Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 25 (pre-final)

மனசு 25
சிவந்த ஆகாயச்சுடர் எங்கும் பரவி விரய, விழித்த இன்பவேணி உதய்கிருஷ்ணாவை அவளும் அவளை அவனும் அணைத்திருப்பதை கண்டு அவனை தள்ளி பின் நகர்ந்தாள்.
இமைகளை பிரித்த உதய்கிருஷ்ணா, “ஹனி…” அவளை இழுக்க, பூக்குவியாக அவன் மீதே விழுந்த இன்பவேணி இறுக தழுவினான்.


Advertisement

“என்ன விடு விடு…” அவன் மார்பில் குத்தினாள்.

Advertisement

“சாரி ஹனி…” இன்பவேணி கழுத்தில் முகம் புதைத்தான். அவனின் சூடான கண்ணீர் அவளது கழுத்தில் பட்டது.

Advertisement

புரியாமல் விழித்த இன்பவேணி, அவனை தள்ளி குளியலறை செல்ல, அவளை பின்னிருந்து கட்டிக் கொண்டான் உதய்கிருஷ்ணா.

Advertisement

“என்ன விடு….நான் தான் உன்ன விட்டு போயிட்டேன்ல?? குழந்தைக்காக தான நீ என்னை கல்யாணம் பண்ண? என்னை விட்ரு” என்று முதலிரவன்று உதய்கிருஷ்ணா இன்பவேணியிடம் பேசியதை சொல்லிக் காட்டினாள்.
தப்பு தான் ஹனி…நான் உன்னை புரிஞ்சுக்கல. மன்னிச்சிக்கோ..நம்ம இருவருக்கும் சரியான புரிதல் இல்லாம பிரிஞ்சோம். ஆனா உன்ன மாதிரி என்னால உடனே ஏத்துக்க முடியல. ஜானுக்காக திருமணம்னு சொன்னதெல்லாம் பொய் தான். எனக்கும் புடிச்சு தான் உன்னை திருமணம் செஞ்சுட்டேன். ஆனால் எனக்குன்னு உன்ன எம் மனசுல நிரந்தரமாக பிக்ஸ் செய்து வச்சிருந்தப்ப. நீ போயிட்ட…என்னால ஏத்துக்க முடியல. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..
தெரியும். தனிமையிலே வாழ்ந்த உனக்கு பிரியங்கா கொடுத்த டார்ச்சர் நினைச்சு நீ எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பன்னு என்னோட கஷ்டத்தை மறச்சு திருமணம் செய்ய கேட்டா…ரொம்ப பிகு பண்ற? பேச்சாடா பேசுன…கோபமாக கேட்டாள்.
“அடிக்கணும்னா அடிச்சுக்கோ..ப்ளீஸ். எனக்கு என்னோட பழைய ஹனி வேணும்” அவளை பழையவாறு மாற்றினால் நடந்த விசயத்தில் உலன்று தவிக்க மாட்டாள் என்று பேசினான்.
“உன்ன அடிச்சா எல்லாமே சரியாகுமா? எப்படி உன்னால என்ன கஷ்டப்படுத்துற மாதிரி பண்ண முடிஞ்சது? நம்ம திருமணத்தப்ப என்ன பேசுன? உங்க குடும்ப மானம் போகக் கூடாதுன்னு பிரியங்கா செஞ்சத மறைச்சு கல்யாணம் செய்து வாழ்வது போல நடிச்சேன்னு சொல்ற? அப்ப நான்..என் காதல்..எதுவுமே உனக்கு புரியல.அது உனக்கு டைம்பாஸ்ஸா தான இருந்திருக்கு” அவனை வெறித்தாள்.
இப்பொழுது தான் உதய்கிருஷ்ணாவிற்கு அவன் பேசியதன் வீரியம் புரிந்தது.
அது அப்படியில்லை ஹனி. அவளால குடும்பத்துல எல்லாரும் கஷ்டப்படணும்..
அதான் கேக்குறேன். உன்னோட குடும்பம் உனக்கு முக்கியம்னா நானும் என்னோட குடும்பமும் முக்கியமில்லைல்ல. அதான் எங்கள அந்த நிலையில பாக்க கூட நீ வரல.
நான் தான் சூசைட் பண்ணிக்கிட்டேன். நான் விழிக்கிறதுக்குள்ள நீங்க போயிட்டீங்க
இருந்தா என்ன செஞ்சிருப்ப?
