Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 5.1

காலையிலிருந்து ஓட்டமும் நடையுமாக தங்கள் வீட்டிற்கும் தாத்தாவின் வீட்டிற்கும் மாறி மாறி நடக்கும் அன்னையை அமைதியாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த பைரவி அவருடைய அமைதியை கெடுத்துவிட கூடாதென்று அவரை சிறிதும் நெருங்கவில்லை பைரவி.

மாலை ஐந்து மணி போல வீட்டிற்கு வந்தவர் அவளுடைய அறையில் முடங்கி கிடப்பதை பார்த்து கதவை தட்ட, சில நொடிகளில் வந்து நின்ற மக்களிடம், “டிரஸ் மாத்து கடைக்கு போறோம்” என்றார்.

தேவாவுடன் ஏற்பட்ட சிறு மோதலிலிருந்து இன்னும் வெளி வராமல் இருந்தவளுக்கு வெளியில் எல்லாம் செல்ல மனம் ஒவ்வவே இல்லை.

“நீங்க போயிட்டு வாங்க ம்மா” சற்று இடைவேளையில் தான் தேவா உள்ளான் என்பதை உணர்ந்த சீதா மகளை உள்ளே தள்ளி கதவை அடைத்தார்,



Advertisement

“வீடு சந்தோசமா இருக்கு பைரவி. எதுலையுமே நீ மட்டும் தான் ஒட்டவே மாட்டிக்கிற. மாமா எதுவும் கேட்டான்னா உன்ன பத்தி சொல்லுற மாதிரி இருக்கும். வேணாம்.

நாங்க அசிங்கப்பட்டது எல்லாம் போதும் ம்மா. தயவு செஞ்சு வந்துடு, சந்தோசமான நேரத்துல உன்னால என் அப்பா அம்மா சங்கடப்பட்டு நிக்க கூடாது” அன்னையின் வார்த்தையில் கெஞ்சுதல் உள்ளதா இல்லை வெறுப்பு உள்ளதா என பிரித்தறிய முடியாத அளவு இருந்தது அவர் முகபாவனை.

சூம்பிய முகத்தோடு, “வர்றேன்” என்றவள் வேறு உடையை தேட சென்றிட, நிம்மதியோடு வெளியேறினார் சீதா.

Advertisement

முகத்தில் பொழிவே இல்லாமல் தயாராகி அறையை விட்டு வெளியில் வந்த நேரம் குளித்து இடையில் ஒரு ட்ராக் பாண்ட் மட்டும் அணிந்து வெற்று உடலோடு தலையை காய வைத்து நின்ற தேவாவை பார்த்ததும் உடல் நடுங்கியது பைரவிக்கு.

Advertisement

பூட்டியிருந்த கதவின் மீது கால்கள் தடுமாறி சாய்ந்திட, பைரவியின் அலறலில் அவளை திரும்பி பார்த்தவன், முகமெல்லாம் வியர்த்து விரிந்த கண்களோடு இதழ்கள் நடுங்க நின்றவளை பார்த்து உச் கொட்டியவன்,

“என்ன இங்க படமா காட்டுறாய்ங்க, ஏ ச்சீ பே”

அவன் குரல் கூறியதன் அர்த்தம் புரியாவிடியானும் தேவாவின் குரலில் இருந்த ஆண்மை அவள் கண்களில் தேங்கி நின்ற கண்ணீரை வெளியேற்ற வேகமாக தன்னுடைய அறை கதவை நடுங்கிய கைகளோடு திறக்க முயன்றவள் முயற்சி எல்லாம் வீணாகி போனது.

Advertisement

“எதுக்கு இப்டி கை நடுங்குது?” முகத்தில் நீரை ஊற்றியது போல் சிந்திய வியர்வையை கவனித்தவன் சினம் எல்லாம் பறந்து அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.

ஆணின் குரலில் மீண்டும் அவனை பார்த்து திரும்பியவள் கண்கள் தன் உடலை பார்த்து அப்பட்டமாக பயத்தை காட்டுவதை புரிந்தவன் உடனே அறை வாயிலில் வைத்திருந்த டீ-ஷர்ட்டை எடுத்து அணிந்தான்.

“ரிலாக்ஸ் ஆகு” அழுத்தமாய் அவள் முன் இடைவெளிவிட்டு நின்றவன் கூற, அவன் வார்த்தைகள் தந்த ஆழத்தில் மெல்ல மெல்ல ஆசுவாசமடைந்தவள் கதவின் கைப்பிடியை பிடித்து, அதில் தலை சாய்த்து தன்னை கட்டுப்படுத்தினாள்.

“உனக்கு என்ன பிரச்சனை?” – தேவா

இல்லை என தலையை அசைத்தவள் அவன் முகத்தை திரும்பி கூட பார்க்கவில்லை.

“என்னமோ மறைக்கிற, ஒடம்பு எதுவும் சரியில்லையா? அத்தைய கூப்புடவா?”

