Skip to content
Post Views: 14,068
“இப்ப சொல்லு பொண்ணுங்க பின்னாடி எதுக்கு போன..??” என்ற அதிர்துடியனின் குரலில் கதி கலங்கி போனான் விஷ்ணு.
“என்ன சார் சொல்றீங்க..?? எந்த பொண்ணு..??” என்று அவன் முகம் பார்க்க,
அவனோ விழிகளாலேயே தூரத்தில் சென்று கொண்டிருந்தவர்களை சுட்டி காட்ட ,
“அப்போது தான் அங்கே பெண்கள் இயற்கை உபாதைக்காக கழிவறை நோக்கி செல்வதை கண்டவனுக்கு அதிர் துடியனின் கோபம் எதனால் என்று புரிய,
Advertisement
“அய்யய்யோ சா…சா.. சார் நீங்க நினைக்கிற மாதிரி தப்பா எதுவும் இல்லை சார் சொல்ல போனா நீங்க சொல்லி தான் அவங்க போறதையே பார்க்கிறேன்.., நான் சன்செட் அப்புறம் மலையை வீடியோ எடுத்துட்டு போயிட்டு இருந்தேன் வேற யாரையும் கவனிக்கலை.., உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா இதுக்கு முன்ன எடுத்த வீடியோவை காட்டுறேன்” என்று பீதியகலாத முகத்துடன் அவன் கூற,
சில நொடிகள் அவன் மீது ஆழமாக பார்வையை பதித்திருந்தவன் அவன் பேச்சில் இருந்த உண்மையை கண்டுகொண்டு ‘இதை முன்னாடியே சொல்றதுக்கு என்னடா ..??’ என்றான் அவன் கழுத்தில் இருந்து கையை எடுத்து நெட்டி முறித்தவாறே.
விஷ்ணுவோ மூச்சை ஆழமாக எடுத்துக்கொண்டு கழுத்தை நீவிவிட்டவாறே, “அது நீங்க போனை பிடிங்கிட்ட” என்று ஆரம்பிக்கவும்,
Advertisement
‘ஏன்டா ஒரு போன் கையில இருந்தா அக்கம் பக்கம் கூட உங்களுக்கு தெரியாது இல்ல’ என்றவன் அவனுக்கு மீண்டும் அழைப்பு வரவும் அதை ஏற்றவாறே விஷ்ணுவிடம் ‘கிளம்பு’ என்றான்.
Advertisement
அவன் தந்தை தான் மீண்டும் அழைத்திருந்தார்.
அவர் பேசி முடிக்கும் வரை கேட்டு கொண்டு இருந்தவன் பின் மீசையை இருவிரலால் நீவிக்கொண்டே, ‘இல்ல வேண்டாம்பா இதுல அவங்களை கொண்டு வந்து எதையும் நாமலே வளர்க்க வேண்டாம் நீங்க கவலையை விடுங்க இதை நானே பார்த்துக்குறேன்’ என்றான் தீர்மானக்குரலில்.
அதை கேட்ட சுந்தரலிங்கத்தின் முகத்தில் சிறு கீற்றாக புன்னகை விரிந்தது.
Advertisement
பின்னே அவருக்கும் அது தானே வேண்டும்..!!
அதனால் உடனே ‘சரிப்பா’ என்று வைத்துவிட்டார்.
தொழிலில் பல வருட அனுபவம் இருந்தாலும் பெருகிவரும் தொழில்நுட்ப யுகத்தில் சுந்தரலிங்கத்தால் அதற்க்கு இணையாக வரும் பிரச்சனைகளை கையால்வதில் சிக்கி தவித்து வருகிறார். சில நேரம் அவர் வார்த்தைகளே அவருக்கு எதிராக திரும்பி சமீபகாலமாக தொழிலில் சிறு சறுக்கலையும் சந்தித்து வருபவருக்கு மூத்த மகன் பொறுப்பை எடுத்து கொண்டாள் ஆசுவாசமாக இருக்கும்.
ஆனால் இரு மகன்கள் இருந்தும் தனியாக அல்லாடி கொண்டு இருக்கிறார் அதிர்துடியன் அவன் தொழிலை முன்னிறுத்தி பொறுப்பை ஏற்க மறுக்கிறான் இளைய மகனோ பொறுப்பில்லாமல் இருக்க அவன் கையில் தொழிலை கொடுக்க அவருக்கு விருப்பம் இல்லை.
திருமணமாகி தந்தையாகி இருந்தாலும் இன்னுமே ப்ரித்வியை ஒருவர் பின்னிருந்து இயக்கி கொண்டு தான் இருக்க வேண்டும் அப்படி மற்றவரின் வழிக்காட்டுதலில் செய்தாலும் பல நேரம் சொதப்பி வைத்து அவர்களின் கோபத்திற்கு ஆளாகி நிற்ப்பான்.
