Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 10.2

“ஒரே நிமிஷம் இரு” இரண்டு மொன்று படிகளாக தாவி எறியவன் அடுத்த இரண்டு நிமிடத்தில் ஒரு முழு கை ஆலிவ் கிறீன் டீ-ஷர்ட் ஒன்று அணிந்து வந்து வீட்டின் வாசலை திறந்தான்.

வெளியில் வந்ததும், “ஷ் வண்டி சாவி மறந்துட்டேன்” மீண்டும் வீட்டிற்குள் அவன் சென்றதும் அவன் இரு சக்கர வாகனத்திலா என்ற சோர்வு பைரவிக்கு.

வாசல் தாண்டி இறங்கி தனக்கே ஆயிரம் அறிவுரை கூறி நின்ற சமயம் அவள் முன்னாள் நின்ற தேவாவின் தந்தை சார் கீங் கீங் என்ற சத்தத்தோடு ஒளிக்க, பின்னால் வந்து நின்ற கணவனை நன்றியோடு பார்த்தது அவள் விழிகள்.

அவளது தயக்கம் அறிந்து தான் அவன் கார் சாவியை எடுத்தது. “நீ வண்டில ஏறு நான் தண்ணி கொஞ்சம் எடுத்துட்டு வர்றேன்” தண்ணீர் எடுத்து வந்த பொழுது முன் சீட்டில் அமர்ந்திருந்தாள் அவனை எதிர் பார்த்து.



Advertisement

பாட்டிலை அவளிடம் கொடுத்து வாகனத்தை சாலையில் செலுத்த எங்கு அழைத்து செல்வான் என்ற ஒரு ஆவல் அவளிடம் உதித்தது. இருவது நிமிட பயணத்திற்கு பிறகு தெப்பக்குளம் இருந்த இடத்திற்கு வர, இரவு பன்னிரெண்டை நெருங்கியிருந்த சமயமும் ஜெகஜோதியாக மின்னியது தூங்காநகரம்.

“இங்க எதுவும் திருவிழாவா?” – பைரவி

“இங்க எப்பயும் இப்டி தான் கோலாகலாமா கூட்டம் திருவிழா மாதிரி இருந்துட்டே தான் இருக்கும். தைரியமா லேடீஸ் கூட இந்நேரம் இருப்பாங்க” வாகனம் அதிகமில்லாத ஒரு கடை முன்பு காரை நிறுத்தி இறங்க அவளும் இறங்கி வந்தாள் அவன் அருகில்.

Advertisement

ரோட்டை தாண்டி சென்று தெப்பக்குளத்தை திட்டில் தேவா அமர, தண்ணீர் நிரம்பி வழிந்த அந்த குளத்தின் குளுமை அவ்விடமெங்கும் காற்றில் பரப்பிக்கொண்டிருந்தது. துப்பட்டாவை தோளோடு போட்டு அவன் அருகில் அமர்ந்தவள் இரவின் ஒளியில் மின்னிய குளத்தை மெல்லிய புன்னகையோடு ரசிக்க, அவளை ரசிக்கும் வேலையில் தேவா இறங்கினான்.

Advertisement

“இந்த இடம் எனக்கு ரொம்ப புடிக்கும். அப்டியே திருவிழா நேரத்துல கலர் கலரா பொண்ணுங்க போக வர இருப்பாங்களா பாக்க பாக்க குஜாலா இருக்கும்… ப்ரன்ட்ஸ் கூட அதிகம் வருவேன், ஒரு தடவ என் ப்ரன்ட் ஒருத்தன வேணும்னே உள்ள தள்ளி விட்டுட்டோம், மொத்த இடமும் கூடி பெரிய பிரச்சனை ஆச்சு” அந்த நாள் நினைவில் சிரித்தான்.

