Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் 19

ஊழியின் உருவம்…

உருமாறி விலக…



Advertisement

பெண்ணவளால் வரையப்படாத…

பொன்நிற கோலத்தை…

Advertisement

Advertisement

ககனத்தில் கதிரவன்…

தீட்டும் தருணம்…

Advertisement

அது…

காலை வேளை…

எப்பொழுதும் உறக்கம் கலைந்தாலும் விரைவாக எழும் நல்ல பழக்கம் எல்லாம் பார்த்திபனுக்குப் பிடிக்காது. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் நடிகர் சொல்வாரே, ‘எப்பொழுதும் பிறக்கும் புதிய நாளை நமக்கு பிடித்த நொடியில் தான் ஆரம்பிக்க வேண்டும். ‘ என்று.

அதைப் பின்பற்றுவதாக நினைத்து பத்து மணிக்கு மேல் சூரியன் உச்சிப்பொழுதை அடையும் போது தான் எழுந்து வருவான். சொல்லப்போனால் காலண்டரில நல்ல நேரம் பாத்து தான் எழுவான் போலும் மாணிக்கத்திடம் திட்டு வாங்காமல் இருக்க..

இன்று விடியும் முன்னரே எழுந்து விட்டான். மேற்கு வானில் உதயமான வெள்ளியையும், கிழக்கு திசையில் தன் பயணத்தை தொடங்கிய சூரியனை வரவேற்று வண்ண மாலை அணிவித்த அதிசய காட்சிகளை முதல் முதலில் இல்லை இரண்டாவது முறையாக பார்க்கிறான். முதல் முறை பாரதியுடன் இயந்திரப் பறவையில் பார்த்திருக்கிறானே. மனம் உடனடியாக மங்கையின் உருவத்தை செதுக்க, உடல் பரவச நிலைக்கு சென்றது.

” ச்ச… பத்துங்கிறத எட்டு மணின்னு சொல்லிருக்கலாம். அவள பாக்க ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டி இருக்கு.” எனத் தன்னை தானே திட்டியபடி குளித்து உடை மாற்றி உணவு உண்ண செல்ல, அனைவரும் அவனை அதிசய பிறவி போல் பார்த்தனர். ஏனெனில் பார்த்திபனுக்கு காலை சாப்பாடு உண்ணும் பழக்கமும், காலையில் குளிக்கும் பழக்கமும் கிடையாது.

“நைட் ஒம்போது மணிக்கி குளிச்சாத்தா உடம்புக்கு நல்லது. ரஷ்யன் சைன்ட்டிஸ்ட் எல்லாம் அப்படித்தா சொல்றாங்க. லண்டன்லலாம் அப்படி தான் குளிப்பாங்க. இனி நீங்களும் நைட் குளிச்சிட்டு படுங்க. ” என அட்வைஸ் செய்யும் பார்த்திபன் இன்று வேலைக்கு செல்வது போல் டிப்டாப்பாக தயாராகி வந்து நின்றால் என்ன செய்வது..

அதிசயங்களைக் கண் குளிர பார்க்க வேண்டுமே தவிர, அதைக் கலைக்க கூடாது. ஆனால் சுட்டு பொசுக்கலாம். வார்த்தைகளால். மாணிக்கத்தை போல்.

“எங்கடா போற?” என காரின் சாவியுடன் குதூகலமாய் நடந்து வந்த மகனை பார்த்து கேட்டார்.

‘ஐய்யோ இந்தாளு கண்ணுலயா நான் மாட்டணும்… ச்ச… இந்த மாதிரியெல்லாம் கேள்வி வரும்னு தெரிஞ்சி தா நான் சீக்கிரமா ரூம விட்டு வெளில வர்றது இல்லை. ‘ என மனதிற்குள் நினைத்தவன்,

” போறப்ப எங்க போறன்னு கேக்க கூடாதுன்னு தெரியாத உங்களுக்கு!! ஏன் அகிலு இதெல்லாம் உங்க சீமந்த புத்திரனுக்கு சொல்லி குடுத்து வளக்கலயா?” எனத் தன் பாட்டியின் பக்கத்தில் அமர்ந்து அவரின் கன்னம் கிள்ளி கொஞ்சி விளையாட,

“என்னைய என் அப்பாம்மா நல்லாத்தா வளத்திருக்காங்க. நாந்தா உன்ன சரியா வளக்கல.” என்றவருக்கு மகனின் செயல் கடுப்பேற்றியிருக்க வேண்டும்.