அவனிடம் பொறுப்பை கொடுத்து காலத்திற்கும் நிம்மதி இன்றி அலைய அவர் தயாராக இல்லை. இப்போது அதிர்துடியனே களத்தில் இறங்க ஒப்புக்கொண்டதில் நிம்மதியாக அழைப்பை துண்டித்தார்.
‘சார்’ என்று விஷ்ணு மெல்லிய குரலில் அழைக்க,
அதியோ தீவிரமாக கைபேசியில் வேறு எண்ணை தேடி கொண்டு இருந்தவன் உடனே குறிப்பிட்ட எண்ணிற்கு அழைப்பு விடுத்து பேச தொடங்கிவிட்டான்.
அவன் குரலில் இருந்த கடுமையும் வார்த்தைகளில் இருந்த உறுதியும் அவன் பேசிய செய்தியையும் கேட்ட விஷ்ணுவிற்கு கைகால்கள் கிடுகிடுக்க இதயம் வேகமாக துடிக்க தொடங்கி விட்டது தெறித்த விழிகளுடன் அவனையே பார்த்து நின்றவன் தன் போல அதியிடம் இருந்து சில அடி தள்ளி நின்று கொண்டான்.
‘நாளைக்கு முடிச்சிருக்கணும் புரிஞ்சதா..???’ என்று அதிர்துடியன் பேசிக்கொண்டிருக்க, இப்போது விஷ்ணு விரிந்த விழிகளில் அகலாத பயத்துடன் அதிர்துடியனையே உடல் உதற பார்த்து நின்றான்.
பேசி முடித்து திரும்பியவன் விஷ்ணு இன்னும் கிளம்பாமல் இருப்பதை கண்டு,
‘என்ன..??’ என்று புருவம் உயர்த்தினான்.
அவனோ பீதியகலாத முகத்துடன், “சா… சார் சாரி சார்.. தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிடுங்க” என்றான்.
அவன் கைபேசியில் மெசேஜ் வந்ததற்க்கான ஒலி கேட்கவும் அதை திறந்து கொண்டே ‘போ’ என்று அவன் சைகை செய்யவும் ..,
தயக்கத்துடன் அவனையே பார்த்து நின்றவன் மெல்ல தைரியத்தை வரவழைத்து கொண்டு, ‘சார்’ என்று மீண்டும் அவனை அழைத்தான்.
‘என்ன..??’
‘எ…என் .. போன்’
“என்னது..?” என்று அழுத்தமாக அதி பார்க்க,
‘இல்ல..இல்லா சார்’ என்று அவன் இதழ்களை ஈரப்படுத்தி கொண்டு நிற்க,
‘என்ன இல்ல..!!’ என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே சென்றவன் இறுதியாக, ‘டேய் இன்னொருமுறை உன்ன நான் போனோட பார்க்க கூடாது புரியுதா..?? உன் அப்பாவோட வந்து போனை வாங்கிக்கோ’ என்றிட,
‘என்னது அப்பாவா..??’ என்று அவன் உறைந்து போய் நிற்க,
‘சொன்னது புரிஞ்சதா..??’ என்றான் மீசையை நீவியவாறு..,
‘புரியுது சார்’ என்றவன் உடனே பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் எடுத்திருந்தான்.
விஷ்ணுவை மிரட்டி அனுப்பி விட்டு அதிர்துடியன் வேகமாக அன்னதானம் நடக்கும் இடத்திற்கு வந்தவன் எங்கும் தென்படுகிறாளா.. என்று யாழியை தேட எங்கும் அவள் இல்லை.
வேட்டி நுனியை பற்றிக்கொண்டு சுற்றிலும் ஒருமுறை பார்வையை சுழல விட்டு கொண்டு அவன் நிற்க,
‘யாரை தேடுற துடியா..??’ என்று வந்தார் சொக்கு.
‘ஒன்றும் இல்லை’ என்று தலை அசைத்தவன் மனதில் மீண்டும் யாழியின் முகம் மின்னி மறைய அழுத்தமான அவன் அதரங்களில் புதிதாய் பூத்த புன்னகையுடன் அங்கிருந்த நாற்காலியில் தலைக்கு பின் கரங்களை கோர்த்து கொண்டு அமர்ந்தான்.
