Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 18

மனசு 18
இன்பவேணியும் மானவும் வீட்டினுள் நுழைய அதே ஈரமுடனான ஆடையுடன் விதார்த்தை கீழே இழுத்து வந்தான் உதய்கிருஷ்ணா.
பாட்டியோ சாயாலியை அடிக்க, ஓடி வந்து அவரை தடுத்தாள் இன்பவேணி.


Advertisement

“பாருடி இவ என்ன செஞ்சு வச்சிருக்கா? நம்ம வீட்டு மானமே போச்சு…” சாயாலியை மேலும் அடிக்க வந்தார்.

Advertisement

“மேடமால உங்க வீட்டு மானம் எதுக்கு போகப் போகுது?” மானவ் கோபமாக கேட்டான்.

Advertisement

“கேளு உன்னோட மேடம்டவே…” சீறினான் உதய்கிருஷ்ணா.

Advertisement

“என்னடி நடக்குது? நீ எப்படி இங்க வந்த?” இன்பவேணி சாயாலியை அதட்ட, அழுது கொண்டே சாயாலி இன்பவேணியை அணைத்தாள்.
விதார்த் தொண்டையில் ஏதோ சிக்கிய உணர்வு…அவனுக்கு தான் நினைவு வந்தாலும் முழுதாக நடந்தது தெரியவில்லை..
உதய்கிருஷ்ணா அவன் பார்த்ததை சொல்லி இன்பவேணியிடம் கத்த, சாயாலி அவளது கைபேசியை இன்பவேணியிடம் காட்டினாள்.
யாரு அனுப்பியது? இது யாரோட எண் மேடம்?
இது ஷோபனாவோட எண்…
“என்ன புதுகத சொல்லி நீ செஞ்சத சரின்னு சொல்றீயா?” கத்தினான் உதய்கிருஷ்ணா.
“ஷோபனா என்னம்மா?” ராமநாதன் அவளிடம் வந்தார்.
“உங்க மூத்த மகனோட வாழ்க்கைய பிரியா கெடுத்தது போல விது மாமா வாழ்க்கையை கெடுப்பதாக ஷோபனா பேசிய படி பிளான் செஞ்சிருக்கா அங்கிள். உங்க மூத்த மகனுக்கு அனுப்ப வேண்டிய மெசேஜ எனக்கு அனுப்பி இருக்கா…என்ற சாயாலி… நான் முதல்ல உங்க வீட்டுக்கு சொல்ல தான் வந்தேன். கேட் பூட்டி இருந்தது. யாருக்கும் வெயிட் பண்ணீட்டு இருந்தா விது மாமா வாழ்க்கையும் பாழாகிடும்னு தான் நானே பப் போனேன்.
நான் போன போது அந்த ஷோபினா கையில் கைபேசியுடன் யாருடனோ விது மாமாட்ட இருந்து சில தூரத்தில் நின்னு பேசிட்டு இருந்தா. என்ன பேசுனான்னு எனக்கு தெரியாது. அவ பாக்குறதுக்குள்ள மாமாவ அக்கா கார்ல அழச்சிட்டும் வந்துட்டேன். ஆனா உங்க வீட்டு கேட்ட திறக்க முடியல..விது மாமா ஏதேதோ உலறிட்டு இருந்தாங்க. அவங்கட்ட கேட் பாஸ்வேர்டுன்னு கேட்டேன்..அவங்க சுயநினைவிலே இல்ல..
எங்க வீட்டுக்கு போனா எல்லாரும் அந்த நேரம் தப்பா நினப்பாங்களோன்னு பின்னாடி கேட்ட உடைச்சிட்டேன். அது வழியா தான் விது மாமாவ உள்ள அழைச்சிட்டு வந்து அவங்க அறைக்கு அழைச்சிட்டு போனேன். விது மாமா போதையில எங்கிட்ட தப்பா நடந்துப்பாங்கன்னு நான் எதிர்பாக்கலை” முகத்தை மூடி அழுதாள்.
