Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 16

மனசு 16
சற்று நேரத்திலே உள்ளே வந்த இன்பவேணி விழிகள் வீட்டை ஆராய, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த உதய்கிருஷ்ணா அவளை பார்த்து மீண்டும் அவன் பார்வையை தொலைக்காட்சியில் பதித்தான்.
“யாரம்மா தேடுற?” ராமநாதன் கேட்க..


Advertisement

சித்ராண்ணீ..

Advertisement

பின்னாடி இருக்காம்மா…

Advertisement

“நான் பாத்துட்டு வாரேன் அங்கிள்” என சித்ராவிடம் சென்றாள். குழந்தை அவருடன் தான் இருந்தாள்.

Advertisement

என்ன மேடம்? இப்ப தான் போனீங்க?
உங்களுக்கு கஷ்டமா இருக்காண்ணீ?
எதுக்கு?
அதான் அந்த மாப்பிள்ளை…
எனக்கு திருமணத்திலே விருப்பமில்லை.
இருந்தாலும் பாத்துட்டு வேண்டாம்னு சொன்னா கஷ்டமா இருக்கும்ல?
பாப்பாவை தூக்கி, உன்னோட அம்மாவுக்கு எம் மேல அவ்வளவு கவலையாம்?
இருக்கக் கூடாதாண்ணீ?
ச்சே! அதுக்கில்ல வேணி. என்ட இந்த மாதிரி எந்த பொண்ணும் அட்டாச்சா பழகியதில்லை. என் சித்தி பேச்சுக்கு பயந்து யாருமே பேச மாட்டாங்க. முதல் முறையா உரிமையா அண்ணீன்னு சொல்ற எனக்கு சந்தோசமா இருக்கு. அத விட எனக்கு என்ன வேணும்?
குழந்தையை கையில் வாங்கிய இன்பவேணி, “ஜானு அத்த சொல்லு அத்த அத்த..” சித்ரலேகாவை காட்டி சொல்ல, சித்ராவிற்கு கண்கலங்கியது.
என்ன அண்ணீ? பாப்பா அப்படி தான கூப்பிடணும்? கிருஷ் உங்கள அக்கான்னு எவ்வளவு உரிமையா கூப்பிடுறாரு. நீங்க பாப்பாவுக்கு முன்னாடியே உங்கள அத்தன்னு கூப்பிட சொல்லி கொடுத்திருக்கணும்..
“உதய், விது எடுத்துட்ட உரிமைய யாரும் ஏத்துக்கல. நீ வந்த நேரம் எனக்கும் உறவுகள் கிடைச்சிருக்காங்க” சித்ரலேகா இன்பவேணியையும் குழந்தையையும் அணைத்துக் கொண்டார்.
பாருடா உங்க அத்தய…அழுகை வருது அவங்களுக்கு..
வேணி, நீ எப்படி உதயை சமாளிக்கப் போற?
பதிலளிக்காமல் இருந்தாள் இன்பவேணி.
வேணி இப்ப மனசு தேடாது. காதலிக்கிறவங்க பக்கத்துல இருந்தா போதும்னு தோணும். ஆனா கல்யாணம் ஆன பிறகு அப்படி இருக்க முடியாது. அப்படியிருந்தாலும் இந்த காலத்து பொண்ணுங்க சரியில்ல..திருமணம் ஆனவன் ஆகாதவன் எனவெல்லாம் பார்ப்பதில்லை…
அப்பொழுதும் பதில் கூறவில்லை இன்பவேணி.
“வேணி..” அவளை தன் பக்கம் திருப்பி அவளை ஆழ்ந்து பார்த்தாள் சித்ரலேகா.
விழிகள் கலங்கி, காதல், ஆசை, பாசம் எதுவும் இல்லாமல் இல்லை அண்ணீ. அவருக்கு விருப்பம் இல்லையே!
