Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 23

மனசு 23
ஹலோ மிஸ்டர் உதய்கிருஷ்ணா, எங்க மானவ் யாருக்கும் குறைஞ்சவனில்லை. வாய்க்கு வந்த படி பேசாதீங்க. அவனுக்கு வயசு வேணும்னா கூட இருக்கலாம். அவன் உங்கள விட படிச்சிருக்கான். எத்தன கோர்ஸ் பண்ணி இருக்கான் தெரியுமா? எத்தன மொழி அவனுக்கு தெரியும்னு உங்களுக்கு தெரியுமா?
“மேடம் விடுங்க…” மானவ் சாயாலியை தடுத்து இன்பவேணியை பார்த்தான்.


Advertisement

அதிர்ந்து நின்றவள் மானவ்வின் பார்வையில் புன்னகையை முகத்தில் காட்டி அவன் கை பிடித்து அமர வைத்து அவனருகே கால் மீது கால் போட்டு அமர்ந்தாள் அமைதியாகவே..

Advertisement

வேணி….

Advertisement

இன்பவேணி சாயாலியை பேசு என்பது போல பார்த்தாள்.

Advertisement

எத்தனை முறை மானவ்வை அவமானப்படுத்துவது போல பேசுவார்கள்??? இன்பவேணிக்கும் கோபம் வந்தது.
ஏற்கனவே சொன்னது தான் மானவ் அப்பா எங்க அப்பாவுக்கு கீழ வேலை பார்த்தார். எங்க குடும்பமும் அவங்க குடும்பமும் குடும்பத்துக்குள்ள தான் பொண்ணு குடுப்பாங்க எடுப்பாங்க. அதே போல தான் தொழிலிலும்..என்னோட அண்ணா தம்பியும் சரி அவனோட அண்ணா, அக்கா புருசனும் சரி எல்லாரும் அடிதடியை தான் கையிலெடுத்தாங்க. ஆனா இவன் தான் எல்லாரும் எதிரா இருந்தான் பத்து வயசுலவே…
அந்த ரௌடி குடும்பத்தை விட்டு வெளியே வர ட்ரை பண்ணான். ஒரு பிரச்சனையில அவன் அப்பாவுடனான வாக்குவாதத்தில் அவர் அவனை அடிச்சிட்டார். அப்ப வெளிய வந்தான். ஹாஸ்ட்டல்ல தங்கி தான் பள்ளி முடித்தான். அதுக்காக வீட்டு வராமல் இல்லை. அவன் குடும்பத்தை பார்க்க அடிக்கடி வருவான். நானும் அவனும் பார்த்திருக்கிறோம். அதிகம் பேசியதில்லை..
கல்லூரி படிக்க மும்பை போனான். அடிக்கடி வர முடியவில்லை என்றாலும் எல்லாருடனும் பேசுவான். காலேஜ்ல நான் படிக்க போன போது இவன் பெயரை சொன்னாலே அவ்வளவு பெருமையா பிரபசர்ஸ் எல்லாரும் பேசுவாங்க. அவ்வளவு கெட்டி இவன்..
உங்க அளவுக்கு அவன் சம்பாதிக்கல மிஸ்டர் உதய்கிருஷ்ணா. அதுக்கு காரணம் அவனோட தந்தையும் என்னோட தந்தையும் தான். அவன் திறமைக்கு எங்கோ கொடி கட்டி பறக்க வேண்டியவன்…அவனையும் அடிதடிக்குள்ள இழுக்க அவன் கம்பெனிக்கு முதலீடு செய்ய வர்றவங்களே அவங்களே தடுத்து இல்லாத பொல்லாததை சொல்லி அவன வளர விடாம பண்ணாங்க. அப்ப கூட அவன் அடிதடிய பத்தி யோசிக்கல. எப்படியும் முன்னாடி வரணும்னு ரொம்ப எபர்ட் போட்டான். எதுவுமே செய்ய முடியாத மாதிரி பண்ணீட்டாங்க.
ஆனா அவங்களுக்கு அந்த கடவுளே சரியான தண்டனையா எதிரி ஆட்களை வைச்சு முடிச்சுட்டாங்க குடுத்துட்டாங்க. ஆனா அப்பவும் நாங்க தான் பாதிக்கப்பட்டோம்..
அப்ப மனீஷ்….??? விதார்த் கேட்டான்.
