.

“எனக்கு எதுக்கு தம்பி? நான் வழக்கமா தைக்கிற இடத்துல தைச்சிக்கிறேன்”

“கல்யாணத்துல நீங்க நல்லா இருந்தாதான் செல்வி சந்தோசப்படுவா. ஆமாதானே செல்வி?”

“ஆமாம், வாம்மா” என்று அன்னையை உள்ளே அழைத்துச் சென்றாள்.

“நீ எப்போ வந்த?” என்றான் இளவரசனிடம்.

“மிட்நைட் வந்தேன், இன்னைக்கு நைட் கிளம்பனும், இரண்டு நாள்ல வந்திடுவேன். சாரி… லீவ் கிடைக்கல” என்றான் சிறு தயக்கத்தோடு.

“ஹேய், சாரிலாம் வேண்டாம், ஒருநாளாவது இருக்கலாம்னுதானே மிட்நைட் கிளம்பி வந்துருக்க, இதுலயே உன் சிட்டிவேஷன் புரியுது”

“இல்ல, எல்லாம் நீங்களே பார்க்குறிங்கனு அம்மா சங்கடப்பட்டாங்க”

“என் கல்யாணத்துக்கு நான் பார்க்காம வேற யார் பார்ப்பா? பிரச்சனை அது இல்ல” என்றவன், இளவரசனை வெளியே அழைத்துச்சென்று, “உன் அப்பா என்ன சொன்னார்? அவர் ஏது செல்வியை டென்ஷன் பண்ணிடுவாரோனுதான் கவலையா இருக்கு. டாக்டர் சொன்னதெல்லாம் உனக்கு தெரியும்தானே?” என்றான்.

இளவரசன், “ம் தெரியும். நீங்க அப்பாகிட்ட பேசினதையும் என்கிட்ட சொல்லி புலம்பினார். டாக்டர் சொன்னது உங்களுக்கு தெரியும்தானே? செல்வி கல்யாணத்துக்கு வரக்கூடாதுனு உங்களுக்கே தெரிய வேண்டாமானு கேட்டேன்.

உங்களாலதான் செல்வி மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கா. பாசம் அன்பு உரிமைனு நீங்களா நினைச்சிக்கிட்டு கல்யாணத்துக்கு வந்து அவளை மெண்ட்டல் ஆக்கிடாதிங்கனு சொன்னேன். மெண்ட்டல்னு சொன்னதும் ரொம்ப அழுதுட்டார்” என்றான் வருத்தமாக.

பின்னே, “ஹம்… கொஞ்ச நஞ்ச திமிர்லயா இருந்தார்? இப்போ வருத்தப்பட்டு என்ன ப்ரியோஜனம்? இதெல்லாம் ஃபேஸ் பண்ணித்தானே ஆகனும்” என்றான்.

“எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. அங்கையே இருக்கும்வரை ஆன்ட்டி அருமை தெரியலைனாலும் பிரிஞ்சு வந்த பின்னாடியாவது உன் அப்பா யோசிச்சிருக்கனும்”

“என் அம்மா இவ்வளோ ஸ்ட்ராங்கா இருப்பாங்கனு அவர் நினைக்கல. வசதியா வச்சிருந்தோம், பணக்கஷ்டம் வந்தா தன்னால வந்திடுவாங்கனு நினைச்சிருக்கார். இப்போவும் செல்விக்கு ஹெல்த் இஸ்யூஸ் இருக்குன்றதாலதான் பயப்படுறார். இல்லைனா என் அம்மாகிட்ட பேசி எப்படியாவது காரியத்தை சாதிச்சிடுவார்”

“கல்யாணத்துல ஏதும் கலாட்டா பண்ணமாட்டார்னு நம்பலாமா?”

“தெரியலை, செல்வி இல்லாத நேரம் பார்த்து அம்மாகிட்ட பேசனும்னு சொன்னார், கல்யாணம் முடிஞ்ச பின்னாடி பேசிக்கோங்கனு சொன்னேன், என் பேச்சை கேட்பாரானு தெரியல” என்றவன், “நல்லா மிரட்டி வச்சிருக்கிங்க போல, அவர் மிரட்டல் உங்ககிட்ட வேலைக்கு ஆகாதுனு தெரிஞ்சிக்கிட்டார்” என்றான் இலகுவாக.

“அவர் எனக்கு பயப்படல, செல்விக்குத்தான் பயப்படுறார்” என்றதும் செல்வனுக்கு அழைப்பு வர, “உன் தங்கை கூப்பிடுறா, வா போலாம்” என்று இளவரசனோடு வீட்டிற்குள் வந்தான்.

