Skip to content
Post Views: 4,070
அத்தியாயம் 7
மாலை நேரம். ரசிகாவும் ஆதிரேயனும் சரண் குடும்பத்தை சந்திக்க கிளம்பினர். ஆதி முன் பக்கம் காரை திறந்தான். அவள் யோசனையுடன் நின்றாள்.
ரசி, “ஏறு” என்றான்.
சார், நான் பின்னே அமர்ந்து கொள்கிறேனே? என்றாள். அவளை பார்த்து “சரி” என தலையசைத்து கார் கதவை திறந்தான். அவள் அமர்ந்தும் யோசனையுடன் ஆதியை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் காரை எடுத்தான்.
Advertisement
என்ன? ஆதி கேட்க, சார் நாம முதல்ல ஸ்கூக்கு போகலாமா? என்று கேட்டாள். காரை நிறுத்தி, “ஸ்கூலுக்கா?” என்று கேட்டான்.
ம்ம்.முதல்ல நம்ம பசங்க தப்பு செய்யலைன்னு ஆதாரத்தை எடுக்கணும்.
“ஆதாரமா? டிடெக்டிவ் பேசுற மாதிரி இருக்கு” என்று ஆதி சிரித்தான்.
Advertisement
“சோ..ஃபன்னி” என்று முகத்தை திருப்பினாள். அவன் அவளை ரசித்து பார்த்துக் கொண்டே, எதுக்கு ஆதாரம்? கேட்டான்.
Advertisement
சார், நீங்க முதல்ல போங்க. அப்புறம் சொல்றேன் என்று அவள் போனை தீவிரமாக பார்த்துக் கொண்டே வந்தாள். அவளை பார்த்துக் கொண்டு சிந்தனையுடன் ஆதிரேயன் காரை பள்ளிக்கு செலுத்தினான்.
பள்ளியில் இறங்கியவுடன் சார், இது ஸ்கூல் தான? என கேட்டாள்.
ஆமா, பிரின்சிபுல் மேம் அறை எங்க இருக்கு? வாங்க அங்க தான் போகணும் என்றாள்.
Advertisement
அங்கே ஓடி வந்த ப்யூன் ஆதிரேயனை பார்த்து வரவேற்றார்.
“பிரின்சிபல் மேம்மை பார்க்கணும்” என்று ஆதிரேயன் சொல்ல, “மேம் கிளாஸ்ல்ல இருக்காங்க” என்று சொன்னான்.
“அவங்க கிளாஸ் முடிந்து வரட்டும்” என்று ரசிகா சொல்ல, அவர் அவளை ஒருமாதிரி பார்த்துக் கொண்டே சென்றார். சற்று நேரத்தில் தேனீருடன் வந்து ஆதிக்கு மட்டும் கொடுத்தார்.
“அவங்களுக்கும் கொண்டு வாங்க” என்று ஆதி சொல்ல, “சார் எனக்கு எதுவும் வேண்டாம்” என்று ரசிகா சொல்ல, “இந்தாங்க எனக்கும் வேண்டாம்” என்று ஆதி அவரிடமே கொடுத்தான்.
“சார், நீங்க எதுக்கு வேண்டாம்ன்னு சொல்றீங்க? வாங்கிக்கோங்க” என்று ரசிகா சொல்ல, “எனக்கு வேண்டாம்” என்றான் ஆதி.
சார், அந்தண்ணா எவ்வளவு பாசமா கொண்டு வந்துருக்காரு. வேண்டாம்ன்னு அவரை கஷ்டப்படுத்துறீங்க? என்று அவள் கேட்க, அவர் அவளை வியந்து பார்த்து, மேம் நீங்க யாரு? என்று ப்யூன் தயக்கமுடன் கேட்டார்.
“சரி குடுங்க” என்று ஆதி வாங்கிக் கொண்டான். நான் சார் பொண்ணுங்களுக்கு “கேர் டேக்கர்” என்றாள்.
ஓ..அவ்வளவு தானா? என்று அவர் ஆதியை பார்த்து, “மேம் இப்ப வரும் நேரம் தான் சார். வந்துருவாங்க” என்று பிரின்சிபுல் மேம்மை பார்க்க ஓடினார் அவர்.
ஆதியும் ரசிகாவும் இருந்த அறைக்கு வந்த பிரின்சிபில் மேம், ஆதியை வரவேற்றார். பக்கமிருந்த ரசிகாவை ஒருவாறு பார்த்துக் கொண்டே அவர் அறைக்கு அழைத்து சென்றார்.
ஆதியும் மேம்மும் பேசிக் கொண்டிருந்தனர். ஆதி அறிமுகப்படுத்துவான். விசயத்தை பேசலாம் என நினைத்த ரசிகா எழுந்து அவ்வறையில் இருந்த பொருட்கள், அவார்ட்ஸ், சான்றிதழ்கள், தொங்க விடப்பட்டிருந்த மெடல்கள் அனைத்தையும் பார்த்தாள்.
அவளை பார்த்த பிரின்சிபில் மேம் அவளை பற்றி கேட்க, அவரை பார்த்து ஆதி சொல்லும் முன் பிரின்சிபில் முன் வந்து, அவள் பெயர், ஊர், படிப்பு, வேலையை பற்றி சொல்லி விட்டு, ஆதி பசங்களின் “கேர் டேக்கர்” என சொல்லி விட்டு ஆதியை பார்த்தாள்.
அவன் புருவத்தை சுருக்கி ரசிகாவை பார்த்தான்.
ஏன் சார், பார்க்குறீங்க? ரசிகா கேட்டாள்.
ரசி, வந்த விசயத்தை விட்டு இங்கே இன்டர்வியூக்கு வந்த மாதிரி பேசிட்டு இருக்க?
சார், நானாவது இன்டர்வியூக்கு வந்த மாதிரி தான் பேசினேன். ஆனால் நீங்க மேம்மை பார்த்தவுடன் உங்களுடன் வந்த என்னை அறிமுகப்படுத்த வேண்டாமா? என கேட்டாள்.
என்ன இந்த பொண்ணு சாரிடம் உரிமையாக பேசுகிறாளே? என்று பிரின்சிபில் பார்த்தார்.
சரிம்மா, அதான் நீயே பண்ணீட்டியே? விடு. விசயத்தை பேசலாமா? என்று ஆதி கேட்க, மேம் எனக்கு ஒரே ஒரு ரெக்வெஸ்ட்? என்று கேட்டாள்.
