Skip to content
Post Views: 4,968

கிரிஜா உண்டாகி அடுத்த நான்கு மாதத்தில் பார்வதியும் உண்டாகிருந்தார்… பார்வதி கொஞ்சம் சிந்தியாவின் முக ஜாடையில் இருப்பார்… அதனால் அர்ஜுனன் அவரிடம் நன்றாக ஒட்டி கொண்டான்…
அவரிடம் காட்டும் பாசத்தில் பாதி அளவு கூட கிரிஜா பாலாவிடம் அவன் காட்டவில்லை… அவனுக்கு எப்போது அவனின் பாரு அத்தை ஸ்பெஷல் தான்…
Advertisement
பார்வதியும் அவன் மேல் பாசமாக தான் இருப்பார்… நாட்கள் அழகாக நகர்ந்தது…. கிரிஜாவுக்கு சசிகுமார் பிறந்து அடுத்த நான்கு மாதத்தில் பார்வதிக்கு சுபத்திரா பிறந்து இருந்தாள்…
பட்டு மேனியாளை பார்த்தவுடன் பொம்மை போல் உணர்ந்தான்… அவளுக்கு பெயர் வைத்ததே அர்ஜுனன் தான்… அவனுக்கு பட்டு பாட்டி எப்பொழுதும் உறங்கும் போது மகாபாரத கதை கூறுவார்..
அதை கேட்டு விட்டு பரமசிவன் பார்வதியிடம் ஒரே அடம் அர்ஜுனன்… “அத்த பாப்பாவுக்கு சுபத்திரா வை” என்று கூறி மிகவும் அடம்பிடித்து அழுது கொண்டிருந்தான்…
Advertisement
கிரிஜாவின் அம்மாவிற்கு கோவம்… அவர்கள் ஏற்கனவே ஒரு பெயரை தேர்வு செய்து வைத்திருந்தனர்… அதனால் பாலாவிடம் சென்று “மாப்பிளை உங்க பையன் ரொம்ப அடம் பண்றான்… நாங்க ஏற்கனவே ஜாதகம் பாத்து பேரு தேர்வு செஞ்சி வெச்சு இருக்கோம்… வந்த இடத்துல அமைதியா இருக்க சொல்லுங்க” என்று கடுமையாகவே கூறினார்…
Advertisement
ஆனால் அவரின் பக்கத்தில் நின்று இருந்த கிரிஜாவின் அப்பா இவரிடம் “ஏய் என்ன பேசிட்டு இருக்க… உங்க பையனா .. எப்போ உன் பொண்ணு அந்த வீட்டுக்கு போனாளோ அப்பயே நந்து குட்டியும் அர்ஜுனனும் இந்த சேனதிபதியோட பேர பசங்க தான்…
நீ என்ன பேரு தேர்வு செஞ்சி இருக்க.. சுப்புலட்சுமி பழைய பேரா இல்ல…. பேரன் சொல்ற பேரும் ச வரிசைல தானு ஆரம்பிக்குது… அம்மாடி மருமகளே உனக்கும் பேராண்டி சொல்ற பேரு சரி தானு” என்று பார்வதியிடம் கேட்டார் சேனாதிபதி(கிரிஜாவின் அப்பா)
“உங்க விருப்பம் மாமா… என்ன பேர் வேணா வைங்க” என்று கூறினார் பார்வதி…
Advertisement
“கேட்டியா போய் வேலையை பாரு… வந்துட்டா குறை சொல்ல போ வேலையை பாரு” என்று கூறிவிட்டு அர்ஜுனனிடம் “பேராண்டி நீ சொன்ன பேரையே பாப்பாவுக்கு வைக்கலாம் சரியா” என்று கேட்டார்…
குட்டி அர்ஜுனனும் சரி என தலையாட்டிவிட்டு சந்தோசமாக பார்வதியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்…
அதன்பிறகு அவனின் ஆசை பாடியே “சுபத்திரா” என்று பெயர் சூட்டப்பட்டது….
அவனின் குரல் கேட்டால் குட்டி சுபாவும் உற்சாகம் ஆகி விடுவாள்… நந்தினி எப்போது பட்டு பாட்டியுடன் தான் இருப்பாள்….
அர்ஜுனனை அடிக்கடி பரமசிவன் அங்கு அழைத்து சென்று விடுவார்.. அவனும் வாணன் வர்ணனுடன் நன்கு பழகினான்..
வாணனுடன் மரியாதை கலந்த நட்பு என்றால் வர்ணனுடன் சேட்டை கலந்த நட்பு… ஒரே பள்ளி வேறா பயங்கர சேட்டையாக தான் இருப்பர்… இவர்களுடன் இன்னொருவனும் மருதாயி பாட்டியின் மகள் வழி பேரன் முகுந்தன்…
மூவரும் இணை பிரியா தோழர்கள்….
