Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 16.3

“பொண்ணுனா உடலுறவுக்கு மட்டும் தான்-னு அர்த்தமா? ஒருத்தன் இல்ல, ரெண்டு பேர். துடிச்சிட்டேன் ஆனந்த். ஒடம்பெலாம் எரியுது. இன்னமும் அந்த அசிங்கமான தொடுகை அந்த கேவலமான மூச்சு என்ன சுத்தியே இருக்க மாதிரி இருக்குது.

அன்னைக்கு இருட்டுன நாள் தான், இன்னமும் என்ன சுத்தி இருட்டு மட்டும் தான் இருக்கு. அப்டியே என் கைய கால வெட்டி போட்டு இப்படிப்பட்ட உடம்போட இருக்கணுமான்னு சாகனும் போல இருந்தது”

“தப்பு பண்ணவனே உயிரோட இருக்குறப்போ, தப்பே பண்ணாம நீ ஏன் சாகனும்? முட்டாள் மாதிரி இருக்கு”

“முட்டாள் மாதிரி தான் இருக்கும் உங்களுக்கு. ஆனா பொறந்ததுல இருந்து கற்பு எவ்வளவு முக்கியம், புருஷன தவற ஒரு ஆம்பள தன்னோட ஒடம்ப பாத்துட கூடாதுனு நினைக்கிற என்ன மாதிரி சராசரி பொண்ணுக்கு, எவன்னே தெரியாத ரெண்டு ஆம்பளைங்க…” கண்ணீர் பெறுக ஆக்ரோஷமாக பேசிக்கொண்டே செல்லும் மனைவியின் வாயை அடைத்தான் தேவா.



Advertisement

“நான் என்ன வெறும் புல்லா ஆனந்த்? இவ்ளோ ஆடு மாதிரி ஈஸியா மாதிரி மேஞ்சிட்டு போய்ட்டான்? என் கண்ணீர் அவங்க பண்றது தப்புனு சொல்லலையா?

என்னோட கதறல் நான் வலி வேதனைல துடிக்கிறேன்னு அவங்களுக்கு காட்ட தவறிடுச்சா? இல்ல எல்லாமே தெரிஞ்சும் அவங்களுக்கு அவங்க ஆசை தான் பெருசா போச்சா?”

தன் வாக்கில் பிதற்ற துவங்கிய மனைவியிடம் கலங்கிய மனதோடு, “இப்டி அழுது புலம்பினா நடந்தது இல்லனு ஆகிடுமா பைரவி?”

Advertisement

“ஆகாது தான், ஆனா பெத்த அப்பா, கூட பொறந்த அண்ணனை கூட சந்தேக கண்ணோட மனசு பாக்குற பார்வை இருக்கே ஒரு வலி, அந்த வேதனையை வார்த்தைல சொல்ல முடியாது. ஒருத்தர் சாதாரணமா சிரிச்சாலும் அது என்ன பாத்து இளக்காரமா சிரிக்கிற மாதிரியே இருக்கும். கூட்டத்தை பாத்தாலே கை கால் நடுங்கும், யாரை பாத்தாலும் அந்த நாள் கண்ணு முன்னாடி வந்து நின்னு உயிரையே கொல்லும்”

Advertisement

நெஞ்சத்தை பற்றி அவள் அழுத அழுகை சொல்லில் மாளாது. மனைவியை தேற்றும் எண்ணத்தோடு தேவா செய்த எதுவும் வேலை செய்யவில்லை, மனதின் பாரத்தை எவரிடமும் கூறாமல் உள்ளுக்குள்ளே வைத்து குமைந்துகொண்டு எவ்வளவு நொறுங்கிப் போயிருப்பாள் என யோசிக்கவே அவனால் முடியவில்லை.

“எப்படி வீட்டுக்கு வந்த பைரவி?”

“அவங்க கீழ தள்ளுனத்துல எனக்கே தெரியாம மயக்கம் போட்டுட்டேன் போல, அப்றம் கண்ண திறந்து பாக்குறப்போ ஹாஸ்பிடல்ல இருந்தேன். யார் என்ன அங்க வந்து சேர்த்தாங்கனு தெரியல.

