Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 13

மனசு 13

கல்லூரியில் இன்பவேணியின் தோழிகள் நடந்ததை அறிந்து கொள்ள அவளை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

உதய்கிருஷ்ணாவின் காரை பார்க்கவும் விதார்த்தும் இன்பவேணியும் ஒருவரை ஒருவர் பார்க்க, காரிலிருந்து இறங்கிய உதய்கிருஷ்ணா மறுபக்க கார்க்கதவை திறந்து காயத்ரியை தூக்கி வந்து ஒரு பெஞ்சில் அமர வைத்தான்.



Advertisement

கல்லூரியே அதிர்ந்து இருக்க, மளமளவென இன்பவேணிக்கு கண்ணீர் வந்து விட்டது. அதை கவனிக்காத அவள் தோழியோ…

Advertisement

இன்பா, இந்த காயூ சொன்னத விட அதிகமாவே நடக்குது. என்னடி இவரு பப்ளிக்ல அவள தூக்கிட்டு வந்து உக்கார வைக்கிறாரு. இன்பா…இது விதார்த் அண்ணா தான? ஒருத்தி கேட்க,

Advertisement

கோபமாக இன்பவேணி வகுப்பறை நோக்கி நடக்க விதார்த் யாரிடம் செல்வது என புரியாமல் விழித்தான்.

Advertisement

பின் முடிவெடுத்தவனாக தன் அண்ணனிடம் சென்றான். காயத்ரியின் தோழிகளும் அவர்களிடம் வர, யாரும் இன்பவேணியுடன் செல்லவில்லை.

“வேணி எங்கடா? அவள பாக்க தான் வந்தேன்” உதய்கிருஷ்ணா விதார்த்திடம் கேட்க, அவளின் தோழிகள் அவனையும் காயத்ரியையும் பார்த்தனர்.

“காயத்ரிய உனக்கு எப்படி தெரியும்?” விதார்த் கோபமாக கேட்டான்.

“ஓ! உன்னோட நேம் காயத்ரியா?” உதய்கிருஷ்ணா கேட்க, அவள் புன்னகைத்தாள்.

வர்ற வழில இந்த பொண்ண பாத்தேன். பைக்ல போனவன் இந்த பொண்ணோட வண்டிய இடிச்சுட்டு போயிட்டான். கால்ல அடிபட்டிருக்கு..ஹாஸ்பிட்டல் போகலாம்னு சொன்னேன்..காலேஜூல முக்கிய கிளாஸ் இருக்குன்னு சொன்னா. அதான் அழைச்சிட்டு வந்தேன்..

அப்ப தூக்கிட்டு வந்தீங்க?

அவளால நடக்க முடியல. வெளிய உக்கார வைக்க உதவ சொல்லி கேட்டா. உதவினேன்…

தோழிகள் காயத்ரியை முறைக்க, “சரிண்ணா, நீ கிளம்பு…” விதார்த் செல்லப் போக…

விது வேணி எங்க? அவள பாக்க தான் வந்தேன்..

“ஈவ்னிங் அவள பாருண்ணா…” விதார்த் சொல்லிக் கொண்டிருக்க, இன்பவேணி அவர்களை கடந்து ஓட…

ஏய்ய்..இன்பா நில்லுடி…தோழிகள் கத்த, அவள் காதில் ஏறவேயில்லை.

அழுது கொண்டே இன்பவேணி செல்வதை பார்த்து விதார்த்தும் உதய்கிருஷ்ணாவும் அவள் பின் ஓட, மற்றவர்களும் அவர்கள் பின் ஓடி வந்தனர். கல்லூரியை விட்டு வெளியே வந்து விட்டாள் இன்பவேணி.

இவர்களை பார்த்து மீண்டும் அவள் சாலையை கடக்க, முழுவேகத்தில் வந்த கார் மோதவிருந்த சமயத்தில்… “ஹனி” என உதய்கிருஷ்ணா கத்த, ஒருவர் அவளை இழுத்து அடிபடாமல் காப்பாற்றினார்.

