அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே அமிர்தவள்ளியிமிருந்து சாம்பவிக்கு அழைப்பு வந்தது. “நானே கூப்பிடலாம்னு இருந்தேன் அமிர்தாம்மா, தம்பி பூஜைக்கு கூப்பிடறார், நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” என்றார்.
செல்விக்கும் ஆன்ட்டிக்கும் நாம தனியா இருக்கோம்னு ஃபீலாக கூடாது, நம்ம வீட்டுல பூஜை நடக்கும்போது அங்க அவங்க இரண்டு பேர் மட்டும் அங்க தனியா இருக்குறது செல்வியை அஃபெக்ட் பண்ணும். சம்பிரதாயம் பார்க்க வேண்டிய சிட்டிவேஷன் இது கிடையாது. கண்டிப்பா அவங்க இரண்டு பேரும் பூஜைக்கு வந்தாகனும்’ என்று பொற்செல்வன் சொன்ன பின்னே அமிர்தவள்ளிக்கும் மறுக்கத் தோன்றவில்லை.
“என்கிட்டயும் சொன்னான், இது சம்பிரதாயமில்லைனு சொன்னேன், பூஜைல என்ன சம்பிரதாயம் வேண்டிகிடக்கு? என் கல்யாண விசயமா வீட்டுல நடக்குற முதல் பூஜைக்கே என் பொண்டாட்டியை அவாய்ட் பண்றிங்களானு கேட்குறான்.
அவன் அப்படித்தான். பொண்ணு பார்க்குற சம்பிரதாயமே தப்பு, பொண்ணுதான இங்க வந்து வாழுது, அவங்கதான் இங்க வரனும்னு சொன்னவன். அவன்கிட்ட வாதாட முடியாது. அதோட எனக்கும் செல்வி இருந்தா நல்லாயிருக்கும்னு தோணது, நீ செல்வியையும் அழைச்சிட்டு வா” என்றார் அமிர்தவள்ளி.
சரியாக ஆறு மணிக்கு பொற்செல்வனின் டிரைவர் வந்திட, இருவரும் கிளம்பினர் அமிர்தவள்ளி வீட்டிற்கு. “வா சாம்பவி” என அமிர்தவள்ளி வரவேற்க, உள்ளே வந்ததும் செல்வியின் கண்கள் பொற்செல்வனைத்தான் தேடியது.
இவன் செல்வி உள்ளே வருவதை படமெடுத்துக்கொண்டிருக்க, வேண்டாம் என்பதாய் தலையசைத்தாலும், பொற்செல்வனின் செயலை செல்வியால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
Advertisement
“செல்விக்கா” என ப்ரித்திகா வர, “வாவ்… சூப்பரா ரெடியாகியிருக்க குட்டிம்மா” என ப்ரித்திகாவோடு பேசிக்கொண்டிருந்தாள்.
Advertisement
நவீனாவும் ராஜலஷ்மியும் இருவரையும் வரவேற்று, பூஜைக்கு தேவையான வேலைகளை செய்தனர். “என்ன ஜம்முனு உக்கார்ந்துட்ட? நம்ம வீட்டு ஃபங்ஷனுக்கு வீட்டை நீதான டெகரேட் பண்ணுவ? போய் அண்ணிக்கு ஹெல்ப் பண்ணு” என்றான் பொற்செல்வன்.
“கல்யாண பொண்ணுக்கு வேலை வைக்கக்கூடாது செல்வா. நீ உக்காரு செல்வி” என்றார் அமிர்தவள்ளி.
“குலசாமி கோவிலுக்கு போகனும், பத்திரிக்கையை வச்சு பூஜை பண்ணனும், பூசாரிக்கு போன் பண்ணு, டிரைவரை காலைலயே வர சொல்லிடுனு எனக்கு மட்டும் வேலை வச்சிங்க, கல்யாண பையனுக்கு ஒரு நியாயம், பொண்ணுக்கு ஒரு நியாயமா?”
Advertisement
“டேய்… உக்கார்ந்த இடத்துலயிருந்து போன் பண்றதெல்லாம் ஒரு வேலையாடா?”
“பின்ன வேலையில்லையா?” என சிரித்து காலை பொழுதை இனிதாக்கினான் பொற்செல்வன்.
வீட்டில் பூஜை முடிந்ததும், எங்கே குலதெய்வ கோவிலுக்கும் வர சொல்லிவிடுவார்களோ என்று, “தம்பி நாங்க கிளம்பறோம்” என்றார்.
