Skip to content
Post Views: 5,211
விசும்பி அழுது கொண்டிருந்த நிலாவை அற்ப புழுவைப் போல பார்த்தான்.
“என்னடா இப்படி கேட்கிற செல்வம்?”என்று பொன்னி இறங்கிய குரலில் கேட்க
Advertisement
“வேற எப்படி கேட்கணும் நான்?”என்றான் பதிலுக்கு.
Advertisement
Advertisement
“போதும் நீ முதல்ல கிளம்பு இங்கிருந்து”என்று தேசிகன் கத்த
“போடா வெளியே!”என்று வளர்மதியும் சேர்ந்து கத்த அமுதன் அப்படியே நின்றிருந்தான். ஒரு வார்த்தை ஆழியனை கேட்கவில்லை அவன்.
Advertisement
“வாவ் மா. உங்க மகளை சொன்னதும் எவ்வளவு கோபம் வருது உங்களுக்கு. ஆனா என் பொண்டாட்டியை அசிங்கமா பேசும் போது இவளை கண்டிக்க தோணலைல்ல அவ அடிச்சதுக்கு மட்டும் பஞ்சாயத்து பண்ணீங்க அப்போ உங்க மனசுலயும் அப்படி ஒரு நினைப்பு இருந்துச்சா மா.”என்று நேரடியாக கேட்க வளர்மதி இதனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
“எவ்வளவு பெரிய வார்த்தை அது. அதைக் கேட்டதுக்கு நானா இருந்தா வெட்டி போட்டு இருப்பேன் அவ அடியோட விட்டுட்டா.”என்றவன் “எனக்கு கூடப் பிறந்தது ரெண்டு பேர் தான் அது அமுதனும் தீபனும் தான்”என்று ஒரு வரியில் மொத்தமாக நிலாவை ஒதுக்கி வைத்தான் ஆழியன்.
“என்னடா அமுதா பார்த்துட்டே நிற்கிற?”என்று ஆதங்கமாய் கேட்க
“இந்த விஷயத்தில் நான் நிலாவுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன் மா. வாழ வந்த பொண்ணை அப்படி ஒரு வார்த்தை பேசி இருக்கா ஆனா பெரியவங்க நீங்க ரெண்டு பேரும் இருந்தும் ஒரு வார்த்தை கண்டிக்கலை ஏன் செய்யலை பாட்டி.”என்றான் அவனும்.
“நான் கண்டிச்சேன் டா அமுதா”என்று பொன்னி சொல்ல
“எப்போ தனியா கூப்பிட்டா இல்லை என் பொண்டாட்டி முன்னாலையா”சுளீரென்று கேட்டவனின் அவதாரத்தில் அயர்ந்து தான் போயினர் அனைவரும்.
“ஆமாடா நேத்து வந்தவ முன்னாடி என் பொண்ணை நான் திட்டணுமா?”என்று வளர்மதி அதற்கும் பேச
“ஆனா நேத்து வந்தவளை உங்க இஷ்டப்படி வாய்க்கு வந்ததை பேசலாம். நீங்க ரெண்டு பேரும் அவளை அசிங்கப்படுத்திட்டதாகவா நினைக்கிறீங்க. ம்ஹூம் என்னை என் கேரக்டரை என் காதலை நான் அவ கூட வாழ்ந்த இந்த ஏழெட்டு வருஷ வாழ்க்கையை அசிங்கப்படுத்தி இருக்கா அந்த ஒத்த வார்த்தையில். இதுக்கு மேலேயும் நான் இவளை உறவா நினைச்சா என் பொண்டாட்டி கூட நான் வாழ்ந்த வாழப் போற வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாம போயிடும்”என்றவன் “அவளை பேசவே விடாம எத்தனையோ இடத்தில் அடக்கி வச்சிருக்கேன் ஆனா அது தப்போன்னு நினைக்க வச்சுட்டீங்க எல்லாரும்”என்றவன் அங்கிருந்து வெளியேப் போக
“அப்போ இதுதான் உன் முடிவா செல்வம்?!”என்று வளர்மதி கொந்தளிக்க
“உங்க மகள் விஷயத்தில் இனிமே நான் இப்படி தான். இதைக் கூட செய்யலைன்னா நான் எல்லாம் என்ன மனுஷன்.?”
