Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Isaiyindri ennaven

இசையின்றி என்னாவேன் 1 (1)

எங்கும் பரபரப்பாக காணப்பட்ட அவர்களின் காலேஜ் ஆடிட்டோரியத்தை சுற்றியும் முற்றியும் பார்த்தவள், “இங்க எதுக்கு டி வந்திருக்கோம்?” என மலரின் காதுகளை கடித்தாள்.

“நம்ம பிரகாஷ் சார் யாராவது அழகான ஹேன்ட் ரைட்டிங் இருக்கிறவங்கள கூட்டீட்டு வர சொன்னார்.. நான் தான் உன் பேரை சொன்னேன்” என்றாள் மலர்வழி.



Advertisement

“எதுக்காக?” 

Advertisement

“அது அடுத்த மாசம் ஸ்டேட் லெவல்ல நடக்கிற தி கிரேண்ட் காலேஜ் ஃபெஸ்ட்க்கு நம்ம காலேஜ் சார்பா கலந்துக்க போறவங்களுக்கான ஆடிஷன் நடக்குது.. அதுக்கு சிங்கிங் காம்பெட்டீஷனுக்கு ரெஜிஸ்டர் எழுத தான் சார் உன்ன கூப்பிட்டாரு” என்றவுடன் அவளை முறைத்தவள், “அடியே இதுக்காகவா கூப்பிட்டு வந்த.. இந்த பீரியட் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி நல்ல நாளிலையே அது ஒன்னும் புரியாது.. இதுல கிளாஸ கட் அடிச்சா சுத்தம்” என அவள் முகத்தை சுறுக்க

Advertisement

“யெஸ் நானும் அதேதான் சொல்றேன்.. நல்ல நாளிலையே அது ஒன்னும் புரியாது, இதுல நான் இன்னிக்கு தயிர் சாப்பாடு வேற லன்ச்க்கு சாப்பிட்டேன். அந்த கரடி சார் வந்து கிளாஸ் எடுக்க.. நான் தூங்கி வழிய .. அவரு சாக் பீஸ என் மண்டையில அடிக்கனு ஒரே கூத்தா இருக்கும்.. இதெல்லாம் தேவையா சொல்லு?.. அதான் இந்த மாஸ்டர் பிளான் எப்படி ?” என சிரித்தாள் மலர்.

Advertisement

“நீ மட்டும் கட் அடிக்க வேண்டியது தான.. என்னை ஏன் டி மாட்டி விட்ட?” 

“என்ன நீ நான் னு பிரிச்சு பேசுற? என மலர் கோவப்பட

“அப்பறம் நோட்ஸ் க்கு என்ன பண்ணுவீங்க மேடம்?” என அவள் நக்கலாக கேட்டாள்.

“நோட்ஸ் தான நீங்க கலப்படாதீங்க மிஸ் இன்னிசை நான் அந்த டாப்பர் தானியா கிட்ட இருந்து வாங்கி தரேன், உங்க நோட்ஸ்க்கு பாதிப்பு வாராம நான் பாத்துக்கிறேன்” என்றாள் மலர்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க அவர்கள் அருகே வந்த அவர்களின் ஆசிரியர் பிரகாஷ் “இந்தா மா இசை..” என இசையிடம் ஒரு ரெஜிஸ்டரை நீட்டியவர், எந்தெந்த இடங்களில் என்னென்ன விவரங்களை எழுத வேண்டும் என கூறி, கடைசியில் அனைவரின் கையெழுத்தையும் வாங்க சொன்னவர், வேறு ஒரு ரெஜிஸ்டரை குடுத்து அதில் போட்டியாளர்கள் பெயர், அவர்கள் பாடும் பாடல், நடுவர்கள் தரும் விமார்சனங்கள் மற்றும் மதிப்பெண்களை எழுத சொன்னார்.

இருவருக்கும் உட்கார இடத்தை தயார் செய்து தந்தவர், “மலர் இசை மார்க்ஸ் எழுத நீ அடுத்த யாரு வந்து பாடப் போறாங்கனு மைக்ல சொல்லு” என்று மலரிடம் மைக்கை தந்தவர் மீண்டும் வந்து, “இப்போ டைம் ஒன்னு ஆகுது ரெண்டு மணி வரைக்கும் தான் ரெஜிஸ்ட்ரேஷன் டைம் அதுக்கு அப்பறம் யார் வந்து கேட்டாலும் பேர் எழுதாதீங்க” என்றுவிட்டு போனார்.

