Skip to content
Post Views: 1,306
மனசு 17
“உதய்கிருஷ்ணா தன்னை தேடி வந்துருக்கிறானா?” புன்னகை முகத்துடன் ஜோகனை தவிர்த்து அவர்களை நோக்கி ஓடி வந்தாள் இன்பவேணி.
“வேணி…” சிறுவனின் குரலில் நின்ற இன்பவேணியிடம் ஓடி வந்தான் அச்சிறுவன்.
Advertisement
கண்ணீர் கசிய அச்சிறுவனின் முகமெங்கும் முத்தமிட்டு, “உனக்கு ஒன்றுமில்லையே! நல்லா இருக்கீயா?” குரஜாத்தி மொழியில் கேட்டு அவனின் தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள் இன்பவேணி.
Advertisement
“இல்லை…” தலையை மட்டும் ஆட்டினான் பத்து வயது நிரம்பிய சிறுவன் அனீஷ்..
Advertisement
“டார்லிங்…” அழைப்பில் அவள் எதிரே நின்றவனை கண்டு, “மானவ், நீ ஓ.கேவா?” அவனையும் மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். அவன் பட்டென இன்பவேணியை அணைத்துக் கொண்டான்.
Advertisement
விதார்த்தும் ஜோகனும் அதிர, உதய்கிருஷ்ணா இருவரையும் வெறித்து நோக்கினான்.
“நீ எதுக்கு இங்கெல்லாம் வர்ற? உனக்கு ஏதாவது ஆகி இருந்தால்…??” அக்கறையுடன் இன்பவேணியிடம் கேட்டான் மானவ்.
“உனக்கு யாரு சொன்னா? இங்க எப்ப வந்தீங்க? அங்க எல்லாம்…” என்று மற்ற மூவரையும் பார்த்து, மானவிடமிருந்து நகர்ந்து உதய்கிருஷ்ணா விதார்த் இடையே நின்று உதய்கிருஷ்ணா கை பிடித்தாள்.
அவன் கையை உதற, வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்து, “மானவ் என்னோட கிருஷ நான் மேரேஜ் பண்ணிக்க போறேன்”.
இவனையா? நோ…டார்லிங்..
“ஹலோ, அவங்க மேரேஜ் பண்ணிக்கப் போறாங்க. நீங்க என்ன இன்பாவ டார்லிங்குன்னு கூப்பிடுறீங்க? யாரு நீங்க?” ஜோகன் மிரட்டுவது போல கேட்டான்.
“நம்முடன் படித்த ஜோகனா இவன்? ஆள் அடையாளமே தெரியலையே!” என்று ஜோகனை பார்த்தான் விதார்த்.
“நான் யாரா இருந்தா உனக்கென்ன? நீ யாரு எங்கள பத்தி கேக்க?” அருமையாக தமிழில் பேசினான் மானவ்..
அனீஷ் மானவின் கை பிடிக்க, அவன் அமைதியாகி விட்டான். எல்லாரும் அனீஷை மானவின் குழந்தை என்றே பார்த்திருந்தனர்.
இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்த விதார்த், “இன்னு இப்படியா சொல்லாம வருவ? அங்க எல்லாரும் எப்படி பயந்துட்டோம்” அவளை திட்டி கை பிடித்து, “வா….” என அழைக்க,
“நீங்க முன்னாடி போங்க. டார்லிங் என்னோட வருவா..” என்றான் மானவ். அனீஷ் இன்பவேணி கை பிடித்தான்.
“மானவ், நீயும் வா… நான் இவங்களோட போறேன். அனீஷையும் நான் வச்சிருக்கேன்” என பேசிக் கொண்டே அவனை ஆராய்ந்தாள்.
மானவ் கையை ஒருவாறு மடிக்கி இருந்தான்…
“உன்னோட ஆளுங்க வருவாங்களா?” இன்பவேணி கேட்டாள்.