************************
“யாருடா அவன் என் தம்பி மேல கை வச்சவன்..?? என்று கைகுட்டையை தண்ணீரில் நனைத்து அவன் மூக்கில் இருந்த ரத்தத்தை துடைத்து கொண்டே கேட்டவள் அவன் பதிலளிக்கும் முன்..,
‘ஏன்டா அந்த ஆளை சும்மாவா விட்டுட்டு வந்த எனக்கு ஒரு போன் பண்ணி இருந்தா வந்திருப்பேனேடா, வந்து ஒரு கை பார்த்திருப்பேன் அதுவும் என் தம்பி மூக்கை உடைச்ச அவன் கையை…” என்றவளை இடையிட்டவன்,
“கிழிச்ச.., சோத்து மூட்ட !! ஏன்டி அந்த ஆளுக்கு தெரியாம நான் உனக்கு கால் பண்ணேன் எங்கடி நீ போனை எடுத்த” என்று அவன் சீற,
“டேய் புளியோதரையும் சாம்பார் சாதமும் சூடா மணக்க மணக்க இருக்கவும் ஆறிடும் முன்ன சாப்பிட்டுட்டேன் செம டேஸ்ட்.. அதான் உன் போன் எடுக்கலை அப்புறம் இங்க கவர் பண்ண ஆரம்பிச்சதுல மறந்தே போயிட்டேன்டா”
‘ஆனா நான் கால் பண்றதை பார்த்துட்டு உடனே என் செல்போனையும் பிடிங்கிட்டு போயிட்டாரு..,”
‘என்னடா சொல்ற’
‘ஆமாடி எவ்ளோ கெஞ்சி பார்த்தேன் கொடுக்கவே இல்லை’
‘அது இதுன்னு ஒரே அட்வைஸ்’
‘பூமராடா’
‘ஆமாடி’ என்று தலை அசைக்க போனவன் குழப்பத்துடனே இல்லை என்றான்
அவளோ இருகைகளையும் தட்டி கொண்டே எழுந்தவள்,
“தெரியும்டா ஊருக்கு நாலு பேர் இப்படி இருப்பானுங்க சின்ன பசங்க சந்தோஷமா இருந்தாலே இவனுங்களுக்கு மூக்கு வேர்த்துடும் வயத்தெரிச்சல் பிடிச்சவங்க .., இவங்களை எல்லாம் திருத்தமுடியாதுடா என்னமோ நாட்டையே திருத்த பிறந்த அவதாரா புருஷன் மாதிரி கிளம்பிடுவாங்க ” என்று அவள் பேசிக்கொண்டே செல்ல ,
‘ஏய் லூசு அந்த ஆளை அப்படியும் சொல்றதுக்கு இல்லடி’
‘வேற எப்படிடா’
‘ஐயோ இப்போ அதுவா முக்கியம் என் போன் போச்சுடி, அப்பாவை கூட்டிட்டு வந்து வாங்க சொல்றார்’
‘இருடா யோசிப்போம்..’ என்ற யாழியின் முகத்தில் தீவிர யோசனை சில நேர நடைக்கு பின் அவனிடம் வந்தவள்,
‘விஷ்ணு அந்த ஆள் எப்படி இருப்பான் போட்டோ வச்சி இருக்கியா..??’ என்று கேட்க.
‘ஏன்டி அந்த ஆள் என்ன என் ப்ரெண்டா எடுத்ததும் செல்பி எடுத்து உனக்கு அனுப்பிட்டு பேச.., அவர் என்னை உயிரோட விட்டதே பெரிய விஷயம்..’
இல்லடா யாரு என்னனு தெரிஞ்சா ‘ஆன்மீக தளத்தில் அராஜக ஆசாமின்னு’ அவனை பத்தி ஒரு வீடியோ போட்டு கதறவிடலாம் அப்போ அவனே தெறிச்சி ஓடி வந்து உன் போனை கொடுப்பான் இல்ல அதுக்கு கேட்டேன்.
விஷ்ணுவோ தலையை பிடித்து கொண்டவன், ” நீ நினைக்கிற மாதிரி நடக்க வாய்ப்பே இல்ல வேணும்ன்னா அந்த ஆள் நம்ம ரெண்டு பேரும் இன்னொரு முறை அவர் கையில் கிடைச்சா நம்மளை கதற விடுவாரு”
‘என்னடா சொல்ற..??’
ஆமாடி அவர் என் கிட்ட பேசிட்டு இருக்கும் போதே அவருக்கு ஒரு போன் வந்தது அப்புறம் அவர் இன்னொரு போன் பண்ணி யார்கிட்டயோ பேசினப்போ கோபத்தோட அவங்க கிட்ட, “மொத்தமா முடிச்சிட்டா அவனுக்கு காலம் முழுக்க வலி இருக்காது அதை நொடிக்கு நொடி அவன் அனுபவிக்கிற மாதிரி கையை எடுத்துடுங்கன்னு வெட்ட சொல்லிட்டான்டி”
அதை கேட்டவளுக்கு மூச்சுகாற்று தாளம் தப்பி போக அதை ஆழ்ந்து எடுத்தவாறே, ‘என்னடா சொல்ற..??’
‘நிஜமா தான் யாழி’ என்றவனின் குரலில் அத்தனை நடுக்கம்.
‘பயப்படறியா விஷ்ணு ..??’ என்றாள் அவளுமே சிறு நடுக்கத்துடன்.
