Skip to content
Post Views: 1,075
மனசு 14
முதல்நாள் முடிந்து மறுநாள் காலை விழிக்கும் போது அழகிய மஞ்சள் நறுமணத்தை மோப்பம் பிடித்துக் கொண்டே எழுந்த இன்பவேணி, ஆழ்ந்து வாசம் பிடித்தாள். விதார்த்திடமும் சொல்லலாம் என வெளியே வந்தாள்.
“ஹாய்…குட் மார்னிங்” என்றான் உதய்கிருஷ்ணா…
Advertisement
கிருஷ்…என்று அவனை பார்த்து, வேகமாக கீழே பார்த்தாள். ராமநாதன் காபி அருந்திக் கொண்டிருந்தார்.
Advertisement
“அங்கிள்….” உதய்கிருஷ்ணா கை கோர்த்து கையை வேகமாக ஆட்டினாள். அவர் இருவரையும் பார்க்க, அந்த ரம்மியமான வெளிச்சமும் இருவர் மீதும் பட்டு இருவரும் பளபளத்தனர். வேலைக்கார பாட்டியோ இருவரையும் ஆவென பார்த்தார்…உடன் நாமநாதனும்..
Advertisement
“அங்கிள், இந்த ரூம்ல சூப்பரா ஸ்மல் வருது…வாங்க….புத்துணர்ச்சியா இருக்கு…” கத்தினாள்.
Advertisement
பதறி அடித்து எழுந்தான் விதார்த்.
உதய்கிருஷ்ணா புன்னகைக்க, “ஸ்மல்லா..???” ராமநாதன் பாட்டியை பார்க்க,
“எனக்கு தெரியாதுய்யா..” கை விரித்தார்.
அப்பா, மகன்கள் இன்பவேணி அவ்வறைக்குள் செல்ல, “இந்த இடத்துல தான்…” குதிகுதியென குதித்து மூச்சை இழுத்து…ம்ம்ம்!!!! என்ன அருமையான வாசனை???? என்றாள்.
ராமநாதன் அதிர்ந்து மகனை பார்த்தார்.
நானும் அடிக்கடி ஃபீல் பண்ணி இருக்கேன் என்றான் உதய்கிருஷ்ணா.
“என்ன ஃபீல்?” பொறாமை பொங்க இன்பவேணி கேட்டாள்.
அம்மா…. அம்மா இருந்தப்பா பெட் இருங்க தான் இருக்கும். அம்மாவுக்கு மஞ்சள் அரைச்சு குளிக்கும் பழக்கம் இருக்கு. அந்த ஸ்மைல் எனவும் இன்பவேணிக்கு நடுக்கம் பிறந்தது.
என்ன….து? உன்னோட அம்மாவா…? குரல் நடுங்க விதார்த்தையும் ராமநாதனையும் பார்த்தாள்.
அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. உதய் உன்ன பயமுறுத்துறான்.
இல்லப்பா, அம்மா இருக்கிற மாதிரி எனக்கு தோணும்…
“உதய்…” ராமநாதன் சத்தமிட, விதார்த்திற்கு ஒரு மாதிரி ஆனது.
“கிருஷ், உன்னோட அம்மா இங்க பேயா இருக்காங்கன்னு சொல்றீயா?” இன்பவேணி கேட்க,
அவளை வெறித்த உதய்கிருஷ்ணா, “என்னோட அம்மா பேய் இல்ல ஏஞ்சல்…” என்று விருட்டென சென்று விட்டான்.
“உதய்கு அவங்க அம்மா மேல ரொம்ப பாசம் அதான் இப்படி பேசிட்டான்” ராமநாதன் கூற,
“ஓ.கே அங்கிள்” என்று அவ்வறையை பார்த்து பயந்து நிற்க, “நீ பயப்படுற மாதிரி ஒண்ணுமேயில்லம்மா. நீ குளிச்சிட்டு வா…சாப்பிடலாம்…” சொல்லி அவர் சென்று விட்டார்.