“அது எந்தப்பில்ல. உங்க தப்பு தான்.” என அசால்டாக சொல்ல,‌ மாணிக்கம் மீண்டும் அதே கேள்வியை கேட்டார், பற்களை கடித்துக் கொண்டு.

“அடேய் வெளிய போற புள்ளக்கிட்ட என்ன கேக்குற? ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சின்னா யாருக்கு நட்டம். நமக்கு தான! எனக்கு இருக்குறதே ஒத்த பேரன். அவன போய் கேள்வி கேட்டுட்டு. நீ போய்ட்டு வா ராசா. பத்திரமா போ. ” எனப் பாட்டி பேரனுக்கு சப்போட் செய்தார்.

“ஸ்வீட் அகிலு…” என்றுவிட்டு எழுந்தான்.

“வெளில போய் என்ன வேலையா பாக்கப்போறான்? வெட்டியா ஊர் சுத்தத்தான போறான். எந்த இடத்துல ஊர் மேயப் போறேன்னு சொல்லிட்டு போறதுனால கொறைஞ்சி போய்ட மாட்டான்.”

“எதுக்கு அங்கேயும் என்னை நிம்மதியா இருக்க விடாம பண்றதுக்கா. வீடு தான் உங்களால கார்கில் பார்டர் மாதிரி போர்க்களமா ஆகிடுச்சி. வெளியவாது நிம்மதியா இருக்க விடுங்களே.” என முணுமுணுக்க, அது அவரின் காதில் விழுந்துவிட்டது. அவர் ஒன்று சொல்ல இவன் பதிலுக்கு பதில் முணுமுணுக்க… மாணிக்கம் டென்ஷனாக… சுகுமாரன் தான் அண்ணனை அழைத்துச் சென்றார்.

“சீக்கிரம் இந்த பீபி பேஷண்ட்டுக்கு வின்சென்ட் வேலை பாக்குற ஹாஸ்பிட்டல்ல அட்மிஷன் போட்டு வைக்கணும்… வைப்போம்.” என்றவன்,

“ம்மா.. உ வீட்டுக்காரரு என்னை காலைலயே கடுப்பேத்திட்டாரு. கொஞ்சம் தண்ணீ எடுத்திட்டு வாம்மா… நேரமாச்சி…” எனக் கைக்கடிகாரத்தைப் பார்க்க, பத்மா எதுவும் கேட்காது டம்பளரை நீட்டினார்.

“குட் மம்மி.. உன்ன மாதிரியே எல்லாரும் இருந்திட்டா எவ்ளோ நல்லா இருக்கும்.” எனப் பாராட்டி அன்னையை அணைத்து விடை பெற்றான்.

இன்னும் ஒரே ஒரு ரோடு தான். எந்த பக்கமும் திரும்பாமல் ஆறு கிலோமீட்டர் போனால் பாரதிய பாக்க வரச் சொன்ன ரெஸ்டாரன்ட் வந்திடும்.

போனா வரும்… ஆனா போகத் தான் முடியவில்லை. அவனின் செல்ல அம்பாசிடர் எரிபொருள் பற்றாக்குறையால் நடு ரோட்டில் நின்று விட்டது.

“மை ஒத்த ரோசாவ கரெக்ட் டைமுக்கு வந்திடுன்னு சொல்லிட்டு, நான் லேட்டா போனா நல்லவா இருக்கும்.” என நொந்து கொண்டவன் வின்சென்ட்டிற்கு அழைத்து காரை எடுத்துப் போக பெட்ரோலுடன் வர சொல்லிவிட்டு, லிஃப்ட் கேட்டு கட்டை விரலை நீட்டியபடி நிற்கிறான்.

அவனை ஏற்றிச் செல்ல ஒரு பைக்காரன் முன்வர, “நன்றி ப்ரோ.. நாங்கூட ரொம்ப நேரம் நிக்கணுமோன்னு கொஞ்சம் பயந்திட்டேன். நீங்க எடுங்க ப்ரோ வண்டிய.” என கூறி ஏறி அமர்ந்தான்.