அப்படி விடக் கூடாது. உன்ன இப்ப கூட உதய்கு பிடிக்கும்.
அவர் ஒத்துக்க மாட்டார்ணீ. உங்கட்ட பேசணும்னு தோணுச்சு. நான் வாறேன்…
வேணி..
நடப்பது நடக்கட்டும் அண்ணீ..
“அம்மா…” குழந்தை இன்பவேணியை தூக்க சொல்ல, தூக்கி வந்தவள் இவர்கள் பேசியதை கேட்ட பாட்டியை பார்த்து புன்னகைத்து, பாட்டி உங்களுக்கும் சேத்து சாயா அம்மாவ பிரியாணி செய்ய சொல்லீட்டு இருந்தா..
அம்மாடி…
“வாரேன் பாட்டி…பாப்பாவ விதுட்ட குடுத்து விடுறேன்” என அமைதியாக நடக்க, ராமநாதனும் உதய்கிருஷ்ணாவும் குழந்தையின் “அம்மா…” அழைப்பில் அவர்களை பார்த்தனர்.
இன்பவேணி முகம் வெளிறி காணப்பட்டது.
“என்ன செய்ய காத்திருக்கானோ?” ராமநாதன் தன் மகன், மருமகள் வாழ்வை எண்ணி திருமணத்தின் முன்னே கலங்கத் தொடங்கினார்.
வெய்யோன் சுள்ளென அனைவரையும் சுட்டெறித்து வியர்வையை ஆறாக்கி கொண்டிருந்த ஒன்பது மணியளவில் ஓய்ந்த தோற்றத்தில் சோர்ந்து உதய்கிருஷ்ணா வீட்டிற்குள் வந்தாள் சாயாலி.
ஹாலினுள் நுழைந்து நடக்க முடியாமல் அமர்ந்து விட, காலை எட்டு மணிக்கே எப்போதும் வீட்டினுள் ஆஜராகும் இன்பவேணி வரவில்லை என விதார்த் சிந்தனையில் இருந்தான்.
“சாயா…என்ன இப்படி உக்காந்திருக்க? உள்ள வா…” அவள் முன் விழுந்திருந்த கூந்தலை ஒதுக்கினாள் சித்ரலேகா. அவள் மீதே மயங்கினாள் சாயாலி.
“சாயா…என்னாச்சு? சாயா…சாயா…,
“பாட்டி…” சித்ரலேகா சத்தம் கொடுக்க, அனைவரும் அங்கே கூடினர்.
“இவளுக்கு என்ன? இப்படி இருக்கா?” விதார்த் அவளை நெருங்க,
“உதய், தண்ணீ எடுத்துட்டு வா” பாட்டி சாயாலியை ஆராய்ந்து வெளியே எட்டிப் பார்க்க, யாருமில்லை…
உதய் தண்ணீர் தெளிக்க விழித்த சாயாலி, “தண்ணீ தண்ணீ…” என அவளது குஜராத்தி மொழியில் பேசினாள்.
“இவ வேற? ஒழுங்கா பேசுறாளா பாரு…” விதார்த் சொல்ல, உதய்கிருஷ்ணா கையிலிருந்த நீரை வாங்கி சாயாலிக்கு புகட்டினாள் சித்ரலேகா.
“சாயாலி, என்னாச்சு? இப்படி வந்துருக்க?” சித்ரலேகா கேட்க, கண்ணீருடன் பாட்டி கை பற்றி..
ப்ளீஸ் பாட்டி…அம்மாவ பாத்துக்கோங்க. நான் அக்காவ பாக்க போகணும்.