“இப்பயும் காலேஜ் ப்ரன்ட்ஸ் கூட அடிக்கடி மீட்அப் வச்சுப்பிங்களா?” – பைரவி

“ரொம்ப ரேர் எல்லாரும் ஒவ்வொரு இடத்துல இருக்காங்க, கொஞ்சம் நடக்கலாமா?” – தேவா

Advertisement

அவன் கேட்கவும் தன்னால் அவள் எழுந்திட கடைகள் சூழ்ந்திருந்த ஒரு தெருவை நோக்கி நடந்தான். சில கடைகளை வீதிகளை கடக்கும் பொழுது அங்கு அவனுக்கு நேர்ந்த சில நினைவுகளை பகிர்ந்து கொள்வான்.

அவளும் அமைதியாக கேட்டுக்கொண்டே வர ஒரு கடையின் முன்பு நின்று, “இங்க பட்டர் பன் ரொம்ப நல்லா இருக்கும்” கடைக்காரரும் அவனும் மிகவும் சகஜமாக பேச அவனுக்கு இந்த கடை எவ்வளவு பரிட்சயமானதென புரிந்துகொண்டாள்.

சுட சுட வெண்ணை வழிந்தோட பாலில் சக்கரை கரைந்து தன் கைக்கு வந்த அந்த பட்டர் பன்னை பார்த்ததுமே எவருக்கானாலும் எச்சில் ஊறுவது உறுதி.

காரத்தை விட இனிப்பை விரும்பும் பைரவிக்கு சொல்லவே தேவையில்லை, சற்று முன்னர் தான் உன்னடாது கூட மறந்து போய் ஆர்வமாய் ருசிக்க துவங்க, பஞ்சு போல் ஒரு முழு பன் உள்ளே சென்றதற்கான தடயமே இல்லாமல் போனது.

அவள் உண்பதை பார்த்து தன்னுடையதை அவளிடம் வைத்து தனக்கு வேறு ஒன்றை சொல்லிக்கொண்டான்.

அதன் பிறகு வேறொரு கடைக்கு சென்று டீயை குடித்து முடிக்க, பைரவிக்கு கொஞ்சம் இருந்த உறக்கமும் காணாமல் போனது.

அந்த இரவு புதிய ஏகாந்தத்தை தந்தது அவளுள், இத்தனை நாட்கள் வீட்டினுள் அடைபட்டு சுவரை தாண்டி வேறு உலகம் இல்லையென தன்னையே முட்டாளாக்கி எண்ணியிருந்தவளுள் சிறு மாற்றம் என்னும் வேரினை உதிக்க செய்திருந்தான் தேவானந்த்.

அவன் செல்லும் இடங்கள் எல்லாம் செல்லும் அவள் கால்களும், அவன் வார்த்தைகள் ஏதோ மாயம் செய்து கட்டி போட்டதை போல சலிக்காமல் கேட்க வைத்தது.

அவனையே பார்த்திருந்தவள் தான் எங்கு வந்துளோம் என்பதை கூட கவனிக்காமல் இருந்த நேரம், “ஐபோன் யூஸ் பண்ண தெரியுமா?” அவன் கேள்வியில் தான் ஒரு சிறிய செல்போன் கடைக்கு வெளியில் நிற்பது தெரிந்தது.

“எதுக்கு?” – பைரவி

“உனக்கு தான்” – தேவா

“இல்ல வேணாம், அண்ணண் வாங்கி தரேன்னு சொல்லிருக்காங்க” அவனிடம் பெறுவதில் இன்னும் தயக்கம் தான் அவளுக்கு.

“உனக்கு புடிச்ச போன் மட்டும் பாரு” என்றான் சற்று துளிர்த்த கோவத்தில்.

“ஐபோன் யூஸ் பண்ண தெரியாது, வேற விலை கம்மியா வாங்கி தாங்க” அவனிடம் பதில் சொன்னாலும் தன்னிடம் கைபேசி இல்லை என்பதை எப்படி கண்டுகொண்டான் என்ற சந்தேகம் அவளிடம்.