“எங்க போகணும்?” என்றான் பைக்காரன். அவனிடம் இடத்தை சொன்னவன்,

“அங்க எனக்காக ஒரு பொண்ணு காத்திட்டு இருக்கும் ப்ரோ. பத்து மணின்னு சொன்னேன். எங்கப்பா பண்ண டென்ஷன்னால பன்னெண்டு ஆகப் போது. இதுக்கு மேலயும் மைம்மாவ காக்க வச்சா வண்ணாரப்பேட்ட காளியா மாறிடுவா… ராங்கிக் காரி…”

“கேர்ள் ஃப்ரெண்டா?” எனக் கண்ணாடி வழியே தெரிந்த பார்த்திபனின் முகத்தை பார்த்து கேட்டான்.

“அப்படி சொல்லிட முடியாது. ஆனா ட்ரெய் பண்ணலாம்.” எனப் ஆரம்பித்து பாரதியுடன் நடந்த அத்தனை சமாச்சாரங்களையும் பைக்காரனிடம் முழு நீளப் படமாக ஓட்டிக் காட்ட, இடம் வந்து சேர்ந்தது.

“ரொம்ப நன்றி ப்ரோ… நான் போற வேலை சக்சஸ் ஆச்சின்னா உங்க பேர சொல்லி நான் நாலு பியர் வாங்கி ஊத்திக்கிறேன்.” என சொல்லி உணவகத்தின் உள்ளே செல்ல பார்க்க,

பைக்காரன் ஹெல்மெட்டை கழட்டி வைத்துவிட்டு, ” உன்னோட பேர் என்ன?” என்றான்.

“ஏன் ப்ரே? பியர்ல உங்களுக்கும் பங்கு வேணுமா?” எனக் கேட்க, அவன் வேண்டாம் என்பது போல் தலை அசைத்தான்.

“அப்புறம் என்ன! பேரு தான… சொல்லிடுறேன். பார்த்திபன்.. ” என்றபடி நடந்து சொன்னவனை பைக்கில் இருந்த படியே ஏற இறங்க பார்த்துவிட்டு, சில நொடிகள் கழித்து,

“நல்லா இருக்கு பேரு.. ” என்றான்.

“தேங்க்ஸ் ப்ரோ… நீங்களும் நல்லாத்தா இருக்கிங்க. சுப்ரமணியம் புரம் சசிகுமார் மாதிரி. ஆனா அந்தத் தாடியையும் மீசையையும் எடுத்திட்டா செம்மையா இருப்பிங்க.” என வர்ணித்து விட்டு சென்றான் பார்த்திபன்.

‘ச்ச இவெ ஆம்பளைய கூட விட மாட்டான் போலயே…‌ இப்படி சைட் அடிக்கிறான்.’

“மேடம் ஆர்டர்…” எனப் பாரதியின் அருகில் வந்த வெயிட்டர் முப்பதாவது முறையாவது கேட்டிருப்பான்.

“ம்ச்… எதாவது ஜூஸ் இருந்தா கொண்டு வாங்க. போதும்…” என்றபடி தலையை அழுத்தி பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள் பாரதி. அவளின் அலைபேசி மின்னி மறைய அது குறுந்தகவல் வந்துள்ளது என்று கூறிச் சென்றது.

அதை எடுத்து பார்த்தவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. இத்தோடு ஐந்நூறு மெசேஜ்கள் வந்திருக்கும். அனைத்தும் hi… what’s up… hello… என்ற பொதுவானது மெசேஜ்கள் தான். ஆனால் வந்து கொண்டே இருந்தது. அனுப்பியது பார்த்திபன் தான். எங்கே இருக்கிறாய் என்று கேட்க அழைத்துள்ளான்.

“பார்க்கிங் பக்கத்துல ஒரு டேபில் இருக்கு பாரு. அங்க தான் இருக்கேன். நான் உன்ன பாத்திட்டேன். நேரா வா.”

“நான் என்ன கார ரிவர்ஸ்லயா எடுத்திட்டு இருக்கேன். நேரா வா. லேஃப்டுல திருப்பு. ரைட்டுல ஏறி ஓட்டு… பிரெக்க பிடின்னு இன்ஸ்ட்ரெக்ஷன் குடுக்க… நானே வந்துப்பேன். நீ என்ன கலர் டிரெஸ் போட்டிருக்க?”