நேரம் ஆக ஒவ்வொருவராக வந்து தங்கள் பெயரை பதிவு செய்ய, இசையும் மலரும் அவர்களின் வேலையில் மூழ்கினர். 

நேரம் இரண்டை கடக்க பெயர் பதிவையெல்லாம் முடித்து விட்டனர். நடுவர்கள் வர தாமதமானதால் ஆடிஷனும் இன்னும் தொடங்கியிருக்கவில்லை. இசை தன்னை சுற்றி நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், உண்மையில் ஆடிஷனில் தேர்வாக வேண்டும் என ஆர்வத்துடன் வந்தவர்கள் கொஞ்சம் பதட்டத்துடன் இருக்க இவர்களை போல கிளாசை கட் அடிக்க வந்தவர்கள் பேசி சிரித்து நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அதில் விதிவிலக்காக நண்பர்கள் இருவர் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருக்க இசையின் பார்வை அவர்களிடம் நிலைத்தது. அதில் இவர்களை நோக்கி வந்து ஒருவன், “எக்ஸ்கியூஸ்மீ .. நேம் ரெஜிஸ்டர் பண்ணனும்” என சொல்ல “சாரிங்க ரெஜிஸ்டரேஷன் டைம் இரண்டு மணி வரைக்கும் தான்.. டைம் முடிஞ்சுது” என்றாள் இசை .

“பிலீஸ்ங்க .. ஒரு சின்ன பிரச்சினை அதான் லேட் ஆயிருச்சு. இந்த ஒரு டைம் மட்டும் ஹெல்ப் பண்ணுங்க” என கெஞ்சலாக‌ கேட்க

“சாரிங்க.. இரண்டு மணி வரைக்கும் தான் டைம்.. இதுக்கு மேல என்னால ஒன்னும் பண்ண முடியாது ரியலி சாரி” என்றாள் சங்கடமாக.

“பிலீஸ்ங்க .. இந்த ஒரு டைம் மட்டும்” என்று அவன் கெஞ்ச மலருக்கு கோவம் வந்துவிட்டது.

“ஏங்க அவ தான் சொல்றால.. டைம் முடிஞ்சிருச்சுனு. திரும்ப திரும்ப இப்படி பேசுனா என்ன அர்த்தம்” என்றாள் கோவமாக.

“ஏங்க ரொம்ப கஷ்டப்பட்டு ஓ.டி வாங்குனோம்ங்க.. இந்த ஒரு தடவ மட்டும் ஹெல்ப் பண்ணுங்க பிலீஸ்” என்றான் மலரிடம் கெஞ்சலாக 

 “சாரிங்க எங்களால முடியாது டைம் இரண்டு மணி வரைக்கும் தான் நீங்க சீக்கிரமே ரெஜிஸ்டர் பண்ணியிருக்கனும்.. இப்போ எங்களால ஒன்னும் பண்ண முடியாது” என்றாள் மலர் கொஞ்சம் கராராகவே. 

இதற்கு மேல் இவர்களிடம் பேசி பயனில்லை என தோன்ற அவனும் சென்றுவிட்டான்.

இசைக்கு ஏனோ கொஞ்சம் கஷ்டமாக போனது. “ஏ பாவம் டி அவங்க..” என்றாள் மலரிடம். “அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்? சீக்கிரம் ரெஜிஸ்டர் பண்ணியிருக்கனும் அது அவங்க தப்பு” என அலட்சியமாக மலர் சொல்ல

இசைக்கு ஏனோ மனதே கேட்கவில்லை, “மலர்ர்..” என தயக்கமாக அழைக்க அவள் என்ன என்பது போல் பார்த்தாள், “இவங்கள மட்டும் ரெஜிஸ்டர் பண்ணிக்கலாமா? பாவம் டி..ஏதோ பிரச்சினைனு சொன்னாங்கல..” என்ற இசையை முறைத்த மலர், “இசை உனக்கு என்ன கிறுக்குப் பிடிச்சிருக்கா? சாருக்கு தெரிஞ்சா நல்லா திட்டிவாரு.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்றாள்.

