Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே! Ep-4

மனசு 4

யாருக்கும் தெரிவிக்காமல் பெற்றோருடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த அவள் வீட்டிற்கு வந்தாள் இன்பவேணி. காரை நிறுத்தி அவளுடைய வீட்டையும் எதிர் வீட்டையும் பார்த்தாள். உதய்கிருஷ்ணாவின் கார் வீட்டில் இருந்தது. அதனை பார்த்து தன் வீட்டு கேட்டை திறந்தாள். தற்பொழுது அவர்கள் வீட்டில் வாடகைக்கு ஆள் இருந்தனர்.

விளையாண்டு கொண்டிருந்த சிறுமி இன்பவேணியை பார்த்து, கையில் பொம்மையுடன் “அம்மா யாரோ வந்துருக்காங்க…” கத்திக் கொண்டே உள் சென்றாள்.



Advertisement

இன்பவேணிக்கு அவளது கடந்த கால நினைவுகள் சரசரவென தோன்ற…கண்ணில் கண்ணீர்..

Advertisement

வெளியே வந்த பெண்மணி, “நீங்க யாரு?”

Advertisement

நா..இந்த வீட்டு ஓனர்..

Advertisement

“ஓ! மேடம்..நீங்களா? வாங்க வாங்க” அழைத்தார். அப்பெண்மணியின் கணவரும் வந்தார்.

லேசான புன்னகையுடன் வந்தவள், வீட்ட சுத்தி பாக்கலாமா?

தாராளமா மேடம்..

விசாலாமான ஹால், இரு அறைகள், மாடியில் ஓர் அறை..சமையலறை, கழிவறை என அமைப்பாக கட்டப்பட்டு இருந்தது. அம்மா, அப்பா, விதார்த்துடனான நினைவுகளில் நடந்தவள் அவளறைக்கு சென்றாள். முழுவதும் உதய்கிருஷ்ணா நினைவுகளே!

இந்த அறை யூஸ் பண்ண மாட்டீங்களா?

பெரிய மேடம் இந்த அறையை யூஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க…

புன்னகையுடன், “தேங்க்ஸ்” முணுமுணுத்தாள்.

என்ன மேடம்?

“இல்லை” தலையசைத்து, “நான் இந்த ரூம்ல இருக்கணும். அம்மாட்ட சொல்லீடாதீங்க…ப்ளீஸ்..” விழிகள் சுருக்கி கெஞ்சுதலாக கேட்டாள்.

சரி மேடம், காஃபி எடுத்துட்டு வரவா?

“எனக்கு எதுவும் வேண்டாம். டிஸ்டர்ப் பண்ணாதீங்க…” சொல்லி அவளறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். அவர்கள் அவரவர் வேலையை கவனிக்க சென்றனர்.

உதய் நினைவாக வைத்திருந்த பொருட்களை பார்த்து, அலமாரியை திறந்தாள். அது முழுவதும் அவளின் தந்தை அவளுக்கென வாங்கிய பொருட்கள்…

கண்ணீருடன் அதனை தொட்டு பார்த்து, “சாரிப்பா..” அழுதாள். பின் அவ்வீட்டில் இருக்கும் போது அணியும் அவளது ஆடையை ஆசையுடன் மாற்றினாள். அறையின் சன்னலருகே வந்தாள். எதிரே உதய்கிருஷ்ணா அறையின் திரை தெரிந்தது.

பெருமூச்சுடன் அவள் திரும்ப, அவனும் அவ்விடம் வந்து அவளது வீட்டை பார்த்தான். இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை. கோபமுடன் இருந்த உதய்கிருஷ்ணா மனம் அவனை சுட்டெறித்தது. அதனை தணிக்க இன்பவேணியின் அறையை பார்த்தான்.

வெகுவருடத்தின் பின் அவ்வறையின் சன்னல் திறந்திருந்தது. சிந்தனையுடன் அவன் பார்க்க, அவனுக்கு அழைப்பு வரவும் சிந்தனையை ஒதுக்கி கீழே சென்று விட்டான்.

அவ்வறையை சுத்தம் செய்தாள். ஏதோ சத்தம் கேட்க சன்னல் வழியே வெளியே பார்த்தாள். உதய்கிருஷ்ணாவின் குரல் ஓங்கி ஒலித்தது. இன்பவேணி வீட்டில் இருப்பவர்களும் வெளியே சென்று வேடிக்கை பார்த்தனர்.