“நேத்து எந்த கலர் டிரெஸ்ல பாத்தியோ. அதே கலர்ல தான். வா…” என்றவள் ஃபோனை கட் செய்ய,‌ மீண்டும் அடித்தது. பார்த்திபன் தான்.

“ஏன் மெக்கானிக் டிரெஸ்ல வந்த. நல்லதா எடுத்து போட்டுட்டு வர வேண்டியது தான.”

“யோவ்… என்னய்யா வேணும் உனக்கு? பொண்ணு பாக்க வந்தவெங்கணக்கா அத்த போட்டலயா இத்த போடலயான்னு சும்மா பேஜார் பண்ணிக்கின்னு. எதோ பூஜா சொன்னாங்கிறதுக்காத்தா வந்திருக்கேன். இல்லங்காட்டி உம்மூஞ்சில முழிக்க எனக்கு இன்ன விருப்பமா? நான் கெளம்புறேன்.” என எழ,

“ஓகே பை… ஜாக்கிரதையா போய்ட்டு எனக்கு ஃபோன் பண்ணு. நான் போலிஸ்க்கு ஃபோன் பண்றேன். எல்லா ஆதாரமும் பக்காவா இருக்கும் போது ஸ்ட்ரெய்ட்டா தூக்குத்தான்.” என்றபடி அவளின் முன் வந்து நின்றான்.

“இன்னா பூச்சாண்டி காட்டின்னுகிறியா… உ மெரட்டல் உருட்டலுக்கெல்லாம் மெர்சலாகுற டைப்பு நான் கிடையாது. உ பருப்ப வேக வைக்க வேற குக்கர தேடு. வழி விடு.” எனப் பார்த்திபனைக் கடந்து சென்றாள்.

இப்படிப் பேசியவள் எதற்கு வர வேண்டும் இரண்டு மணி நேரமாக பார்த்திபனுக்காக காத்திருக்க வேண்டும்.. என்ற கேள்விக்கு விடை காண, நாம் பூஜாவுடன் நேற்று பாரதி பேசியதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாலையில் பாரதி பூஜாவிற்கு ஃபோன் செய்தால் அல்லவா… அந்த உரையாடல்கள் தான் இவை.

“பாரதி ஐ ஆம் ஸாரி. நான் உன்ன போட்டு குடுத்திருக்க கூடாது தான்.. ஆனா என்னோட உயிர் எனக்கு முக்கியம் இல்லயா. அதா சொல்லிட்டேன்.‌ ஸாரி…

நீ ஒன்னும் கவலப்படாத. நான் பார்த்திபன்ட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டேன். உன்ன ஏமாத்தி ஒருத்தெ அப்பார்ட்மெண்ட்டா வித்தது. காசு மொத்தத்தையும் அந்த வீட்டுக்காக செலவு பண்ணது. நாந்தா ஓனர்னு ஒருத்தே வந்து நின்னதுன்னு எல்லாத்தையும் டீட்டெய்ல்லா சொல்லிட்டேன். ‘அவளோட அப்பார்ட்மெண்ட்டுக்காகத் தான் இத பண்ணா. அவளுக்கும் வேற வழி தெரியல’ன்னு தெளிவா உம்பக்கத்து நியாயத்த உனக்காக பேசிட்டேன்.

பார்த்திபன் ரொம்ப நல்லவே. அவனுக்கு தங்கமான மனசு. அதுனால தா இதுவர போலிஸ்ல உன்ன காட்டி குடுக்காம இருக்கான். நான் அவெங்கிட்ட உனக்கு உதவ சொல்லி கேட்டிருக்கேன். கண்டிப்பா இந்த பிரச்சனைல இருந்து உனக்கு பாதிப்பு இல்லாம வெளிய வர அவன் ஹெல்ப் பண்ணுவான்.” என்க,‌

பாரதி பதில் சொல்லாது கோபமாக, தோழியை முறைக்க முடியாத காரணத்தால் பார்த்திபனை முறைத்தாள்.