“உன்னால சத்தம் கூட போட முடியாதா?” உதய்கிருஷ்ணா கேட்க,
“போட்டேன் வெளிய கேக்கல. ரூம் லாக்காகிடுச்சு. நீங்க என்னை பாத்த போது நான் வெளியே வந்தேனே! தாழ்ப்பாள உடைச்சிட்டு தான் வந்தேன்…” இன்பவேணியை உடல் நடுங்க அணைத்துக் கொண்டாள்.
நடுவீட்டில் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் விதார்த்.
“நீ சொல்றது உண்மைன்னு எப்படி நாங்க நம்புறது?” உதய்கிருஷ்ணா குறுக்கு விசாரணை நடத்தினான்.
பின்னாடி கேட் திறந்து தான் இருக்கும். உங்க தம்பி அறைத் தாழ்ப்பாளை பாருங்க…என்று விதார்த்தை வெறித்து மானவை பார்த்து தலைகவிழ்ந்தாள்.
எந்த பப் போனீங்க மேடம்?
எதுக்கு கேக்குற மானவ்?
இங்க இருக்கிறவங்களுக்கு ஆதாரம் குடுக்கலைன்னா என்னோட மேடமை தான் தப்பா பேசுவாங்க. எனக்கு அவங்கள கடந்த இருபது வருசமா நல்லா தெரியும்…என்றவன் சகோதரிகளை விலக்கி, சாயாலி கண்ணீரை துடைத்து கேள்வியுடன் பார்த்தான்.
பப் நேமை சொன்னவள் சாயாலியிடம் ஷோபனா சண்டையிட்டதையும் மானவ்விடம் கூறினாள்.
“வாங்க…இவங்க மூஞ்சில ஆதாரத்தை தூக்கி போடுவோம். அவங்க வீட்டு பொண்ண என்ன செய்யணுமோ அவங்க பாத்துக்கட்டும்” சாயாலி கை பிடித்து இழுத்தான்.
“மானவ்…” சோர்வுடன் அழைத்தாள் சாயாலி.
என்னால வர முடியாது. ஸ்டொமக் பெயின் ஹெவியா இருக்கு. நான் ஓய்வெடுக்கணும்…
எப்படி பேசும் இவள்? பதறியது மற்றவர்களுக்கு. உதய்கிருஷ்ணாவின் மொத்த கோபமும் ஷோபனா மீது திரும்பியது.
எந்த ஆதாரமும் தேவையில்லை. எனக்கு முழுசா நினைவில்லைன்னாலும் சாயா ஷோபனாவின் பேச்சு குரல் நல்லா நினவுல இருக்கு…என்று எழுந்த விதார்த் சாயாலியை பார்த்துக் கொண்டே..
பாட்டி அண்ணா மேரேஜோட எனக்கும் சாயாவுக்கு மேரேஜ் பண்ணி வைங்க…என்றான்.
அனைவரும் திகைக்க, மானவ்விற்கு கோபம் பொங்கியது.
“எல்லாம் உங்க பக்கம் தப்ப வச்சிட்டு இப்படி கேள்வி கேக்குறான் உங்க அண்ணன்? நீ என்ன என்னோட மேடமுக்கு வாழ்க்க குடுக்கிற? அவங்க கைய காட்டுனாலே அவங்களுக்கு இருக்குற சொத்து மதிப்புக்கு எவ்வளவு பெரிய பணக்காரனும் வருவான். உங்க பிச்சை வாழ்க்கை அவங்களுக்கு தேவையில்லை” ஆக்ரோசமாக கத்தினான் மானவ்.
மானவ் சத்தம் வெளியே கேட்க, கோசலை அனீஷிடன் வந்தார்.
“நீ ரொம்ப ஓவரா பேசிட்டு போற?” உதய்கிருஷ்ணா எகிற, மானவ் முன் வந்தாள் இன்பவேணி.
“உங்களுக்கு ஆதாரம் தான வேணும்? வா…மானவ்…” இன்பவேணி அவனை அழைக்க,
இன்னு…ப்ளீஸ்…
உன்னோட அண்ணா மொத்தமா மாறிட்டார் விது. மனசாட்சியே இல்லாத மிருகமாகிட்டார். ச்சே…சாயா வாழ்க்கைய பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம். உம் மனசுல வேற ஒருத்தி இருக்கும் போது சாயாவ உன்னால பாத்துக்க முடியாது. அவளால அத தாங்கவும் முடியாது. உங்களுக்கு தேவையான ஆதாரத்தை நானும் மானவ்வும் கொண்டு வாரோம்…என்றாள் உறுதியுடன்..