அவர் அவளை திட்டிக் கொண்டிருக்க, பதறி இருவரும் அவர்களிடம் வந்தனர். கல்லூரி மாணவ மாணவியர், வாட்ச்மேன் அனைவரும் வாயடைந்து நின்று விட்டனர்.

“எதுக்கு இப்படி ஓடி வந்த இன்னு?” விதார்த் கத்திக் கொண்டிருக்க, மூச்சை இழுத்து விட்ட உதய்கிருஷ்ணா அவள் கையை இறுக பற்ற, பயத்தில் அவனை கட்டி அழுது கொண்டிருந்தாள் இன்பவேணி.

உதவியவர்கு நன்றி கூற அவர் விடை பெற்றார்.

உதய்கிருஷ்ணாவை கட்டி இருந்த இன்பவேணி அவனை விட்டு விலகி, “நான் வீட்டுக்கு போறேன்” அழுவது போல சொல்லி எழுந்தாள்.

காலேஜூக்கு வா….விதார்த் அவளை இழுக்க,

“விடு விது. நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். நீ போ…” என்று உதய்கிருஷ்ணா சொல்ல, இன்பவேணியை முறைத்துக் கொண்டே அவன் சென்றான்.

“விதார்த்…உன்னோட அண்ணா இன்பாவ ஹனின்னு கூப்பிட்டாரு…” இன்பவேணியின் தோழி கூற, “ஆமாடா…” அவன் நண்பர்களும் ஒத்து பாடினர்.

அவட்ட எதுவும் சொல்லாதீங்க. அவளே முடிவெடுக்கட்டும்…

“விதார்த்…” காயத்ரி அழைக்க,

ஆமா அண்ணாவுக்கு இன்னுவ புடிக்கும். அவளுக்கு தெரியாது. அவ முடிவு என்னன்னு பாப்போம். அவ முன்னாடி இந்த மாதிரி எதுவும் கிறுக்குத்தனம் பண்ணாத காயத்ரி. அவளுக்கு வேணும்னா வேணும் இல்லைன்னா இல்ல. கண்டிப்பா வேணும்னு முடிவெடுப்பா…சொல்லி அவன் நகர்ந்து விட்டான்.

ஆமாடி, இந்த விசயத்துல இன்பாவ சீண்டாத காயூ. கொஞ்சம் விட்ருந்தா அவ உயிரே போயிருக்கும்..

“வாங்க கிளாசுக்கு போகலாம்” என நொண்டி நொண்டி நடந்த காயத்ரியை அவள் தோழிகள் வகுப்பிற்கு அழைத்து சென்றனர்.

உதய்கிருஷ்ணாவோடு காரில் ஏறிய இன்பவேணி பருக நீர் கொடுத்தான். பருகி அமைதியாக அமர்ந்தாள்.

ஐஸ்கிரீம் ஷாப்பில் காரை நிறுத்தி அவளை அழைத்து சென்று அவளுக்கு பிடித்த ப்ளேவர்ஸை ஆர்டர் செய்து கைபேசி எடுத்து ஆட்களிடம் வேலையை பணித்து அவளை பார்த்தான். சிரிப்பு தான் வந்தது.

இவ்வளவு நேரம் அவனையே சைட் அடித்துக் கொண்டிருந்த இன்பவேணி அவன் பார்க்கவும் சாப்பாடு போல மொத்தமாக ஐஸ்கிரீமை வாயில் கவிழ்த்து கை வைத்து ஆட்டிக் கொண்டிருந்தாள்.

நேத்து என்ன சொல்ல வந்த? சொல்லாமலே போயிட்ட?

டிஸ்யூவால் வாயை துடைத்து, “இல்லை” வாயை திறக்காமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

எதுக்கு நைட் பாத்திரத்த உடைச்சி ஆன்ட்டிட்ட அடி வாங்குன?