“அப்போ இதையும் கேட்டுக்க உனக்குன்னு இங்கிருந்து ஒத்த ரூபா நகராது. நகையாவது போடுவோம்னு நினைச்சேன் ஆனா அதையும்”என்றவரைப் பார்த்து விட்டு “இப்பவும் எல்லாத்தையும் உதறிட்டு போகத் தெரியாம இல்லை இந்த ஆழி. என் உரிமையை விட்டுப் போகணும் னு எனக்கு என்ன அவசியம். மரமில் வச்சது நீங்களா இருக்கலாம். இடம் தாத்தாவோடது வீடு தாத்தா பேரில் இருக்கு. என் கையெழுத்து இல்லாம எப்படி இதை அனுபவிக்கிறீங்கனு நானும் பார்க்கிறேன்.”
“செல்வம்”என்று அதட்டிய தேசிகனை கூர்ந்து பார்த்தவன் “சொத்து பேரனுகளுக்குனு சொல்லிட்டு அமுதன் பேரிலும் தீபன் பேரிலும் எழுதி இருக்கீங்க. அமுதன் நிலஞ்சனாவுக்கு சொத்து தந்தா என்ன செய்வீங்க? இல்லை தீபனுக்கு தான் இன்னொரு தடவை பொம்பளைப் பிள்ளை பிறக்காதா… இல்லை எனக்கு தான் அடுத்து ஆண் வாரிசு பிறக்காதா”என்று அடுக்கடுக்காக கேட்டவன் “அதுக்குள்ள அவசரமா சொத்து எழுத வேண்டிய காரணம்.”என்று நிறுத்தினான்.
” யார் அப்படி சொன்னது?”என்று கேட்டவர்”அப்படியே இருந்தாலும் அது என் இஷ்டம்”என்றார் மகனின் குற்றச்சாட்டு எதனால் எப்படி ஏன் எழுந்தது என்று அறிந்து கொள்ள
“எது உங்க இஷ்டம்?,நான் இருபது வயசில் இருந்து மாடா உழைச்சு முன்னேத்தின மில்லை எவனோ ஒரு நாயி”
“செல்வம்”சத்தமிட்டாள் தரங்கினி.
“கோவம் வருதோ உங்க நொண்ணன் பண்ண வேலைக்கு சங்குல மிதிச்சிருப்பேன். அமுதனுக்காக பொறுத்து போறேன்”என்றவன் “அப்படி என்னம்மா உங்க அண்ணன் வீட்டு மேல அவ்வளவு பாசம் பெத்த பிள்ளைங்க கூட ரெண்டாம் பட்சமா போற அளவுக்கு”என்றான் ஆத்திரம் தீராமல்.
“ஏன் உனக்கு தெரியாதோ உன்னால ஒருத்தி வாழ்க்கையை இழந்து நிற்கிறது தெரியாத மாதிரி பேசுற எங்க நீ தான் காதல் மயக்கத்தில் இருந்தியே”என்று வளர்மதியும் ஏளனமாக பேச
“ம்மா சும்மா நிறுத்தும்மா. எப்போ பார்த்தாலும் இதே சொல்லி அவனை இம்சை பண்ணிட்டு இருக்க”என்று கத்திய அமுதனை விக்கித்துப் பார்த்தார் வளர்மதி.