“அதான் சார் இங்க இல்லைல .. அதுவும் இல்லாமல ஆடிஷன் தான் இன்னும் ஆரம்பிக்கலையே .. இவங்க மட்டும் தான பிலீஸ் ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம் டி பாவம் டி”

“இசை.. சாருக்கு தெரிஞ்சா திட்டுவாரு டி. சார் வந்து கேட்டா என்ன சொல்லுவ.. ” என மலர் அதிருப்தியுடன் பேச

“அதான் ஸ்டாஃப் யாரும் இல்லைல.. சார் கேட்க நான் சொல்லிக்கிறேன்.” என்றவள் “நான் போய் அவங்கள கூட்டீட்டு வரேன்..” என எழுந்து சென்றாள் .

இசை ஆடிட்டோரியத்திற்கு வெளியே வர இருவரும் அங்கே தான் நின்றுக் கொண்டிருந்தனர். இவளிடம் பெயரை பதிவு செய்ய கேட்டவன் முகத்தை தொங்க வைத்தபடி நின்றிருக்க இன்னொருவன் எங்கேயோ வெறித்த படி நின்றிருந்தான். 

அவர்களின் அருகே சென்றவள், “அண்ணா..” என்றழைக்க இருவரும் ஒருசேர திரும்பினார். “அண்ணா.. வாங்க ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்” என்று அவள் அழைக்க ,

“டைம் முடிஞ்சுதுனு சொன்னீங்க?” என கேள்வியாக புருவத்தை சுருங்கினான். 

“ஆமா அண்ணா, அனா பரவாயில்லை வாங்க ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்” என்றழைத்தாள் இசை .

“ரொம்ப தேங்க்ஸ்ங்க‌” என புன்னகைத்தவன், அவன் நண்பனிடம் திருப்பி, “டேய் இனியா ரெஜிஸ்டர் பண்ணிக்கலாமாம் வா” என்றழைக்க “நான் வரல டா எழில்” என மூகத்தில் அடித்ததை போல கூறினான் இனியன்.

இசைக்கு அதில் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவளை சங்கடமாக பார்த்த எழில், “டேய் அந்த பொண்ணு நமக்காக தான வந்து சொல்லுது இப்படி மூஞ்சியில அடிச்ச மாதிரி வரலனு சொல்ற” என்றான் கோவமாக அவனுக்கு மட்டும் கேட்கும்படி. 

“சரி டா மெதுவாவே சொல்றேன் நான் வரல..” என்றான் இனியன். “டேய் ஓவரா பண்ணாத.. நான் ரொம்ப கெஞ்சிக் கேட்டதால அந்த பொண்ணு இப்போ வந்து சொல்லுது.. பிலீஸ் வா” என்றழைக்க இனியன் வர முரண்டு பிடித்ததான். 

“அண்ணா..” என்று தயக்கமாக எழிலை அழைத்தவள், “கொஞ்சம் சீக்கிரம் வாங்க, சார் வரதுக்குள்ள ரெஜிஸ்டர் பண்ணனும்” என்றாள்.

“இரண்டு நிமிஷங்க நீங்க போங்க நாங்க வரோம்” என்று அவளை உள்ளே அனுப்பிய எழில் இனியன் முரண்டு பிடித்ததும் அவனை உள்ளே இழுத்துச் சென்றான்.

இசையிடம் வந்த எழில், “ரொம்ப தேங்க்ஸ்ங்க” என கூற அவனை பார்த்து புன்னகைத்தவள், “பரவாயில்லை அண்ணா.. இதுல என்ன இருக்கு, நீங்க பேர சொல்லுங்க” என்றவளிடம், “நீ தேவையில்லாத வேலை பண்ற இசை” என்றாள் மலர் எழிலை முறைத்தபடி. அவனும் பதிலுக்கு அவளை முறைத்தான்.

“நீ சும்மா இருடி .. நான் பார்த்துக்கிறேன்” என்றவளிடம், “என்னமோ பண்ணி தொலை” என கோவமாக கூறியவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“அவ அப்படி தான் நீங்க பேர் , கிளாஸ், டிபார்ட்மென்ட் எல்லாம் சொல்லுங்க அண்ணா” என்ற இசையிடம் “தமிழினியன்.. ஃபைனல் இயர், பிஎஸ்சி ஐடி” என கூறியவனிடம், ஸ்பெல்லிங் செக் பண்ணிக்கோங்க..” என அவள் காட்ட பெயரை சரிப்பாத்தான் எழில். 