Advertisement

உடம்பெல்லாம் வலி தாங்க முடியல, செத்துட்டேன்னு நினைச்சு நிம்மதியா கண்ண மூடுனேன் ஆனந்த், மறுபடியும் உயிரோட தான் இருக்கோம்னு தெரிஞ்சதும் தற்கொலைக்கு எல்லாம் முயற்சி பண்ணேன் அந்த கடவுளுக்கு கூட இரக்கம் இல்ல போல,

ஹாஸ்பிடல்ல ஒரு செகண்ட் என்ன தனியா விடல, மயக்க மருந்து போட்டு போட்டு என்ன மயக்கத்துலையே வச்சிருந்தாங்க. அந்த நேரம் தான் நான் நிரஞ்சன் பாத்தேன்.

ரேப் கேஸ்ல நான் அங்க அட்மிட் ஆகிருக்குறத தெரிஞ்சு போலீஸ் பாக்க வந்தாங்க. நான் காம்ப்ளயின் குடுக்க மாட்டேன்-னு சொன்னேன். பிரஸ்கும் நியூஸ் போய்டுச்சு. முதல என்ன பாக்க வந்தது அவர் தான். என்ன பாத்து ரேப் கேஸ் நீங்கலானு அவர் கேட்டதும் இந்த வார்த்தை எல்லாம் நான் கேக்கணுமான்னு மனசு பொறுக்காம நான் அழுதுட்டேன்.

என்ன நினைச்சாரோ வெளிய போனவர் என்ன ஒடனே வேற ரூம் மாத்துனார். மூணு நாள் அங்க தான் இருந்தேன். என்ன பத்தி ஒரு வார்த்தை கேக்க மாட்டார்.

என்னோட ஊர் எது-னு மட்டும் கேட்டு பஸ் ஸ்டாண்ட்ல வந்து போலீஸ் செக்யூரிட்டியோட இறக்கி விட்டு போனார். அதுக்கு அப்றம் அவரை நான் இங்க தான் பாத்தேன்” போலீஸ், பத்திரிகை என எப்படி தனியாக சமாளித்தாள் என யோசிக்கவே அச்சமாக இருந்தது தேவாவிற்கு.

“வீட்டுல சொல்லிருக்கலாம்ல பைரவி? இந்த கஷ்டத்தை நீ தனியா அனுபவிக்கணும்னு உனக்கென்ன தலையெழுத்து?”

“சொல்லணும்னு தான் ஆனந்த் போனேன், ஆனா என்ன பாத்த உடனே அம்மா தனியா கூட்டிட்டு போய் என்ன கேட்டாங்க தெரியுமா?” தேவாவை பார்த்து கேள்வி கேட்ட பைரவியின் முகம் வெறுமையாய் மாறியது.

“இத்தனை நாள் குடும்பம் நடத்திட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி தாலி இல்லாம வந்து நிக்கிற?-னு கேட்டாங்க. அந்த இடத்துலையே ஒடம்பு எரிந்து கருகிட மாட்டோமா-னு இருந்தது.

ஆனா என்ன பண்றது ஆனந்த், ஏற்கனவே ஒடம்பளவுளையும் மனசளவுளையும் நான் செத்துட்டேனே, அவங்க பேசுனது அதிகமா என்ன கொல்லாம ஊமையாகிடுச்சு. ஒரு பொண்ணு வீட்டு விட்டு மூணு நாள் போயிருந்தா அவ யார் கூடையாவது தன்னோட வாழ்க்கையை ஆரமிக்க தான் போயிருப்பாளா?”

முகத்திலிருந்த இருளை தாண்டி அவள் கண்ணிலிருந்து கொட்ட துவங்கிய நீர் நிற்கவில்லை. அன்று அன்னை கேட்ட கேள்வியில் பைரவி உயிர் துடித்துக்கொண்டிருக்க அவளது அமைதியை பொருட்படுத்த முடியாத பைரவி ஊமையாய் மாறி அன்னையை பார்க்க, அவளது அமைதி அவரை மேலும் வாட்டியது.

இரண்டு கைகளையும் வைத்து அவள் முதுகிலே அடிக்க சத்தம் கேட்டு வந்த பைரவி தந்தை , ‘என் மக மேல எந்த தப்பும் இருக்காது’ என அவள் தோள் பற்றி ஆறுதல் கூறிட, தந்தையின் பாச ஸ்பரிசம் கூட கயவர்களின் தொடுகையாக தெரிந்தது போல் மாயை.

