Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Aathiyum Anthamumaai

ஆதியும் அந்தமும் 2(2)

கீர்த்தி வண்டிய நிறுத்திட்டு தினசெய்தி அலுவலகத்திற்கு உள்ள போறப்பவே, ரிஷப்ஷனில் இருந்த திவ்யா வீட்டுக்கு போறதுக்கு கிளம்பிட்டா. கீர்த்தி போய் அங்க இருக்கிற டேபிள்ல தாளம் போட்டுட்டே, ஹேய் திவி கிளம்பியாச்சான்னு கேட்கிறா. ஆமா நான் கிளம்பிட்டேன், பாப்பா வேற ஸ்கூல்ல இருந்து வந்து இருப்பா. அப்படின்னு சொன்ன உடனே, கீர்த்தி தன் தலையில தட்டிட்டே மறந்தே போயிட்டேன்னு சொல்லி தன்னோட பேக்ல இருந்து, ஒரு பார்சலை எடுத்து திவிக்கிட்ட கொடுத்து இதைக் கொண்டு போய் பாப்பாவுக்கு கொடுக்க சொல்றா.

ஏய் என்னடி ஒன்னு டேபில தட்டற இல்ல தலையை தட்டற, ஆமா இது என்ன பார்சல் இத எதுக்கு என்கிட்ட கொடுக்கிற. ஹலோ மேடம் இது எனக்கும் சஹி பேபிக்கும் நடுவுல இருக்க டீல், நான் கொடுத்தா நீ கொண்டுப் போய் கரெக்ட்டா டெலிவரி பண்ணிடு, இல்லைன்னா நான் க்ராஸ் செக் பண்றப்ப நீ மாட்டிப்ப. திவி அவளைப் பார்த்து, இப்ப என்ன பார்சலை கொண்டுப் போய் சஹானா கிட்டகொடுக்கணும் அவ்வளவுதான அதுக்கு ஏண்டி என்ன டெலிவரி கேர்ள் ஆக்குறன்னு கேட்டுட்டே பார்சலை வாங்குறா.

இத பத்திரமா கொண்டு போய் டெலிவரி பண்ணிட்டேனா உனக்கு டெலிவரி குயின்அப்படிங்கிற கௌரவப் பட்டத்தை கொடுக்கலாம்னு இருக்கேன். உன்னால கௌரவப் பட்டத்துக்கு உள்ள மதிப்பே போயிடுச்சு, சரி நான் கிளம்புறேன். ஆமா என்னால தான் கௌரவப் பட்டத்தோட மதிப்பு குறைஞ்சிடுச்சு.

என்ன இவ நாம சொன்னா உடனே ஒத்துக்கிட்டான்னு திவி கீர்த்தியை சந்தேகமா பார்க்கிறா. என்ன லுக்கு, உனக்கு போய் கௌரவப் பட்டம் கொடுத்தா அது கௌரவப் பட்டத்திற்கே கௌரவக் குறைச்சல் என சொல்லிவிட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டா. கொஞ்ச நேரம் திவிக்கு இவ என்ன சொன்னான்னு புரியல, புரிஞ்ச உடனே அவ முதுகுல ரெண்டு அடி போட்டுட்டு போடி அரட்டை உன்கூட பேசிட்டு இருந்தா நேரம் போறதே தெரியல எனக்கு டைம் ஆயிடுச்சு, நீ வந்த உடனே உன்னை எடிட்டர் சார் வரச்சொல்லி சொன்னாரு. இதோ போறேன், என்னப் பார்சல்ன்னு கேட்காமலே போற.



Advertisement

[the_ad id=”6605″]

கேட்டா மட்டும் சொல்லுவியா என்ன, பார்சல் ஓபன் பண்ணினாஅதுல என்ன இருக்குன்னு தெரியப்போகுது. நாளைக்கு பாக்கலாம்ன்னு சொல்லிட்டு திவி கிளம்பினதுக்கு அப்புறம் கீர்த்தி எடிட்டர் ரூமுக்கு போறா.

கதவை தட்டிட்டு உள்ள போய் சார் கூப்பிட்டீங்களான்னு கேட்கிறா. ஆமாம்மா கூப்பிட்டேன், லேட்டா வந்தது மட்டுமில்லாம ரிஷப்ஷனில் என்ன அரட்டைன்னு கோவமா கேட்டுட்டே அவர் மீசையை முறுக்கிறார். இவருவேற ஆனா ஊனா மீசைய முறுக்கி காமெடி பண்றாருன்னு நினைக்கிறா, கரெக்டா அந்த டைம்லமீசைக்கார நண்பா உனக்கு ரோசம்அதிகம்டான்னுபாட்டுக் கேக்குது.