“உனக்கெதுக்கு?” அவன் பார்வையை தாங்க முடியாமல் முகம் திருப்பி கேட்டாள்.

ஓ.கே எதுவும் சொல்லவேண்டாம். சாக்லெட் ப்ளேவர் ஆர்டர் பண்ணலாமா? அவன் கேட்க, அவளை மீறியும் அவள் நாவால் இதழ்களை ஈரமாக்க, அவளை ரசித்து பார்த்தான் உதய்கிருஷ்ணா.

அவன் ஆர்டர் செய்ய, அதையும் உண்டு…அவனை பார்த்தாள்.

அய்யோ! வாட் அ பவர்புல் ஐஸ்??? முணுமுணுத்தாள்.

என்ன?

இல்ல…எல்லா ப்ளேவர் ஒவ்வொரு ஸ்கூப்பா வச்சு வாங்கி தந்தா நல்லா இருக்கும்..

புன்னகைத்தவன் வெயிட்டரை அழைத்து, “மேம் சொல்ற மாதிரி எடுத்துட்டு வாங்க” என்று இன்பவேணியை கை காட்ட, கொட்ட கொட்ட விழித்தாள்.

மேம் ஆர்டர் ப்ளீஸ்…

ஹம்…என்று அவள் ரசித்து ரசித்து ஐஸ்கிரீமில் சேர்ப்பதை சொல்ல, கண்ணிமைக்காமல் அவளையே பார்த்தான் உதய்கிருஷ்ணா.

இப்படி பார்க்கிறான் என்று வெட்கம் வந்தது இன்பவேணிக்கு. பாதி உண்டவள் தயக்கமுடன் அவனை பார்த்தாள்.

“சாப்பிட முடியலையா?” புன்னகையுடன் கேட்டான்.

அவள் ஏதோ முணுமுணுக்க..

என்ன சொல்லு?

கோசலக்கு மட்டும் ஆர்டர் பண்ணி மீதி வச்சிருந்தா சாமி ஆடிடுவா…உன்னை மாதிரி சிரிக்க மாட்டா..

அதுக்கும் புன்னகைத்த உதய்கிருஷ்ணா, “காருக்கு போ வாரேன்” என அவள் மீதி வைத்திருந்த ஐஸ்கிரீமை பேக் செய்து வாங்கி வந்தான்.

கிருஷ், நீ ஐஸ்கிரீம் சாப்பிடுவியா?

அதற்கு பதிலளிக்காமல், வீட்ல உன்ன டிராப் பண்ணீட்டு ஆபிஸ் கிளம்புறேன் என்றான்.

வீடு என்றவுடன் தான் முகம் சோர்வானது.

என்னாச்சு? வீட்டுக்கு போக வேண்டாமா?

“இல்ல, காலேஜ் லீவ் போட்டு வந்தேன்னு கோசலைட்ட சொன்னா என்ன காய்ச்சி எடுத்துருவா….” கையை பிசைந்தாள்.

ஆன்ட்டிட்ட நான் பேசிக்கிறேன்.

“நீயா? கிருஷ் காலேஜ்ல நடந்தத அம்மாட்ட சொல்லீடாத…ப்ளீஸ்” கை கூப்பினாள்.

சொல்லல. நீ அமைதியா வா..

ம்ம்!

இன்பவேணியின் ஒவ்வொரு செய்கையையும் அவன் ரசிக்க, அவள் அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.

கோசலையிடம் பேசி இன்பவேணியை விட்டு சென்றான் உதய்கிருஷ்ணா.

ஆபிஸ் சென்றவுடனே இன்பவேணி மீதம் வைத்திருந்த ஐஸ்கிரீமை பிரித்து அதனை ருசித்து அழகான புன்னகையுடன் அவ்வப்போது ஆளுயர்ந்த அக்கண்ணாடியில் அவனை பார்த்தே சிரித்துக் கொண்டான் உதய்கிருஷ்ணா.