“அவெ ஒரு ஐடியா சொல்லிருக்கான். எனக்கு அது சரின்னு படுது. அத பத்தி உங்கிட்ட டீட்டெய்லா பேசனுமுன் சொன்னான். அவெங்கிட்ட பேசு பாரதி. நீ மட்டும் அவெ சொன்னபடி கேட்டு நடந்துக்கிட்டேன்னா எல்லா பிரச்சனையும் ஓவர். கண்டிப்பா உனக்கு அவெ உதவி பண்ணுவான். ஏன்னா அவனுக்கு இலகுன மனசு. ” எனப் பார்த்திபனின் புகழ் பாட கடுப்பாகி கட் செய்துவிட்டாள் பாரதி.

“ஒன்னோ ரெண்டோ தான் போடச் சொன்னேன். நீ ஷாக் ஆகி நிக்கிறத வச்சி பாக்கும் போது… எக்கச்சக்க பிட்டு போட்டிருப்பா போல. சூப்பரு… நீ என்ன பண்றன்னா இன்னைக்கி நல்லா படுத்து தூங்கிட்டு நாளைக்கி காலைல பத்து மணிக்கி என்னை பாக்க வர்ற. எங்கன்னு உனக்கு வாட்ஸ் அப் பண்றேன்.” என்றவன் அவளின் நம்பருக்கு கால் செய்ய, ரிங் போனது.

ஒரு புல்லாங்குழல் இசை அது. கேட்கும் காதுகளில் இனிமையை வாரி இறைத்து மனதை அமைதியடையச் செய்யும் கிருஷ்ணனின் புல்லாங்குழல் ஓசை

“நைஸ் ரிங் டோன்… உனக்கு ஏத்த மாதிரி தான் வச்சிருக்க. பாத்ததும் மெல்ட் ஆகுற மாதிரி.” என்றவன் அவளின் கையில் ஒளிர்ந்த ஃபோனின் திரையில் தெரிவது தன் அலைபேசி எண் தானா என்பதை உறுதி செய்து கொண்டான்.

“கரெக்ட்டான நம்பரத்தா பூஜா குடுத்திருக்கா. இது என்னோட நம்பர். சேவ் பண்ணிக்க… ம்.. மறந்திடாம உன்ன பைக்ல கூட்டீட்டு நகர்வலம் வந்தான்ல அவனையும் கூட்டிட்டு வா. இல்லன்னா யாரு அதுன்னு கண்டு பிடிக்க எனக்கு போக்குவரத்து துறைல ஒரு கேர்ள் ஃப்ரெண்டு இருக்கு. பிடிச்சி உள்ள வச்சிவாங்க. ஓகே நாளைக்கி பாக்கலாம்.” என்று சில அடி தூரம் நடந்தவன் திரும்பி அவளின் அலைபேசியை வாங்கி,

” ஏன் பட்டன் டயிப் ஃபோன வச்சிருக்க? இம்மாம் பெரிய கார் ஷெட்டுக்கு முதலாளி. உனக்கு கீழ வேல பாக்க எத்தன பேரு இருக்காங்க. இப்ப நிவேஷன் அவன்யூல ஒரு அப்பார்ட்மெண்ட்ட விலைக்கி வேற வாங்கிருக்குற ஹவுஸ் ஓனரு. டச் ஃபோன் வாங்கி வச்சிருக்கலாம்ல!!”

‘நான் என்ன வச்சிருந்தா உனக்கு என்னடா.. ‘ என கண்கள் பேச,

“சரி பரவாயில்லை நீ எதுனாலும் வச்சிக்க. மறந்திடாம வந்திடு. பத்து மணி.” என்றுவிட்டு செல்ல, பாரதி, பூஜைவை வறுத்தெடுக்க தொடங்கினாள்.

பூஜாவோ எதையும் அலட்டிக் கொள்ளாது மாணிக்கம் குடும்பம் சிக்கியுள்ள சுழலை பற்றி சொல்லி, ” ஆல்ரெடி ஒரு கண்டத்துல இருந்து இப்ப தான் தப்பிச்சிருக்கு அந்த குடும்பம். இப்ப மறுபடியும் ஒன்னுன்னா ஆங்கில் ரொம்ப பாவம்ப்பா. நீ பார்த்திபனுக்காக இல்ல… என்னோட தூரத்து மாமா ஃபேமிலிக்காக பண்ணேன். உனக்கு இந்த வீடு கிடைக்கும். உன்னால ஆரம்பிச்ச ஒரு ப்ராப்ளமும் சால்வ் ஆகும்.”

