Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 11

இவர்கள் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் கர்ணன் வீட்டினுள் நுழைந்தான்…. அவன் வருவதை பார்த்த நந்தினி “சாப்டியா கர்ணா… சசி என்ன பண்றான்???” என்று கேட்டாள்…

“அக்கா நான் சாப்டுட்டேன்… அண்ணா இப்ப தான் எழுந்தது.. அண்ணாவோட டாக்குமென்ட்ஸ் எடுத்துட்டு வர சொல்லிச்சு” என்று கூறினான்..



Advertisement

“கர்ணா நீ எங்கயும் போக கூடாது… அவங்களுக்கு வேணும்னா வந்து எடுத்துட்டு போகட்டும்… போய் குழந்தைகளை பாத்துக்கோ” என்று காட்டமாக கூறினாள் சுபா…

அவனும் தயங்கிக் கொண்டே “அண்ணிணிணி” என்று இழுத்தான்…

“சொல்றதை செய் கர்ணா போ” என்று அழுத்திக் கூறினாள்….

Advertisement

அவன் செல்ல முற்படும் போது அர்ஜுனன் “நில்லு கர்ணா… இங்க பாரு சுபா அவனுக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்… அவனோட உணர்வையும் மதிக்கனும்… நீ அவனை உன் இஷ்டத்துக்கு படுத்தாத… அவன் நாளைக்கு பெங்களூரு போறான்…

Advertisement

போனா தான் அவனுக்கு அங்க ஒர்க்கா இல்ல கேரளவானு தெரியும்… ஒரு சிக்ஸ் மந்த்ஸ் அவன் ஒர்க் பண்ணட்டும்… அதுக்கு பிறகு பாக்கலாம்” என்று சற்று கோவமாகவே கூறினான்…

அவளும் கோபத்துடன் எதுவும் பேசாமல் கீழ் இருக்கும் அறைக்கு சென்று விட்டாள்… அவளுக்கு பின் செல்ல போன நந்தினியை நிறுத்தி “க்கா நேத்து சசிகிட்ட பேசுனேன்… அவன் கொஞ்ச நாள் தனியா இருக்கனும்னு சொன்னான்.. அதுனால அவன நான் கிளம்ப சொல்லிட்டேன்… நாளைக்கு காலைல அவன் கிளம்புறான்… அவன்கிட்ட எடுத்த பொருள்ல ஒருத்தங்களை தர சொல்லு க்கா…” என்று கூறினான்

அவன் கூறி முடிக்கும் முன் சசியின் மோதிரத்தை அர்ஜுனன் முன் எறிந்திருந்தாள் சுபா… அர்ஜுனன் கோபத்துடன் பார்க்க வாணனே அதட்டி இருந்தான்… “பாப்பா என்ன இது… இப்படியா தூக்கி போடுவ??” என்று அதட்டினான்…

Advertisement

“போங்க எல்லாரும் அவன் தனியா இருக்கனும்னு சொல்றிங்க… அவன் தனியா இருந்தா நடந்ததை மட்டும் தான் யோசிப்பான்… அவன் இந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னா அப்படியே போன்னு சொல்லிடுவீங்களா…. அவன் எங்கயும் போக கூடாது… அவனை வீட்டுக்கு வர சொல்லுங்க” என்று கூறி அந்த இடத்துலேயே அமர்ந்து கதறிவிட்டாள்…

அர்ஜுனன் வேகமாக சென்று அவளை தூக்கி கொண்டு அங்கிருக்கும் அறைக்கு சென்றான்…

அவனிடமும் “மாமா அவனை எங்கயும் போக சொல்லாத மாமா…” என்று கூறியதையே கூறிக்கொண்டு இருந்தாள்…

அர்ஜுனன் பயந்துவிட்டான்… இவளிடம் இது பற்றி நேற்றே பேசி இருக்க வேண்டுமோ… அதையே யோசித்து இப்போது இவளுக்கு பிபி அதிகமாகி விடுமோ… என்று….

அதனால “அம்மு அம்மு இங்க என்ன பாருடா…அவன் நல்லா தான் இருக்கான்… அவன் எல்லாத்துல இருந்தும் மீண்டுடுவான்….. நாங்க இல்ல.. அதைவிட அவனோட பெஸ்ட் ப்ரண்ட் நீ இல்ல… அவன் போகட்டும் டா… வர அப்ப புது சசியா.. உன்னோட பழைய சச்சுவா வருவான்..

