Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 13.2

தேவாவிற்கு இனி அந்த குளத்தை வைத்து எந்த வித அசம்பாவிதமும் நடந்துவிட கூடாது. அதற்காகவே தவியாக தவிக்கிறான்.

“முடியாது, இந்த காச நீங்களே திரும்ப எடுத்துக்கோங்க. நான் என்னோட வேலையை வீட்டுக்கே வராமனாலும் செஞ்சு முடிக்கிறேன் இன்னும் ரெண்டு மாசத்துல” என்றார் அய்யனார்.

“ஒரு உயிர் போனது பத்தாதா? இன்னும் எத்தனை உயிரை தான் யா காவு வாங்குவிங்க? இன்னும் ரெண்டு மாசம் இழுத்தா அதுக்குள்ள இன்னோருத்தர்க்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது? ஒரு குடும்பம் பரிதவிச்சு அழுகுறது போதாதா? மனசாட்சியோடு நடந்துக்கோங்க யா” உணர்ச்சி வசப்பட்ட குணா இடைப்புகுந்து அய்யனாரிடம் கேள்வி கேட்டான்.

“எப்பா நீங்க தான் பெரிய மனசாட்சி இருக்க ஆள் தானே, உன்ன படிக்க வச்சு அழகு பாத்த அந்த செந்திலோட மகளை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமாடே?”



Advertisement

திடீரென அய்யனார் கேட்ட கேள்வியில் அவ்விடமே அதிர்ச்சியில் உறைந்து நிற்க குணாவும் ஒரு நொடி அதிர்ந்தே தான் போனான்.

காரணம் செந்திலின் மூத்த புதல்வி திருமணம் ஆகி ஒரு மாதத்தில் கணவனது நடவடிக்கை பேச்சு சரியில்லாமல் விவாகரத்து வாங்கி இல்லம் வந்துவிட்டாள். அதன் பிறகு செந்தில் மகளுக்கு சிறிது கால அவகாசம் கொடுக்கலாம் என நினைத்திருக்க அதற்குள் அவரே சென்றுவிட்டார்.

“என்ன பேச்சையே கானம் அப்பு?” குத்திக்காட்டும் விதத்தில் அழுத்தி சொன்னார் அய்யனார்.

Advertisement

குணா கூட அமைதியாக நிற்க, தேவா தான் வந்தான், “அவன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா இந்த குளத்து வேலை நாளைக்கே நடக்கும். சரியா? அதுவும் எங்க மேற்பார்வைல?”

Advertisement

ஒப்பந்தம் பேசியவன் முகத்தையே பார்க்க புடிக்காத அய்யனார் உடனே குணா மேல் உள்ள நம்பிக்கையில் ஒப்புக்கொண்டார், “சரி நடக்கட்டும்” ஊரறிய உரைத்தார்.

“அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”

குணாவின் அந்த உடனடி பதில் கூட அங்கிருந்தவர்கள் காதுகளுக்கு தவறாக கேட்டுவிட்டோமோ என்ற சந்தேகத்தை கொடுக்க முதலில் விசிலடித்து ஆரவாரம் செய்து தேவா தான் அனைவரின் அய்யத்தையும் போக்கினான்.

Advertisement

“இன்னும் எண்ணி முப்பதே நாளைக்கு அப்றம் வர்ற நல்ல முகுர்த்தத்துல எங்க கல்யாணம் நடக்கும். நாளைக்கே அடிக்கிறேன் பத்திரிகையை” என்றான் தெளிவாக.

“எழவு வீட்டை கல்யாண வீடா மாதியாச்சு. நாளைக்கே குளத்தை சுத்தம் பண்ணி மாப்பிள்ளைக்கு அங்கையே ஒரு போட்டோ ஷூட் வச்சிட்டு வேண்டியது தான்” தேவாவிற்கு ஆரவாரம் தான்.