என்னம்மா? பிரின்சிபில் கேட்டார்.
மேம். வெளிய நிக்கிற மேம்கிட்ட பேசுறீங்களா? ரசிகா கேட்க, அவங்கள உனக்கு தெரியுமாம்மா? பிரின்சிபில் கேட்டார்.
நோ மேம். நாங்க வந்த போது அவர்கள் பேசுவது என் காதில் விழுந்தது. அவங்க பொண்ணுக்கு உடல்நலமில்லாமல் மதியமே ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம். அவங்க கணவரிடம் அழுது கொண்டே கெஞ்சிக் கொண்டிருந்தாங்க. கொஞ்சம் பாருங்களேன் என்றாள்.
“ரசி, இதை எப்ப கவனிச்ச? நானும் அருகே தான இருந்தேன்” ஆதிரேயன் கேட்க, ப்யூன் அண்ணா உங்களுக்கு தேனீர் பருக கொடுத்த போது தான் கவனித்தேன்.
நீ போனை தானே பார்த்துக் கொண்டிருந்தாய்? அவன் கேட்க, செய்தி தான் அனுப்பிக் கொண்டிருந்தேன். கைக்கு தான் வேலை கொடுத்துக் கொண்டிருந்தேன். காது அவர் பேசியதை கேட்டேன் என்றாள்.
பிரின்சிபுல் வியந்து, பரவாயில்லை. நன்றாக கவனிக்கிறீங்க? “நீங்க டீச்சிங் பண்ண விருப்பட்டா எப்பொழுது வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளுங்கள்” என்று பிரின்சிபில் சொல்ல, “மேம் இன்டர்வியூ வச்சு செலக்ட் பண்ணா தான் நான் ஏத்துப்பேன்” என்று புன்னகைத்தாள்.
ஹேய் ரசி, நான் சொன்னது போல் வேலைக்கே சேர்ந்து விடுவாய் போல? ஆதி கேட்க, சார் முதல்ல உங்க வீட்ல எனக்கான கடமை முடிந்த பின் எனக்கும் வேலை வேண்டும்ல்ல என்று புன்னகைத்தாள். ஆனால் ஆதியின் முகம் வாடியது.
இதை பார்த்த பிரின்சிபில், சார் நான் பார்த்து, நீங்க இந்த பொண்ணிடம் சாதாரணமா பேசுறீங்க? என்று கேட்டார். ரசிகா ஆதிரேயனை பார்த்தாள்.
“கம்போர்ட் பண்றவங்களுடன் தான் நன்றாக என்னால் பேச முடியும் மேம்”. ரசி சொன்னது போல் முதல்ல “அவங்களிடம் பேசுங்க” என்று அவரை பார்த்தான்.
அந்த மேம்மை உள்ளே வர வைத்து, ஸ்பெசல் கிளாஸ் தானே? நீங்க உங்க பொண்ணை பாருங்க என்று பிரின்சிபில் மேம் சொல்ல, மேம் நான் உங்களிடம் ஏதும் சொல்லவேயில்லை என்று ஆதியையும் ரசிகாவையும் பார்த்தார்.
“குட் ஈவ்னிங் சார்” என்று அவங்க சொல்ல, “குட் ஈவ்னிங் உங்க பொண்ணை போய் கவனியுங்க” என்று ஆதியும் சொல்லி விட்டு, “ரசி ஓ.கே வா?” என “அவள் தான் தெரிவித்தால்” என சொல்லாமல் சொன்னான்.
மூவருக்கும் நன்றியை தெரிவித்து விட்டு அந்த மேம் சென்றார்கள். பின் ரசிகா லிது, நிது, சரண் பிரச்சனையை சொல்லி, மேம் எங்களுக்கு அந்த புட்டேஜ் மட்டும் தாங்களேன். சரணோட பெற்றோரை சந்தித்து பேசுறோம். அப்பொழுது தான் “எங்க பசங்க பள்ளிக்கு வருவாங்க” என்றதும், ஆதி ரசியை புன்னகையுடனும், பிரின்சிபில் மேம் திகைத்தும் பார்த்தார்.
என்னாச்சு மேம்? ஏதாவது தப்பா கேட்டுட்டேனா? ரசிகா கேட்க, ஆதி “வேண்டாம்” என கையசைத்தான். அவர் அவனை பார்த்து விட்டு, “ஒன்றுமில்லைம்மா. இருங்க சார்” என்று ஒருவரை வர வைத்து எடுக்க சொன்னார்.
அவர் எடுக்கவும் அந்த வீடியோவை பார்த்தனர். அதில் லிது, நிது சொன்னது போல் தான் இருந்தது. பிள்ளைகள் சொன்னதை கேட்காமல் “பாருங்க நல்லா பாருங்க சார்” என்று உணர்ச்சி வசப்பட்டாள் ரசிகா.
ஆதி அவளை பார்த்து, நான் தான் அன்றைய என் நிலையை சொன்னேனே? என்று கேட்டான்.
உங்க நிலையா? அப்ப பிள்ளைகள். நீங்களும் திட்டியதால் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க. அதுவும் எல்லார் முன்னும் செய்யாத தப்புக்காக கோபப்பட்டு இருக்கீங்க?
தப்பு தான். இப்ப என்ன செய்ய சொல்ற? ஆதியும் கோபமானான்.
எல்லாரும் முன்னும் நீங்க லிது, நிதுகிட்ட மன்னிப்பு கேளுங்க. உங்க பிள்ளைகள் தான கேட்பதால் என்னவாம்?
எல்லாரும் முன்னுமா? நான் யார் தெரியுமா உனக்கு? ரொம்ப பேசுற ரசி.
நான் சரியா தான் பேசுறேன். “நீங்க பிள்ளைகள் உங்க மேல வச்சிருந்த நம்பிக்கையை உடைச்சுட்டீங்க” என்று பென்டிரைவை நீட்டிக் கொண்டு இருவரும் சண்டை போடுவதை பார்த்து உதவ வந்தவரும் பிரின்சிபுல் மேம்மும் செய்வதறியாது நின்றனர்.
பென்டிரைவை வாங்கிய ரசிகா, கோபமாகவும் வேகமாகவும் வெளியே சென்றாள்.
