Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 16.2

பய பந்து உருவானது பைரவிக்கு மெல்ல நடுங்கிய கைகளை மெல்ல இறுக்கமாய் பற்றினான், “முன்ன பின்ன பாத்துறாத நிரஞ்சன் கூட ரொம்ப ப்ரியா இருந்த நீ ஏன் என்னோட ப்ரென்ட்ஸ் கூட பேசவே யோசிக்கிற பைரவி?”

இதோ கேட்டு விட்டானே! எதை அவன் கேட்கவே கூடாதென யோசித்தாளோ அதே கேள்வியை கேட்டு நிற்கிறான். தலை தாழ்த்தி உதட்டை கடித்து கண்ணீர் வடித்தவள் கையை பின்னுக்கு இழுத்திட முயல அதை பிடிவாதமாக தன்னுள் வைத்தான்.

 “சொல்ல விருப்பம் இல்லனா வேணாம் சக்கரை. நீ எப்படி இருந்தாலும் எனக்கு அது முழு சந்தோசம் தான்” என்றான் தலை சாய்த்து கலங்கிய அவள் விழி பார்த்து.

“நான் வேர்ஜினா இல்லனாலும்மா ஆனந்த்?”



Advertisement

நேர் விழிகள் தன்னை கேள்வி கேட்கவும் யோசிக்கவே இல்லை தேவா, “கன்னி தன்மை தான் ஒருத்தரோட ஒழுக்கத்தை ஜட்ஜ் பண்னும்னா அந்த ஜட்ஜமென்ட்டே தப்பு. என் கூட இருக்க பைரவி மனசுல இப்ப என்ன தவற வேற யாரும் இல்ல. நமக்கான வாழ்க்கைக்கு நீயும் நானும் உண்மையா இருக்குறோம் அது போதும்” என்றான் மனதார.

தேவாவின் வார்த்தையில் அடி வாங்கியவள் பெரிய கேவலோடு அவனது கழுத்தை கட்டி அவன் கழுத்தோரம் முகம் புதைத்து மன வேதனை எல்லாம் கொட்டி தீர்த்தாள். பூவின் விதியை எழுதிய இறைவன் கூட ஒரு முறை பயன்படுத்திய பூவை மறுமுறை பயன்படுத்த விடுவதில்லை.

ஒதுக்கி வைத்து ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்க, இங்கு ஊரே வாசமில்லை என தள்ளி வைத்த பூவை ரசிகனாக நின்று ரசித்து ஆள்கிறான் இவன்.  இந்த அன்பிற்கும், காதலுக்கும் தான் தகுதியானவளா என்ற எண்ணம் பெறுக அழுகை பெருகியது.

Advertisement

மனதை கொய்து அதில் இளைப்பாற எண்ணிய அவன் எண்ணம் தன்னை பற்றிய உண்மை அறிந்ததும் நீங்கிடுமோ என்ற பயம் தான் அழுகையை மாறியது.

Advertisement

“வேணாம் ஆனந்த், எனக்கு நீங்க வேணும். என்ன பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைச்சா அந்த எண்ணத்தை மறந்துடுங்க, என்ன விட்டு நீங்க போகுறத என்னால சகிச்சுக்க முடியாது” அழுகையோடு மன்றாடினாள்.

தன் மேல் மொத்தமாய் சாய்ந்து நிற்கும் நெல் மணி போல் சரிந்து கிடந்தாள். மலை, வனம் என மின்னி பறந்த சிறகு சிறு மணல் காற்றில் மங்கி போனது.

அவள் இடை பிடித்து தள்ளி நிறுத்தினான், “நான் எப்ப டி உன்ன விட்டு போறேன்னு சொன்னேன்?” முறைத்தான் தேவா.

Advertisement

“பயமா இருக்கு ஆனந்த்”

“உனக்கான நம்பிக்கையா தான் இருக்கணும்னு என் ஆசை பைரவி, பயமா இல்ல” பயிற்றுவிக்க சிறு தேடலும், நடை பயில ஒரு முகமும் நித்தம் சுழலும் வரை அவள் வாழ்க்கை திவ்யமே.

தைரியத்தை திரட்டி அவன் பார்வையை தவிர்த்து கீழ் உதட்டை கடித்து வைக்க, “கண்ண பாத்து பேசணும் பைரவி” அவள் தாடையை பற்றி தன் கண் பார்க்க வைத்தான்.