Advertisement

அத கேட்ட உடனேயே கீர்த்தி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு யார் அது டைமிங்ல கவுண்டர் கொடுக்கிறான்னு பார்க்கிறா, ஆனா அங்கே யாருமே இல்லை. எடிட்டரை பாக்குறா அவரு இவளையே உறுத்து விழிக்கிறார். இவரு எதுக்கு நம்மளை முறைக்கிறார்ன்னு யோசிச்சிட்டே பார்த்தா அந்த சவுண்டு அவளோட போன்ல இருந்து தான் வருது. போனை எடுத்து கட்பண்ணிட்டே எப்படி எடிட்டர் சாரை சமாளிக்கிறது என்று யோசிக்கிறா.

Advertisement

திருட்டு முழி முழிச்சுட்டு, சாரி சார் இத நான் பண்ணல யாரோ எனக்கு வேண்டாதவங்க தான் இப்படி பண்ணிட்டாங்க சார். அதான் உன்னுடைய முழியப் பார்த்தாலே தெரியுது யார் பண்ணி இருப்பாங்கன்னு. சார் உண்மையா தான் இத நான் பண்ணல. சரிமா கீர்த்தி அதை அப்புறம் பாக்கலாம், இந்தான்னு சொல்லி ஒரு ஃபைல் எடுத்து அவகிட்ட கொடுக்கிறார்.

அவ புரியாம பார்க்கவும், அதுல என்ன இருக்கு அப்படிங்கறது அவரே விளக்குறார். இதுல தான் உன்னோட அடுத்த டாப்பிக்குக் காண டீடைல்ஸ் எல்லாம் இருக்கு இதவச்சு பர்தரா இன்வெஸ்டிகட் பண்ணனும். பார்த்துமா, இது சிக்கலான டாப்பிக் கொஞ்சம் கவனமாயிரு. உன் கூட சரணும் ஜாயின் பண்ணிக்குவாரு. ஓகே சார் அப்ப நாங்க அடுத்த வாரம் ரிப்போர்ட்ட சம்மிட் பண்றோம்.

கீர்த்தி அதுல என்ன இருக்குன்னு பார்த்துட்டு, சரணுக்கு கூப்பிடறா.

Advertisement

ஹலோ சொல்லு கீர்த்தி, அண்ணா எங்க இருக்கீங்க?

ஒரு நியூஸ் விஷயமா வெளிய வந்து இருக்கேன்டா. ஆபீஸ் பக்கத்துல வந்துட்டேன் இன்னொரு பத்து நிமிஷத்துல வந்துருவேன்.

புதுசா ஒரு டாப்பிக் கொடுத்திருக்காங்க அதை பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா.

ம்ம்..தெரியும்மா இன்னைக்கு காலைல தான் எடிட்டர் சார் சொன்னார்.

[the_ad id=”6605″]

எவ்வளோ பெரிய டாப்பிக்க்க்க்க்..

பஞ்சதந்திரம் படத்துல எவ்வளோ பெரிய மாத்திரை ன்னு தேவயானி சொல்ற மாதிரி சொல்ற.

ஹா ஹா ஹா… அப்படியா இருக்கு, அதெல்லாம் தானா வருது. நிஜமாவே அண்ணா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எவ்வளவு முக்கியமான டாப்பிக்கை நம்மள நம்பி கொடுத்திருக்காங்க. ஓகே அண்ணா, நாம நேர்ல பேசலாம்ன்னு சொல்லிட்டு போனை வைத்து விட்டாள்.

அவங்களுக்கு கொடுத்திருக்கிற டாப்பிக் சிட்டில யாரெல்லாம் போதை மருந்து விற்பனை செய்கிறார்கள், அதனால என்னென்ன பிரச்சனை எல்லாம் வருது அப்படிங்கிறத கண்டுபிடிக்கணும், கூடவே அதற்கான தீர்வுகளையும் அலசி ஆராய்ந்து அறிக்கை தயார் பண்ணனும்.

கொடுத்திருக்கிற ஃபைலை திரும்பியும் பார்க்கிறா, போதை மருந்து விற்பனை செய்ய வாய்ப்புள்ள இடங்கள் என்று போட்டு இரண்டு மூன்று இடங்களை சொல்லி இருக்காங்க, அடுத்த லைனை படித்த உடனேஅவ முகமே பளிச்சுன்னு இருக்கு.

