Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ 23 (இரண்டாம் பாகம்)

மதுரை

அர்ஜுனனிடம் அதிவீரன் அவனை பார்க்க அவன் வீட்டார் விரும்புவதை பற்றி கூறிக்கொண்டு இருந்தான்….

 

அர்ஜுனன்  கேட்டுக் கொண்டு அமைதியாகவே அமர்ந்திருந்தான் அதை பார்த்து “ஏன் அர்ஜுன் அமைதியாக இருக்கீங்க உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் பாக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா” என்று கேட்டான்…..

 



Advertisement

 “இல்ல எனக்கு முழுசா ஞாபாகம் வரட்டுமே….” என்று கூறினான்….

 

 

Advertisement

“ஓகே யுவர் விஷ்…. பட் உங்க பொண்ணு ரொம்ப அழுதுட்டு இருக்காங்க…. அவங்க ரொம்ப பாவம் இல்லையா…. அம்மாவும் இல்லாம அப்பாவும் இல்லாம இத்தனை நாள் இருந்து இருக்காங்க… இப்போ உங்களை டிவில பார்த்ததும் அப்பா கிட்ட போறேன்னு ஒரே அடம்…. சின்ன பொண்ணு தான் இல்லையா…. அவங்களை  பத்தியும் யோசிங்க…” என்று கூறிவிட்டு அதி சென்றுவிட்டான்…

Advertisement

 

 

அர்ஜுனனுக்கு போக வேண்டும் என்று தோன்றவில்லை… அவனுக்கு முழு ஞாபாகம் வந்தால் தான் போக வேண்டும் என்று முடிவு எடுத்து இருந்தான்….

Advertisement

 

 

 

ரித்திகாவிற்கு தற்போது நடக்கும் பிரச்சனை பற்றி அவளுக்கு தெரியவில்லை….  அதனால் அர்ஜுனனிடம் “அப்பா வெளிய போலாம்னு சொன்னிங்க…. வாங்க போலாம்..” என்று கூறி அழைத்தாள்….

 

 

அவனும் அவனுடைய மனதை மாற்ற ரித்திகாவுடன் பக்கத்தில் இருக்கும் பார்க் சென்றுவிட்டான்…. அங்கு தான் நிரவி குட்டி அழுது கொண்டு இருந்ததால் சசி சமாதானம் செய்து கொண்டு இருந்தான்….

 

 

அர்ஜுனன் அவர்களை காணவில்லைஆனால் மிரவி குட்டி இருவரையும் பார்த்துவிட்டாள்அதை பார்த்து மேலும் அழுக ஆரம்பித்துவிட்டாள்… “சசிப்பா அப்பாவுக்கு நான் வேண்டாமா…. அம்மாவும் அண்ணாவும் நான் வேண்டாம்னு போயிட்டாங்கஇப்போ அப்பாவும் நான் வேண்டாம்னு அந்த அக்கா கூட இருக்காங்கஎனக்கு அப்பா வேணும்” என்று அழுது கொண்டே கூறினாள்….

 

 

சசிக்கு என்ன கூறி அவளை சமாதானம் செய்வது என்று தெரியவில்லைசிறுபிள்ளையிடம் என்ன கூறி சமாதானம் செய்வது… “குட்டிமா இங்க பாருங்க அழுகை கூடாதுநிரவி குட்டி ப்ரேவ் கேர்ள்அழுகலாமாஅழுகாதீங்க நாம தோப்பு வீட்டுக்கு போகலாமாஅங்க போய் நாம விளையாடலாம்உங்களுக்கு நான் க்ரில் சிக்கன் செஞ்சு தரேன்அழுக கூடாதுஎன்று சமாதானம் கூறி அவளை பார்க்கில் இருந்து அழைத்து சென்றான்

 

 

நிரவி குட்டி அழுது கொண்டே சசியின் தோளில் தூங்கிவிட்டாள்அனைவரும் காரில் அமர்ந்து இருக்க சசி குழந்தையோடு முன் சீட்டில் அமர்ந்து கொண்டான்மித்ரா அவனிடம்பாப்பா ரொம்ப அழுதாளாமுகம் எல்லாம் வீங்கி போய் இருக்கு….” என்று கேட்டாள்….

 

 

“கொஞ்சம் சமாதானம் ஆகிட்டாஆனா அப்போ அண்ணாவும் எதார்த்தமா அங்க அந்த பொண்ணோட வந்துட்டாங்கஅதை பார்த்து என்னை ஏன் எல்லாரும் வேண்டாம்னு சொல்லிட்டாங்கனு அழுக ஆரம்பிச்சிட்டாஎதோ சொல்லி சமாதானம் பண்ணி தட்டி கொடுத்தேன்தூங்கிட்டாஇன்னும் எத்தனை கஷ்டம் பாக்க போறாளோ தெரிய….”  என்று கூறி அவனும் சீட்டில் சாய்ந்து கொண்டான்….