ஒரு வாரம் சென்ற நிலையில் விடுமுறை நாளில் உதய்கிருஷ்ணா வீட்டிற்கு வந்தாள். காலையில் சொந்தங்கள் அவன் வீட்டில் இருக்க, அவர்கள் கிளம்பிய பின் இரவு வந்தாள் இன்பவேணி.

விதார்த் அவளை அவனறைக்கு இழுத்து செல்ல, ராமநாதன் கண்டுகொள்ளவில்லை. இருவரும் சண்டையிட்டால் இவ்வாறு தான் செய்வார்கள் என்பதால் அவர் மௌனமாக கடந்து விட்டார்.

“இன்னு, எப்ப அண்ணாட்ட சொல்லப் போற?” சினமுடன் கேட்டான் விதார்த்.

கிருஷ்ட என்ன சொல்லணும் விது?

எனக்கு தெரியும் இன்னு. நீ அண்ணாவ லவ் பண்றன்னு..

இன்பவேணி அமைதியாகி விட..

இன்னு உனக்கு சீரியஸ் புரியல. பிரியாவ அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேசிட்டு இருக்காங்க..

கண்கலங்க…வேகமாக விதார்த் அறையை விட்டு வெளியேறியவள், எதிர் வந்த உதய்கிருஷ்ணாவை இடித்து அவனை நிமிர்ந்து பார்க்க, பிரியங்காவும் உதய்கிருஷ்ணாவும் மணமேடையில் இருப்பது போல அவளே கற்பனை செய்யவும் பொலபொலவென கண்ணீர் வந்து விட்டது.

பதறி உதய்கிருஷ்ணா இன்பவேணியை அழைத்து பின் செல்ல, அவள் அழுது கொண்டே சென்றாள்.

தோழியின் கலங்கிய கண்ணை பார்த்து நின்றிருந்தவன், அண்ணனின் சத்தத்தில் அவனிடம் வந்தான்.

“வேணியோட சண்ட போட்டீயா? அழுதுட்டு போறா…” உதய்கிருஷ்ணா கேட்க,

அழுதாளா? வரும் போது நல்லா தான வந்தா உதய்…என்றார் ராமநாதன்.

“சொல்லுடா…” உதய்கிருஷ்ணா சத்தமிட,

“அவ பர்சன்ல்ல நான் எப்படி தலையிட…?? எல்லாம் இந்த வீட்ல உள்ளவங்களால தான அவ எங்க நட்பையே விலக்கி வச்சிருக்கா…” சத்தமிட்டு கோபமாக விதார்த் சென்று விட்டான்.

“இவன் என்னடா சொல்றான்?” ராமநாதன் கேட்க,

பெருமூச்சுடன் அமர்ந்த உதய், கோசலையிடம் பத்மா பேசியதை சொல்லி… “குடும்பமா இது?” என மீண்டும் வந்த வார்த்தையை விழுங்கி எழுந்து சென்று விட்டான்.

நேரத்தை கூட யோசிக்காது உடனே பத்மாவை அழைத்து, “என்னையும் அவங்களையும் என்ன பேசுன?” என தங்கையிடம் கத்தினார் ராமநாதன். அண்ணனும் தங்கையும் சண்டையில் இருக்க பிரியங்காவுடனான உதய்கான திருமண பேச்சு நின்றது.

மறுநாளே விசுவமூர்த்தி வீட்டிற்கு சென்று அவர்களிடம் தங்கை பேசியதற்காக மன்னிப்பு கேட்க, இன்பவேணியோ குதூகலமாகி விட்டாள். என்றும் வீட்டிற்கு வராதவர் வரவும் பெரியவர்களும் ராமநாதனை மிகவும் பணிவுடனே நடத்தினர்.