சுபாவும் அவளின் அஜ்ஜு மாமா குரல் கேட்டாள் குஷி ஆகி விடுவாள்… பள்ளி முடிந்ததும் வாணன் வர்ணனுடன் அவர்கள் வீட்டுக்கு சென்று விடுவார்கள் அர்ஜுனனும் முகுந்தனும்….
முகுந்தனுக்கு பெற்றோர் இல்லை… மருதாயி பாட்டியின் மகன் மாரியப்பன் தான் அவனையும் அவனின் தங்கை சுப்ரியாவையும் பார்த்து கொள்கிறார்…..
அர்ஜுனனும் முகுந்தனையும் தினமும் மாரியப்பன் தான் பரமசிவன் வீட்டில் இருந்து அழைத்து வருவார்… வர்ணனை விட முகுந்தன் தான் அர்ஜுனனுக்கு நெருங்கிய நண்பன்….
தினமும் அர்ஜுனன் வருவது கிரிஜாவின் அம்மாவுக்கு பிடிக்காது… இதில் முகுந்தனின் வருகை அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை… ஆனால் அர்ஜுனனின் வருகை அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை…
இப்படியே வருடங்கள் அழகாக சென்றது… சுபத்திரா பள்ளி சேரும் வயதும் வந்தது… யாருக்கு எப்படியோ அர்ஜுனனுக்கு அவனின் அம்மு அந்த பள்ளியில் படிப்பது மிகவும் ஆனந்தம்….
சுபாவுக்கும் மிகவும் சந்தோஷம்…. பள்ளியில் சேர போவது அதுவும் அவளின் அஜ்ஜு மாமா படிக்கும் பள்ளியில் சேருவது மிகவும் ஆனந்தம்…
எல்லாம் நன்றாக சென்றது அந்த அசம்பாவிதம் நடக்கும் வரை….
சுபத்திரா ஒன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போது விளையாட்டு வகுப்பு(பிடி பீரியட்) சென்றாள்… அர்ஜுனன் ஐந்தாம் வகுப்பு….
அந்த வேளையில் அர்ஜுனன் வகுப்புக்கும் பிடி பீரியட்…. ஆறு வயது சுபாவோ அவளின் அஜ்ஜு மாமாவை பார்த்து ஒரே குஷி… அங்கு அவன் அவளை கவனிக்காமல் செவன் ஸ்டோன் புட் பாலை வைத்து விளையாடி கொண்டு இருந்தான்….
வர்ணனும் முகுந்தனும் கூட அங்கு தான் இருந்தனர்… சுபத்திராவின் வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை…. அர்ஜுனன் வேறு ஒரு மாணவனுக்கு குறி பார்த்து அடிக்க இவள் நடுவில் வந்ததால் அந்த பந்தின் விசையை எதிர்பார்க்காமல் கீழே விழுந்து அங்கிருக்கும் கல்லின் மேல் கீழே விழுந்தாள்…
அனைவரும் அர்ஜுனன் தான் வேண்டுமென்றே சுபத்திராவை தள்ளிவிட்டான் என்று குறை கூறினர்….
சுபத்திரா வீட்டில் கிரிஜாவின் தாய் தான் கத்திக்கொண்டு இருந்தார்… தன் பேத்தியை வேண்டுமென்றே தள்ளிவிட்டான்… இவன் இங்கு இனிமேல் வரக்கூடாது என்று கத்திக்கொண்டு இருந்தார்…
ஆனால் மற்றவர்களோ அர்ஜுனன் கண்டிப்பாக வேண்டுமென்றே செய்திருக்க மாட்டான் என நம்பினர்….
இங்கு கிரிஜாவின் வீட்டில் கிரிஜா தன் தாயின் பேச்சை கேட்டு பாலாவிடம் கத்திக்கொண்டு இருந்தார்…. அதனால் பாலா அவனை நன்றாக போட்டு அடித்தார்…
அந்த வயதிலேயே எதுவும் பேசாமல் இறுகி நின்றான்…. வர்ணனும் முகுந்தனும் அவன் எதுவும் செய்யவில்லை என்று சொல்லியும் அங்கு கேட்க ஆள் இல்லை… ஏன் சசி கூட சொல்லி பார்த்தான்… ஆனால் பாலா நன்றாக போட்டு அடித்தார்…. கிரிஜா எதுவும் பேசாமல் நிற்க பட்டு பாட்டியும் நந்தினியும் அழுதுகொண்டு நின்று இருந்தனர்….