“அப்பவே உன் கழுத்துல தாலி கட்டிருப்பேன்” என்றான் தீர்க்கமான பார்வையில்.
எள்ளலாக உதய்கிருஷ்ணாவை பார்த்தாள் இன்பவேணி.
ஹனி அப்படி பாக்காத…நான் உண்மையை தான் சொல்றேன்.
கோணல் சிரிப்பை உதட்டில் காட்டி, நாம ஜானுக்காக மட்டுமே சேர்ந்து வாழலாம். எப்பவும் எம் மனச உடைக்கிற தான் உன்னோட வேலையா இருக்கு..நான் இனி யாரையும் எதற்காகவும் நம்பவே மாட்டேன்..அவள் நடக்க, தடுத்து அவள் கரம் பற்றினான் உதய்கிருஷ்ணா.
தொடாத…ஐ ஹேட் யூ…ரியலி ஐ ஹேட் யூ…உதய்கிருஷ்ணா கையை உதறி வேகமாக குளியலறைக்குள் புகுந்து கதவிலே சாய்ந்து கண்ணீருடன் அமர்ந்து விட்டாள் இன்பவேணி.
தவித்து போனான் உதய்கிருஷ்ணா..
தன்னை நேர்படுத்தி புடவையில் வெளியே வந்தவளிடம், ஹனி..ப்ளீஸ் கொஞ்சம் வெயிட் பண்ணு. சீக்கிரம் குளிச்சிட்டு வாரேன். நாம வெளிய போகலாம்…இன்பவேணி மனதை மாற்ற வெளியே அழைத்து செல்ல எண்ணினான்.
அவன் ஒருவன் அங்கே இல்லாதது போல அவன் கூறுவதை காதில் வாங்காமல் அந்த ஆளுயர்ந்த கண்ணாடி முன் அமர்ந்தாள்.
பேசி நேரம் செலவழிக்க வேண்டாம் என்று எண்ணி உதய்கிருஷ்ணா குளியலறை புகுந்தான். அவன் வெளியே வந்த போது இன்பவேணி இல்லை…அறையில் மட்டுமல்ல வீட்டிலே இல்லை. மற்றவர்கள் கோபமாக அமர்ந்திருந்தனர்.
அப்பா…ஜான்வி உதய்கிருஷ்ணாவிடம் தாவினாள்.
ஹனி, எங்க பாட்டி? எதுவும் நடவாவது போல சாதாரணமாக கேட்டவனை அனைவரும் வெறித்து பார்த்தனர்.
என்ன? அவனுக்கு பதட்டம் தோன்றினாலும் மௌனமாகவே கேட்டான்.
உம் பொண்டாட்டிக்கு நேத்து நடந்தது நினைவிருக்கா? பாட்டி சினந்தார்.
ம்ம்! உதய்கிருஷ்ணா முகம் இறுக்கமாக மாறியது.
அவள எப்படிடா இப்ப கூட உன்னால தனியா விட முடியுது? சீறியவாறு அவனை நெருங்கினாள் சித்ரலேகா..
எங்க போயிருக்கா?
அவளை காப்பாற்றியவனை பார்க்க மருத்துவமனை போயிருக்காங்க வெறுமையான குரலில் சாயாலி.
விது…எங்க? விழிகளை சுழற்றி அவனை தேடியவாறு கேட்டான்..
வேணி போகவும் விதுவும் கிளம்பீட்டான். உதய் நீ செய்றது கொஞ்சமும் சரியில்லை..ராமநாதன் அதிருப்தியுடன் பேசினார்.
எல்லாரும் பேசிட்டீங்களா? நான் கிளம்பவா இல்ல இன்னும் நீங்க யாரும் பேசணுமா? உதய்கிருஷ்ணா சத்தமிட்டான்.
ஜான்வி உடல் நடுக்க, நெற்றியை அழுத்தி தேய்த்தவன்…பாப்பா நீ பாட்டிட்ட இரு. அப்பா அம்மாவ கூட்டிட்டு வாரேன் என குழந்தையை பாட்டி கையில் கொடுத்து விறுவிறுவென வெளியேறினான்.