அப்பதான் உள்ள வந்த சரண், என்னாச்சு கீர்த்தி ரொம்ப சந்தோஷமா இருக்க, அதில் அப்படி என்ன போட்டிருக்கு.

…………………………….

கோவை கவர்மெண்ட் ஹாஸ்பிடல், போலீஸ் கேஸ் அப்படிங்கிறதனால டைரக்டா கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆக்ஸிடெண்ட்ல இறந்த அவங்களோட உறவினர்கள் எல்லாம் வந்து போராட்டம் பண்றாங்க அந்த பசங்கள கைது செய்யச் சொல்லி.

ரிஷியும் கார்த்திக்கும் வந்தவுடனே அங்கிருக்கிற டாக்டர போய் பாக்குறாங்க. சீரியஸா இருந்த ரெண்டு பேர்ல ஒரு லேடியும் இறந்துட்டாங்க என்று டாக்டர் சொல்றாரு.

ரிஷி டாக்டர்கிட்ட கேட்கிறான்“ அந்த பொண்ணோடகண்டிஷன் இப்ப எப்படி இருக்கு டாக்டர் இப்ப நார்மல்கண்டிஷனுக்குவந்துட்டாங்களா”.

[the_ad id=”6605″]

இப்ப தான் அவங்களுக்கு தலைல ஒரு ஆபரேஷன் பண்ணி ஐசியுல இருக்காங்க, அவங்களுக்கு நினைவு திரும்ப இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும். மத்தபடி உடம்புல வேற எந்த காயங்களும் இல்லை.

ஓகே டாக்டர், மத்த ரெண்டு பேர் பாடியையும் போஸ்ட்மாட்டம் பண்ணிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரிப்போர்ட் ரெடி பண்ணி கொடுக்கச் சொல்லிட்டு ரெண்டு பெரும் வெளிய வராங்க.

அவர் கிட்ட பேசி முடிச்சுட்டு வெளிய வந்த உடனே, இறந்தவங்களோட உறவினர்கள் எல்லாம் இவங்கள வந்து சூழ்ந்து நின்னு சத்தம் போடறாங்க.

ரிஷி கையைத் தூக்கி எல்லாரையும் அமைதியா இருக்க சொல்லிட்டு பேச ஆரம்பிக்கிறான்.

உங்களுடைய இழப்பு எவ்வளவு பெரியது என்று எனக்கும் தெரியும், ஆனா இது போராட்டம் பண்றதுக்கான இடமில்லை. இங்க நூற்றுக்கணக்கான நோயாளிகள் இருக்காங்க, நாம போராட்டம் பண்றதனால அவங்களுக்கும் தொந்தரவா இருக்கும்.

எல்லாரும் அமைதியா இருங்க உங்களுக்கான நியாயம் கண்டிப்பா கிடைக்கும் அதுக்கு நான் பொறுப்பு.

அப்ப அந்தப் பசங்கள கைது பண்ணுங்க சார், கூட்டத்திலிருந்து ஒருத்தர் குரல் கொடுக்கிறார். பணத்தை வாங்கிட்டு நீங்க பாட்டுக்கு அவங்கள விட்டுட்டீங்கனா எங்களுக்கான நியாயம் கிடைக்காமலே போயிடும் சார்.

இதைக் கேட்ட உடனேயும் கார்த்திக்கு கோபம் வந்து ஏதோ சொல்லப்போக, அதுக்குள்ள ரிஷி அவனை அமைதியா இருக்கச் சொல்லிட்டு. அந்தப் பசங்க இன்னும் மயக்கத்திலிருந்து வெளி வரல, அவங்களுக்கு நினைவு வந்த உடனே கண்டிப்பா நான் ஆக்சன் எடுப்பேன் என்று வாக்குக் கொடுத்ததுக்கு அப்புறம் அங்க இருக்கறவங்க எல்லாம் அமைதி ஆயிட்டாங்க.

அதுக்குள்ள ஹாஸ்பிட்டல்ல இருந்த நர்ஸ் வந்து, மயக்கமாய் இருந்த அபிநவ் என்ற பையனுக்கு நினைவு திரும்பிடிச்சுன்னு சொல்றாங்க.

ரிஷியும் கார்த்திக்கும் அந்தப் பையனை பார்க்கப் போறாங்க……

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!