“இரண்டு நாள்ல டிரஸ் ரெடியாகிடும் சார்” என்று வந்த பெண்கள் கிளம்பியதும் “என்ன ரகசியம் பேசுனிங்க? உன் முகம் சரியில்ல” என்றாள் இளவரசனிடம்.

“அப்படியே என் முகமும் சரியா இருக்கா இல்லையானு சொல்லேன்” என்றான் பொற்செல்வன்.

“கிண்டல் பண்ணாம உண்மையை சொல்லுங்க”

“ம் அதான் கண்டுபிடிச்சிட்டியே, நீ நினைக்கிறது உண்மைதான். உன் அப்பா பத்திதான் பேசினோம்”

“என்ன சொன்னார்? உங்களை தப்பா பேசினாரா?” என படபடத்தாள்.

“ரிலாக்ஸ் செல்வி. அப்படி ஏதும் நடக்கல. அவர் என்னை தப்பா பேசினாலும் அதுக்கு பதில் நான் கொடுத்துடுவேன். அவர் பேச நினைக்கிறது உன் அம்மாகிட்ட”

“வேணாம், என் அம்மாகிட்ட இனி அவர் பேசக்கூடாது” என்றவளுக்கு கண்ணீர் வர,

“ம்ப்ச் எதுக்கெடுத்தாலும் அழுவியா?  உன் கல்யாணம் முடிஞ்சிட்டா உங்க பக்கத்து நியாயத்தை வேல்யூ பண்ணமாட்டார். அதுக்கும் முன்னாடி பேசட்டும்” என்றான் தன்மையாக.

“உனக்கு அப்பாகிட்ட பேசனுமாம்மா?” என்றாள் கலக்கத்தோடு.

“அவரை மன்னிக்கிற எண்ணமோ அவரோட வாழ்ற எண்ணமோ எனக்கு கொஞ்சமும் இல்லை செல்வி. அவர் முகத்தை பார்க்கக்கூட எனக்கு பிடிக்கல. அவர் என்கிட்ட பேச நினைக்கிறார். இதுக்கு மறுத்து கல்யாணத்துல எதாவது கலாட்டா பண்ணிட்டார்னா அதை என்னால தாங்க முடியாது. எனக்கு உன் கல்யாணம் நல்லபடியா முடியனும். நீ சந்தோசமா வாழனும்” என்றார்.

“சரி பேச சொல்லுங்க” என்றாள் இறுக்கமாக.

செல்வியை வெளியே அழைத்து வந்தவன், “உனக்கு உன் அப்பா கல்யாணத்துக்கு வரனுமா? வேண்டாமா?” என்றான்.

“வேண்டாம். வரக்கூடாது” என்றாள்.

“அவர் வரலைனா அவர் மேல உள்ள கோபம் போய்டுமா?”

“போகாது. எப்போவும் போகாது”

“ஓகே ஓகே. ரிலாக்ஸ்” என கன்னம் தட்டிக்கொடுத்தவன், “உனக்கு பிடிக்கலனா நீ பேசாத. ஆன்ட்டியும் பேசக்கூடாதுனு நினைக்கக்கூடாது சரியா?” என்றான்.

“எனக்கே இவ்வளோ கஷ்டமா இருக்குனா அம்மாக்கு எப்படி இருக்கும்? அவரால என் அம்மா லைஃபே போச்சு, இவர் பேசினார்னா அம்மாவை சமாதானம் படுத்திடுவார்னு பயமா இருக்கு. அம்மா சமாதானம் ஆகிட்டா அவர் செய்த தப்புக்கான தண்டனை என்ன?” என்றாள் ஆதங்கத்தோடு.

“உன் பக்கம் நீ பேசுறது சரி. ஆனா ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப் உறவுக்குள்ள நாம போகக்கூடாது செல்வி. என் அண்ணா கூடதான் அண்ணியை கல்யாணம் செய்து இரண்டு வருசம் வாழாம இருந்து யார் பேச்சும் கேட்காம டிவோர்சும் பண்ணினார். அண்ணிக்கு எப்படி வலிச்சிருக்கும்? ஆனா இப்போ சேர்ந்துட்டாங்கதானே? அண்ணி அண்ணவோட சேர்ந்து வாழ்றதுனால அண்ணன் செய்தது தப்பில்லைனு ஆகிடுமா?”

“தப்புதான், ஆனா பிரிஞ்சு வாழ்ந்தாலும் தேவராஜ் மாமா வேற பொண்ணை தேடி போகல. ஆனா என் அப்பா?” என்றவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

“உனக்கு உன் அப்பாவோட எப்படி இருக்கனுமோ அப்படி இருந்துக்க. ஆன்ட்டி உன் அப்பாவை மன்னிக்கனுமா வேண்டாமானு அவங்க முடிவு பண்ணட்டும். அவங்க முடிவு எதுவானாலும் நீ டென்ஷன் ஆகிக்காத” என்றான் பொறுமையாக.