பாலாவின் தந்தை சென்ற வருடம் தான் இதய நோய் காரணமாக இறந்து இருந்தார்… வர்ணனை அழைக்க வந்த சேனாதிபதி பாலா அர்ஜுனனை அடித்து கொண்டிருப்பதை பார்த்து அவர் தான் தடுத்து அர்ஜுனனை தான் பின்னால் தடுத்து நிறுத்தினார்…
“மாப்பிளை என்ன பண்றிங்க… அவனே சின்ன பையன் இப்படி போட்டு அடிக்குறிங்க…. அவன் உங்க பையன் நியாபகம் இருக்கா…. மாட்டை போட்டு அடிக்குற மாறி அடிக்குறிங்க….
இவங்க போய் விளையாடிட்டு இருக்கும் போது பாப்பா தான் நடுவுல போயிட்டா… நீங்க பண்றது ரொம்ப தப்பு… நான் பேசுறதுக்கு மன்னிப்பு கேட்குறேன்… கொஞ்சம் புத்தியோட நடங்க… யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பாதீங்க… அது என் பொண்ணா இருந்தாலும் …. ” என்று கூறி கிரிஜாவை முறைத்துவிட்டு வர்ணனையும் அர்ஜுனனையும் அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றார்… மாரியப்பன் முகுந்தனை அழைத்து சென்று இருந்தார்..
சேனாதிபதி தூக்கி வந்த அர்ஜுனனை பார்த்து கிரிஜாவின் அம்மா காச் மூச் என கத்த ஆரம்பித்தார்… சேனாதிபதி சப்பென்று அவரின் கன்னத்தில் வைத்தார்… வாய்க்குள் முனகி கொண்டே நாற்காலியில் அமர்ந்து கொண்டார்…
அர்ஜுனனின் உடம்பில் இருக்கும் காயத்தை பார்த்து பதறிய பரமசிவன் பார்வதி இருவரும் சேனாதிபதியிடம் விசாரித்தனர்…
அதற்கு அவரோ “தோ அங்க உட்காந்து இருக்காளே அவ எதோ சம்பந்தி வீட்டுக்கு போன் போட்டு இருக்கா… என்ன சொல்லி வெச்சாளோ தெரியல… அந்த வீட்டுல இருக்க சனியன் மாப்பிளை கிட்ட என்னமோ சொல்லி இருக்கு…
மாப்பிளை கோவப்பட்டு பேராண்டியை போட்டு அந்த அடி அடிச்சிட்டு இருந்தாரு…. நான் போய் பாக்குற அப்ப தங்கச்சியும்(பட்டு பாட்டி) நந்து குட்டியும் அழுதுட்டு இருந்தாங்க…
இவ பெத்த சனியன் வேடிக்கை பாத்துட்டு நிக்குது… பேராண்டி மேல என்ன கோவம்னு தெரியல இவங்களுக்கு… இன்னும் நாலு அடி அடிச்சா தான் எனக்கு ஆத்திரம் அடங்கும்” என்று கூறி கிரிஜாவின் அம்மாவை அடிக்க பாய்ந்தார்…
பரமசிவன் அவரை தடுத்து நிறுத்தி “ஐயா அமைதியா இருங்க… அர்ஜுனுக்கு முதல்ல டிரீட்மென்ட் பாக்கலாம் வாங்க… பாரு இங்கயே இரு நான் கூட்டிட்டு போயிட்டு வரேன்” என்று கூறி அவனை தூக்கி கொண்டு மருத்துவரின் அறைக்கு சென்றார்…
அவனை பரிசோதித்த மருத்துவர் ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை கொடுத்தார்… வெளியே வந்த அர்ஜுனன் நேராக சென்று பார்வதியின் மடியில் படுத்து கொண்டான்…
பிறகு அவனே அங்கு நடந்த அனைத்தையும் கூறினான்…
பார்வதியோ அவனின் தலையை தடவி கொடுத்து “எனக்கு தெரியும் அஜ்ஜு… என் மருமகன் எந்த தப்பும் பண்ண மாட்டான்… அதுவும் அவனோட அம்முவை அவனுக்கு காய படுத்த தெரியாது…. நீ கண்ணை மூடி தூங்கு…” என்று தட்டி கொடுத்தார்..
அர்ஜுனனும் வலியின் காரணமாக அவரின் மடியிலேயே தூங்கிவிட்டான்…
இதை பார்த்து வயிறு எரிந்த கிரிஜாவின் அம்மாவோ “ஊரு உலகத்துல நடக்காத விஷயம் எல்லாம் என் குடும்பத்துல தான் நடக்கும்.. பொண்ணை கொலை பண்ண பார்த்தவனை சீராட்டி தூங்க வைக்குறது என் வூட்டு மகராசியா தான் இருப்பா” என்று வசை பாட ஆரம்பித்தார்..