அனீஷ் மானவ்வோட அண்ணா பையன். குடும்பத்தை கொல்றத அவன் பக்கத்துல இருந்து பார்த்தான். அவன் மனச ரொம்ப பாதிச்சிருச்சு. மானவ் மட்டும் அன்னிக்கு என்னோட வரலைன்னா நானும் அனீஷூம் உயிரோட இருந்திருக்கவே முடியாது. எங்க அப்பாங்க செஞ்ச தப்புக்கு நாங்க எங்க குடும்பத்தையே இழந்தோம். அவனுக எங்களையும் விரட்டுனாங்க…மானவ் அவன் உயிர கொடுத்து காப்பாத்தினான். அவனோட தான் அன்று கோசலை அம்மாவையும் அக்காவையும் பார்த்தோம். எங்களுக்கு உதவ போய் அவங்களும் மாட்டிக்கிட்டாங்க..
அடிபட்டு மயக்கத்துல இருந்து கஷ்டப்பட்டு எங்க நால்வரையும் முன்னாடி வந்து வந்து காப்பாத்துனான். அதனால் எவ்வளவு காயம் வலி அவனுக்கு தெரியுமா? மானவ் இல்லைன்னா இன்பவேணியையும் அவங்க அம்மாவையும் நீங்க பாத்திருக்கவே மாட்டீங்க.. அப்புறம் நானும்…சாயாலி கண்ணீருடன் துவல…
அவளை தாங்கியவன், “போதும் சாயா. நீ வா ஓய்வெடு…” விதார்த் அவள் கரம் பற்றினான்.
விதார்த் கையை தட்டி விட்டு, உங்க அண்ணன் மட்டும் தான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்காரா? ஏன் நாங்க இல்லை..அக்கா..
“சாயா…” கத்திய இன்பவேணி எழுந்து, “உன் வயித்துல புள்ள இருக்கு. எதுக்கு இவ்வளவு எமோஸ்னல் ஆகுற? யாருக்கும் எதுவும் சொல்றதுல்ல ஒரு பிரயோஜனமும் இல்ல..” சாயாலி கை பிடித்து எல்லாரையும் பார்த்து…
“அடுத்தவங்கள குற சொல்றத விட்டு எல்லாரும் உங்க வேலைய பாருங்க. மானவ் நீ இவ்வளவு யார்டையும் பேச தேவையில்லை. பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்குன்னு சொல்லு. இல்லைன்னா இல்லன்னு சொல்லீட்டு கிளம்பு. நான் சாயாவை அறைக்கு அழச்சிட்டு போறேன்” இன்பவேணி யாரையும் நிமிர்ந்து கூட பாராது சாயாலியை தாங்கி சென்றாள்.
“எனக்கு பிடிச்சிருக்கு பாட்டி. ஆனா அவங்களுக்கு தான் விருப்பமில்லைல்ல. வேண்டாம் விட்ருங்க” என கூறி அனீஷ் கை பிடித்து அழைத்து சென்று விட்டான் மானவ்.
தாத்தா யோசனையுடன் மனைவியை பார்க்க, “நாளைக்கு நாம கோர்ட்டுல பாக்கலாம்” பாட்டி எழுந்தார்.
“கோர்ட்டா என்ன விசயம்?” உதய்கிருஷ்ணா கேட்க,
உன்னோட பாட்டியும் தாத்தாவும் விகாகரத்துக்கு சைன் பண்ணி இருக்காங்க. நாளைக்கு ஹியரிங் என்றார் ராமநாதன்.
“பாட்டி..” உதய்கிருஷ்ணா அழைக்க, திரும்பியவர் உங்கள மாதிரி ஆம்பளைங்களுக்கு கூட இருக்கும் போது பொண்டாட்டி அருமை தெரியாது. அவ மனச கொன்னுட்டு சாரின்னு ஒரே வார்த்தையில எதையும் சரி செய்ய முடியாது என சொல்லி தாத்தாவை முறைத்து சென்றார்.
விதார்த் தன் அண்ணனை முறைத்து மனைவியை கவனிக்க சென்று விட்டான்.
மகளுடன் அறைக்கு வந்த உதய்கிருஷ்ணாவிற்கு பாட்டியின் வார்த்தைகள் குத்தியது.