“வந்துட்டு இருக்காங்க” முகம் சுருக்கினான் மானவ்.
“சரி வா…எங்களோடவே!” என உதய்கிருஷ்ணா விதார்த்திடம் கெஞ்சுதலாக பார்த்தாள்.
உதய்கிருஷ்ணா ஏதும் சொல்லாமல் காரின் பின் பக்கம் ஏற, விதார்த்துடன் மானவ் அமரவும்,
ஜோகனிடம் சென்று, “நாம பாக்கலாம். ஷேவ் செஞ்சு நீட்டா வா” அவனிடமிருந்து விடை பெற்று நிம்மதியுடன் அனீஷூடன் காரில் ஏறினாள் இன்பவேணி.
மானவை சகோதரர்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை. அனீஷ் இன்பவேணியை இடையோடு கட்டிக் கொண்டே அமர்ந்திருந்தான். உடனே உதய்கிருஷ்ணா வீட்டிற்கு விசயத்தை சொல்ல, இவர்கள் உணவுண்ண ஓரிடம் சென்று உணவை முடித்து வர மாலையாகி இருந்தது.
இவர்கள் கார் சத்தம் கேட்க, இரு வீட்டினரும் வெளியே வந்தனர். ராமநாதன் கூட வீட்டிலேயே இருந்தார்.
சாயாலியும் கோசலையும் இன்பவேணியை திட்ட வந்தவர்கள் மானவ் அனீஷை கண்டு, அவர்களிடம் வந்தனர்.
கோசலையை பார்க்கவும் இருவரும் ஒன்று போல ஆசி வாங்க, அவருக்கு கண்ணீர் வந்து விட்டது.
“மானவ் நீ நல்லா இருக்கீயா? உனக்கும் புள்ளைக்கும் ஏதாவது ஆகி இருக்குமோன்னு பயந்துட்டே இருந்தோம்” கோசலை பேச, சாயாலி இன்பவேணி போல அனீஷை ஆராய்ந்தாள்.
“யாரு இவங்க? உங்களுக்கு அவ்வளவு முக்கியமா?” விதார்த் கேட்க,
ஆமா, என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் மானவ்…என்றாள் சாயாலி.
“மேடம்…” மானவ் அழைக்க,
“உண்மையில்லையா?” சாயாலி அவன் உடலை ஆராய்ந்தவாறு கேட்டாள். இன்பவேணி சாயாலியை கண்டு கண்ணை காட்ட…
“சரி வாங்க வீட்டுக்கு போகலாம்..” என சித்ரலேகாவிற்கு நன்றி கூறிய சாயாலி, உதய்கிருஷ்ணாவை கண்டுகொள்ளாமல்…, “தேங்க்ஸ் விது மாமா…அக்காவ பத்திரமா அழச்சிட்டு வந்ததுக்கு…”
“மேடம்…” கண்டிப்புடன் அழைத்தான் மானவ்.
ம்ச்ச்…என்ற சாயாலி, பாட்டியை அணைத்து ராமநாதனை பார்த்து தலையசைத்து இவர்களுடன் வீட்டிற்கு சென்றாள்.
“மானவ், அவங்க என்ன ஆனாங்க?” கோசலை கேட்க,
முடிச்சிட்டேன் ஆன்ட்டி…
“என்னடா சொல்ற?” சாயாலி பதற, அவன் கையிலிருந்த பல கிரிடிட் கார்டை அவளிடம் நீட்டினான்.
என்னது இது? சாயாலி கேட்க,
உங்க சொத்து எல்லாமே வித்துட்டேன். இதுல முழுவதுமாக பிரிச்சு பணம் போட்டு வச்சிருக்கேன். உங்களோடது…
நிஜமாவே அவங்க எல்லாரும் செத்துட்டாங்களா?
ம்ம்!
இன்பவேணி மானவை நெருங்கி, காயம் ரொம்ப பலமா இருக்கோ???