“ஷ்..ஹா..பிள்ளைகளுக்கு மேல இருக்காலே” என்று ஆதியும் ரசிகாவிடம் உரிமையா பேசிக் கொண்டே “வாரோம்” என்று இவனும் கோபமாக சொல்லி விட்டு அவள் பின்னே சென்றான்.
“சித்திரன், இருவரும் ஏதோ புருசன் பொண்டாட்டி மாதிரு பேசுறாங்க, சண்டை போடுறாங்கல்ல” என்று பிரின்சிபில் மேம் கேட்க, “இந்த பொண்ணு நம்ம ஆதிரேயன் சார் பக்கத்துல கூட நிற்க முடியாது” என்றார் அவர்.
பார்க்க தான் நீங்க சொன்ன மாதிரி இருக்கும். ஆனால் இருவரும் “பக்காவா மேச் ஆறாங்க” என்று பிரின்சிபுல் மேம் புன்னகையுடன் சொன்னார்.
கோபமாக சென்ற ரசிகா கார் அருகே வர, ஆதியும் பின்னே வந்தான். இருவரையும் மறைந்து நின்று சக்தி பார்த்துக் கொண்டிருந்தான்.
“ரசி நில்லு” என்று ஆதி அவள் கையை பிடித்து, என்ன பேசுற? எல்லார் முன்னும் நான் எப்படி மன்னிப்பு கேட்பது? கோபமான கேட்டான் ஆதி.
ம்ம்..மரியாதை போயிடும்ன்னு பயமா இருக்குல்ல. அன்று பசங்களும் அப்படி தான் இருந்திருப்பாங்க. அந்த நேரம் தந்தையாக செய்ய வேண்டியதை செய்யாமல் நீங்களும் சேர்ந்து பசங்கள கஷ்டப்படுத்தி இருக்கீங்க?
அவங்க உங்க மேல இருந்த நம்பிக்கையை இழக்க வச்சிருக்கீங்க. அதனால் தான் அவங்க இந்த ஒரு மாதமாக சரியாக சாப்பிடாமல் உங்க மேல கோபமா இருந்திருக்காங்க. உங்களிடம் காட்டிக் கொண்டால் அப்பா கோபப்படுவாங்கன்னு தான் ஏதும் சொல்லாமல் உங்களது கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அதை கூட கவனிக்காமல் இருந்திருக்கீங்க என்று சத்தமிட்டாள்.
ஆதி கண்ணீருடன், நீ சொன்னது போல் பசங்களிடம் எல்லார் முன்னும் மன்னிப்பு கேட்கிறேன் என்றான். சக்தி அதிர்ந்து, இந்த பொண்ணு சொன்னதுக்காக அவன் மரியாதையை இழக்க ஒத்துக் கொண்டானா? என்று இருவரையும் பார்த்தான்.
உங்களுக்கு புரிய வைக்க தான் பேசினேன் சார். நீங்க உங்க பசங்களிடம் மட்டும் மன்னிப்பு கேளுங்க. போதும். “அடுத்தவங்க முன்னாடி நீ தலைகுனிய தேவையில்லை” என்று அவன் கையை விரித்து கைக்குட்டையை அவன் கையில் திணித்து “துடைச்சுக்கோங்க” என்றாள்.
“நேரமாகுது. வாங்க ரெஸ்டாரண்ட் போகலாம்” என்றாள்.
ரெஸ்டாரண்ட்டா? என்று அவன் கேட்க, ஆமா சார் நான் தான் சரண் குடும்பத்தை வர சொல்லி இருக்கேன். பிரேவேட்டா சாப்பிட்ட அறையை சொல்லுங்க. உங்க ரெஸ்டாரண்ட் தான் என்றாள்.
எப்ப இதெல்லாம் பண்ண? காலையில அவங்களிடம் இதை பற்றி பேசினேன். ஆனால் அவங்க ஓவரா பேசினாங்க. மீட் பண்ணலாம்ன்னு சொல்லி இங்க வந்தப்ப தான் மெசேஜ் பண்ணேன். அவங்க ஒத்துக்கிட்டாங்க என்றாள்.
ஆதி அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
சார், என்ன பண்றீங்க? அவங்க வரும் முன் நாம போகணும். காரை எடுங்க. நேரமாகுது என்று அவனை நகர்த்தினாள்.
வாவ்..இன்ட்ரஸ்டிங். பார்க்க தான் இந்த பொண்ணு கருப்பா இருக்கு. மூளைக்காரி தான். இல்ல ஆதியவே அசைத்திருப்பாலா?
ஹே பிளாக் கெர்ல், “ஐ அம் கம்மிங் ஃபார் யூ”. நீ தான் என் துரும்புச்சீட்டு. “ராஜாவை கவிழ்க்க உன்னை பயன்படுத்தினால் சரியாக இருக்கும்” என்று சக்தி எண்ணினான். ஆனால் அவள் தான் அந்த ராஜாவின் ராணியாக போகிறாளே? கவிழ்த்து விடுவாளா? என்ன?
இருவரும் ஆதியின் ரெஸ்டாரண்டிற்கு செல்ல, அங்கேயும் ஆதிக்கு பயங்கர உபசரிப்பு. நடப்பதை கவனித்துக் கொண்டே அவனுடன் உள்ளே சென்றாள் ரசிகா. அனைவரும் ரசிகா பற்றி கேள்வியுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
சரண் குடும்பமும் அறைக்குள் செல்ல, வீடியோவை காட்டி பேச்சை ஆரம்பித்தாள் ரசிகா.
ஒரு நிமிஷம், அது என்ன எங்க பொண்ணு? எங்க பொண்ணுன்னு சொல்ற? உனக்கும் ஆதிரேயன் சாருக்கும் பிறந்த பிள்ளையா? என்று சரண் அம்மா கேட்க, ரசிகா கண்ணில் கண்ணீர் வந்தது.
ஹலோ, அவங்க எங்க “கேர் டேக்கர்”. நீங்க எப்படி இப்படி பேசலாம்? என்று ஆதி சீற்றமானான். சரணின் அப்பா எழுந்து, “சாரி சார், அவங்க புரியாம பேசிட்டாங்க” என்றார்.
ஒவ்வொரு பேச்சுக்கு இடையிலும் எங்க பொண்ணுன்னு சொன்னா? என்ன நினைக்கிறது? சரண் அம்மா கேட்டார்.