“ம்ம்ம் அப்றம் என்ன அய்யனாரும் ஒத்துக்குட்டான், ஆனா அய்யனாரு எந்நேரமும் இதே மாதிரி கூட்டம் சுமூகமான முடிஞ்சிடாது ஒழுங்கா வேலை செய்றது உனக்கு நல்லது”

எச்சரிக்கையோடு ஒரு பெரியவர் கூட்டத்தை கலைக்க பொருமிக்கொண்டே சென்ற அய்யனார் பின்னால் ஓடி சென்று நிறுத்தினான் தேவா, “ரொம்ப நன்றிங்க தலைவரே” என்று.

“போய்ட்டுடா அசிங்கமா ஏதாவது சொல்லிட போறேன்” தேவாவை திட்டி விறுவிறுவென நடந்தவர் முன்னாள் வந்து நின்றான் மீண்டும்.

“இன்னைக்கு நாங்க நினைச்சு வந்தது குளத்தை பத்தி மட்டும் தான் தலைவரே. ஆனா கல்யாணத்தையும் சேர்த்து நடத்திட்டிங்க ரொம்ப சந்தோசம்” என்றான்.

அய்யனாரோ சிரிப்போடு நடந்தார், “டேய் முட்டாப்பயலே… அவன் வேற ஒரு பிள்ளையை லவ் பன்றான்டா. இது தெரியாம வந்து ரூட்டை குடுத்துட்டு இருக்க”

அவரை விட நன்றாக சிரித்த தேவா அவரோடு நடக்காமல் அப்படியே நின்றவன், “ஐயோ தலைவரே இந்த பொண்ணு தான் அந்த பொண்ணு” என்றான்.

அய்யனார் அதிர்ச்சியில் அப்படியே நின்று தேவாவை திரும்பி பார்க்க, அவன் பின்னால் கை காட்டினான். தேவா கை காட்டிய திசையில் குணாவின் இடுப்பை கிள்ளி கிள்ளி வெற்றி கேலி செய்ய குணா முகத்தில் அத்தனை சந்தோசம் தாண்டவமாடியது.

வெறுப்பாக தேவாவை பார்த்தவர் அவனை முறைத்து, “எந்த அடியையும் நான் லேசுல மறக்குற ஆள் இல்லடா. உனக்கு இருக்கு” என்ற உறுதியோடு அங்கிருந்து அகல தேவாவிற்கு சிரிப்பு தான் அப்பொழுதும்.

நண்பர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிறிது தூரம் தள்ளி வந்து நின்றான் தேவா. காலையிலிருந்து மனைவியிடமிருந்து மூன்று அழைப்புகள் இது வர வந்துவிட்டது. இருந்த இடம் கருதி அவளது அழைப்புகளை ஏற்க முடியாமல் போனது.

பைரவி அதிகம் அவனுக்கு தானாக அழைத்தது இல்லை. இன்று அவள் இத்தனை முறை அழைத்ததும் அவள் பயம் புரிந்து தானே அழைத்தான்.

“எல்லாம் முடிஞ்சதா? ஒன்னும் பிரச்சனை இல்லையே?” பதட்டமாக வந்தது மனைவியின் குரல் மறு பக்கமிருந்து.

“இல்ல, பிரச்சனை பண்ற அளவுக்கு ஒன்னுமில்ல. ஏன் இந்த பதட்டம்?” என்றான் சிரிப்போடு.

“இல்ல நீங்க போன் எடுக்கவே இல்லை. அதான் ஏதோ பிரச்சனையோனு நினைச்சேன்” என்றாள் பைரவி.

“ம்ம்ம், அம்மா வந்தாச்சா?” என மனைவியிடம் வினவினான் தேவா.

“ம்ம் இப்ப தான். மாமா இன்னும் வரல. ஏதோ அவங்க டிபார்ட்மென்ட் பங்ஷன் போல காலேஜ்ல” என்றாள்

“ஓ சரி. இன்னொரு விசியம் சொல்லணும். குணாக்கு கல்யாணம் பேச போறோம்” என்றான்.