அன்றிலிருந்தே இன்பவேணி பேச வைக்கும் பொருட்டு அவள் பின்னே தான் சுற்றிக் கொண்டிருந்தான் உதய்கிருஷ்ணா. எல்லாரும் அவனை அதிசயித்து மகிழ்ந்தனர்.
தாத்தா கூட மனம் மாறி இருந்தார். பாட்டியும் தாத்தாவும் விவாகரத்து செய்யக் கூடாது என அவர் மகனும் பேரன்களும் கொடுத்த ஆணையின் பெயரில் பாட்டி அமைதி காத்தார். கொஞ்சம் கொஞ்சமாக பாட்டியின் அருகாமைக்காக தாத்தா மொத்தமாக மாறி விட்டிருந்தார். தற்பொழுது அவரும் இவர்களுடன் தான் வாசம் செய்தார்.
“இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தரமாட்டேன் தரமாட்டேன்
  இடம் தர மாட்டேன்
  உள்ளே சென்றால்
மனசை விட்டு வரமாட்டாய்”
அன்று காலையிலிருந்தே சித்ரலேகா பாட்டியை அடிக்கடி கவனித்துக் கொண்டே இருந்தார். உதய்கிருஷ்ணாவோ தனது தட்டில் இருந்த ஸ்வீட்டை எடுத்து இன்பவேணிக்கு பிடிக்குமென அவளுக்கு வைக்க அவள் அவனை முறைத்து
அதனை தனியே எடுத்து வைத்து விட்டாள்..இருந்தும் தளராமல் அவளை சீண்டிக் கொண்டே இருந்தான் உதய்கிருஷ்ணா. அவனின் புது அவதாரத்தில் அனைவரும் மகிழ்ந்தாலும் யாரும் அதனை வெளிகாட்டிக் கொள்ளவில்லை. அது இன்பவேணியை கோபமேற்றும் என்பதால் அமைதியாகவே சென்றனர்..
பாட்டியை நெருங்கிய சித்ரலேகா அவரருகே அமர்ந்து, “பாட்டி நீங்க அவர்ட மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறாரான்னு கேட்டீங்க? எங்கிட்ட கேக்கவில்லை” கீழுதட்டை தொங்க விட்டு பாவமாக கேட்டார்.
யாரடி சொல்ற?
அ..அது..பாட்டி…அவரு..
“அவரா எவரு?” பாட்டி கேட்க, சாயாலி சிரிப்பை அடக்கினாள். உதய்கிருஷ்ணாவும் இன்பவேணியும் அவளை பார்த்தனர்.
பாட்டி, “மானவ்” தலைகவிழ்ந்தாள் வெட்கமுடன்.
மனதில் சிரித்த பாட்டி, இது சரிவராதும்மா. அவன் தான் ரௌடி மாதிரி இருக்கானே!
“சேர்ந்து வாழ உருவம் தேவையில்ல பாட்டி உள்ளம் போதும்” கடுப்புடன் பாட்டியை முறைத்தாள் சித்ரலேகா.
பக்கென சிரித்து விட்டான் விதார்த்.
“விது சும்மா இரு…” ராமநாதன் அதட்டினார்.
அன்னிக்கே அந்த பையன அவமானப்படுத்தி வேண்டாம்னு சொல்லியாச்சு. இப்ப என்ன பேச? பாட்டி இழுத்தாள்.
“நான் எங்க வேண்டாம்னு சொன்னேன் பாட்டி..” சித்ரலேகா பாவமாக கேட்க, உதய்கிருஷ்ணா வாசலில் நின்றிருந்த கோசலையை பார்த்தான்.
“வாங்க ஆன்ட்டி..” உதய்கிருஷ்ணா அழைக்க, பாட்டி கோசலையையும் சித்ரலேகாவையும் பார்த்தார்.
ம்ம்! என்று மகள் மருமகன் பக்கம் கவனம் செல்ல, புரிந்து கொண்ட உதய்கிருஷ்ணா இன்பவேணியை கை பிடித்துக் கொண்டான். அன்னை மனது நோகக்கூடாது என்று இன்பவேணியும் அவனை சகித்துக் கொண்டாள்
பெற்ற தாய்கு வேறென்ன வேணும்? அமைதியாக அவர் வெளியே எட்டி பார்த்தார்.
ஆளே மாறி வந்திருந்தான் மானவ் அனீஷூடன்.
அவனாக உள்ளே வந்து, ஹாய் அங்கிள்..என்று நேராக ராமநாதன் முன் வந்து நின்றான்.