மேம், முதல்ல உங்க பையன் செயலுக்கு பதில் சொல்லுங்க. எல்லாரும் உங்கள மாதிரி புள்ளைகளை நடத்த மாட்டாங்க என்றான் ஆதி.
நான் என்ன செய்தேன்? என்று அந்தம்மா கேட்க, உங்களுக்கு உங்க பையன் மேல் தான் தவறுன்னு தெரியாதா? இதை பாருங்க என்று அவர் தன் மகனை திட்டும் காட்சியும் இருந்தது.
ரசி, அழுறதை நிறுத்துறியா? பிள்ளைகளுக்கு செய்த அறிவுரையை நீயும் கடைபிடிக்காமல் அழுதுகிட்டு இருக்க? என்று ஆதி கேட்க, சரண் ஆதி ரசிகாவிடம் வந்து மன்னிப்பு கேட்டான். இனி இருவரையும் தொந்தரவு செய்ய மாட்டேன். இதை வெளிய மட்டும் சொல்லாதீங்க என்று அவன் அழுதான்.
அழுது கொண்டிருந்த ரசிகா கண்ணை துடைத்து விட்டு, சரணை அவளருகே அமர வைத்து, அழாத சரண். கொஞ்சம் யோசித்து பாரு. அன்று உங்கள் பள்ளியில் எல்லாரும் லிது நிதுவை பார்த்தாங்க. அவங்க எப்படி அழுதிருப்பாங்க? இனி இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று அவள் சொல்ல, அவன் பெற்றோரும் மன்னிப்பு கேட்டு விட்டு செல்ல இருந்தவர்களை நிறுத்தி ஆதியை பார்த்தாள்.
“உட்காருங்க சாப்பிட்டு போகலாம்” என்று ஆதி சொன்னான். அவர்கள் அமர்ந்தனர். ரசிகா எழுந்தாள்.
ரசி எங்க போற? ஆதி கேட்க, “வீட்ல இருந்து வந்து ரொம்ப நேரமாகிடுச்சு. நான் பசங்களிடம் பேசிட்டு வாரேன்” என்று அவள் வெளியே சென்றாள்.
சார், உங்களிடம் ஒன்று கேட்கவா? அந்த பொண்ணு கேட்க, என்ன? என்று அவரை பார்த்தான்.
அவங்க தாலி நீங்க கட்டியதா? என்று கேட்க, ஆதி கோபமாக ”இல்லை” என்றான்.
அப்புறம் எப்படி சார்? எந்த நம்பிக்கையில் சார் அந்த பொண்ணை காதலிக்கிறீங்க? அவர் கேட்க, அவள் எங்கே புருசனுடன் வாழ்ந்தாள்? அந்த நம்பிக்கை தான்.
சார், தாலி கட்டியவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் பொண்ணுங்க திட்டுவாங்க. புலம்புவாங்க. ஆனால் விட்டுக் கொடுக்க மாட்டாங்க.
உங்க பிள்ளைகளை அதிக கேர் எடுக்குறாங்க. அவங்களுக்காக தான் யோசிக்கிறாங்க. இப்ப கூட உங்களுக்கு தோன்றாதது அவங்களுக்கு தோன்றுதுன்னா. நீ முதல்ல காதலை சொல்லுங்க. இல்ல அவங்க வேலை முடிந்ததும் விட்டு போயிடாமல். அவங்க ஒத்துக்கலைன்னா பிள்ளைகளை வைத்து மூவ் பண்ணுங்க. கண்டிப்பா உங்களை விட உங்க பசங்க இந்த பொண்ணு இல்லாமல் கஷ்டப்படுவாங்க.
“ஒன்று மொத்தமாக விட்டு விலகுங்க. இல்லை அவங்க பக்கமிருக்க செய்ய வேண்டியதை செய்யுங்க” என்று அந்த பொண்ணு சொல்ல, ஆமா கண்டிப்பா பிள்ளைகள் ரசி இல்லாமல் இருக்க மாட்டாங்க. நான் அவளை காதலிப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?
நீங்கள் உரிமையாக கூப்பிடும் ரசி தான் சார். அதை விட உங்க பிள்ளைகளுக்காக “எந்த கேர் டேக்கர் இப்படி பேசுவாங்க?” நீங்க தான் பேசணும். ஆனால் அவங்க தான் பேசுனாங்க. பசங்கல்ல பார்த்துக்கோங்க.
அம்மா இல்லாமல் வளர்ந்த பிள்ளைகள் இவங்க திடீர்ன்னு விட்டு போயிட்டால் கண்டிப்பாக தாங்க மாட்டாங்க. கவனமா எதையும் செய்யுங்கள் என்றார் அவர்.
சாப்பாடு வரவே ரசியும் வந்தாள். எல்லாரும் சாப்பிட்டு விட்டு வெளியே வர, நண்பர் போல் பேசினார்கள். ஆதி சார், “ஆல் தி பெஸ்ட்” என்று ஆதி கையை அந்த பொண்ணு குலுக்கி விட்டு கணவன் பிள்ளைகளுடன் சென்றார். அவர்கள் குடும்பமாக செல்வதை ரசிகா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆதிரேயன் காதலுடன் அவளை பார்த்தான்.
கிளம்பலாமா? ஆதி கேட்க, ஓ.கே சார் என்று அவள் காரில் ஏறினாள். அந்த பொண்ணு சொன்னதே ஆதியின் மண்டையில் ஓடிக் கொண்டிருந்தது. அவன் ஆள் அரவமற்ற பகுதியில் காரை நிறுத்தி, பின்சீட்டில் ஏறினான்.
என்னாச்சு சார்? என்று எவ்வித பயமும் இல்லாமல் சாதாரணமாக பேசினாள். ரசி, “ரொம்ப தேங்க்ஸ்” என்று அவளை இழுத்து அணைத்தான் ஆதிரேயன்.
“சார், என்னாச்சு?” என்று அவனை விலக்கி விட்டாள் ரசிகா.
“பசங்க” என்று பேச முடியாமல் கண்ணீருடன் அவளை அணைத்தான்.
சார், என்ன பண்றீங்க? என்று ரசிகா அவனை விலக்க அவளால் முடியவில்லை. அவள் பதட்டமாக “ஆதி சார், நான் உங்க பொண்டாட்டி இல்லை” என்றாள்.