மேலும் அவனிடம் மற்ற விவரங்களையும் கேட்டு எழுதிக் கொண்டவள், “அண்ணா அவங்கள இங்க சைன் போட சொல்லுங்க” என கூற, “ஓ.. எங்க கிட்ட எல்லாம் டைரெக்ட்டா சொல்ல மாட்டாங்களோ” என மனதில் நினைத்த படி இனியன் அங்கு கையெழுத்திட்டான். 

இசை அப்படியெல்லாம் நினைக்கவே இல்லை இவன் பெயர் முதற்கொண்டு எழிலே சொல்ல அவளும் அவனிடமே தமிழினியனை கையெழுத்து போட சொன்னாள் அவ்வளவு தான் .

“அண்ணா..” என எழிலை பார்த்து தயக்கமாக இழுத்தவள், “நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணேன் னு யாருக்கிட்டயும் சொல்லாதீங்க, சப்போஸ் சார் கேட்டா இரண்டு மணிக்கு முன்னாடியே ரெஜிஸ்டர் பண்ணீட்டதா சொல்லுங்க” என‌ கூற “ச்சே ச்சே சொல்ல மாட்டேன்ங்க எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்கீங்க.. கண்டிப்பா சொல்ல மாட்டேன்” என புன்னகைத்தான். அவனை பார்த்து புன்னைத்தவள், “சரி அண்ணா இன்னும் கொஞ்ச நேரத்தில அடிஷன் தொடங்கிரும் அங்க வெயிட் பண்ணுங்க” என கூற இருவரும் தலையசைத்து விட்டு இருக்கையில் வந்து அமர்ந்தனர்.

கொஞ்ச நேரத்தில் நடுவர்கள் வர ஆடிஷனும் தொடங்கியது. இசையும் மலரும் அவர்களின் வேலையை செய்தபடி போட்டியாளர்களை பற்றி தங்களின் அபிப்பிராயங்களை தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். 

“நான் கூட ஏதோ சுமாரா பாடுவங்கனு நெனச்சா.. இவங்க என்னடானா கார்த்திக், பிரதீப் குமார், சிட் ஶ்ரீராம், ஸ்ரேயா கோஷல் ரேன்ஜ்க்கு பாடுறாங்க” என்றாள் இசை

“அது மட்டுமா.. எவ்வளவு ஹேன்ட்சமா இருக்கானுங்க.. இந்த மாதிரி பசங்களாம் நம்ம காலேஜ்ல எங்க இருக்கானுங்கனே தெரியலயே” என்றபடி பெருமூச்சு விட்டாள் மலர்.

“ஹம் இந்த மாதிரி காதுக்கு இனிமையா கண்ணுக்கு குளிர்ச்சியா சைட் அடிக்க கிளாஸ் கட் அடிக்கலாம் தப்பில்ல” என்ற இசையை பார்த்து மலர் குறும்பாக புன்னகைக்க, இருவரும் சிரித்துக் கொண்டனர்.

“இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?..” என மலர் கேட்க “இன்னும் ஒருத்தர் மட்டும்.. தமிழினியன்” என இசை கூற,”ஓஓ.. உங்க ஆளு.. என்கிட்ட சண்டை போட்டு பேர ரெஜிஸ்டர் பண்ணியே.. ஒழுங்கா பாடுவாரா?” என ராகம் இழுத்தாள் மலர்.

“ஆளு எல்லாம் ஒன்னும் இல்ல, ஏதோ அந்த அண்ணா கெஞ்சிக் கேட்டது கஷ்டமா இருந்திச்சுனு ஹெல்ப் பண்ணேன் அவ்ளோ தான்” என கோவமாக கூறியவள், “இனி ஆளு கீளனு சொன்ன பல்ல ஓடைச்சிருவேன்” என மலரை மிரட்டினாள் .

“சரி டி இனி சொல்லலை. சார் பேச்ச மீறி ரெஜிஸ்டர் பண்ணியே, ஒழுங்கா பாடுவாரா?” 

“தெரியல பாடுவார்னு நினைக்கிறேன், இல்லாட்டி அந்த அண்ணா அவ்வளவு கட்டாயப் படுத்தி பாட வைப்பாங்களா..” என இசை கூற‌ “ம்ம் பார்க்கலாம்” என்றாள் மலர்.