சாயாலி அவனருகே வந்து, “மானவ்வுக்கு புத்தி வந்துருச்சா…?? ஷேவ் பண்ணி ஹண்சம்மா வந்திருக்க?” நக்கலாக சித்ரலேகாவை பார்க்க, அவளுக்கு விழிகள் கலங்கியது.
“சாயா, சும்மா இரு..” விதார்த் கூற,
எல்லாரையும் பார்த்த மானவ் சித்ரலேகாவை ஆழ்ந்து கவனித்து பின் எல்லாரிடம் பேசினான்.
நான் கம்பெனி தொடங்கப் போறது உங்க எல்லாருக்கும் தெரியும். எல்லாம் பேசி முடிச்சிட்டேன் என விவரத்தை கூறியவன், “நாளைக்கு பூமிப்பூஜ பண்ணப் போறோம். எல்லாரும் வந்துருங்க” என அழைப்பு விடுத்தான்.
எல்லாரும் சித்ரலேகாவை பார்க்க, “எதுக்கு இவள பாக்குறாங்க???” புரியாமல் மானவ் பாட்டியை பார்த்தான்.
ஏன்??? என்னாச்சு? எதுவும் பிரச்சனையா? இன்பவேணியை பார்த்தான்.
அதெல்லாம் ஒண்ணுமில்ல..
“ஆல் தி பெஸ்ட் மானவ்” ஒவ்வொருவராக மானவ்விற்கு வாழ்த்து தெரிவித்தனர். சித்ரலேகா மட்டும் அமைதியாகவே இருந்தாள்.
அப்புறம்..என்ற மானவ் தன் கையிலிருந்த பைல்லை கோசலை கையில் கொடுத்து, “இதுல கையெழுத்து போடுங்கம்மா..” என்றான்.
“என்னடா சொத்து எதுவும் எழுதி வாங்குறீயா?” சாயாலி கேலியுடன் கேட்க,
மானவ் அமைதியாக கோசலை இன்பவேணியை பார்க்க, உதய்கிருஷ்ணா விதார்த் ராமநாதன் என்னவென்று பைல்லை பார்த்து அவனை பார்த்தனர்.
என்ன விசயம்? கோசலை கேட்க..
“மானவ்வ நீங்க மகனா தத்தெடுக்குற சான்றிதழ் ஆன்ட்டி” என்றான் விதார்த் யோசனையுடன்.
“மானவ்…” உணர்ச்சி வசப்பட்டு அவனை அணைத்துக் கொண்டார் கோசலை.
யாருமே இல்லைன்னு நடக்குறதுக்கு லீகலா குடும்பம்னு இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு..அதான் உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்கம்மா..என்றான்.
எப்படி பிடிக்காமல் போகும் மானவ்..??
இப்ப முரளி இருந்திருந்தா கூட இந்த அளவு எங்களுக்கு பாதுகாப்பா இருந்துருப்பானான்னா தெரியல. எங்கள காப்பாத்த நீ பட்ட பாடு தான் எங்களுக்கு தெரியுமே! நீ நான் பெத்த பையன் முரளிக்கும் மேல…எனக்கும் பையன் இருக்கான்னு நான் சந்தோசமா சொல்லிப்பேன்..என்றார் ஆனந்தக் கண்ணீருடன்..
இன்பவேணியும் சாயாலியும் அவனை தோளோடு அணைத்துக் கொண்டனர்.
அம்மா எப்படி தனியா இருப்பாங்களேன்னு எனக்கு தோணிட்டே இருந்துச்சு..ரொம்ப தேங்க்ஸ் மானவ் என்றாள் இன்பவேணி..
இந்த உரிமை இல்லைன்னாலும் மானவ் அம்மாவ தனியா விட மாட்டான்னு எனக்கு தெரியும்கா. ஆனால் இப்படி உரிமையோட வந்ததை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு..
மேடம், நீங்க மனசுக்குள்ள வருத்தப்படுறீங்கன்னு தெரியுது. என்ன இருந்தாலும் நீங்களும் அம்மாவோட பொண்ணு தான் சாயாலியை தேற்றினான் மானவ்.
அவனிடமிருந்து விலகி, இப்ப கூட மேடமா? மேடம விடுடா..பெயர் சொல்லியே அழை.