ஆமா, நீ என்னோட பொண்டாட்டி இல்லை தான். ஆனால் இனி இருப்பாயா? “என்னை விட்டு போயிடாத ரசி” என்றான்.
என்ன பேசுறீங்க நீங்க?
ரசி, எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ தான் உன் கணவனுடன் வாழவே இல்லையே. அவனும் சரியில்லைல்ல. என்னோட வந்துடு ரசி. உனக்கு எந்த கஷ்டமும் இல்லாமல் நான் பார்த்துக்கிறேன். நீ போயிடுவேன்..போயிடுவேன்னு சொல்லும் போதெல்லாம் மனசு வலிக்குது ரசி. “எனக்கும் நம்ம பாப்பாக்களும் நீ தேவை ரசி” என்று அவளை இழுத்து முத்தமிட்டான். அவள் கண்ணீருடன் அவனை தள்ளி விட்டு கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
சார், என்னை பார்த்தால் எல்லாருக்கும் எப்படி தெரியுது? நான் என்ன பொம்மையா? நான் எப்படி சார் உங்களை கல்யாணம் செய்து கொள்ள முடியும்? அவன் கட்டிய தாலியை பார்த்துமே இப்படி பேசுறீங்க? என்று அழுதாள்.
அழாத ரசி. எனக்கு நீ போதும் ரசி. என் மனைவியாகும் மொத்த தகுதியும் உனக்கு இருக்கு. எப்போதும் என் அருகிலும் பசங்க அருகிலும் நீ இருக்கணும். அவ்வளவு தான். உன்னை மத்தபடி நான் கட்டாயப்படுத்தலை. “எங்களை விட்டு மட்டும் போயிடாத ரசி” என்று அழுது கொண்டே ஆதியும் கூறினான்.
இல்ல சார், நான் என்னோட பசங்கள பார்க்கணும்.
உனக்கு பசங்களா?
ம்ம், என்னோட விபி இந்த வருடம் பள்ளியை முடித்து விடுவான். கண்டிப்பாக இந்த வருடம் முடிந்த பின் என்னை தேடி வந்து விடுவான். நான் அவனோட வாழ்க்கையை கவனிக்கணும். இங்கே வந்ததிலிருந்து என்னோட பசங்களிடம் நான் பேசவேயில்லை. என்ன செய்றாங்கன்னு கூட தெரியாது என்று அவள் அழுதாள்.
ஆதி அவள் தோளில் கை வைக்க, அவன் கையை தட்டி விட்டு, நான் ஏற்கனவே திருமணமானவள். உங்களுக்கு நான் சரியான பொருத்தம் இல்லை. வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க என்றாள்.
இல்ல ரசி. அவன் தாலி உன் கழுத்தில் இருந்தால் அவனை நீ பார்க்க நேரிட்டால் உன்னை தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவான். அதனால அவனை விவாகரத்து பண்ணிடு. என்னை கல்யாணம் பண்ணிக்கோ என்று ஆதி சொன்னதையே சொல்ல அவள் கோபமானாள்.
அவள் காரிலிருந்து இறங்க, “ரசி” என்று அழைத்தான் ஆதிரேயன்.
“நான் இப்பவே போறேன்” என நடந்தாள்.
அவனும் இறங்கி வந்து அவளை அணைத்து, “போகாத” என்று கதறி அழுதான் ஆதிரேயன். அவன் காதலையே எதிர்பார்க்காத ரசிகாவோ, அவனது கதறலில் திணறித் தான் போனாள்.
“சார், நான் போகல. காரை எடுங்க” என்று சிறுபிள்ளைக்கு சொல்வதை போல் சொல்லி அவன் தோளை தட்டினாள். அவளுக்கு பயமாக இருந்தது. ஆனாலும் அவனை அமைதியாக்க அணைத்தாள்.
கார் வீட்டை அடையவும் அதிலிருந்து இறங்கி, “சார் என்னால உங்களை இப்ப இல்லை எப்போதும் திருமணம் செய்ய முடியாது” என்று ஆணித்தனமாக சொல்லி விட்டு செல்ல, அங்கேயே உடைந்து அழுதான் ஆதிரேயன்.
உள்ளே சென்ற ரசிகா பசங்க அவர்கள் தாத்தாவுடன் விளையாடுவதை பார்த்துக் கொண்டு கண்ணீருடன் அறைக்கு ஓடினாள். இவளை பார்த்த சீதாம்மா பிரபாகரனை அழைத்து ஏதோ சொல்ல அவர் வெளியே வந்தார். ஆதிரேயன் காரின் பின்னே தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான்.
ஆதி, என்னாச்சு? அவர் பதற, அப்பா..என்று அவரை அணைத்துக் கொண்டு, “ரசி நம்மை விட்டு போகப் போறாளாம்” என்று மேலும் அழுதான்.
அமைதியா இரு. அவளுக்கு நேரம் கொடுத்து பார்ப்போம். ஆனால் அவள் இங்கிருந்து போகாமல் நான் பார்த்துக்கிறேன் என்று ஆதியை சமாதானப்படுத்தி அவனறைக்கு அழைத்து சென்றார்.
இரவு பசங்களை தூங்க வைத்து விட்டு தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் ரசிகா. ஆதிரேயன் கதறியதை நினைத்து, எனக்காக அழுகிறாரா? இவருக்கு நான் என்ன செய்தேன்? எனக்கும் இவருக்கும் கொஞ்சமும் பொருத்தமிருக்காது. ஆனால் இவர் என்னை காதலிக்கிறார். இது சரியா வராது என்று கண்ணீருடன் பசங்களுடன் படுத்திருந்தாள்.
மெல்லினா இன்று பள்ளி சென்று வந்திருப்பாள். அவள் நண்பர்கள் இல்லாது பள்ளியில் வெறுமையுடன் இருந்தாள். அவள் தன் நண்பர்கள் நினைவில் அழ, அருகே தானே ரசிகாவும் இருந்தாள்.