பாட்டியும் தாத்தாவும் கண்கலங்க தன் மகளை பார்க்க, பிரியங்காவின் தாயும் அவரின் கணவர் மற்றும் கௌதமின் தாய் தந்தையும் அவமானத்துடன் நின்றிருந்தனர்.

புருவம் சுருக்கி இன்பவேணி அவர்களை பார்க்க, கண்கள் சிவக்க ருத்ரகாலனாய் தன் மகளை தூக்கி நின்றிருந்தான் உதய்கிருஷ்ணா.

“இவங்க இனி நம்ம வீட்டு வாசல்ல மிதிக்கவே கூடாது…” சத்தமிட்டான். பாப்பா முகம் அழுதிருந்தது தெளிவாக தெரிந்தது. ஜான்வி உதய்கிருஷ்ணாவை கழுத்தோடு கட்டி இருந்தாள்.

நால்வரும் வெளியேற, “ஒரு நிமிசம் நில்லுங்க” அவர்களருகே வந்த உதய்கிருஷ்ணா, “ஜான்வி என்னோட பொண்ணு. அவ பக்கத்துல இனி யாரும் வர நினச்சா…” கையை இறுக்கினான்.

“எந்த கோர்ட் எம் பொண்ண உங்கட்ட காட்ட உத்தரவிட்டதோ அதே கோர்ட்டு மூலமா உங்கள உள்ள தள்ளவும் தயங்க மாட்டேன். என்னோட அப்பாவோட தங்கச்சியா போயிட்டீங்க. எங்க வாழ்க்கைய விட்டு போயிடுங்க” கத்தி நிற்காமல் உள்ளே சென்றான்.

“என்ன பண்றான்?” சிந்தனையுடன் அவர்களை பார்க்க,

பாட்டி வேகமாக அவர்களிடம் வந்து அவர் மகளின் முதுகிலே அடித்து, “ஏன்டி இப்படி பண்ணீங்க?” திட்டினார்.

அம்மா..சும்மா இரு. நான் இவன சும்மா விட மாட்டேன்..

“போதும். வா…இதுக்கு மேல நமக்கும் மருமகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு தெரியாம ஏதாவது செஞ்ச உன்னோட அப்பா வீட்டுக்கே போக வேண்டியது தான்…”  பிரியங்காவின் தாய் பத்மாவை அவர் கணவர் அதட்டினார்.

“கௌதமையும் ஷோபியையும் அடக்கி வை…” சொல்லி பிரியங்காவின் தந்தை முன்னேற, உதய்கிருஷ்ணா வீட்டை வெறித்து கணவருடன் சென்றார் உதய்கிருஷ்ணாவின் அத்தை..

குழந்தையின் முகம் பார்த்தவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. வேகமாக கீழே வந்து அவள் வீட்டில் குடியிருப்பவர்களிடம் என்னவென்று கேட்டாள்

இன்பவேணி.

“சரியா தெரியலம்மா..ஆனா இந்தம்மா அந்த பையனோட மாப்பிள்ள. அவங்க பேத்திய இவர்ட இருந்து பிரிக்க கேஸ் கொடுத்து தந்தைட்ட தான் புள்ள இருக்கணும்னு கோர்ட்டுல சொல்லீட்டாங்கம்மா..அப்படியும் சும்மா அந்த குட்டிப்பொண்ண தொந்தரவு பண்ணிட்டே இருந்தாங்க…

அதனால தான் பொறுத்துட்டு இருந்தவரு பொங்கிட்டாரு போல…எத்தனை பேரு மனைவி செத்த புறவும் பிள்ளைய மாமியார பாக்க விடுவாங்க. அதுவும் இந்தம்மா பேச்சு இருக்கே! சரியான ராங்கி பொம்பள…எப்ப பாரு வீட்டுக்கு வரும் போதெல்லாம் மாப்பிள்ளன்னு கூட மரியாத குடுக்காம பிரச்சனை பண்ணீட்டு போகுது. நானா இருந்தா என் வீட்டுக்குள்ள விட்டிருக்கவே மாட்டேன்..” என்றார் வீட்டில் குடியிருப்பவர்.

“இது மாறவேயில்லையா?” மனதினில் எண்ணி சிறுமியை பார்த்து, “அவங்க வீட்ல இருக்கிறவங்க உங்க கூட பேசுவாங்களா?” ஆர்வமுடன் கேட்டாள்.