நீ பேசு அவன்கிட்ட…. அவன்கூட நீ பேசுனா அவனும் கொஞ்சம் நார்மல் ஆவான்… நீ டென்ஷன் ஆகாத அம்மு… ப்ளீஸ் டா உனக்கு எதோ ஆகிட போகுது… எனக்கும் தம்பிக்கும் நீ வேணும்டா… என் தங்கம்ல அழாத..” என்று அவளின் உச்சியில் முத்தம் வைத்து அவளை அமைதி படுத்தினான்…

அவளின் அழுகை விசும்பலாக மாறி இருந்தது… “மாமா அவனை நான் பாக்கனும்” என்று அர்ஜுனனிடம் கூறினாள்…

“சரிடா போகலாம்… கொஞ்ச நேரம் தூங்கி நார்மல் ஆகு… அப்பறம் நானே கூட்டிட்டு போறேன்டா” என்று கூறி அவளை அமைதிப்படுத்தி உறங்க வைத்தான் அர்ஜுனன்…

அவளும் அவனை அணைத்து கொண்டு தூங்கி இருந்தாள்… சிறிது நேரம் அவளையே பார்த்து கொண்டு இருந்துவிட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வெளியே வந்தான் அர்ஜுனன்…

அனைவரும் கவலையாக அமர்ந்து இருந்தனர்.. அர்ஜுனன் வெளியே வந்தவுடன் நந்தினி அவனிடம் “சுபா என்ன பண்றா அர்ஜுன்???” என்று கேட்டாள்…

“தூங்கிட்டா க்கா…. சசியை நினைச்சி ரொம்ப கவலை படுறா.. அதுமட்டும் இல்லாம ப்ரெக்னசி மூட் ஸ்விங் வேற இந்த தடவ அதிகமா இருக்கு… அதனால ரொம்ப கோவமும் வருது அதே மாதிரி அழுகையும் வருது… இப்ப தூங்கட்டும்.. மதியம் மேல சசிய பார்க்க கூட்டிட்டு போறேன்” என்று கூறிவிட்டு வாணனுக்கும் வர்ணனுக்கும் தலை அசைத்துவிட்டு வெளியேறி விட்டான்

வாணனும் வர்ணனும் உள்ளே சென்றனர் சுபாவை பார்க்க… அழுது வீங்கிய முகத்துடன் தூங்கிய தங்களுடைய பாசமலரை பார்த்து இருவரும் கலங்கி நின்று இருந்தனர்…

(இதற்கே இப்படி கலங்கினால் இனிமேல் அவள் அழுகும் அழுகைக்கு என்ன செய்வீர்கள் என்று விதி அவர்களை பார்த்து சிரித்தது!!!!)

இவர்களுக்கு பின்னே வந்த நந்தினியும் ஜனனியும் இருவரின் கலங்கிய முகத்தை பார்த்து தலையில் அடித்து கொண்டு “எதுக்கு இப்படி அழகுற மாதிரி மூஞ்ச வெச்சிட்டு இருக்கீங்க… அவ தூங்கட்டும்… தொந்தரவு பண்ணாம வாங்க” என்று நந்தினி கூறினாள்..

அதற்கு ஜனனியும் ஆமோதித்து விட்டு “வாங்க அவ தூங்கட்டும்” என்று கூறிவிட்டு நந்தினியுடன் வெளியேறி விட்டாள்…

பாசமலர்கள் இருவரும் அவளின் தலையை தடவிவிட்டு உச்சியில் முத்தமிட்டுவிட்டு வெளியே வந்தனர்.. தங்கள் மனைவிமாரிடம் வெளியே சென்று வருகிறோம் என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டனர் பாசமலர்கள்…

குழந்தைகளை கர்ணன் பார்த்துக்கொண்டு ஹாலில் அமர்ந்து இருந்தான்.. அப்போது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது… புது எண்ணாக இருக்க யோசனையுடன் அழைப்பை ஏற்று பேசினான்…

இவன் பேசுவதற்குள் அந்த பக்கம் இருந்து ஒரு பெண் குரல் “ஐ லவ் யூ கர்ணா…. ” என்று கூறி உடனே கட் செய்துவிட்டது….

இங்கு இவனோ “ஹெலோ ஹெலோ யாரு பேசுறது” என்று கத்திக்கொண்டு இருந்தான்… அழைப்பு துண்டிக்க பட்டதை அறிந்து மீண்டும் அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்…

ஆனால் அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என வந்தது… இவனை பார்த்து கொண்டு இருந்த நந்தினி கர்ணனிடம் “என்ன ஆச்சு கர்ணா…  யார் கால் பண்ணா ???” என்று கேட்டாள்…

“க்கா யாருனே தெரியல… நீயே கால் ரெகார்டிங்ல கேளு” என்று அழைப்பின் பதிவை போட்டு காட்டினான்..

“டேய் யாருடா இது ஒரு பொண்ணு உனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்கு… இந்த வாய்ஸ் கேட்ட மாதிரியே இருக்கு டா… யாருடா இது… உன் ஸ்கூல் காலேஜ் ப்ரண்ட்ஸ் யாரோ இருக்குமோ????”…

“க்கா இல்ல என் ஸ்கூல் காலேஜ் ப்ரண்ட்ஸ் இல்ல.. அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு.. எனக்கும் இந்த வாய்ஸ் கேட்ட மாதிரி தான் இருக்கு யாருனு தெரியல… நேத்து வாய்ஸ் மெசேஜ் வந்தது…

ஆனா நேத்து வீட்டுல நடந்த பிரச்சனையை நினைச்சிட்டு இதை பெருசா கண்டுக்கல” என்று கூறினான்…

“சரி விடுடா இன்னொரு டைம் கால் பண்ணா பாத்துக்கலாம்… குழந்தைகளை தூக்கிட்டு வா.. எல்லாம் மட்டை ஆகிடிச்சுங்க… நீயும் தூங்கு இவங்களோட” என்று கூறி அவள் கார்த்திகாவை தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல கர்ணன் சிவனேஸையும் ஜனனி ஆரவையும் அழைத்து கொண்டு அறையினுள் சென்றனர்….