“ஸ்மைல் வருதுன்னா உங்க அம்மா இங்க இருக்காங்கன்னு தான அர்த்தம்?” பயத்துடன் விதார்த்திடம் இன்பவேணி கேட்க,
“நீயே பேய் மாதிரி தான் நிக்கிற” சொல்லி அவன் சென்று விட, அவ்வறை அவளை பயமுறுத்தியது.
“ஆன்ட்டி..ஆன்ட்டி…நீங்க இங்க தான் இருக்கீங்களா? என்ன எதுவும் செஞ்சிறாதீங்க…” தனியாக பயத்தில் கண்ணீர் வர அமர்ந்திருக்க, அவள் தோளில் கை படவும் பயந்து விட்டாள்.
உதய்கிருஷ்ணா தான் வந்திருந்தான்.
“உன்ன யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க. போ குளிச்சிட்டு வா. நான் இங்கேயே இருக்கேன்” என அமர, “தேங்க்ஸ் கிருஷ்” என்று ஆடையை எடுத்து குளியலறைக்குள் புகுந்தாள்.
கொஞ்சம் தெளிவான இன்பவேணிக்கு உதய்கிருஷ்ணாவின் எண்ணம் சுலன்றது.
“அவன் அம்மா இன்னும் இருப்பது போல உணர்கிறானா? அப்படியே வாழ பழகிட்டானா? அச்சோ கிருஷூக்கு ஏதும் பிரச்சனையா இருக்குமோ?” பலவாறான எண்ணங்கள் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
பாவாடை தாவணியில் அவள் வெளியே வர, புதிதாக மலர்ந்த மலர் போல உதய்கிருஷ்ணாவிற்கு மின்னினாள் இன்பவேணி.
புதுசா என்ன தாவணில்லாம் போட்ருக்க?
கிருஷ் நல்லா இருக்கா?
ம்ம்! அவளின் உச்சியிலிருந்து பாதம் வரை பார்த்தான். அவனின் பார்வையில் மனம் சில்லிட்டது பெண்ணவளுக்கு.
இன்னிக்கு அப்பா பர்த்டே. அப்பா பங்சன் வீட்டுக்கு போயிருக்காங்க. அதான் நான் அப்பா பேர்ல அர்ச்சனை பண்ணனும். கோவிலுக்கு போகணும்..
ம்ம்!
உதய்கிருஷ்ணாவின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் முதுகு காட்டி நின்றாள். மனம் தடுமாற அவளது தோளில் கை வைக்க போன உதய்கிருஷ்ணாவை கீழிருந்து சத்தமிட்ட தந்தையின் குரல் கலைத்தது. வேகமாக நகர்ந்து நின்றான்.
“தேங்க்ஸ் கிருஷ்..” அவன் கை குலுக்கி, “நீ போ. இனி நான் பயப்பட மாட்டேன். ஆன்ட்டி என்ன எதுவும் செய்ய மாட்டாங்க” என அவனை அனுப்பி…
“ஆன்ட்டி எனக்கு உங்க பையன புடிச்சிருக்கு. ஆனா சொல்ல முடியல. நான் என்ன செய்றது? எங்க ப்ளான் எல்லாமே ஸ்பாயில் ஆகுது…” புலம்பியவாறு தயாரானாள்.
அவ்வறையில் சூரிய வெளிச்சத்தில் இருந்த செடியில் இரு சிவப்பு நிற ரோஜா இருக்க, ஒன்றை பிய்த்து தலை பின்னி அதில் சொருகி கீழே வந்தாள்.
“வாவ்…வாவ்…இன்னு சூப்பரா இருக்க” விதார்த் சொல்ல,
தேங்க்யூடா.. ரோஜா நல்லா இருக்கா? இன்னொன்னு கூட செடியில பூத்திருக்கு. நாளைக்கு எடுத்துக்கிறேன்..
“பூவா எந்த செடியில?” ராமநாதன் கேட்க, “அப்பா…” சத்தமிட்ட உதய்கிருஷ்ணா, “வா சாப்பிடு. சாப்பிட்டு உன்னையும் விதுவையும் கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்” என்றான்.
