Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Aathiyum Anthamumaai

ஆதியும் அந்தமும் 2(1)

ரிஷிக்கு கார்த்திக் கால் பண்றாங்க.

சொல்லுங்க கார்த்திக்.

அந்தப் பக்கம் என்ன சொன்னாங்கன்னு தெரியல, அதுக்கு ரிஷி இப்ப நீங்க எந்த இடத்துல இருக்கீங்க.

……………..



Advertisement

அந்த இடத்திலேயே வெயிட் பண்ணுங்க இப்ப வந்தர்றேன். ஸ்டேஷன்ல இருந்து கான்ஸ்டபிள் மூன்று பேரையும் ஸ்பாட்டுக்கு வர சொல்லுங்க.

……………….

ஓகே கார்த்திக் இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்.

Advertisement

ஓகே பா, எனக்கு முக்கியமான வேலை இருக்கு இப்ப போகணும்.

Advertisement

ரிஷி அங்கிருந்த எல்லார்கிட்டயும் சொல்லிட்டு, மருதமுத்துவை அழைச்சிட்டு ஸ்பாட்டுக்கு போறாங்க.

என்ன ஆச்சு சார் என மருதமுத்து கேட்கிறார்.

மருதமலை போற வழியில காலேஜ் ஸ்டுடென்ட் மூணு பேரு ஆக்சிடெண்ட் பண்ணிட்டாங்க, ஸ்பாட்டிலேயே ஒரு ஆள் இறந்துட்டாங்க இன்னும் ரெண்டு பேர் சீரியஸா இருக்காங்க. அவங்களை கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க.

Advertisement

ஆனா சார், அதுக்கு தான் கார்த்திக் சார் அங்கே இருக்காரே நீங்களும் போகணுமா.

இப்போ பிரச்சனை ஆக்சிடெண்ட் மட்டுமில்ல மருது, ஆக்சிடென்ட் பண்ண மூணு பேருமே போதையில் இருக்காங்க. அதுவும் மதுபோதை இல்ல, ஏதோ போதை மருந்து வகையை சேர்ந்தது என்று கார்த்திக் சந்தேகப்படுகிறார்.

[the_ad id=”6605″]

அதற்குத்தான் என்னையும் நேர்ல வர சொல்லி இருக்காரு.

இனிய இல்லம், கதவை திறந்து உள்ளே போனால் பெரிய வாசல், ரெண்டு பக்கம் திண்ணை, முற்றம், என்று பழமை மாறாமல் இருந்தாலும் தேவைக்கேற்ற நவீன வசதிகளும் உண்டு.

செல்வநாயகி, இவங்க தான் இந்த வீட்டோட தலைவி 70 வயது ஆகுது. கணவர் முருகவேல் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. முகத்தில் பொலிவு குறைந்தாலும், கம்பீரமான பெண்மணி. முருகவேல் அந்தக் காலத்திலேயே டிகிரி முடிச்சிட்டு, விவசாயம் பார்த்துட்டு இருந்தாங்க.

இவங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க மூத்தவர் ரத்னவேல் அப்பாவுக்கு உதவியா விவசாயத்தில் இறங்கிவிட்டார், மனைவி விசாலாட்சி சாமி பக்தி ரொம்ப அதிகம். இவங்களுக்கு ஒரே மகன் சாய்சரண், 27 வயது M.A ஜர்னலிசம் முடிச்சுட்டு தின செய்தி பத்திரிகையில் இன்வெஸ்டிகேஷன் ஜேர்ணலிஸ்ட் வேலை செய்றாங்க.

இளையவர் சரவணவேல் சிஏ படித்து முடித்துவிட்டு ஆடிட்டரா இருக்காங்க. இவரோட மனைவி பானுமதி இல்லத்தரசி. இவங்க காதலுக்கு சாட்சியாக ரெண்டு குழந்தைங்க மூத்தவ ரிது, 23வயது இங்கிலீஷ் டீச்சர். இளையவன் சாய் கிஷோர் பிகாம் முதல் வருடம். எல்லாரும் கூட்டுக் குடும்பமா ஒரே வீட்ல இருக்காங்க.

செல்வநாயகி திண்ணையில் உட்கார்ந்து வெத்தல போட்டுட்டு இருக்காங்க, அப்ப வாசல் கதவு திறக்கிற சத்தம் கேட்டு நிமிர்ந்து பாக்குறாங்க. ரித்து தான், வேர்த்து விறுவிறுக்க உள்ள வந்து கதவ சாத்திட்டு வெளியே எட்டிப் பார்க்கிறா, அங்க ஒன்னும் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நிம்மதியா மூச்சு விடுறா.