‘லைட்டா’
தம்பியின் கண்களில் கண்ட அச்சம் அவள் மனதை பிசைய உடனே தன்னை தேற்றி கொண்டு, ‘டேய் என் தம்பியையே பயப்பட வச்ச அந்த ஆளை நான் பார்க்கணுமே வாடா இப்பவே போய் தேடலாம்’ என்று அவன் கையை இழுத்து கொண்டு செல்ல,
‘இந்த கூட்டத்துல எங்கடி போய் தேடறது’
‘அப்புறம் எப்படிடா உன் போனை வாங்குவ’
‘போன் போனா போகுது ஆனா இன்னொரு முறை அந்த ஆள் கிட்ட மட்டும் சிக்க கூடாதுடி.., பார்வையே பயங்கரமா இருக்கு ஏதாவது ரவுடி கும்பல் தலைவானா இருப்பான் போல நமக்கு எதுக்கு வம்பு வேணாம் வா உன் போன் இருக்கே அதுல வீடியோ எடுத்துட்டு ஊர் போய் சேரலாம்’ என்று அவளுடன் இணைந்து சென்றான்.
*****************************
மீண்டும் அதியின் கைபேசி ஒலிக்க எடுத்து பார்க்க ஆராதனா தான் அழைத்திருந்தாள்.
என்ன ஆரூ..??
“அண்ணா நாங்க இப்போ இடுக்கு பிள்ளையார் கோவில் கிட்ட இருக்கோம்”
“சரி அதுக்கு நான் என்ன பண்ண…?? என்ன விஷயம்..??”
அண்ணா இந்த கோவில் வித்யாசமா இருக்கு இதுல அம்மா உள்ள போயிட்டு வெளியே வரணும்ன்னு சொல்லிட்டு இருக்காங்க ஆனா எனக்கு பயமா இருக்கு
“பச் ஆரூ அம்மாக்கு விருப்பம்ன்னா ஏன் வேண்டாம் சொல்ற அவங்க ஆசை தீர சாமி கும்பிடட்டும்” என்றவனுக்கு அப்போது தான் நினைவு வர,
‘எங்க இருக்கேன்னு சொன்ன..??’ என்றான்
‘இடுக்கு பிள்ளையார்’ என்று கூறவும் கண்களை சுருக்கி விரித்தவன்,
“இப்போ அங்க எதுக்காக போறாங்களாம் இவ்ளோ அவசரமா நான் கேட்டேனா கல்யாணம்..?? எதுக்கு இப்படி அவங்களும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டபடுத்திட்டு இருக்காங்க..?? எதுக்கு உன்னை கூட அனுப்பினேன் இதையெல்லாம் எடுத்து சொல்ல மாட்டியா..?? ஏற்கனவே சுகர் இருக்கு இன்னும் என்னவெல்லாம் இழுத்து விட்டுப்பாங்க” என்று பேசியவன் மறுபுறம் ஆராதனா ஏதோ கூற,
‘அம்மா கிட்ட கொடு’ என்றான் இறுகிய குரலில்.
“அம்மா எதுக்கு இந்த ரிஸ்க்.. நீங்க அதிகமா கஷ்டபடுத்தாதீங்க நடக்கும் போது எல்லாம் நடக்கும்” என்றான் மனதில் யாழியை நிறுத்தி.
‘நீ சும்மா இரு அதி உனக்கு என் வேதனை புரியாது…’
‘ம்மா அதுக்காக’ என்றவனின் குரலில் இப்போது சீற்றம் அதிகரித்தது என்ன முயன்றும் அன்னை செய்து கொண்டிருக்கும் முட்டாள் தனத்தை அனுமதிக்க முடியவில்லை.
“ம்மா கிரிவலம் மட்டும் போங்க அதுவும் நிதானமா அங்கங்க உட்காந்து ரெஸ்ட் எடுத்து போயிட்டு வாங்க எவ்ளோ நேரமானாலும் பரவால்ல ஆனா இப்படி செய்யாதீங்க ஒருவேளை உங்களுக்கு கண்டிப்பா இடுக்கு பிள்ளையார்ல வெளில வரணும்ன்னு வேண்டுதல் இருந்தா உங்களுக்கு பதில் நான் செய்யறேன் நீங்க கஷ்டபடாதீங்க’ என்றான் இலகுவான குரலில்.
“நீ என்னை சமாதனபடுத்த சொல்ற அதி உனக்கு பெருசா சாமி நம்பிக்கையே இல்ல அதுல …”
“ம்மா இப்போ உங்களுக்காக அன்னதானம் செய்யலையா..?? நம்புங்கம்மா” என்று அவன் பேசி கொண்டு இருக்கும் போதே மரகதத்தின் முன் வந்து நின்றாள் யாழி.
error: Content is protected !!