Skip to content
Post Views: 1,842
மனசு 26
மருத்துவமனையில் மகப்பேறு வலியில் போராடிக் கொண்டிருந்தாள் சாயாலி. விதார்த் பதட்டமுடன் குட்டிப்போட்ட பூனையாக அங்குமிங்கும் நடக்க, பாட்டி கோசலை ராமநாதன் என அனைவருக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது.
சண்டையின் போது ஆண்களுக்கு அடிபட்டிருக்க, மானவ் கையில் கட்டுடனும் ஜோகன் தலையில் பேன்டேஜூம் அங்கங்கு உடலில் மருந்துமாக இருந்தான்.
Advertisement
உதய்கிருஷ்ணா கௌதம் சண்டையில் உதய்கிருஷ்ணாவிற்கு அடி அதிகமில்லை என்றாலும் தலை கை காலில் அடிபட்டு, தலைவலியுடன் மருந்தின் உபயோகத்தால் உறங்கிக் கொண்டிருந்தான்.
Advertisement
அவனை பார்த்தவாரே ஜான்வியை அணைத்தவாறு கண்ணீருடன் தன்னவனை விழிநீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இன்பவேணி. சித்ரலேகா அவள் தோள் பற்றி நின்றிருந்தார்..
Advertisement
மானவ்வும் ஜோகனும் உதய்கிருஷ்ணாவை கண்டு பின் சாயாலியை காண சென்றனர்.
Advertisement
குழந்தை சத்தம் கேட்டு அறையருகே சென்றனர்…
குழந்தையை கையில் கொடுத்து, “ஆண் குழந்தை ஆரோக்கியமா இருக்கு சார். ஆனா அம்மா தான் கொஞ்சம் சீரியசா இருக்காங்க” செவிலி பெண் கூறவும் குழந்தையை கையில் வைத்து கதறி அழுதான் விதார்த்.
“சார்…ப்ளீஸ்…அழாதீங்க. சீரியஸ் தான்..கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க” என அவர் சென்றார்.
சற்று நேரத்தில் வெளி வந்த மருத்துவர், “உங்க மனைவி நல்லா இருக்காங்க. போய் பாருங்க..” புன்னகைத்து நகர்ந்தார். அனைவரும் சாயாலியை காண சென்றனர். இன்பவேணி சித்ரலேகாவும் குழந்தையையும் சாயாலியையும் பார்த்தனர். இன்பவேணி மட்டும் உதய்கிருஷ்ணா அறைக்கு வர, அவன் விழித்திருந்தான்..
“ஹனி…” களைப்பான அவன் குரலில் பெண்ணவள் தாங்க மாட்டாமல் கண்ணீர் உதிர்த்தாள்.
“எனக்கு ஒண்ணுமில்ல ஹனி..அழாத..” கரம் நீட்டினான்.
ஓடிச் சென்று அவன் கரத்தில் முகம் புதைத்து கதறி அழுதாள்.
“சாயா…”உதய்கிருஷ்ணா அழைக்க,
முகம் மலர, விது சாயாவுக்கு ஆண்பிள்ளை கிருஷ்..
லேசான புன்னகை அவனிடம்…
“உங்களுக்கு தலைவலி இருக்கா…??” கட்டிட்ட அவன் தலையில் கை வைத்தாள்..
அதிகமில்லை என்று இன்பவேணியை ஆழ்ந்து நோக்கினான்.
கிருஷ்…
“என்னை மன்னிச்சிட்டியா ஹனி…?? என்னால நீ இல்லாம இருக்க முடியாது. இத்தனை வருசமா உயிர்ப்பில்லாமல் தான் வாழ்ந்தேன். என்னை விட்டு போயிட மாட்டேல்ல ஹனி…” ஏக்கமுடன் அவளை பார்த்தான்.
போகல கிருஷ்…உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டேன்..நீங்களும் என்னை மன்னிச்சிருங்க..ப்ளீஸ்…அன்றைய சூழ்நிலை…அவள் பேச தொடங்கினாள்.
அவளது வாயை உதய்கிருஷ்ணா அவன் கையால் அடைத்து, “கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டும் ஹனி. இனி நமக்கான காலம் பொற்காலமா இருக்கணும்னு நினைக்கிறேன்..” ஆசையுடன் அவள் கன்னம் வருடினான்.
மருத்துவர் அவர்கள் அறைக்கு ரவுண்ட்ஸ் வந்தார். அவரிடம் பேசி உதய்கிருஷ்ணாவும் இன்பவேணியும் சாயாலியையும் குழந்தையையும் காண சென்றனர்.