திண்ணையில இருந்து ஆச்சி இவளையே குறுகுறுனு பாக்குறாங்க. ஆஹா, நாய் துரத்தியத சொன்னா ஆச்சி நம்ம இமேஜை டேமேஜ் பண்ணுமே. சரி ஏதாவது சொல்லி சமாளிப்போம். என்னாச்சு கண்ணு இப்படி மூச்சு வாங்க ஓடிவர்ற. அதெல்லாம் ஒன்னுமில்லை ஆச்சி ஓடி வந்தா எவ்வளவு சீக்கிரம் வரேன்னு பார்த்தேன். ஆட்சி அவளை நம்பாமல் சந்தேகமா பாக்குறாங்க.

வீட்டுக் குள்ளிருந்து பொய்சொல்லாதடி அப்படின்னு சொல்லிட்டு கிஷோர் வரான். டேய் நான் பொய் சொன்னதை நீ பார்த்தியா, டீ போட்டு கூப்பிடாதே. சரி கூப்பிடல ஆனா என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லட்டுமா. என்ன நடந்துச்சு, அதெல்லாம் ஒன்னும் நடக்கல சும்மா நீயே ஏதாவது சொல்லாதே.

அக்கா இப்பதான் என் பிரண்டு ரவி போன் பண்ணுனான். அதுக்குள்ளே இவங்க ரெண்டு பேரு சத்தம் கேட்டு வீட்டில் இருந்த எல்லாரும் வெளியே வந்துட்டாங்க. பானுமதி திட்ட ஆரம்பிக்கிறாங்க, காலையில உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா எப்ப பார்த்தாலும் சண்டை போடுறதே வேலை. கிஷோர், அம்மா நாங்க ஒன்னும் சண்டை போடவில்லை. அப்புறம் என்னடான்னு கேட்குறாங்க விசாலாட்சி.

[the_ad id=”6605″]

அக்கா தினமும் பால் வாங்க போற வழியில் உள்ள,வீட்ல நாய் ஒன்னு கட்டி வச்சுருக்காங்க இவ போறப்ப எல்லாம் அது குறைச்சுட்டு இருந்திருக்கு, இவளும் பதிலுக்கு குறைக்கிற மாதிரியும் கல்ல தூக்கி எறிகிற மாதிரியும் அத டென்ஷன் பண்ணியிருக்கா .

இன்னிக்கின்னு பார்த்து அதை அவுத்து விட்டு இருக்காங்க, அது தெரியாம இவ தினமும் போல இன்னிக்கும் அதே மாதிரி பண்ணியிருக்கா அது டென்ஷனாகி துரத்திட்டு வந்திருச்சு. இவளும் பயந்து போய் விழுந்து எந்திரிச்சு ஓடி வந்து இருக்கா.  சொல்லி முடித்துவிட்டு கிஷோர் ரித்துவப் பார்த்து நாக்கை துருத்தி காட்டுறான். ரீத்து பாவமா மூஞ்சிய வெச்சிட்டு எல்லார்த்தையும் பார்க்கிறா.

எல்லாரும் சிரிப்ப அடக்க கஷ்டப்பட்டு நிக்கிறாங்க. பெரியம்மா நீங்க கூட சிரிக்கிறீங்க, அப்படின்னு அழுகிற மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு சொல்றா. கிஷோர் இதை பார்த்து உலக மகா நடிப்புடா சாமி அப்படின்னு மனசுக்குள்ள நினைக்கிறான். அதெல்லாம் ஒன்னும் இல்லடா கண்ணா உனக்கு அடி ஏதாவது பட்டுவிட்டதா என அவளோட தலைய பாசம் தடவிவிட்டு விசாலாட்சி கேக்குறாங்க.  இல்ல பெரியம்மா அடி எல்லாம் எதுவும் படல. இனிமேலாவது உன்னோட வால் தனத்த கொஞ்சம் குறைன்னு,பானுமா சொல்றாங்க.

அப்பதான் வாக்கிங் போயிட்டு வந்த ரத்தினவேலும், சரவணவேலும் என்ன காலையிலேயே மாநாடு என கேட்கிறாங்க. ஆச்சி நடந்ததையெல்லாம் சொன்னவுடனே, ரத்னவேல் ரிது கிட்ட பாப்பு இனிமேல் நீ பால் வாங்க வேண்டாம், கிஷோர்  வாங்கிட்டு வந்துருவான். இதைக் கேட்ட உடனேயும் கிஷோர் ஷாக் ஆயிட்டான்.