“என்னங்க”என்று தரங்கினி வர
“வாயைத் திறந்த அவ்வளவு தான் சொல்லிட்டேன்”என்று எச்சரித்தவன் “என்ன சும்மா வாழ்க்கையை எழந்துட்டா எழந்துட்டானு சொல்லிட்டு இருக்க…அவளை என்ன ஏதாவது பண்ணிட்டு நட்டாத்துல விட்டுட்டு இவன் கல்யாணம் செஞ்சானா இல்லை கல்யாணம் பண்ணிக்கிறேன் னு எந்த இடத்திலாவது உறுதி தந்தானா எதுவுமே இல்லை எனக்கு தருவை பேசினீங்க அப்படியே தன்யாவை இவனுக்கு பேசினீங்க அந்த நேரத்தில் வேற பொண்ணை காதலிக்கிறேன் னு சொன்னான். அதுல என்ன தப்பை கண்டீங்க. தன்யா வாழாம வந்ததுக்கு இவன் என்ன செய்வான். இல்லை இதுக்கு மேற்பட்டு தான் என்ன செய்ய முடியும். அவ வாழ்க்கை போச்சுன்னா அதை சரி செய்ய வேண்டியது அவளைப் பெத்தவங்க இவனோ நீங்களோ இல்லை. அவ வாழலைனா அவளை வேணாம்ன இவனும் வாழக் கூடாதா”என்று பொங்கி விட்டான் அமுதன்.
“அவ மனசுல ஆசையை வளர்த்து”என்று தரங்கினி வேறு பேச
“ஆசைய வளர்த்தா… யார் வளர்த்தா? யார் வளர்த்துக்க சொன்னா…? நான் சொன்னேனா?, மாமா பொண்ணுங்கனு யாரையாவது நான் நிமிர்ந்து பார்த்து பேசி இருக்கேனா? இல்லை வேற எதுவும் செஞ்சேனா? யார் வளர்த்தாங்களோ அவங்களை போய் பேச வேண்டியது தானே?!”என்ற ஆழியன், “இதெல்லாம் தேவை இல்லாத விஷயம். நான் கிளம்பறேன். ஒரே விஷயம் தான் உங்க வேலையை இனி நீங்க பாருங்க என் வேலையை நான் பார்க்கிறேன். பெத்து வளர்த்ததுக்கு என்னால முடிஞ்ச உழைப்பை நான் போட்டாச்சு.என்னைக் கட்டின பாவத்துக்கு இந்த வீட்டுக்கு அவளும் அவளால முடிஞ்சதை உழைச்சுட்டா. இதுக்கு மேல எதுவும் முடியாது”என்று வெளியேறி இருந்தான்.
அவன் வெளியேறிய அடுத்த கணம் அமுதன் ஆரம்பித்து இருந்தான்.
“யாரைக் கேட்டு சொத்தை பிரிச்சு எழுதினீங்க?”என்று
“அவன் தான் உளறுறான்னா நீயும் ஏன் டா?”என்ற தேசிகன், “பேசிக்கிட்டது உண்மை தான். மகளுக்கு பேத்திகளுக்கு நகையும் பேரன்களுக்கு மில்லும் கடையும் னு. மத்தபடி உங்க கையெழுத்து இல்லாம எதை செய்ய முடியும்”என்று தேசிகன் திட்ட
“அப்புறம் எப்படி சொல்லிட்டு போறான். ஆதாரம் இல்லாம பேச அவனுக்கு என்ன கிறுக்கா புடிச்சு இருக்கு”என்ற அமுதன் “இதைப் பத்தி யார் கிட்ட பேசுனீங்க?”என்று அடுத்ததாய் கேட்க
வளர்மதி வேகமாய் “இந்த பேச்சை விடுங்க. அவன் என்னவோ நினைச்சுக்கட்டும் நிலா நீ கிளம்பு. மாப்ள வந்திடுவாரு”என்று பேச்சை மாற்ற
“இதோப் பாருங்க எனக்கு பத்திரிக்கை வைக்கலை உங்க புள்ளை. யாராவது அந்த கடை திறப்பு விழாவுக்கு போனீங்க அவ்வளவு தான் அதோட என் உறவையே மறந்திடுங்க”என்று ஆங்காரியாய் நிலா பேச
“அப்படியே அடிச்சேன்னா தெரியும்”என்று கையை ஓங்கிய அமுதன் ,”உன் வாய்க்கொழுப்புன்னால தான் இவ்வளவும். உறவு வேணாம் னா போ . ஒரு தங்கச்சி னு செல்லம் கொடுத்தா உன் இஷ்டமா பேசுவியோ?! “என்று அதட்ட
வளர்மதியும் பொன்னியும் அவனைத் திட்ட துவங்க “இந்த சப்போர்ட் பண்ற வேலையை முதல்ல நிறுத்துங்க. என்ன செஞ்சாலும் ஒத்து ஊதிக்கிட்டு, உங்களுக்கு உங்க பொண்ணு சக்கரைக்கட்டின்னா அவனுக்கு அவன் பிள்ளைக வெல்லம் தான். அவங்களை பேசினா உறவை அத்துவிட தான் செய்வான். பேசியிருக்க பேச்சை பாரு தோலை காட்டி மயக்கினா அது இதுன்னு”என்று வெறுப்பாய் பார்த்து விட்டு தன் அறைக்குள் சென்று விட்டான்.