மெல்லினாவில் குலுங்கலில் அவளை அணைத்து ஆறுதலாக ரசிகா பேசினாள். ஆனால் மெல்லினா ரசிகாவை நகர்த்தி விட்டு, நீ எங்க யாரை நினைத்தும் கவலைப்பட தேவையில்லை. நான் அழுதால் உனக்கென்ன? நீ தான் சீக்கிரம் கிளம்பிடுவேல்ல. அப்புறம் எதுக்கு நல்லவிதமாக பேசுற? லிது, நிதுவை போல் என்னையும் ஏமாற்ற நினைக்காத!
நான் உங்களுடன் பழகுவது ஏமாற்றுவது போலா தெரியுது? பொய்யாகவா தெரியுது? ரசிகா கேட்க, நானும் உண்மையாகவே பாசமா இருக்கன்னு தான் நினைத்தேன். ஆனால் அண்ணாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்ட. நீ அண்ணி போல் இல்லை. அதனால் தான் பழகினோம். பாவம் லிது, நிது. “நீ கூடவே இருப்பன்னு நம்பி ஏமாறப் போறாங்க” என்றாள்.
ரசிகா மெல்லினாவின் பேச்சால் காயமானாள். ஆனால் மெல்லி, நான் வேலைக்காக தான் வந்தேன். என் வேலை முடிந்ததும் கிளம்பி தானே ஆகணும்? அதுக்காக எனக்கு உங்க யார் மீதும் பாசமேயில்லைன்னு சொல்ற?
அப்புறம் எதுக்கு அண்ணாவை பிடிக்காதுன்னு சொல்லீட்ட?
மெல்லி, சாரை பிடிக்கலைன்னு நான் சொல்லலை. அவரை நான் காதலிப்பது கல்யாணம் செய்வது முடியாத காரியம். உனக்கு இதெல்லாம் புரியாதும்மா என்றாள் ரசிகா.
ஏன் முடியாது? உனக்கு தெரியுமா? அண்ணாவும் அண்ணியும் கல்யாணத்திற்கு பின் ஒருநாள் கூட சண்டை போடாமல் இருந்ததில்லை. ஆதி அண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா? அண்ணியோட பேச்சும் நடவடிக்கையும் அந்த வயதில் எனக்கு பெரியதாக புரியல. ஆனால் அண்ணா சிரித்தே பார்க்கலை. அது மட்டும் நல்லா நினைவிருக்கு. உன்னால தான் இப்ப அண்ணா சிரித்தான். பசங்களுடனும் எங்களுடனும் பேசவாது செய்கிறான். அவனுக்கு உன்னை பிடிப்பதால் என்ன?
நீ தான் உன்னை நீயே தாழ்வாக நினைக்கிற? ஆனால் எங்க வீட்ல எல்லாரும் உன்னை பிரித்து பார்க்கவேயில்லை. தமிழ் அங்கிள் அவங்க பொண்ணாவே உன்னை பார்க்க ஆரம்பித்து விட்டார். அப்பாவுக்கு அம்மாவை திரும்ப கொடுத்திருக்க? அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா? ஆதி வாழ்க்கை தன்னால் தான் ஒன்றுமில்லாது போனது. ஆனால் இப்பொழுது ரசிகா வந்து எல்லாத்தையும் சரி பண்ணிட்டா. அந்த பொண்ணு எப்போதும் ஆதியுடனே இருக்கணும்ன்னு சொன்னாங்க.
உன்னை பார்த்த முதலில் நண்பர்களுடன் நானும் தான் உன்னை கேலி செய்தேன். ஆனால் இப்ப நீ போகிறேன்னு சொல்லும் போது என்னோட அம்மாவை விட இப்பவே உன்னை மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அப்ப அண்ணாவும் லிது நிதுவும் நீ இல்லாமல் எப்படி இருப்பாங்க?
அண்ணா காதல் பொய்ன்னு நினைக்கிறியா ரசி? பாவம் அண்ணா, அவனுக்கு அவன் அம்மா சென்றதிலிருந்து பிரச்சனை தான். ஆனால் உன்னை போல் அவனும் எதையும் காட்டிக் கொள்ள மாட்டான். அப்படிபட்டவன் இன்று அப்பாவை அணைத்து எப்படி அழுதான் தெரியுமா?
“அண்ணி மாதிரி நீயும் அவனை விட்டுறாத ரசி” மெல்லினா சொல்ல, மெல்லி நான் திருமணமானவள். என்னால் சாரை அது போல் நினைக்க முடியாதே?
எங்களுக்கு தான் தெரியுமே? நீ திருமணமானவள் தான். உன்னால் அண்ணா மீது கொஞ்சம் கூட விருப்பமில்லைன்னா அன்று அண்ணாவுடன் அவ்விடத்தில் சேர்ந்து இருந்திருக்க மாட்டாய்? நீ அவருடன் எந்த நிலையில் இருந்தாய் தெரியுமா?
நிலையா?
ஆமா, மனதில் விருப்பமில்லாமல் எந்த ஆணுடனும் பொண்ணுங்க சாகும் நிலையில் கூட நெருங்க மாட்டாங்க. நீ உன்னை தாழ்த்தி எல்லாரையும் கஷ்டப்படுத்துற? உனக்கு புரியல ரசி. எனக்கு தூக்கம் வருது என்று மெல்லினா மீண்டும் அழுது கொண்டே தூங்கினாள்.
ஆமா, மெல்லி சொல்றது சரிதான். எந்த நிலையாக இருந்தாலும் அவர் என்னிடம் நெருங்கும் போது நான் தடுத்திருக்கணுமே? ஆனால் நான் ஏன் தடுக்கவில்லை? சார் மீது எனக்கு விருப்பம் வந்துருச்சா? இது தப்பாச்சே. சீக்கிரம் நான் இங்கிருந்து கிளம்பணும் என்று நினைக்கும் போது ஆதியின் அழுத முகம் கண் முன் வர, ரசிகாவும் அழுதாள்.
ஏன் எனக்கு அவரை பிடிக்கணும்? பிடித்தால் தானே இந்த கண்ணீர் வரும். இதுவும் நிற்க மறுக்கிறதே! எனக்கும் அவரை பிடித்திருந்தாலும் நான் அவருக்கு சரியான இணை இல்லையே? அவர் கலர் எங்கே? நம் கலர் எங்கே?
அவர் ஸ்டேட்டஸ் வேற நம்ம ஸ்டேட்டஸ் வேற. கல்யாணமான பொண்ணு நான். என்னால் மறுமணம் செய்ய முடியுமா? என்னை விட மிக உயர்ந்த தகுதி உடைய அவர் அருகே நிற்க கூட தகுதியில்லாதவள் நான்.