“கோவிலுக்கு போகனும் ஆன்ட்டி, அம்மா சொல்லலையா?”
“சொன்னாங்க தம்பி, இது நம்ம வீடு, யாரும் ஒன்னும் நினைக்கமாட்டாங்க, குலதெய்வ கோவிலுக்கு உங்க சொந்தக்காரவங்க வருவாங்க, கல்யாணத்துக்கு முன்னாடியே செல்வி அங்க வரது சரிவராது. யாராவது எதாவது சொன்னா சங்கடமாகிடும். முறைப்படி பண்றதுதான் நல்லதுனு என் மனசுக்கு படுது”
அதற்கு பொற்செல்வன் பேசும் முன்னே, “சாம்பவியை சங்கடப்படுத்தாத செல்வா” என்றார் புருஷோத்தமன்.
தேவராஜும் தேவேந்திரனும் சிரிக்க, “சாம்பவியை வேணும்னா வர சொல்றேன், செல்வி கண்டிப்பா வரமாட்டா, பிடிவாதம் பண்ணக்கூடாது” என சிரிப்போடு கண்டித்தார் அமிர்தம்.
“என்ன சம்பிரதாயமோ?” என அலுத்துக்கொண்டான்.
தேநீர் அருந்திய பின்னே சாம்பவியும் செல்வியும் கிளம்பினார்கள்.
பொற்செல்வன் குடும்பம் குலதெய்வ கோவிலில் இருக்க, செல்வனுக்கு அழைப்பு வந்தது.
‘இந்த நேரத்துக்கே வந்துருக்காரா?’ என “சரி அவரை ஃபாலோ பண்ணு. ப்ராப்லம் மாதிரி தோணுச்சுனா உடனே எனக்கு கால் பண்ணு” என்று இணைப்பை துண்டித்தவன் மனமெல்லாம் செல்வியிடம்தான்.
வீட்டிற்கு செல்ல ஒரு மணி நேரமாவது ஆகிடுமே என தவித்திருந்தான்.
அழைப்பு மணி ஒலித்ததும் செல்வி வர, கணவன்தான் என்று அறிந்துகொண்ட சாம்பவி, “நீ ரூமுக்கு போ செல்வி, நான் பார்த்துக்கிறேன்” என்று கதவை திறந்தார்.
தந்தையைப் பார்த்ததும் இருண்டு போனது செல்வியின் முகம். மகளின் முக வாட்டத்தில் வேதனையாகிட, “நான் சண்டை போட வரலை செல்விம்மா” என்றார்.
“அப்போ சமாதானம் பண்ண வந்திங்களா? அப்படி வேற நம்பிக்கை இருக்கா?”
“நம்ம குடும்ப எவ்வளோ பெருசு, யாருமில்லாம உன் கல்யாணம நடக்கக்கூடாது செல்விம்மா. இன்னைக்கு ஏதும் வேண்டாம்ன்றவங்க, ஒரு காலத்துல சொல்லிக்காட்டுவாங்க”
“முதல்ல அது நம்ம குடும்பம் இல்ல, உங்க குடும்பம். அப்படி நினைச்சதாலதான் இத்தனை வருசம் யாரும் வந்து எங்களை பார்க்கல. இவ்வளோ நாள் நினைச்சு பார்க்காதவங்களைப் பத்தி எங்களுக்கு கவலையுமில்ல.
அப்புறம் என்ன சொன்னிங்க? சொல்லி காட்டுவாங்களா? சொல்லி காட்டினா அதை நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன்” என்றாள்.
செல்வியின் முக பாவனைப் பார்த்து பயந்து போனார் சாம்பவி. அன்று மருத்துவர் அத்தனை சொல்லியிருப்பதால் தாமோதரனிற்கும் பயம்தான். ஆனாலும் மகளின் திருமணத்தில் தள்ளி நிற்க முடியாமல் போக, எப்படியாவது சமாதானம் செய்யலாம் என்று வந்திருக்கிறார்.
தலையும் வலிப்பதுபோல் இருக்கவே, “ம்மா எனக்கு தலை வலிக்குது, காஃபி போடு” என்று சோபாவில் சத்தென அமர்ந்தாள்.
மகளின் நெற்றியிலுள்ள நரம்புகள் புடைத்திருக்க, “செல்விம்மா” என செல்வியை நெருங்கினார்.