“தப்பு பண்ணவன் தான் முகம் பார்க்க தயங்குவான்” அவன் கூறுவதும் சரியென பட, குனியவில்லை பிறகு.

“எல்லாரும் சொல்ற மாதிரி நான் கல்யாணம் பிடிக்காம போகல ஆனந்த். எனக்கு வீட்டுல பண்ண ஏற்பாடு எல்லாம் புடிச்சு தான் இருந்தது. ஒர்க் பண்ண இடத்துல இருந்த ப்ரன்ட்ஸ் யாராலயும் அந்த கல்யாணத்துக்கு வர முடியாத சூழ்நிலை.

ப்ராஜெக்ட் சமிட் பண்ண வேண்டிய கட்டாயம். அதுனால நான் கெளம்புற அன்னைக்கு எல்லாருக்கும் அவுட்டர்ல இருந்த ஒரு ரெஸ்டோ பார்ல ட்ரீட் வச்சிட்டு அவுட்டர்ல இருந்து மதுரை பஸ் பிடிக்க பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” அன்றைய நாளை நினைத்தவள் உலகமே இன்றும் இருண்டுவிட்டது.

நிராகரித்த எண்ணங்கள் அடித்து பிடித்து கண் முன்னே வந்து நின்று பிடிவாதமாய் உயிரையே உலுக்கியது.

“மைசூர்ல பத்து மணி தொட்டாலே ஆள் நடமாட்டம் அவுட்டர்ல இருக்காது. நான் அன்னைக்கு பஸ்க்கு வெய்ட் பண்ணது பத்தேமுக்காலுக்கு. யாரும் இல்ல பயந்துட்டே தான் நின்னேன். எங்க இருந்து வந்தாங்கன்னே தெரியல ஆனந்த். ரெண்டு பேர்”

பேசும் பொழுதே பைரவிக்கு அழுகை பெருகி கேவல் எழுந்து கண் முன்னே அந்த நாள் நிழல்படமாக ஓடியது.

திருமணம் பற்றிய பேச்சு எழுந்த உடனே குறித்த நாளுக்குள் தன்னுடைய உடமைகளை எல்லாம் அதற்கு முன்பு வீட்டிற்கு செல்லும் பொழுதே சிறுக சிறுக சேர்ந்திருந்த காரணத்தால் இப்பொழுது அதிக சுமை இல்லை. தோள் பை ஒன்றும், கையில் ஒரு சிறு பையும் மட்டுமே வைத்திருந்தாள்.

கண்கள் சிவப்பேறி நிதானமான நடையோடு வந்த இரண்டு ஆண்கள் பைரவி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் வந்து தங்கு தடையில்லாமல் நிற்க அவர்கள் நோக்கம் சரியில்லை என பைரவி உடனே புரிந்துகொண்டு சாலையில் வந்து நின்றாள்.

அது ஒரு கிளை சாலை என்பதால் சில மீட்டர் தூரம் சென்றால் தான் நெடுஞ்சாலையை அடைய முடியும். அந்த காரணமே அந்த இடத்தில் வாகன போக்குவரத்தும் இல்லாமல் செய்திருந்தது.

மைசூர் பேருந்து நிலையத்திலிருந்து இந்நேரம் பேருந்து கிளம்பியிருக்க வேண்டும் தான். ஆனால் இங்கு வர இன்னும் சில நேரங்கள் பிடிக்குமென கைபேசியை எடுத்து நண்பர்களுக்கு அழைக்க முயற்சிக்க அந்த பக்கம் பதில் இல்லை.

“எங்க போகணும், சொல்லு நாங்க விடுறோம்” போதையில் நிச்சயம் இல்லை அவர்கள், தெளிவாக இருந்தனர்.

பார்ப்பதற்கு குறைந்தது முப்பத்தி ஐந்து வயதாவது இருக்கும். உடையில் தெரிந்த நேர்த்தி அவர்கள் கண்களில் இல்லாமல் போனது தான் பைரவியின் கலக்கம்.

“மைண்ட் யுவர் ஓன் பிஸ்னஸ்” தீயை கக்கி அவள் கூறியதில் அவர்களுக்கு இன்னும் வெறி ஏறியது. பெண்ணொருத்தி தன்னிடம் திமிரினால் அதை தன்னுடைய ஆண் பலத்தை காட்டி பொசுக்குவது தானே இங்கு பலரின் வேலை!