ரிது, கிஷோர் கிட்டவந்து இதுதான் தவளை தன் வாயால் கெடும் அப்டின்னு சொல்லிட்டு நக்கலா சிரிக்கிறா. கிஷோர் அவளை முறைத்துவிட்டு, என்னடா கிஷோர் இது உனக்கு வந்த சோதனை இனி காலையில நேரத்திலேயே எந்திரிக்கணும் என்று தனக்குள் பேசுகிறான்.

பானுமா சமையல் அறையிலிருந்து குரல் கொடுக்கிறாங்க, ரித்து ஸ்கூலுக்கு டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்பி வா. எட்டறை மணிக்கு எல்லாரும் சாப்பிட வந்துட்டாங்க. விசாலமும் பானுமதியும் எல்லார்த்க்கும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு அவங்களும் சாப்பிடறாங்க இது அந்த வீட்டோட வழக்கம். முடிந்த அளவு எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து தான் சாப்பிடுவாங்க.

வெளியில ஹாரன் சத்தம் கேட்கவும் ரிது எல்லார்கிட்டயும் பாய் சொல்லிட்டு கிளம்புறா. பார்த்துப் போக்கா அப்படின்னு கிஷோர் சொன்னவுடனேயே பெரியவங்க எல்லாரும் அவனைப் பார்த்து சிரிக்கிறாங்க. ரிது சரிடான்னு சொல்லிட்டு கிளம்பிட்டா. என்னதான் அக்காவும் தம்பியும் சண்டை போட்டாலும் ரெண்டு பேருக்கும் பாசம் அதிகம்.

நிலா, ரித்து இரண்டு பேரும் வண்டி வைத்து இருந்தாலும், ஒரே வண்டியில் தான் போவாங்க.

மருதமலை ரோடு ஆக்ஸிடெண்ட் ஆன இடத்துல கூட்டம் கூடிடுச்சு, ரிஷியை பார்த்தவுடனே எல்லாரும் விலகி வழி விட்டாங்க. கார்த்திக் ரிஷி கிட்ட ஒரு கார்டை கொடுத்து இந்த கார்டு அந்த பசங்க கார்ல இருந்து கிடைத்தது, வேற எந்த முக்கியமான பொருளும் கிடைக்கல சார். அது கிரேசி குயின் நைட்கிளப் ஓட மெம்பர்ஷிப் கார்டு.

ஸ்டுடென்ட்ஸ் யாரு, என்ன எல்லா டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க. எல்லாருமே பெரிய இடத்து பசங்க, அவங்க வந்த காரில் ஏர்பேக் இருந்ததுனால அடி பலமா எதுவும் படல, டிரக்ஸ் எடுத்துக் கொண்ட காரணத்தினால் அவங்களுக்கு மயக்கம் தெளியல அதனால ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம் சார். அவங்க அப்பா அம்மாக்கு ஏற்கனவே சொல்லியாச்சு சார் அவங்க எல்லாம் நேரா ஹாஸ்பிடல் வரசொல்லிட்டேன்.

[the_ad id=”6605″]

சூப்பர் கார்த்திக், அப்படின்னு கார்த்திக் முதுகுல தட்டி கொடுக்கிறான். கிளப்புக்கு நைட்டு மஃப்டியில் போய் என்னன்னு பாக்கலாம், இப்ப முதல்ல ஹாஸ்பிடல் போயிட்டு அங்க ஏதாவது க்ளூ கிடைக்குமான்னு பார்க்கலாம்…

தன்னுடைய ஸ்கூட்டியை தினசெய்தி அலுவலகம் முன்னாடி நிறுத்திட்டு அந்த கட்டடத்தை நிமிர்ந்து பார்த்தவுடனே முகத்துலஒரு பெருமை….. அதற்கு காரணம் இந்த அலுவலகத்தில் அவ வேலைக்கு சேர்ந்து இதோட ஒரு வருஷம் ஆயிடுச்சு. இந்தப் பத்திரிகையில் வேலை செய்யணும் அப்படிங்கறது அவளோட பல வருட கனவு அது நிறைவேறி ஒரு வருடம் ஆனத அவளால நம்பவே முடியல.

அவ கீர்த்தி,  இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்ட்.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!