“என்னடி ஆதாரம்? என்ன நடக்குது? சாயா…” கோசலை அழைக்க…
“அம்மா, சாயாவ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. அவ ஓய்வெடுக்கட்டும்…” இருவரையும் இன்பவேணி அழைத்து செல்ல, உதய்கிருஷ்ணா முகம் இரத்த பசையற்று போனது..
விதார்த் அழைக்க அழைக்க, இவர்கள் செல்ல கோசலை மட்டும் அவனையும் மற்றவர்களையும் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார்.
ஏண்ணா…இப்படி பேசிட்ட? கொஞ்சம் நிதானமா தான் இரேன்.
“நீ நிதானமா இருந்திருந்தா இப்ப பிரச்சனை வந்திருக்காது” உறுமி உதய்கிருஷ்ணா அறைக்கு செல்ல, சாயாவை விசயம் தெரியாமல் அடித்ததில் பாட்டிக்கும் கஷ்டமாகிப் போனது.
பாட்டியும் சித்ரலேகாவும் செய்வதறியாது தடுமாற்றமுடன் இருந்தனர். ராமநாதன் தான் தெளிவான முடிவை கையிலெடுத்தார்.
விதார்த் கை பற்றி விறுவிறுவென ராமநாதன் கோசலை வீட்டிற்கு வந்தார். இன்பவேணி மானவ் இருவரும் பப்பிற்கு ஆதாரம் சேகரிக்க சென்றிருந்தனர்.
வீடு பூட்டி இருந்தது.
“ஏன்டி, இப்ப தான நிம்மதியா இருந்தோம். அதுக்குள்ள என்ன பிரச்சனை? எங்கிட்ட சொல்லணும்னு கூட தோணலையா?” சாயாலியை அடித்தார் கோசலை.
சாயாலி அழவும் கோசலைக்கும் கண்ணீர் வந்தது.
ஏற்கனவே கணவனை இழந்து குஜராத் சென்று இன்பவேணியை தனியே பாதுகாக்க அவர் பட்ட பாடு…அதையும் மீறி நடந்த சில விசயங்கள் கண் முன் தெரிந்தது அவருக்கு. சாயாலியின் இழப்பும் அவளின் இன்றைய பாதிக்கப்பட்ட நிலை அவரை வாட்ட தாங்க முடியாமல் கதறி அழத் தொடங்கினார் கோசலை.
“அம்மா, எனக்கு ஒண்ணுமில்ல. நான் நல்லா இருக்கேன்” அவளையும் சேர்த்து அவள் சமாதனப்படுத்த,
“இல்லடி…எனக்கு பயமா இருக்கு. அவர் விட்டு போனதிலிருந்து ஒரே பிரச்சனை. நிம்மதியா இருக்கவே முடியல. உதய்கு பிடிக்காம வேணிக்கு திருமணம் செய்யப் போறோம். இதுல உன் வாழ்க்கையும் இப்படி ஆகணுமா?” தேம்பி தேம்பி அழுது கொண்டே பேசினார்.
அம்மா…அம்மா…அம்…மா…..என்ன பாருங்க…அக்கா வாழ்க்கை சந்தோசமா இருக்கும். ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்க மாப்பிள்ள புரிஞ்சுப்பார்…
அழுகையை நிறுத்தி, “என்ன சொன்ன?” கோசலை கேட்டார்.
உங்க மாப்பிள்ள புரிஞ்சுப்பார்மா..
என்னோட மாப்பிள்ளன்னா உனக்கு யாரு சாயா?
நான் உதய் மாமாவ ரொம்ப உயர்வா நினச்சிருந்தேன். ஆனா அவர் என்னை எப்படி கேவலமா என்ன நினச்சுட்டார். என்னால ஏத்துக்கவே முடியல. பணத்துக்காக நான் விது மாமாவோட….ச்சே! அவ்வளவு மோசமாம்மா? சாயாலி கோபமும் அழுகையும் கலந்து பேசினாள். கோசலை அவளை அணைத்துக் கொண்டார்.