நாம் இப்படி எண்ணக் கூடாது. அவர் அம்மாவும் விழித்து விட்டார். நம்ம பாப்பாக்களும் ஸ்கூலுக்கு போக போறாங்க. நாம கிளம்பும் நேரம் வந்து விட்டது என்று நினைத்த ரசிகா மனம் கனமாகி போனது. மெல்லினா கூறியது போல் இவர்களை பார்க்காமல் தன்னால் இருக்க முடியுமா? என்று யோசித்த அவள் எழுந்து அவளறைக்கு அழுது கொண்டே ஓடினாள்.
லிது, நிது, ஆதி சார், மெல்லினா, தமிழ் அப்பா, பிரபா சார் இல்லாமல் என்னாலும் இருக்க முடியாது போல் தோன்றுகிறது. இது தவறு..என்று அவள் உணர்ச்சியை புரிந்து கொண்டு ரசிகாவும் கதறி அழுதாள்.
மறுநாள் காலை ரசிகா எழுந்து அவள் வேலையை செய்து கொண்டு, எப்பொழுதும் போல் தேனீரை எடுத்து ஆதி அறைக்கு சென்றாள். அவன் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவனை பார்த்துக் கொண்டே ரசிகா சிந்தனையில் மூழ்கினாள். அவன் விழித்து அவளை பார்த்து, என்ன செய்ற? என்று கேட்டுக் கொண்டே கண்ணை திறந்தான்.
கண்ணை திறக்கும் முன் கண்டுபிடித்து விட்டாரா? என்று ரசிகா அவனை பார்த்தாள்.
எழுந்து முகத்தை கழுவி விட்டு, அவளிடம் வந்து வாங்கினான். அவள் அப்பொழுதும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலை. அப்பொழுதே என்ன செய்றன்னு கேட்டேன்.
நான் வந்ததை எப்படி கண்டுபிடிச்சீங்க? என கேட்டாள்.
“எனக்கு நீ அருகே இருந்தால் தெரியும்” என்று அவளை பார்த்துக் கொண்டே தேனீரை பருகினான். அவள் அமைதியாக வெளியே சென்றாள்.
சமையலறையில் பாதி வேலையை முடித்து விட்டு லிது, நிதுவிற்கு பாலை கொடுத்து அவர்களை குளிக்க வைத்து பள்ளிக்கு தயாராக்கி அவர்களை கீழே அழைத்து வந்து, மீதி வேலையை தொடர்ந்தாள் ரசிகா.
சாப்பாடு வேலை முடியவும் டேபிளில் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்த ரசிகாவை பார்த்துக் கொண்டே, தன் குழந்தைகளை பார்த்து ஆதி முகம் மலர்ந்தது. அவர்கள் பள்ளிச்சீருடையில் அமர்ந்திருந்தனர். அவர்களை துக்கி மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்தான் ஆதிரேயன்.
மெல்லினாவும் பள்ளிச்சீருடையில் வந்தாள். பிரபாகரனும் தயாராகி வந்தார். எல்லாரும் பேசிக் கொண்டிருப்பதை ரசிகா பார்த்துக் கொண்டே எடுத்து வைத்தாள். இவர்களுள் ஒருவராக அவள் மனம் ஏங்கியது. தமிழரசனும் வந்தார். அவர் ரசிகாவையே கவனித்தார். எப்பொழுதும் வந்தால் அப்பா, என்று அருகே ஓடி வந்து விடுவாள் ரசிகா. அவர் வருத்தமாக அவளை பார்த்தார்.
எல்லாரும் சாப்பிட அமர்ந்தனர். அவள் எல்லாருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
ரசி, நாங்க நீ சொன்ன மாதிரி ஸ்கூலுக்கு போகப் போறோம். நீ எங்களுக்கு ஊட்டி விடணும் என்றனர் குழந்தைகள்.
சரி என்று ரசிகா, சப்பாத்தியில் குர்மாவை தொட்டு இருவரும் ஊட்டிக் கொண்டிருந்தாள். எல்லாரும் அவ்வப்போது அவளை கவனிக்க, அவள் முகம் வாடி இருப்பது தெரிந்தது.
ஹேய் மௌனி..என்ற சத்தம் கேட்டு கையில் எடுத்த சப்பாத்தியுடன் கண்கலங்கியவாறு திரும்பினாள். ரசிகாவின் நண்பர்கள் அகரனுக்கு பின் நின்று கொண்டிருந்தனர். பிள்ளைகளை விட்டு அவர்களிடம் ஓடினாள். லிது நிது முகம் வாடியது.
பரு, த்ரீ என்று பிள்ளைகளை விட்டு கண்ணீருடன் ஓடிச் சென்று அவர்களை அணைத்தாள்.
“ஏன்டி, பிரச்சனைன்னா சொல்ல மாட்டாயா? கல்யாணத்தை பற்றி சொல்லி இருந்தால் நாங்களாவது அவனை பற்றி விசாரித்து இருப்போம்ல்ல” என்று ரசிகாவின் உயிர்த்தோழி பருவதி அவளை திட்டினாள்.
“பரு, அவளுக்கு நாம நினைவிலே இல்லையே? இப்ப பிரச்சனை இல்லாமல் சென்னையில இருந்திருந்தான்னா இவளுக்கு திருமணமானது கூட தெரியாமலே போயிருக்கும்” என்று திரிவேஷ் கோபமாக பேசினான்.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாது இருவரையும் சேர்த்து அணைத்து ரசிகா அழுதாள்.
அடச்சீ, அழுறதை நிறுத்து. பார்க்க சகிக்கலை. எப்ப பாரு அழுதுகிட்டு, இப்ப என்ன குடியா முழுகி போயிருச்சி? என்று திரிவேஷ் மேலும் கோபமானான்.
“இல்லடா த்ரீ” என்று விலகிய ரசிகா, ஏதோ சொல்ல வந்தாள்.
“வாய திறக்காத” என்றவன் கண்ணில் அவள் கையில் இருந்த சப்பாத்தியை காணவும் செல்லமாக வாயை கொண்டு வந்து காட்டினான்.