கோவிலுக்கா?
ஆமா அங்கிள், இன்னிக்கி என்னோட அப்பாவோட பர்த்டே…
ஓஓ!
“பாட்டி ஸ்வீட் ஏதாவது இருக்கா?” இன்பவேணி கேட்க, “ஆர்டர் போட்ருக்கேன். இப்ப கொண்டு வந்துருவாங்க” என்றான் உதய்கிருஷ்ணா.
எல்லாரும் அவனையே பார்க்க, “இன்னிக்கி அங்கிள் பர்த்டேன்னு எனக்கு தெரியும். ஆல்ரடி விஸ் பண்ணீட்டேன். ஸ்வீட் சாப்பிட்டு கோவிலுக்கு கிளம்பலாம்…” உணவுண்ண அமர்ந்தான்.
ராமநாதன் தன் மூத்த மகனையே பார்த்தார். இதுவரை அவருக்கு ஒரு நாள் கூட மகன்கள் விஸ் செய்ததில்லை. விதார்த்தும் இன்பவேணியும் ஒருவரை ஒருவர் பார்த்து வேகமாக கைபேசியை எடுத்து விசுவமூர்த்தியை அழைக்க, பிஸி என வந்தது.
டேய்..என்னோட அப்பாவுக்கு நான் தான முதல்ல விஸ் பண்ணனும். கிருஷ் பண்ணிட்டான். வேற யாரும் விஸ் பண்றதுக்குள்ள நான் தான் பண்ணனும்…
இல்ல என்னோட அங்கிளுக்கு நான் தான் ரெண்டாவதா விஸ் பண்ணுவேன்…இருவரும் அடித்துக் கொள்ள, இன்பவேணிக்கு அழைப்பு வர, அவளிடமிருந்து கைபேசியை பிடுங்கி, “ஹலோ அங்கிள் விஸ் யூ மெனி மோர் ஹாப்பி பர்த்டே….” கத்தினான் விதார்த்.
அவனிடமிருந்து அழைப்பை பிடுங்கி இன்பவேணி தந்தைக்கு வாழ்த்து கூறி பேச, அவர்களை ஏக்கம் கலந்த விழிகளுடன் ஏறிட்டார் ராமநாதன். கண்டும் காணாதது போல உதய்கிருஷ்ணா ஆர்டர் கொடுத்த ஸ்வீட் வாங்கி வந்து, “வேணி இத எல்லாருக்கும் கொடு” என்றான்.
மகனையே பார்த்துக் கொண்டிருந்தார் ராமநாதன்.
உணவை முடித்து அவர்கள் காரில் கிளம்பினார்கள்.
“இன்னு, நீ அண்ணாவோட போ. நான் பைக்ல வாரேன்” விதார்த் இருவருக்கும் வழிவிட, அவர்கள் காரில் ஏறி கிளம்பினார்கள்.
கிருஷ், நானும் சொந்தமா கார் வாங்கணும். அம்மா, அப்பா, விது, நீ எல்லாரும் சேர்ந்து இப்படி போகணும் என அவனது கைக்குள் அவளது கையை சேர்த்து கொள்ள, அதிர்ந்தான் உதய்கிருஷ்ணா.
“என்னாச்சு கிருஷ்? நானும் கார் வாங்குவேனே!” என சீரியசில் இருந்து ஜோவியலாக அவள் பேச, “கனவாக இருக்கும்” என உதய்கிருஷ்ணா நினைத்தான்.
அவன் அதிர்ந்ததில் அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என எண்ணி குரலை சாதாரணமாக மாற்றி பேசினாலும் மனம் சோர்ந்திருந்தது இன்பவேணிக்கு…
கோவிலுக்கு சென்று பின் இவர்கள் கல்லூரி செல்ல, விதார்த்தும் அவர்களுடன் வந்து சேர்ந்தான்.