சாயாலியை விலக்கி, புரியுதுடா. விது மேல இருந்த கோபத்த உம் மேல காட்டி இருப்பார்…
இல்லம்மா, இனி நான் அவரோட பேசவே மாட்டேன்..
நான் ஒண்ணு சொன்னா கேப்பீயா சாயா?
சொல்லுங்கம்மா..????
முகத்தை முந்தானையால் துடைத்து, “நீ விதுவ கல்யாணம் பண்ணிக்கிறீயா? விது ரொம்ப நல்ல பையன். அவன் என்னோட வளர்ப்பு சாயா..தப்பா போக மாட்டான்” பெருமையும் வருத்தமும் கலந்து கேட்டார்.
அம்மா…அவருக்கு அந்த ஷோபனாவை தான் பிடிச்சிருக்கு. நானும் அந்த பிரியா மாதிரி விருப்பமில்லாதவரை கல்யாணம் செய்து அவர் வாழ்க்கையையும் என் வாழ்க்கையையும் கெடுக்க விரும்பல.
“அப்ப உனக்கு நான் மாப்பிள்ள பாத்தா கல்யாணம் பண்ணீப்பீயா? ஒரு மாசத்துல…” சாயாலியை ஆழ்ந்து கவனித்தார்.
“நான் எப்படிம்மா வேற ஒருத்தனோட வாழ முடியும்? என்னால முடியாது….” முகத்தை மூடி அழுது கொண்டே பேசினாள்.
இப்படி சொன்னா என்னம்மா பண்றது? பொண்ணுங்க தனியா வாழ முடியாதும்மா..போறவன் வர்றவன் பார்வை முழுவதும் நம்ம மேல தான் இருக்கும்..
இவர்களின் பேச்சை கேட்டு உள்ளம் வருந்த ராமநாதன் கதவை தட்ட, “அப்பா என்ன பண்ண போறீங்க?” பதறினான் விதார்த்.
கோசலை கதவை திறந்தார்.
“உள்ள வரலாமா?” ராமநாதன் கேட்டார்.
“வாங்க…” புன்னகையை தேக்கி இருவரையும் வரவேற்று விதார்த்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான்.
“விது…” கோசலை அழைக்க, அறைக்கு செல்ல இருந்தவளை நிறுத்தி… “சாயா ஜூஸ் எடுத்துட்டு வா” என்று கட்டளையிட, இவர்களையே வெகு நேரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனீஷ் ராமநாதன் அருகே வந்து அமர்ந்தான்.
“அனீஷ் இங்க வா….” கோசலை அழைக்க, சாயாலி எட்டி பார்த்தாள்.
“இருக்கட்டும்மா..” என்ற ராமநாதன், இதுவரை நான் உங்க யாரையும் அதிகமா கவனிச்சு கூட பாத்ததில்லை. உதய் வாழ்க்கை போல விதுவ நான் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க விரும்பல. அவனோட விருப்பப்படியே அவன் இருக்கட்டும்..ஒரு புள்ள வாழ்க்கையை இழந்து போல இவனையும் பாக்க முடியாது…
முறைப்புடன் ஜூஸ்ஸை பட்டென அவர்கள் முன் வைத்தாள் சாயாலி.
“சாயா…” கோசலை அதட்ட..
“நில்லும்மா” சாயாலியை நிறுத்தி, “சாயாலி கோபத்துல அர்த்தம் இருக்கு. எங்கள அவ திட்டுனா கூட பரவாயில்லை. ஆனா எம் பையன் உன்ன கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுறான்…” என்று விதார்த்தை பார்த்தார்.
அவன் நம்ப முடியாமல் தன் தந்தையை பார்க்க, “சொல்லு விது? உனக்கு விருப்பமா இல்ல ஷோபியோட பேசணுமா?” வேண்டுமென்றே சாயாலி முன் கேட்டார்.