அதிகம் பேசியதில்லை, பார்த்ததில்லை ஆனால் தன்னை பற்றிய சின்ன சின்ன தகவல்களை கூட தெரிந்து வைத்திருப்பதன் காரணம் என்னவென தெரியாமல் விழித்தாள்.

அதே எதிர்வினையை தன்னிடமிருந்து அவன் உடனே எதிர் பார்த்தால் என்ன செய்வதென அச்சமும் கூடியது.

அவன் காட்டிய அத்தனை கைபேசிக்கும் தலையை தலையை அவள் ஆட்ட அவளிடம் கேட்காமல் தானே கூகிள் பிக்சல் 6 ப்ரோ ஒன்றை வாங்கி அதற்கான கவர், டெம்பர் கிளாஸ் என அனைத்தையும் முடித்து நாளை சிம் வாங்கி தருவதாக கூறினான்.

அதோடு நிறுத்தாமல் அவளுக்காக சில ஹாண்ட்பேக், பர்ஸ் என கேட்காமலே வாங்கி திணித்தான். அதற்கும் மேலும் அவன் பணத்தை செலவழிக்க விருப்பமில்லாமல் உடல் அசதியை காரணம் காட்டி வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

வீட்டிற்கு வரும் பொழுது பின் சீட்டில் நிறைந்து கிடந்த பொருட்களை பார்த்து, “இருந்தாலும் எனக்கு இவ்ளோ கஸ்ட்லியாண போன் தேவையில்லை” என்றாள்.

அவன் அமைதியாக வரவும், “அண்ணா வாங்கி தர்றேன்னு சொல்லிருந்தாங்க, தேவையில்லாம உங்களுக்கு தான் செலவு” மீண்டும் அதிலே வந்து நிற்க வாகனத்தை ஓரமாக நிறுத்தி அவளை பார்த்து திரும்பி அமர்ந்தான்.

“இங்க பாரு, நீ என்னோட பொண்டாட்டி. ஊசி, ஹேர்பின்ல இருந்து போன், கார், பைக் வர உனக்கு வாங்கி தர வேண்டியது உன்னோட புருஷனாகிய என்னோட கடமை.

கடமையை விட அது எனக்கான உரிமை. இல்லை எனக்கு செலவு மிச்சம் பண்ற, என்கிட்ட கேக்க தயக்கமா இருக்குனு உன் அப்பா வீட்டுல நீ போய் ஒரு ரூபாய் வாங்கினாலும் உனக்குன்னு எதுவும் செய்ய துப்பில்லாதவனா நான் மாறிட்டேனு அர்த்தம்”

சாந்தமாக காட்சியளிக்கும் அவன் முகத்திற்கும் கூர்மையாக பேசும் அவன் வார்த்தைக்கும் என்னென்ன வேறுபாடுகள், பயத்தோடு அவனை பார்த்து விழித்தாள்.

“இவ்ளோ சொல்லியும் உன் அண்ணண் வாங்கி தருவான்னு சொன்னேனா” ஜன்னலை திறந்து விட்டான், “தாராளமா வெளிய தூக்கி போட்டுடு” என்றான்.

கண்ணீர் மல்க அவனை பார்த்த பைரவி கைபேசியை வயிற்றோடு அணைத்து மாட்டேன் என தலை அசைக்க பேசாமல் மீண்டும் வாகனத்தை செலுத்தும் வேலையை துவங்கினான்.

வாகனம் நகர்ந்ததும் மறு பக்கம் முகத்தை திருப்பி கண்ணீரை துடைக்க அவள் வருத்தம் புரிந்தவன், “சாரி பைரவி. உனக்காக நான் ஆசையா ஒரு பொருள் வாங்கி தர்றப்போ ஏன் ஏன்னு புடிக்காம நீ பேசுறப்போ கஷ்டமா இருக்குடி” என்றான்.

அவளோ அவன் பக்கமே திரும்பவில்லை, “நான் புடிக்கலனு சொல்லலையே” என்றாள் அழுகையோடு.