இரவு உதய் வரும் முன்னே உணவை முடித்து அனைவரிடமும் சொல்லி சோர்வாக இன்பவேணி அவளறை என எண்ணி உதய்கிருஷ்ணா அறை சென்று பொத்தென படுக்கையில் விழுந்தது தான் நியாபம்…மனச்சோர்வு அவளை முழுவதுமாக ஆட்கொண்டிருக்க ஆடையை கூட மாற்றாது அதே பாவடை தாவணியில் உறக்கத்தை தழுவி இருந்தாள்.
உதய் உணவு முடித்து அவனறைக்கு வந்த போது தாவணி அங்கங்கு விலகிய நிலையில் தன்னுடைய படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளை பார்க்க அவனுக்கு பித்தம் ஏறியது.
தன்னை கட்டுப்படுத்தி தாவணியை சரி செய்து அவளை எழுப்பினான்..
அம்மா…கொஞ்ச நேரம்..
வேணி…நா கிருஷ்…தடுமாற்றமுடன் அவன் கூற,
“கிருஷ் ஐ லவ் யூ….” என அவனையும் படுக்கையில் இழுத்தாள். அவள் மீது விழாதவாறு நகர்ந்தவன் அதிர்ந்து…
இப்ப என்ன சொன்ன?
“கிருஷ் நான் உன்ன லவ் பண்றேன். உங்கிட்ட சொல்ல முடியல. கண்டிப்பா சொல்லிடுவேன். அந்த பிரியா உனக்கு வேண்டாம்…” என அவன் பக்கம் திரும்பி அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
மூச்சற்று இருந்தாலும் என் ஹனியின் காதல் நான் தானா? என மகிழ்ச்சியில் குதிக்கும் எண்ணம் வந்தாலும் அதிர்ச்சியான நிலையில் அவனுக்கு கண்கள் சொருகியது..
“இல்ல…இப்படி ஆகக் கூடாது” என தள்ளாடியவாறு வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்து சவரை திறந்து விழுந்து விட்டான்.
காலை தான் இருவரும் விழித்தனர். முதலில் விழித்தது இன்பவேணி. வாயில் கை வைத்து கொட்டாவியை அடக்கி அறையை பார்க்க, உதய்கிருஷ்ணாவின் சிறுவயது புகைப்படமும் அவனுடன் அவன் தாய் இருப்பது போல பெரிதாக மாட்டப் பட்டிருந்தது.
பட்டென எழுந்து அமர்ந்து, தலையை பிடித்து அமர்ந்து அவனை தேடினாள்.
தூக்கத்தில் அவனிடம் புலம்பியது நினைவிற்கு வந்தது.
“அய்யய்யோ! இப்படியா தூக்கத்துல காதல சொல்வேன். இப்படி பண்ணீட்டீயே வேணி…” என எழுந்து அவளறைக்கு ஓடினாள். அதிகாலை என்பதால் யாரும் வெளியே இல்லை.
நேரம் கழித்து எழுந்த உதய்கிருஷ்ணாவிற்கு அவள் புலம்பியது நினைவு வர, தெளிவு
படுத்திக் கொள்ள வேகமாக அவளிருக்கும் அறைக்கு சென்றான்.
முக்காடிட்டு கண்ணாடியை பார்த்து அவன் அம்மாவிடம் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தாள்.
அய்யோ ஆன்ட்டி, உங்க பையன்ட நான் இப்படியா என்னோட காதல சொல்ல நினைச்சேன்…
ஹேய்…இரு இரு…நேத்து தான உங்கட்ட சொல்ல முடியலன்னு புலம்பினேன். இது உங்க வேலையா? அவள் பேசிக் கொண்டிருக்க, தொண்டையை செருமினான்.
கொட்ட கொட்ட விழித்து படுக்கை மீது ஏறி நின்றாள்.
“நீ நேத்து நைட் ஏதோ காதல்னு சொன்ன? என்ன விசயம்?” அதட்டுவது போல கேட்டான்.
இல்ல…நா சும்மா…ஏதாவது பேசி இருப்பேன்.