இன்னு எங்க? விதார்த் கேட்க,
தெரியல…காலைலே இருந்து அக்காவ காணோம். நானும் அம்மாவும் தேடுனோம். அம்மாவுக்கு ப்ளட் பிரெஷ்ஷர் அதிகமாகிடுச்சு. ஹாஸ்பிட்டல் சேர்த்திருந்தேன். கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்தோம். அவங்கட்ட அக்கா ஆபீஸ்ல இருக்கா. நான் பாத்துட்டேன்னு சொல்லி சமாளிச்சி தூங்க வச்சேன். அவங்கள பாத்துக்கோங்க பாட்டி. நான் அக்காவோட வரவும் அம்மாவ நான் பாத்துக்கிறேன்… மூச்சை இழுத்து விட்டாள்.
இப்ப அம்மா எப்படி இருக்காங்க? சித்ரலேகா கேட்க,
பரவாயில்லண்ணீ..அக்காவ நான் தேட போகணும்..
“எங்கட்ட முன்னாடியே சொல்ல மாட்டீயா?” கத்தினான் விதார்த்.
நாங்க எப்படி சொல்றது? அக்காவை காணோம்னு சொன்னா உங்க அண்ணா தப்பா ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு தான் சொல்ல. அவருக்கு தான் அக்காவ பிடிக்கலையே! நான் கிளம்பணும்…எழுந்தாள்.
நீ எப்படி தேடுவ? ரொம்ப வீக்கா தெரியுற?
அண்ணீ…நான் பாத்துக்குவேன்..
தமையனை முறைத்த விதார்த், எப்ப இருந்து இன்னுவ காணோம்? எல்லா பக்கமும் தேடுனியா?
காலைல நாலு மணிக்கே முழிச்சுட்டேன். அக்கா அறையில இல்ல…அம்மாட்ட இருக்காங்கன்னு நினைச்சு அம்மாவ பாக்க போனேன். அங்கயும் இல்ல…வீட்ல எங்கயும் இல்லன்னு பதட்டத்துல்ல அம்மாவ எழுப்பிட்டேன். வெளிய எல்லா இடத்துலையும் தேடிட்டோம் இல்ல. அம்மாவுக்கு பயத்துல ப்ரெஷ்ஷர் எகிறிடுச்சு..மயங்கீட்டாங்க..ஆட்டோ பிடிச்சி ஹாஸ்பிட்டல் சேர்த்தேன். இப்ப வந்து ஆபிஸ் கால் பண்ணி கேட்டோம். வரலைன்னு சொல்லீட்டாங்க. மேக்னா வர்றா…நாங்க கிளம்பணும்.
சாயாலி கைபேசி ஒலிக்க, சொல்லு மேக்னா?
எங்க இருக்க?
விது மாமா வீட்ல…வா…
“உனக்கு என்னாச்சு?” உள்ளே ஓடி வந்தாள் மேக்னா.
ஐ அம் ஓ.கே…
தயங்கியவாறு ரெண்டு மணிக்கு கார்ல உங்க அக்கா போறத பாத்தேன் என்றான் உதய்கிருஷ்ணா எங்கோ வெறித்து. எல்லாரும் அவனை திகைத்து பார்த்தனர்.
பாத்தீங்களா? அந்த நேரத்துல அக்கா போறத பாத்தீங்களா? சொல்லி இருக்கலாம்ல? சாயாலி சோர்வுடன் கேட்க,
அண்ணா இப்ப கூட இன்னு இன்னும் வராம இருக்கான்னு சொன்னேன்…நீ எதுவுமே சொல்லல.
அவ அவங்க அம்மாட்ட சொல்லி தான் போறான்னு நினைச்சேன்..
உதய், வேணிய நீ கல்யாணம் பண்ணிக்கப் போற? அவள காணோம். எங்க போனான்னு தெரியாம இவங்க இந்த நிலையில இருக்காங்க. நீ சாதாரணமா பேசுற? சித்ரா அவனை எறித்தார்.
எந்த பக்கம் போனா? விதார்த் கேட்க,
அவன் இடது பக்கம் எனவும்,
“பாட்டி நீங்க ஆன்ட்டிய பாத்துக்கோங்க. அக்கா சாயாவ பாத்துக்கோங்க. நான் பாக்குறேன்” என விதார்த் கைபேசியை எடுத்தான்.