மனைவிக்கு குழப்பம், “என்ன சொல்றிங்க? எல்லாரும் அங்க தான இருந்துருப்பீங்க எப்படி இப்ப திடீர்னு கல்யாணம் பேசிருக்கீங்க?” சந்தேகத்தை கேட்டாள்.

தேவா நடந்தவை அனைத்தையும் கூறி விலக்கினான். “நீங்க அப்போ இன்னும் ஒரு மாசம் ரொம்ப பிஸியா?”

காலை நடந்த நிகழ்வில் அவள் தன்னை தவறாக எண்ணியிருக்க கூடுமோ என்ற பயம் தேவாவுக்கு இருக்க இங்கே அவன் மனைவி குரலில் ஏக்கம் கொஞ்சம் தெரிந்தது.

“ம்ம்ம் ஆமா தான் நினைக்கிறன். இன்னைக்கு இல்லனா நாளைக்கு மதுரைல இருந்து ஆள ஏற்பாடு பண்ண போகணும். அடுத்த நாள் காலைல வெயில் வர முன்ன குளத்து வேலைய பாத்துட்டு அதுக்கு அப்றம் தான் தோப்பு வேலை பாக்கணும்.

இதுவும் இல்லாம பொங்கல் வருது. காளைகளை ஜல்லிக்கட்டுக்கு ரெடி பண்ணனும். ஹ்ம்ம் நிக்க கூட நேரம் இருக்காது இன்னும் ரெண்டு மாசம்” பெருமூச்சு தேவாவிடம். பைரவி இங்கு தேவா அறையின் பால்கனியில் நின்று பேச மெதுவாக அமர்ந்துகொண்டாள்.

“அப்போ ரெண்டு நாள் இங்க வர மாட்டேன்னு சொல்றிங்களா?” என்றாள் மெதுவான குரலில்.

மனைவி அழைப்புகள் இனிப்பை உண்டது போல் இனிக்க, இவள் ஏகமாய் கேட்கும் அழைப்புகள் சக்கரை பாகை திகட்டாமல் உண்பது போல் தித்தித்தது.

சிரிப்பை கட்டுப்படுத்தி, “உனக்கு விடுதலை தானே பைரவி? நான் இருக்கப்போ தயக்கமாவே நைட் எல்லாம் சுத்துவ. இப்போ நிம்மதியா இரு” என்றான்.

“ஆனந்த் தயக்கம் இருந்தது, அது பயம் இல்ல. இப்ப நான் எப்படி தனியா இருப்பேன்?” என்றவள் குரல் சற்று கோவத்தை காட்டியது.

“ஏன் நீ எப்பவும் தனியா தானே இருப்ப?” கேள்வி தேவாவிடமிருந்து. எப்படி சொல்வாள் அவன் முகமே அவள் அமைதி என?

“நீங்க வர மாட்டேன்னு சொல்லிட்டீங்கல்ல? இனி என்ன பத்தி கேக்க வேணாம்” என்றாள் வீம்பாக.

“சரி கேக்கல, ரெண்டு நாள் இல்லை. நான் வீட்டுக்கு வர ஒரு மாசம் கூட ஆகலாம். அது வர அத்தை வீட்டுக்கு போறியா?”

“ஏன் ஒரு மாசம்?” இரண்டு நாளையே தாங்க முடியாதவளுக்கு ஒரு மாதம் பேரதிர்ச்சியே அதனால் தான் வேகமாக கேட்டுவிட்டாள்.

அதை மறைக்கவும் இப்பொழுது விருப்பமில்லாமல் அவன் பதிலுக்காக காத்திருக்க அந்த பக்கம் தேவா மகிழ்ச்சியில் துள்ளினான். நிற்க முடியாமல் மகிழ்ச்சியில் துள்ளியது அவன் உள்ளம்.

மரத்தை பிடித்து கால்களை உதறி ஏதேதோ செய்துக்கொண்டிருந்த நண்பனை தூரத்தில் இருந்து பார்த்த நண்பர்களுக்கு கூட அவன் செயல் விசித்திரமாக இருந்தது.