குழந்தையின் முப்பதாவது நாளில் சாயாலி விதார்த் தம்பதியினரின் செல்வபுதல்வனுக்கு மகிழன் என பெயர் சூட்டி ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். அடுத்த மாதமே மானவ் சித்ரலேகா திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அனீஷ் முன் போலில்லாமல் கலகலப்புடன் பேசினான்.
(ஒரு வருடம் கழித்து)
ஆஆஆஆஆ…..அவ்வீடே அதிரும் வண்ணம் கத்தினாள் ஜான்வி.
பதறி வீட்டினர் ஓடி வந்தனர்..
ஜானும்மா…என்னாச்சு? ராமநாதன் பதட்டமாக,
தாத்தா, மகிழ் என்ன கடிச்சு வச்சுட்டான்..ஆஆஆஆ….அழுது கொண்டே ராமநாதனை கட்டிக் கொண்டாள். அழுகை நிற்கவேயில்லை. சாயாலி விதார்த் உதய்கிருஷ்ணாவும் வந்து மகளை சமாதானப்படுத்த,
மகிழ் அக்காவ கடிப்பியா? மகிழன் வாயிலே சாயாலி அடிக்க,
மகனை தூக்கிய உதய்கிருஷ்ணா, “சாயா எதுக்கு மகிழ்குட்டிய அடிக்கிற? அடிக்காம சொல்லு…” அதட்டினான்.
“மாமா, மகிழுக்கு ரொம்ப செல்லம் குடுக்குறீங்க” உதய்கிருஷ்ணாவிடம் கோபமானாள்.
உதய்கிருஷ்ணா சத்தம் போட்டும் ஜான்வி அழுகையை நிறுத்தவேயில்லை.
கோசலை அனீஷூடன் வந்தார்..
“ஜானு….” அழுத்தம் கலந்த கோபக்குரலில் பட்டென வாயை மூடிக் கொண்டாள் ஜான்வி. அனீஷின் அதட்டலே ஜான்வியை அமைதிபடுத்தும்.
“இங்க வா…” அனீஷ் அழைக்க, அனைவரும் சிரிப்புடன் வேடிக்கை பார்த்தனர்.
பொம்மை போல அனீஷிடம் ஓடி, “மாமா..மகிழ் கடிச்சு வச்சுட்டான்” அவனிடம் ஜான்வி மகிழனை கம்பிளைன்ட் செய்தாள்.
எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து ஜான்வி கை பிடித்து கீழிருந்த பாட்டி தாத்தா அறைக்கு அழைத்து சென்றான் மானவ். வலியில் சுருங்கிய முகத்துடன் அழுகையை அடக்கி ஜான்வி அனீஷ் பின் சென்றாள்.
ஜான்வியை படுக்கையில் அமர வைத்து, நாற்காலியை எடுத்து அதன் மீது ஏறிய அனீஷ் களிம்பு எடுத்து அவளருகே அமர்ந்து ஊதி ஊதி போட்டு விட்டான்.
ஷ்ஷ்ஷ்…காய எரிச்சலில் சத்தமிட்ட ஜான்வி அழ,
“ம்ம்! எதுக்கு சத்தம் போடுற?” பெரியவன் போல அவளை அதட்டி உருட்டி சாக்லேட்டை அவள் வாயில் போட்டு சமாதானப்படுத்தினான்.
அனீஷின் செய்கையில் அனைவரும் புன்னகை முகமாக இருவரையும் பார்க்க,
மாமா மகிழ அடி..
மகிழ் உன்னோட தம்பி. அவன் உன்னோட விளையாடுறதா நினைச்சு கடிச்சி வச்சிட்டான். இதுக்கு அடிக்கலாமா?
இல்லை..தலையசைத்தாள்.
“குட் கெர்ல்” அவன் கன்னம் தட்டினான் அனீஷ்.
விதார்த் உதட்டை மடித்து சிரிப்பை அடக்க, புறங்கையால் சாயாலி அவன் வயிற்றில் செல்லமாக இடித்தாள்.
அண்ணா, பட்டுக்கு அனீஷ் ரூட்டு விடுறான்…
சிரிப்புடன், “அனீஷ் ரூட்டு விடல. அக்கறையா பாத்துக்கிறான்” என்றான் உதய்கிருஷ்ணா.
“மாமா, கண்டிப்பா நம்ம வீட்டு மூத்த மருமகனா அனீஷ் தான் வருவான்” சாயாலி குறுஞ்சிரிப்புடன் கூறினாள்.
“இப்ப என்னவாம் சாயா? இந்த வீட்டு மருமகன் தான் என் பேரன்” சிலாகித்தார் கோசலை.