அது முடியாது. பழகிடுச்சு…
“போடா..” விதார்த் அருகே சென்று நின்று கொண்டாள் சாயாலி.
“கொஞ்சம் வேலை இருக்கு” என கோசலையிடம் கையொப்பம் வாங்கி சித்ரலேகாவை விழிகளால் வருடி மானவ் சென்றான்.
சித்ரலேகாவிடம் வந்து, “நான் மானவ்ட பேசுறேன்மா. மனச போட்டு குழப்பிக்காத”  கோசலை உதய்கிருஷ்ணாவிடம் வந்தார்.
மாப்பிள்ள..வேணி…
ஆன்ட்டி, ஹனி பத்தி நீங்க இனி கவலைப்பட வேண்டாம். நான் பாத்துக்கிறேன்
என்றான் கனிவுடன்.
ம்ம்! மனநிறைவுடன் உதய்கிருஷ்ணாவை கண்டு புன்னகைத்து மகளை முறைத்தார். கோசலை கூறியும் இன்பவேணி உதய்கிருஷ்ணாவின் மன்னிப்பை ஏற்கவில்லை. அதனால் மகள் மீது கோபம் அவருக்கு..
“மானவ் எப்படி சித்ராவ கட்டிக்க ஒத்துப்பான்?? இவ அவன ரௌடின்னு சொல்லி இருக்கா…” பாட்டி கொளுத்தி விட்டார்.
சித்ரலேகாவிற்கு அவனிடம் பேச பயமாக இருந்தாலும் மன்னிப்பு கேட்பதே உசிதம் என்று பாட்டியை முறைத்து வெளியே சென்றாள்.
மானவ் காரை எடுக்க, மறித்து நின்றாள்.
அவன் புருவம் உயர்த்த, கார்க்கண்ணாடியை திறக்க சொல்லி சைகை செய்தாள்.
நான் அன்னிக்கு பார்த்தவுடன் அப்படி தெரிஞ்சீங்கன்னு சொல்லீட்டேன் சாரி…
காரிலிருந்து இறங்கி, “எப்படி தெரிஞ்சது?” கேட்டான்.
உங்களுக்கு தான் தெரியுமே!
“எனக்கு தெரியலையே!” மானவ் நெருங்க அவள் பின்னே நடந்தாள்.
ரௌடி மாதிரி…ஆனா எனக்கு உங்கள பிடிச்சிருக்கு…சொல்லி விட்டாள்.
அதிர்ச்சியெல்லாம் அவன் காட்டவில்லை. ஹர் கட், தாடி எடுத்ததனால பிடிச்சிருக்கா?
இல்ல இல்ல…முன்னாடியே புடிச்சிருந்தது. சின்னப்பையனா இருப்பீங்கன்னு தான் விலகியே இருந்தேன்..
அவ்வளவு தானா? நான் கிளம்பலாமா?
என்ன?
கிளம்பலாமா?? அழுத்தமான பார்வையை வீசினான்
ம்ம்!..தலையை ஆட்டி அவனை பார்த்தாள்.
வச்ச கண் எடுக்காமல் அவளை பார்த்த மானவ், அவள் கன்னத்தில் முத்தமிட்டு..முதல்ல பில்டிங் வொர்க் முடிஞ்சி கம்பெனி தொடங்கவும் நம்ம திருமணம் செஞ்சுக்கலாம்..என்றான்.
கன்னங்கள் சிவக்க வெட்கமுடன் தரையை பார்த்து தலையை ஆட்டினாள்.
“அப்புறம் பாக்கலாம்” அவன் கிளம்ப, “மானவ்” அழைத்தாள்.
“ஆல் தி பெஸ்ட்” அவனிடம் கை நீட்ட கை குலுக்கி, “தேங்க்ஸ்” என்று சென்று விட்டான்.
“ஏன்டி என்ட பம்மீட்டு மானவ்ட நீயே சொல்லீட்ட?” பாட்டி சிலாகிக்க,
“சொல்ல தோணுச்சு சொன்னேன். எல்லாமே கேட்டீங்களா?” பாட்டியை பார்த்தாள்.
“எல்லாமே பாத்துட்டோம் அண்ணீ” இரு கையையும் குவித்து இணைத்து மானவ் முத்தமிட்டதை சாயாலி சுட்டிக் காட்ட, முகம் சிவக்க அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
இப்பெல்லாம் அவங்களே கல்யாணத்  தேதியை முடிவு பண்ணிடுதுக?