வேகமாக தேவாவை பார்த்தவள் தலையை தலையை ஆட்டி, “வேணாம் வேணாம், எனக்கு ஒன்னுமில்ல” என்றவள் விறுவிறுவென கீழே ஓடிவிட, அவளை புருவம் உயர்த்தி பார்த்து நின்றான் தேவா.

பைரவி சென்றதும் மெதுவாக தயாராகி கீழே வந்த பொழுது அவன் குடும்பத்தில் அனைவரும் தயாராகி நின்றனர். அதிலும் வெள்ளை நிற சுடிதார், ஆகாய நீல நிற கால்ச்சட்டை அணிந்து நின்ற அத்தை மகள் இந்துமித்ராவை பார்த்தவன் ரசனையாக விசிலடித்துக்கொண்டு அவளை நெருங்க, அவன் கையை பிடித்து நிறுத்தினார் நாயகி.

“தேவா, என்ன பண்ற?” – நாயகி

“என் முறைப்பொண்ண பாக்க போறேன், நீ ஏன் நடுல வர்ற?”

அன்னையை தாண்டி சிரிப்போடு செல்லவிருந்தவனை பிடித்து நிறுத்தினார் மீண்டும், “டேய் கொஞ்சம் அடக்கி வாசி, இது உன் தாத்தா ஊர் மாதிரி இல்ல. யோசிச்சு என்ன பண்றதா இருந்தாலும் பண்ணனும்”

அவர் கையை விளக்கிவிட்டனன், “அதெல்லாம் என்னைக்கோ யோசிச்சாச்சு” மித்ராவை நோக்கி நடந்தவன் அவள் அருகே சென்று நின்றதும், “ஏண்டா மித்ரா, நீ பொறந்ததுல இருந்தே இப்டி தானா?”

அவனின் மொழி புரியாமல் விழித்தவள், “என்ன புரியல” என்றாள்.

“இல்ல பொறந்ததுல இருந்தே நீ இப்டி அழகா தான் இருப்பியா இல்ல இப்ப என் கண்ணனுக்கு இவ்ளோ அழகா இருக்கியா?”

சுற்றம் பார்க்கவில்லை, சொந்தம் பார்க்கவில்லை தேவா, சாதாரணமாக பேசும் அளவிற்கு தான் பேசினான். அவன் பேசுவதை கேட்டு மித்ராவின் தந்தை சத்யம் கூட சிரித்துவிட மித்ராவிற்கு வெட்கம். பெரியவர்கள் கூட அவனின் இரட்டை அர்த்தமில்லாத பார்வையை உணர்ந்து

“என்னடா இப்டி தைரியமா சைட் அடிக்கிற?” விக்னேஷ் சகோதரனை ஆச்சிரியமாக பார்க்க, “அவராச்சும் சொல்றாரே நீ எல்லாம் எதுக்குடா இருக்க?” மித்ரா வாயை திறந்து விக்னேஷை குற்றம் சாட்ட மௌனமாய் அவளை பார்வையாலே விழுங்கினான் விக்னேஷ்.

“ரைட்டு இங்க வேற ரூட்டு ஓடுது போலயே” விக்னேஷ் காதில் குனிந்து தேவா கிசுகிசுக்க, சொல்லாதே என்னும் விதமாய் இருந்தது விக்னேஷின் பதில் பார்வை.

“ரைட்டு அப்ப எனக்குன்னு இருக்குறது தெத்துப்பல்லு நிவேதா தானா?”

“நான் இங்க தான் இருக்கேன்”

நிவேதா நினைவுபடுத்த அசடு வாய்ந்தவன் அவள் பக்கம் திரும்பினான், “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, பூத்திருச்சு வெக்கத்தை விட்டு… பேசி பேசி ராசியானதே”

அவள் நாடி பிடித்து ஒரு லாரி ஐஸ் வண்டியை அவள் தலையில் கூட்டினான் பாடல் மூலம். நிவேதாவிற்கு குளுகுளுவென இருந்தாலும் தெருவில் வைத்து அவன் செய்வது திகிலை கொடுத்தது. ஒருவர் பார்வை ஒருவரை போல் இருக்காதல்லவா, அவன் கையை சட்டென தட்டிவிட்டாள்.

“டேய் ரோட்டுல நின்னு இதென்ன பழக்கம்?” ராஜரத்தினம் மகனிடம் கடிந்துகொள்ள உதட்டை சுளித்தான் மகன்.

“கெளம்பலாமா?” பேச்சை மாற்றினான்.