அவர் கையையும் உதறி பித்து பிடித்தவள் போல் தலையில் அடித்துக்கொண்டு, ‘ஐயோ தப்பு பண்ணிட்டேன்… நான் தான் ம்மா தப்பு பண்ணிட்டேன்… நான் அங்க போயிருக்கவே கூடாது… ஐயோ தப்பு பண்ணிட்டேன் ம்மா’

பிதற்றியவள் சுவற்றில் சாய்ந்து தரையில் மடிந்து அழுகும் அவள் செயல் அன்னை மனதின் ஐயத்தை உறுதி செய்தது போல் இருந்தது.

ஆனால் மகள் அந்த நேரத்தில் தனியாக அவ்விடத்திற்கு எவர் துணை இல்லாமல் சென்றதை நினைத்து அழுதது பாவம் அவருக்கு எங்கு தெரியும்?? பேச வேண்டியவள் அமைதி காக்க, பேச கூடாதது எல்லாம் காற்றில் கலந்து மற்றவருக்கு பேச்சு விருந்தாக போனது.

“ஆறுதல் தேடி போன இடத்துல பழி தான் கிடைச்சது. பெத்தவங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லை, இனி அவங்களுக்கு என்ன நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லனு பிடிவாதமா இருந்துட்டேன்.

வெளிய எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு பேச ஆரமிச்சாங்க. அம்மா என் பக்கத்துல ஒரு போன் இருந்தா கூட சந்தேகமா பாப்பாங்க, நானே வெளிய வர நினைச்சாலும் என் கூடையே வர ஆரமிச்சாங்க.

நைட் ரெண்டு மூணு தடவை வந்து நான் ரூம்ல இருக்கேனான்னு எட்டி பாத்துட்டு தான் தூங்குவாங்க. ஏன் ஆனந்த், அவங்க என்னோட அம்மா தான? பொண்ணு பொய் சொன்னா கண்டு புடிக்க மாட்டாங்களா? உயிரே இல்லாத கண்ணு என்னோட கஷ்டத்தை அவங்ககிட்ட சொல்லலையா?

இந்த ஒரு வருஷம் அவங்க கண்ணுல சந்தேகத்தை தவற வேற எதுவும் நான் பாக்கல.

என் பக்கத்துலயே என்ன நடந்தாலும் இருந்த வீடு நான் ரூம் உள்ள அடைஞ்சதும் எட்டி கூட பாக்கல. சாப்பாடு இரங்கலை, தூக்கம் வரல. டெய்லி தூங்குறப்போ அவங்க கை என் மேல ஊறுற மாதிரி இருக்கும், எந்திரிச்சிடுவேன்.

எதுவுமே வேணாம் எங்கையாவது போய் தனியா இருந்துடலாம்னு நினைச்சாலும் அதுக்கும் தப்பா தானே பேசுவாங்க? அதன் இருந்துட்டேன். நீங்க என்ன சொல்றிங்களோ அதை செய்றேன்னு அப்டியே இருந்துட்டேன்”

உணர்ச்சிகள் துடைத்த அவளது குரல் கேட்டு கண்ணீர் கரித்தது தேவாவிற்கு. பூமாலையாய் கைகளில் அவளை ஏந்தி வீட்டை விட்டு வெளியில் வந்து திண்ணையில் அமர்த்தினான் காற்றோட்டத்திற்காக.

“உனக்கு ஆறுதல் சொல்ல என்கிட்ட வார்த்தை இல்லை சக்கரை, அசிங்கமா இருக்கு எனக்கு. கைக்குள்ள வச்சு பொத்தி பாக்க வேண்டிய ஒரு விசயத்தை நீ இழந்துருக்க தான். ஆனா அதையும் தாண்டி நாம வாழ்க்கைல பாக்க வேண்டிய சந்தோசம் நிறையா இருக்கு. மறக்க முயற்சி பண்ணுடி சக்கரை” முகம் பற்றி கெஞ்சினான்.

கண்ணீர் ஓரளவு வற்றியிருந்தது, “உங்க… உங்களுக்கு என் மேல சந்தேகம் எதுவும் இல்லையா ஆனந்த்?”

“நான் எதுக்கு சந்தேகப்படணும்?”

“எல்லாரும் சொல்ற மாதிரி நான் வேற ஒருத்தர விரும்பிட்டு உங்ககிட்ட பொய் சொல்றேனோ-னு”

“அறிவிருக்காடி உனக்கு? சந்தேகப்படுற விசயமா இது? அதுவுமில்லாம நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன், எனக்கு உன்னோட கடந்த காலம் தேவையில்லைனு. தப்பு பண்ணாத மனுசன் இருக்க மாட்டான்”

கடுகடுத்தவன் பைரவியை முறைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றிட முகம் கழுவி வந்த பைரவி காந்தம் போல் அவனோடு படுக்கையில் அணைத்துக்கொண்டாள்.