இன்பவேணி கல்லூரி சென்றதன் பின் விசுவமூர்த்தி ஆபிஸிற்கே சென்று உதய்கிருஷ்ணா அவரிடம் பேசினான். இன்பவேணியின் ஒரு வார நடவடிக்கை வித்தியாசமாக உள்ளதென்று. அவரும் கவனிப்பதாக சொல்ல நிம்மதியாக அவன் பணியில் ஈடுபட்டான்.

உதய்கிருஷ்ணாவிடம் காதலை சொல்ல பலபல ஐடியாக்கள் கூறினர் தோழிகளும் விதார்த்தும். அவன் அருகே சென்றாலே காதலை பற்றி மட்டும் இன்பவேணியால் பேச முடியவில்லை.

காலையிலே உணவை முடித்து விதுவை அழைக்க வந்த இன்பவேணியை விதார்த் தன் அண்ணன் வருவதை கண்டு அவனை நோக்கி தள்ளி விட்டான். உதய்கிருஷ்ணா மீது மோதிய இன்பவேணி இதயம் அதிவேகமாக துடித்தது.

பின்னிருந்து, “பேசு பேசு…” விதார்த் சைகை செய்ய, அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

என்ன வேணி?

ஒ..ஒ…ஒண்ணுமில்ல என்று அவன் இதழ்களில் அவளின் பார்வை தீண்டல் பட்டது.

தலையில் அடித்த விதார்த், “வா இன்னு கிளம்பலாம்” அவளை இழுத்து பைக்கில் அமர்த்தி அவளை அர்ச்சித்துக் கொண்டே கல்லூரிக்கு அழைத்து சென்றான்.

சும்மா திட்டிட்டே இருக்காதடா…கிருஷ பாத்து லவ் சொல்ல முடியல. நான் என்ன பண்றது?

சரி இன்னிக்கு நைட் அப்பா வர நேரமாகும். வேலைக்கார பாட்டிட்ட அண்ணாவ நான்  பாத்துக்கிறேன்னு சொல்லி அனுப்பிடுறேன்..தனியான டைம்…சொல்லிடு…

ம்ம்!

இரவும் வந்தது. “வா” என கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி கீழே வந்த விதார்த் அதிர, பாட்டு பாடி ஆடிக் கொண்டே வந்த இன்பவேணிக்கு காதில் புகை கிளம்பியது. விதார்த்தை முறைத்து பார்த்தாள்.

லோ நெக் பார்ட்டி வியர் ஸ்லீவ்லஸ் சிவப்பு நிற முட்டியை தொடும் ஆடையில் பிரியங்கா உதய்கிருஷ்ணா தோளில் கை போட்டு மடியில் அமர்ந்திருந்தாள். அவனிடம் எதிர்வினை இல்லாமல் இருந்தது.

இன்பவேணியின் பாடல் குரலில் நிமிர்ந்து அவளை பார்க்க, கோபமாக பிரியங்காவை வெறித்தவள் உதய்கிருஷ்ணா அருகே இருந்த டீப்பாயில் பட்டென குழம்பு கிண்ணத்தை வைக்க, பாதி கீழே கொட்டியது..

“அம்மா கிருஷ்கு குடுத்துட்டு வர சொன்னாங்க…நல்லா தின்னு…” சொல்லி விறுவிறுவென இன்பவேணி நடக்க,

“ஏய்….” சத்தமிட்டு சொடக்கிட்ட பிரியங்கா உதய்கிருஷ்ணாவிடமிருந்து இறங்கி, அந்த இறுக்கமான உடையில் அதிக ஒப்பனையுடன் இன்பவேணியை நெருங்கினாள்.

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா..பட்டுன்னு வப்ப…சிந்துனத யாரு க்ளீன் பண்ணுவா. பண்ணீட்டு போ…

உதய்கிருஷ்ணா, விதார்த் இருவரையும் முறைத்தாள் இன்பவேணி.