“போகலாம், ஒருத்தருக்கு மட்டும் இடம் இல்ல, இதுக்காக இன்னொரு கார் எடுக்கணும், நீ கார்ல வா” – ராஜரத்தினம்

“அப்போ நானும் உங்க கூட வர்றேன்” நிவேதா

அவனோடு ஒட்டிக்கொள்ள, “நீ மச்சான் கூட வாடா, நாம பறக்கும் ராசாலியே ராசாலியே நில்லுன்னு பாடிட்டே போகலாம்”

தந்தையை பார்வையால் சீண்டிக்கொண்டே தன்னுடைய வண்டியை நோக்கி செல்ல, “விடு ரத்தினம், விளையாட்டு புள்ளைங்க” அர்ஜுனன் பேச்சை மீறி மகனை அவரால் கண்டிக்கவும் முடியவில்லை.

காரினுள் அமர்ந்திருந்த பைரவி கார் கண்ணாடி வழியாக வெளியில் நடந்ததை அமைதியாக பார்த்திருக்க, பெரிய வீட்டிற்குள் சென்ற தேவா தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்து வாசலில் நிற்க சரியாக அவனுக்கு நேர் எதிரில் கண்ணாடியில் தலை சாய்த்து அமர்ந்திருந்த பைரவியின் தரிசனம் தான் கிடைத்தது.

தன்னுடைய தோளை பிடித்து வாகனத்தில் ஏறி அமர்ந்த நிவேதாவிடம், “உன் அக்கா ஏன் இப்டி இருக்கா?” பார்வை மொத்தமும் பைரவியிடம் தான் தேவாவிற்கு.

“அது… அது ஒன்னுமில்ல மச்சான். சித்தி ஏதாவது திட்டிருப்பாங்க, வாங்க அவங்க எல்லாரும் போகுறதுக்கு முன்னாடி நாம போகலாம்”

வண்டியை கிளப்ப வைக்க நிவேதா தயாராக, அதற்குள் விக்னேஷ் வந்து நிவேதா தலையில் அடித்து, “கார்ல போ” என மிரட்ட, “நான் வர மாட்டேன், போங்க”

சிணுங்கிய நிவேதாவை கை பிடித்து இழுத்து கீழே இறக்கினான், “தெரிஞ்சவங்க பாத்தா தேவையில்லாத பிரச்சனை தான் வரும், சரி உனக்கு வழி தெரியுமா?”

“எத்தனை வருசமா இந்த ஊர்ல இருக்கா தெரியாம எப்படிடா இருக்கும்?”

“இவளுக்கு தெரியாதுடா, அவ்வளவு நியாபக மறதி”

அதற்கு மேல் அவளும் வாதாட விரும்பவில்லை அசிங்கப்பட்டது போதுமென உதட்டை சுளித்து வாகநிதினுள் ஏறி அமர்த்திட, சிரிப்போடு தேவா பின்னால் ஏறி அமர்ந்தான் விக்னேஷ். பாதையை காட்ட, தேவா அந்த திசையில் வாகனத்தை செலுத்தினான்.

“எத்தனை வருசமா லவ் பண்றீங்க?” இந்துமித்ராவை குறிப்பிட்டு தேவா கேட்டான்.

“எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து, அவ எப்ப இருந்ததுன்னு தெரியல” – விக்கி

“சரி வீட்டுல பேச வேண்டியது தான? அவகிட்ட சொல்லிட்டியா?” – தேவா

“சொல்லி தன் தெரிஞ்சுக்கணுமா தேவா? ஏன்டா, அவளுக்கு என்ன வேணும்னாலும் முதல போய் நிக்கிறது நான் தான். அவ பிறந்தநாள் கிப்ட், அவ ஆசைப்பட்டு கேட்ட வண்டின்னு வீட்டுல அவ கேட்டு கிடைக்காதது எல்லாம் நான் அவ கண்ண பாத்து அவ முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவேன். இத விட வேற என்னனு நான் அவகிட்ட சொல்ல?” – விக்கி

“டேய் முட்டாளா டா நீ? காசு பணத்தை கொண்டு வந்து கண் முன்னாடி காட்டுனா அவ மயங்கி உன் பின்னாடி சுத்தணுமா? அவ என்ன கடவுளா நீ மனசுல நினைக்கிறத வெளிய சொல்ல? இல்ல அப்டியே தெரிஞ்சாலும் அந்த பொண்ணு எப்படி எனக்கு இவன கல்யாணாம் பண்ணி வைங்கன்னு சொல்லுவாங்க?” – தேவா

“வீட்டுல சொல்ல வேணாம், ஏன் என்கிட்டே சொல்லலாம்ல? நான் அவ பாக்குற சாதாரண பார்வையை லவ்ன்னு நினைச்சிட்டு வீட்டுல பேசிட்டா தப்பாகிடும்ல?” – விக்கி

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் முன்னாடி தானடா சொன்னா?” – தேவா

“நேரா சொல்லணும் தேவா” – விக்கி

“அந்த ஈர வெங்காயத்தை நீ உரிக்க வேண்டியது தான? வெட்டு ஒண்ணா துட்டு ரெண்டா சொல்லுன்னு புடிச்சு நிறுத்து, சொல்லிடுவால்ல?” தேவா கூறவும் அமைதியாக இருந்தான் விக்னேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!