அறைக்கதவு திறக்கப்பட உள்ளே வந்து ஆடையை மாற்றி குழந்தையை அணைத்து படுத்து விட்டாள் இன்பவேணி. உதய்கிருஷ்ணாவும் அவளை பார்த்துக் கொண்டிருக்க, குழந்தைக்கு மறுபக்கம் அவள் இருந்தாலும் அவள் முகத்தை நேராக பார்த்தான். ஆனால் அவன் அங்கிருப்பது கூட தெரியாதவாறு குழந்தைக்கு கதை கூறி தூங்க வைத்து அவளும் தூங்கினாள்.
“இவள் தன்னை பார்க்கவில்லையா? இல்லை நடிக்கிறாளா?” யோசனையுடன்…சாயாலி வார்த்தைகள் அவன் காதில் ஒலிக்க உறங்க முடியாமல் பால்கனி வந்தான். எப்போதும் வராதவன் அன்று பால்கனி நின்று விசுவமூர்த்தி வீட்டை பார்த்தான்.
கோசலையை கவனித்தவாறு உள்ளே படுத்திருந்தான் மானவ். அதனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.
பெருமூச்சுடன், “இவன் என் ஹனியை காப்பாற்றினானா? அவனாலும் சாயாலியாலும் தான பிரச்சனை? அப்ப அவன் தானே பொறுப்பெடுக்கணும். எல்லாரும் செய்வதை தானே செய்திருக்கான். இருவரும் இவனுக்காக பரிந்து கொண்டு வருகிறார்கள்” கடுப்புடன் சென்று படுத்து விட்டான்.
சித்ரலேகா முதலில் மானவ்வை ரௌடி என கூறினாலும் அவனின் நடவடிக்கை செய்கை பிடித்து தான் இருந்தது. உதய் ஏன் இப்படி பேசி விட்டான்? என மனதில் அவனை வறுத்தெடுத்து இன்பவேணியை எண்ணினார். அவருக்கு புரிந்தது. இன்பவேணி குடும்பத்தினர் இன்னும் நடந்த சிலவற்றை மறைக்கிறார்கள் என்று. என்னவாக இருக்கும்? எண்ணியவாறு சிந்தனையிலே அன்றைய இரவை கடந்தாள் சித்ரலேகா.
கோர்ட்டில் தாத்தா பாட்டிக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன் என விடாப்பிடியாக நிற்க, பாட்டி அவர் நியாயத்தை கூறுகிறேன் என்று உதய்கிருஷ்ணா வாழ்க்கை பற்றி பேச அனைவருக்கும் அவலாகிப் போனான் உதய்கிருஷ்ணா.
வீட்டுக்கு வந்த பாட்டியிடம் அவன் சத்தம் போட, இன்பவேணி மறுநொடி அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள். அவளுக்கு தெரியும் கண்டிப்பாக அவளையும் இழுத்து சண்டை போடுவான் என்று. தாங்க முடியாமல் மனதில் உள்ளதை உடைத்து விடுவோமோ என்று பயந்து சென்றாள்.
அதற்கும் உதய்கிருஷ்ணா, இன்பவேணி அவனை மதிக்காமல் சென்று விட்டாள். இவளும் பிரியங்கா போல தான் தன்னை திருமணம் செய்து கொண்டால் என்று கூறவும் பளாரென அவனை அறைந்து விட்டான் அவன் தம்பி விதார்த்.
“மரியாத..யார யாரோட ஒத்து பாக்குற?? அவ உன்னோட பொண்டாட்டியா இருந்தாலும் என்னோட தோழி இன்னு. இதுக்கு மேல நீ அவள பத்தி ஏதாவது பேசுன அவளையும் சாயாவையும் கூட்டிட்டு வீட்ட விட்டே போயிருவேன்” கத்திய விதார்த் நிற்கவில்லை. வெளியே சென்று விட்டான்.
உதய் கிருஷ்ணா திகைக்க, “உனக்கு இது வேண்டும்” பாட்டியும் சித்ரலேகாவும் நகர்ந்தனர். ராமநாதன் மகனை பாவமாக பார்க்க, அவனுக்கு மேலும் ஏறியது. சாயாலி அவளறைக்கு சென்று விட்டாள்.
திருமணத்தின் போது பலருக்கு தெரிந்த விசயம் தான் என்றாலும் கோர்ட்டில் இவர் பேசியது பரபரப்பு செய்தியாகி உலகெங்கும் பரவியது.
கோபத்தை அடக்க மாட்டாமல் அறைக்கு வந்தான் உதய்கிருஷ்ணா. இன்பவேணி அமைதியாக படுக்கையில் கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.