“காயமா?” கோசலை கேட்டு மானவின் சட்டை பொத்தானை கழற்றினார்.
இடுப்பிலும் கையிலும் பெரிய கட்டாகி இருந்தது..
அய்யோ! இவ்வளவு காயமா? பதறினார்கள் மூன்று பெண்களும்…
“வா, ஹாஸ்பிட்டல் போகலாம்” சாயாலி அழைக்க,
ஒண்ணுமில்ல மேடம்..
“இருக்கா? இல்லையான்னு டாக்டர் சொல்லுவாங்க…வா….” அவன் கை பிடித்து வெளியே இழுத்து வர அனீஷூடன் இன்பவேணி காரை எடுக்க, கோசலை வீட்டை பூட்டினார்.
இவர்களை பார்க்க வீட்டிற்கு செல்லலாம் என பாட்டியும் சித்ரலேகாவும் ஜான்வியுடன் வந்தனர்.
“எங்க போறீங்கம்மா?” பதட்டமுடன் பாட்டி கேட்டார்.
“ஹாஸ்பிட்டலுக்கு பாட்டி. கொஞ்ச நேரத்துல வந்துடுறோம்” என்ற இன்பவேணி யோசனையுடன், “சித்ராண்ணீ…அனீஷையும் கொஞ்ச நேரம் பாத்துக்கிறீங்களா?” எனக் கேட்டாள்.
பாட்டியும் சித்ரலேகாவும் மானவ் மற்றும் அனீஷையும் பார்த்தனர்.
மானவ்கு அடி பட்டிருக்கு பாட்டி. நாங்க போயிட்டு வாரோம். அதுவரை பாத்துக்கோங்க. அனீஷ் சமத்தா இருப்பான்..
சரி வேணி, விட்டு போ. நாங்க பாத்துக்குறோம்..என்றார் சித்ரலேகா.
மானவை உற்று பார்த்த பாட்டி, “எப்படி அடிபட்டுச்சு?” மானவிடம் கேட்டார்.
அவன் தயங்கி மற்றவர்களை பார்க்க, “ஆக்சிடன்ட் ஆகிடுச்சு பாட்டி. கட்டு மட்டும் போட்டிருக்கான்” சாயாலி சமாளித்து தமக்கையை பார்த்தாள்.
இன்பவேணி அனீஷிடம் பேசி, அவனை சித்ரலேகாவிடம் கொடுத்து, “மானவ் அ ண்ணீ நல்லா பாத்துப்பாங்க. உனக்கு பிரச்சனையில்லையே??” கேட்டாள்.
ம்ம்!!!! என்று சித்ரலேகாவை பார்த்தான் மானவ். அவளும் அவனை பார்த்தாள்.
கழுத்து வரை நீண்டிருந்த கூந்தல், சுண்டி விட்டால் இரத்தம் வரும் சிவப்பு நிறம், அவனின் கருமை புருவம் விழிகளும் அவனை ரௌடியாக காட்டியது சித்ரலேகாவிற்கு.
இன்பவேணி காரை எடுக்க, “பாத்து விவரம் எல்லாமே கேட்டு மருந்து வாங்கிக்கோங்க…” என்றார் பாட்டி. அவன் விழிகள் பாட்டியிடம் நிலைத்தது. அவரை பார்த்துக் கொண்டே சென்றான் மானவ்.
சித்ரலேகா அனீஷிடம் பேச்சுக் கொடுக்க, அவன் வாயை திறக்கவேயில்லை. எல்லாரும் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இந்த பையன் எதுக்கு இங்க இருக்கான்?” உதய்கிருஷ்ணா கேட்க, அவனை ஏறிட்டான் அனீஷ்.
பாட்டி விளக்கவும் விதார்த்தும் அனீஷிடம் பேச்சுக் கொடுக்க, பதிலே இல்லை.
“என்ன பாட்டி பேசவே மாட்டேங்கிறான்?” சித்ரலேகா கேட்க,
“எங்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்?” அவர் கோபமாக பேசினார்.