“சார்…எனக்கு ஒரு இடம் தோணுது…” மேக்னா தயங்கி தயங்கி உதய்கிருஷ்ணாவை பார்த்துக் கொண்டே சொன்னாள்.
எங்க?
நேத்து காலேஜ் பொண்ணுங்க பேசுனதை கேட்டு என்டயும் கேட்டாங்க..
என்ன?
அது திருவண்ணாமலை பர்வத மலை…அந்த மலையில ஏறி அந்த ஆதிசிவன தரிசிச்சா நாம என்ன நினச்சாலும் நடக்கும்னு பேசினாங்க..மேடம் என்ட உண்மையான்னு கேட்டாங்க. எனக்கு தெரியாதுன்னு சொல்லீட்டேன்.. அங்க போயிருப்பாங்களோ???
தனியா எதுக்கு போனா? அய்யோ அங்க மலைப்பாத சாதாரணமா இருக்காது. சும்மாவே டயர்டா தெரிஞ்சா சித்ரலேகா புலம்ப..
“நான் பாத்துக்கிறேன்கா..” விதார்த் காரை எடுக்க, கைபேசியில் யாரிடமோ பேசினாள் சாயாலி.
“என்னடா பாத்துட்டு நிக்கிற? போ…அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு? அப்புறம் யாரும் உன்ன மன்னிக்க மாட்டோம்” உதய்கிருஷ்ணாவிடம் சீறினார் சித்ரலேகா.
பாட்டி கோசலை வீட்டிற்கு செல்ல, உதய்கிருஷ்ணா தன் தமையனுடன் காரில் ஏறினான். தன் அண்ணனை ஒரு பார்வை பார்த்து காரை எடுத்தான் விதார்த்.
அதிகாலை நான்கு மணியளவில் மலையடிவாரத்தில் நின்று அம்மலையை பார்த்துக் கொண்டிருந்தாள் இன்பவேணி.
எல்லாரும் ஏறுவதை பார்த்து டார்ச் ஆன் செய்து ஏறத் தொடங்கினாள். ஏற ஏற மூச்சு வாங்கியது.
“ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய…என மகாதேவை அழைத்துக் கொண்டே ஏறினாள். தலை சுற்றுவது போல இருக்க அமர இருந்தவள் மலையிலிருந்து கால் தவற, பாறையை பிடித்து தொங்கினாள். மயக்கம் வருது மயக்கம் வருது என மயங்கிக் கொண்டே கையை அவள் விட, அவள் கை யாரோ ஒருவரால் பற்றப்பட்டது.
அவளை மீறியும், ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க, அவனும் மற்றவர்களும் அவளை மேலே தூக்கி அமர வைத்து பருக நீர் கொடுத்தனர்.
துணைக்கு யாரையும் கூட்டிட்டு வரலையாம்மா? ஒருவர் கேட்டார்
எனக்கு தெரிஞ்சவங்க தான். நான் பாத்துக்கிறேன் என்றான் உதவியவன்.
“பாத்து மேல கூட்டிட்டு வாப்பா..” சொல்லி அவர் சென்று விட்டார்.
“எனக்கு உங்கள தெரியாது” அவனை உற்று உற்று பார்த்தாள்.
இன்பா…புன்னகைத்து நான் யாருன்னு உனக்கு தெரியலையா?
தெரியலையே??
உன்னோட பள்ளியில் உன்னுடன் படித்தவன். ஜோகன்..
ஜோ..ஜோகனா? நீ அந்த ஜோகனா? இன்பவேணி விழிகளில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. வேகமாக பின் நகர்ந்து, கெல்ப்… கெல்ப்… கத்தினாள். எல்லாரும் இருவரையும் வேடிக்கை பார்த்தனர். அவனுக்கு ஒரு மாதிரி ஆனது.