அப்படி தெரியலையே!
இங்க வாவேன்..
உதய்கிருஷ்ணா அவளை நெருங்கி வர, அவன் தோளில் கை போட்டு, “அங்க பாரு அந்த ரோஸ் நல்லா இருக்குல்ல” என உதய் செடியை பார்க்கும் நேரம் அவன் கன்னத்தில் நச்சென இதழ் பதித்து…
“ஏய் உம்மணாமூஞ்சி,,, உன்ன தான் நான் லவ் பண்றேன்” என அவன் முடியாதுன்னு சொல்லிடுவானோ என எண்ணி படுக்கையிலிருந்து குதித்து கீழே ஓடினாள்.
“ஹனி, இப்ப என்ன பண்ணா?” அவன் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சி மாறாமல் படுக்கையில் விழுந்தான் உதய்கிருஷ்ணா.
அன்றே அவன் அவள் காதலை ஏற்றுக் கொண்டதாக சொல்ல, விதார்த் இன்பவேணி இருவரும் குதித்தனர். ஆனால் மற்ற காதலர்கள் போல இல்லாமல் எப்போதும் போலவே இருவரும் இருந்தனர். முன்பை விட உதய்கிருஷ்ணாவிடம் அதிக உரிமை மட்டும் எடுத்துக் கொண்டு பேசினாள் இன்பவேணி.
நன்றாக சென்ற இவர்கள் வாழ்வில் உதய்கிருஷ்ணாவின் சொந்தங்கள் மொத்தத்தையும் கலைத்து சென்றனர்.
“நிலா வரும் நேரம்
நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வனப்பூக்கள் வேர்க்கும் முன்னே
வரச் சொல்லு தென்றலை….”
அழகான பொன்னிற விடியலில் தயாராகி குழந்தையுடன் கீழே வந்த உதய்கிருஷ்ணா நின்று பின் நேராக உணவுண்ண அமர்ந்தான்.
“ஹாய் கிருஷ், குட் மார்னிங்” இன்பவேணி அவனருகே வந்து அமர, விதார்த்தும் மற்றவர்களும் அவளுடன் அமர்ந்தனர்.
உதய்கிருஷ்ணா பதிலளிக்காமல் இருக்க,
“கிருஷ், என்னோட பேச மாட்டீயா? சரி நீ பேச வேண்டாம்…ஜானு குட்டி வாங்க வாங்க” என குழந்தையை தூக்க, பாப்பாவும் அவளிடம் தாவினாள்.
படாரென தட்டை தட்டி விட்டு எழுந்தான் உதய்கிருஷ்ணா. குழந்தை பயந்து இன்பவேணியை கட்டிக் கொண்டாள்.
“உதய்…” பாட்டி சத்தமிட, ராமநாதன் செய்வதறியாது நின்றார்.
“பாட்டி ஒரு நிமிசம்” என்ற இன்பவேணி, “உங்க வீட்டுக்கு நான் வர்றது பிடிக்கலைங்கிறதுக்காக நான் வராம இருக்கப் போறதில்லை. எல்லாரையும் விடுங்க…பாப்பாவ எப்படி சமாளிப்பீங்க?” என பயந்த குழந்தையை அவன் கையில் கொடுத்து உணவுண்ண அமர்ந்தாள்.
சித்ராண்ணீ, செம்ம வாசனையா இருக்கு? இன்னிக்கு என்ன டிஸ்?
“அம்மா…..” ஜான்வி இன்பவேணியை தூக்க சொல்லி கை நீட்ட, இன்பவேணி மனதை அடக்கி குழந்தையை கண்டு கொள்ளாமல் சித்ராவிடம் பேசினாள்.
அம்மா தன்னை தூக்கவில்லை எனவும் ஜான்வி அழத் தொடங்கினாள்.
இன்னு…அண்ணாவ விடு. பட்டு அழுறா…
அவனையும் கண்டுகொள்ளாமல் சித்ரா உணவை எடுத்து வைக்க ரசித்து உண்பது போல இன்பவேணி பாவனை செய்ய, உதய்கிருஷ்ணாவின் பற்கள் நெறிந்தது.
