Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 6.1

   அத்தியாயம் 6

ஒரு வாரமாக அலுவலக வேலைகள் எதுவும் பார்க்கவில்லை. அண்ணனிற்காக அலைந்து அவனின் பிரச்சனை என்ன என்பதை சரியாக அறிந்துகொண்டான் பொற்செல்வன்.

“சாரி செல்வா, ரொம்பவே லேட் ஆகிடுச்சு” என்றபடி உள்ளே வந்தார் வக்கில்.



Advertisement

“பரவால்லங்க சார், உக்காருங்க” என்று அவனே தண்ணீர் கொடுத்து உபசரிக்க, வக்கிலின் பார்வை இடத்தை ஆராய்ந்தது.

“சர்வண்ட் எல்லாரையும் அனுப்பிட்டேன்” என்றவன், “வைரம், தங்கம் கடத்தியிருக்கார் சார், கிட்டத்தட்ட பதினஞ்சு வருசமா” என்று நேரடியாக விசயத்திற்கு வந்தான்.

பேரதிர்ச்சியான வக்கில் “என்ன அவசியத்துக்காக இப்படி போனார்?” என்றவர், “இருக்காது செல்வா, யாராவது வேண்டாதவங்க கதை கட்டியிருப்பாங்க, நாம விசாரிப்போம்” என்றார்.

Advertisement

“எனக்கும் ஃபர்ஸ்ட் ஷாக்காதான் இருந்தது. சுந்தர் சொன்னா தப்பா இருக்காது. என் அண்ணன் கடத்தல்தான் பண்ணிட்டிருந்திருக்கார்” என உறுதியாக சொன்னவன்,

Advertisement

“கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் வேணாம்னு நினைச்சிருப்பார் போல, லாஸ்ட் ஒன் அண்ட் ஹாஃப் இயரா ஸ்மங்லிங்க்கு போறதில்ல, ஆனா அவங்க அண்ணனை விடமாட்டேங்குறாங்கனு நினைக்கிறேன், எப்படி அதுலயிருந்து வெளில வரதுனு தெரியாம முழிச்சிட்டிருக்கார்” என்றான்.

வக்கில் ஆழ்ந்த யோசனையில் இருக்கவே, “உங்களால முடியலைனா சொல்லுங்க, வேற” எனும்போதே, “முடியாதுனு இல்ல செல்வா, அவரோட பழக்கம் எந்த லெவல்வரை இருக்குனு தெரியனும். தேவாவோட முதலாளி யாருனு கண்டுபிடிக்கனும், இப்போ அந்த வேலையை செய்யிறதில்லைனு சொல்ற, ஆனாலும் தேவாவை வாட்ச் பண்ணிட்டுத்தான் இருப்பாங்க, ரொம்ப கேர்ஃபுலா பண்ணனும், அதான் யோசிச்சிட்டிருக்கேன்” என்றார்.

“எல்லாமும் நான் கண்டுபிடிச்சிட்டேன் சார்” என்று தான் திரட்டிய மற்ற நிகழ்வுகளையும், சாதக பாதகத்தையும் அரைமணி நேரம் வரை சொல்லி முடித்து, “ரொம்ப ரிஸ்க்தான் சார், ஆனா இன்னும் இரண்டொரு மாசத்துல இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தே ஆகனும்” என்றான்.

Advertisement

“ஹம்… எல்லாம் இல்லீகலா செய்தாகனும், ரொம்ப கேர்ஃபுலா செய்யனும், முடிஞ்சவரை சீக்கிரம் செய்யலாம். ஆனா லேட் ஆனாலும் வருத்தப்படக் கூடாது. முக்கியமா இனி தேவராஜ் வெளில போகாம பார்க்கனும்” என்றார் வக்கில்.

“கண்டிப்பா சார்” என்றதும் வக்கில் சந்தேகமாக பார்க்க, “அண்ணனை வீட்டுல இழுத்து பிடிக்கிறது கஷ்டம்தான் சார், ஆனா எப்படியாவது பண்ணித்தான ஆகனும்? யோசிக்கறேன்” என்றான் உறுதியோடு.

தனது யோசனைகளையும், யுக்திகளையும் சொல்லிவிட்டு வக்கில் கிளம்பியதும் மொபைலை எடுத்துப் பார்த்தான். ஜெயப்ரதாவிடமிருந்து பல அழைப்புகளும், அன்னையிடமிருந்து பத்து முறைக்கு மேலான அழைப்புகளும் வந்திருக்கவே முதலில் அன்னைக்கு அழைத்தான்.