அவள் குரலில் இருந்த தவிப்பு அத்தகையது. இசையை சேரும் பாடல் வரிகள் போல் தவித்தது அவள் வார்த்தைகளோடு அவள் உள்ளமும். ஆசையாய் அவனை திருமணம் செய்யாவிடினும் தேவா காட்டிய அன்பின் சாரலில் பெண்ணவலால் நனையாமல் இருக்க முடியவில்லை. கையில் குடையோடே விரும்பி குளிரில் நிற்கிறாள். காலப்போக்கில் சிறு வெயில் கூட உடலை காந்தியது, இந்த பிரிவைப் போல.

“ரெண்டு மாசம் கூட ஆகலாம்” என்றான் அவள் கோவத்திற்கு தூபம் போட.

“ஆனந்த், உங்க திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சிடுறேன். வந்து எடுத்துட்டு போய் அங்கையே தங்கிக்கோங்க” அவனை பேச விடாமல் இனிப்பை துடித்தாள்.

அதன் பிறகு அவன் கூறியது போல் இரண்டு நாட்கள் தேவாவை பற்றிய எந்த தகவலும் இல்லை. மனைவியை அடிக்கடி தொல்லை செய்யும் எண்ணம் கூட இல்லாமல் போனான்.

மூன்றாம் நாளும் அவனை இன்றி தவித்தவள் அன்று தங்கள் இருவரின் நெருக்கத்தை எந்த விதமான உணர்வில் சேர்ப்பதென தெரியாமல் அவன் ஒலிக்கவிட்ட ஸ்பீக்கர் முன்னாள் சென்று நின்று அதனை உயிர்ப்பிக்க தேவாவின் ருசிபடியே அதிரடியான பாடல் ஒலித்தது.

சரக்கு வச்சிருக்கேன்…
இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

கோழி ருசியா இருந்தா…
கோழிய வெட்டு…
குமரி ருசியா இருந்தா…
குமரிய வெட்டு…

சிரிப்போடு கைபேசியை எடுத்து தான் எடுத்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டே அமர்த்திருந்தவள் இதழ்கள் மெல்ல பாடலின் வரிகளை முணுமுணுத்தது.

“எனக்கு சரக்கடிக்கிற பழக்கம் இல்ல” காதருகில் திடீரென கேட்ட குரலில் பதறி, ‘ஆஆ’ வென கத்தியவள் கழுத்தை ஒரு கையால் பிடித்து மறு கை வைத்து வாயை அடைத்தான்.

“ஏன்டி ஊரையே கூட்டுற?” திடீரென வந்த ஆண்மையான குரல் கணவன் குரல் என்பதையும் மறந்து பயத்தில் அலறியிருந்தாள்.

தன்னை முறைப்போடு பார்த்து கேள்வி கேட்டவன் வருகையை அவள் மூளை கொண்டாடிக்கொண்டிருக்க இதயம் தன்னையும் அறியாமல் அவன் சட்டையை பெரும் ஆசையோடு பற்றிக்கொண்டது.

கட்டிலில் அமர்த்திருந்தவளை அமைதிப்படுத்த தேவா குனிந்திருக்க இறுதியில் அது தனக்கே வினையாக மாறியது.

பலமாக மூச்சு வாங்கும் அவள் முகத்தை விட்டு தானாக கண்கள் கீழ் இறங்க, அதற்குள் அவன் மனைவியின் கை அவன் நெஞ்சத்தின் மீது பட்டு தேவாவின் மோகத்தை மறைத்து காதலை உயர்த்தியது.

அவளை நெருங்கவே பயந்த இதயம், தன் துடிப்பை அதிகப்படுத்தி பயம்கொள்ள வைத்தது, எங்கே அவளை உரிமையோடு நெருங்கிவிடுவோமோ என.

அந்த ஆசையை நொடியில் அறுத்துவிடும் வகையில் அவன் மனைவி இத்தை தந்த அதே இடத்தில் தன்னுடைய சிறிய கைகளால் ஓங்கி குத்தினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!