தேசிகன் தளர்வாய் அமர்ந்து விட வளர்மதி அவரருகில் செல்ல முற்பட “உன் மகளை காரில் அனுப்பி விடு. இனிமே நானா கூப்பிடற வரை இந்த பக்கம் அவ வரக் கூடாது”என்றார்.
“அப்பா”என்று அதிர்ந்தவளை”போக சொல்லு மா.”என்றார் தேசிகன்.
நிலா அழுது கொண்டே கிளம்பி இருக்க வளர்மதி ஆற்றாமையாக வந்து நின்றதும் “செல்வம் தன்யாவை கட்டலைன்னு பேசினது உண்மையா?”என்று கேட்க வளர்மதி திடுக்கிட்டு பார்த்தார்.
“உன்னைத் தான் கேட்கிறேன் வளரு.”என்று அதட்ட
“அது ஏதோ ஆதங்கத்துல எப்பயோ பேசினது”திணறிப் போய் பதில் சொல்ல
“எப்பவோ பேசினதை எல்லாம் அவன் சொல்லிட்டு இருக்கிற ஆள் கிடையாது. எனக்கு தெரியாம இந்த வீட்டில் என்ன நடக்குது”என்று கேட்டவர், “சொத்தை அமுதன் பேரில் எழுதியதா யார் அவன் கிட்ட சொன்னது. அமுதன் சொன்னது போல செல்வம் ஆதாரம் இல்லாம பேச மாட்டான்”என்று மனைவியின் முகம் பார்க்க வளர்மதிக்கு வியர்வை அரும்பியது.
“எனக்கு தெரியாதுங்க”என்று வளர்மதி அமைதியாக பேச அதே நேரத்தில் சுபாஷ் உள்ளே வந்தான்.
“என்ன பத்திரிக்கை எல்லாம் இருக்கு”என்று எடுத்துப் பார்த்தவன் முழுதாய் படித்து முடித்த அடுத்த நொடியே “நான் சொன்னது சரியா போச்சு பார்த்தீங்களா அத்தை. என்னவோ சொன்னீங்க. சொத்து இல்லைனு சொன்னா செல்வம் திரும்பி வந்து கெஞ்சுவான்னு. அவன் புது கடையே ஓபன் பண்ண போறான். எல்லாம் மில்லுல இருந்து அடிச்ச காசா தான் இருக்கும்.”என்றவனின் காது ஙொய் என்ற சத்தத்துடன் அடங்கியது.
அவனை பலம் கொண்ட மட்டும் அறைந்திருந்தார் தேசிகன்.
அனைவரும் விதிவிதிர்த்துப் பார்க்க சுபாஷ் விழிகளில் ரௌத்திரம் மின்ன பார்த்தான்.
…… தொடரும்
error: Content is protected !!