அனீஷ் அழுவது போல முகம் வைக்க, சித்ரலேகா அவனை சமாதானப்படுத்தி ஜான்வியுடன் விளையாட வைக்க, அவளுக்கு அனீஷை பிடித்து விட்டது. அவன் முகத்தை கையால் வருடிக் கொண்டிருந்தாள். அப்பொழுதும் அவன் அமைதியாகவே இருந்தான்.
பாட்டி, இந்த பையனுக்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன் என்றாள் பாட்டி காதில் கிசுகிடுப்பாக..
மருத்துவமனை சென்றவர்கள் இரவு வர ஜான்வி உறங்கி இருந்தாள். அவளருகே அமர்ந்திருந்தான் அனீஷ்.
மானவ் தயக்கமெல்லாம் இல்லாமல் இன்பவேணியுடன் உள்ளே வந்தான். அனீஷ் வேகமாக மானவிடம் ஓடினான். அவன் அனீஷை தூக்க செல்ல…
“மானவ், வெயிட் தூக்கக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்கல?” அனீஷை துக்கினாள் இன்பவேணி.
“அனீஷ் பாப்பா கூட விளையாண்டியா?” கேட்டுக் கொண்டே, “அண்ணீ அனீஷ் சாப்பிட்டானா?” கேட்டாள்.
சாப்பிட்டான் வேணி. இவன் பேசமாட்டானா? சித்ரலேகா கேட்க,
ஆமா அண்ணீ. அவனால பேச முடியாது…
ஏம்மா? என்னாச்சு? பிறந்ததிலிருந்தேவா?
இல்ல பாட்டி…அதிர்ச்சியில தான் பேச முடியல..ஆனா எமோஸ்னல் ஆனா லைட்டா பேசுவான்…மத்த படி என்ன செஞ்சாலும் பேச மாட்டேங்கிறான்..
எல்லாரும் மானவை பார்க்க, ஓடி வந்தாள் சாயாலி.
அக்கா, மானவ் உங்களுக்கு என்ன ஃபுட் வேணும்? ஆர்டர் போடணும் என்றாள்.
“எதுக்கு ஆர்டர் போடணும்? வாங்க நம்ம வீட்லவே சாப்பிடலாம்..” என்றார் பாட்டி.
“பாட்டி….” உதய்கிருஷ்ணா சத்தம் கொடுக்க, அவனை முறைத்து பார்த்தனர் இன்பவேணியும் சாயாலியும்.
“சும்மா கிட உதய். இன்னிக்கு புல்லா புள்ள அழைஞ்சுட்டே இருந்துருக்கும். நம்ம வீட்ல அவங்க சாப்பிடுறதுல என்ன?” பாட்டி கோபமானார்.
“வேணாம் பாட்டி. நாங்க ஆர்டர் பண்ணிப்போம்..” சாயாலி இருவர் கையையும் பிடித்தாள்.
“உதய்..” கண்டிப்பான குரலில் ராமநாதன் அழைக்க, யாராலும் நம்ப முடியவில்லை.
இதுல நீங்க தலையிடாதீங்க என்றான் தந்தையை நோக்கி..
“தலையிட வேண்டாமா? இல்ல நானும் வெளிய போகணுமா?” கோபமாக ராமநாதன் மகனிடம் எகிறினார்.
“அங்கிள், எதுக்கு சண்ட போடுறீங்க? நாங்க அடிக்கடி ஆர்டர் பண்றது வழக்கம் தான்” சாயாலி சொல்ல, சித்ரலேகாவிற்கும் கோபம் வந்தது.
நீங்க யாரோ இல்ல சாயா. யாரு என்ன சொன்னாலும் இந்த வீட்ல உங்களுக்கான உரிமை இருக்கு. சாப்பிட உட்காரு. அம்மாவ அழைச்சிட்டு வா…
அண்ணீ, இன்னும் சிலர் எங்க வீட்ல இருக்காங்க…என்றாள் தயக்கமுடன் சாயாலி.