டிஸ்யூவை எடுத்து கொட்டிய குழம்பை துடைத்து, கை கழுவி உணவுண்ண அமர்ந்தான் உதய்கிருஷ்ணா.

“அத்தான், நாம சாப்பிடாத உணவா? வாங்க நாம டின்னருக்கு வெளிய போகலாம்” கொஞ்சியவாறு உடலை நெளித்து அவனை நெருங்கி அமர்ந்தாள்.

“வேணி, சாதம் கொஞ்சம் எடுத்து வையேன்…” இன்பவேணிக்கு உரிமை கொடுப்பதாக அவன் கேட்க,

அவளோ தன்னை வேலைக்காரியாக்கிடுவானுக போல…என கோபமாக அவனை நெருங்கி கோசலை கொடுத்ததை நடு வீட்டில் ஊற்றி, “நான் ஒண்ணும் யாருக்கும் வேலைக்காரியில்ல…” கத்த, அவளை இழுத்து அறைந்தாள் பிரியங்கா.

இன்பவேணி விழிகள் கலங்க, பொறுப்பான உதய்கிருஷ்ணா? பளாரென பிரியங்காவை ஒன்று கன்னத்திலே விட்டான்.

உன்னை விட சின்னப் பொண்ணு. எப்படி பேசணும்னு தெரியாது…அவன் பிரியங்காவிடம் சத்தமிட,

இன்பவேணியிடம் உதய் காட்டிய உரிமை புரியாது, “உரிமை இருக்கிறதால தான அவள அடிச்சிருக்கான்” என அழுது கொண்டே இன்பவேணி ஓட, அவளை மறித்தான் உதய்கிருஷ்ணா.

ஐ ஹேட் யூ…ஹேட் யூ…என கண்ணீருடன் சொல்லி அவனை தள்ளி விட்டு வீட்டிற்கு ஓடினாள் இன்பவேணி.

“கடவுளே! ஏன் இந்த சோதனை?” என இருந்தது விதார்த்திற்கு.

தன் அண்ணனை பார்த்து விதார்த் இன்பவேணி வீட்டிற்கு செல்ல, மகள் அழுது கொண்டே வரவும் தவித்து போனார்கள் பெற்றோர்.

விதார்த்தை பார்த்து, “உங்க குடும்பமே ரொம்ப மோசமானவங்க. என்ன பாத்தா கிருஷூக்கு கூட வேலைக்காரி மாதிரி தெரியுதா?” அழுது கொண்டே கதவை அடைத்துக் கொண்டாள்.

ஏய்…லூசு…அண்ணா அவனுக்கு தான் உன்ன எடுத்து வைக்க சொன்னான். அவளுக்கு இல்ல..

“ஆமா, நான் வேலைக்காரி தான…” சொன்னதையே அவள் சொல்ல, விதார்த் நடந்ததை பெரியவர்களிடம் கூறினார்.

பாப்பா…அந்த பொண்ணு அப்படிதான்னு நமக்கு தான் தெரியும்ல? உன்னை உணவு பரிமாற சொன்னா அந்த பொண்ணு கிளம்பிடுவான்னு உதய் சொல்லி இருப்பான் விசுவமூர்த்தி சொல்லியும் கதவை திறக்கவேயில்லை இன்பவேணி..

விதார்த் வெளியே வர, பிரியங்காவும் உதய்கிருஷ்ணாவிடம் ஒரு ஆட்டம் ஆடி தான் சென்றாள். சோர்ந்து அவன் அமர்ந்திருக்க, கோபத்தில் பிரியங்கா உடைத்த கண்ணாடி சில்லுசில்லாகி இருந்ததை வேலைக்கார பாட்டி அமைதியாக சுத்தம் செய்து உதய்கிருஷ்ணாவிற்கு உணவை எடுத்து வைக்க…

“பசிக்கல பாட்டி” என உணவுண்ணாமல் அறைக்கு சென்று விட்டான்.