“ப்ச் அழுகாதடி. உன்ன வெளிய நான் கூட்டிட்டு வந்ததே இத வாங்க தான். பத்தாயிரம் ரூபா கூட இல்லாத பிச்சைகாரன் ரேன்ஜ்க்கு என் அப்பா என்ன பேசுவார், அதுக்கு சப்போர்ட்டா நீயும் உன் அண்ணண் வாங்கி குடுதான்னு நின்னனா அத விட எனக்கு அசிங்கம் வேற என்ன இருக்கு சொல்லு பாப்போம்?” பொறுமையாக அவளுக்கு விளக்கம் தந்தான்.

“சரி அத கூட விடு, எனக்கு பழகிடுச்சு. உனக்கு ஒவ்வொரு பொருளும் வாங்கி குடுக்குறப்போ எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? உனக்கு செலவழிக்காம நான் வேற யாருக்கு செலவழிப்பேன்? நீயும் சந்தோசத்தை அனுபவிச்சு என்னையும் அனுபவிக்க விடு பைரவி” கெஞ்சலாக கேட்டான்.

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு, “சாரி இனி இப்டி பண்ண மாட்டேன்” அவன் முகம் நோக்கினாள்.

“வெளிய கூட்டிட்டு வந்து உன்ன கஷ்டப்படுத்திட்டேன்ல?” அவன் குரலும் சோர்ந்து போனது.

இல்லை என தலை அசைத்து மெல்ல சிரிக்க அவள் கன்னம் வருடி அந்த கண்ணில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதிக்க தேவாவின் மனம் பேராசை கொண்டது.

“ரொம்ப நாள் ஆச்சு வெளிய வந்து, அதுவும் நைட் நேரம் நான் வெளிய வந்ததே இல்லை” கண்களை சாலை பக்கம் திருப்பினாள், “எல்லாமே அழகா இருக்கு” அவள் குரலின் மென்மை அந்த இரவின் அவளது சுகந்தத்தை கூறியது.

நிறைவான மனநிலையோடு இல்லம் புகுந்தவர்கள் பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே நுழையும் நேரம் தண்ணீர் குடிக்கவென வந்த அவனது அன்னை இருவரையும் பார்த்து, பைரவியை பார்க்க,

“என்ன அங்க பார்வை? நீங்க வச்சிருக்க பேக் பழசா இருக்கு புதுசு வாங்கலாம்னு சொன்னா, சரி நைட் விலை கம்மியா இருக்குமேனு வாங்கிட்டு வந்தோம்” என்றான்.

அன்னையின் பார்வையோ எங்கு என்பதை போல கேட்க, “சோபால வச்சிருக்கேன் பாருங்க, உங்க மகளுக்கு ஒரு பர்ஸ், போன் கவர் இருக்கு” என்றான் கூடுதல் தகவலாக.

அதை அவர் ஆர்வமில்லா ஆவலோடு எடுக்க சென்றிட மனைவியை சைகை செய்து மேலே அனுப்பினான்.

அறைக்குள் வந்து பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து ஒரு போர்வையை எடுத்து தேவா தரையில் விரிக்க, “நீங்க ஏன் கீழ படுக்குறீங்க, நான் படுத்துக்குறேன்” வேகமாக பைரவி அவனுக்கு உதவினாள்.

“நீ சொன்னாலும் சொல்லலானாலும் நீ தான் படுக்கணும். எனக்கு பெட்ல படுத்தா தான் அழகு அழகா கனவு வரும்” என்றான் கனவு சிரிப்போடு.

அவன் பேச்சில் இல்லாத தெளிவு அவளை அதிகம் சிந்திக்க விடவில்லை, படுத்து போர்வையை பொருத்திக்கொள்ள தேவா எ.சி போட்டு விட்டு தானும் அமைதியாக படுக்க உறக்கம் வந்த பாடில்லை. புரண்டு புரண்டு படுத்து பார்த்து மனைவியை பார்க்க அவளும் உறங்கவில்லை என்பது அவள் தலையை கோதிய கைகள் கூறின.