இத்தன பேரு இருக்கோம். அந்த பையன் தான் உன்ன காப்பாத்தினான்? நீ அவன பாத்து பயந்து கத்துற? பெரியவர் கேட்டார்.
இவன்…இவன்..இவனா? என்னை காப்பாத்தினானா? அவனை பார்த்தாள்.
பந்தா காட்டிக் கொண்டு பெண்களை கேலி செய்து அவர்களை காயப்படுத்திய அந்த ஜோகனா? இருக்காது..அவன் இப்படி இருக்க மாட்டான். நீ பொய் சொல்ற?
கண்ணீர் துளிகள் அவன் கன்னத்தில் வழிந்தது.
நீ நிஜமாவே ஜோகனா?
ம்ம்! சாரி இன்பா…நான் அப்படி நடந்துருக்க கூடாது..
நீ தான் பேசுறீயா?
நான் தான்…வா போகலாம்…பூஜை ஆரம்பிச்சிடுவாங்க.
ஆமா, நானும் சீக்கிரம் வீட்டுக்கு போகணும். அம்மாட்ட சொல்லாம வந்துட்டேன். தேடுவாங்க..
எதுக்கு தனியா வந்த?
“கிருஷோட என்னோட மேரேஜ்” வாழ்நாள் முழுக்க நல்லா இருக்கணும்னு வேண்ட வந்தேன்..
கிருஷா? உன்னோட பாய் ப்ரெண்டா?
ஹேய்…உன்ன பிடிச்சார்ல…உதய்கிருஷ்ணா..
விதார்த் அண்ணாவா?
ஆமா…
அவருக்கு ஒரு பொண்ணு இருக்கால்ல?
ஆமா..
யோசனையுடன், அவரையும் அழைச்சிட்டு வந்துருக்கலாமே!
அவர் எம் மேல கோபமா இருக்காரு. அதான் தனியா வந்தேன்.
மேரேஜ்னு சொன்ன?
அவர் பொண்ணுக்காக மேரேஜ் பண்ணிக்க ஒத்துக்கிட்டாரு.
ஓஓஓ!
நடந்துட்டே பேசு. சீக்கிரம் ஏறணும்.
நீ ஏன் இவ்வளவு சோர்வா இருக்க?
என்ன விடு. நீ எப்படி இருந்த? இப்படி ஒட்டடை குச்சியாட்டம் தலை முடி வளந்து பெரிய தாடியோட…அடையாளமே தெரியல…நீ நிஜமாவே மாறிட்டேல்ல????
ம்ம்! என்னோட அப்பா வீட்டுக்கு போனேன். யாருமே என்ன மதிக்கல. செல்லமா வளத்த என்னோட அம்மாவுக்கு கூட என்ன புடிக்கல..கண்ணீர் கசிந்தது.
எல்லாம் சரியாகும் என அவனையே அவ்வப்போது ஆராய்ச்சி பார்வையுடன் மலையேறினாள்.
இருவரும் மேலேறி இறைவனை தரிசித்து ஓரிடத்தில் அமர்ந்தனர். கைபேசியை ஆன் செய்த ஜோகன், உதய்கிருஷ்ணா எண்ணை அழுத்தினான். அப்பொழுது தான் அவர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர்.
அவனையே குறுகுறுவென பார்த்துக் கொண்டு பிரசாதத்தை உண்டு கொண்டிருந்தாள் இன்பவேணி.
உதய்கிருஷ்ணா அழைப்பை கட் செய்ய, மீண்டும் அழைத்தான் ஜோகன். அவன் கட் செய்ய கடுப்பான விதார்த் அண்ணனை முறைத்து அழைப்பை ஏற்று, “யாருடா?” சத்தமிட்டான்.
அந்த பக்கம் இன்பவேணியின் குரல் கேட்க காரை நிறுத்தினான்.