அப்போது தான் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்த சேனாதிபதியோ மீண்டும் கோவம் பெற்று அவரின் கன்னத்திலே சப்பென்று அறைந்து விட்டார் மீண்டும்…
இந்த முறை பரமசிவனோ பார்வதியோ யாரும் தடுக்கவில்லை…
தூங்கிய அர்ஜுனனை தூக்கிய பரமசிவன் “ஐயா அர்ஜுனை அங்க வீட்டுக்கு கொண்டு போய் விட்டுட்டு வரேன்… இங்க தூங்க முடியாது” என்று கூறி வீட்டில் விட்டு வந்தார்…
அவரின் பங்கிற்கு பாலாவிடம் “நடந்தது என்னனு விசாரிக்கனும் மாப்பிளை…. யாரோ யாரோ சொல்றாங்கன்னு இப்படி போட்டு பையனை அடிச்சு இருக்கீங்க.. பாத்து நடங்க மாப்பிளை” என்று எச்சரித்து விட்டே சென்றார் பரமசிவன்…
அங்கு மருத்துவமனையில் இப்ப நல்லா இருக்காங்க பாப்பா… கீழ விழுந்ததுல மயக்கம் அவளோ தான் தலையில எந்த பிரச்சனையும் இல்ல… இன்னிக்கு இங்க இருக்கட்டும்… நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று கூறி விடைபெற்றார்…
அங்கு வீட்டில் தூங்கி எழுந்த அர்ஜுனனோ இனிமேல் அந்த பள்ளியில் படிக்க மாட்டேன் என்று அழுது கொண்டு இருந்தான்… எவ்வளவு சமாதானம் படுத்தியும் அவன் மீண்டும் அந்த பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறிவிட்டான்…
அதனால் பட்டு பாட்டி பரமசிவனிடம் கூறினார்… அவரும் அவனிடம் பேசி பார்த்தார்.. அவன் ஒத்துக்கொள்ளவில்லை… பின் அவரே யோசித்து வேறு பள்ளியில் சேர்த்து விடலாம் என்று முடிவுக்கு வந்தார்..
கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் தான் ஆனதால் வேறு பள்ளியில் சீக்கிரம் அவனுக்கு சீட் கிடைத்தது… அந்த பள்ளியில் பேருந்து வசதி இருந்தும் ஹாஸ்டலில் தான் தங்குவேன்… தன்னுடன் வேறு யாரும் அந்த பள்ளியில் சேர கூடாது என்று பிடிவாதம் பிடித்தான்…
இதற்கு வெகு நேரம் யோசித்த பின் தான் பரமசிவனும் பார்வதியும் ஒத்து கொண்டனர்… இதில் பாலாவிடம் எதுவும் கேட்கவில்லை… அனைத்தும் தகவலாக தான் பகிரப்பட்டது…
அதன் பிறகு வருடங்கள் காற்றாய் பறந்தது… பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பார்வதியும் பரமசிவனும் பார்த்து வருவர்…
பட்டு பாட்டியும் நந்தினியும் மாதம் ஒருமுறை பார்த்து வருவர்… சுபாவோ அவளின் பெற்றோர் உடன் வந்து பார்த்து செல்வாள்…
சேனாதிபதியும் அவருக்கு வேலை இல்லாத போது பார்த்து வருவார்.. வாணன் வர்ணன் முகுந்தன் மூவரும் தாத்தாவுடன் பார்த்து வருவர்…
சசியும் கர்ணனும் பாட்டியுடன் பார்த்து வருவர்… பாலாவோ கிரிஜாவோ அவன் பள்ளியில் சேர்ந்து ஒருமுறை கூட பார்க்க செலவில்லை…
சுபாவின் வருகை வருடங்கள் ஓட ஓட குறைந்தது… பள்ளி, பரதநாட்டிய பள்ளிக்கு செல்வது என்பதால அவளுக்கு அர்ஜுனனை பார்க்க செல்லும் எண்ணிக்கை குறைந்தது
அர்ஜுனனுக்கு வருடங்கள் ஓட ஓட சுபா தன் பாரு அத்தையின் மகள் என்பது மட்டும் தான் ஞாபகம் இருந்தது…
ஆனால் அவளோ அவளின் அஜ்ஜு மாமாவை காதல் என்றால் என்ன என்று தெரியாத வயதிலேயே காதலிக்க தொடர்ந்து விட்டாள்….
வேறு வேறு பள்ளியில் படித்தாலும் வாணனுடனான பந்தமும் வர்ணன் முகுந்தன் உடனான நட்பும் பழைய படியே தான் இருந்தது…
ஆனால் அவனின் அம்மு இப்போது சுபத்திரா ஆகிவிட்டாள்….
வருடங்கள் யாருக்கும் காத்திராமல் ஓடியது… அர்ஜுனன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது தான் அந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்தாள் ஸ்ரீ தேவி…
பார்த்தவுடன் அர்ஜுனனின் மனதை கொள்ளையடித்த அவனின் தேவி…
error: Content is protected !!