என்று இருவருக்கும் திருமணம் என முடிவானதோ அன்றே மற்ற பெண்களிடம் காட்டும் ஈடுபாட்டை மொத்தமாய் மனைவி மேல் திருப்பினான்.

அவளது ஒவ்வொரு அசைவையும் தூரத்தில் ஆராய்ந்தவன் அவளுக்கு எது விருப்பமானது, எது இல்லை, எதை அவள் மனம் ரசிக்கும் என சில விசயங்களை தெரிந்து வைத்திருந்தான்.

அதில் சில தான் இன்று செய்தது. உணவில் ருசி அதிகம் இருக்கும் காரத்தை எறும்பு உண்ணும் அளவு உண்டு மீதம் வைப்பவள், முதலில் உண்பது இனிப்பு பதார்த்தங்களை தான்.

இன்றைய கால கட்டத்தில் கையை விட கைபேசி தான் பெரிதாக பட, அவளிடம் ஒருநாளும் கைபேசி இருப்பதற்கான தடயமே இருந்ததில்லை. அசைவங்களில் அவள் விரும்பி உண்பது முட்டை, சிக்கன் மட்டுமே. அர்ஜுனன் வீடு செல்லும் பொழுது அவள் அன்னையை மெல்லிய புன்னகையோடு வரவேற்பவள் கண்கள் அவர் போட்டு வரும் ஹாண்ட்பேக்கை தான் பார்க்கும் சில நொடிகள்.

வீட்டினர் எந்த நிகழ்வாக இருந்தாலும் அவளிடம் கைபேசியை கொடுத்து புகைப்படம் எடுக்க சொல்வது அவளது திறமையை காட்டியது. அதை எல்லாம் மனதில் வைத்து தான் இன்று நடந்த மினி ஷாப்பிங்.

அவனுக்கு அவளை அவளுடைய கூட்டிலிருந்து வெளியில் அழைத்து வர வேண்டும், அது மட்டுமே அவன் முதல் நோக்கம்.

அதன் பிறகு அவளிடம் மெல்ல மெல்ல உணர்வுகளை கொடுத்து உணர்ச்சிகளை உயிர்ப்பிக்க வைத்திடலாம் என்பதே தேவாவின் திட்டம். அதே சமயம் அவளிடம் இப்பொழுதே உரிமையோடு ஒரு சதவீதம் ஆசையும் முளைத்துவிட்டதே என்ற பயம் ஒரு பக்கம் அவனை ஆட்டுவித்து.

அதே உரிமையில் தான், “இன்னைக்கு வெயிட் பண்ண மாதிரியே எனக்காக இனி வெயிட் பண்ணுவியா சக்கரை?” என்றான் எதிர் பார்ப்போடு.

அவள் திரும்பி அவனை பார்க்க தானே, “டெய்லி வேணாம், வாரத்துல ரெண்டு நாள், ஒரு நாள்?” ஆசையாக கேட்டான்.

ஜன்னல் வழியே உலகை சில காலங்களாக பார்த்து பழகியவளை கதவை திறந்து வானவில்லை காட்டியவனுக்காக அவன் கேட்கும் இந்த சிறு உதவியை செய்ய மாட்டேன் என சொல்லும் அளவு கல் நெஞ்சம் இல்லையே அவள் மனம்?

“டெய்லி வைட் பண்ணுவேன்” மிகவும் சாதாரணமாக இருந்த முகபாவனையில் பல சத்தியங்கள்.

என்னோடைய பழைய கதை ‘இணையா துருவங்கள்’ மீண்டும் சைட்ல நான் பப்லிஷ் பண்றேன். இனி கதை இந்த தளத்தில் எப்பொழுதும் இருக்கும். படிக்க விரும்புபவர்கள் படிக்க துவங்கலாம்.

Hi how is the chapter?

Pudichiruka?

Comments plzz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!