“உதய்கிருஷ்ணா சாருக்கு தான் உன்ன பிடிக்கலைன்னு சொல்ற அப்புறம் எதுக்கு அவர மேரேஜ் பண்ணனும்னு சொல்ற?” என்ற ஜோகனின் குரலில் திகைத்து…
இவனா???? வாயில் கை வைத்து அண்ணனை பார்த்தான் விதார்த்.
யாரு?
ஜோகன்…அதான் நாங்க படிக்கும் போது நம்ம இன்னுவ தப்பா வீடியோ எடுத்தானே!
அவனோட இவ என்ன பேசிட்டு இருக்கா?
“அத நீ சொல்லாத…” என்று விதார்த் கழுத்தை வெட்டி அவர்கள் பேச்சை கவனித்தான்.
என்னால கிருஷ மறக்க முடியல. அவனுக்கு பிடிக்கலைன்னா என்ன? பக்கத்துல இருப்பான்ல போதும்..
ஊறுகாயா இருந்தாலும் உணவுக்கு எடுக்க தொடாம இருக்க முடியாது..
அய்யோ! என்ன பேசுற…???? சிவ சிவா..
ஏய்ய்…நான் பேசுறத சொன்னேன். அவர் பேசலைன்னாலும் உன்னால பேசாமல் இருக்க முடியுமா?
மௌனம் காத்தாள்.
சரி அது உங்க விசயம். பாத்து முடிவெடு…
“நீ ஏன் என்ன பாத்து அப்படி பயந்த?” குரல் கம்ம தயங்கி கேட்டான்.
அமைதி காத்தாள்.
நான் இப்ப அதே மாதிரி அயோக்கியனா இல்ல நிறையவே மாறிட்டேன். அன்னிக்கு கூட உன்ட தைரியம் தான் இருந்தது. ஆனா இன்னிக்கு உங்கண்ணுல பயம் தெரிஞ்சது…நீ பயப்பட மாட்டீயே இன்பா?
கண்ணீர் வந்தது..
ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?
“இல்லை” தலையசைத்தவள், எல்லாரோட வாழ்க்கையும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. அதுக்கு ஏத்தமாதிரி தான நாமும் இருப்போம்..
நான் என்ன கேக்குறேன்? நீ என்ன சொல்ற?
ப்ளீஸ்…
நான் என்னோட அப்பா வீட்ட விட்டு வந்துட்டேன். எனக்கு எப்பவுமே பாரு மட்டும் தான் தெரிஞ்சுட்டே இருப்பா. அவ எங்க இருக்கான்னு தெரியுமா இன்பா? தவிப்புடன் கேட்டான்.
தெரிஞ்சு என்ன செய்யப் போற?
உனக்கு தெரிஞ்சா சொல்லு அவட்ட மன்னிப்பு கேக்கணும்? அவ கத்துனது இன்னும் என்னால தூங்க விடாம பண்ணுது…
விரக்தி சிரிப்புடன், “செய்றதெல்லாம் செஞ்சுட்டு எப்படி ஒரு வார்த்தையில மன்னிப்பு…அதுவும் நீ செஞ்சது…அவ மன்னிப்பாளா?”
“உனக்கு பாரு எங்க இருக்கான்னு தெரியுமா? தெரிஞ்சா சொல்லேன்? அவள தேடினேன். அவ அப்பவே அந்த வீட்ல இருந்து போயிட்டாளாம். அவள தேடியும் கிடைக்கல…” ஆர்வமுடன் தொடங்கி வருத்தமுடன் முடித்தான்.
அதெப்படி எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி இருக்கீங்க? அவ காணோம் தேடுனேன் கிடைக்கல. இதெல்லாம் ஒரு வார்த்தையா? ஒரு பொண்ணு புறந்து வளந்த வீட்ட விட்டு போறான்னா எவ்வளவு உடைஞ்சிருப்பா தெரியுமா? தேடினேன்னு சொன்னீயே! எத்தனை நாள் தேடுன?