யாரு இருக்கா? பாட்டி கேட்க, எங்க குடும்பத்துக்கு உதவும் ஆட்கள். மானவுடன் தான் வந்தாங்க…என்றாள் சாயாலி.
சரி..இதுல என்ன? அவங்களையும் அழைச்சிட்டு வா…சாப்பிடலாம்..
“அண்ணீ…” தயங்கினாள் இன்பவேணி..
பாட்டி, நீங்க அம்மாவையும் மத்தவங்களையும் அழைச்சிட்டு வாங்க…நீங்க மூணு பேரும் சாப்பிட உக்காருங்க…என்று சித்ரலேகா சமையலறை செல்ல, “நானும் உங்களுக்கு உதவுறேன் அண்ணீ” சாயாலியும் ஓடினாள்.
இருவரும் மளமளவென உணவை தயார் செய்து பரிமாற, மானவின் உதவியாளர்களும் உணவுண்டனர். உதய்கிருஷ்ணாவால் மானவையும் அனீஷையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோசலைக்காக அமைதியாக இருந்தான்.
உணவை முடித்தவர்கள் சித்ரலேகாவின் கை வண்ணத்தை பாராட்டி சென்றனர். அனீஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன அனீஷ்? எதுக்கு அப்படி பாக்குற?” புருவம் உயர்த்தி அவனருகே அமர்ந்து அவன் கையில் பாதாம்பால் கோப்பையை கொடுத்தாள்.
“இல்லை” தலையசைத்து அவன் பால் குடிக்க, இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் மானவ். பாட்டி எல்லாரின் நடவடிக்கையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
உதய்கிருஷ்ணாவிடம் கம்பெனி விசயமாக விதார்த் பேச, பதிலளித்து ஜான்வியை தூக்கி அறைக்கு சென்று விட்டான் உதய்கிருஷ்ணா.
“ஜானுவ கூட அவ கவனிக்கல. அந்த பையன் அவ்வளவு முக்கியமா?” கோபமாக வந்தது உதய்கிருஷ்ணாவிற்கு இன்பவேணி மீது..
மருத்துவமனையிலிருந்து அனீஷை அழைத்து செல்ல நேராக வந்ததால் ஜான்வியிடமிருந்து விலகி இருந்தாள் இன்பவேணி. அவளை என்ன குறை சொல்லலாம் என எண்ணியவன் போலவே உதய்கிருஷ்ணா நடந்து கொண்டான்.
வேணி, எங்க போனாலும் ஒரு மெசேஜாவது போட்டு கிளம்புடா என்றார் ராமநாதன் கனிவுடன்.
சரிங்க அங்கிள்..
உதய்கிருஷ்ணா- இன்பவேணி திருமண ஏற்பாடுகள் விறுவிறுவென நடக்கத் தொடங்கியது. நாட்கள் இறக்கை கட்டி பறந்தது. மானவும் அனீஷீம் உதய்கிருஷ்ணா, விதார்த்தை தவிர அனைவரிடமும் நன்றாகவே பழகினார்கள். தன்னிடம் பேச வரும் மானவை தவிர்த்து அனீஷிடம் மட்டும் நெருங்கி இருந்தாள் சித்ரலேகா. அவனுக்கும் அவளை மிகவும் பிடித்து இருந்தது.
திருமண நாளுக்கு முன்னதாகவே ஜான்வியின் முதல் பிறந்தநாள் வந்தது. விதார்த் ஒரு ஆர்வத்தில் இன்பவேணியிடம் சொல்ல, பிறந்த நாளை பிரம்மாண்டமாக செய்ய எண்ணி எல்லாரிடமும் கேட்டாள்.