 

 

அனைவருக்கும் மனம் கனத்து போய் தான் இருந்ததுமதுரையில் இருந்து அனைவரும் மன தாங்கலுடன் தான் அய்யனார்புரம் நோக்கி சென்றனர்.. அங்கு சென்ற பின்பும் யாரும் யாரிடமும் பேசாமல் அமைதியாக அவரவர் அறைக்குள் சென்று மூழ்கிவிட்டனர்….

 

 

*************************************************************************************************************************************

 

ரேவதியின் குடும்பமும் விடைபெற்று சென்று இருக்க தாயும் மகனும் மட்டும் அந்த வீட்டில் இருந்தனர்ஆரவ் எதுவும் சுபாவிடம் பேசவில்லை அமைதியாக அவள் மடியில் படுத்து கொண்டான்

 

சுபா ஆரவிடம்ஏன் தம்பி அமைதியா இருக்க..” என்று அவனின் தலையை தடவி கொடுத்தவாறு கேட்டாள்

 

 

அவனோஅப்பாவை பாக்கனும் போல இருக்கு ம்மாநீ ஏன் அப்பாவை பாக்க போக வேண்டாம்னு சொன்னஎன்று கேட்டான்

 

 

“தம்பி நாம போனாலும் அப்பாவுக்கு நாம யாருனு தெரியாதுஅப்பாவுக்கு எல்லாம் மறந்து போய் இருக்குகண்டிப்பா அப்பா ஒரு நாள் நம்ம கிட்ட வருவாருநீ தூங்கு தம்பி நாளைக்கு ஸ்கூல் போலாம்” என்று கூறி அவனுக்கு தட்டி கொடுத்தாள்….  அவளும் அர்ஜுனன் நினைவில் அப்படியே உறங்கிவிட்டாள்… 

 

 

***************************************************************************************************************************

 

கண்மணியும் முகுந்தனும் வீட்டிற்கு சென்று இருக்க கண்மணியின் அம்மா அர்ஜுனனை பார்க்க சென்றது அவன் கூறியது நிரவி குட்டி சசியிடம் பேசியது அழுதது அனைத்தும் கூறிவிட்டுகடவுள் புண்ணியத்துல அர்ஜுனன் தம்பி உயிரோட தான் இருக்குஞாபகம் வந்ததும் வீட்டுக்கு வந்துடும்.. ஆனா சுபா எங்க இருக்காளோ எப்படி இருக்காளோ தெரியலதம்பி ஞாபகம் வந்து சுபா எங்க இருக்கானு தெரியலசீக்கிரம் அவளும் கிடைச்சிட்டா நம்ம அய்யனாருக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கணும்என்று கூறி சென்றுவிட்டார்

 

************************************************************************************************************************************

 

நாட்கள் அதன்போக்கில் செல்ல நிரவி குட்டியும் கார்த்திகாவும் பரதநாட்டிய போட்டியில் கலந்துகொள்ள கேரளா செல்லும் நாளும் வந்தது…. இருவருடனும் கண்மணி சிவனேஸ் இருவரும் சென்றனர்…. 

 

சுபா தன் மகள் மருமகன் மருமகள் மூவரையும் ஆசை தீர பார்த்து கொண்டாள்ஆனால் அவர்களிடம் நெருங்கவில்லை

 

 

இரண்டு நாட்கள் அங்கு தங்கினர் நால்வரும்சுபா தன் கையால் பார்த்து பார்த்து தன் மகளுக்கு சமைத்து கண்மணி உதவியுடன் அவளை சாப்பிட வைத்துவிட்டாள்நிரவிக்கு அம்மாவின் கைப்பக்குவம் என்று எல்லாம் தெரியவில்லைஅதை விரும்பி உண்டாள்….

 

 

ஆனால் கார்த்திகா சிவனேஸ் இருவருக்கும் அது சுபாவின் கைப்பக்குவம் என்று தெரிந்ததுஆனால் அதை அவள் சமைத்தாள் என்று எல்லாம் யோசிக்கவில்லைஅவனின் நினைவு தோன்றி மறைந்தது இருவருக்கும்வெளியே யாரிடமும் கூறவில்லை….

 

 

பரதநாட்டியம் போட்டி நல்ல படியாக முடிய போட்டியில் முதல் பரிசு கார்த்திகாவும் மூன்றாவது பரிசு நிரவியும் பெற்றனர்…. இவர்களுடன் அவர்களின் பரத ஆசிரியையம் வந்து இருந்தார்கார்த்திகா மற்றும் நிரவியை அவருடன் இருக்க கூறிவிட்டு சிவனேஸை அழைத்து கொண்டு கண்மணி மட்டும் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றாள்….