“வீட்டுக்கு வா செல்வா” என்ற அன்னையின் குரல் விம்மலோடு வர, வீட்டிற்கு விரைந்தான் பொற்செல்வன்.

மகன் வந்ததும், “நாம மோசம் போய்ட்டோம் செல்வா” என்றார் கண்ணீரோடு.

விவாகரத்து ஆகும் வேதனையில் அண்ணி ஏதேனும் தவறான முடிவெடுத்துவிட்டாரா என்ற கவலையோடு கண்களை சுழற்றியவன், “சின்ன அண்ணி எங்கம்மா?” என்றான்.

“மாடில இருக்கா, நீ விவாகரத்து பண்ண சொன்னதுலயிருந்து அழுது வடிஞ்சிட்டிருந்தா. செல்வி போன் செய்து பேசவும்தான் கொஞ்சம் சமாதானமானா. இனி விவாகரத்து பத்தி பேசாத. அவ விவாகரத்து கேட்டாலும் சமாதானம் பண்ண முயற்சி செய்யலாம்” என்றார்.

அண்ணி ஆபத்தான முடிவேதும் எடுக்கவில்லை என்று நிம்மதியானவன், “எதுக்கும்மா அழுதுட்டே போன் செய்திங்க?” என்றான்.

“அம்மா உனக்கு கஷ்டம் கொடுத்துட்டேன் செல்வா, சாரிடா” என்றார் பெரும் வருத்தத்தோடு.

“ம்ப்ச் ம்மா, முதல்ல விசயம் என்னனு சொல்லுங்க”

“அந்த ஜெயப்ரதா பொண்ணு சரியில்ல செல்வா, அதை சொல்லத்தான் உன் அம்மாக்கு அவ்வளோ தயக்கம்” என்றார் புருஷோத்தமன்.

‘ஷப்பா… இவ்வளோதானா? அதுக்கா மோசம் போய்ட்டோம் அப்படியிப்படினு உளறுனாங்க?‘ என மனதில் நினைத்தபோதும், மீண்டும் அடுத்த பெண்ணை பார்க்க ஆரம்பிக்க கூடாதென, “என்ன?” என அதிர்ந்தான் பொய்யாக.

பொற்செல்வனின் அதிர்வு பெரும் வேதனையை உண்டாக்க, “என்னை மன்னிச்சுக்கோ செல்வா, நல்ல குடும்பம்னு நினைச்சுத்தான் சம்மந்தம் பண்ண நினைச்சேன், உனக்கு அவளை விட நல்ல பொண்ணா பார்க்குறேன்” என்றார்.

“பொண்ணு பார்த்தது மட்டுமில்லாம அவகிட்ட பேசு பேசுனு ஆசையை தூண்டி விட்டுட்டு, இப்போ டக்குனு வேற பொண்ணை எப்படி நினைக்கிறது?” என்றான்.

அமிர்தவள்ளியின் முகம் வாடிவிட, அதனை தாள முடியாமல் “அவளை மறக்க எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என்றான்.

“அந்த பொண்ணு வேற யார் கூடவோ பழகியிருக்கு” என அமிர்தவள்ளி ஆரம்பிக்க, “வேணாம்மா, எனக்கு ஏதும் தெரிய வேண்டாம், என் நல்லதுக்காகத்தான் அவளை வேண்டாம்னு சொல்றிங்க. என்னால புரிஞ்சிக்க முடியுது. நான் வருந்துவேனு கவலைப்படாதிங்க. கொஞ்ச நாள்ல சரியாகிடுவேன்” என்றான் தன்மையாக.

“சரிப்பா” என்றார்.

மாடியிலிருந்து நவீனா வரவே, “அண்ணி, என் கல்யாணம் நின்னு போனதை செல்விகிட்ட சொல்லக்கூடாது” என்றான்.

“சாம்பவி கல்யாணம் எப்போனு கேட்குமே, சாம்பவி அவங்க குடும்ப விசயம் எல்லாமும் என்கிட்ட சொல்லிடுவா, நாம மறைக்க முடியுமா? அதோட, சாம்பவிகிட்ட சொன்னா என் மனசு கொஞ்சம் ஆறுதலடையும்” என்றார் அமிர்தவள்ளி.

செல்வி வேலையை விட்டு நின்ற கோபத்தில் “அன்னைக்கு எவ்வளோ கேட்டும் ஆட் பண்ணிக்கொடுக்க மாட்டேனுட்டா, அவ அப்பா பத்தி நான் பேசக்கூடாதாம். என்கிட்ட எப்படி பேசினானு பார்த்திங்கதான? எவ்வளோ பழகினாலும் நம்மளை ஒரு லிமிட்லதான் வச்சிருக்கா. அதனால நம்ம வீட்டு விசயமும் இனி அவங்களுக்கு தெரியக்கூடாது” என்றான்.