“அப்படியெல்லாம் இல்லம்மா அவன் கையிலிருந்த மொத்த பணத்தையும் கம்பெனிக்காக போட்டுட்டான். அதான் கல்யாண செலவுக்கு பணம் வேணும்ல..அதன் கல்யாணத்த தள்ளி வச்சிருக்கான்” ராமநாதன் கூற, அவர் மகன்கள் இருவரும் அவரை முறைத்தனர்.
தங்களை ஒரு நாளாவது புரிந்து கொண்டாரா? இப்ப இவன் எனவும் என பல்லை கடித்தான் உதய்கிருஷ்ணா.
“ம்ச்ச்ச்…எனக்கு ரொம்ப பசிக்குது” சோர்வுடன் அமர்ந்தாள் இன்பவேணி.
நொடிக்குள் மனம் மாறி மனைவியுடன் உணவுண்ண அவன் அமர, மற்றவர்களும் அமர்ந்தனர்.
ஆறு மாதத்தில் கட்டிட வேலைகள் முடிந்து விட சித்ரலேகா கம்பெனியை திறந்து வைக்க, கோசலை பெயரில் ஆரம்பித்து இருந்தான் மானவ்.
நிறை மாத கர்பிணியாக இருந்த சாயாலியை இன்பவேணியும் கோசலையும் கடைசி செக் அப் அழைத்து சென்றிருந்தனர்.
உதய்கிருஷ்ணா விதார்த் இருவர் கைபேசிக்கும் பிரைவேட் கால் வந்தது. அவர்கள் மனைவி கடத்தப்பட்டதாக. இருவரும் அவ்விடம் சென்றனர்.
பாட்டி ஓர் அறையில் மயக்க நிலையில் இருந்தார். யாரென்று பார்த்த விதார்த்திற்கு சினம் கனன்று கொண்டு வந்தது.
ஷோபனாவும் கௌதமும் தான் இன்பவேணி, சாயாலி, பாட்டியை கடத்தி இருந்தனர்.
இன்பவேணி சாயாலியை கட்டி வைத்திருந்தனர்.
ஷோபனா வெறியுடன் சாயாலியின் மேடிட்ட வயிற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாயாலிக்கு நெற்றி, கைகள், உதடு என இரத்தம் வந்திருந்தது.
“ஷோபி ஒழுங்கா சாயாவ விட்ரு” விதார்த் சீறினான்.
தார்…அவ தான் நம்மள பிரிச்சிட்டா. நானும் கௌதமும் எவ்ளோ கஷ்டப்பட்டு இங்க வந்துருக்கோம்னு தெரியுமா? என்னால உன்னை விட முடியாது. எனக்கு நீ வேணும். அதுக்காக தான் காத்திருந்தேன்.
இப்ப இவ குழந்தையோட சேர்ந்து செத்துட்டா. நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அக்கா செத்தப்புறவு மாமா அவர் காதலியை கல்யாணம் பண்ணார்ல. அது மாதிரி நாமும் கல்யாணம் பண்ணிக்கலாம்..
“என்னால சாயாவ தவிர யாரையும் என் பக்கத்துல அனுமதிக்க முடியாது. எனக்கு என்னோட சாயாவும் குழந்தையும் வேணும்” கத்தினான்.
இவன்ட என்ன பேச்சு வார்த்த நடத்தீட்டு இருக்க? டேய்…இவனுகள கட்டிப் போடுங்கடா. அப்புறம் நான் இன்பவேணியையும் ஷோபி இவனையும் கல்யாணம் பண்ணிப்போம்..
ஆட்கள் அவ்விடம் சூழ, விதார்த்தும் உதய்கிருஷ்ணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஜோகன் பள்ளியில் இன்பவேணியிடம் பிரச்சனை செய்ததன் பின் விதார்த் உதய்கிருஷ்ணாவும் தற்காப்பு கலைகள் கற்றுக் கொண்டனர்..இன்று அது கை கொடுக்க, கௌதமின் ஆட்களை சமாளித்து வந்தனர்.
சாயாலியை சுற்றி ஷோபனா பெட்ரோலை ஊற்றி லைட்டரை ஆன் செய்து அதன் மீது போட, சாயாலியை சுற்றி நெருப்பு பற்றி எறிய, மூச்சு விட சிரமப்பட்டு மயங்கினாள் சாயாலி.