 

 

சிவனேஸ் கோவிலுக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டான்அதனால் பக்கத்தில் இருக்கும் கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி கொண்டு இருந்தான்கண்மணியும் அவனை கட்டாயப்படுத்தாமல் கோவிலுக்கு சென்றுவிட்டாள்அவளுக்கு முன்பாகவே அங்கு சுபா நின்று கொண்டு இருந்தாள்பத்து நிமிடம் அவளிடம் பேசிவிட்டு அவளை பதித்திரமாக இருக்க சொல்லிவிட்டு சிவனேஸை அழைத்து கொண்டு கார்த்திகா நிரவி இருக்கும் இடம் சென்றாள்

 

 

அனைவரும் சந்தோஷமாகவே வீட்டிற்கு கிளம்பி சென்றனர்அதன் பின் நாட்கள் ரெக்கை கட்டி கொண்டு பறந்து ஒரு மாதம் முடிவடைந்து இருந்தது… 

 

ஆனால் யார் வாழ்க்கையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லைஅனைவரும் சுபாவை தேடிக் கொண்டு இருந்தனர்அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு எந்த தடையும் முகுந்தன் சொல்லவில்லைஅவர்களுடன் அவனும் தேடுவது போல் நடித்து கொண்டு தான் இருந்தான்

 

 

மதுரையில் அர்ஜுனனுக்கு முழுதாக ஞாபகம் வந்து இருந்தது…. இருந்தும் அவன் சுபாவை பார்க்க செல்லாமல் இருந்தான்…

 

 

அதனால் அதி அவனிடம்  உங்களுக்கு தான் ஞாபாகம் எல்லாம் வந்துடுச்சே ஏன் இன்னும் எதுவும் பண்ணாம இருக்கீங்கஉங்க வைப் கிட்ட போய் பேசலாம்உங்க வீட்டுல எல்லாரும் உங்களை தான் எதிர்பார்த்துட்டு இருப்பாங்ககண்டிப்பா உங்க மனைவிக்கும் நீங்க இருக்குற இடம் கண்டிப்பா தெரிஞ்சி இருக்கும்ஆனா அவங்களும் உங்களை தேடி வரல ஏன்” என்று கேட்டான்…

 

 

நான் வரனும்னு நினைச்சிட்டு இருப்பாஇன்னும் ஒரு வாரத்துல அவளுக்கு பிறந்தநாள் வருது அன்னிக்கு அவளை பாக்க போகலாம்னு இருந்தேன்இன்னும் ஒரு வாரம் தான் அதுக்கு அப்பறம் அவளை கஷ்டப்படவே விடமாட்டேன்…” என்று அர்ஜுனன் கூறினான்

 

ரித்திகாவை உங்க மனைவி ஏத்துப்பாங்களா…” என்று அதி கேட்டான்

 

 

கண்டிப்பா ஏத்துப்பாஎன் குடும்பத்துலையும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க….” என்று உறுதியாக கூறினான்

 

 

ஒருவாரம் காற்றாய் ஓடி இருந்தது…. நாளை சுபாவின் பிறந்தநாள்அவளை காண ரித்திகாவை அழைத்து கொண்டு அர்ஜுனன் கேரளாவை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டான்

 

 

இங்கு அய்யனார்புரத்தில் முகுந்தன் வேண்டுமென்றே சுபா இருக்கும் இடம் வீட்டில் தெரியப்படுத்தி இருந்தான் வேறு ஒருவர் மூலம்எனவே அவர்களும் அவளை காண கேரளா கிளம்பி இருந்தனர்….

 

 

இரவு பன்னிரண்டு ஆக சரியாக ஐந்து நிமிடம் இருக்க அர்ஜுனன் சுபா இருக்கும் வீட்டின் கதவை தட்டினான்.. அவனுக்கும் படபடப்பாக தான் இருந்ததுஇடைப்பட்ட ஆண்டுகளில் எது எதுவோ நடந்து இருந்ததுஎப்படி அவளை எதிர்கொள்வது என்று தெரியாமல் தான் இருந்தது….

 

 

இந்த நள்ளிரவில் யார் கதவை தட்டுவது என்று பயந்து சுபா கதவை திறக்காமல் அமர்ந்து இருந்தாள்

 

 

சுபா கதவை திறப்பாளா ?!?!?!?! அர்ஜுனனை கண்டால் எவ்வாறு அதை எடுத்துக்கொள்வாள்?!??!?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!