“என்னால அப்படி இருக்க முடியலையே” என பொற்செல்வனின் கையை பிடித்தாள் இறுக்கமாக.

“செல்வியால முடியாதுனு எதாவது இருக்கா என்ன? உன்னால முடியும்” என்றவன், செல்வியின் மன அழுத்தத்தை குறைக்கும் எண்ணத்தோடு, “இப்போ என் கையை இறுக்கமா பிடிச்சிருக்கியே. இது எனக்கு எவ்வளோ நிம்மதியை கொடுக்குது தெரியுமா? ஆனாலும் இது பத்தல. இதுவே நமக்கு இந்நேரம் கல்யாணம் முடிஞ்சிருந்தா முத்தம் கொடுக்கலாம், அதுவும் நான் ஆசைப்படும் இடத்துல கொடுக்கலாம்” என்று கண்ணிமைத்தான்.

படபடப்போடு இவள் கையை உருவப்பார்க்க, “இங்க ஏதும் பண்ண முடியாது. கையையாவது பிடிச்சிட்டிருடீ” என்றான்.

“எனக்கும் பிடிச்சிட்டிருக்கனும்னுதான் ஆசை, நீங்க வேற மாதிரி பேசினா கை தன்னால வெளில வரப்பார்க்குது” என்றாள் பாவமாக.

“இதுக்கே இப்படினா அடுத்த வாரம் முக்கியமான நேரத்துல ரூமைவிட்டே போய்டுவபோல. பல கனவுகளோட இருக்கேன், என்னை ஏமாத்திடாதடீ” என்றான் பயந்தவன் போல.

“ம்ப்ச் போங்க” என செல்வனிடமிருந்து விலகி திரும்பி நின்றாள் பெருகிய நாணத்தோடு.

எத்தனை மன அழுத்தம் இருந்தாலும் தன்னிடம் உடனே இளகிவிடும் செல்வி தன்னுடையவள் என கர்வமாக நினைத்தான். தன்னிடம் வந்துவிட்டால் அவளின் அப்பாவை அதிகம் நினைக்கமாட்டாள் என்பதற்காகவே அவசரமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டான் பொற்செல்வன்.

தாமோதரன் செல்வியை சந்திக்க விடாமல் செய்ய தனக்கு உரிமையிருக்கிறது. அவர் மனைவியை சந்திக்க விடாமல் செய்வதில் பொற்செல்வனுக்கு உடன்பாடில்லை.

ஒருவேளை செல்வியின் அப்பா அவளின் அன்னையை சந்திக்க வந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை செல்விக்கு இருக்க வேண்டும். அதேநேரம் செல்வியின் மன அழுத்தமும் அதிகமாகிவிடக் கூடாது. இதனை மனதில் வைத்தே தற்போது பேசினான்.

செல்வியின் அப்பாவை தள்ளி நிறுத்துவதால் செல்விக்கு அவரின் நினைவு வராமல் இருக்காது. தாமோதரனிற்கு பெரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றில்லை. தற்போதிருக்கும் செல்வியின் மனநிலையின் படி தாமோதரன் நிராகரிக்கப்பட்டாலே செல்வியின் மன அழுத்தம் குறையும்.

“உன் அப்பா பத்தி அதிகம் யோசிக்காத. அவர் செய்த எதையும் இனி மாத்த முடியாது. நம்ம கல்யாணத்துல நீ சந்தோசமா இருந்தாதான் என்னால சந்தோசமா இருக்க முடியும். அவர் நினைப்பை ஒதுக்கி வச்சுட்டு நம்ம கல்யாணத்தை பத்தி யோசி” என்றான்.

சரி என்பதாய் செல்வி தலையசைக்க, செல்வியின் உள்ளங்கையில் முத்தமிட்டு, வீட்டிற்குள் அழைத்து வந்து, “ஈவ்னிங் இன்விடேஷன் வந்துடும், நாளைக்கு அம்மா பூஜை பண்ண கூப்பிடுவாங்க, டிரைவர் வருவார், செல்வியை அழைச்சிட்டு வந்துடுங்க ஆன்ட்டி” என்றான்.

“தம்பி… செல்விலாம் வரக்கூடாது” என்றார் சாம்பவி.

“அதெல்லாம் வரலாம் ஆன்ட்டி, தேவா அண்ணா இன்விடேஷன் பூஜைக்கு வந்துருக்கால்ல? குடும்ப ஃபங்ஷன் எல்லாத்துலயும் செல்வியும் நீங்களும் இருந்துருக்கிங்க. என் இன்விடேஷன் பூஜைல இல்லைனா எப்படி? கண்டிப்பா இரண்டு பேரும் வரனும்” என்று கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!