கடைசியாக தமிழின் முறை வர மேடை ஏறினான், கூட்டத்தை பார்த்ததும் பயத்தில் கைகள் நடுங்கியது. கண்களை மூடி ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டு தன்னை கொஞ்சம் நிலைப்படுத்திக் கொண்டவன் எழிலை பார்க்க கண்களை மூடி திறந்து தைரியம் சொன்னவன் பாடுமாறு சைகை செய்ய தமிழ் படத் தொடங்கினான்,

ஹ்ம்ம் நன நன நான
நன நன நான 

என தமிழ் பாட அந்த அரங்கமே அமைதியானது..

ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
உன் வீட்டை தேடவா
உறங்காமல் தேயவா.. 
ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்

ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்.. 

என தமிழ் மேற் கொண்டு பாட அவனின் வசிகரிக்கும் குரலில் இசை அவளையும் மறந்து தமிழின் பாடலில் லயத்திருந்தாள்.

“ஹே தெரியாம சொல்லீட்டேன் டி.. நீ ரிஸ்க் எடுத்து ரெஜிஸ்டர் பண்ணது தப்பே இல்ல.. செமயா பாடுறாருலலல.. ச்சே என்ன வாய்ஸ் ” என மலர் கூற 

ஆமோத்திப்பாய் தலையை மட்டும் ஆட்டினாள் அவனிடம் இருந்து பார்வையையும் காதுகளையும் விலக்காமல். அவன் பாடலின் ஒரு பகுதியை கூட தவறவிட இன்னிசை தயாராக இல்லை. 

இன்னும் என்ன இடைவெளி
தூரம் மறுதளி
பக்கம் வந்தால் அனுமதி
போதும் அரை நொடி

ஓஹோ என்னை உன்னை பிரித்திடும்
காற்றில் கதகளி
மேலே நின்று சிரித்திடும்
மஞ்சள் நிலவொளி ..

என மேற்கொண்டு பாடியவன் 

 முழுப் பாடலையும் பாடி முடிக்க அந்த அரங்கம் முழுவதும் கை தட்டல்.

இந்த ஒரு பாடலில் தமிழினியனின் தீவிர ரசிகையாகிப் போன இன்னிசையோ,  அதுக்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்துடன் கைத்தட்டினாள். 

அனைவரின் பாராட்டையும் கைத்தட்டலையும் பெற்றவனுக்கு அந்த ஒரு நிமிடத்தில் உணர்ச்சிவசத்தில் கண்கள் கலங்கின, தன்னை சுதாரித்துக் கொண்டவன் சின்ன தலையசைப்புடன் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வர “மச்சான் சூப்பரா பாடுன” என ஓடிவந்து அவனை அனைத்துக் கொண்டான் எழிலமுதன் .

நடுவர்கள் தமிழினியனுக்கு மதிப்பெண்களை வழங்க, அதற்குள் அவனின் மதிப்பெண்களை எல்லாம் கூட்டிப் பார்த்துவிட்டு மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்த இசை அவன் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க , 

“மலர், அவங்க தான் நிறைய மார்க்ஸ் வாங்கியிருக்காங்க.. கண்டிப்பா அவர தான் செலைக்ட் பண்ணுவாங்க” என்றாள் உற்சாகமாக.

“ஹே சூப்பர் டி.. பின்ன இப்படியெல்லாம் பாடுனா கண்டிப்பா அவர தான் செலைக்ட் பண்ணுவாங்க” என்றாள் மலரும் அதே உற்சாகத்துடன்.

ஆடிஷன் முடிந்து முடிவுகளை அறிவிக்கும் நேரம் வர அனைவரும் ஆர்வமாக காத்திருந்தனர். 

மேடைக்கு வந்த நடுவர்களின் ஒருவர் நன்றியுரை கூறிவிட்டு, “இப்போ நடந்த ஆடிஷன்ல இருந்து நம்ம காலேஜ் சார்பா‌, அடுத்த மாசம் நடக்கப் போற தி கிரேட் காலேஜ் ஃபெஸ்ட்ல பார்டிசிப்பேட் பண்ண நாங்க செலைக்ட் பண்ணது, “நவீன் குமார் ஃபிரம் ஃபைனல் இயர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்” என கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் அறிவிக்க அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!