என்ன செய்றார்? கோசலை பார்க்க,
இல்லப்பா, குடும்பத்த பிரிக்க நினைக்கிற அவ எனக்கு வேண்டவே வேண்டாம். நான் அண்ணாட்ட அன்னிக்கே ஷோபி வேண்டாம்னு சொல்லீட்டேன். இப்ப நடந்த விசயத்துல சாயா மீது எந்த தப்பும் இல்லை. எம் மேல தான் தப்பு….நான் பப் போகலைன்னா இந்த மாதிரி நடந்துருக்காது. இதுக்காகன்னு சொல்லலை ஆன்ட்டி..உண்மையிலே எனக்கு சாயாவ புடிச்சிருக்கு. அவள கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்.
அப்படியா? என்னை உனக்கு பிடிச்சிருக்கா? சரி கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா உன்னோட அண்ணன எனக்கு சுத்தமா பிடிக்கல. நாம தனியா வாழலாமா?
விதார்த் முகம் கூம்பி போனது..
சாயா இப்படில்லாம் பேசாத. உதய் தான் சின்ன வயசுல இருந்து விதுவுக்கு இருந்திருக்கான். உதய் மாப்பிள்ளய விட்டு அவன் எப்படி வருவான்? அவனே ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்க மாட்டேன். குடும்பத்தை பிரிப்பது பெரிய பாவம்.
நான் என்னோட முடிவ சொல்லீட்டேன்…
விதார்த் கோபமாக எழுந்தான்..
“விது நில்லு..” ராமநாதன் அவனை நகர விடாமல், கொஞ்ச நேரம் பொறு…
எப்படி பொறுமையா இருக்குறது? தனியா வர சொல்றா? நான் அண்ணாவ பாக்காம இருந்ததேயில்ல. என்னால அண்ணாவ விட்டு வர முடியாது…
“தெரியும்” என மனதில் எண்ணி நக்கலாக அவனை பார்த்தாள் சாயாலி.
உன்னோட அண்ணா பேசுறது என்னோட அக்காட்ட நடந்துக்கிற எதுவும் எனக்கு பிடிக்கல..கிளம்புங்க..என்றாள்.
“சாயா…” கோபமாக அழைத்த கோசலை, பளாரென சாயாலி கன்னத்தில் அறைந்தார். அதன் பின் அவளை பார்க்க, அவள் முகம் சிவந்து இருந்தது.
கண்ணீருடன் தன் கையை பார்த்தார்.
ஆண்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
என்ன இருந்தாலும் நான் உங்க புள்ள இல்லைல்ல…அதான் உங்க பொண்ணோட குடும்பத்துக்காக என்ன அடிச்சிட்டீங்க என்று விட்டு வேகவேகமாக அவளறைக்கு சென்று விட்டாள்.
மனமுடைந்து சோபாவில் அமர்ந்தார் கோசலை.
சமையலறை சென்று தண்ணீர் எடுத்து அவரிடம் நீட்டினான் விதார்த்.
அனீஷ் சாயாலி அறையை தட்ட, கோபமாக அறைக்கதவை திறந்தாள் சாயாலி. அவள் அழுததும் நன்றாக தெரிந்தது. அனீஷ் அவளை இடுப்போடு கட்டிக் கொள்ள, மடங்கி அமர்ந்து அவனை அணைத்துக் கொண்டாள். கண்ணீர் நிற்காமல் வந்தது.
விதார்த் அவளறை முன் வந்து, “உங்கிட்ட ஒண்ணு மட்டும் கேக்கணும்? உன்னை நம்புறேன். ஆனா…ஷோபி மாத்தி உனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்னா இதுக்கு முன்னாடியும் எதுவும் அனுப்புனாளா?” விதார்த் கேட்டான்.
ராமநாதன் மனம் கனமாக அவளை பார்க்க, “ஆம்” என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
சாயாலியை மிரட்ட எண்ணை எப்படியோ கண்டறிந்து மிரட்டி இருக்கிறாள் என புரிந்தது.
கோசலையை ஓரக்கண்ணால் பார்த்து, “அக்கா மேரேஜ் முடியவும் நான் இங்கிருந்து போயிடுறேன்” சாயாலி அடுத்த குண்டை வீச, கோசலையால் தாங்க முடியவில்லை.