அதை பிடுங்கி தரையில் போட்டு உடைத்து, “என்னோட விதுவையும் எனக்கு எதிரா திருப்பீட்டேல்ல. நான் தான் முன்னாடியே நம்ம திருமணம் ஒத்து வராதுன்னு சொன்னேன்ல!!” அவளை அவன் முகம் பார்த்து திருப்ப, அவனை தள்ளி அவளது சிதறிக் கிடந்த கைபேசியை எடுத்தாள்.
சிம்மை தேடிக் கொண்டிருந்த இன்பவேணியை இழுத்து பளாரென அறைந்தான் உதய்கிருஷ்ணா.
“நான் பேசிட்டே இருக்கேன். உனக்கு போன் தான் முக்கியமா போச்சா…???” கத்தி அறைந்திருந்தான்.
அவனின் ஆக்ரோசமான அடியில் கன்னம் சிவந்து உதடு கிழிந்து இரத்தம் எட்டி பார்த்தது.
அவன் முகம் பார்த்து மீண்டும் சிம்மை தேடினாள். அவன் மீண்டும் ஆக்ரோசமாக அவளை அடிக்க செல்லும் நேரம் கோசலையின் சத்தம் கேட்டது.
கையை உயர்த்தியவன் அடிக்காமல் தலையில் கை வைத்து கதவை திறந்து அவரை கண்டு கொள்ளாமல் வெளியேறினான்.
“வேணி…” பதறி வந்த கோசலையின் பின் மற்றவர்களும் வந்தனர்.
இரத்தம் வருவதை பார்த்து சாயாலி கோபமாக, “உங்க பேரன் என்ன நினச்சுட்டு இருக்கார். அக்காவ இரத்தம் வர்ற வரை அடிச்சிருக்கார். நீங்க யாரும் எதுவும் கேக்க மாட்டீங்கள?” பொறிந்து தள்ளினாள்.
விதார்த்தை தேடி சென்ற மானவ் உள்ளே வரவும் ராமநாதன் கையை பிசைந்தவாறு சின்ன மகனை பார்த்தார்.
“என்ன?” அவன் கேட்க, சாயாலி சத்தம் கேட்டு மேலே வந்தான்.
“சாயா..எதுக்கு கோபப்படுற? எல்லாமே நான் தேடிக்கிட்டது தானே! நடப்பது நடக்கட்டும்…எல்லாரும் வேலைய பாருங்க” என்றாள் இன்பவேணி சாதாரணமாக..
இன்னு…என்ன இப்படி பேசுற? அவன சும்மா விடவே கூடாது..
“விது அவர் உன்னோட அண்ணா. எங்க விசயத்துல யாரும் தலையிட வேண்டாம். என்ன நடந்தாலும் எங்க ரெண்டு பேருக்குள்ள யாரும் வரக் கூடாது” இன்பவேணி இறுகிய முகத்துடன் கூறினாள்.
கோசலை கண்ணீருடன் வெளியே செல்ல, மானவ் அவருடன் சென்றான்.
சாயாலி விதார்த் கை பிடித்து அழைத்து செல்ல, பாட்டி மட்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“எதுக்கு நின்னு பாக்குறீங்க? உக்காந்து எவ்வளவு நேரம் வேணும்னாலும் பாருங்க…” என்றாள் இன்பவேணி.
எதையும் நீ தாங்கிட்டு இருக்கணும்னு இல்ல.
புன்னகைத்து, மாத்திர போட்டீங்களா? அக்கறையுடன் வினவ, அவளை அணைத்து கிழிந்த உதட்டிற்கு மருந்திட்டு பாட்டி வருத்தமுடன் சென்றார்.
அன்றிலிருந்து உதய்கிருஷ்ணாவும் யாரிடமும் பேசவில்லை. யாரும் அவனிடமும் பேசவில்லை சித்ரலேகா முதற்கொண்டு..
அன்றொரு நாள் புடவையில் ஆபிஸ் சென்ற இன்பவேணி இரவு பேண்ட் சட்டையில் சோர்வுடன் முகம் வெளிற வந்தாள். அனைவரும் உணவுண்டு கொண்டிருந்தனர்.
“வேணி” சித்ரலேகா என்று போல அழைக்க, திரும்பி கூட பாராது அறை நோக்கி சென்றாள் இன்பவேணி.