“அத தான் பண்ணிட்டு இருக்கோம்”

பைரவி தோள் உரசும் அளவு அருகில் வந்து நின்று மோகக் குரலில் ஒருவன் நெருங்க, அவனை தொட்டால் கூட பாவமென உணர்ந்தவள் அவ்விடம் விட்டு விலகும் நோக்கோடு அவனை முறைத்து விலக முயல அவளுக்கு முன்பு வந்து நின்றான் மற்றொருவன்.

“எங்க போற? பேசிட்டு இருப்போம்” என்றான் அதிகாரமாக. “டேய் உன் ஆத்தாகிட்ட போய் பேசுடா”

வெட்டும் பார்வையோடு பையை வைத்து அவனை தள்ளிவிட்டு, “போலீஸ்க்கு கால் பண்ணா தான் அடங்குவிங்க நீங்க எல்லாம்”

கைபேசியை எடுத்து எண்ணை அழுத்தப்போக ஒருவன் அவளிடமிருந்து வாங்கி அந்த பேருந்து நிறுத்தத்திற்கு பின்னாலிருந்த காலிமனையில் வீச வந்த ஆத்திரத்தில் அவன் கன்னத்தில் ஓங்கி பைரவி அறைந்துவிட்டாள்.

“பொறுக்கி ராஸ்கல்” கோவத்தில் துடித்த அவளது ஆதாரங்கள் கூட அடங்க மறுத்தது.

அவனோ அதற்கும் மேல் கோவத்தை எடுத்து சென்று அவளது கன்னத்தில் அறைய, மற்றொருவன் அவள் தோளில் மாட்டியிருந்த பையை அதிவேகத்தோடு இழுக்க, இந்த தாக்குதலை எதிர்பார்த்திராத பைரவி பையோடு தலையில் வீழ கையிலிருந்த பை இரண்டடி தூரத்தில் தள்ளி விழுந்தது.

விழுந்த வேகத்தில் தலையில் சுள்ளென அடி பட, “ம்மா” என கத்திய அவளது உதடுகளோடு அவள் மனமும் அன்னையை தான் தேடியது.

விழுந்ததிலிருந்து பைரவி சுதாரிக்கும் முன்பு அவளது சிகையை கொத்தாக பிடித்து அவள் முகத்தின் அருகே வந்தவன் அவளது வாசனையை நுகர்ந்தான்.

“பாஹ் என்ன வாசனை… கன்னி பொண்ணு கன்னி பொண்ணு தான்டா” வில்லத்தனமான சிரிப்போடு அவன் உடன் இருந்தோனை பார்க்க, பைரவி கண்களிலிருந்து செந்நீர் வேதனையோடு வெளியேறியது.

இதற்கு மேலும் என்ன நிகழுமென உணர்ந்தவள் அதை எப்படியாவது தடுத்திட வேண்டுமென நகத்தினை கொண்டு அவனது கைகளில் பிராண்ட, ‘ஸ்ஸ்ஸ்’ என்ற வலியோடு பிடியை தளர்த்தினான்.

இதையே சாக்காக எடுத்துக்கொண்டு பைரவி தோளில் கிடந்த பையோடு எழுந்து மற்றொருவரின் காலில் தன்னுடைய பலத்தை எல்லாம் கொடுத்து ஓங்கி மிதித்திட, அவளது அழுத்தத்தினால் உடனே ஓட முயன்ற பைரவியின் முயற்சி வெற்றி பெற்றது.

ஏதோ ஒரு நம்பிகையோடு வேகமெடுத்து ஓடியவள் நெடுஞ்சாலையை அடைந்ததும் தன்னை கடந்து வந்த வாகனங்களை கை நீட்டி உதவி கேட்க, எந்த வாகனமும் நிற்கவில்லை.

பின்னால் திரும்பி பார்த்தாள், நெருங்கிவிட்டார்கள் அவர்கள்.

தொண்டைக்குழி ஏறி இறங்க தேங்கி நின்ற வேதனை எல்லாம் நொடி கடக்க கண்ணீராய் வெளியேறி தவிப்பதை எவரேனும் உதவிட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்போடு மேலும் மேலும் சாலையில் காலடி எடுத்து வைக்க,

அவளது பையை பிடுங்கி பின்னே இழுக்க இந்தமுறை பையை உதறி அவள் ஓட முயல அவளது கையை பற்றி இழுத்த மற்றொருவன் பைரவியின் கையை வெறிகொண்டு பற்றிட அவளால் அடுத்த அடி எடுக்க வைக்க முடியவில்லை. பயத்தோடு அவனை பார்த்தவள்,

“ப்ளீஸ் விட்ருங்க…”

சிரித்தான் அவன் கோணலாக, “இவ்ளோ நேரம் இருந்த திமிரு எங்கடி போச்சு?”