உதய்கிருஷ்ணா அறைக்கு குழந்தை அழ அழ தூக்கி செல்ல, உணவை விழுங்க முடியாமல் விழிகள் கோர்க்க உணவை வெறித்தாள் இன்பவேணி.
“அண்ணா…” விதார்த் உதய்கிருஷ்ணா பின் ஓடினான்.
“ஏம்மா, பிள்ளைய அழ வைக்கிற?” பாட்டி கேட்கவும்,
“நானா அழ வச்சேன்? உங்க பேரன் தான குழந்தைய நான் தூக்குனா அப்படி கோபப்படுறார். இதே பிரியான்னா கொடுத்துருப்பார். நான் என்ன ஜஸ்ட் அவர் காதலிச்ச பொண்ணு. அதுவும் அவர் கஷ்டப்படும் போது விட்டு போனவள் தான?” கண்ணீர் வர வர துடைத்துக் கொண்டே பேசினாள்.
ராமநாதன் எழுந்து இன்பவேணி அருகே அமர, விதார்த் உதய்கிருஷ்ணாவிடம் சத்தமிட்டு குழந்தையுடன் வந்து கொண்டிருந்தான். அவன் பின் சீறலான நடையில்
உதய்கிருஷ்ணாவும் வந்தான்.
ராமநாதன் அவர் கைக்குள் இன்பவேணி கை வைத்து,
“எம் மேல தான்மா தப்பு. அடுத்தவங்க பேச்ச கேட்டு எம் புள்ளைங்கள கவனிக்காம போயிட்டேன். ஆனா எம் புள்ளைங்களுக்கு செய்ய வேண்டிய எல்லாத்தையும் உன்னோட அப்பா தான் செஞ்சிருக்கார். காலம் கடந்து தான் சிந்தித்தேன். ஆனால் அதில் எந்த பயனும் இல்லாமல் போச்சு. உதய் யார்டயும் அதிகம் பேச மாட்டான் உனக்கே தெரியும். அவனுக்கு முக்கியமானவங்கன்னா என்னை விட உங்க அப்பாவும் உங்க குடும்பத்தையும் தான் சொல்வான். அப்படி எண்ணியிருந்தவன் நீங்க அவன்ட சொல்லாம போக வும் ரொம்ப உடைஞ்சுட்டான். அத விட நானும் அவன புரிஞ்சுக்காம தப்பா பேசி ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். பிரியாவ கட்டி வச்சு எம் புள்ள வாழ்க்கையை நானே பாழாக்கிட்டேன். அவனுக்கு கொஞ்சம் டைம் குடும்மா. அவன் அவசரப்பட்டு வார்த்தைய விட்டாலும் கொஞ்சம் பொறுமையா இரும்மா…” வேதனையுடனான கண்ணீருடன் பேசினார்.
எப்போதும் திமிருடன் கம்பீரமாக நடக்கும் மனிதர் தன் மகன் வாழ்க்கைக்காக கெஞ்சவும் மனம் இறங்கி,
அங்கிள் நீங்களும் உங்க குடும்பமும் செஞ்ச எதையும் நான் மறக்கல. மறக்கவும் முடியாது. ஆனால் மன்னிக்க முடியும். எல்லாரும் எப்பவும் பர்பட்டா இருக்க முடியாது. என்னால கிருஷ மறக்க முடியாது. அவர தவிர யாரோடவும் என்னோட வாழ்க்கையை பகிரவும் முடியாது. அதுக்காக எப்பவுமே பொறுமையா போவேன்னு சொல்ல முடியாது. எனக்கு இப்ப கிருஷ மேரேஜ் பண்ணிக்கணும். பாப்பாவுக்கும் நான் இப்ப தேவை.. ஒரு வயசு ஆகப் போகுது…அம்மா, அப்பா..சித்தா…தாத்தா தவிர பேச மாட்டேங்கிறா…உங்க பையனால தனியா இப்ப சமாளிக்க முடியும்னாலும் வளர்ந்த பின் கண்டிப்பா கிருஷ்ட அம்மா வேணும்னு கேப்பா. அப்ப என்ன செய்வாராம் உங்க பையன்…???