கர்ணன் குழந்தைகளுடன் தூங்க ஆயத்தமாக ஓரகத்திகள் இருவரும் சமைக்க சமையலறை சென்றனர்

மதியம் அர்ஜுனன் வீட்டிற்கு வரும் வரை சுபா தூங்கி கொண்டு தான் இருந்தாள்… அவன் வந்த பின் தான் அவளை எழுப்பி முகம் கழுவி வர கூறிவிட்டு அவனும் கழுவிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்…

குழந்தைகளை ஜனனி பார்த்துக்கொள்ள கர்ணன் இன்னும் தூங்கி கொண்டு தான் இருந்தான்…

அவனை எழுப்பி பார்த்த நந்தினி அவன் அசந்து தூங்குவதை பார்த்துவிட்டு அவனை எழுப்பாமல் வெளியே வந்துவிட்டாள்…. வாணனும் வர்ணனும் இன்னும் வெளியே வரவில்லை…

அவர்களுக்கு அழைத்தால் முக்கிய வேலையாக வந்துள்ளோம் நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறி வைத்து விட்டனர்….

அதனால் நந்தினி இருவருக்கு மட்டும் பரிமாறினாள்… ஆனால் அர்ஜுனன் அதை தடுத்துவிட்டு நந்தினி ஜனனி இருவரையும் அழைத்து அவர்களையும் உண்ண கூறிவிட்டு குழந்தைகள் மூவரையும் கண் பார்வையில் வைத்துக்கொண்டு உண்ண ஆரம்பித்தனர்…

எதோ யோசனையில் சாப்பிடாமல் இருந்த சுபாவிற்கு அர்ஜுனன் ஊட்டிவிட எந்த மறுப்பும் கூறாமல் சாப்பிட்டாள்…

உண்டு முடித்தவுடன் நந்தினி ஜனனியிடம் தெரிவித்து விட்டு சுபாவை அழைத்து கொண்டு அவனுக்கான உணவை எடுத்து கொண்டு தோப்பு வீட்டிற்கு சென்றான்…

தோப்பு வீட்டில்…

சசிகுமார் காலை உணவை உண்டுவிட்டு தன் நண்பனிடம் பேசி கொண்டு இருந்தான்…

“மச்சான் நாளைக்கு இங்க இருந்து கிளம்புறேன்… ஈவினிங் அங்க வந்துடுவேன்… கொஞ்ச நாள் உன்கூட அங்க ப்ராக்டிஸ் பண்ணிட்டு கேரளா போறேன் டா” என்று கூறினான்…

அவன் நண்பனோ “ஓகே மச்சா.. நீ பெங்களூரு ரீச் ஆனதும் கால் பண்ணு வந்து பிக்அப் பண்ணிக்குறேன்… ஓகே மச்சா பை நாளைக்கு பாக்கலாம்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்…

அவன் நண்பனிடம் பேசிவிட்டு சிறிது நேரம் கட்டிலில் படுத்துக்கொண்டு நேற்று நடந்ததை நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருந்தான்…

அப்போது ஜீப்பின் சவுண்ட் கேட்டது.. அதிலிருந்து கீழே இறங்கிய அர்ஜுனனை பார்த்து சந்தோஷம் அடைந்த முகம் அடுத்த பக்கம் இருந்து இறங்கிய சுபாவை பார்த்து சோகமாகியது…

அவளின் முகத்தையே பார்த்து கொண்டு நின்று இருந்தான் சசிகுமார்…. மெதுவாக நடந்து சென்று அவன் படுத்து இருந்த கட்டிலில் அவள் அமர அர்ஜுனோ தென்னை மரத்தில் சாய்ந்து நின்று இருந்தான்…

இவன் இரண்டு அடி தள்ளி நின்று அவளின் முகத்தையே பார்த்து இருந்தான்… அவளோ கீழே குனிந்து அமர்ந்து இருந்தாள்… சிறிதுநேரம் அமைதியே ஆட்சி செய்தது அந்த இடத்தில்…

பின் சுபா தன் கணவனின் முகத்தை பார்த்தாள்… அவனோ பேசு என்று கண்காட்டினான்… பின் மெதுவாக சசியை பார்த்து “சச்சு” என்று அழைத்தாள்…

அதை கேட்டு அவளின் கால் அடியில் அமர்ந்து அவளின் மடியில் தலைவைத்து கதறிவிட்டான் சசிகுமார்… மூன்று வருடம் ஆகிறது சுபா இவனிடம் பேசி…

அவன் அழுவதை பார்த்து அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருந்தது… நண்பர்களின் பாச போராட்டதை மரத்தில் சாய்ந்து நெகிழ்ச்சியுடன்  பார்த்துக்கொண்டு இருந்தான் அர்ஜுனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!