இல்லம்மா, யாரும் வெளிய வரவே மாட்டாங்க. நாங்க இந்த வீட்டு மருமக செத்தப்ப தான் அந்த பொண்ண பாத்தோம். அதுக்கு முன்னாடி அந்த பொண்ணு கத்தும் சத்தம் இந்த தெரு முழுக்க கேக்கும். அப்படி கத்தும்..எப்படி தான் அந்த பையன் சமாளிச்சாரோ! இந்தம்மா மாதிரி தான் அந்த பொண்ணும்…நாங்க பக்கத்துல கூட போக மாட்டோம்..

எனக்கு சின்ன அங்கிள் சாக்லேட் குடுப்பாங்களே! என்றாள் சிறுமி..

விதார்த் தான் என புரிந்து, “அவன் இல்லை எங்கே போனான்?” சிந்தனையுடன் உள்ளே சென்றாள்.

சிஸ்டர், ஒரு டீ மட்டும் போட்டுக்கவா?

“நான் போட்டு தாரேன்மா” என்றவர் தேனீர் எடுத்து அவளிடம் கொடுத்தார். மொட்டை மாடிக்கு சென்று தேனீரை பருகினாள். யாரும் வெளியே தெரியவேயில்லை. அவனறை கர்டைனும் முழுதாக மூடி இருந்தது..

அவளும் அவள் குடும்பத்தினரும் அவமானப்பட்ட அதே இடத்தில் அவர்களை அவமானப்படுத்தியவர்கள் நின்றிருந்தனர். கண்ணால் கண்ட இன்பவேணிக்கு மனம் ஓரளவு நிம்மதியாக இருந்தது. கிருஷூம் தன்னை போல கஷ்டப்பட்டிருப்பானோ??? என்ற எண்ணம் வலுத்தது. ஆனாலும் அவள் மனம்…

அவர் பிரியாவுடன் சேர்ந்து குழந்தை பெத்துக்கிட்டார். பாசமில்லாமல் உதய் யாரையும் நெருங்க மாட்டான் என்பது அவளுக்கு தெரிந்தது. அதனால் அவள் மனம்

ரெண்டாங்கெட்டானாக தவித்துக் கொண்டிருந்தது.

“வினை வினைத்தவன் வினை அறுப்பான்” என்ற கூற்றின் படி இன்பவேணியும் அவள் குடும்பமும் அவமானப்பட்ட அதே இடத்தில் அவர்களை அவமானப்படுத்திய பிரியங்காவின் தாயும் அவமானப்பட்டு விட்டார்..

வேணி, இனி நீ தவித்து ஏதும் ஆகப் போறதில்லை. அவர் நம்மை பார்க்கும் போது ரொம்பவே சாதாரணமாக தான் இருக்கிறார் என்று எண்ணி அவள் செல்ல, அப்பொழுது தான் அவனறைக்கு வந்தான் உதய்கிருஷ்ணா.

அழுத குழந்தையை தூங்க வைத்து வந்தவன் படுக்கையில் போட்டு எதிர்வீட்டை பார்த்தான். எப்போதும் போல சிறுமி மட்டும் தனியே விளையாண்டு கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தின் முன் வீட்டினுள் நடந்தது அவன் எண்ண ஓட்டத்திற்கு வந்தது.

அனைவரும் வீட்டிற்கு வரவும் கீழே வந்தான் உதய்கிருஷ்ணா.

“உதய்….” சித்தப்பா அழைக்க, அமைதியாக ஜான்வியை தூக்கி மடியில் வைத்து அமர்ந்தவன் எல்லாரையும் அமர சொல்லி மெதுவாக பேச்சை தொடங்கினான்.

இன்பவேணி உங்களுக்கு நினைவிருக்குல்ல?

அனைவர் முகமும் சுருங்க, “அதெதுக்குய்யா இப்ப?” பாட்டி கேட்டார்.

அவரை வெறித்து, அவளையும் என்னையும் பிரிச்சு அவங்க குடும்பத்தையே உங்க ஆசப்படி அவமானப்படுத்தி அனுப்பிய பின்னும் உங்களுக்கு ஆத்திரம் குறையலையா?

“உதய்…” ராமநாதன் அழைக்க,

காதில் வாங்காதவனாக, யாரு இன்பவேணிய பாக்க வந்த மாப்பிள்ள வீட்ல பேசுனது?