“இன்னு…” விதார்த் சாப்பாட்டு கையுடன் எழ, “நீ சாப்பிடு விது. நான் பாக்குறேன்” என சித்ரலேகா நகர, உதய்கிருஷ்ணாவின் நண்பன் பைரவனும் இன்பவேணியின் உதவியாளினி மேக்னாவும் வந்தனர்.
“மேடம் எங்க?” மேக்னா கேட்க, அவளது தலையிலும் கையிலும் கட்டு போடப்பட்டு இருந்தது.
சாயாலி எழ, சித்ரலேகா அறையை காட்டினாள்.
கோபமாக வந்திருந்த பைரவன் உதய்கிருஷ்ணாவை நோக்கி வந்து அவனை அடித்தான்.
பாட்டி தடுக்க..
“பொண்டாட்டிய பாத்துக்கிறத விட உனக்கு வேறென்ன வேலை???” சீறினான் பைரவன்.
“பையூ..?” பாட்டி பதறினார்.
அக்காவுக்கு ஒண்ணுமில்லைல்ல..???
“ராஸ்கல்…” கத்திய பைரவன்,
“கார் பஞ்சரா இருக்குன்னு மேக்னாவும் இன்பவேணியும் காரிலிருந்து இறங்கி இருந்திருக்காங்க. குடிச்சிட்டு வந்துருந்த சின்ன பசங்க…அவங்கட்ட தப்பா நடத்துக்க பாத்துருக்கானுக. நல்ல வேலையா இன்பாவோட தோழன் ஜோகன் வந்து காப்பாத்தினான். ஆனால் அவனை அந்த பசங்க பயங்கரமா அடிச்சி சீரியசா ஹாஸ்பிட்டல்ல இருக்கான்” என்றான் பைரவன் நண்பனை முறைத்து..
பெண்கள் இன்பவேணியை காண அறைக்கு செல்ல சாயாலி மட்டும் கணவனை நாடாது மானவ்வை பார்க்க சென்றாள்.
யார் என்ன செய்தும் இன்பவேணி கதவை திறக்காமலிருக்க அனைவரையும் பயம் தொற்றிக் கொண்டது..
கோசலையும் கதவை தட்ட, உதய்கிருஷ்ணாவை பதட்டம் சூழ்ந்தது. அவனும் கதவை தட்ட எல்லாரும் அவனை முறைத்தனர்.
இவர்கள் சத்தம் கேட்டு வந்த வழியே ஓடிய மானவ் வீட்டின் மறுபக்கம் சென்று அவளறைக்கு கீழிருந்து வேகவேகமாக ஏறினான். கண்ணாடி அறை என்பதால் மானவ்விற்கு இன்பவேணி படுத்திருப்பது தெரியவும் பால்கனியில் குதித்து..அக்கண்ணாடி கதவை திறந்து அறைக்கதவை திறந்து விட்டான்.
கும்பலாக எல்லாரும் உள்ளே வர இன்பவேணி அசையாமல் தலையணையை அணைத்து படுத்திருந்தாள்.
அனைவர் விழிகளும் கலங்க, கோசலை கண்ணீருடன் அமைதியாக சென்றார். மானவ்வும் அவர் பின் செல்ல, “மானவ், அக்காவ நீ வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்றாள் சாயாலி.
“சாயா..” கண்டிப்புடன் விதார்த் அழைக்க, அவனை வெறித்தாள்.
அவ தான் அவளுக்கும் அவ புருசனுக்குமான விசயத்துல தலையிட வேண்டாம்னு சொன்னால்ல. அதுக்கு மேல நாம என்ன பண்றது? ஆற்றாமையுடன் பேசினான் மானவ்.
உதய்கிருஷ்ணா விழிவிரித்து மானவ்வை பார்க்க, “பாட்டி அவ கூடவே இருங்க. தனியா விடாதீங்க. விது மாப்பிள்ள சாயாலியை கூட்டிட்டு போங்க” என
சித்ரலேகாவை பார்த்தான்.
பைரவை பார்த்து, “கார் பிராபிளம்னா வேணி கால் பண்ணி இருக்கலாமே!”
சித்ரலேகா கேட்டாள்.
கைபேசியை படுக்கையில் தூக்கி போட்ட பைரவன், விது, மானவ் இருவருக்கும் கால் பண்ணி இருந்திருக்கா. யாருமே எடுக்கல.