“என்ன பண்ணணும். அத மொத சொல்லு.”

“அத அவனே உன்ன பாத்து சொல்றேன்னு சொன்னான். நாளைக்கி அவன்ட்ட பேசிட்டு என்னை கூப்பிடு.” என்று வைத்து விட, பாரதிக்கு தான் குழப்பமாக இருந்தது. அப்படி என்ன சொல்ல போகிறான் என்று.

அவன் நினைத்திருந்தால் அவனின் கையில் கிடைத்த ஆதாரங்களை வைத்து அவளை போலிஸ்ஸிடம் மாட்டி விட்டிருக்க முடியும்.. அப்படி செய்யாது ஏன் தன்னிடம் வந்து நிற்கிறான் என்ற கேள்வியே அவளை உறுத்திக் கொண்டு இருந்தது. அதை அறிந்து கொள்ளவும்,

இந்த டிசைன் அவனுக்கும் அவனின் குடும்பத்திற்கும் முக்கியம் என்ற பூஜாவின் குரலும், ஒருவரை ஏமாற்றி உள்ளோமே என்ற குற்ற உணர்வும் பார்த்திபனைக் காண அவளை இழுத்து வந்தது..ன ஆனால் பார்த்திபன் தாமதமாக வந்து அவளின் பொறுமையை சோதித்து விட்டான்.

“ஓய்… மைம்மா. நியாயமா பாத்தா நாந்தா முன்னாடி கோய்ச்சிட்டு நடக்கணும். நீ கெஞ்சிக்கிட்டே பின்னாடி வரணும். இங்க எல்லாமே தலைகீழா நடக்குது.” எனச் செல்லும் அவளைப் பார்த்து கத்தினாள்.

“ஹிம்… வருவாய்ங்க வருவாய்ங்க.. உங்கைல இருக்குற ஒன்ன பத்திரமா பாத்துக்க தெரியாம கோட்ட விட்டுடுட்டு… வந்து எங்கிட்ட நின்னா… தப்பு உ மேல… என்ன குத்தம் சொல்லிக்கின்னு திரியற.. ” என்ப் பதிலுக்கு அவளும் கத்த..

“செஞ்ச தப்ப சரி செய்யத்தா வந்திருக்கேன்… உனக்கு பிரச்சனை வராது.. எங்களுக்கும் பாதிப்பு வராது.. முள்ளுல விழுந்த சேலய எடுக்குற மாதிரி பதமா பக்குவமா உன்ன இந்த சிக்கல்ல இருந்து வெளில எடுத்திட முடியும். நில்லு மைம்மா.” எனக் கத்த, திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தலையை உலுக்கியபடி வாசலுக்கு வந்து சேர்ந்தாள்.

“இவெ பெரிய இவெ… முள்ளு சேலைன்னு வசனம் பேசுனா இவன நம்பிடுவோமாக்கும். ஒரு பொண்ணு கிட்ட பல்ல இளிச்சிட்டு நின்னு ஏமாந்திட்டு.. இப்ப வந்து தா புத்திசாலி நம்புன்னு சொன்னா எப்படி நம்புறதாம். இவனுக்கு யோசிக்கிற அளவுக்கு மூளையே கிடையாது. அதுல ஒரு தப்ப சரி பண்ண வழி சொல்றானாம்.. ” என புலம்பிய படியே ஆட்டோவிற்கு கை நீட்ட..

பார்த்திபனுக்கு உதவிய அதே பைக் அவளின் முன் வந்து நின்றது. அது யார் என அடையாளம் கண்ட பாரதி விழி விரிய நின்றாள்.

” என்ன! ரெண்டே நிமிஷத்துல ரெண்டு கிலோமீட்டர் நடந்திட்ட! ஓடி தான் வர வேண்டி இருக்கு உம்பின்னாடி வரணும்னா.. ” என மூச்சு வாங்க நின்ற பார்த்திபனை இருவரும் ஒரு சேர பார்த்தனர்.