என்ன உதய் பேசுற? யாரு பேசப் போறா? தாத்தா கேட்க,

பேசி இருக்கீங்க. இங்க இருக்கிறவங்க தான். ஒரு தடவை இல்ல விச்சு அங்கிள் பாத்த ஒவ்வொரு மாப்பிள்ள வீட்லயும் இன்பவேணி பத்தி தப்பும் தவறுமா பேசி…சொல்லிக் கொண்டே குழந்தையை இறக்கி விட்டான்..

அவரை கொன்றுக்கீங்க…ஆதங்கமுடனும் வேதனையுடனும் கத்தினான்.

“உதய்…” ராமநாதன் பதற,

“சொல்லுங்க?? சொல்லுங்க?? யார் பண்ணது? யாரு பண்ணது?” கோபத்தை அடக்க மாட்டாமல் ஆவேசம் வேதனை தெரிய விழிகளில் வலியுடன் கத்தினான்.

“இப்ப என்ன நடந்து போச்சு? அந்தாளு செத்தா நாம என்ன பண்றது?” கௌதமின் தாய் பேச, நாற்காலியை தூக்கி ஆக்ரோசமாக வீசினான். சுவற்றில் பட்டு மொத்தமாக வீடெங்கும் சிதறியது. அனைவருக்கும் உயிரே போனது போல ஆனது…

“உதய்…” தாத்தா அவனருகே வர,

யாரையும் அருகே விடவில்லை. விசுவமூர்த்தி இறந்த பின் இன்பவேணி

கௌதமால் துன்பப்பட்டதையும் கூறி தற்பொழுது அவனிடம் பேசியது வரை கூறினான்.

“உங்க பொண்ணுக்கு மாமா வேல பாக்குறீங்களா?” கௌதம் தந்தையை பார்த்து உதய் நேரடியாக கேட்க,

அவர் சீற்றமுடன், “என்னடா சொன்ன?” அவனை அடிக்க வந்தார்.

எல்லாரும் இருவரையும் தடுத்து பிடிக்க, ஷோபனா விதார்த்துடன் குழந்தைக்காக பழகுவதை கூறி…உங்கள எல்லாம் என்னோட குடும்பம்னு சொல்லவே அசிங்கமா இருக்கு.

“உங்க பொண்ண எனக்கு எப்படி திருமணம் செஞ்சு வச்சீங்கன்னு மறந்துட்டீங்களா?” பிரியங்கா தாயிடம் வந்தவன் எல்லாரையும் பார்த்து,

“நான் பிரியங்கா கழுத்துல தாலி கட்டவேயில்ல. அவளுக்கு அவளே கட்டிட்டு எம் மேல பழிய போட்டா. யாருமே என்ன பேச விடல. குழந்தையும் நார்மலா புறக்கல. எனக்கு பால்ல டிரக்ஸ் கலந்து கொடுத்துட்டா. எனக்கு அவளுடனான எந்த நினைவுமேயில்ல.  அதான் அடுத்த நாள் நான் அரைகுறை ஆடையுடன் இருக்க நடந்தது புரிய வரவும் சூசைட் பண்ண ட்ரை பண்ணேன். அதையும் நான் இன்பவேணிக்காக பண்ணதா உங்க எல்லார்டையும் சொல்லி அசிங்கப்படுத்துனா….” உதய் சொல்ல சொல்ல, அனைவர் உள்ளமும் துடித்தது.

இது ஆண்கள் யாருக்கும் தெரியாது. பிரியங்கா, கௌதம், அவன் தாய்கு மட்டுமே தெரிந்த விசயம். தற்பொழுது ஷோபனாவுக்கு தெரிந்து இருந்தது…

ராமநாதன் உடைந்து மகனை பார்க்க,

“பெண்களுக்கு மட்டும் தான் கற்பிருக்கா? ஏன் ஆண்களுக்கு இல்லையா? இவ்வளவு கேவலமான விசயம் வெளிய தெரிஞ்சா உங்களோட மரியாத என்னாவது? பாத்துக்கோங்க” பிரியங்காவின் தந்தையிடம் மறைமுக மிரட்டல் வைத்தான்.

“இப்ப என்ன கெட்டு போச்சாம்? எம் பிள்ள இல்லைன்னாலும் உனக்கு புள்ள இருக்குல்ல. அதெல்லாம் புள்ளைய நல்லா தான் பெத்து குடுத்திருக்கா. உன்னால தான் அவள வச்சு வாழ முடியல…” பேசிக் கொண்டே சென்றார் பத்மா.

பேசிக் கொண்டே ஜான்வியை தூக்க, குழந்தை வீறிட்டு கத்தியது.