“டோன்ட் டச்…” என கத்தியவளின் கைகள் நடுங்கவே, “சரிடா சரிடா நான் தொடல” என்று பயத்தோடு பின்வாங்கினார் தாமோதரன்.
“உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன், தயவு செய்து கிளம்புங்க” என்ற சாம்பவியின் குரல், மகளின் மன உளைச்சலை நினைத்து உடைந்து போயிருந்தது.
“சாம்பவி” என்றவர் குரலிலும் நடுக்கம் தெரிய, அன்னை கரைந்திடுவாரோ என்று பெரும் பயம் உண்டானது செல்விக்கு.
“என் அம்மா பேரை சொல்லாதிங்க. சுபாஷ்னி சொல்லுங்க. அந்த பேர்தானே உங்களுக்கு இனிக்கும்” என கத்தினாள் வீடே அதிரும்படி.
அதிர்ந்து போனவருக்கு கண்ணீர் வந்துவிட, “அழறிங்களா? அந்த பொம்பளையை தப்பா பேசிட்டேனு அழ வருதா?” என மீண்டும் கத்தினாள்.
“தயவு செய்து போறிங்களா? இல்ல எங்களை சாகடிக்கப்போறிங்களா?” என சாம்பவியும் கத்த, பொற்செல்வனிடமிருந்து செல்விக்கு அழைப்பு வந்தது.
செல்வி அழைப்பை கண்டுகொள்ளாமல் இறுக்கமாக அமர்ந்திருக்க, அடுத்து சாம்பவிக்கு அழைப்பு வந்தது. “செல்வா தம்பிதான் கூப்பிடறார். பேசு செல்வி” என மகளின் கையில் திணித்தார் கைப்பேசியை.
“செல்வி…” என்ற செல்வனின் குரலில் உடைந்து போனாள் செல்வி. பெரும் குரலெடுத்து அழுதவள், “இவரை என்கிட்ட நெருங்க விடாம உங்களால பண்ண முடியாதா? என் கல்யாணத்துல இவர் இருந்தா, அதுக்கப்புறம் என்னோட உங்களால வாழ முடியாது. செத்து போய்டுவேன்” என்றாள் அழுகையோடே.
“நம்ம கல்யாணத்துக்கு அவர் வர மாட்டார், நான் பார்த்துக்கிறேன். நீ ரூம்க்கு போ செல்வி” என்றான்.
செல்வியின் அழுகை நிற்காமல் இருக்கவே, “என்னை நம்பலையா நீ? உனக்காக இதை கூட செய்யமாட்டேனா?” என செல்வனும் கோபம் போல கத்த,
“இல்லயில்ல, நீங்க செய்விங்க. நான் ரூமுக்கு போறேன். நீங்க கோவிலுக்கு போனிங்கதானே? பூஜையை பாருங்க. நான் ஏதும் பேசல” என்று மொபைலை அன்னையிடம் கொடுத்து அறைக்குள் அடைந்துகொண்டாள் செல்வி.
“ஆன்ட்டி”
“சொல்லுங்க தம்பி”
“செல்வியை பார்த்துக்கோங்க, தலை வலிக்கப்போகுது, நான் ஒன் ஹார்ல வந்துடறேன்” என்று இணைப்பை துண்டித்து தாமோதரனிற்கு அழைத்தான்.
“இப்போ கிளம்புங்க, செல்வி இல்லாத நேரம் பேசிக்கோங்க” என்றான்.
தாமோதரனிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. திருமணத்திற்கு இன்னும் ஆறே நாள்கள்தான் உள்ளது. ஏழாம்நாள் திருமணம். சொத்து கொடுப்பதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி கேட்கலாம் என்றுதான் வந்தார்.
மகளின் பாவனையில் அது முடியவே முடியாதென்று புரிந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்.
“ஹலோ… லைன்ல இருக்கிங்களா?”
“இருக்கேன்”
“நான் பேசினது கேட்டுச்சா?”
“கேட்டுச்சு, நான் ஹார்ஷா எதுவுமே பேசல” என்றார்.
தாமோதரனின் குரலே அவரின் வேதனையை சொல்ல, “செல்வி உங்களை ஏத்துப்பான்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கா?” என்றான்.