“ப்ளீஸ் வேணாம். உங்களுக்கு எவ்ளோ பணம் வேணாலும் தர்றேன்”

தர தரவென அவளை இருட்டாக இருந்த புல்வெளிக்குள் அழைத்து செல்ல அவர்களிடமிருந்து போராடி பார்த்து தோற்றது தான் மிச்சம்.

“யாருக்குடி வேணும் பணம்?”

காமம் மேலோங்க குளிருக்காக பைரவி அணிந்திருந்த அந்த ஸ்வெட்டர் அவளது உடலை விட்டு சென்ற நொடி மற்றொருவன் அதே ஸ்வெட்டர் வைத்து அவளது கையை கட்டி அதே வேகத்தில் அவளது காலை இடறிவிட்டு அவளை கீழே சிரிக்க,

அவளது வாயை அடைக்க தன்னுடைய கர்ச்சீப் ஒன்றை வைத்து ஒருவன் அடைக்க, மற்றொருவன் அவளது மேல் சட்டையை கிழிக்க, குளிர்ந்த காற்றின் வேகம் உடலில் பட்டு பைரவியை கத்தி கொண்டு கிழித்து கொன்றது.

தொண்டையிலிருந்து குரல் அந்த துணியை தாண்டி செல்லவில்லை. இருள் மாயம் எங்கும் பரவிக்கிடக்க, உடலே கூசியது கயவர்களின் தொடுகையால். காலை வைத்து உதறி எழுந்திடலாம் என துடிக்க, அதையும் மடக்கி அவளது கால்ச்சட்டையை ஒருவன் கிழித்தெறிய தலையை அசைத்து மறுப்பை கூறி கூறி சோர்ந்து போக மட்டும் இல்லை.

அவளது கதறலையும், வேதனையையும் கேட்கும் எண்ணத்திலா இருந்தனர் அவர்கள்? வானம்பாடியாய் இருந்தவள் மேனியை கயவர்கள் கண்ணில் ஒப்படைத்து அவர்கள் இச்சைக்கு ஆளாக்கிய இறைவனின் கோர தாண்டவம் எந்த வகையில் நியாயமென புரியவில்லை.

நார் நாராய் அவளை சிதைத்தவர்கள் இச்சை முடிந்ததோ இல்லையோ, பூ மேனி உடையாளின் மனம் சிதைந்தது.

கனவுகள் அழிந்து, வாழ்க்கை தொலைந்து வெளிச்சத்தையே இழந்து மயக்கத்தில் சரிந்து விழுந்தாள் வேதனையில்.

கடந்த காலத்தை சொல்லியவள் கண்ணீர் நின்றபாடில்லை முகத்தை பொத்தி தேம்பி தேம்பி அழுத்தவளை பார்க்க பார்க்க தேவாவின் மனம் நெருப்பில் வைத்து வாட்டியது போல் வலித்தது.

“பைரவி” இளகிய அவனது குரல் அவளை அசைக்கவில்லை. பைரவின் உடலை நெஞ்சோடு அனைத்தவன் அவளது முதுகை அணைவாய் வருடி ஆசுவாசப்படுத்தினான்.

“அசிங்கமா பாத்தாங்க ஆனந்த், அசிங்கமா தொட்டாங்க. அத விட அசிங்கமா பேசுனாங்க தெரியுமா? ஒரு பொண்ணு வாழ்க்கைல எந்த மாதிரி வார்த்தை எல்லாம் கேக்க கூடாதோ அந்த எல்லா வார்த்தையும் என் வாழ்க்கைல நான் கேட்டுட்டேன்.

செத்துடலாம் போல இருந்தது. அவங்களோட ஒவ்வொரு தொடுகையும் இன்னமும் என் மேல படுற மாதிரி இருக்கு” முகம் எல்லாம் கண்ணீரால் நிரம்பி பார்க்கவே எவர் மனதையும் புரட்டிப்போடும்.

“சக்கரை விடுடி” கெஞ்சினான் தலை குனிந்து அவள் முகம் பார்த்தவாறே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!