உதய்கிருஷ்ணா மறுப்பு தெரிவிக்க, “பர்ஸ்ட் பர்த்டே ஸ்பெசல் இல்லையா?” அவனிடம் சண்டைக்கு செல்ல, இருவரும் கொஞ்சமும் சரியாகவில்லை.
ராமநாதனும் மற்றவர்களும் இன்பவேணியின் விருப்புக்கு ஒத்துக் கொள்ள அனைவரிடமும் சொல்லியே ஜான்வியின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அழகு டால் போல சித்ரலேகா, இன்பவேணி கை வண்ணத்தில் மின்னினாள் ஜான்வி. சொந்த பந்தங்கள் பக்கத்து வீட்டினர் அனைவரும் வந்திருந்தனர்.
கேக் கட் பண்ணும் சமயம், இன்பவேணி உதய்கிருஷ்ணா இருவரும் ஜான்வி கை பிடித்து கேக் கட் பண்ண பாட்டி வற்புறுத்த அதன் படியே நடந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் உதய்கிருஷ்ணாவிடம் புன்னகை இல்லை. தன் மகளை பகிர்ந்து கொள்ள ஒருத்தி வந்ததாகவே எண்ணினான்.
சிறுவயதிலிருந்தே அவனுடைய அம்மாவும் அவனுடன் இல்லை. சொந்தபந்தம் காதலி எல்லாரும் அவனை ஒரு கட்டத்தில் விட்டு சென்றிருக்க, உடனிருந்ததது விதார்த்தும் அவன் மகள் ஜான்வியும். ஜான்வியின் அன்பை இன்பவேணியுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள உதய்கிருஷ்ணாவிற்கு விருப்பமில்லை. ஆனால் ஜான்வி நாள் முழுவதும் கிளுக்கியவாறே வலம் வந்தாள்.
மறுநாள் கம்பெனி பிரச்சனை என்று காலையிலே உதய்கிருஷ்ணாவிற்கு அழைப்பு வர, சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த இன்பவேணி, விதார்த்திற்கும் கூட அழைப்பு வந்தது.
இன்பவேணி சந்தேகம் ஊர்ஜிதமானது. அவள் விதார்த்தை பார்க்க, அவனால் நம்ப முடியவில்லை.
என்னடா விது? ராமநாதன் கேட்க, பாட்டியிடம் சொல்வது போல…
விச்சு அங்கிள் கம்பெனிய கவர்மென்ட்ல சீஸ் பண்ணாங்களே! இப்ப அவர் பெயரிலே அண்ணா அவன் தான் உரிமையாளன்னு சொல்லாம நடந்திட்டு வந்திருக்கான் பாட்டி. இன்று காலை அந்த கம்பெனியில தான் தீப்பிடிச்சிருக்கு. அதான் அண்ணா அவ்வளவு பதட்டமா இருந்திருக்கான் என்று சொல்ல, இன்பவேணி வேகமாக வெளியே செல்ல, “இன்னு நானும் வாரேன்” என்று விதார்த்தும் அவர்களுடன் ராமநாதனும் அவ்விடம் சென்றனர்.
பைரவன் கௌதமை அரெஸ்ட் செய்வதை பார்த்து இருவரும் உதய்கிருஷ்ணாவிடம் வந்தனர்.
அண்ணா, கௌதமா?
இன்பவேணியை பார்த்து விட்டு சகோதரனை கண்டு, நீ இன்னிக்கு நம்ம கம்பெனியை பாத்துக்கோ. எனக்கு வேலை இருக்கு..
“கிருஷ்…” இன்பவேணி அழைக்க, கையை உயர்த்திய உதய்கிருஷ்ணா, “விச்சு அங்கிள் என்னோட ரோல் மாடல். அவரோட கனவுக்காக மட்டும் தான் இந்த கம்பெனிய அவர் பெயரிலே நான் நடத்தி வாரேன். வேற எந்த காரணமும் இல்லை” என்று போலீஸ் ஸ்டேசன் கிளம்பினான்.