“ஓ… சசிகுமார் ப்ரோ… நீங்களா… இது தான் நான் சொன்ன வண்ணாரப்பேட்ட காளி. உங்க கிட்ட லிஃப்ட் கேட்டாளா? டூ மினிட்ஸ் நான் பேச வந்தத பேசிக்கிறேன். அப்பறம் பிக்கப் பண்ணிட்டு ட்ராப் பண்ணிடுங்க.” என்றவன் மீண்டும் பாரதியிடம் தன் ஐடியாவை சொல்ல முயல,

“டேட்டிங்கா…” என பாரதியை பார்த்து கேட்டான் அவன். அவள் இல்லை என தலை அசைத்தாள்.

“அப்றம்! ” எனப் புருவம் உயர்த்தி நம்பாத குரல் வர,

“அது… அது… ” என அவள் தயங்க,

“ப்ரோ அது எதுக்கு உங்களுக்கு?” எனக் கேட்ட பார்த்திபனை முறைத்தவன்,

“உ பைக் எங்க?”

“அத கருப்பு எடுத்திட்டு போய்ட்டான். ” என்றாள் சின்னக் குரலில்.

“ஏறு வண்டில.” எனக் குரல் காட்டமாக மிரட்டும் தோனியில் வர, அவள் ஏறி அமரப்போனாள். ஆனால் ‘நான் சொல்ல வந்ததை நீ கேட்டே ஆக வேண்டும்..’ எனப் பார்த்திபன் பாரதியின் கரம் நீட்டி நிறுத்த,

“ஏறு…” என உறுமினான் அவன்..

“ஏய்… யாரு நீ? எதுக்கு என் மைம்மாவ மிரட்டுற? “

‘எது உ மைம்மாவா… பல நாள் பழக்கப்பட்டவெ மாதிரில்ல இவெ பேசுறான்.’ எனப் பாரதி முழித்தாள். பைக்கில் இருந்தவன் பாரதியின் கரம் பற்றி ஏறச் சொன்னான். எங்கிருந்து வந்ததோ தெரியாது பார்த்திபனுக்கு அப்படி ஒரு கோபம்.

பாரதியைப் பிடித்திருந்தவனின் கரத்தை அழுத்தி பிடித்து, “அவ மேல இருந்து கை எடு. ” எனக் கண்கள் சிவக்க அடிக்குரலில் பேசினான் பார்த்திபன்.

பார்ப்பதற்கு சாதாரணமாக பிடித்திருப்பது போல் தோன்றினாலும், அது இரும்பு பிடியாக இருந்ததை, அடுத்தவன் உணர, பாரதியின் கையை விடுத்து வேகமாக பைக்கில் இருந்து கீழே இறங்கி பார்த்திபனை தாக்க இருந்த சமயம்.

“ராஜா… வேணாம்… ராஜா… சொன்னா கேளு… ப்ளிஸ்…” என இறைஞ்சினாள். ராஜா திரும்பி புரியாது பார்க்க,

“பூஜாக்கு பாத்திருக்குற பையன் பார்த்திபன்…” எனக் காதில் சொல்ல,‌ அவன் அமைதியாகவில்லை.

“ஓ… ரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியுமா?” எனக் கேட்டு பைக்கின் நம்பரை பார்க்க,

“ஹாஹ்ஹா… கூட்டு களவாணிங்க. ஹாஹ்ஹா.. நாந்தா முட்டாத்தனமா அவெங்கிட்ட இருந்து உன்ன காப்பாத்துறதா நினைச்சி… ஹாஹ்ஹா… ஹீரோவா வில்லனான்னு தெரியாம லிஃப்ட் கேட்டு… ஹாஹ்ஹா…” என எதேதையோ சொல்லி சிரிக்க,

“நீங்க ரெண்டு பேரும் எப்படி? பார்ட்னர்ஷிப் வச்சி திருடுவீங்களா! இல்ல ஒருத்தருக்கு கீழ ஒருத்தர் வேல பாக்குறீங்களா! யாரு பெரிய பாஸ்… நீயா? இல்ல நீயா?” என இருவரையும் மாறி மாறி கேட்டவன்,

“பை த வே எனக்கு அது தேவையில்ல. இப்ப உள்ள வந்து பேசலாமா… கம்… இல்லன்னா அடுத்த சந்திப்பு போலிஸ் ஸ்டேஷனாத்தா இருக்கும். ” என்றவன் இருவரையும் உணவகத்திற்குள் அழைத்துச் சென்றான்.

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!