சாயா…சாயா…துடித்து கதறினான் விதார்த்.
“எங்கழுத்துல தாலி கட்டுனேனா அவள விட்டுறேன்” ஷோபனா மிரட்டினாள்.
அவனுக்கு தான் அவளை நன்றாக தெரியுமே! கண்டிப்பாக சாயாலியை கொன்று விடுவாள் என்று. அவன் மறுத்து சாயாலியை காப்பாற்ற பார்த்தான்.
விசயம் அறிந்து மானவ், பைரவன், ஜோகன் வந்து கொண்டிருந்தனர். பைரவன் கான்ஸ்டபிள்ஸையும் அழைத்து வந்தான்.
உதய்கிருஷ்ணாவாலும் அனைவரையும் சமாளிக்க முடியாமல் தடுமாற, இன்பவேணி ஆடையை கௌதம் பற்ற நெருங்கிய சமயம் மானவ்வும் ஜோகனும் அவனை ஒன்றாக எத்தி தள்ளினார்கள். கவிழ்ந்து சென்று விழுந்தான் கௌதம்
உதய் முதல்ல சாயா, வேணிய காப்பாத்து என்று மானவ் ஆட்களை பாரபட்சம் பார்க்காமல் வீழ்த்தி தள்ளினான்.
யாருடா இவன்? என இருந்தது கௌதமிற்கு.
கௌதம் உதய்கிருஷ்ணாவிற்கு சண்டை நடக்க, விதார்த்தை சாயாலி அருகே செல்ல விடாமல் பிடித்திருந்தாள் ஷோபனா..
ஜோகன் அவளை இழுத்து பளாரென அறைய, கம்பத்தில் முட்டி அவனுடன் அவள் சண்டை போட…விதார்த் சாயாலியை சுற்றி இருந்த நெருப்பை அணைக்க முயன்று வெற்றியும் கண்டான். ஆனால் அவள் மயங்கி இருந்தாளே!
பைப்பை இழுத்து தண்ணீரை அணைத்தவன் தற்பொழுது அதே நீரை கையில் பிடித்து சாயாலி முகத்தில் தெளிக்க மெதுவாக விழித்த அவளுக்கு வயிறு வலிக்க தொடங்கியது.
சாயாலி கத்த அனைவருக்கும் பயம் தொற்ற, இன்பவேணியும் விதார்த்தும் சேர்ந்து சாயாலியை வெளியே கொண்டு செல்ல ஜோகனை அடித்து போட்டு அவர்கள் முன் வந்தாள் ஷோபனா.
இன்பவேணி கோபமாக, “சீக்கிரம் நீ சாயாவ கூட்டிட்டு போ விது” என சொல்ல, கடினப்பட்டு அவளை மெதுவாக தூக்க அவளது பனிக்குடம் உடைத்து நீர் வெளியேறியது..
பைரவனும் அவன் ஆட்களும் விதார்த்தை அந்நிலையில் கண்டு, அவனுடன் ஒருவரை துணைக்கு அனுப்பி விட்டு உள்ளே வந்து துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டான்..
போலீஸார் அனைவரும் எல்லாரையும் பிடித்து கைது செய்ய, கௌதம் மீது ஏற்கனவே இருந்த குற்றத்தையும், இப்பொழுது அவன் செய்ததையும் வைத்து அவனை சிறையில் தள்ளினர். ஷோபனாவை கஸ்டடியில் வைத்திருந்தான் பைரவன். பிரியங்காவின் தந்தையும் கௌதமின் தந்தையும் ஷோபனாவிற்கும் தண்டனை அளிக்க சொன்னார்கள்.
பைரவனோ உதய்கிருஷ்ணா குடும்பத்தில் உள்ளவர்கள் யாருக்கேனும் ஆபத்து என்றாலும் நீ சிறையில் அடைக்கப்படுவாய் ஜாக்கிரதை என தரமாக ஷோபனாவை மிரட்டி உதய்கிருஷ்ணா எழுதி கொடுத்த கடிதத்தில் கையெழுத்து வாங்கி அவள் தந்தையுடன் அனுப்பி வைத்தான். இனி அவள் என்ன செய்தாலும் அவள் வாழ்க்கையே பாழாகிவிடும் என்பதால் மௌனமாக சென்று விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!