காலையில இருந்து அலைஞ்சதுல நான் வீட்டுக்கு வரவும் தூங்கிட்டேன் மானவ் குற்றவுணர்வுடன் சொல்ல, விதார்த் சாயாவுடனும் அவன் குழந்தையுடனும் பேசிக் கொண்டிருந்திருப்பான்.
உங்கட்ட நான் காரணம் கேக்கல மானவ்.
“பொண்டாட்டி வேலைக்கு போறான்னா அவ என்ன செய்றா? எப்படி வர்றான்னு புருசன்காரன் கவனிக்கணும். ஆனா உம் பொண்டாட்டி போன்ல உன்னோட நம்பரே இல்ல” உதய்கிருஷ்ணாவை வெறித்து ஆதங்கமுடன் பைரவன் கூறினான்..
உதய்கிருஷ்ணா தொண்டைகுழி ஏறி இறங்க,
“நீ இங்க நல்லா கொட்டிட்டு இருந்துருக்க? அங்க அவங்க தவிச்சிட்டு இருந்திருக்காங்க. என்ன மனுசன்டா நீ? இப்பல்லாம் எவ்வளவு கிரைம் நடக்குது? சின்ன புள்ளைங்க கூட தனியா வெளிய போக முடியல..ச்சே…” பைரவன் வெளியேற,
“மேடம பாத்துக்கோங்க பாட்டி” என உதய்கிருஷ்ணாவை முறைத்து பைரவன் பின் ஓடினாள் மேக்னா.
வெளியே வந்த பைரவன், “இதுக்கு முன்னாடியும் அவங்கட்ட தான வேல பாத்த?” மேக்னாவிடம் கேட்டான்.
ஆமா..அவள் தலையசைக்க,
இதுக்கு முன்னாடி இது போல நடந்திருக்கா?
மேக்னா ஏதோ கூறவும் உதய்கிருஷ்ணா மீது தான் கோபம் அதிகமானது பைரவனுக்கு.
இரு அவன..
“சார் வேண்டாம்” மேக்னா தடுக்க, அவளை பார்த்தான்.
நான் நினைச்சிருந்தா முன்னாடியே சார்ட சொல்லி இருப்பேன். ஆனா மேடம் ஒண்ணு சொன்னாங்க..
என்ன?
இப்ப நீ என்னோட பிரச்சனை சொல்லி அவர் சரியா நடந்துப்பார். அடுத்த முறை அதற்கடுத்த முறை என ஒவ்வொரு முறையும் மத்தவங்க சொல்லி தான் அவர் புரிஞ்சு என்ன நல்லா நடத்தணும்னு இல்ல..பிரிக்க முடியாத பந்தம் எங்க உறவு. அவருக்கே புரியல…சொல்லி புரிய வைக்க எனக்கு விருப்பமில்லை என்று அவன் பேச தொடங்கும் முன்னே காரில் ஏறினாள்.
சார் என்ன ஹாஸ்பிட்டல்ல இறக்கி விடுங்க..
ஏன்? இல்ல மேடம் ப்ரெண்டோட ஹஸ்பண்ட் தான் ஜோகன். அவங்க பினான்சியலாக கஷ்டப்படுறாங்க. பணத்துக்கு உதவணும்..
நீ கொடுக்கப் போறீயா?
எங்கிட்டயும் அதிகம் இல்ல. ஆனா மேம் எங்கிட்ட கொடுத்துட்டு தான் போனாங்க. காரணம் சொல்லைன்னாலும் என்னோட மேடம எனக்கு நல்லா தெரியும். அவங்களுக்கு இப்ப என்னோட கெல்ப் அவசியம்..
“சரி, நானும் அவன பாக்கணும்” இருவரும் கிளம்பினார்கள்.
குழந்தையை உறங்க வைத்து உதய்கிருஷ்ணா அறைக்கு கசங்கலான மனதுடன் தூக்கி வர பாட்டி இன்பவேணி மீது கை போட்டு படுத்திருக்க, அவரை அணைத்திருந்தாள்.
விழிகள் கலங்க அவளை பார்த்தவாறு அமர்ந்து விட்டான் உதய்கிருஷ்ணா.
 “தேடல் வரும் பொழுது
என் உணர்வுகளும் கலங்குதடி
  கானலாய் கிடந்தேன்
உன் வரவால் விழித்திருந்தேன்
 இமை பிரியாத நிலை பெறவே
     நெஞ்சில் யாகமே
  தவித்திடும் போது ஆறுதலாய்
     உன் மடி சாய்கிறேன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!