அத நான் பாத்துக்கிறேன். எல்லாரும் அவங்கவங்க வேலைய மட்டும் பாத்துட்டு போனா எல்லாருக்கும் நல்லது…
சினமுடன் எழுந்தாள் இன்பவேணி.
இங்க பாரு. நான் நம்ம மூணு பேரு வாழ்க்கைக்காகவும் தான் பேசிட்டு இருக்கேன்…
எகத்தாள சிரிப்பை காட்டி, “மூணு பேரா?” கோபமாக… “நீ யாரோ நாங்க யாரோ? யாரும் எங்களுக்கு வாழ்க்கை கொடுக்க தேவையில்லை” ஆவேசமாக கத்தினான்.
யப்பா சாமி, நானும் உனக்கு வாழ்க்க குடுக்கல. நீயும் எனக்கு வாழ்க்க குடுக்க வேண்டாம். தாலி மட்டும் கட்டு போதும். எந்த குழந்தையானாலும் அம்மா அப்பா இருவரும் இருக்கணும். அதுல ஒருத்தர் இல்லைன்னாலும் அவங்க வாழ்க்கை முழுமையடையாது…
விழிகளை இறுக மூடி திறந்த உதய்கிருஷ்ணா, “என்னால யாரோ ஒருத்திய கல்யாணம் பண்ணிக்க முடியாது. எம் பொண்ணுக்கு வளர்ப்பு அம்மாவா யாரும் வந்து அவள கஷ்டப்படுத்துறத என்னால பாத்துட்டு இருக்க முடியாது” சத்தமிட்டான்.
விரக்தியுடன் அவனை பார்த்து வழிந்த கண்ணீரை தட்டி விட்டு, “உன்னோட குழந்தைய கொடுமைப்படுத்துற அளவு நான் கீழ்தரமா போகல…”
மீண்டும் விழிநீர் கசிய துடைத்துக் கொண்டு, “நான் உன்னோட குழந்தைக்கு சித்தியா இருக்க வரல. அம்மாவா இருக்க தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். பிரியாவ எனக்கு பிடிக்காது. நேரடியாவே சொல்றேன். சுத்தமா எனக்கு பிரியாவ பிடிக்காது. ஜான்வி அவ பெத்த குழந்தைன்னாலும் அதுல நான் காதலிச்ச கிருஷிகும் பங்கிருக்கே! சொல்லும் போது குரல் உடைந்து வந்தது இன்பவேணிக்கு. என்னை பொறுத்தவரை ஜான்வி உதய்கிருஷ்ணா குழந்தை தான்…அடித்து பேசி முகத்தை அழுந்த துடைத்தாள்.
அனைவர் விழிகளிலும் நீர் எட்டிப் பார்க்க, “விது உன்னோட அண்ணனை யோசிச்சு சொல்ல சொல்லு” என தொண்டை அடைக்க வெளியே சென்று விட்டாள்.
உதய்கிருஷ்ணா விழிகளும் கலங்கி தான் விட்டது. பாட்டிக்கும் ராமநாதனும் பெரும் குற்றவுணர்வாகிப் போனது. விதார்த் ஏதும் பேசாமல் அறைக்கு சென்று விட்டான்.
இன்பவேணி பேசி சென்றதே அவர்களுக்குள் சென்று கொண்டிருக்க, சித்ரலேகாவிற்கு இன்பவேணியை கண்டு பெருமையாக இருந்தது. அவள் சித்திக் கொடுமையை அனுபவித்தவளாயிற்றே! இன்பவேணியை தவிர உதய்கிருஷ்ணாவிற்கு பொருத்தமாக யாரும் வர முடியாது என பலமாக நம்பினார்.
error: Content is protected !!