“பத்மா….” பாட்டி சத்தமிட,

அப்பொழுதும் பேச்சையும் நிறுத்தவில்லை. பிள்ளையை தூக்குவதையும் நிறுத்தவில்லை. அவர் கணவர் ஜான்வியை தூக்கி உதய்கிருஷ்ணா கையில் கொடுத்து அவரை அறைந்திருந்தார்.

“வாய மூடுடி…” சத்தமிட்டவர் கண்கலங்க, மன்னிச்சிருங்க மாப்பிள்ள. இனி உங்க வழிக்கு நாங்க வரவே மாட்டோம்..

“உங்க புள்ளைங்கள அடக்கி வையுங்க இல்ல சொந்தம்னு பாக்க மாட்டேன்…” என்ற உதய், பத்மா அருகே வந்தான்.

“உங்க பொண்ணு பிரியங்காவுக்கு என்ன குற? நல்லா படிச்சிருந்தா. சொத்து, பணம் இருக்கு. அழகா இருந்தா…வேற மாப்பிள்ளைய கட்டி வச்சிருந்தா சந்தோசமா வாழ்ந்திருப்பா. நான் ஏதோ அவள கொன்ன மாதிரி பேசுறீங்க. நீங்க உங்க பிள்ளைய ஒழுங்கா வளக்காம இன்பவேணிய குற சொன்னீங்களே! அவ எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா? அவ அழகா இருக்கான்னு எனக்கு புடிக்கல. அவளோட குணம் தான். குறும்பா இருந்தாலும் செய்ற வேலைய சரியா செய்வா.. யாருக்கும் அவளால பிரச்சனை வராத மாதிரி நடந்துப்பா. இத எல்லாத்தையும் விட சந்தேக புத்தி கிடையாது. உங்க பொண்ணு உங்க பேச்ச கேட்டு தான் செத்து போயிருக்கா. அவ சாவுக்கு காரணம் சாட்சாத் நீங்களே தான்…”முடித்து..

“வெளிய போங்க” என அவர் கை பிடித்து இழுத்து வெளியே தள்ளினான். பின் நடந்த அனைத்தும் தான் இன்பவேணியும் தெருவினரும் பார்த்திருப்பர்.

“சித்ராக்கா, பாப்பாவ பாத்துக்கோங்க” சத்தமாக உதய்கிருஷ்ணா அழைத்தான்.

அவர் ஓடி வந்து பிள்ளையை தூக்க, பாட்டி முறைத்தார்.

பாட்டி, அக்கா எங்க வீட்ல ஒருத்தர். முறைக்கிற வேல வச்சுக்காதீங்க..

“எங்க வீட்லன்னு சொல்ற உதய்? அப்ப நாங்க யாரு?” தாத்தா ஆதங்கமுடன் கேட்டார்.

நீங்களா? யாரு? என்னோட அப்பாவோட அப்பா தான்..

“உதய்” பாட்டி கண்கலங்கினார்.

“உங்களுக்கு உங்க பசங்க நல்லா இருந்தா போதும். நான் இருந்தாலும் செத்தாலும் நீங்க கவலைப்பட வேண்டாம்” சொல்லி,

“அக்கா விது வரவும் கால் பண்ணுங்க. என்ன விட விச்சு அங்கிளோட அவன் தான் க்ளோஸ். என்ன செய்றான்னு தெரியல..” அவனறைக்கு சென்றான்.

பாட்டியும் தாத்தாவும் ராமநாதனை காண அவர் ஓடி வந்து தன் தந்தையை அணைத்து,

“தப்பு பண்ணீட்டேன்பா. தங்கையையும் பிரியாவையும் யோசிச்சேன். ஆனா எம் புள்ளைங்கள பாக்காம விட்டுட்டேன்..” அழுதார். அவரை பார்த்துக் கொண்டே சித்ரா அவருக்கென கொடுக்கப்பட்ட அறைக்கு சென்றார்.