விதார்த்தால் இருவரையும் சமாளிக்க முடியவில்லை. நீ சாப்பிட்டு தூங்கு என விதார்த்தின் அழைப்பை துண்டித்து படுத்து விட்டான் உதய்கிருஷ்ணா.

“ப்ளான் மொத்தமும் ப்ளாப்” கடுப்புடன் விதார்த் உணவை முடித்து அறைக்கு சென்றான்.

விசுவமூர்த்தி மகளை சமாதானப்படுத்தி உணவுண்ண வைக்க,

“அவங்க கட்டிக்கப் போறவங்க. என்னமும் செய்வாங்க. உனக்கென்னடி?” கோசலை வாய் ஓயவில்லை.

அன்னையின் பேச்சில் அமைதியான முகத்துடன் இதழ்கள் துடிக்க, விழிகளில் வேதனையுடன் தெரிந்த மகளை விசுவமூர்த்தி கண்டு கொண்டார். அவளுக்கு உதய் மீது விருப்பமுள்ளது. இன்னும் கூறவில்லை என்பதை…

மனைவியை அதட்டி மகளை உறங்க வைத்து வெளியே வந்தவர் மனதில் கவலை குடி கொண்டது.

நாம் பாமர மக்கள், அவர்கள் பரம்பரை பணக்காரர்கள். அதுவும் பத்மா, பிரியங்கா பேச்சை எண்ணி அவருக்கு மகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. மகளின் புதுவித மாற்றம் காதலினாளா? இனி என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ? கவலை தோன்றியது அந்நன்மனிதருக்கு…

கௌரவம் என்று மகளிடம் சத்தமிட்டால், மகள் இயல்பை தொலைத்து விடுவாள். கௌரவம் தானே போனா போகட்டும் என விட மனதில்லை என்றாலும் மகளுக்காக எதையும் தாங்கலாம் என எண்ணிக் கொண்டார்.

விதார்த் கல்லூரியில் வைத்து பேசியதில் மனமாறிய இன்பவேணி பழையவாறு உதய்கிருஷ்ணா வீட்டிற்கு வந்தாள். திட்டம் போடாமலே இம்முறை வாய்ப்பு கிட்டியது..

பெங்களூருவில் சொந்தக்கார திருமண நிகழ்விற்கு விசுவமூர்த்தியும் கோசலையும் சென்றிருக்க வீட்டில் இன்பவேணி மட்டுமே இருந்தாள். இரு நாட்கள் என்பதால் தோழியை தனியே விட பயந்த விதார்த் தன் தந்தை ராமநாதனிடம் விசயத்தை சொல்லி அவர்கள் வீட்டில் ஓர் அறையில் அவளை தங்க வைக்க கேட்டிருந்தான்.

கோசலையோ வேண்டமே வேண்டாம் என மறுக்க, பெண்பிள்ளை என்பதால் ராமநாதன் விசுவமூர்த்தியிடம் பேசி அவர்கள் வீட்டில் தங்க சொன்னார். அந்த இரு நாட்கள் இன்பவேணிக்கு எப்படியோ உதய்கிருஷ்ணாவிற்கு சொர்க்கமாக தான் தெரிந்தது.

இன்பவேணிக்காக அவர்கள் கொடுக்கப்பட்ட அறை உடல்நலமில்லாமல் இருந்த போது உதய்கிருஷ்ணாவின் தாய் தங்கிய அறை. இன்பவேணிக்கு ஜாலியோ ஜாலி தான்…மகிழ்ச்சியுடன் நிற்காமல் விதார்த்துடன் முழுநேரத்தையும் செலவழித்தாள். அடிக்கடி உதய்கிருஷ்ணா இன்பவேணி விழிகளும் கலக்க தொடங்கியது…

            “பாவி நெஞ்ச என்ன செஞ்ச

            உந்தன் பேர சொல்லி கொஞ்ச

            என்ன கொன்னாலும் அப்போதும்

            உன் பேர சொல்வேனடா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!