உறக்கம் வராமல் கண்களை மூடி படுத்திருந்த தேவா மனைவி வந்ததும் அவள் தோளோடு கை போட தயங்கிக்கொண்டே விழித்திட அவளும் அவனை தான் பார்த்திருந்தாள்.

“நான் தொட்டாலும் உனக்கு கஷ்டமா இருக்கா பைரவி?”

“இருந்தது, முதல் நாள் நான் உங்கள அடிச்சது கூட அது தான் காரணம். கொஞ்சம் மறந்து வீட்டுல இருக்கவங்களுக்காக அவங்க தேடி தர்ற வாழ்க்கையை ஆரமிக்க தான் நினைச்சு மாறின சமயமா இருந்தாலும் இடுப்புல கை படவும் அன்னைக்கு நடந்தது தான் நியாபகம் வந்தது. அந்த கோவத்துல தான் உங்க மேல கை வச்சிட்டேன்”

“ப்பா ஆனா என்னா அடி… வீட்டுல சும்மாவே இருந்து ஒடம்ப வளத்து வச்சிட்டு இந்த சின்ன பையன அடிச்சா வலி தாங்குவேனா நான்?” தடம் மாற்றி இழுத்தான் தேவா.

அதை புரிந்துகொண்டவள் அவன் கன்னம் கிள்ளி, “இந்த கன்னம் மாட்டு தோள் மாதிரி தானே இருக்கு, இதுல சின்ன பையனாம்ல?”

“நல்லா பாருடி, நான் சின்ன பையன் தான். மீசை கூட இப்ப தான் வளர ஆரமிக்கிது”

அவனது மீசையை பிடித்து இழுத்தவள், “இது இப்ப தான் வளருதா? முறுக்கிவிட்டா அய்யனார் மாதிரி இருக்கு”

“அவ்ளோ கம்பீரமாவா இருக்கேன்?” மின்னியது அவன் கண்கள்.

அந்த மினுமினுப்பை விட அதிகம் ஒளிர்ந்தது அவள் கண்களும், “ஆமா” தேவாவின் மீசையை முறுக்கிவிட்டவள் கை அப்படியே அவனது கையை எடுத்து தன்னுடைய இடையோடு வளைத்து வைத்தது.

தேவா கையை இறுக்கமாக நிறுத்தி அவளை பார்க்க, “ஒரு வருஷம் இல்லாத நிம்மதியான தூக்கம் இந்த ரெண்டு வாரமா தான் இருக்கு. அதுக்கான ஒரே காரணம் நீங்க தான்” அவள் வார்த்தையில் தளர்ந்திருந்த கரத்தை தன்னோடு ஒன்ற வைத்தாள்.

“நம்பிக்கையா?” ஆசையாக பார்த்தான் அவள் பதிலுக்காக.

“அதுவும் தான், அதையும் தாண்டி சில காரணமும் இருக்கு” முகம் சிவந்து வெட்கத்தை மறைக்க கண்களை மூடி உறங்க தயாரானாள்.

“அப்டி என்ன காரணம்? சொல்லு கேப்போம்”

“உங்க ஆர்வத்தை மறைச்சு வைங்க, எனக்கு தூக்கம் வருது” ஆசையை துளிர்க்கவிட்டு கவர்ந்திழுத்தவள் அந்த கொடியினை அறுத்துவிட்டு உறங்க தயாராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உறங்குபவளின் முகத்தை பற்றி தன்னை பார்க்க வைக்க விழித்துக்கொண்டவள் எதுவும் அறியா பிள்ளை போல் கண்களை திறந்தாள், “என்ன?”

“சொல்லுடி”

“மாட்டேன்”

பஞ்சாய் மேலே படர்ந்திருந்தவளை தலையாய் கட்டிக்கொண்டான் வன்முறையாக, “எனக்கு இப்பயே அந்த சில காரணங்களை தெரிஞ்சாகணும்”

“எனக்கு இப்பயே தூங்கியாகணும்”

“ஏய் ரொம்ப பண்ணாதடி”

“நீங்க ரொம்ப பிடிவாதம் பிடிக்காதிங்க” போலியாக முறைத்தவள் அவனை போலவே அவளது கன்னத்தை பற்றிக்கொண்டாள்.