அந்த பிரச்சனை அனைத்தும் முடிந்து வீட்டிற்கு வந்தான். கோசலை உதய்கிருஷ்ணாவிடம் நன்றி கூற, அவனையே அசராமல் பார்த்துக் கொண்டிருந்தான் மானவ்.
இன்பவேணி அவளுக்கு அவளே ஆறுதல் கூறிக் கொண்டாள். நாட்கள் செல்ல செல்ல உதய்கிருஷ்ணாவை விட இன்பவேணியிடம் ஜான்வி அதிகம் ஒட்டிக் கொள்ள, அதுவும் உதய்கிருஷ்ணாவிற்கு இன்பவேணி மீது கோபத்தை அதிகமாக்கி இருந்த
“உன் துணைத் தேடி
நான் வந்தேன்
துரத்தாதேடா
உன் கோபம் கூட
நியாயமென்று
ரசித்தேனடா
நீ தீயாய் இரு எனைத்
திரியாய் தொடு
நான் ஒளிபெற்று
வாழ்வேனடா”
திருமணத்தின் இரு நாட்களுக்கு முன் ஆபிஸ் நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பதாக உதய்கிருஷ்ணாவிடம் கூறி பப் சென்றிருந்தான் விதார்த்.
நடுநிசியாகி இருக்க, “விதார்த் வந்து விட்டானா?” என உதய்கிருஷ்ணா விதார்த் அறைக்கு சென்றான். உள்ளிருந்து நழுங்கிய தோற்றத்தில் வெளியே வந்தாள் சாயாலி.
“இந்த நேரத்துல நீ இங்க என்ன செய்ற?” ஆத்திரமுடன் உதய்கிருஷ்ணா கேட்க, உதடுகள் துடிக்க கண்ணீருடன் சாயாலி உதய்கிருஷ்ணாவை பார்த்தாள்.
விது மாமா போதையில இருக்கார். அவருக்கு நடந்தது தெரியாது…
“உனக்கு சத்தம் போடணும்னு கூட தெரியாதா இல்ல வேணும்னே அவன்…” வார்த்தையை கடித்து துப்ப, வேகவேகமாக கீழிறங்கினாள் சாயாலி.
நில்லு…நான் கேட்டுட்டே இருக்கேன். போயிட்டு இருக்க????
தாகம் தணிக்க வெளியே வந்த சித்ரலேகா இருவரையும் பார்த்து, “சாயா இங்க என்ன பண்ற?” அவள் தோற்றத்தை கவனித்து, “உதய்…என்ன?” பதட்டமானார். அவன் விதார்த் அறையை பார்த்தான்.
தலையில் கை வைத்த சித்ரலேகா, “எதுவானாலும் நாளைக்கு பேசிக்கலாம். நீ என்னோட வா….” சாயாலியை அவரறைக்கு அழைத்து சென்றாள்.
உதய்கிருஷ்ணா உறங்க முடியாமல் அதிகாலை விடியவும் விதார்த் அறைக்கு வெளியே காத்திருந்தான்.
விதார்த் எழுவதற்கு முன்பே சாயாலி சித்ரலேகா அறையிலிருந்து வெள்யே வருவதை கண்ட பாட்டி…
“ஏய், இங்கிருந்து எப்படி வர்ற? உங்க வீட்டுக்கு போகலையா? நைட் வீட்டுக்கு போனேல்ல?” கேள்வி கேட்க, அடுக்கலையில் வேலையாக இருந்த சித்ரலேகா வெளியே ஓடி வந்தாள். ராமநாதனும் அதே கேள்வியை தாங்கி சாயாலியை கண்டார்.
விழிகளை இறுக மூடி திறந்த உதய்கிருஷ்ணா விதார்த் மீது ஒரு பக்கெட் வாளி நீரை ஊற்ற, அடித்து பிடித்து எழுந்தான் விதார்த். அவனுக்கு தலை வின்வின்னென்று வலித்தது.
error: Content is protected !!