“நடிக்கிறது தப்பில்ல. ஆனா ஆட்ல நடிச்சா உலகமே பார்க்கும், அது அவளுக்கு பிடிக்கனும்தானே? அவ சின்ன பொண்ணு செல்வா” என்று செல்விக்காக பேசினார் அமிர்தவள்ளி.

“சின்ன பொண்ணுனு இல்லம்மா, நீங்க குழந்தையா கூட நினைச்சுக்கோங்க, ஆனா என்னை அப்படி நினைக்க வைக்க நினைக்காதிங்க. என்னை மீறி அவங்களுக்கு என் கல்யாண விசயம் போனது… எவ்வளோ மோசமானவளா இருந்தாலும் பரவால்லனு அந்த ஜெயப்ரதாவை கட்டிக்கிட்டு வந்திடுவேன்” என்றான்.

“அச்சோ… அப்படி ஏதும் செய்திடாத செல்வா… அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு சரிப்படமாட்டா. நான் சாம்பவிகிட்ட சொல்லமாட்டேன்” எனப் பதறினார் அமிர்தம்.

பொற்செல்வன் நவீனாவைப் பார்க்க, “நானும் சொல்லமாட்டேன்” என்றாள்.

“ம்…” என்று தனதறைக்கு வந்தவன், ஜெயப்ரதாவிற்கு அழைத்தான்.

“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, என்னால வேற யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது, ப்ளீஸ் உங்க அம்மாகிட்ட பேசுங்க” என அழுதாள் ஜெயப்ரதா.

“அம்மாக்கு விசயம் போய்டுச்சினா என்னால ஏதும் செய்ய முடியாதுனு அன்னைக்கே சொன்னேன், எதாவது ஹெல்ப் வேணுமானும் கேட்டேன். அப்போ வேணாம்னு சொல்லிட்டு, இப்போ அழுதா?

லவ் பண்ணினோம், ஆனா லிமிட் க்ராஸ் பண்ணலனு அன்னைக்கு என்கிட்ட சொன்னிங்க. ஆனா உங்க எக்ஸ் எனக்கு போன் பண்ணி அபார்ட் பண்ணினதா சொல்றான். நீங்க அபார்ட் பண்ணினது உங்க பேரண்ட்ஸ்க்கும் தெரியுமாம். நீங்க மறைச்சது இல்லாம உங்கப்பாம்மாவும் எல்லாத்தையும் மறைச்சிருக்காங்க.

இத்தனை நடந்ததுக்கப்புறம் உங்களால எப்படிங்க எனக்கு கால் பண்ணி பேச முடியுது? நம்ம கல்யாணத்துக்கு வாய்ப்பே இல்ல. இனி போன் செய்யாதிங்க” என்று இணைப்பை துண்டித்தான்.

தேவராஜ் நினைவிலேயே உழன்றிருந்தவனுக்கு, இன்றைய செந்தமிழ்செல்வியின் வரவும், வீட்டில் அவளைப் பற்றிய பேச்சும் அவள் மீதான நினைவை அதிகப்படுத்தியிருந்தது.

அவள் நினைவிலிருந்து தன்னை விடுவிக்க முடியாத கோபத்தில் ‘வந்துட்டா, என் குடும்பத்தை காப்பாத்த’ என கடுப்பாக நினைத்தவனுக்கு கூடவே செல்வியின் முந்தைய சிரித்த முகமும் நினைவு வந்தது.

செல்வி என்றால் சுறுசுறுப்பு என்று அலுவலகத்தில் பெயரெடுத்தவள். ஒரு நாளும் வேலையை கிடப்பில் போட்டதில்லை. பணியாள் என்றில்லாமல் தனது கம்பெனிபோல் உழைப்பாள்.

அலுவலகத்தை அலங்காரமாக வைத்திருப்பாள். மெனக்கெடுகிறாளே என இதெல்லாம் தேவையில்லை என்று சொன்னால், பகல் ஃபுல்லா இங்கதான் இருக்கோம், இப்படி இருந்தாதான் பாஸிட்டிவ் ஃபீல் கிடைக்கும்’ என்பாள்.

ஸ்ட்ரஸ் பஸ்டரை இழந்துவிட்ட உணர்வு வர, தனது காதலை வேறு விதமாக உணர்த்தியிருக்கலாம் என்று நினைத்தான். ஆனாலும் என்னை பிடிக்கும்தானே அவளுக்கு? தொழில் விசயமாக வெளியூர் சென்று வந்தால் பத்து நாள் காணாமல் இருந்ததற்கே பல மாதங்கள் காணாதிருந்ததை போல ஆர்பரிப்பாள் தானே?