“இதோ ஆரம்பிச்சுட்டான்ல்ல. ஏம்மா சீக்கிரம் சாப்பாடு போட்டிரு. இல்ல கடித்து வைத்திடுவான்” அகரன் கேலி செய்ய, அவள் கையிலிருந்த சப்பாத்தியை அவன் வாயில் கொடுக்க, அகரன் ஆதியை பார்த்தான்.
ஆதி சாப்பாட்டிலே கையை கழுவிக் கொண்டு எழுந்து நகர்ந்தான்.
“பாஸ்” என்று அகரன் அழைக்க, அவன் தட்டை கவனித்த ரசிகா அவனை பார்த்து விட்டு, “இருவரும் உட்காருங்கள். வாரேன்” என்று ரசிகா ஆதி சென்ற அறைக்கு வெளியே நிற்க, அகரன் மெல்லினாவை பார்த்து “என்னவென்று” கேட்டான்.
“அங்கிள், எனக்கு ஸ்கூலுக்கு நேரமாகுது” என்று தமிழிடம் சொல்லி விட்டு அவளறைக்கு சென்றாள்.
எல்லாருக்கும் என்னாச்சு? என்று அகரன் புலம்ப, பருவும் திரியும் அவர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
உள்ளே சென்ற மெல்லினா புத்தகப்பையுடன் வெளியே வந்து பருவை கவனித்தாள். பருவின் பார்வையில் மெல்லினாவிற்கு ஏதோ வித்தியாசம் தெரிந்தது. அவளுக்கு என்னவென்று புரியவில்லை. அவள் நேராக அவர்கள் முன் வந்து அமர்ந்தாள்.
“ஹாய், ஐ அம் திரிவேஷ்” என்று அவன் அறிமுகமாக, மெல்லினா வாயை கோணிக் காட்டிக் கொண்டு அவளது புத்தகங்களை பார்த்தாள்.
ஆதி வெளியே வரவும், சார் எதுக்கு சாப்பாட்டிலே கையை கழுவுனீங்க? அவள் கேட்க, ஆதி அவளை பார்த்துக் கொண்டு, “எனக்கு பசிக்கலை” என்று அவன் அம்மாவை பார்க்க சென்றான்.
“எல்லாரிடமும் பழகுவது போல் தான் தன்னிடமும் பழகி இருக்காள். அதுவும் தன்னை விட அவன் நண்பர்கள் தான் அவளுக்கு பெரியது” என்று எண்ணிய ஆதிக்கு ரசிகா திரிவேஷிற்கு ஊட்டி விட கஷ்டமானது. அவன் அதனால் கையை கழுவி விட்டு எழுந்தான்.
அம்மாவை பார்த்து விட்டு வெளியே வந்த ஆதி கண்டது. தன் நண்பர்களுக்கு பரிமாறும் ரசிகாவை. அவள் அவர்களுக்கு எடுத்து வைத்து விட்டு, லிது நிதுவிடம் வந்தாள். இருவரும் கோபமாக “எனக்கு பசிக்கலை” என்றனர்.
“லிது நீங்க ஸ்கூக்கு போறீங்க? நினைத்த நேரம் சாப்பிட முடியாது” என்று ரசி சொல்ல, இருவரும் ஆதியிடம் சென்று, “அப்பா கிளம்பலாமா?” என்று கேட்டனர். ரசிகா கண்கலங்க பிள்ளைகளை பார்த்தாள்.
என்ன நடக்குது? ஏதோ சரியில்லை என்று நினைத்த அகரன் மெதுவாக மெல்லினா அருகே சென்று பேச்சு கொடுத்தான். அவளும் பேசினாள். ஆனால் அவனால் பிரச்சனையை அறிந்து கொள்ள முடியவில்லை.
“சாப்பிட்டு வாங்க போகலாம்” என்று ஆதி ரசிகாவை பார்த்துக் கொண்டே சொன்னான்.
எங்களுக்கு வேண்டாம். “ரசி எங்க சாப்பாட்டை அந்த அங்கிளுக்கு கொடுத்துட்டா” என்று நிது அழுதாள். பருவதியும் திரிவேஷூம் அவர்களை பார்த்து விட்டு ரசிகாவை பார்த்தனர். அவளுக்கு அப்பொழுது தான் திரிவேஷூற்கு ஊட்டியதால் தான் ஆதி சார் கோபமா இருக்கார் என்று பிள்ளைகளும்..என்று ரசிகா நிது அருகே வந்தாள்.
“வேண்டாம்” என்று ஆதி ரசிகாவை தடுத்து அவனே அவன் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டான்.
“சார், நான் பார்த்துக்கிறேன்” என்று ஆதி அருகே ரசிகா வந்தாள்.
“உன்னை சமையல் வேலையை யாருமே கவனிக்க சொல்லவில்லை. பசங்களை தான் பார்த்துக்க சொன்னோம். ஆனால் அதை விட முக்கியமான வேலை இருக்குன்னா அதை போய் பார்த்துக்கோ” என்று ஆதி கோபமாக சொன்னான். பருவதியும் திரிவேஷூம் அவர்களிடம் வந்தனர்.
“சாரி மௌனி, நாங்க வந்த நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்” என்ற திரிவேஷ் பாப்பாக்களை பார்த்து, நாங்க சந்தித்து ரொம்ப நாளாகிடுச்சு. அதனால் தான் அவள் எங்களிடம் ஓடி வந்துட்டாள். நாங்க அவள் ஃபீரியா இருக்கும் நேரம் சந்திக்க வாரோம் என்று “பரு..வா போகலாம்” என்றான்.
பருவதி ரசிகாவை ஒருவாறு பார்த்துக் கொண்டே, “நாம அப்புறம் சந்திக்கலாம்” என்று சொல்லி விட்டு அகல, ரசிகா தன் நண்பர்களையும் ஆதியின் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டே நின்றாள். அகரனுக்கும் என்ன செய்யவென தெரியாமல் நிற்க, “நீ போ” என ரசிகா சொன்னாள்.
பின் ரசிகா குழந்தைகளிடம் வந்து சாரி சொல்லி சமாதானப்படுத்தினாள். ரசிகாவும் ஆதியும் மெல்லினா மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றனர். மெல்லினா ரசிகாவையும் ஆதியையும் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஆதியின் கோபமும் அவன் தங்கைக்கு நன்றாக புரிந்தது.
error: Content is protected !!