வருத்தமுடன்….ஒரு வருசம்…
அப்புறம்..
எனக்கு வேலை…
சிரித்தவள், போலீஸ்ல கேஸ முடிக்க இந்த ட்ரிக் தான் யூஸ் பண்ணுவாங்க. கொலைகாரன தேடிட்டே இருப்பாங்க. அவன் வரிசையா கொல்லும் போது தேடுவாங்க…அவன் நிறுத்தவும்…கொஞ்சம் கொஞ்சமா கேஸ் வேற பக்கம் போவாங்க அது மாதிரி சொல்ற. உன்னோட வார்த்தையிலயே தெரியுது நீ பாருவ நினைச்சுட்டே இருக்கன்னு. நிறுத்தாம தேடி இருக்கணும். ஒரு வருசம் தேடுன உன்ட அவ அடுத்த நாலு நாள்ல கூட கிடைக்க வாய்ப்பு இருந்திருக்கும். அந்த நாலு நாள்ல நீ உன்னோட வேலைய பாக்க ஆரம்பிச்சு அவள விட்டுட்டு இப்ப நான் அவள தேடுனேன். அவ போயிட்டான்னு சொல்ல உனக்கு வெக்கமா இல்ல.. எந்த விசயம் ஆரம்பிச்சாலும் இறங்கி வேலை பாக்கணும்..என்றாள் தீர்க்கமுடன்.
உதய்கிருஷ்ணா விதார்த் இருவரும் திகைத்தனர். இன்பவேணி அவர்களுக்கு சொல்வது போல இருந்தது.
சாரி இன்பா…அவ எங்க இருக்கான்னு தெரியுமா?
“முடியாது” அவள் தலையை மட்டும் அசைக்க, அவன் தெரியாதுன்னு சொல்றான்னு நினைச்சுட்டான்.
நீ இப்ப என்ன வேல பாக்குற?
நான் தான் அடுத்து படிக்கலையே! உதய்கிருஷ்ணா சாரை ஒரு முறை பார்த்தேன். அவர் கம்பெனிக்கு போய் அவரை பார்க்க கேட்டேன். என்னோட தோற்றத்த பாத்து யாருமே உள்ளவே விடல..
முதல்ல நீட்டா இரு…இப்படியா சாமியார் மாதிரி தாடி வளத்திருப்ப?
புன்னகைத்தான்..நான் ஸ்ட்ரீட் டிராயிங் பண்றேன்..
வேற எதுவும் உன்னால பண்ண முடியாதா?
எனக்கு ஆர்ட் நல்லா வருது. என்னோட அறையில ட்ரா பண்ணி வச்சிருக்கேன். ஆர்ட் கேலரில்ல ட்ரைப் பண்ணலாம். ஆனா..என்ன அவங்க அடிச்சு துரத்திடுவாங்க…
முதல்ல நீட்டா அழகா உன்ன சரி பண்ணீட்டு எங்கிட்ட வா. நாம பாக்கலாம் என அவளது ஆபிஸ் கார்டை நீட்டினாள்.
ரொம்ப தேங்க்ஸ் இன்பா..
“வா கிளம்பலாம்..” இருவரும் கீழே இறங்கத் தொடங்கினர். அண்ணன் தம்பி இருவருக்குள்ளும் இரு வேறு எண்ணங்கள் உதித்தது.
அவர்கள் கீழிறங்கவும் விதார்த் மலைப்பக்கமிருந்த சாலையில் காரை நிறுத்தவும் சரியாக இருந்தது.
“உனக்காக வாழ நினைக்கிறேன்
 உசுரோட வாசம் புடிக்கிறேன்
    புடவ மடிக்கையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
 ஒரு நூறு வருஷம் பேச
நினைச்சு தோளில் தூங்கிடுவேன்..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!