ஆசை மீறும் நேரம் சற்றே உரிமை எடுத்துக்கொண்டேன். சிறு மீறலை மன்னித்து என்னை ஏற்றுக்கொண்டால்தான் என்ன? என்று ஏங்கியது பொற்செல்வன் மனம்.

ஒருவாரமாக அண்ணனால் உண்டான மன உளைச்சலை விட, செந்தமிழ்செல்வியின் நினைவும் படுத்த, கோபமாக, ஏக்கமாக என்று அவளையே நினைத்தபடி உறங்கிப்போனான்.

இரண்டு மணி நேரத்திற்கு மொபைல் அழைக்கவே எழுந்து பேசியவன், அவசரமாக கிளம்பினான் தேவராஜை காண.

*** *** *** *** ***

தனது விசயம் வீட்டிற்கு தெரியும் முன்னவே இந்த தொழிலிருந்து விடுபட வேண்டும் என்றுதான் கடந்த இரண்டு வருடங்களாக போராடினான் தேவராஜ்.  தனது குடும்பத்தைப் பற்றி விசாரித்தால் என்ன ஆகும் என்று பயம் வந்தது.

இப்படி தொழில் செய்துவிட்டு, விலகுகிறேன் என்று சொன்னால் தன்னை கொல்லக்கூட தயங்கமாட்டார்கள் என்று அறிந்ததால்தான் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்தான்.

இப்படிபட்ட நேரத்தில் தேவையில்லாம் தனது விசயத்தில் பொற்செல்வன் தலையிட்டது கோபத்தை உண்டாக்கியதோடு, பின் விளைவு தெரியாமல் உரசிவிட்டானே என்ற பயமும் வர, பொற்செல்வனை காண அலுவலகம் வந்துகொண்டிருந்தான்.

இதை அறிந்த பொற்செல்வன், ராகுலுக்கு அழைத்து அண்ணன் அலுவலகம் வந்துகொண்டிருக்கிறார் என்று ஓரிடத்தை சொல்லி, அண்ணனிற்கு தெரியாத நபரை அனுப்பி அவரை அங்கு அழைத்து வர சொல்லியும், கை கால் கண்களை கட்டி வைக்கச் சொல்லி அவ்விடம் நோக்கி பயணித்தான் பொற்செல்வன்.

பொற்செல்வன் கார் சத்தம் கேட்டதும் அந்த பழைய பங்களாவிலிருந்து வெளியே வந்தான் ராகுல்.

“கட்டி வச்சிருக்கிங்களா?” என்றான் பொற்செல்வன்.

“கட்டித்தான் வச்சிருக்கோம், திட்டிக்கிட்டே இருக்கார் சார், அவர் திட்டுறது பிரச்சனையில்ல, பக்கத்துல யாருக்காவது கேட்டு விசாரிக்க வந்தா பிரச்சனை ஆகிடும்”

“எதாவது சொல்லி அவர் பேசுறதை நிறுத்து. நாமதான் கடத்தினோம்னு தெரியாதுதான? உன் முகத்தை அண்ணன் பார்க்கலதான?”

“பார்க்கல சார். அவரை உள்ள கூட்டிட்டுப்போய் கண்ணையும் கட்டின பின்னாடிதான் நான் உள்ள போனேன்”

“என்னனு கத்தினார்? கூட இருந்தவனுங்களுக்கு எதாவது தெரிஞ்சிடப்போகுது”

“தோட்டத்து வீட்டுக்கு வர வழியிலதான் கண்ணைக் கட்டினோம், கண்ணைக் கட்டின கொஞ்ச நேரத்துக்குள்ளயே இங்க கூட்டிட்டு வரவும், கண்டிப்பா இது அவங்களோட இடமாத்தான் இருக்கும்னு கண்டுபிடிச்சிட்டார் போல.

முட்டாள்களா… யார்டா நீங்க? இந்த இடத்தை சுத்தி இருநூறு ஏக்கருக்கு எங்க இடம்தான், என் தம்பிக்கு தெரிஞ்சது உரு தெரியாம ஆக்கிடுவானு கத்தினார்” என்றவன், சற்றுத் தயங்கி, “அவர் செய்யிற தொழில் பத்தி வேற எதாவது எல்லார் முன்னாடியும் உளறிடுவாரோனு வாயையும் அடைச்சிட்டோம் சார்” என்றான் ராகுல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!