“அப்போ சொல்ல மாட்ட?”

“மாட்டேன், தூங்குங்க”

“முத்தம் குடு”

முகத்தை சற்று குனிந்து அவளிடம் கட்டளையிட்டு நிற்க அசையா பேதை தயக்கத்தோடு, “நான் காரணத்தை சொல்லவா?” அவன் வழிக்கு அவள் வர, இப்பொழுது அவன் வழி மாற்றினான்.

“அதெல்லாம் வேணாம் எனக்கு முத்தம் தான் வேணும்”

தலை தாழ்த்தியவள், “ஆனந்த்…” என உருகிய குரலில் தயக்கத்தோடு நிறுத்தினாள்.

“கண்ண பாத்து பேசணும் பைரவி” அவள் இன்னமும் தயக்கம் காட்ட நாடியை பிடித்து கண்ணை பார்க்க வைத்தான்,

“என்னடி வச்சிருக்க உன் குரல்ல? ஆனந்த்-னு நீ சொல்ற ஒவ்வொரு தடவையும் நாடி நரம்பெல்லாம் அப்டியே ஜிவ்வுனு இழுக்குடி உன் பக்கம்” கண்கள் சுருங்க ஆசையாய் உலாவினான் அவள் அகத்தை.

“ப்ளீஸ் ஆனந்த்…”

“சொல்லாதடி. உன் அனுமதிக்காக அமைதியா இருக்கேன், ஆனா இவ்ளோ நெருக்கத்துல நிக்கிற நேரம் இப்டி நீ ஆழமா என் பேர சொல்றப்போ என்னையவே மீறி உன்ன நெருங்கிடுவேனோனு பயமா இருக்கு சக்கரை”

துடித்துக் கொண்டிருந்த அவள் கண்களை முத்தமிட்டவன் மெதுவாக கன்னத்திற்கு பட்டு போன்ற முத்தம் ஒன்றை கொடுத்து, “இப்போ எனக்கு கன்னத்துல முத்தம் குடு போதும். உன் அனுமதி இல்லாம என் பார்வை கூட தப்பா போகாது” என்றான்.

தேவா கொடுத்த முத்தங்களில் கிறங்கி ஏகாந்த சுகத்தை அனுபவித்தவள் கண்களை திறக்க ஒற்றை புருவத்தை உயர்த்தி சிரிப்போடு கன்னம் காட்டினான்.

எளிதாக இந்த கைவளைவினுள் அவள் நுழைந்துவிடவில்லை, பல சந்தேகம், பல கேள்வி, பல ஆராய்ச்சி செய்து தான் அவனோடு நெருங்கி நிற்கவே முன்வந்தாள்.

என்னிடம் எதை பெரிதாக கண்டுவிட்டான் என அவள் மௌனமாக கேட்கும் கேள்விகளுக்கு கண் மேல் முத்தமிட்டது கூட ஒரு பதில் தான். சதையை தேடி வரவில்லை, உன்னை உனக்காக மட்டுமே தேடி வந்தேன் என அவன் சொல்லும் இந்த ஒற்றை வார்த்தைக்காக தான் தான் அனைத்தையும் இழந்தேனோ என்ற சிந்தனைகளும் உதிக்காமல் இல்லை.

வேண்டும் என்றே அவன் உணர்வுகளை கிளறிவிட பைரவி அவன் கழுத்தோடு கட்டிக்கொண்டு கழுத்தில் முத்தம் வைக்க சிலிர்த்தது தேவாவின் உடல்.

“சக்கரை…” குரலில் அதிர்ச்சி சிரிப்பு ஒலித்தது.

“அவ்ளோ தான் போயா” வெட்க சிரிப்போடு அவன் நிஜத்தில் துயில் கொண்டாள் ஆனந்தின் பைரவி.

காந்தமென தன்னை அவளோடு எப்பொழுதும் ஈர்க்கும் அவள் அருகாமை ரசிக்க துவங்கியவன் அதிகம் அது தன்னை கவர்ந்திழுக்க முற்படுவதையும் அறிந்துகொண்டாடு, எண்ணிலடங்கா காதலோடு சரணடைந்தான்.

(ஏனுங்க ஒரு கவரிங் மோதரமாவது தங்களேன் ??)

 

Link for my facebook group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!