“இல்ல”
“ம்… உங்க பொண்ணுக்கு நீங்க இப்போ கொடுக்க வேண்டியது சொத்தோ, பணமோ, நீங்க அவ அப்பான்ற அங்கீகாரமோ கிடையாது. இப்போதைக்கு இதெல்லாத்தையும் விட்டுட்டு, நீங்க அவகிட்ட தோத்துட்டா சந்தோசப்படுவா. சந்தோசப்படுறது மட்டுமில்ல, செல்வியோட மன அழுத்தமும் குறைஞ்சிடும். இத்தனை வருசம் பெத்த மகளை கண்டுக்காம விட்டதுக்கு தண்டனையா இதை நீங்க ஏத்துக்கிட்டா என்னாகிடும்?” என்றான் பொறுமையாக.
டிவோர்ஸ்க்கான காரணமா என்ன சொல்ல வைப்பேனு உங்க மொபைல்க்கு அனுப்பறேன், பார்த்துட்டு முடிவு பண்ணுங்க” என்று தாமோதரன் சுபாஷினியோடு இருக்கும் புகைப்படம், சுபாஷினிக்கு வாங்கிக்கொடுத்த விலையுயர்ந்த கார் மற்றும் வீட்டின் புகைப்படம், இருவரும் வெளியூர் சுற்றுலாவிற்கு சென்ற போது எடுத்த படங்கள் என அனைத்தையும் அனுப்பி வைத்தான்.
“ம்… இன்னொரு முக்கியமான விசயம், உங்க பேரண்ட்சும், நீங்களும் செய்த டார்ச்சரை தாங்க முடியாமத்தான் சாம்பவி ஆன்ட்டி வெளில வந்ததாகவும், ஆன்ட்டி வீட்டை விட்டு போனதுக்கப்புறம் கட்டின பொண்டாட்டியை துரத்திவிட்ட வருத்தம் கொஞ்சமும் இல்லாம ரொம்ப வசதியா உங்க தனிப்பட்ட வாழ்வை வாழ்ந்ததாகவும் ஆன்ட்டியை சொல்ல வைப்பேன். செல்வியும் சொல்லுவா. உங்க மகனும் கூட உங்களுக்கு எதிராதான் அதாவது உண்மையைத்தான் சொல்லுவான்.
நீங்க சாதாரண ஆளா இருந்தா விசயம் வெளில வராம விவாகரத்து வழக்கு நடக்கும். ஆனா நீங்க வி.ஐ.பி. பத்திரிக்கை வியாபாரத்துக்காகவே உங்க சம்மதப்பட்ட விசயங்களை துருவி எடுத்துடுவாங்க. நான் சொல்ற எவிடன்ஸ்லாம் பேப்பர்ல வந்தா எப்படியிருக்கும்னு யோசிச்சு பாருங்க.
நான் உங்களை பயமுறுத்த சொல்லலை. உங்க விசயத்துல செல்வியை நினைச்சா எனக்கு பயமா இருக்குனு பகிங்கிரமா ஒத்துக்கிறேன், ஆனா செல்விக்கு ஏதாவது ஆனதுனா அதுக்கப்புறம் ஏன்டா இந்த செல்வன் பேச்சை கேட்காம விட்டோம்னு நொந்துபோய்டுவிங்க” என்றான்.
சுபாஷ்னியைப் பற்றி எப்படி இத்தனை விபரங்களை சொல்கிறான் என்று அயர்ந்து போனார் தாமோதரன். தனது பெற்றோர் இந்த வயதில் கோர்ட் ஏறுவதா என்று பயமும் வரவே, பேச்சற்றுப் போனார் தாமோதரன்.
“இன்னும் ஒன் ஹார்ல நான் வீட்டுக்கு வந்துடுவேன், செல்விகிட்ட உங்க தோல்வியை ஒத்துக்கிட்டு அவ ஸ்ட்ரெஸ்சை குறைக்கப்போறிங்களா? இல்ல என்னை ஈஸியா எடைபோட்டு ரிஸ்க் எடுக்கப்போறிங்களானு முடிவு பண்ணிக்கோங்க” என்று இணைப்பை துண்டித்தான் பொற்செல்வன்.
“உனக்கும் உன் அம்மாக்கும் துரோகம் பண்ணிட்டேன், நான் உன் கல்யாணத்துக்கு வரலை செல்விம்மா. அப்பாக்கு அந்த அருகதை இல்ல. நான் ஒத்துக்கிறேன்” என்று தழுதழுக்கும் குரலில் சொல்லி கிளம்பினார் தாமோதரன்.