தாத்தா மகனை சமாதானப்படுத்த, அறைக்கு சென்ற பாட்டி இன்பவேணியின் வீட்டை பார்த்தார். அவள் கூலாக மொட்டை மாடியில் நின்று தேனீர் பருகிக் கொண்டிருந்தாள். அன்று இருந்த வேணிக்கும் இன்று இருக்கும் வேணிக்கும் வித்தியாசம் தெரிந்தது பாட்டிக்கு. அவர் அதிர்ந்து பார்த்தாலும் சூரியனின் சுடர் நிற வீச்சு அவளை மெருகூட்டி காட்ட, அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

தாத்தா பாட்டியை கவனித்து அவர் தோளில் கை வைக்க, பாட்டி தாத்தாவை கட்டிக் கொண்டு, நாம நம்ம பேரனோட வாழ்க்கையை கெடுத்துட்டோம். ஆனா அத சரி செய்ற வாய்ப்ப கடவுள் கொடுத்துருக்கார் என்றார்.

வாய்ப்பா?

“அங்க பாருங்க…” பாட்டி இன்பவேணியை காட்ட,

“இந்த பொண்ணு எப்ப வந்தது? எதுக்கு வந்திருக்கும்? நம்ம வீட்டு விசயம் தெரிஞ்சிருக்குமோ?” பதட்டமானார் தாத்தா.

அவர் கையை இறுக பற்றி, நம்ம பொண்ணால அந்த சின்னப் பொண்ணு அவ அப்பாவ இழந்திருக்கா. பாருங்களேன் அன்னிக்கு விட இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கால்ல..

நீ நினைக்கிறது நடக்காது…

நம்ம உதய்கு மேரேஜே ஆகல…நாம எல்லாருக்கும் சொல்லிடலாம். அப்பவாது அவன் வாழ்க்கை சரியாகும்ல?

என்ன பேசுற? அதெப்படி? நம்ம குடும்ப மானம் போயிடாதா??? பத்மாவும் பிரியாவும் என்ன காரியம் செஞ்சு வச்சிருக்காங்க…?? இத வெளிய சொன்னா நம்மள மதிப்பா பாக்குற எல்லாரும் காரி துப்புவாங்க..

ஓஓஓ! குடும்ப மானம்…அது இப்ப இருக்குன்னு நினக்குறீங்களா? உங்களுக்கு நம்ம பேரனோட வாழ்க்கையை விட குடும்பம் மானம் பெருசா போச்சா…?? இப்ப என்ன வாழுது? சத்தமிட்ட பாட்டி…நான் கூட பேரனால தான் நம்ம பேத்தி பிரியா செத்துட்டான்னு நினச்சேன்..

“செத்தும் கெடுத்தான்” போல அவ செத்த புறவும் எம் பேரனோட வாழ்க்கை கெட்டு தான் கிடக்கு. இந்த பத்து மாசத்துல புள்ளைக்காகவாது கல்யாணம் பண்ணிக் குடுக்கணும்னு உதய்ட பேசுனப்ப அவனோட பதில் எரிச்சலா இருந்துச்சு..ஆனா இப்ப எம் பேரன் அந்த தேவனே தான்னு தோணுது…

சத்தம் போடாதடி…

ஏய் கிழவா, எம் பேரனோட வாழ்க்கைக்காக நான் எதுவும் செய்வேன். முதல்ல பொண்ணு பொண்ணுன்னு பத்மாவுக்கு சாதகமா ஏதாவது பேசுன உனக்கு எங்கிட்ட இருந்து விவாகரத்து பத்திரம் தான் வரும். எம் பேரனுக்கு பிடிச்ச இந்த பொண்ணயே கல்யாணம் பண்ணி வைக்கணும். அதுக்கான வேலைய நான் பாத்துக்கிறேன். எதிலயாது குறுக்கிட்ட…டிவோர்ஸ் டிவோர்ஸ் தான் மிரட்டினார்.

என்ன கூறினாலும் தலையை மட்டும் ஆட்டும் மனைவியின் பேச்சில் திகைத்து விழித்தார் தாத்தா.

என்ன புரியுதா?

ம்ம்ம்!!!!

ராமநாதன் அவர் அன்னையின் பேச்சில் அதிர்ந்து சிலையாகி விட்டார். ஆனால் தன் மகனுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் இன்பவேணி பழையவாறு வீட்டிற்கு வந்து சென்றால் கூட போதுமானது என எண்ணி வருத்தமுடன் அறைக்கு சென்றார்.

அறையில் படுத்த உதய்கிருஷ்ணா உறக்கமில்லாமல் தவித்தான். அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

      “காதலோடு வாழ்வேனே

 இந்த வாழ்வின் எல்லை போனாலும்

    மறந்ததில்லை என் இதயம்

 உனை நினைக்க முப்பொழுதும்

    கரையவில்லை உன் இதயம்

கலங்குகிறேனே எப்பொழுதும்….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!