அவளை நெருங்கி, “உனக்கு என்னடி பிரச்சன? எங்க போவ? நாம சந்தித்த நாளிலிருந்து நான் உன்னையும் வேணியையும் பிரிச்சு பாத்ததில்ல. ஏன் என்ன இப்படி கஷ்டப்படுத்துற?” அழுது விட்டார்.
“இங்க இருந்தா எல்லாருக்கும் கஷ்டமா இருக்கும்” என விதார்த்தை பார்த்து உள்ளே சென்று படுத்து விட்டாள்.
 “திசையெல்லாம் எனக்கு
  இருளாகி கிடக்கு…
எங்கேயோ பயணம்
 தொடருதம்மா
என்னோட மனசும்
 பழுதாகி போச்சு
சரிசெய்ய வழியும்
 தெரியலம்மா…”
போகாதன்னு சொல்ல உரிமையில்ல. சாயாலியிடம் உரிமை எடுத்தால் உதய்கிருஷ்ணாவை இழக்கும் நிலை. விதார்த்தால் நகர முடியாமல் கோசலையை சமாதானப்படுத்தி அங்கேயே இருந்தான். ராமநாதன் மட்டும் வருத்தமுடன் வெளியேறினார்.
பாட்டியும் சித்ரலேகாவும் பாப்பாவுடன் வெளியே நிற்பதை கண்டு உதய்கிருஷ்ணாவும் கீழே வந்தான்.
“என்னடா பண்ண? விது அங்க தான் இருக்கானா?” ராமநாதனிடம் கேட்டுக் கொண்டே பாட்டி அவருடன் நடக்க, சித்ரலேகாவும் ஜான்வியுடன் வந்தார்.
தோய்வுடன் அமர்ந்து சாயாலி விதார்த் பேசியதை ஒன்று விடாமல் கூறினார். உதய்கிருஷ்ணாவும் மற்றவர்களும் சாயாலியிடம் இதனை எதிர்பார்க்கவில்லை.
“எங்க போகப் போறாளாம்?” பாட்டி கோபமாக முந்தானையை இழுத்து சொருக, உதய்கிருஷ்ணா அமர்ந்து விட்டான். விதார்த் அவளை திருமணம் செய்து தனியாக சென்று விடுவானோ? என்ற பயம் தோன்றியது.
என்ன தான் விதார்த் முடியாது என்றாலும் சாயாலியை விட்டு விட மாட்டான் என உதய்கிருஷ்ணாவிற்கு புரிய மனம் அடித்துக் கொண்டது. அவன் குழந்தை அழைப்பது கூட அவனுக்கு கேட்கவில்லை. அனைவர் கவனமும் அவன் மீது பதிந்தது.
பாட்டி, கொஞ்ச நேரம் கொடுக்கலாம். அப்புறம் நாம சாயாலியிடம் பேசலாம். அவ குடும்பத்த பிரிக்க நினைக்கிற பொண்ணுயில்ல. எனக்கு நல்லா தெரியும்…என்று உதய்கிருஷ்ணாவை பார்த்தாள் சித்ரலேகா.
உதய் நீ சாயாட்ட ரொம்ப ஹார்சா பேசிட்ட? உனக்கு புரியுதா? உன்னோட பேச்சுல தான் கோபப்பட்டு விதுட்ட இப்படி பேசி இருக்கா? சித்ரலேகா கூற, உதய்கிருஷ்ணா அமைதியாகவே இருந்தான்.
இன்பவேணி மானவ் இருவரும் உதய்கிருஷ்ணா வீட்டிற்குள் நுழைந்தனர்.
மானவ் சீற்றமுடன் தெரிந்தான். பாத்து பேசு என இன்பவேணி மானவிடம் அறிவுறுத்தி அழைத்து வந்திருந்தாள்.
எல்லாரும் எழுந்து நிற்க, டார்லிங் என அழைக்க வந்தவன் இன்பவேணி உம் புருசன்ட போட்டு காட்டு அவ என்ன வேலையெல்லாம் பாத்திருக்கான்னு என கோபமாக ராஜா தோரணையில் சோபாவில் கால் மீது கால் போட்டு சினமுடன் அமர்ந்தான் மானவ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!