“அதுவும் சரிதான்” ராமநாதன் கூற, எல்லாரும் அவரை பார்த்தனர்.
“இங்க என்ன கூட்டம் போடுறீங்க?” உதய்கிருஷ்ணா தாத்தா பாட்டி வந்தனர். அனீஷ் கரம் பற்றி வந்தாள் ஜான்வி..
“ஒண்ணுமேயில்ல தாத்தா” ஒற்றை புருவம் உயர்த்தி குறும்புடன் விதார்த் உதய்கிருஷ்ணா பார்த்து கண்ணடித்தான்.
மா..மா…சாயாலி கையிலிருந்து அனீஷிடம் தாவினான் மகிழன். ஜான்வி கோபித்து வெளியே செல்ல, உள்ளே வந்த மானவ் ஜான்வியை தூக்கி போட்டு கொஞ்சினான்.
“அய்யோ!! ஜானுவ விடுங்க. அவ பயப்புடுவா” அவன் தோளில் அடித்தாள் சித்ரலேகா.
“மாமா…” உதடு பிதுக்கி ஜான்வி சித்ரலேகா மானவ்வை பார்த்தாள்.
விதார்த் சத்தமாக சிரித்து, “பட்டு உன்னோட அத்த மாமாட்ட அனீஷை கம்பிளைண்ட் பண்ணப் போறீயா?” மேலும் சிரித்தான்.
“சித்தா…” ஜான்வி மானவ்விடமிருந்து இறங்கி ஓடி வந்து விதார்த் காலில் அவளது தளிர் கரத்தால் குத்தினாள்.
உதய்கிருஷ்ணாவிற்கு அழைப்பு வர, “ரூமில இருந்துட்டு இவ என்ன கால் பண்றா?” முணங்கியவாறு உதய்கிருஷ்ணா மாடி நோக்கி நடக்க, “என்ன அண்ணா காலையிலயே ரொமான்ஸா?” குறுஞ்சிரிப்புடன் கேலியுரைத்தான் விதார்த்.
புன்னகையுடன் முதற்படியில் கால் வைத்த உதய்கிருஷ்ணாவை படபடவென சிறுபிள்ளை போல் துள்ளலுடன் வந்த இன்பவேணி தழுவிக் கொண்டாள்.
“அய்யோ!! நாங்கல்லாம் இருக்கோம். பேமிலி முன்னாடியே ரொமான்ஸா?” விதார்த் இன்பவேணியை கலாய்க்க, அவள் எங்கே அவன் பேச்சை காதில் வாங்கினாள்.
“கிருஷ் கிருஷ்…” மகிழ்ச்சியுடன் குதித்து அவன் தோளில் உப்பு மூட்டை ஏறினாள் இன்பவேணி..
“ஆத்தாடி, உன்னோட குரங்கு சேட்டைய ஆரம்பிச்சிட்டியா?” கோசலை மகளை நெருங்க, அதற்கு உதய்கிருஷ்ணா காதில் இன்பவேணி ஏதோ கிசுகிசுத்து அவள் கைலியிலிருந்ததை காட்டினாள்.
“ஆன்ட்டி…வெயிட் வெயிட்” என கோசலை இன்பவேணியை அடிக்க விடாமல் தடுத்து அவளை முன் இழுத்து இன்பவேணி முகம் பார்த்து, “நிஜமாவா?” ஆசையுடன் அவள் விழிகளை நோக்கினான்.
முகச்சிவப்புடன், “ஆமா கிருஷ்..” உற்சாகம் மிகுந்த குரலில் கத்தினாள்.
“யாகூ….” என கூச்சலிட்டு உதய்கிருஷ்ணா இன்பவேணியை தூக்கி சுற்றினான்.
பெண்கள் வெட்கமுடன் முகத்தில் கை வைக்க, அதை கவனித்து இன்பவேணியை இறக்கி அவள் கரம் பற்றிக் கொண்டான்.
“நம்ம வீட்டுக்கு இன்னொரு பட்டு வரப் போறங்க” ஆர்ப்பரித்தான் உதய்கிருஷ்ணா.
மகிழ்வுடன் வீட்டினர் இருவருக்கும் வாழ்த்து தெரிவிக்க, பெண்கள் இருவருக்கும் ஸ்வீட் ஊட்டினர். இன்பவேணியிடம் பழைய குறும்பு தலை தூக்க அவளை சுற்றியுள்ளவர்களையும் தன் உயிரானவனையும் மகிழ்வித்து அவர்கள் வாழ்க்கையை சிறக்க வைத்தாள்.
(முற்றும்)
error: Content is protected !!